Home கட்டுரைகள் விஞ்ஞானம் திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் - Part 2
திருக்குர்ஆனும் விஞ்ஞானமும் - Part 2 PDF Print E-mail
Tuesday, 26 August 2008 19:08
Share

 

சமுத்திர ஆழங்களில் மண்டிக்கிடக்கும் மையிருள்

أَوْ كَظُلُمَاتٍ فِي بَحْرٍ لُّجِّيٍّ يَغْشَاهُ مَوْجٌ مِّن فَوْقِهِ مَوْجٌ مِّن فَوْقِهِ سَحَابٌ ظُلُمَاتٌ بَعْضُهَا فَوْقَ بَعْضٍ إِذَا أَخْرَجَ يَدَهُ لَمْ يَكَدْ يَرَاهَا وَمَن لَّمْ يَجْعَلِ اللَّهُ لَهُ نُورًا فَمَا لَهُ مِن نُّورٍ

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டினால் அவனால் அதைப் பார்க்க முடியாது; எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை. 24:40 سورة النور

கடல் ஆழங்களில் மண்டிகிடக்கும் மையிருட்டை நவீன கருவி சாதனங்களால் தான் விஞ்ஞானிகளால் உறுதி செய்திட முடிந்தது என ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல் அஜீஸ் பல்கலைக்கலகத்தில் பணியாற்றிய பேராசிரியர் துர்கா ராவ் கூறினார். எந்த ஒரு பொருளின் துணையில்லாமல் 20 முதல் 30 மீட்டர் அளவுக்கு மேல் மனிதர்கள் கடலுக்குள்ளே மூழ்குவது இயலாத காரியமாகும். அதேப்போன்று 200 மீட்டருக்கும் அப்பாற்பட்ட ஆழத்தில் கடல் பகுதிகளில் மனிதன் உயிர் வாழ்ந்திட முடியாது. இந்த இறை வசனம் எல்லா கடல்களையும் குறிக்காது.

காரணம் எல்லா கடல்களும் அடுக்கடுக்காய் மையிருள் திரைகள் படிந்துள்ளன என்று கூற முடியாது. ஆழ் கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்" என்ற திர்க்குர்ஆன் கூற்றுப்படி அது ஆழ்கடலையே குறிக்கும். ஆழ் கடலில் இருள்திரைகள் அடுக்கடுக்காய் படிந்து கிடக்க இரண்டு முக்கிய காரணங்கள் அடிப்படையாகும். ஓர் ஒழிக்கதிர் ஏழு வர்ணங்களைக் கொண்டுள்ளது. இவை ஊதா(Violet), ஆழ்ந்த நீலம்(Indigo), நீலம்> பச்சை> மஞ்சள்> ஆரஞ்சு நிறம்> சிகப்பு ஆகியன. இந்த சூரிய ஒளிக்கதிர் நீரை கடக்கும்போது ஒளிச்சிதைவு (Refraction of Light) ஏற்படுகின்றது. 10 முதல் 15 மீட்டர் மேலளவு கொண்ட நீர் சிகப்பு நிறத்தை உள்வாங்கி உறிஞ்சிக் கொள்கின்றது. எனவே நீரில் மூழ்கும் ஒருவர் அந்நீருக்கு கீழ் 25 மீட்டர் ஆழத்தில் சென்றவர் அடிபட்டு இரத்தம் கசிந்தால் இரத்ததின் சிகப்பு நிறத்தை கண்ணால் பார்க்க முடியாது.

காரணம் இந்த ஆழத்திற்கு சிகப்பு நிறம் ஊடுருவிச் செல்வதில்லை. அவ்வாறு ஆரஞ்சு நிறம் 30 முதல் 50 மீட்டர் வரையும், மஞ்சள் நிறம் 50 முதல் 100 வரையும் பச்சை நிறம் 100 முதல் 200 வரையும் நீல நிறம் 200 மீட்டருக்கு அப்பால் வரையும் ஊதாவும் கருநீலமும் 200 மீட்டருக்கு அப்பாலும் ஊடுருவிச் செல்கின்றன. இவ்வாறு பல்வேறு வர்ணங்கள் ஒன்றன்பின் ஒன்றாக படிப்படியாக கருமை அடைந்துக்கொண்டே செல்லும். கடலில் 1000 மீட்டருக்கு கீழ் உள்ள ஆழத்தில் முழுமையான இருள் ஆட்சி புரியத் தொடங்கிவிடும்.

ஒளிக்கதிர்கள் கடலின் மேற்பரப்பை சென்றடைகின்றபோது அது கடலலையின் மேற்பரப்பால் பிரதிபலிக்கப்பட்டு அதற்கு ஓர் ஒளிப்பிரகாசமான தோற்றத்தை வழங்கிவிடுகின்றது. ஒளியை பிரதிபலித்து இருளை ஏற்படுத்துவது கடலலைகளே! பிரதிபலிக்கப்படாத ஒளியோ கடல் ஆழங்களுக்குள் ஊடுருவிச் சென்று விடுகின்றது. ஆகவே கடலானது இரண்டு பகுதிகளை கொண்டதாக மாறி விடுகின்றது. கடல்கள் மற்றும் சமுத்திரங்கள் ஆழமான அடிநீரை கடலின் உள்ளே உள்ள அலைகள் மூடிக்கொள்கின்றன. இதற்கு காரணம் கடல் ஆழத்தின் நீர் அதன் மேற்பரப்பில் உள்ள நீரை விட அதிகமான அடர்த்தித் தன்மைக் கொண்டதாக இருப்பதே!

கடலின் உள்ளே உள்ள அலைகளுக்கு கீழ்தான் இருள் கவியத் தொடங்கும். அப்பொழுது அந்த ஆழத்தில் வசிக்கும் மீன் இனங்கள் கூட பார்வையை இழந்துவிடக் கூடும். அம்மீனனங்களின் உடலிலிருந்து வெளிப்படும் சொந்த ஒளி மட்டுமே அவற்றுக்கு வழிகாட்டும். இதனை மிகச் சரியாக திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது; ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை.... வேறு வார்த்தைகளால் சொன்னால் இந்த அலைகளுக்கு அப்பால் இன்னும் அதிகமான அலை வடிவங்கள் உள்ளன. அதாவது இவை அனைத்தும் கடலின் மேற்பரப்பில் காணப்படுபவை.

இறை வசனம் மேலும் கூறுகின்றது; அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள் சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. விளக்கிக் கூறப்பட்ட இம்மேகங்கள் யாவும் ஒன்று மற்றொன்றின் மேல் தடுப்பு சுவர்களாய் அமைந்து கடலின் பல்வேறு அலை மட்டங்களில் நிறங்களை உள்வாங்கி கருமையை தோற்றுவிக்கின்றன. பேராசிரியர் துர்க்கா ராவ் இறுதியாக இவ்வாறு கூறினார். "1400 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கடலலையின் நிகழ்வை குறித்து ஒரு சாதாரண மனிதu; இவ்வளவு தெளிவாக கூறி இருக்க முடியாது. எனவே இயற்கைக் கடந்த தெய்வீக ஊற்றிலிருந்தே இந்தச் செய்தித் தகவல்கள் வந்திருக்க முடியும்."

சுழலும் சூரியன்

பூமி இந்த பேரண்டத்தின் நடுவில் மைய இடத்தில் சூரியன் உட்பட மற்ற கோள்கள் அனைத்தும் பூமியை மையமாகக் கொண்டே சுற்றி சுழன்று வருகின்றன என்றே நீண்ட நெடுங்காலமாக மேல்நாட்டு தத்துவ அறிஞர்களும் அறிவியலாளர்களும் நம்பி வந்தனர்.

மேல் நாட்டில் கி.மு இரண்டாம் (B.C 200) நூற்றாண்டில் வாழ்ந்த Ptolemy என்ற அறிஞரின் காலந்தொட்டு பூமியை மையமாகக் கொண்டே அனைத்து கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்ற புவி மையக் கோட்பாடே (Geocentric Theory) புழக்கத்தில் இருந்தது. கி.பி 1512ல் Nicolas Copernicus என்னும் அறிவியலாளர் ஒரு புதிய கோட்பாட்டை கொண்டு வந்தார். அதன்படி கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாகக் கொண்டே சுற்றி வருகின்றன. ஆனால், நமது சூரிய குடும்பத்தின் (Solar System) மத்தியில் திகழும் சூரியன் நகர்ந்து செல்லும் ஆற்றல் இல்லாதவை என்ற கருத்தை வெளிப்படுத்தினார்.

இந்த கோட்பாட்டை The Heliocentric theory of Planetary Motion) என்று அழைத்தனர். ஜெர்மன் விஞ்ஞானி Johannes kepler கோள்கள் முட்டை வடிவ (Elliptical Shapes) பாதையில் சூரியனை சுற்றி வருவதாகவும் சூரியன் தன் அச்சின் மீது ஒழுங்கற்ற வேகத்தில் சுற்றி வருவதாகவும் கி.பி.1609ல் எழுதிய நூலில் தெரிவித்திருந்தார். Keppler வெளியிட்ட இந்த கருத்தே இரவு பகல் மாறிவரும் தொடர் நிகழ்ச்சி சூரிய குடும்பத்தின் செயல்பாடுகள் குறித்தும் சரியான விளக்கம் அளித்திட அறிவியலாளர்களுக்கு ஒரு வாய்ப்பினை வழங்கியது. இந்தக் கண்டுபிடிப்புகளுக்குப் பிறகும்கூட சூரியன் ஒரே இடத்தில் நிலையாக நின்று கொண்டுள்ளது; அது பூமியைப் போன்று தன்னை தானே சுற்றிக்கொள்வதில்லை என்ற சிந்தனை நிலைத்து நின்றது. எனது பள்ளிப் பருவத்தின் போது புவியியல் பாடத்தில் இந்த தவறான அறிவியல் கருத்தைப் படித்துள்ளதை இன்று நினைவுபடுத்திப் பார்க்கிறேன். பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை சிந்தித்து பாருங்கள்.

وَهُوَ الَّذِي خَلَقَ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

இன்னும் அவனே இரவையும், பகலையும்; சூரியனையும், சந்திரனையும் படைத்தான்; (வானில் தமக்குரிய) வட்டவரைக்குள் ஒவ்வொன்றும் நீந்துகின்றன. 21:سورة الأنبياء 33

இதில் 'யஸ்பஹூன்' எனும் சொல் 'சபஹ' எனும் மூல வினைச் சொல்லிருந்து பிறந்துள்ளது. இச்சொல் ஒரு கோளப் பொருளின் இயக்கத்திலிருந்து பெறப்படும் இயக்கவினை கருத்தினையும் சுமந்து செல்கிறது. நிலத்தின் மீது ஒரு மனிதனுக்கு இச்சொல் பயன்படுத்தினால் 'அவன் சுழன்று கொண்டுள்ளான்' அவன் 'ஓடுகிறான்' 'நடமாடுகிறான்' என்றும் இதற்கு பொருள் கொள்ளலாம்.

நீரில் உள்ள மனிதனுக்கு பயன்படுத்தினால் 'அவன் மிதந்து கொண்டுள்ளான்', 'நீந்திக் கொண்டுள்ளான்' என்று பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு. அவ்வாறே சூரியனைப் போன்ற ஒரு விண்கோளுக்கு 'யஸ்பஹ' எனும் சொல்லை நாம் பயன்படுத்தினால் அக்கோள் வாண்வெளியில் பறந்து செல்கிறது, தன்னைத்தானே சுற்றிக் கொள்கிறது என்றும் பொருள் கொள்ளலாம். சூரியனில் சில புள்ளிகள் (Sun-Spots) இருப்பதும் அப்புள்ளிகள் 25 நாட்களுக்கு ஒருமுறை வட்டப்பாதையில் சுழன்று வருவதும், தன் அச்சின் மீது தானே சுழன்று கொள்வதற்கு சுமார் 25 நாட்கள் ஆகின்றன என்றும் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் ஒரு வினாடிக்கு 150 மைல்கள் வேகத்தில் பயணித்துக் கொண்டுள்ளது. நாம் வசிக்கும் இந்த Galazy (கோள்கள் நட்சத்திரங்கள்) (Milky Way) பால்வீதி மண்டலம் என அழைக்கப்படுகிறது. இதன் மைய கேந்திரத்தை சுற்றி வர நமது சூரியன் 20 கோடி வருடங்களை எடுத்துக் கொள்கிறது.

 

لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقُ النَّهَارِ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ

சூரியன் சந்திரனை (நெருங்கிப்) பிடிக்க முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. 36:40 سورة يس இந்த இறை வசனம் Modern Astronomy கண்டுபிடித்துக் கூறியிருக்கும் ஓர் அடிப்படை உண்மையை கூறுகிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் தனித்தனியே கோளப் பாதைகள் உள்ளன. அப்பாதைகளில் தம்மைத் தாமே சுற்றிக் கொண்டு விண்வெளியில் நகர்ந்தும் செல்கின்றன. சூரியன் தன் கோள குடும்பத்துடன் ஓர் இடத்தை நோக்கி (Fixed Place) செல்கிறது. அவ்விடத்திற்கு நவீன விஞ்ஞானம் Solar Apex என்ற பெயரையும் சூட்டியுள்ளது. அந்த இடம் Constellation of Hercules என்ற விண்மீன் கூட்டத்தில் அமைந்துள்ளது. இவ்விண்மீன் கூட்டத்திற்கு Alpha Lyrae என்ற பெயரும் உண்டு. சந்திரனும் தன் அச்சில் தன்னைத்தானே சுற்றிக்கொள்ள எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் 29.5 நாட்கள் பிடிக்கின்றன. திருக்குர்ஆன் எடுத்துரைக்கும் இவ்வுண்மைய கண்டு ஆச்சரியத்தால் மலைத்து நிற்காமல் இருக்க முடியவில்லை.

 

நிலவின் ஒளி பிரதிபலிப்பு

நிலவு தன்னுடைய ஒளியை வெளிப்படுத்திக் கொள்கிறது என்றே முந்தைய நாகரிங்கள் கருதின. ஆனால் இன்றோ நிலவின் அதன் ஒளி பிரதிபலிக்கப்பட்ட ஒளி என்ற உண்மையை இன்றைய அறிவியல் எடுத்து கூறுகின்றது. ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் வசனத்தில்...

تَبَارَكَ الَّذِي جَعَلَ فِي السَّمَاء بُرُوجًا وَجَعَلَ فِيهَا سِرَاجًا وَقَمَرًا مُّنِيرًا

வான (மண்டல)த்தில் கோளங்கள் வரும் பாதைகளை உண்டாக்கி, அவற்றிடையே ஒரு விளக்கை (சூரியனை)யும்; ஒளிவான சந்திரனையும் உண்டாக்கினானே அவன் பாக்கியமுள்ளவன்.سورة الفرقان 25:61

திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் 'ஷம்ஸ்'. இதனை 'ஸிராஜ்' (ஒளிவிளக்கு) 'வஹ்ஹாஜ்' (பிரகாசிக்கும் விளக்கு) 'தியா' (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது. சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் 'கமர்' என்பதாகும். இந்த சந்திரனை 'முனீர்' என்றும் வர்ணிக்கிறது. 'முனீர்' என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட 'வஹ்ஹாஜ்' 'தியா' 'ஸிராஜ்' ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட 'நூர்' அல்லது 'முனீர்' என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. சூரியனிலிருந்தும், சந்திரனிலிருந்தும் பெறப்படும் ஒளியின் இயல்பை எடுத்துக் கூறும் வசனங்களைப் பாருங்கள். 

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاء وَالْقَمَرَ نُورًا

'அவன்தான் சூரியனை (சுடர்விடும்) பிரகாசமாகவும்> சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான்' سورة يونس 10:5 

أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا

ஏழு வானங்களையும் அல்லாஹ் அடுக்கடுக்காய் எப்படி படைத்திருக்கின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? இன்னும் அவற்றில் சந்திரனைப் பிரகாசமாகவும், சூரியனை ஒளி விளக்காகவும் அவனே ஆக்கியிருக்கிறான். 71:15,16 سورة نوح

 

விரிவடையும் பிரபஞ்சம்

وَاسَّمَاءَ بَنَيْنَهَابِاَيْدٍ وَّاِنَّالَمُوْسِعُوْن َ

மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்" (51:47)நாம் வாழும் பூமிப்பந்தானது நமது சூரிய குடும்பத்தின் நவகிரக உறுப்பினர்களில் ஒன்றாகும். நமது பூமியை விட பல மடங்கு பெரிய கோள்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. நமது சூரியன் ஒரு நட்சத்திரம். இதேப்போன்று கோடானுக் கோடி நட்சத்திரங்கள் இந்த விண்ணில் வலம் வருகின்றன. இரவில் வானத்தை அண்ணாந்துப் பார்த்து> நட்சத்திரங்களின் அழகை கண்டு நாம் வியந்து போற்றுகின்றோம்.

நம் விழிகளில் வியப்பை தேக்கி வைக்கும் இந்த அழகிய விண்மீன் கூட்டங்கள் எந்தவித ஒழுங்கமைப்பும், கட்டுப்கோப்பும் இன்றி வானில் சிதறிக் கிடப்பதில்லை. அவை கட்டமைப்பிற்குள் செயல்பட்டு, கீழ்படிந்து இயங்கி வருகின்றன
.

எல்லையில்லாமல் அகண்டு விரிந்துக் கிடக்கும் இந்த அண்டவெளி வெற்றிடத்தில்> நட்சத்திரங்கள் ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றன. சிறிய, பெரிய குழுக்கள் பலவற்றை உள்ளடக்கி இருக்கும் இந்த விண்மீன் குழுக்கள் யாவும் ஒன்று மற்றொன்றோடு தொடர்புக் கொண்டவை. ஒன்று மற்றொன்றை தன்பால் ஈர்த்துக் கொண்டும்> மற்றவற்றால் ஈர்க்கப்பட்டும்> இணங்கி இணைந்து இயங்குகின்றன
.

".........the total number of stars in the universe is probably something like the total number of grains of sand on all the seashores of the world. Such is the littleness of our home in space when measured up against the total substance of the universe."

'உலகில் உள்ள எல்லா கடற்கரைகளிலும் எவ்வளவு மணற் துகள்கள் நிறைந்து உள்ளனவோ> அதைப் போன்றதொரு தொகை கொண்டதாகவே இந்த பிரபஞ்சத்தில் உள்ள நட்சத்திரங்கள் யாவும் திகழ்கின்றன. இப்பேரண்டத்தில் பொதிந்துக் கிடக்கும் பொருட்கள் அனைத்துடனும் நாம் நமது புவி எனும் வீட்டை கொஞ்சம் அளந்து பார்ப்போமெனில், அது இந்த வின்வெளியில் ஓர் அற்பத் தூசாகவே காட்சி தரும்.'

ஒரு Galaxy யில் மட்டும் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளதாம். நாம் ஆகாயத்தில் காணும் விண்மீன் கூட்டத்தை பால்வீதி Milky Way என்கின்றனர். இந்த 10,000 கோடி நட்சத்திரங்களில் மின்னி மிளிரும் ஒரு நட்சத்திரம் தான் நமது சூரியன். Miky Way, Galaxy அடுத்துள்ள கேலக்ஸிக்கு பெயர் அண்ரோமிடா கேலக்ஸி என்று பெயர். இந்த கேலக்ஸியில் மட்டும் 40,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளன.

ஒரு விண்மீன் குழுவில் 10,000 கோடி நட்சத்திரங்கள் உள்ளது போல் இந்த பேரண்டத்தில் 10,000 கோடி Galaxy கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நட்சத்திரக் கூட்டங்கள் ஒன்றை விட்டு மற்றொன்று எண்ணிப்பார்க்க முடியாத வேகத்தில் ஓடுகின்றன.

 

سَنُرِيْهِمْ اَيَتِنَافِىالآْفَاقِ وَفيِْ اَنْفُسِهمْ حَتَّى يَتَبَيَّنَ لَهُمْ اَنَّهُ الْحَقَُّ اَوَلَمْ يَكْفِ بِربِّكَ اَنَّهُ عَلَىَكُلِّ شَيْءٍ شَهِيْدٌ


"நிச்சயமாக (இவ்வேதம்) உண்மையானதுதான் என்று அவர்களுக்குத் தெளிவாகும் பொருட்டு நம்முடைய அத்தாட்சிகளை பிரபஞ்சத்தின் பல கோணங்களிலும், அவர்களுக்குள்ளேயும் சீக்கிரமே நாம் அவர்களுக்கு காண்பிப்போம்; (நபியே!) உம் இறைவன் நிச்சயமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது உமக்குப் போதுமானதாக இல்லையா?" (41:53)

வியப்பும் மலைப்பும் தோன்ற விரிந்து காணப்படும் இந்த அற்புதமான பேரண்டத்தை அளித்தவன் அல்லாஹ் ஒருவனே என்பதை இன்றைய அறிவியல் தெளிவாக்குகின்றன.