Home இஸ்லாம் ஹதீஸ் நன்மை பயக்கும் நபிமொழி - 56
நன்மை பயக்கும் நபிமொழி - 56 PDF Print E-mail
Monday, 23 November 2009 08:37
Share

ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''சொர்க்கவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (உடலாலும் பொருளாலும்) பலவீனமானவர், அதனால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் சொர்க்கவாதிகளே! அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான்.

நரகவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கடின மனம் கொண்ட, பருமனான உடலுடன் ஆணவத்துடன் நடக்கும், பெருமை பிடித்த ஒவ்வொருவனும் நரகவாதியே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.''(புகாரீ, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. 'ஆணவக்காரர்களும் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது.' அப்போது, 'நீ என்னுடைய தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்! நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு விடுவீர்கள்!' என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''முஸ்லிம் பெண்களே! ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே! (அதையேனும் வழங்கலாம்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.'' (புகாரி, முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(ரலி) கூறுகிறார்) (புகாரி,முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:

''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' (புகாரி, முஸ்லிம்)