வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

குர்ஆன் ஷரீஃபுக்கு குர்ஆன் ஷரீஃபே விளக்கம் கொடுத்துள்ளது Print E-mail
Wednesday, 28 August 2019 11:27

குர்ஆன் ஷரீஃபை புரிந்து கொள்ளுதல்

    முதலாவது    

முஸ்லீம்கள் இறைவனை யாராலும் எதுவாலும் படைக்கப்படாத யாருடனும் எதுவுடனும் பங்குபோடாத கற்பனைக்கு எட்டாத வார்த்தைகளில் அடங்காத அனுபவித்து தெரிந்து கொள்ளக்கூடியதாக நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மேலும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களை இறைவனின் இறுதி தூதர் எனவும் தங்கள் வாழ்க்கையின் அழகிய முன்மாதிரியாகவும் அகிலத்தின் அருட்கொடையாகவும் பார்க்கிறார்கள். அதே போல், குர்ஆன் ஷரீஃபையும் இறைவனின் பேச்சாகவும், முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்கு அருளப்பட்டதாகவும் நம்புகிறார்கள்.

இப்படி நம்பும் முஸ்லீம்களாகிய நாங்கள் அல்லது முஸ்லீமாகிய நான், அதில் உள்ள வசனங்களை ஆராய்ந்து பார்க்கிறேன் என்றால் அதை சந்தேகப்பட்டு அது சரியானது தானா என்று ஆறுதல் அடையும் பொருட்டாக இருக்க முடியாது.

ஆனால் முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. ஏனெனில் இஸ்லாத்தின் அடிப்படையே நம்பிக்கையில் தான் பிறக்கிறது. இதை நம்புங்கள் என்று கட்டாயப்படுத்துவது சரியில்லை என்ற காரணத்தினால் தான் 'மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என குர்ஆன் ஷரீஃபே சொல்கிறது.

Read more...
 
நயவஞ்சகத் தீர்ப்புக்கு அல்லாஹ்வின் பதில்! Print E-mail
Wednesday, 27 November 2019 09:17

0 ''தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் 9:32)

0 ''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்.)'' (அல் குர்ஆன் 9:33)

0 ''இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.'' (அல் குர்ஆன் 2:114) 

0 ''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!''(அல் குர்ஆன் 9:51)

Read more...
 
வழிபாடுகளில் முகஸ்துதி வேண்டாம் Print E-mail
Monday, 12 April 2021 07:15

வழிபாடுகளில்   முகஸ்துதி   வேண்டாம்

நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒருவன் தொழுவதைப் போல.

அல்லாஹ் கூறுகிறான்:

"இந்த நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள்.

(உண்மையில்) அவனே இவர்களை ஏமாற்றத்திற்குள்ளாக்கி இருக்கின்றான்.

இவர்கள் தொழுகைக்காக எழுந்து நின்றால் சோம்பல் பட்டவர்களாகவே நிற்கிறார்கள்.

மக்களுக்குக் காட்டிக் கொள்ளவே தொழுகிறார்கள்.

இன்னும் அல்லாஹ்வை மிகக் குறைவாகவே நினைவு கூறுகிறார்கள்" (4:142)

Read more...
 
இறைவனை ஏமாற்ற முடியாது Print E-mail
Monday, 25 September 2017 07:04

இறைவனை ஏமாற்ற முடியாது

பொதுவாக நம் வாழ்க்கை அமைதியாகச் சென்று கொண்டிருக்கும்போது நமக்கு உண்மை இறைவனைப் பற்றிய நினைப்பு வருவதில்லை. அவன் நமக்கு வழங்கிவரும் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் மறந்துவிடுகிறோம்.

நாட்டு வழக்கம் என்றும் முன்னோரின் வழக்கம் என்றெல்லாம் சொல்லி நம்மில் பலரும் இறைவன் அல்லாதவற்றை எல்லாம் வணங்கி வரும் பழக்கம் உடையவர்களாக உள்ளோம். இதன் விபரீதத்தை உணராமலேயே காலத்தைப் போக்கியவர்களாக வாழ்ந்து கொண்டு வருகிறோம். இது பற்றி சிந்திக்க நாம் நேரமும் ஒதுக்குவதில்லை.

ஆனால் திடீரென்று ஒரு நோயின் காரணமாகவோ விபத்தின் காரணமாகவோ அல்லது வியாபாரம் அல்லது தொழிலில் ஏற்படும் திடீர் இழப்புகளின் காரணமாகவோ வாழ்க்கை தடம்புரளும்போது நிராசை அடைகிறோம். யாராவது உதவ மாட்டார்களா என்று ஏங்குகிறோம். அப்போதும் இடைத்தரகர்களை அணுகி மீணடும் இறைவன் அல்லாதவற்றின் முன்னால் சென்று அதிகம் அதிகமாகக் காணிக்கைகளும் நேர்ச்சைகளும் செய்து மன்றாடுகிறோம்.

உண்மை இறைவன்பால் ஏனோ திரும்ப மறுக்கிறோம். ஆனால் உண்மை இறைவனோ நம்மைத் தன்பால் அழைக்கிறான். அதாவது நம்மை அழகிய உருவத்தில் செம்மையாக வடிவமைத்து நமக்கு வேண்டிய தேவைகளை எல்லாம் குறைவின்றி வழங்கி பரிபாலித்து வரும் அந்தக் கருணையாளன் தன் அருள்மறையில் கேட்கிறான்:

அல்குர்ஆன் 82:6-8. மனிதனே! அருட்கொடையாளனாகிய உன் இறைவனைக் குறித்து உன்னை ஏமாற்றத்தில் வீழ்த்தியது எது? அவனே உன்னைப் படைத்தான்; உன்னைக் குறைகள் எதுவுமின்றிச் செம்மைப்படுத்தினான்; உனக்குப் பொருத்தமான உறுப்புகளை அளித்தான்.மேலும், தான் நாடிய உருவத்தில் உன்னை ஒருங்கிணைத்து உண்டாக்கினான்.

அவன் நம்மை நேரடியாக அவனிடமே அழைத்துப் பிரார்த்திக்குமாறு பணிக்கிறான்.

அல்குர்ஆன் 2:186 (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன் பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக.

Read more...
 
குழப்பங்கள் நிறைந்த காலம்! Print E-mail
Tuesday, 05 September 2017 07:30

குழப்பங்கள் நிறைந்த காலம்!

''எனக்குப் பிறகு நீங்கள் வெறுக்கிற பல விஷயங்களைக் காண்பீர்கள்'' என்று (அன்சாரிகளிடம்) நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியது.

'தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில் குறை) எதையேனும் (கண்டு அதை) வெறுப்பவர் பொறுமையாக இருக்கட்டும்.   ஏனெனில்,   ஆட்சியா(ருக்குக் கட்டுப்படாமல் அவ)ரிடமிருந்து ஒரு சாண் அளவு வெளியேறுகிறவர் அஞ்ஞான கால மரணத்தை எய்துவார்' என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்'' என இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.

தம் (ஆட்சித்) தலைவரிடமிருந்து (மார்க்க விஷயத்தில்) தமக்குப் பிடிக்காத (குறை) ஒன்றைக் காண்கிறவர் அதைப் பொறுத்துக் கொள்ளட்டும்! ஏனெனில், ஒருவர் (இஸ்லாமியக்) கட்டமைப்பிலிருந்து பிரிந்து, (அதே நிலையில்) இறந்துவிட்டால் அஞ்ஞான கால மரணத்தையே அவர் சந்திப்பார்' என்று இறைத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' என இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். (ஸஹீஹுல் புகாரி: 2187)

Read more...
 
இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது! Print E-mail
Wednesday, 01 July 2020 06:55

இஸ்லாமில் அவநம்பிக்கைக்கு இடமில்லை! அல்லாஹ்வின் உதவி மிக மிக அருகில் தான் இருக்கிறது!

கழுத்தில் கத்தியை வைத்து அறுக்கும் வரை இஸ்மாயில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. கத்தியை வைத்த பிறகே உதவி வந்தது.

மலையளவு நெருப்பில் தூக்கி எறியும் வரை இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. நெருப்பில் தூக்கி எறிந்த பிறகே உதவி வந்தது.

நைல் நதி வரை எதிரிகள் துரத்தி வந்தபோதும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்வின் உதவி கிடைக்கவில்லை. அதற்கு பிறகு தான் நதி பிளந்து அல்லாஹ்வின் உதவி கிடைத்தது.

இரண்டு மலைகளுக்கு நடுவே ஏழு முறை ஓடும் வரை அல்லாஹ்வின் உதவி அன்னை ஹாஜிரா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கிடைக்கவில்லை. அதற்கு பிறகே ஜம் ஜம் கிடைத்தது.

Read more...
 
நபி வழியில் தண்ணீர் சிக்கனம்! Print E-mail
Thursday, 23 November 2017 07:26

Image result for don't waste water

நபி வழியில் தண்ணீர் சிக்கனம்!

      ஹழரத் அலி       

ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான செய்தி

அல்லாஹ் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான ஏராளமான அருட்கொடை களை தனது தனிப்பட்ட பெருங் கருணையினால் வழங்கி வருகிறான். இந்த அருட்கொடைகளில் நாம் சுவாசிக்கும் காற்றுக்கு அடுத்தப்படியாக மிக முக்கியமானது தண்ணீர் என்பதை அனைவரும் அறிவோம்.

இந்த தண்ணீருக்கு அடிப்படை ஆதாரமாக அனைவரும் விளங்கக்கூடிய மழையை அல்லாஹ் நிறுத்திவிட்டால் மனிதர்கள் மட்டு மின்றி காட்டில் வாழ்கின்ற விலங்கினங்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாவதை பார்க்கிறோம்.

மழை பொழிய வேண்டிய காலங்களில் மழை பொழியாமல் இருந்தால், நாட்டில் உள்ள நீர்நிலை ஆதாரங்களான ஆறு, ஏரி, குளம் மற்றும் அணைகள் அனைத்தும் வறண்டுவிடுகின்றன. இதனால் மக்கள் குடிநீருக்கே அவதிப்படும் இந்தச் சூழலில் முஸ்லிம்கள் எந்த முறையில் தண்ணீர் சிக்கனத்தை மேற்க்கொள்ள வேண்டும் என்கின்ற அறிவை பெற்றுக் கொள்வது மிக அவசியம். இதற்கான வழிமுறைகளில் ஒருசிலவற்றை நபிமொழிகளின் அடிப்படையில் பார்ப்போம்.

Read more...
 
என்றும் கொடுத்து வாழ்வோம்! உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம்! Print E-mail
Friday, 15 December 2017 10:41

Related image

என்றும் கொடுத்து வாழ்வோம்! உலகை அமைதிப் பூங்காவாக மலரச் செய்வோம்!

மதீனா வீதிகளில் ஈத் எனும் பெருநாள் தொழுகைக்காக செல்லும் நபித்தோழர்களின் முழக்கம். எல்லோர் முகத்திலும் மகிழ்ச்சி… புத்தாடைகள்…. நறுமணங்கள்… எங்கும் உற்சாகப் பெருக்கு… முஹம்மது நபியவர்களும் தம் தோழர்களுடன் மதீனா பள்ளிவாசலை நோக்கி, இறைவனை புகழ்ந்தவாறு சென்று கொண்டிருக்க…. ஒரு சிறுவன் மட்டும் வீதியின் ஓரத்தில் தன் முகத்தை கைகளில் புதைத்தவாறு அழுதுகொண்டிருந்தான்.

நபியவர்கள் நின்றார்கள். மற்றத் தோழர்களை, “நீங்கள் தொடருங்கள். நான் பின்பு உங்களை சந்திக்கிறேன்” என்றார்கள். அழுத பாலகனின் அருகில் வந்து, அவனது முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஏன் அழுகிறாய் குழந்தாய்?’ என பரிவாகக் கேட்டார்கள்.

“இன்று பெருநாள். எல்லா குழந்தைகளும் தம் தந்தையின் கைகளைப் பிடித்துக்கொண்டு பெருநாள் தொழுகைக்காகச் சென்று கொண்டிருக்கிறார்கள். என்னுடைய தந்தை உஹத் போரில் மரணம் அடைந்துவிட்டார். என்னைக் கரம் பிடித்துக்கொண்டு பெருநாள் தொழுகைக்கு அழைத்துப் போக எனக்கு அப்பா இல்லை. நான் மட்டும் தனியாக இங்கு அமர்ந்து அழுதுகொண்டிருக்கிறேன்” என்றவாறு மீண்டும் அழ ஆரம்பித்தான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், “நீ இப்படி அழுதால், இந்த முஹம்மதும் பெருநாளைக் கொண்டாட மாட்டார்” என்றவாறு அந்த மழலையின் பிஞ்சு கரங்களைப் பற்றி, “எல்லாக் குழந்தைகளும் அவரவர் தந்தையின் கரங்களைத்தான் பற்றிக்கொண்டிருக்கிறார்கள். நீயோ முஹம்மதின் கரங்களைப் பற்றிக்கொண்டிருக்கிறாய். இன்று முதல் உனது தந்தை இந்த முஹம்மதுதான். ஆயிஷா உனது தாயார்” என்றார்கள்.

Read more...
 
அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள் Print E-mail
Monday, 15 July 2019 09:10

அற்பமாகக் கருதப்படும் அழகிய நன்மைகள்

கண்ணியமும் மகத்துவமுமிக்க அல்லாஹூதஆலா தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்:

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்கள் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன்: 2: 148)

முஸ்லிம்களாக இருக்கக்கூடியவர் அனைவரும் தாம் இறந்த பிறகு மறுமையில் நற்பேற்றினைப் பெற்றிட வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதற்காக தங்களால் இயன்ற அளவிற்கு நற்செயல்களும் செய்து வருவார்கள்.

மறுமையில் நாம் சொர்க்கம் செல்ல வேண்டுமென்றால் நாம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டும் போதாது. நற்செயல்களும் அவசியம் என்பதை மேலே கூறியுள்ள குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்.

மேலும் அல்லாஹூதஆலா கூறுகிறான்:

நம்பிக்கைக் கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தா செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (அல்குர்ஆன்: 22:77)

Read more...
 
“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” Print E-mail
Wednesday, 02 January 2019 15:16

        Asma Sharfuddeen       

“நீங்கள் விரும்பும் பொருள்களிலிருந்து செலவு செய்யாதவரை அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய முடியாது” என்று அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான். (அல்குர்ஆன் 3:92)

அல்லாஹ்விடத்தில் நன்மையை அடைய பல வழிகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று 'ஸ‌தகா' என்று சொல்லப்படும் தான தர்மங்கள் செய்வதாகும்.

இந்த உலகத்தில் மனிதன் விரும்பக்கூடிய முக்கியமானவைகளில் முதலாவது செல்வம்தான்! எனவே செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாதவரை நன்மையை அடைய முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

பொருளாதரத்தைப் பெற்றிருக்கும் ஒரு மனிதன்,அந்த பொருளாதாரத்தில் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் செலவு செய்ததுபோக மீதம் உள்ளதில் அவனால் இயன்ற அளவிற்கு தன்னுடைய உறவினர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் அனாதைகளுக்கும் வறியவர்களுக்கும் ஏழைகளுக்கும் அவர்களின் கண்ணீர் துடைக்கும் விதமாக, துயர் போக்கும் விதமாக‌ தர்மம் வழங்குவது இஸ்லாத்தின் பார்வையில் அவசியமாகும்.

ஆனால், பொருளாசை நிறைந்த இந்த உலகில் தர்மம் செய்வது என்பது மிகவும் அரிதாகி விட்டது. மரணித்த பிறகு எந்தப் பலனும் தராத செல்வத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவழிப்பதை விட, சேர்த்து வைப்பதில்தான் மனிதன் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறான்.

Read more...
 
ஹராமான உணவால் ஏற்படும் தீமைகள் Print E-mail
Thursday, 08 March 2018 07:34

Related image

ஹராமான உணவால் ஏற்படும்   தீமைகள்

1. நல்ல அமல்கள் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்காது.

2. அவ்வாறு செய்தாலும் அதில் இன்பம் இருக்காது.

3. நற்செயல்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.

4. துஆக்கள் ஒப்புக்கொள்ளப்படாது.

5. செல்வத்தில் பரக்கத் இருக்காது.

6. கெட்ட செயல்களைச் செய்யுமாறு உள்ளம் தூண்டும்.

7. குழந்தைகள் மோசமாகி விடுவார்கள்.

8. ஹராமான பணம் வந்ததைப் போன்றே சென்றுவிடும்.

9. ஹராமான பொருளைச் சாப்பிடுபவன் சொர்க்கம் செல்லமாட்டான்.

Read more...
 
குர்ஆன் சுன்னாஹ் பார்வையில் சாபத்திற்குரியவர்கள் Print E-mail
Saturday, 31 March 2018 08:32

குர்ஆன் சுன்னாஹ் பார்வையில் சாபத்திற்குரியவர்கள்

இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.

o சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்

o சபிப்பதைத் தடை செய்யும் நபி மொழிகள்

o யாரைச் சபிக்கலாம்? யாரைச் சபிக்கக்கூடாது?

Read more...
 
வியாபாரிகளே! சத்தியம் செய்யாதீர்! Print E-mail
Tuesday, 24 July 2018 07:30

வியாபாரிகளே! சத்தியம் செய்யாதீர்!

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றதாக அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்; ‘வியாபாரத்தினிடையே, அதிகமாக சத்தியம் செய்வதைக் கைவிடுங்கள். ஏனென்றால், சத்தியம் செய்வதால் வியாபாரம் நன்கு நடந்தாலும், பிறகு அதில் எந்த பரக்கத்தும் (அபிவிருத்தியும்), நன்மையும் இல்லாது செய்துவிடும்.’ (நூல்: முஸ்லிம்)

சில வியாபாரிகள், தங்களின் சத்தியத்தின மூலம் பொருட்களை வாங்க வருவோரின் மனதில் பொருளும் நல்ல பொருள், விலையும் சரியான விலை என்ற எண்ணத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இது அல்லாஹ்வின் பேரை சிறிதும் பொருத்தமில்லாத இடத்தில் பயன்படுத்துவதாகும். இதனை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்களின் இனிய போதனைகளால் விளக்கி, விலக்கியிருக்கிறார்கள்.

இத்தகைய சத்தியங்களினால் வியாபாரிகள் விரும்பும் வியாபாரம் விரிவடையலாம். ஆயினும் அதில் அபிவிருத்தி இருக்காது என்பதைத்தான் மேலுள்ள நபிமொழி உணர்த்துகிறது.

Read more...
 
வேதம் வழங்கப்பட்டவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்! Print E-mail
Thursday, 06 September 2018 12:53

வேதம் வழங்கப்பட்டவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள்!

யூதர்களையும் கிறித்தவர்களையும் இஸ்லாமிய ஆட்சி வந்ததற்கு பிறகு முஸ்லிம்களால் கொடுமைபடுத்தப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. இதை நாம் கீழே வரும் நபிமொழியைக் கொண்டு சரி பார்ப்போம்.

இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:

ஒரு யூத ஆணும் ஒரு யூதப் பெண்ணும் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொண்டு வரப்பட்டனர். அவர்கள் இருவரும் மானக்கேடான செயல் (விபசாரம்) புரிந்து விட்டிருந்தனர்.

அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களுடைய வேதத்தில் (இவர்களுக்கு) என்ன (தண்டனை) காணப்படுகிறது?' என்று கேட்டார்கள்.

அதற்கு அந்த (இடத்திலிருந்த) யூதர்கள், 'எங்கள் (மத) அறிஞர்கள், (விபசாரம் புரிந்தவர்களை) முகத்தில் கரி பூசி, முழங் கால்களைப் பிடித்தபடி குனிந்து நிற்கச் செய்யவேண்டும் என்ற தண்டனையை உருவாக்கியுள்ளனர்' என்றார்கள்.

Read more...
 
ஹலால் இறைச்சி என்றல் என்ன? Print E-mail
Sunday, 02 July 2017 10:56

ஹலால் இறைச்சி என்றல் என்ன?

முஸ்லீம்கள் இறைச்சியுண்பது நியாயமா?

    ஹலால் இறைச்சி என்றல் என்ன?     

பிராணியை அறுக்குமுன் கத்தியை நன்றாக தீட்டி இறைவன் பெயரை சொல்லி  கழுத்தில் வேகமாக அறுப்பது.

கழுத்தில் முக்கால் பாகம் வரை அறுத்து ரத்தம் முழுவதையும் வெளியேற்றி விட வேண்டும்.

கழுத்தில் முக்கால் பாகம் வரை அறுப்பதால் பிராணிக்கு அதன் பிறகு வலி தெரியாது.

ஏன் என்றால் மூளைக்கும் கழுத்துக்கும் உள்ள வலி நரம்புகள் துண்டிக்க பட்டு விட்டன.

பிராணிக்கு அறுக்கும் போது உள்ள வெறும் 5 நொடிதான் வலி.

இரத்தம் முழுவதையும் வெளியேற்றி விடுவதால் அனைத்து கிருமிகளும் வெளியேறிவிடும்.

இரத்தம் உண்ண கூடாது. ஏன் என்றால் இரத்தம் இறைவனால் உண்ண தடை செய்யப்பட்டுள்ளது

Read more...
 
அல்லாஹ்விடம் மட்டுமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் Print E-mail
Tuesday, 03 September 2019 19:29

அல்லாஹ்விடம் மட்டுமே நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும்

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.  (தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (அல்குர்ஆன் 18:102-104)

மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (அல்குர்ஆன்)

நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான். ]

Read more...
 
குகையிலிருந்து புதையல்கள் Print E-mail
Thursday, 12 October 2017 10:22

குகையிலிருந்து புதைல்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “எவர் சூரத்துல் கஹஃப்ஃபை வெள்ளிக்கிழமையன்று ஓதுகிறாரோ அவருக்கு அது அந்த வெள்ளிக்கிழமையிலிருந்து மறு வெள்ளிக்கிழமை வரை ஒளியாக இருக்கும்.”

ஒவ்வொரு வாரமும் ‘சூரத்துல் கஹஃப்’ஓதி இந்த மகத்தான கூலியைப்பெற்று பயன்பெற திட்டமிடுகிறீர்களா?

இவ்வத்தியாயத்தில் உள்ள, அன்றாட வாழ்வின் பாடங்கள் அடங்கிய நான்கு அழகிய கதைகளின் கருத்துக்கள் உங்களுக்குத் தெரியுமா?

இக்கதையின் முக்கிய கருத்து ‘அறிவு’. நீங்கள் எப்படி ஒரு ஆக்கபூர்வமான அறிவைத் தேடுபவராக இருக்க முடியும்? அறிவைத் தேடுபவருடைய பண்பாடுகள் எவை? உங்கள் கல்வியில் வெற்றி பெறத்தேவையான எந்த சிறப்பியல்புகளைப் பெற நீங்கள் கடுமையாக முயல வேண்டும்?

‘உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா?’ என அவரிடம் மூஸா கேட்டார்.’ (அல் குர்ஆன்18:66)

Read more...
 
தீவிர நோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு Print E-mail
Tuesday, 31 March 2020 07:34

தீவிர நோய்ப் பரவலின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய தனிமையிருப்பு

[ பள்ளிவாசல்களில் ஜமாஅத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை போன்றவை நடைபெறாமல் இருப்பது இப்போது கவலைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இது, உணர்வு பூர்வமாகப் பார்த்தால் சரிதான். ஆயினும் அறிவு ரீதியாகப் பார்த்தால் இது குறித்துக் கவலை கொள்வதற்குச் சட்ட ரீதியாக எதுவுமில்லை. ]

    வழிகாட்டும் அமவாஸ் கொள்ளைநோய்     

அமவாஸ் என்பது இன்றைய ஃபாலஸ்தீனில் ஜெரூசலேமுக்கும் ரமல்லாவுக்கும் இடையே ஜெரூசலேமிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவிலிருந்த ஒரு சிற்றூர். 1967ஆம் ஆண்டில் நடந்த யூத ஆக்கிரமிப்பு அக்கிரமத்தால் அவ்வூர் மக்கள் துரத்தப்பட்டு வீடுகள் தகர்க்கப்பட்டன.

இன்று இந்தப் பெயரில் அப்படியொரு சிற்றூர் இல்லை.

Read more...
 
கஷ்டப்பட்டால் தான் நன்மையா? Print E-mail
Sunday, 27 September 2020 08:31

கஷ்டப்பட்டால் தான் நன்மையா....!

   அபூ ஃபெளஸீமா     

"நீர் கஷ்டப்படுவதற்காக குர்ஆனை உம்மீது நாம் இறக்கவில்லை." (அல்-குர்ஆன் 20:1)

"அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான், அவன் உங்களுக்குச் சிரமத்தை நாடவில்லை." (அல்-குர்ஆன் 2:185)

இன்று இஸ்லாமியர்கள் மத்தியில் பக்தி என்ற போர்வையில் பெரியார்கள் என்ற ஊர், பெயர் தெரியாத சந்நியாசிகளைப் பற்றிய கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. கஷ்டப்பட்ட அளவிற்கு பலன் உண்டு என்பதைப் போதிக்கத்தான் இந்தக் கதைகள். அப்படிப்பட்ட போதனைகள்தான் மற்றவனைச் சுரண்டி வாழ்வதற்கு பக்கபலமாக இருந்து கொண்டிருக்கிறது.

இந்தக் கதைகளுக்கும் நம்மைச் சூழவுள்ள மாற்றுமதத்தவர்களிடையே உள்ள அவர்களுடைய நம்பிக்கைகளுக்கும் வித்தியாசம் இல்லை.

அவர்கள் ஒரு நம்பிக்கையைத் தம் கடவுளோடு சம்பந்தப்படுத்திக் கூறும் போது, முஸ்லிம்களிலும் பலர் அதற்குப் போட்டியாகக் கதைகளை எழுதிப் பள்ளிபள்ளியாக விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

கஷ்டப்பட்டால்தான் இறைவனை நெருங்க முடியும் என்பதுதான் அவர்களின் சித்தாந்தம். அதனால்தான், அவர்களின் கதைப்புத்தகங்களிலே:

ஒவ்வொரு நாளும் 1000 ரக்அத்கள் ஸுன்னத்தான தொழுகை தொழுத பெரியார்.

40 வருடங்கள் ஒரே வுளுவில் இஷாவையும் ஸுப்ஹையும் தொழுத பெரியார்.

தஸ்பீஹ் செய்யும் காலணியைக் கனவில் கண்ட பிரபல சூஃபி.

அல்லாஹ்வின் மீதிருந்த பேரின்பக் காதலில் மூழ்கி அறுபது வருடமாக அழுத பெரியார்.

எல்லா மாதங்களும் ரமளானே என்று வரித்த பெண் பெரியார்.

15 ஆண்டுகள் படுக்காத பெரியார்.

கப்ரில் தொழுத பெரியார்.

போன்ற பெரும் பெரும் கப்ஸாக்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

Read more...
 
வானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது? Print E-mail
Thursday, 05 November 2020 18:29

வானம் ஏன் நீலநிறமாக இருக்கிறது?

நம் தலைக்கு மேலே இருக்கும் அரைவட்டப் பரப்பைத்தான் வானம் என்று குறிப்பிடுகிறோம். தலைக்கு மேல் உள்ள கூரை என்றும் வானம் அழைக்கப்படுவது உண்டு. பூமியின் மேற்பரப்பில் குறிப்பிட்ட தொலைவுக்கு மேலே உள்ள வளிமண்டலம், விண்வெளி ஆகிய அனைத்துமே உள்ளடங்கியதுதான் வானம்.

வானியலில் இது வான்கோளம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கற்பனைக் கூரையில் சூரியன், நட்சத்திரம், கோள்கள், நிலா போன்றவை சுற்றிக் கொண்டிருப்பதை இரவில் பார்க்கலாம்.

வளி மண்டலத்திலிருந்து அத்தனை கிரகங்கள் நட்சத்திரங்கள் சூரியன் உட்பட அத்தனையும் நமது பூமி என்ற கிரகத்திற்கு பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது

وَجَعَلْنَا السَّمَآءَ سَقْفًا مَّحْفُوْظًا وَّهُمْ عَنْ اٰيٰتِهَا مُعْرِضُوْنَ‏

மேலும், வானத்தைப் பாதுகாக்கப்பட்ட ஒரு கூரையாகவும் அமைத்தோம். ஆயினும், அவர்கள் பேரண்டத்திலுள்ள சான்றுகளைக் கவனிப்பதேயில்லை. (அல்குர்ஆன் : 21:32)

Read more...
 
மனமும் மூளையும் - ரஹ்மத் ராஜகுமாரன் Print E-mail
Thursday, 07 January 2021 07:44

மனமும் மூளையும் - ரஹ்மத் ராஜகுமாரன்

உகங்ளால் முயுடிமா ?

உகங்ளால் இப்பகக்த்தை பக்டிக முந்டிதால் உகங்ளை பாட்ராடியே ஆக வேடுண்ம் நூறுற்க்கு 55 சவிகித மகக்ளால் மடுட்மே இ்பப்டி பக்டிக முயுடிம்.

நீ்கங்ள் எபப்டி இதை பக்டிகிர்றீகள் என்று உகங்ளால் நம்ப முயடிவிலைல்யா?

ஆசச்ரிமாயன ஆறற்ல் கொடண்து மதனினின் மூளை ஒரு ஆய்ராச்யிசில் கேபிம்ட்ரிஜ் பல்லைகக்ககழம் இந்த உமைண்யை கடுண்பித்டிது உளள்து.

எத்ழுக்துகள் எந்த வசைரியில் உளள்து எபன்து முகிக்யமல்ல முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்ழுதும் சயாரின இத்டதில் உள்ள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும் எனாதல் எறான்ல்....

மதனினின் மூளை முதல் எத்ழுதையும் கடைசி எத்ழுதையும் மடுட்மே பக்டிகும் பாகிக்யுள்ள எத்ழுதுக்கள் தானாக உள்ங்வாகபப்டும்.

திருக்குர்ஆனை ஓதும்போது நீங்கள் கவனித்திருக்கலாம் எழுத்துக்கள் இடம் மாறிய பிழைகளும் இல்லை .எழுத்துப் பிழையும் இல்லை . இருந்தாலும் திருக்குர்ஆனை தொழுகையில் மனப்பாடமாக ஓதி ஓதி அதைப் பார்த்து ஓதும்போது எழுத்துப்பிழைகள் தெரியாது என்பதாக யூதர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் யூதர்களை விட ஒரு படி மேலே போய்  த.த.ஜ.வினர் புனிதக்குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உண்டு என்று வாதம் செய்ததை இங்கே சுட்டிக் காட்டுகிறேன். (வலைதளத்தில் உள்ளதை Copy Text செய்து கொடுத்துள்ளேன் )

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 5 of 93

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article