Home கட்டுரைகள் விஞ்ஞானம் வேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா?
வேளாண்மையில் மரபணு மாற்றம் தேவையா? PDF Print E-mail
Thursday, 28 January 2010 11:38
Share

[ இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளும் வேளாண் பல்கலைக் கழகங்களும் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப் பரப்புவதில் இறங்கியிருக்கின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி தெளிவான ஆராய்ச்சியோ கொள்கை முடிவுகளோ கிடையாது.

ஐரோப்பிய யூனியனில் மரபனு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள். ]

மரபணு என்றால் என்ன? ஒரு உயிர் அதன் தன்மைகளை அடுத்த சந்ததிக்கு மாற்ற உதவும் அணுவை மரபணு (DNA) என்று சொல்கிறோம். இந்த மரபணுதான் தாய், தந்தையின் உருவ அமைப்புகளையும், குணாதிசயங்களையும் குழந்தைகளுக்கு கடத்துகிறது. இது மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்குகள், தாவரங்கள் ஆகிய அனைத்து உயிரிகளுக்கும் பொதுவானது. இந்த மரபணுக்கள் குறித்த முழுமையான உண்மைகளை மனித இனம் இன்னும் கண்டறியவில்லை. ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த ஆய்வுகளின் ஒரு பகுதியாகவே மரபணுவை மாற்றி அமைக்கும் ஆய்வுகளும் தொடர்ந்து வருகின்றன.

மரபணு மாற்றம் (Genetic Engineering -or- Genetic Modification) என்றால் என்ன? அது எதற்காக?

மாங்கனிகளில் ஒட்டு மாங்கனி என்று ஒரு வகையை கேள்விப் பட்டிருக்கலாம். நல்ல ருசியுள்ள மா வகையையும், நல்ல விளைச்சல் தரக்கூடிய மா வகையையும் இணைக்கும் விதத்தை உயர்நிலைப்பள்ளியில் உயிரியல் பாடத்தில் படித்திருப்போம். இரு மரக்கிளைகளை விவசாயிகளே இணைத்து இந்த புதிய ரகங்களை உருவாக்கிவிடுவார்கள். இரண்டு நல்ல குணங்களையும் இணைத்து கிடைக்கும் பழத்தின் விதை புதிய வீரிய ரக மாமரத்தை உருவாக்கும். மனித முயற்சிகள் இன்றி இயற்கையிலேயே பல வீரிய ரக உயிரினங்கள் தோன்றியுள்ளன.

"The decision is a big blunder and the GEAC has taken this decision despite many dissent notes from various experts and senior scientists," said Supreme Court appointed observer in GEAC scientist Dr Pushp Bhargava.

இதை புரிந்து கொள்ள உயிர்களின் தோற்றத்தை ஆய்வு செய்து விளக்கிய அறிவியல் மேதை சார்லஸ் டார்வினின் இயற்கைத் தேர்வு கொள்கையை படித்தால் முழுமையாக புரியும்.

ஆரோக்கியமான உயிரினங்களை உற்பத்தி செய்வதற்காகவே இயற்கையும், மனிதர்களும் இது போன்ற உத்திகளை கையாண்டுள்ளனர்.

மரபணு மாற்று தொழில்நுட்பத்தை எதிர்ப்பவர்கள் எதற்காக எதிர்க்கின்றனர்?

அறிவியலும், தொழில்நுட்பமும் மனித வாழ்வின் மேம்பாட்டுக்கு மிகவும் அவசியம் என்றாலும் அதை பயன்படுத்துவதில் சில அம்சங்களை கவனிக்கவேண்டும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறது. அறிவியலை நேசிக்கும் சில மேதைகள் அதன் எதிர்விளைவுகள் மற்றும் தீயவிளைவுகள் குறித்து சிந்திக்க மறந்து விடுவதாக - அல்லது - மறுத்துவிடுவதாக புகார்கள் கூறப்படுகிறது. அறிவியலும் அறம் சார்ந்து இருக்க வேண்டும் என்று அறிவியல் மேதைகளிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர். அறத்தை மறந்து பல அறிவியல் மேதைகள் செயல்படுவதால் மனித இனத்திற்கு பேரழிவுகள் ஏற்படுவதாகவும் இந்த தரப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இயற்கையிலும், இயற்கையை சீரழிக்காத மனித முயற்சிகளிலும் மரபணு மாற்றம் ஏற்படுவதில் எந்த சிக்கலும் இருப்பதில்லை. ஆனால் இயற்கைக்கு சவால் விடும் வகையில் நடக்கும் நிகழ்வுகளை இயற்கை ஏற்பதில்லை. அதற்கு உரிய எதிர்விளைவுகளை மனிதர்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குதிரையையும், கழுதையையும் இணைத்து ஒரு புதிய விலங்கு உருவாக்கப்பட்டது. அதன் பெயர்: கோவேறுக் கழுதை. இந்த விலங்கு கழுதையைப்போல் பொதியும் சுமக்கும், குதிரையைப்போல் வேகமாகவும் செல்லும். ஆனால் இந்த புதிய விலங்கு மற்ற விலங்குளைப்போல இயல்பாக இனப்பெருக்கம் செய்யாது. கோவேறுக்கழுதை தேவைப்படும் போதெல்லாம் குதிரையையும், கழுதையையும் இணைப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த விலங்கால் மனிதனுக்கு தீமை எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் இந்த விலங்கை மனிதன் இன்னும் உணவாக உட்கொள்ள ஆரம்பிக்கவில்லை. ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொண்ட விலங்குகளுக்கு பல்வேறு நலக்கேடுகள் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே மரபணு மாற்றுக்கூறுகள் மற்ற உயிர்கள் மீது ஏற்படுத்தக்கூடிய தீய விளைவுகள் குறித்து உரிய பாதுகாப்பு ஆய்வு(BIO-SAFETY TEST)களை மேற்கொள்ளாமல் மரபணு மாற்றத் தொழில்நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்தக்கூடாது என்று மரபணுமாற்றுத் தொழில்நுட்பவியல் நிபுணர்களிலேயே ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

மரபணு மாற்றுத்தொழில் நுட்பம் எந்தெந்த உயிரிகளில் பயன்படுத்தப்படுகிறது?

விலங்குகளில் மாடு, ஆடு, பன்றி, கோழி ஆகியவற்றில் மரபணுமாற்றத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே முட்டையிடாத (பிராய்லர்) கோழிகள், முட்டையிட்டாலும் குஞ்சு பொரிக்கும் திறனற்ற முட்டைகளை ஈனும் (லேயர்) கோழிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கோழிகளையும், முட்டைகளையும் உட்கொள்வோருக்கு ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வுகள் நடந்து வருகின்றன.

தாவரங்களில் அரிசி, கோதுமை, கரும்பு, பருத்தி உட்பட பல்வேறு ரகங்களில் மட்டுமல்லாமல் மரவகைகளிலும், மூலிகை இனங்களிலும்கூட மரபணு மாற்று ஆய்வுகள் நடைபெறுகின்றன ஆனால் மரபணு மாற்றப்பட்ட தாவரங்களை உட்கொள்ளும் உயிரிகளின் பாதுகாப்பு குறித்த சோதனைகள் உரிய அளவில் நடைபெறவில்லை.

மரபணு மாற்று கத்தரிக்காய்

நுகர்வோருக்கு மிகவும் பாதுகாப்பானது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு (Genetic Engineering Approval Committee) அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயையும், அதைத் தொடர்ந்து அனைத்து மரபணு மாற்றப்பட்ட பயிர்களையும் சந்தையில் அறிமுகப்படுத்த வழி ஏற்பட்டுள்ளது. மரபணு மாற்று தொழில் நுட்பத்தை வேளாண்மையில் பயன்படுத்துவதற்கு தொழில்நுட்ப நிபுணர்களில் ஒரு தரப்பினரும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயற்கை விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மரபணு மாற்று கத்தரிக்காயில் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடந்தனவா?

மரபணு மாற்று கத்தரிக்காயை உருவாக்க இருக்கும் மான் சான்டோ நிறுவனத்தின் இந்திய ஏஜென்ட்டான மஹிகோ (Maharashtra Hybrid Company) நிறுவனமே இந்த உயிரிப்பாதுகாப்பு சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சோதனை அறிக்கையை பிரான்ஸ் நாட்டின் உயிரித்தொழில்நுட்ப நிபுணரான பேராசிரியர் செராலினி என்பவரிடம் கருத்து கேட்டு கிரீன்பீஸ் அமைப்பு அனுப்பியது. அந்த அறிக்கையை ஆய்வு செய்த பேராசிரியர் செராலினி, ஒரு பொறுப்பற்ற - மோசமான ஆய்வின் .உதாரணமாக மஹிகோ நிறுவனம் நடத்திய சோதனையை வகைப்படுத்தினார். இது குறித்து விரிவான விமர்சன அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.

பேராசிரியர் செராலினி வெளியிட்ட விமர்சன அறிககை மத்திய அரசால் அமைக்கப்பட்ட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு(GEAC)விடம் அளிக்கப்பட்டது. அதை ஆய்வு செய்த மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள், பேராசிரியர் செராலினியை தொடர்பு கொண்டு சில ஐயங்களை எழுப்பியுள்ளனர். பேராசிரியர் செராலினியின் விமர்சனத்தில் கூறப்பட்டுள்ள சில அம்சங்கள் மஹிகோ நிறுவனம் நடத்திய உயிர்ப்பாதுகாப்பு சோதனை அறிக்கையின் எந்த பக்கத்தில் இடம் பெற்றுள்ளது என்று கேள்வியை அவர்கள் எழுப்பியுள்ளனர்.

ஆக மொத்தத்தில் மஹிகோ நிறுவனம் நடத்தியதாகக் கூறும் பாதுகாப்பு சோதனையின் அறிக்கையைக்கூட மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழுவின் உறுப்பினர்கள் முழுமையாக படிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதை பேராசிரியர் செராலினியே அவரது இந்திய வருகையின்போது தெரிவித்தார். இந்திய அதிகாரிகள் அனுப்பிய மின்னஞ்சல் தம்மிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தகைய மரபணு மாற்றுத் தொழில்நுட்ப அங்கீகாரக்குழு உறுப்பினர்கள்தான், அதை மஹிகோ நிறுவன பாதுகாப்பு சோதனை அறிக்கையை ஏற்றுக்கொண்டு மரபணு மாற்றப்பட்ட கத்தரிக்காயை சந்தையில் உணவாக அறிமுகப்படுத்துவதால் இந்தியர்களின் பாதுகாப்புக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று சான்று அளித்துள்ளனர்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட BT-கத்தரிக்காயை மைக்கோ [Maharashtra Hybrid Seeds Company Ltd.(Mahyco) என்ற நிறுவனமும் தமிழ்நாடு வேளான்மை பல்கலை கழகமும் சந்தையில் விட தயாராக இருக்கின்றன. மத்திய அரசின் Genetic Engineering Approval Committee (GEAC), இந்த ஆராய்சியின் விளைவுகளை ஆதரித்து BT-கத்தரிக்காயால் மனிதருக்கோ,பிற உயிரினங்களுக்கோ, சுற்றுசூழலுக்கோ எந்தவித பாதிப்பும் இல்லை என சான்றளித்திருக்கிறது!!!

தமிழ்நாடு வேளாண் பல்கலை கழக துணைவேந்தர் "எந்தவித தொந்தரவுமில்லை தாராளமாய் வாங்கி சாப்பிடுங்கள் BT கத்தரிக்காய்" என்கிறார்!!!

ஆனால் BT பருத்தி தந்துள்ள அனுபவமும் உலகம் தழுவிய விஞ்ஞானிகளின் அபாய எச்சரிக்கையும் பல உலக நாடுகளின் மரபனு மாற்றம் பெற்ற உணவு (Genetically Modified Food)குறித்த தயக்கமும் நம்மை "SAY NO TO GENETICALLY MODIFIED FOOD " என சொல்லவைக்கிறது.கிரீன்பீஸ் அமைப்பு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், மரபனு மாற்றப்பட்ட கத்தரிக்காய் குறித்து மைக்கோ சமர்பித்த ஆய்வு அறிக்கைகளைப் பெற்று, ஆராய்ச்சியாளர்களிடம் கொடுத்து கருத்து அறிந்தன.

ஃபிரெஞ்ச் விஞ்ஞானி முன் வைக்கும் கருத்துக்கள்

மைக்கோவின் ஆய்வுகளை மறுஆய்வு செய்த GILLES-ERIC SERALINI என்ற பிரெஞ்ச் விஞ்ஞானி முன் வைக்கும் எண்ணங்கள் சில:

1.நோய்கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்துகளை( Antibiotic) செயல் புரிய முடியாமல் செய்யும் தன்மை BT-கத்தரிக்காயில் ஊடுருவியுள்ள BT ஜீனின் உள்ளதால் மனிதனின் நோய்க்கு கொடுக்கப்படும் (முக்கியமாக Neomycin,Streptomycin) போன்ற மருந்துகள் செயல்படமுடியாமல் போகும்.

2. BT கத்தரிக்காயில் உள்ள புரதம் (Crystal [Cry] proteins) மனித உடலுக்கு தீங்கை விளைவிக்ககூடிய நச்சு தன்மை உடையது.

3. இந்த ஆய்வு 90 நாள்களுக்குள் ஏற்படும் மாற்றங்களை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளது. நீண்டகால ஆய்வுகள் இருந்தால்தான், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான காரணியாக மரபனு மாற்ற கத்தரிக்காய் மாறுகிறதா என்பதை அறிய முடியும்.

4.சுற்றுபுற சூழலின் சமனை அழிப்பதில் இந்த மரபனுமாற்ற தாணியங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுப்பகுதிகளில் இருக்கும் சாதாரணப் பயிர்களை இவை பாதிக்கின்றன. மகரந்த தூள்கள் காற்றில் பரவுவதால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மரபணு மாற்றப் பயிர்களின் விளைவாக, இயற்கையில் இருந்து வரும் உயிர்ச் சங்கிலித் தொடர் சீர்குலையும் ஆபத்தும் ஏற்பட்டிருக்கிறது. சில பூச்சிகள், புழுக்கள் ஒரேயடியாக இல்லாமற்போய்விட்டால், அவற்றை உன்டு உயிர் வாழும் சில வகைப் பறவைகள் இல்லாமற் போய்விடும். அவற்றின் அழிவு, தொடர் விளைவை ஏற்படுத்தும். மரபனு மாற்றம் பெற்ற தாணியம் விளைந்த நிலங்களை சுற்றி அமெரிகாவில் கொத்து கொத்தாய் வண்ணத்து பூச்சிகள் இறந்து போயின. சொல்ல முடியாது இந்த நிலை நீடித்தால் நாமும் நம் வண்ணத்து பூச்சிகளை இழக்கலாம் 

5. மான்சாண்டோ போன்ற விதை நிறுவனங்கள் தாங்கள் விற்கும் விதைகளில் Terminator என்ற தொழில் நுட்பதத்தை பயன்படுத்துகின்றன.இதனால் இந்த விதைகளிலிருந்து விளையும் தாணியங்களிலிருந்து பெறப்படும் விதைகளை மீண்டும் பயன் படுத்தமுடியாது.அவைகள் மலட்டு விதைகளாக இருக்கும். எனவே விதைகளுக்கு நாம் மீண்டும் விதை நிறுவனத்தையே சார்ந்திருக்கவேண்டும்.இதனால் விதை,தானியங்கள் மீதான சுதந்திரம் விவசாயிடமிருந்து பறிக்கபடும்.உணவு உற்பத்தி ஒரு தனி நிறுவனத்தின் ஏகபோக உரிமையாகக்கூடும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்தியாவில் எந்த விவாதமும் இல்லாமல், பன்னாட்டு கம்பெனிகளும் வேளாண் பல்கலைக் கழகங்களும் அரசு ஆதரவுடன் மரபணு மாற்ற பயிர்களைப் பரப்புவதில் இறங்கியிருக்கின்றன. அரசியல் கட்சிகளைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட விஷயங்கள் பற்றி தெளிவான ஆராய்ச்சியோ கொள்கை முடிவுகளோ கிடையாது.

மரபணு மாற்றுக் கத்தரிக்காயின் வர்த்தக உற்பத்திக்கு அப்படியென்ன தேவை இருக்கிறது? என்று கேட்டால் அதற்கு கிரீன்பீஸ் அமைப்பினர் சொல்லும் முதல் காரணம், இதன் மூலம் காப்புரிமை என்கிற பெயரில் விதைகளை இந்திய விவசாயி பயன்படுத்தும்போதெல்லாம் இதை அறிமுகப்படுத்திய பன்னாட்டு நிறுவனத்துக்கு "ராயல்டி' செலுத்தியாக வேண்டும். இரண்டாவதாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியனில் மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருள்களுக்கு வரவேற்பில்லை. அங்குள்ள விவசாயிகளும் அதை விரும்புவதில்லை. ஆகவே அவர்களது தொழில்நுட்பத்தை இந்தியாவில் விற்க முயற்சிக்கிறார்கள். நாம் விழித்துக்கொள்வோம்.

sources : STWR.org

www.nidur.info