Home
அப்துர் ரஹ்மான் உமரி


இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி PDF Print E-mail
Tuesday, 19 March 2019 07:45

இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி

இப்திகார் கிலானி (முன்னணி ஊடகவியலாளர், DNA India நிறுவனத்தின் மூத்த செய்தியாளர், Chief of National Bureau — DNA India)

    தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி      

o     ‘தங்கள் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப் போவதில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை’ என பாஜக நினைக்கின்றது. ஆகையால் முடிந்த அளவுக்கு முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி, ஹிந்து ஓட்டுகளை எந்த அளவுக்கு ஒன்றுதிரட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஒன்று திரட்ட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம், முயற்சி.

o     மறுபக்கம் மதச்சார்பற்ற கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஆர்எஸ்எஸ் - பாஜக போன்றவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் எங்குதான் போவார்கள்? நம்மிடம் தான் வரவேண்டும், நமக்குத்தான் வாக்களிக்க வேண்டும்!. ஆகையால் அவர்களும் சமூக - பொருளாதார சிக்கல்களை சரி செய்பவர்களாக இல்லை

o     ‘பெருநகரங்களை பொருத்தவரை ஹிந்து வலதுசாரிக் கட்சியான பாஜகவிற்கும் மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸிற்கும் இடையே வேறுபாடுகள் ஒன்றுகூட இல்லை!’ 

o     இன்னும் ஒரு தகவலும் காதும் காதும் வைத்தாற்போல கட்சிக்குள் உலாவருகின்றது. முஸ்லிம் தலைவர்கள் எவரும் சீட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக தமது தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள மதச்சார்பற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளை தேர்வு செய்து அவர்களது வெற்றிக்காக உழைக்க வேண்டும்

o     இவற்றையெல்லாம் பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது? அடுத்து அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அறவே இருக்காது!

o     இந்த நாட்டின் வாடகைதாரர்களளோ குடியேறிகளோ அல்லர் முஸ்லிம்கள்!. இந்த நாட்டின் பங்குதாரர்கள், இந்த நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள்.   வரலாறு திரிக்கப்படுகின்றது என்பார்கள் இங்கு வரலாறு அடியோடு துடைத்தழிக்கப்படுகின்றது என்கிறார்கள் மக்கள்.

o     முஸ்லிம் தலைவர்களும் ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.   சரியான வியூகத்தோடு நுட்பமாக தீட்டப்பட்ட ஒரு மாற்று ஏற்பாடு குறித்து நிதானமாக யோசிக்க வேண்டிய காலம்   ]

Read more...
 
ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்! PDF Print E-mail
Wednesday, 12 December 2018 08:05

ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!

       மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி       

ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும்.

இறைவனை நம்பியேற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம்

நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண்ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.

நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம்

இந்த ‘நினைப்பு’ தான் இன்று பெரும் ஆபத்தாக உரு வெடுத்துள்ளது.

நம்பிக்கை என்றால் என்ன?

நம்பிக்கை இருப்பதாக நினைத்துக்கொள்வது என்றால் என்ன? என்பதை கொஞ்சமும் உணராத மக்களாகவே நாமிருக்கிறோம்

‘நினைப்பு’ மயக்கத்தைத் தருகின்றது. ‘மயக்கம்’ மனநிம்மதியைத் தருகின்றது. ‘மனநிம்மதி’ தொலைந்துபோன பாதையைப் பற்றி சிந்திக்கவிடாமல் நம்மைத் தடுத்து விடுகின்றது.

Read more...
 
அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள் PDF Print E-mail
Thursday, 22 March 2018 07:53

அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்

    சையத் அப்துர் ரஹ்மான் உமரி     

முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம்.

பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தான் என்கிற பேருண்மையும் அங்கே புலப்பட்டது! 

‘அகழ்’* என்பது அராபியர்களுக்கு முன்பின் அறிமுகமாகாத ஒன்று! அகழைத் தோண்டும் தற்காப்புக் கலையால் குறைந்த எண்ணிக்கையிலான படையைக் கொண்டே மிகப் பெரிய எதிரிப்படையைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தது. உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே ஏற்படும்.

Read more...
 
இஸ்லாமின் முதல் அழைப்பாளர் அஷ்ஷஹீத் முஸ்அப் (ரளி) PDF Print E-mail
Friday, 16 February 2018 08:00

Image may contain: text

இஸ்லாமின் முதல் அழைப்பாளர்

அஷ்ஷஹீத் முஸ்அப்   ரளியல்லாஹு அன்ஹு

     அப்துர் ரஹ்மான் உமரி     

இறைவனின் தூதரால் மதீனாவிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இஸ்லாமிய அழைப்பாளர், முஸ்அப் இப்னு உமைர். இளம்வயது நபித் தோழர். இஸ்லாம் வெற்றிகள் பலபெற்று தன் பெயரை நிலைநாட்டும் முன்பே இறைவனைப் போய்ச்சேர்ந்து விட்டவர். இறைத்தூதரின் கண்களுக்கு முன்பாகவே இறைவன் அவரை ஷஹீதாக உயர்த்திக் கொண்டான்.

அற்புதமான பல நபித்தோழர்கள் இவரது கைகளால் இஸ் லாமை ஏற்றுக் கொண்டார்கள். யாருடைய இறப்பின்போது ரஹ்மானின் அர்ஷ் நடுங்கியதோ அந்த ஸஅதும் யார் குர்ஆனை ஓதினால் மலக்குகள் வரிசையில் நின்று கேட்பார்களோ அந்த உஸைதும் இவர் மூலமாகத்தான் இஸ்லாமில் நுழைந்தார்கள்.

அழகும் இளமையும் புகழும் பெருமையும் நிறைந்த குறைஷி குல இளங்காளை முஸ்அப். குறைஷியரின் அவைகளை அலங் கரிக்கும் பொன் விளக்காய் புது நிலவாய் ஜொலித்தவர். இஸ்லாமை ஏற்றபிறகு, ஈமானின் இலக்கணமாய் நன்றியுணர்வின் நெடுந்தூணாய் உருமாறி நின்றவர். அவரது வாழ்வின் ஒவ் வொரு பக்கங்களிலும் மானுடர் குலத்து இளந் தலைமுறைக்கு அரியபல படிப்பினைகள் நிரம்பியுள்ளன.

Read more...
 
இளமையை இறையடிமைத்தனத்தில் கழி! PDF Print E-mail
Thursday, 15 February 2018 07:24

இளமையை இறையடிமைத்தனத்தில் கழி!

       அப்துர் ரஹ்மான் உமரி       

‘பருவகால இச்சைகளுக்குப் பலியாகாத இளைஞனைக் கண்டு உன்னிறைவன் வியப்படைகிறான்.’ (அபூ யஅலா, அஹ்மத்/ சஹீஹ் என்கிறார் அல்பானி)

இந்நபிமொழியில் உள்ள ‘ஸப்வத்துன்’ எனும் சொல், பருவ கால இச்சைகள், வாலிபத் தேட்டங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஆர்வம் போன்றவற்றை இது குறிக்கும்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான பண்பு இது!

சிறு வயதில் ஞானம் பெற்றவனால்தான் இது சாத்தியம்! அப்புறம் ஏன் இறைவன் வியப்படைய மாட்டான்?

ஒருவன் சிறுவயதிலிருந்தே இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுள்ளான். பெரும்பாவங்களில் விழாமல் சிறுசிறு குற்றங்களை வழக்கப்படுத்தாமல் பாதுகாக்கப்படுகிறான். அவற்றைப் பற்றிய கேள்விகள் மறுமையில் அவனுக்கு இல்லவே இல்லை! ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு உன்னத பேறு இது!

Read more...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 Next > End >>

Page 1 of 8