Home குடும்பம் இல்லறம் நல்ல மனைவி அமைய....

இஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari

நல்ல மனைவி அமைய.... PDF Print E-mail
Monday, 22 March 2010 07:22
Share

நல்ல மனைவி அமைய....

[ அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?  

''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.

தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)] 

''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' (ஸஹீஹுல் புஹாரி: 5186)

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை நோக்குவோம்.

    கணவன் விரும்பும் மனைவியாக    

1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.

அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.

2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.

3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது வழக்கொழிந்து செல்கின்றது.

5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.

இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.

காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக் கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஆனால், இன்று எங்கு பார்த்தாலும் ''பிஸி, மற்றும் நேரம் இல்லை'' போன்ற குரல்களே ஒலிக்கின்றன. ஒரு இல்லத்தரசியைப் பொறுத்தவரை திருமணம் முடித்தது முதல் பேரப்பிள்ளை காணும்வரை அளப்பரிய பணிகளைச் செய்து வருகின்றாள்.

வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்பவிடயங்களுக்கெல்லாம் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும் விவரணம் இதோ :''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும்
ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல். 

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை.

''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன''. (அல்குர்ஆன் 30:21)

அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?

    மனைவி விரும்பும் கணவனாக    

01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல். கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.

மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க, கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும்.

02. கனிவான வார்த்தைகளைப் பேசுதல்.

உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.

03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.

எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம்.

எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.''பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.

ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய்.
அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி 5186)

04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.

''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)

கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)

05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்,

''சிலரை விட மற்றும் சிலரை அழ்ழாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.'' (அல்குர்ஆன் 4:34)

மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன்,

 பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது. மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.

source: http://dharulathar.com/