வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது Print E-mail
Wednesday, 05 February 2014 11:05

தங்கத் தாம்பாளத்தில் உண்டபோது இல்லாத நிம்மதி இஸ்லாத்தில் இருக்கிறது

[ பணத்துக்காக, பெண்ணுக்காக, புகழுக்க்காக இஸ்லாத்தை துறக்கும் முஸ்லிம்களுக்கு, இவை எல்லாம் இருந்து இஸ்லாத்துக்காக இவற்றைத் துறந்த முஹிப்புல்லாஹ் அவர்களின் வாழ்க்கையில் படிப்பினை இருக்கிறது.]

அல் முஃமின் அறக்கட்டளை சார்பில் நேற்று சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த தஃவா நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் புத்த மதகுருவும் இந்நாள் அழைப்பாளருமான முஹிப்புல்லாஹ் அவர்கள் பேசிய போது

புத்த மதகுருவாக இருந்த காலத்தில் என்னிடம் ஆசி வாங்க லட்சக்கணக்கில் கொடுத்து காத்திருப்பார்கள்! இதில் மத்திய மந்திரிகள் எல்லாம் அடக்கம்! அவர்களுக்கு எனது காலால் அவர்களது தலையில் மிதித்து ஆசி வழங்குவேன்! அதிலும் புத்த பாரம்பரிய தஙக செருப்பு எனக்கு இருந்தது! அதை அணிந்து செருப்புக் காலால் மிதித்தால் கூடுதல் லட்சங்கள்!

ஆனால் இன்றைக்கு கூட்டத்துக்கு வர என்னிடம் சரியான செருப்பு இல்லாமல் அறுந்து போனதால் கீழ் வீட்டில் உள்ளவரின் இரவல் செருப்பில் நின்று பேசிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் இரவல் செருப்பின் மூலம் இஸ்லாம் எனும் தூய பாதையில் நடந்து வந்து இருக்கிறேன்.

தங்கத் தாம்பாளத்தில் தான் சாப்பிடுவேன்! ஆனால் இஸ்லாத்தை ஏற்றவுடன் ஒரு விருந்துக்கு அழைத்திருந்தார்கள் அங்கேயும் ஒரு தாம்பாளம் வைத்தார்கள்அதில் போய் உட்கார்ந்தேன்! என்னோடு அந்த ஊரில் உள்ள ஏழை பணக்காரர் எனும் பாகுபாடின்றி அனைவரும் கை போட்டு கலக்கிய போது குமட்டியது!

ஆனால் நாளடைவில் எல்லா நிலையிலும் இஸ்லாம் சமத்துவத்தை பேணும் செயலை எண்ணிய போது தங்கத் தாம்பாளத்தை விட எனக்கு இது உயர்ந்ததாக தெரிந்தது.

Read more...
 
டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு! தாயின் கடமை! Print E-mail
Wednesday, 15 January 2020 18:49

டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு!

தாயின் கடமை!

     Dr. ஷ ர் மி ளா       

[ o பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

o இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

o ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

o பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

o திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.]

Read more...
 
திருமதி! Print E-mail
Friday, 04 February 2011 09:15

திருமதி!

     அபூ ஃபௌஸீமா      

இஸ்லாம், யாருமே சிந்திக்காத ஒரு காலத்திலே பெண்களின் உரிமைகளைப் பற்றியும் அவர்களின் சுதந்திரம், பாதுகாப்பு, கௌரவம் ஆகியவற்றைப் பற்றியும் குரல் கொடுத்தது. குரல் கொடுத்தது மட்டுமல்ல அந்த மகோன்னதக் கைங்கரியத்தைச் செயல்படுத்தி பெண்களை அடிமைத் தளையிலிருந்து விடுதலையும் செய்தது.

கிடைத்த அந்த விடுதலையைப் பாதுகாத்துக் கொள்வதில் பெண்கள் எவ்வளவு அக்கறையாக இருக்கிறார்கள் என்பதை அலசிப் பார்க்கும் போது அடிமையாகவே இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டவர்களை எப்படி விடுவிப்பது என்ற பெரிய கேள்விதான் நம்முன்னே தொக்கி நிற்கிறது.

நாகரிகம் என்ற மயக்கத்தில் தமது அறிமுகத்தையே இழந்து விட்டிருக்கிறார்கள். அதை மீளப்பெறுவதற்கு பெண்கள் முன்வருவார்களா?

மாற்றுக் கருத்துக்கள் இருப்பவர்கள் அவற்றை ஆதாரபூர்வமாகச் சுட்டிக் காட்டி சமூக அமைப்பிலே இன்று இருக்கக் கூடிய அந்நியரைப் பின்பற்றும் நிலைமை மாற்றமுற தமது பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

Read more...
 
உங்கள் மனைவியை காதலியுங்கள்! Print E-mail
Tuesday, 20 January 2015 06:30

உங்கள் மனைவியை காதலியுங்கள்!

காதல் மனைவிக்காக உலக அதிசயத்தையே எழுப்பிய ஷாஜஹான் என்று காதலால் பிரபலமானவர்கள் பலர் உள்ளனர். இவர்களை தலைமுறை தலைமுறையாக நினைவில் கொள்ளும் நாம், மனைவியை மட்டும் காதலியாய் ஏற்றுக்கொள்ள தயங்குகிறோம்.

"அன்பே நீ வெளியில் வராதே.... வண்ணத்து பூச்சிகளெல்லாம்.... நீ தான் மலரென்று தேனெடுக்க.... முற்றுகையிட்டுவிடும்'' என்று, திருமணமான புதிதில் ஐஸ் மேல் ஐஸ் வைத்தவர்கள்கூட, நாளாக நாளாக, 'அப்படியா நான் சொன்னேன்?' என்று அரசியல்வாதிகள் ஸ்டைலில் பல்டி அடிப்பதையும் நடைமுறை வாழ்வில் பார்க்க முடிகிறது.

அடிக்கடி மெரீனா பீச்சுக்கு விசிட் அடிக்கும் பஷீர் அன்றும் அப்படியே அங்கு சென்றிருந்தார். அது மாலைநேரம் என்பதால் குளுமையை அள்ளிக்கொண்டு வந்து வீசிச்சென்றது கடல்காற்று. அந்த இனிமையில் அப்படியே காலாற நடந்து சென்றார்.

ஓரிடத்தில், கரையோரம் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சிறிது நேரம் அமர்ந்திருக்கலாம் என்று நினைத்தவர் அதை நோக்கி நடந்தார்.

படகை நெருங்க நெருங்க இரண்டு பேர் பேசிக்கொள்ளும் சத்தம் கேட்டது.

"உனக்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். நம்மைக் கண்டு ஓடிப்போகும் அந்த சூரியனைக் கூட உனக்கு பிடித்து தருவேன். ஏன்... இன்னும் சிறிதுநேரத்தில் நம்மை காண வர இருக்கும் நிலவைக்கூட பிடித்து உனக்கே உனக்காய் பரிசளிப்பேன்'' என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருந்தான் அந்த காதலன்.

அதற்கு காதலி சொன்னாள்...

"எனக்கு அதெல்லாம் வேண்டாம். நீ உன் மனைவியை டைவர்ஸ் செய்தால் போதும்'' என்றாள்.

Read more...
 
எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக! Print E-mail
Monday, 06 May 2013 06:15

எங்கள் கணவர்களை எங்களின் கண்களுக்குக் குளிர்ச்சியாக ஆக்கி வைப்பாயாக!

நாம் அடிக்கடி கேட்கின்ற துஆக்களுள் ஒன்று திருமறை – அத்தியாயம் 25 வசனம் 74 – ல் வரும் பின் வரும் துஆ தான்:

மேலும் அவர்கள்: "எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் பயபக்தியுடையவர்களுக்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கியருள்வாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25: 74)

மேற்கண்ட திருமறை வசனத்தில் "மின் அஸ்வாஜினா" / min azwaajinaa / என்பதற்கு சரியான மொழிபெயர்ப்பு என்ன?அஸ்வாஜினா என்பதற்கு எங்களின் மனைவியர் என்று மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. இது சரியா என்பதே நம் கேள்வி.

ஸவ்ஜ் என்பது ஒருமை. அஸ்வாஜ் என்பது பன்மை.

ஸவ்ஜ்    என்பதன் முழுமையான பொருள் என்ன?

ஆங்கிலத்தில் ஸவ்ஜ் என்பதற்கு one of a pair, partner, couple, mate, husband, wife என்றெல்லாம் மொழிபெயர்க்கப்படுகின்றது."ஜோடி" என்பது பொருத்தமான மொழிபெயர்ப்பாக தெரிகிறது.

தமிழில் இதற்கு – துணை, துணைவர், துணைவி – என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

Read more...
 
இதுவும் சுன்னாவே! Print E-mail
Friday, 25 October 2019 07:06

இதுவும் சுன்னாவே!

1. வயதான பெண்களை திருமணம் செய்வது சுன்னத்.

2. விவாகரத்து செய்தவரை திருமணம் செய்வது சுன்னத் தான்.

3. ஒரு விதவையை திருமணம் செய்வது சுன்னத்.

4. வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவுவது சுன்னத், அதாவது சமையல், சுத்தம் செய்தல், கழுவுதல் போன்றவை.

5. அன்பின் வெளிப்பாடாக உங்கள் மனைவியின் வாயில் உங்கள் கையால் உணவை வைப்பது சுன்னத். 

6. உங்கள் மனைவியிடம் அன்பு, பாராட்டு மற்றும் மரியாதை ஆகியவற்றை வாய்மொழியாக வெளிப்படுத்துவது சுன்னத் தான்.

Read more...
 
கவனம் இல்லாத தொழுகை; கவனம் இல்லாத பாலுறவு - இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை! Print E-mail
Wednesday, 15 January 2020 17:44

கவனம் இல்லாத தொழுகை;

கவனம் இல்லாத பாலுறவு -

இரண்டிலும் எந்தப் பயனும் இல்லை!

     நீடூர் S.A.மன்சூர் அலீ      

திருமறையின் 23 வது அத்தியாயத்தின் முதல் 11 வசனங்களின் தமிழ் மொழிபெயர்ப்பைக் கீழே தந்துள்ளோம் உங்கள் சிந்தனைக்கு.

ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர். அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். இன்னும், அவர்கள் வீணானவற்றை விட்டு விலகியிருப்பார்கள். ஸகாத்தையும் தவறாது கொடுத்து வருவார்கள்.

மேலும், அவர்கள் தங்களுடைய வெட்கத் தலங்களைக் காத்துக் கொள்வார்கள். ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர – நிச்சயமாக அவர்கள் பழிக்கப்படமாட்டார்கள். ஆனால், இதற்கு அப்பால் எவர் நாடுகிறாரோ அவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள்.

இன்னும், அவர்கள் தங்கள் அமானிதங்களையும், வாக்குறுதிகளையும் காப்பாற்றுவார்கள். மேலும் அவர்கள் தம் தொழுகைகளைப் பேணுவார்கள். இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். (23:1-11)

இந்த இறை வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முக்கியமான விஷயங்கள் என்னென்ன?

Read more...
 
கணவரின் உயிரணு„ மனைவிக்கு மட்டுமே! Print E-mail
Sunday, 10 January 2016 08:04

கணவரின் உயிரணு„ மனைவிக்கு மட்டுமே!

      அ. செய்யது அலி மஸ்லஹி, பாஜில்      

"உங்கள் மனைவியர் உங்களின் விளை நிலங்கள். உங்கள் விளை நிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்! உங்களுக்காக (நல்லறங்களை) முற்படுத்துங்கள்” (அல்குர்ஆன் 2:223)

இந்த வசனம் பல பிரச்சனைகளுக்கு சரியான தீர்வாக அமைந்துள்ளது.

முதலாவது : சிலவழிமுறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக்கூடாது என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த யூதர்கள் பரப்புரை செய்து வந்தனர்.

“அவ்வாறு உறவு கொண்டால், குழந்தை மாறுகண் உடையதாகப் பிறக்கும் என பரப்புரை செய்து வந்தனர்” (நூல் முஸ்லிம் : 2592)

இரண்டாவது : குறிப்பிட்ட நாட்களில்தான் இல்லறம் நடத்த வேண்டும் எனும் மூடநம்பிக்கை இருந்து வந்தது. இத்தகைய தவறான நம்பிக்கைக்கு எதிராகவே இவ்வசனம் தீர்வாக அருளப்பட்டது.

‘நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்’ எனும் சொற்றொடர் மூடநம்பிக்கைக்கு எதிராகவும், ஒருவலுவான தீர்வாகவும் அமைந்துள்ளது.

மூன்றாவது : இன்றைய நவ நாகரீக உலகில் நவீன பிரச்சனையாக உருவெடுத்துள்ள ‘செயற்கை முறையில் கருவூட்டல்’ போன்ற பிரச்சனைக்கும் இவ்வசனம் அழகான தீர்வாக அமைந்துள்ளது.

Read more...
 
மூன்று காதல் மொழிகள்! Print E-mail
Monday, 27 January 2014 10:47

மூன்று காதல் மொழிகள்!

திருமண வாழ்வை ஒரு கப்பலுக்கு ஒப்பிட்டால், கணவன் மனைவியரின் இல்லற வாழ்க்கைப் பயணம் சுமுகமாக சென்றிட இருவருக்குமிடையிலான "மவத்தத்" எனும் அபரிமிதமான காதல் என்பது கடல் நீர் அளவுக்கு இருந்திட வேண்டும்!

இந்தக் காதலுக்கு என்னென்ன பொருள்கள் எல்லாம் உண்டு தெரியுமா?

affection - இதயபூர்வமான அன்பு
appreciation - உயர்வாக மதித்தல்
attention - கவனம் (எந்நேரத்திலும்)
commitment - அர்ப்பணிப்பு
joy - மகிழ்ச்சி
respect - கண்ணியம்
responsibility - பொறுப்பு
sacrifice - தியாகம்,
security - பாதுகாவல்
trust - நம்பிக்கை
intimacy - நெருக்கம்

Read more...
 
வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை! Print E-mail
Thursday, 13 March 2014 07:53

வீணடித்து விடாதீர்கள் உங்கள் பொக்கிஷத்தை!

காலாகாலமாகவோ அல்லது தலைமுறை தலைமுறையாகவோ ஒரு தவறை முஸ்லிம் கணவன்மார்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அது - உயர்ந்தோன் அல்லாஹ் - பெண்களுக்கு அளித்திருக்கும் கண்ணியத்தையும், உரிமைகளையும் அவர்களுக்குத் தர மறுப்பது தான்!

ஏனோ தெரியவில்லை. முஸ்லிம் கணவன்மார்கள் தங்களின் மனைவியர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை!

தங்களின் உரிமைகளைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் கணவன்மார்கள், தங்களின் மனைவியரின் உரிமைகளைக் காற்றில் பறக்க விட்டு வேடிக்கைப் பார்க்கிறார்கள்.

திருமணம் முடித்து கணவன் வீட்டுக்கு வந்த பிறகு கணவன் மனைவியிடம் என்ன எதிர்பார்க்கின்றான் தெரியுமா? தன் மனைவி தனது தாய்க்கும், சகோதரிகளுக்கும் (அதாவது அவளது மாமியாருக்கும், நாத்தனார்களுக்கும்) அடங்கிய பெட்டிப் பாம்பாக இருந்திட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கின்றார்.

இளம் மனைவி ஒருவர் சொல்கிறார்:

Read more...
 
உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை! Print E-mail
Monday, 21 July 2014 02:30

உங்கள் வாழ்க்கைத் துணைக்காக நேரம் ஒதுக்குவது ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை!

நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். “எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு” 

ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும்.

இப்படி மாறி மாறி இருக்கின்ற ரசனைகள் ஒரு கூரையின் கீழ் வந்து சேர்வது தானே குடும்பம்! இந்த இடத்தில் ரசனைகள் முட்டிக் கொள்ளாமல் எப்படி இணைந்து பயணிக்கின்றன என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயம்.

“அவருக்கென்ன, ஆபீஸே கதின்னு கட்டிகிட்டு அழுவாரு” என மனைவி புலம்பினால் உடனே எகிறிக் குதிக்காதீங்க. ஒரு நிமிடம் அப்படியே நின்று நிதானித்துப் பாருங்கள். உண்மையில் எனது நேரத்தில் எத்தனை சதவீதம் வேலைக்காய் அல்லது வேலை சார்ந்த விஷயங்களுக்காய் செலவிடுகிறேன். அந்தப் பட்டியல் உண்மையானதாய் இருக்கணும். நீங்க வீட்டில் உட்கார்ந்து செல்போனில் ரெண்டு மணி நேரம் ஆபீஸ் விஷயங்களை அரட்டையடிக்கிறது கூட இந்த பட்டியல்ல தான் வரணும்.!

இப்போ அப்படியே மனைவியர் ஒரு நிமிஷம் யோசிங்க. உங்களுடைய நேரத்தில் கணவனுக்காக ஸ்பெஷலாய் நீங்கள் ஒதுக்கும் நேரம் எவ்வளவு? சீரியல் பார்ப்பது, வீட்டு வேலைகளில் ஈடுபடுவது, குழந்தைகளைக் கவனிப்பது எனும் விஷயங்களைத் தாண்டியும் நீங்கள் கணவனோடு நேரம் செலவிடுகிறீர்களா என்பது ஒரு குட்டிக் கேள்வி.

Read more...
 
இறைவன் அருளிய இல்லற வசனங்கள் Print E-mail
Thursday, 04 January 2018 10:35

இறைவன் அருளிய இல்லற வசனங்கள்

[ அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனமும்! இன்பத்துப் பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் அறத்துப்பால் வசனமும்!]

அறத்துப்பாலில் மட்டுமே பொருள் கொள்ளப்படும் பாலியல் வசனம்..

''நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்; நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான்; எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள்;...'' (அல் குர்ஆன்: 2:187)

இந்த இறை வசனத்தில் நோன்புகால இரவு நேரங்களில்கூட உறவு கொள்வதற்கு அல்லாஹ் அனுமதியளித்திருப்பதிலிருந்தே உடலுறவின் மேன்மையை விளங்கலாம்.

Read more...
 
இல்லறத்தில் உணர்ச்சி வெள்ளம்! Print E-mail
Saturday, 15 November 2014 08:47

இல்லறத்தில் உணர்ச்சி வெள்ளம்!

["என் மேல் என்ன தப்பு?" என்று இருவருமே நினைப்பதனால், "கருத்துப் பரிமாற்றம்" நின்று போய் விடுகிறது.]

திருமண வாழ்வில் உணர்ச்சிப் பிரவாகம்! அப்படி என்றால் என்ன?

ஒரு கணவனின் மன நிலை இது:

"என் மனைவி என்னைக் கடுமையாக வெறுக்கிறாள்! அதனால் தான் அவள் அடிக்கடி என்னை ஆழமாகப் புண்படுத்தி வேடிக்கை பார்க்கிறாள்! நான் என்ன நினைக்கிறேன் என்பது குறித்தோ, எனது உணர்வுகள் குறித்தோ கொஞ்சம் கூடக் கவலைப்படாமல் வேண்டுமென்றே என்னைச் சீண்டிக் கொண்டே இருக்கிறாள்!

அவள் சீண்டுதல்கள் தொடர்கதையாகி விட்டன! கொஞ்சம் கூட கணவன் மனைவி உறவு என்னாகும் என்பது குறித்து அவள் கவலைப்படுவதாகவே தெரியவில்லை!"

இப்படிப்பட்ட கடுமையான அச்சமூட்டுகின்ற ஒரு மன நிலையிலேயே பெரும்பாலான நேரம் கழிகின்றது அந்தக் கணவனுக்கு!

இவ்வாறு ஒரு கணவன் (அல்லது மனைவி)  அலைமோதும் உணர்ச்சிகளால் அனுதினமும் அலைக்கழிக்கப்படுகின்ற மன நிலை எப்படிப்பட்டதென்றால் -
கடுமையான வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவன் எவ்வாறு அங்கும் இங்கும் அலை மோதி அலைக்கழிக்கப் படுகின்றானோ அது போலவே இங்கே கணவன் "உணர்ச்சி வெள்ளத்தில்" சிக்கிக் கொண்டு  அலைக்கழிக்கப்படுகின்றார்கள்!

Read more...
 
திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா? Print E-mail
Wednesday, 15 January 2020 17:39

திருமண பயமா? திருமணம் என்பது சிக்கலா?

கேள்வி :  என் மனதில் திருமணம் என்பது ஒருவித மீளமுடியாத பொறுப்பில் சிக்கிக்கொள்வது என்று தோன்றுகிறது. நாம் செய்தே ஆக வேண்டிய கடமைகளும், எதிர்பார்ப்பும் இந்த உறவில் இருக்கிறது. இப்படி எதிர்பார்ப்பு இல்லாத உறவு அமைய முடியாதா?

பதில்:  எங்கே உறவு இருந்தாலும், அங்கே ஒரு எதிர்பார்ப்பு இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஏதோ ஒரு தேவை இருப்பதால் தானே எந்த உறவும் அமைகிறது? எந்தத் தேவையும் இல்லாத நிலை இருந்தால், அடுத்தவரை நாடி உறவு அமைத்துக் கொள்ள வேண்டிய அவசியமே இல்லையே?

எதிர்பார்ப்பு இல்லாத உறவு என்பதெல்லாம் பாசாங்கு ஆன்மீகவாதிகளின் சிபாரிசு. இதையெல்லாம் நம்பி உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

எங்கோ இருக்கும் வெறுமையை நிரப்பி, உங்களைத் திருப்திப் படுத்திக் கொள்ளத்தான் நீங்கள் உறவை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள். உங்கள் தேவைக்காகத் தான் இந்த உறவை நாடினீர்கள் என்ற உண்மையை நீங்கள் உணர்ந்தால் போதும்.

‘அப்படி எதுவும் இல்லை, இன்னொரு உயிரை சந்தோஷப் படுத்துவதற்காகத் தான் அதனுடன் உறவு கொண்டேன்’ என்று நீங்கள் சொன்னாலும், அந்த உயிரை சந்தோஷப்படுத்த விரும்பியது நீங்கள் தான் என்பதை மறந்துவிடாதீர்கள்.

Read more...
 
உடலுறவின் போது ஜின்கள்...!!! Print E-mail
Thursday, 27 December 2012 06:32

உடலுறவின் போது ஜின்கள்...!!!

  அபூ மஸ்லமா   

மனிதனின் சந்தோஷத்திற்கும், இளைப்பாறுதலிற்கும், இனவிருத்திக்கும் "உடலுறவு" இன்றியமையாதது.

மனித உடலுறவில் காஃபிருக்கும், முஸ்லிமிற்கும் வித்தியாசம் உள்ளது. தனிமை மட்டும் இருந்தால் அனைத்தையும் மறந்து வரையறையற்று, பல விதங்களில் உடலுறவினை குஃப்பார் மேற்கொள்வர்.

ஆனால் ஒரு முஸ்லிமிற்கு உடலுறவு சட்டங்கள் பற்றி இஸ்லாம் தெளிவாக அறிவித்துள்ளது. அந்த சட்டங்களிற்கு அமையவே உண்மை முஸ்லிம் உடலுறவினை மேற்கொள்வான்.

உடலுறவின் போது வுளு செய்து கொள்வது,

அதற்கான துஆவினை ஓதிக்கொள்வது,

மார்க்க அடிப்படையில் உடலுறவு கொள்வது,

உடலுறவின் பின்னர் மீண்டும் சுத்தம் செய்து மீண்டும் வுளு செய்து கொள்வது.

உடலுறவின் போது அணிந்திருந்த ஆடையை நீக்கி கழுவி, வேறொரு ஆடையை அணிந்து கொள்வது,

குளிப்பினை தொழுகைக்கு முன்னதாக மேற்கொள்வது போன்றவற்றிற்கு பல விதிகள் உள்ளன.

ம்மில் பலர் இதன் படி தமது உடலுறவை ஒரு இபாதாவாக மேற்கொள்கின்றனர். இங்கே தான் திருவிளையாடல் ஆரம்பமாகிறது.

Read more...
 
நான் உங்கள் மனைவி! உங்களை காதலிக்கின்றேன்!! Print E-mail
Thursday, 22 December 2016 08:23

நான் உங்கள் மனைவி! உங்களை காதலிக்கின்றேன்!!

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன்.

முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கறுப்பு.

அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான்.

படுக்கையை விட்டு தள்ளிவைத்தான்.

என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.

இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்று விடுகிறான்.

இரவு 1 மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

Read more...
 
அன்பானவரின் பிரிவின் இடைவெளி! ஒரு இஸ்லாமிய பார்வை Print E-mail
Thursday, 11 December 2014 09:27

அன்பானவரின் பிரிவின் இடைவெளி! ஒரு இஸ்லாமிய பார்வை

[ மணமுடித்தலின் நோக்கம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் சட்ட ரீதியாக பரஸ்பரம் இல்லற சுகம் அடைவதும் அதன் மூலம் மழலைச் செல்வங்களைப் பெறுவதும் ஆகும்.

இல்லறத்தில் இணைந்த தம்பதியரிடையே தாம்பத்திய சுகத்தைப் பறிமாறிக் கொள்ள முடியவில்லையெனில் அவர்கள் மணமுடித்துக் கொண்டது அர்த்தமற்றதாகிவிடும்.

வாழ்க்கையில் இணைந்த தம்பதியர் இருவரும் தாம்பத்திய சுகத்தைப் பெறுவதில் பொதுவாகத் திட்டமிட்டுக் கொள்ளலாம். வெளியூர் செல்லும் கணவன், ஒரு குறிப்பிட்டக் காலத்திற்குள் திரும்புவதாகக் கூறி, மனைவியின் சம்மதத்துடன்தான் செல்கிறான்.

திருமண உறவை ஒப்பந்த உறவாக இஸ்லாம் அறிவித்திருப்பதால், கணவனிடமிருந்து பெறும் தாம்பத்திய சுகம் எப்போதெல்லாம் தனக்கு வேண்டும் என்பதையும் மனைவி தீர்மானிக்கலாம்.

நீண்ட காலம் கணவனைப் பிரியமுடியாது எனக் கருதும் மனைவி, கணவன் தன்னை நீண்ட நாள்கள் பிரிந்து செல்வதைத் தாராளமாகத் தடுத்து நிறுத்தலாம். இதற்கான உரிமை தம்பதியர் இருவருக்கும் உள்ளது.]

Read more...
 
பத்து மடத்தனங்கள் Print E-mail
Monday, 19 August 2013 06:47

[ வீட்டில் மனைவியுடன் சண்டையிட்டுக் கொண்டும் அவளைத் திட்டிக் கொண்டும் இருக்கும் கணவன், குடும்பத்தில் சந்தோஷம் பொங்க வேண்டும் என்று நினைத்தால் அவனை முட்டாள் என்றே கூற வேண்டும். இது நடக்கவே முடியாத காரியம்.

மறந்துவிடாதீர்கள்! மனைவி என்பவள் ஏதோ காட்டில் சுற்றித் திரிந்தபோது நாம் பிடித்து வந்த ஆட்டுக்குட்டியல்ல. அவள் இருவரின் அன்பு மகள்! நாம் தேடிச்சென்று பெண் கேட்டோம். அவளை கண்ணியத்துடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளோம். அவளுக்கென்று உரிமைகள் இருக்கின்றன. அவளது உரிமைகளை அவளுக்கு அளித்தாக வேண்டும்.

எப்படி "கலிமா"வை மொழிந்து விட்டால் முழு ஷரீஅத்தின்படி வாழ்வது ஒரு மனிதனின் மீது கடமையாகி விடுகின்றதோ அதே போலத்தான் திருமணத்தின்போது "கபில்து..." என்ற ஏற்றுக்கொண்டேன் என்ற வார்த்தையை கூறிவிட்டால் அவளது முழு பொறுப்புகளும் கணவனின் தலைமீது வைக்கப்படும். அதை ஆண்மகனாக இருந்து நிறைவேற்ற வேண்டும்.]

Read more...
 
"அந்த" பசிக்கு ஏன் மூன்றாவது நபர்? Print E-mail
Wednesday, 06 July 2011 14:43

 "அந்த" பசிக்கு ஏன் மூன்றாவது நபர்?  

why do you looking third person for ''that'' matter?

குடும்பங்கள் தொடர்பாக பிரச்சினைகளை ஆய்வுசெய்கின்ற போது ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கக்கூடிய, அதிக சிக்கல்களை தரக்கூடிய ஒரு பிரச்சினைதான் தன் கணவர் or மனைவி இருக்கும் போது பிற பெண்ணை or ஆணை தேடுவதும் தொடுவதுமாகும்.

ஒரு கணவன் ஒரு பெண்ணை தனது மனைவியாக ஏற்று வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் போது அந்த கணவன் தனது "அந்த" இல்லற உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேறு ஒரு பெண்ணை அல்லது வேறு ஒரு தடுக்கப்பட்ட முறையை நாடுகிறான், து நமது சமூகத்தில் ஒரு தொட்டுநோயாக பரவி சமூக சீரழிவுக்கு வித்திட்டிருக்கிறது.

உண்மையில் எமது சமுகத்தில் இந்தத் தொட்டுநோய் பரவுவதற்கு சில காரணங்கள் இருப்பது தெரியவருகிறது:

Read more...
 
கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்... Print E-mail
Monday, 20 October 2014 06:38

கணவன்-மனைவி இடையே அதிக வயது வித்தியாசம்...

தற்போது பெரும்பாலும், திருமணம் என்பது ஆண்களைப் பொருத்தவரை 28 வயதுக்குப் பிறகும், பெண்கள் என்றால் 24 வயதுக்குப் பிறகுமே நடைபெறுகிறது.

பள்ளிப்பருவம் முடிந்து, மேல் நிலைக்கல்வி, பட்டப்படிப்பு அல்லது பொறியியல் – மருத்துவம், முதுநிலைப்படிப்பு என வாழ்க்கையில் செட்டில் ஆவதற்கு குறைந்தது 25 வயது ஆகி விடுகிறது எனலாம். அதுபோன்ற நிலையில், காலத்தே பயிர்செய் என்ற பழமொழி பலருக்கு இயலாமல் போய் விடுகிறது.

அதனால், கணவன்–மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் என்பதும், 4 அல்லது 5 ஆண்டுகள் என்ற நிலை மாறி சில தம்பதிகளுக்கு 10 அல்லது 11 வயது வித்தியாசம் கூட ஏற்பட்டு விடுகிறது. சொந்தங்களில் திருமணம் முடிப்பவர்கள், சகோதரியின் மகள் அல்லது அத்தை, மாமன் மகளை திருமணம் முடிப்பது என்பது, சொந்த-பந்தமும், அவர்களின் சொத்துக்களும் வேறு வாரிசுகளுக்கு சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தினால்தான்.

அதன் காரணமாகவே பல குடும்பங்களில் கணவன்–மனைவிக்கு இடையே வயது வித்தியாசம் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கக்கூடும். சரி, வயது வித்தியாசத் தால், பாலுறவுப் புணர்ச்சியில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுமா? என்றால், 90 விழுக்காடு இல்லை எனலாம்.

Read more...
 
புதுப்பிக்கப்படாத திருமணங்கள்! Print E-mail
Sunday, 09 February 2014 07:09

புதுப்பிக்கப்படாத திருமணங்கள்!

வாழ்க்கையின் முதல் 20 - 25 வருடம் வரைதான் பெற்றோர்...பிறகு குப்பை கொட்டுவது என்னவோ கட்டிய மனைவியிடமோ அல்லது பெண்ணாய் இருந்தால் கணவனிடமோதான். ஆனால் பொருளாதாரத்தை துரத்தி, துரத்தியே தாரத்தை தூர விரட்டும் ப்ரொக்ராமிங் இப்போது பெரும்பாலானாவர்களிடம் பை-டிஃபால்ட் ஆக இன்ஸ்டால் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன்.

எல்லோருக்கும் தனது துணையுடன் ஒரு நெருக்கம் கல்யாண காலத்தில் ஏற்படும். அது தொடராமல் போவதற்கான காரணம் , மற்றும் நாம் பெருமை அடித்துக்கொள்ளும் சமுக நீதி , மனைவியை புரிந்து கொள்வது , அல்லது மனைவிக்குபிடித்த விசயங்களை சபையில் பேசினால் அது 'பெண்டாட்டி தாசன்' என்ற பெயருக்கு பயந்தே ஏறக்குறைய கட்டிய மனைவியை ஒரு "கெளரவ வேலைக்காரி' மாதிரி நடத்தும்  விசயத்தை எனது எழுத்துக்கும் வாசகர்களின் கருத்துக்கும் விட்டு விடுகிறேன்.

50' 60' வருடங்களின் காலகட்டத்தில் வீட்டில் 3 வேலை உணவுக்கே சொந்த நாட்டில் ஸ்யூரிட்டி இல்லை என்ற சூழ்நிலையிலும், 'அவன் போரான்... நீ எதுக்கு வெட்டியா இருக்கே' என்ற திட்டுக்கும் பயந்து பல பேர் வெளிநாடு புறப்பட்டனர்.

கப்பலில் வரும் வழியெல்லாம் வாந்தி, தலை சுத்தல் எதுவும் பெரிதாக தெரியாத அந்த தியாகிகள் நினைத்தது என்னவோ 'காலம் ஒரு நாள் மாறும் நம் கவலைகள் யாவும் தீரும்" என்ற நம்பிக்கைதான்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article