Home கட்டுரைகள் விஞ்ஞானம் குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2)
குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2) PDF Print E-mail
Saturday, 17 April 2010 07:23
Share

 

குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (2)

இந்த விவகாரத்தின் எதார்த்தநிலை இவ்வாறு விளக்கப்பட்ட பின்னர் இதற்குரிய ஹுகும் ஷரியா கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1, விருப்பத்திற்கு மாற்றமாக பிறக்கும் குழந்தையை கொலை செய்வது ஹராமான செயலாகும் ஏனெனில் இது வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு செய்யப்படும் கொலையாகும், இதற்கு தண்டனை மறுமையில் நரகநெருப்பில் நிரந்தரமாக வீழ்வதாகும். மேலும் இந்த உலகத்தில் அதற்கு உரியவர்களால் அந்தப்பாவம் மன்னிக்கப்படாவிட்டால் அதற்காக பழிதீர்க்கப்பட வேண்டும் அல்லது இரத்த ஈட்டுத்தொகை வழங்கப்படவேண்டும்,

அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்

عَذَابًا عَظِيمًا وَمَنْ يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ خَالِدًا فِيهَا وَغَضِبَ اللَّهُ عَلَيْهِ وَلَعَنَهُ وَأَعَدَّ لَهُ'

''எவரேனும் ஒருவர் ஒரு மூஃமினை வேண்டுமென்றே கொலை செய்வாராயின் அவருக்கு உரிய தண்டனை நரகமேயாகும். மேலும் அல்லாஹ் அவர்மீது கோபம் கொள்கிறான், இன்னும் அவரை சபிக்கிறான், அவருக்கு மகத்தான வேதனையை தயாரித்து வைத்திருக்கிறான். (அந்நிஸா : 93)

2, பெற்றோர்கள் விரும்பாதபோது கர்ப்பத்தில் வைத்து கருவில் இருக்கும் சிசுவை கொல்வதும் தண்டனைக்குரிய ஹராமான செயலே.

اقتتلت امرأتان من هذيل فرمت إحداهما الأخرى بحجر فقتلتها وما في بطنها فاختصموا إلى النبي صلى الله عليه وسلم فقضى أن دية جنينها غرة عبد أو وليدة وقضى أن دية المرأة على عاقلتها

''ஹுதைல் கோத்திரத்திலுள்ள பெண்கள் இருவர் (சண்டையிட்டுக்கொண்டு) ஒருவர் மீது மற்றொருவர் கல்லெறிந்துவிட்டார், அதனால் அந்தப்பெண்ணின் கற்பம் கலைந்துவிட்டது, அல்லாஹ்வின் தூதரிடம் صلى الله عليه وسلم இது முறையிடப்பட்டது. குற்றவாளி ஆண்அடிமையையோ அல்லது பெண்அடிமையையோ தியத்தாக கொடுக்கவேண்டும் என்று صلى الله عليه وسلم அவர்கள் தீர்ப்பு கூறினார்கள்''. (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு .புஹாரி. முஸ்லிம்)

3, கர்ப்பம் தரிப்பதற்கு வாய்ப்புள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடாமல் இருப்பது மூலமாகவோ அல்லது உடலுறவில் ஈடுபட்டபின்னர் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுவது மூலமாவோ அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது மூலமாகவோ தற்காலிகமாக கருவுறுதலை தவிர்த்துக் கொள்வதற்கு அனுமதியுண்டு, உணவுமுறையில் மாற்றம் செய்துகொள்வது. காரம் மற்றும் அமிலத்தன்மை கொண்ட திரவத்தை கருவறைக்குழாயில் பீச்சிக்கொள்வது ஆகியவையும் அனுமதிக்கப்பட்டதே. இவற்றில் எந்தவிதான ஆட்சேபனையும் கிடையாது, அவைகளுக்கு உணவு மற்றும் மருத்துவம் ஆகியவை தொடர்பான பொதுவான ஆதாரம் உள்ளது,

அபூஸயீது அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அறிவித்து புஹாரியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:

فأردنا أن نعزل وقلنا نعزل ورسول الله بين أظهرنا قبل أن نسأله فسألناه عن ذلك فقال ما عليكم أن لا تفعلوا ما من نسمة كائنة إلى يوم القيامة إلا وهي كائنة

ஆகவே நாங்கள் தொடர்ச்சியாக உடலுறவு கொள்ளாமல் விலகியிருக்கும் முறையை பின்பற்றுவதற்கு தீர்மானித்து அதை அல்லாஹ்வின் தூதரிடம் صلى الله عليه وسلم கூறினோம், அதற்கு அவர்கள் இவ்வாறு பதில் கூறினார்கள்,

''நீங்கள் இவ்வாறு செய்யாமல் இருக்கவேண்டாமா? அல்லாஹ் இருக்கவேண்டும் என்று விதித்த எந்த ஆத்மாவும் மறுமை நாளுக்குள் இருந்தே தீரும்''

4. ஆணின் விந்தணுவிலிருந்து பெண்பால் குரோமோஸோமையும் ஆண்பால் குரோமோழ்ஸப்மையும் தனியாக பிரித்துவிட்ட பின்னர் ஆண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள ஆண்பால் குரோமோஸோமைக் (ஹ்) கொண்டு கருவூட்டம் செய்வது அல்லது பெண்குழந்தையை தேர்வு செய்வதற்காக பெண்ணின் சினைமுட்டையுடன் விந்தணுவிலுள்ள பெண்பால் குரோமோஸோமைக் (ஷ்) கொண்டு கருவூட்டம் செய்வது ஆகிய செயல்முறையைப் பொறுத்தவரை இவற்றை செய்வதற்கு அனுமதி கிடையாது, ஏனெனில் இது குழந்தைப்பேறு இல்லாத பெண் ஒருவர் குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளும் மருத்துவ முறையையோ அல்லது சிகிச்சை முறையையோ சாராது, இயற்கையாக குழந்தை பெற்றுக்கொள்ள வழியில்லாத சட்டரீதியான தம்பதிகள் சோதனைக்குழாய் மருத்துவமுறை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே அனுமதியுண்டு,

குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்யும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்படும் இத்தகைய செயல்முறைகளை நிறைவேற்றுவதற்கு ஒரு பெண் தனது அந்தரங்க உடல்பகுதிகளை அந்நியர்களிடம் வெளிப்படுத்த நேரிடும், ஏனெனில் இந்த செயல்முறையில் பெண்ணின் சினைப்பையிலுள்ள சினைமுட்டையை பிரித்தெடுப்பதற்கும் கருவுற்ற சினைமுட்டையை கருவறைக்குள் செலுத்துவதற்கும் அந்தரங்க உடல்பகுதிகளை வெளிப்டுத்தவேண்டிய நிலை ஏற்படும், மருத்துவ சிகிச்சை செய்துகொள்வதற்கு மட்டுமே இது அனுமதிக்கப்ட்டிருக்கிறது, குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மேற்கொள்ளப்படும் இத்தகைய செல்முறைகள் மருத்துவ சிகிச்சையில் அடங்காது என்ற காரணத்தால் இது தடைசெய்யப்பட்ட ஹராமான செயலாகும், இதற்கு ஷரியாவில் அனுமதி கிடையாது,

முடிவாக. இஸ்லாத்தின் அகீதாவோடு தொடர்புடைய முக்கியமான உண்மையை இங்கு குறிப்பிடவேண்டும், ஏனெனில் முஸ்லிமுக்கு அது மிகவும் முக்கியமானதாகும், மேற்கூறப்பட்ட அனைத்து செயல்முறைகளையும் சிகிச்சைமுறைகளையும் மனிதன் மேற்கொள்வதற்குக் காரணம் அவன் படைப்பாற்றலை பெற்றிருக்கிறான் என்ற அர்த்தத்தில் அல்ல.

ஆணிடத்திலும் பெண்ணிடத்திலும் கருவுறுதல் என்ற நிகழ்விலும் அல்லாஹ் سبحانه وتعالى படைத்து நிர்ணயம் செய்துள்ள சில பண்புகளையும் இயல்புகளையும் மனிதன் கண்காணித்து அவற்றை விளங்கிக்கொள்ளலாம், இந்த மகத்தான செயற்பாங்கின் போக்கை மனிதன் கண்காணிக்கலாம், அவைகளைக் குறித்து ஆய்வு மேற்கொள்ளலாம்; மற்றும் பல பரிசோதனைகளையும் நடத்தலாம்,

இந்த ஆய்வின் அடிப்படையில் அவன் குறிப்பிட்ட உணவு முறைகளையும் குறிப்பிட்ட செயல்முறைகளையும் பின்பற்றலாம், மேலும் அவன் ஆணின் விந்தணுவிலுள்ள ஆண் குரோமோழ்ஸப்மையும் பெண் குரோமோழ்ஸப்மையும் தனித்தனியாக பிரித்து பெண்ணின் கருவறைக்கு வெளியே கருவூட்டம் செய்து அந்த கருமுட்டையை பெண்ணின் கருவறைக்குள் செலுத்தலாம்.

ஆனால் இதன் விளைவாக படைப்புகள் எதுவும் நிச்சயமாக உருவாகாது. அது முற்றிலும் அல்லாஹ் سبحانه وتعالى என்ற படைப்பாளன் கையில் இருக்கிறது, அல்லாஹ் سبحانه وتعالى தீர்மானிக்கும்போதுதான் படைப்புகள் உருவாகி இயக்கத்திற்கு வருகிறது, அல்லாஹ் سبحانه وتعالى அவ்வாறு நாடவில்லை என்றால் மனிதன் எத்தனை சோதனைகள் மேற்கொண்டாலும் எத்தனை ஆய்வுகள் மேற்கொண்டாலும் எத்தனை செயல்முறைகளை நிறைவேற்றினாலும் எந்தவிதமான படைப்பும் ஒருபோதும் உருவாகாது, அல்லாஹ் سبحانه وتعالى படைக்க நாடும்போது மட்டும்தான் உயிர்கள் ஜனிக்கின்றன; அவன் நாடவில்லை என்றால் உயிர்கள் ஜனிக்காது,

அல்லாஹ் سبحانه وتعالى மட்டும்தான் படைப்பாளன், அவன்தான் ஆணையும் பெண்ணையும் படைக்கிறான்,

ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ لَا إِلَهَ إِلَّا هُوَ خَالِقُ كُلِّ شَيْءٍ فَاعْبُدُوهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ وَكِيلٌ

''அவன்தான் உங்கள் இறைவனான அல்லாஹ்; அவனைத்தவிர வேறு நாயன் இல்லை, அவன்தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளன், ஆகவே அவனையே வணங்கி வழிபடுங்கள், இன்னும் அவனே அனைத்து காரியங்களுக்கும் பொறுப்பாளன் ஆவான்.'' (அல்அன்ஆம் :102)

إِنَّ رَبَّكَ هُوَ الْخَلَّاقُ الْعَلِيمُ

''நிச்சயமாக உமது இறைவன் (அனைத்தையும்) படைத்தவனாகவும் எல்லாவற்றையும் அறிந்தவனாகவும் இருக்கிறான்.'' (அல்ஹிஜ்ர் :86)

أَفَمَنْ يَخْلُقُ كَمَنْ لَا يَخْلُقُ أَفَلَا تَذَكَّرُونَ

''ஆகவே எவன் படைக்கிறானோ அவன் படைக்காதவனைப்போல் ஆவானா? நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா?'' (அந்நஹ்ல் :17)

هَذَا خَلْقُ اللَّهِ فَأَرُونِي مَاذَا خَلَقَ الَّذِينَ مِنْ دُونِهِ بَلِ الظَّالِمُونَ فِي ضَلَالٍ مُبِينٍ

இவை (அனைத்தும்) அல்லாஹ்வின் படைப்பாகும் ,அவனையன்றி இருப்பவர்கள் எதைப் படைக்கிறார்கள் என்பதை எனக்குக் காண்பியுங்கள் (என்று நீர் கேட்பீராக) அவ்வாறல்ல; அநியாயக்காரர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள்''. (லுக்மான் :11)

يَا أَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوا لَهُ إِنَّ الَّذِينَ تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ لَنْ يَخْلُقُوا ذُبَابًا وَلَوِ اجْتَمَعُوا لَهُ وَإِنْ يَسْلُبْهُمُ

الذُّبَابُ شَيْئًا لَا يَسْتَنْقِذُوهُ مِنْهُ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوبُ

''மனிதர்களே. (உங்களுக்கு) ஓர் உதாரணம் கூறப்படுகிறது ஆகவே அதை செவிதாழ்த்திக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக்கூட படைக்க முடியாது, இன்னும் ஒர் ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக்கொண்டு போய்விட்டால் பிறகு அதனை அந்த ஈயிடத்திலிருந்து திரும்பவும் கைப்பற்றவும் முடியாது, தேடுபவரும் தேடப்படுபவர்களும் பலஹீனர்களே.'' (அல்ஹஜ் :73)

يَا أَيُّهَا النَّاسُ إِنْ كُنْتُمْ فِي رَيْبٍ مِنَ الْبَعْثِ فَإِنَّا خَلَقْنَاكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِنْ مُضْغَةٍ مُخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِنُبَيِّنَ لَكُمْ وَنُقِرُّ فِي الْأَرْحَامِ مَا نَشَاءُ إِلَى أَجَلٍ مُسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوا أَشُدَّكُمْ وَمِنْكُمْ مَنْ يُتَوَفَّى وَمِنْكُمْ مَنْ يُرَدُّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنْ بَعْدِ عِلْمٍ شَيْئًا وَتَرَى الْأَرْضَ هَامِدَةً فَإِذَا أَنْزَلْنَا عَلَيْهَا الْمَاءَ اهْتَزَّتْ وَرَبَتْ وَأَنْبَتَتْ مِنْ كُلِّ زَوْجٍ بَهِيجٍ

''மனிதர்களே. (மறுமைநாளில்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி நீங்கள் சந்தேகத்தில் இருந்தீர்கள் என்றால் (அறிந்துகொள்ளுங்கள்); நிச்சயமாக நாம் உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும் பின்னர் அலக்கிலிருந்தும் பின்னர் உருவாக்கப்பட்டதும் உருவாக்கம் பெறாததுமான தசைக்கட்டியிலிருந்தும் படைத்தோம், உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விளக்குகின்றோம்) ; மேலும் நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருவறையில் தங்கச்செய்கிறோம் பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகறோம், பிறகு உங்களை வாலிபத்தை அடையச்செய்கிறோம், அன்றியும் உங்களில் (இளம் வயதிலேயே) மரணம் அடைபவர்களும் இருக்கிறார்கள். (பெரியவராக வளர்ந்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றும் அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயதுவரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள், இன்னும் நீங்கள் வறண்ட பூமியை பார்க்கிறீர்கள், அதன்மீது நாம் நீரை பொழியச்செய்வோம்; எனில் அது பசுமையாகி அழகான பல்வகை புற்பூண்டுகளை முளைப்பிக்கிறது''. (அல்ஹஜ் :5)

وَلَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ ثُمَّ جَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً

فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آَخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ

''நிச்சயமாக நாம் (முதல்) மனிதரை களிமண்ணின் சத்திலிருந்து படைத்தோம், பின்னர் அவனை பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம், பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம் பின்னர் அலக்கை தசைப்பிண்டமாக ஆக்கினோம், பின்னர் அந்த தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கிளோம் பின்னர் அவ்வெலும்புகளை மாமிசத்தைக் கொண்டு மூடினோம், பின்னர் அதனை நாம் முற்றிலும் வேறொரு படைப்பாக (மனிதனாக) ஆக்கினோம், (ஆகவே படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியம் உடையவன் படைப்பாளர்களில் மிக அழகானவன்.'' (அல்மூஃமினூன் :12-14)

لِلَّهِ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَخْلُقُ مَا يَشَاءُ يَهَبُ لِمَنْ يَشَاءُ إِنَاثًا وَيَهَبُ لِمَنْ يَشَاءُ الذُّكُورَ أَوْ يُزَوِّجُهُمْ ذُكْرَانًا وَإِنَاثًا وَيَجْعَلُ مَنْ يَشَاءُ عَقِيمًا إِنَّهُ عَلِيمٌ قَدِيرٌ

''வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றின் ஆட்சிஅதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியதாகும், ஆகவே அவன் தான் நாடியவற்றை படைக்கிறான், தான் நாடியவர்களுக்கு பெண்மக்களை அளிக்கிறான், இன்னும் தான் நாடியவர்களுக்கு ஆண்மக்களை அளிக்கிறான்; அல்லது ஆண்மக்களையும் பெண்மக்களையும் சேர்த்து அளிக்கிறான், அன்றியும் தான் நாடியவர்களை மலடாகவும் ஆக்குகிறான், நிச்சயமாக. அவன் மிக்க அறிந்தவன் பேராற்றல் உடையவன்,'' (அஷ்ஷூரா : 49,50)

فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ

''மனிதனே: அருட்கொடையாளனும் சங்கைமிக்கவனுமான உனது இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது? அவன்தான் உன்னைப் படைத்து ஒழுங்குபடுத்தி செவ்வையாக்கினான்; இன்னும் எந்த வடிவத்தில் நாடினானோ அதில் உன்னைப் பொருத்தினான்.'' (அல்இன்ஃபிதார் : 6-8)

هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ

''அவன் தான் நாடியவாறு கருவறையில் உங்களை உருவாக்குகின்றான், அவனைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறில்லை, அவன் யாவரையும் மிகைத்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.'' (ஆலஇம்ரான் : 6)

நேர்வழியிலிருந்து விலகிப்போய் விடாமல் இருப்பதற்காக ஒருவர் இந்த உண்மைகளை மனதில் நிறுத்திக் கொள்ளவேண்டும், அல்லாஹ் سبحانه وتعالى வழிகேட்டில் சென்றுவிடாமல் நம்மை பாதுகாப்பானாக!

அல்லாஹ் سبحانه وتعالى இந்த பிரபஞ்சம் முழுவதிலும் ஞானத்தை விதைத்திருக்கிறான், மேலும் மனிதன் அறியாதவற்றை யெல்லாம் அவனுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறான் அல்லாஹ் سبحانه وتعالى மனிதனுக்கு அறிவாற்றலையும் சிந்தனைத்திறனையும் அருட்கொடையாக வழங்கியிருக்கிறான், மேலும் அல்லாஹ் سبحانه وتعالى மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவன்மீது ஆழமான நம்பிக்கை கொள்வதற்காக அவன் سبحانه وتعالى புலனுணர்வு மூலம் விளங்கிக்கொள்ளும் ஆற்றலை அளித்திருக்கின்றான், நிராகரிப்பவர்கள் இந்த உலகத்தில் இழிவையும் மறுமைநாளில் கடுந்தண்டனையையும் அடைந்து கொள்வார்களாக!இந்த பிரபஞ்சத்தை படைத்து பரிபாலித்துக் கொண்டிருக்கும் அல்லாஹ் سبحانه وتعالى  வுக்கே எல்லா புகழும் உரித்தாகுக!

இக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக

source: http://sindhanai.org/?p=216

 www.nidur.info