Home கட்டுரைகள் கல்வி வக்கீல் படிப்புக்கு ஓர் வக்காலத்து

கல்வி மற்றும் கல்வியாளர்களின் சிறப்புக்கள் -அப்துல் பாஸித் புகாரி

வக்கீல் படிப்புக்கு ஓர் வக்காலத்து PDF Print E-mail
Tuesday, 30 March 2010 07:19
Share
வக்கீல் படிப்புக்கு ஓர் வக்காலத்து
 
["வக்கீலுக்குப் படித்தால் பொய்சொல்ல வேண்டும்" என்ற அபிப்ராயம் நம் மக்கள் மட்டுமின்றி பரவலாகவே இருந்தது. B.COM படித்தால் வங்கிகளில் வட்டிக் கணக்கு மட்டுமே எழுதவேண்டிவரும் என்பது எப்படி தவறானதோ அது போன்றே இதுவும் தவறான அபிப்ராயம்.

வக்கீல் தொழிலில் பொய்களைச் சொல்வதைவிட உண்மையாக வாதிட்டு நீதி பெறலாம் என்று நேர்முகமாகச் (POSITIVE) சிந்தித்தால் இது விளங்கும். வக்கீலாக இருப்பதால் ரவுடிகள், போலீஸ் என பலரும் தேடி வருவார்கள்; பாதிக்கப்பட்டவரை பகைத்துக் கொள்ள வேண்டிவரும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. இன்று நாம் வாழும் சமூகத்தில் இவர்கள் தவிர்க்கமுடியாதவர்கள். யாராக இருந்தாலும் அறிவுப்பூர்வமான அணுகுமுறையினால் எதிர்கொள்ளலாம்.

சட்டப்படிப்புடன் தொடர்புடைய எதேனும் ஒரு டிப்ளமோ படித்து கம்பெனி செகரட்டரி, சட்ட ஆலோசகர் போன்ற பணிகள் செய்யலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதற்கு வாய்ப்புண்டு.]

வக்கீல், வக்காலத் ஆகிய இருசொற்களுமே அரபு/ஃபாரசிகம் மொழியிலிருந்து நம் நாட்டிற்கு மொகலாயர் கொண்டுவந்தாகள். சட்டம் ஒரு இருட்டரை என்று மேல்நாட்டு அறிஞன் சொன்னதை மறுத்து "சட்டம் ஒரு இருட்டரை; வக்கீலின் வாதம் ஒளிவிளக்கு" என்றார் அறிஞர் அண்ணா. நாளடைவில் அறிஞர் அண்ணா "சட்டம் ஒரு இருட்டரை" என்றதாக மக்கள் புரிந்து கொண்டார்கள்!

கல்வியாளர்களும் கல்விக்கூடங்களும் நிறைந்துள்ள நமதூரில் கடந்த 10-20 ஆண்டுகளில் சொல்லிக் கொள்ளும்படியாக யாரும் வழக்குரைஞர்/வக்கீல் பட்டம் பெற்றதாக அறியமுடிவதில்லை. நானறிந்து மாண்புமிகு. A.J.அப்துல் ரஸ்ஸாக் காக்கா, A.S.M.அபுல்ஹசன் காக்கா, சகோதரர் அப்துல் முனாப் (பைத்துல்மால்) தவிர்த்து புதிதாக யாரும் வக்கீல் பட்டம் பெற்றதாகவோ அல்லது சட்டத்துறை பயின்றதாகவோ அறியமுடியவில்லை. (அனேகமாக இவர்கள் தவிர்த்து ஓரிருவர் இருக்கக்கூடும்; இருப்பின் பின்னூட்டத்தில் அறியத்தரவும்)

"வக்கீலுக்குப் படித்தால் பொய்சொல்ல வேண்டும்" என்ற அபிப்ராயம் நம் மக்கள் மட்டுமின்றி பரவலாகவே இருந்தது. B.COM படித்தால் வங்கிகளில் வட்டிக் கணக்கு மட்டுமே எழுதவேண்டிவரும் என்பது எப்படி தவறானதோ அது போன்றே இதுவும் தவறான அபிப்ராயம்.வக்கீல் தொழிலில் பொய்களைச் சொல்வதைவிட உண்மையாக வாதிட்டு நீதி பெறலாம் என்று நேர்முகமாகச் (POSITIVE) சிந்தித்தால் இது விளங்கும். வக்கீலாக இருப்பதால் ரவுடிகள், போலீஸ் என பலரும் தேடி வருவார்கள். அக்கம்பக்கத்தினர் தவறாகப் பேசுவார்கள். பாதிக்கப்பட்டவரை பகைத்துக் கொள்ள வேண்டிவரும் என்றெல்லாம் நினைக்கிறார்கள். இதுவும் தவறு. இன்று நாம் வாழும் சமூகத்தில் இவர்கள் தவிர்க்கமுடியாதவர்கள். யாராக இருந்தாலும் அறிவுப்பூர்வமான அணுகுமுறையினால் எதிர்கொள்ளலாம்.

சட்டப்படிப்புடன் தொடர்புடைய எதேனும் ஒரு டிப்ளமோ படித்து கம்பெனி செகரட்டரி, சட்ட ஆலோசகர் போன்ற பணிகள் செய்யலாம். உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இதற்கு வாய்ப்புண்டு. உதாரணமாக சட்டப்படிப்புடன் சர்வதேச வர்த்தகம் குறித்த பட்டயப்படிப்பை படிக்கலாம்.

மேலும் சொத்து வாங்கல் விற்றல் தொடர்பான ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாம். உலகலாவிய அளவில் இத்தொழிலுக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும் உள்ளூரிலேயே இத்தொழிலுக்கு நல்ல வாய்ப்புண்டு. மேலும் குடும்பத்திற்கு ஒருவர் சட்டம் தெரிந்தவராக இருப்பது சாலச்சிறந்தது. வருங்காலத்தில் MLA, MP ஆகவும் சட்டப்படிப்பு அவசியமாகலாம். யார் கண்டார்?

ஆக, வக்கீலுக்குப் படித்தால் பொய் சொல்லியே ஆக வேண்டும் என்ற மூடநம்பிக்கையை ஒழித்து நேர்மையாகவும் சம்பாதிக்க முடியும் என்ற எண்ணத்தை வளரும் தலைமுறையினரிடம் விதைப்போம். இதற்கான சிந்தனையை மாணாக்கர்களிடம் வளர்க்க நமதூர் கல்விக் கூடங்களில் சட்டத்துறை வல்லுனர்களை வரவழைத்துக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்து மாணாக்கர்களை ஊக்குவிக்கலாம்.

அபூஅஸீலா-துபாய்

source: http://adiraixpress.blogspot.com/2008/10/2.html