Wednesday, 03 September 2014 06:48 |

அவன் தான் தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான். இணைவைத்து வணங்குவோர் (அதனை) வெறுத்த போதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்தச் சத்திய மார்க்கம் வெற்றி பெற்றே தீரும். (சூரா அத்தவ்பா : 33)
எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை அவர்கள் வீணான எண்ணத்தைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை நிச்சயமாக வீண் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது.(அல்குர்ஆன் 53:28)
ஆனால் அவர்களில் பெரும்பாலோர் (ஆதாரமற்ற) யூகங்களையேயன்றி (வேறெதையும்) பின்பற்றவில்லை; நிச்சயமாக (இத்தகைய ஆதாரமற்ற) யூகங்கள் சத்தியத்திற்கு எதிராக எந்த ஒரு பயனும் தர இயலாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 10:36)
வேதத்தையுடையோரே! சத்தியத்தை அசத்தியத்துடன் ஏன் நீங்கள் கலக்குகிறீர்கள்? இன்னும் நீங்கள் அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? (அல்குர்ஆன் 3:71)
|
Read more...
|
Friday, 30 September 2011 07:24 |

இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமே ஆகும்!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு,
வசதி வாய்ப்பு இருப்பவர்கள் இதனை பதிவு எடுத்து மக்களுக்கு வினியோகித்து அதன் மூலம் ஈருலக நன்மையைப்பெற முந்துங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக. - Adm.
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது :
"பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு" (அல்-குர்ஆன் 3:14)
கப்ருகளை சந்திக்கும் வரை செல்வத்தை பெருக்கும் ஆசையில் இருக்கும் மனிதன் :
"செல்வத்தைப பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது- நீங்கள் மண்ணறைகளைச் சந்திக்கும் வரை. அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள். அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது). நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள். பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள். பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்" (அல்-குர்ஆன் 102:1-8)
பொருட் செல்வமும், மக்கள் செல்வமும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் :
"செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன" (அல்-குர்ஆன் 18:46)
|
Read more...
|
Friday, 09 March 2012 07:08 |

திருகுர்ஆன் மொழிபெயர்ப்பும், புரிதலும்
எச்.முஜீப் ரஹ்மான்
பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழி பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.
ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது கூட சரியான மொழியாக்கம் நிகழ்வதில்லை. மேலும் இருமொழி புலமை கொண்டவர் பேசவும், எழுதவும் தெரிந்தவர் மொழிபெயர்க்கும் போது ஒரளவுக்கு மொழிமாற்றம் செய்யப்படும். ஆனால் முழுமையானதன்று.
பேச்சு வழக்கு மொழியறிவை பெறாமல் வெறுமனே மொழியறிவு பெற்று ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழிபெயர்க்கும் போது அநேக தவறுகள் நிகழ்கின்றன. அல்லது இரு மொழியில் புலமையுள்ளவர்களிடம் சரிபார்க்கப்பட்டு அல்லது பேசும் மொழியறிவு பெற்றவரிடம் சரிபார்க்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரதி ஒரளவுக்கு தவறுகள் இல்லாமல் இருக்கும். இருந்த போதிலும் எழுபது சதமான மொழிபெயர்ப்புக்கு சாத்தியமே இல்லை.
ஏனெனில் மொழி என்பது வெறுமனே தகவல் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. அது மொழி பெசுபவரின் சமூகம், பண்பாடு, வரலாறு, உளவியல், இலக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களின் சாராம்சத்தை தகவமைத்து கொண்டிருக்கிறது. எனவே தான் மொழியியல் என்ற துறை மொழியை ஆய்வு செய்யும் துறையாகவும், சமூகத்தை வாசிக்கும் வாசிப்பாகவும் அமைந்திருக்கிறது.
|
Read more...
|
Friday, 09 January 2015 11:23 |

குர்ஆனும் நாமும்
Fatima
குர்ஆனை உலகப் பொதுமறை என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அதன் உள்ளடக்கத்தையும் அது உலகிற்கு வைக்கும் அழைப்பையும் நம்மில் எத்துனைப் பேர் கூர்ந்து – ஆழ்ந்து கவனிக்கிறோம்?
முஸ்லிம்கள் பெருமைப் பேசிக் கொள்வதற்காகவோ வெறும் புனிதப் பொருளாகக் கருதிப் பாதுகாத்து வைப்பதற்காகவோ குர்ஆன் இறக்கி வைக்கப்படவில்லை.
அதன் ஒளியும் – ஒலியும் உலகத்தாரின் கண்களுக்கும், செவிகளுக்கும் சென்றாக வேண்டும். அந்தப் பணியை செய்ய முஸ்லி்ம்கள் தயாராகவில்லை என்றால் அவர்கள் குர்ஆனைப் பற்றி பெருமைப் பேசுவது வெறும் வெத்துப் பேச்சாகவே முடியும்.
அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது:
திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.
|
Read more...
|
Tuesday, 19 January 2010 13:16 |

''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)
மவ்லானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., ரஹ்மதுல்லாஹி அலைஹி
''உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம். ''குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை. நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)'' என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்'' என்று அல்லாமா முஹம்மது இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்.
மனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது. இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், ''இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,'' என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
|
Read more...
|
Saturday, 02 May 2015 06:26 |

அல்லாஹ்வை நிராகரிக்கும் மனித சமுதாயமே! இந்த அறிவார்ந்த விளக்கம் உமக்கு போதாதா?
''(மனிதர்களே!) நீங்கள் பலமான படைப்பா? அல்லது வானமா? அவன்தான் அந்த வானத்தைப் படைத்தான்.'' (அல்குர்ஆன் 79:27)
''வானங்களையும், பூமியையும் எவ்வித சிரமுமின்றி படைத்த அல்லாஹ், மரணித்தவர்களை உயிர்ப்பிக்க நிச்சயமாக ஆற்றலுடையவன்தான் என்பதை அவர்கள் கவனிக்க வேண்டாமா? நிச்சயமாக அவன் சகலவற்றிற்கும் ஆற்றலுடையவன்.'' (அல்குர்ஆன் 46:33)
''முதல்முறை (உங்களைப்) படைத்ததை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்து இருக்கின்றீர்கள். (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா? (இவ்வாறுதான் மறுமையிலும் நாம் உங்களை உயிர் கொடுத்து எழுப்புவோம்.)'' (அல்குர்ஆன் 56:62)
''அவன்தான் படைப்புகளை ஆரம்பத்தில் உற்பத்தி செய்பவன். அவனே (அவை மரணித்த பின்னரும் உயிர்கொடுத்து) அவற்றை மீள வைக்கிறவன். இது அவனுக்கு மிக்க எளிது. வானங்களிலும் பூமியிலும் அவனுடைய (உதாரணமும் பரிசுத்தத்) தன்மை(யும்)தான் மிக்க மேலானதாகும். அவன் (அனைத்தையும்) மிகைத்தவனும் ஞானமுடையவனாகவும் இருக்கிறான்.'' (அல்குர்ஆன் 30:27)
|
Read more...
|
Thursday, 17 December 2015 08:12 |

MUST READ
அல்குர்ஆன் கூறும் இன்பத்திலும், துன்பத்திலும் மனிதன்!
மனிதன் நன்மைக்காக பிரார்த்தனை செய்வது போலவே (சிலசமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கிறான். (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 17:11)
அபூபக்கர், அதிரை
(நபியே!) நீர் கூறும், நீங்கள் கரையிலும், கடலிலும் உள்ள இருள்களில் (சிக்கித் தவிக்கும் சமயத்தில்) எங்களை இதை விட்டுக் காப்பாற்றி விட்டால், நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம் என்று பணிவாகவும், மறைவாகவும் நீங்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றீர்களே அப்போது உங்களை காப்பாற்றுகின்றவன் யார்? (அல்குர்ஆன் 6:63)
இதிலிருந்தும் இன்னும் மற்றெல்லாத் துன்பங்களிலிருந்தும் உங்களைக் காப்பாற்றுபவன் அல்லாஹ்வே, பின்னர் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கின்றீர்களே என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)
(நபியே!) நீர் கூறும், உங்கள்(தலைக்கு) மேலிருந்தோ அல்லது உங்களுடைய கால்களுக்குக் கீழிருந்தோ உங்களுக்குத் துன்பம் ஏற்படும்படிச் செய்யவும் அல்லது உங்களைப் பல பிரிவுகளாக்கி உங்களில் சிலர் சிலருடைய கொடுமையை அனுபவிக்கும்படிச் செய்யவும் அவன் ஆற்றலுள்ளவனாக இருக்கின்றான். அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக(நம்) வசனங்களை எவ்வாறு விவரிக்கின்றோம் என்பதை நீர் கவனிப்பீராக. (அல்குர்ஆன் 6:65)
மனிதனை(ஏதேனும் ஒரு) துன்பம் தீண்டுமானால் அவன் (ஒருச்சாய்ந்து) படுத்துக் கொண்டோ அல்லது உட்கார்ந்து கொண்டோ, அல்லது நின்ற நிலையிலோ (அதை நீக்குமாறு) நம்மிடமே பிரார்த்திக்கிறான். அவனுடைய துன்பத்தை நீக்கி விடுவோமானால், அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்குவதற்கு அவன் நம்மை அழைக்காதது போலவே (அலட்சியமாகச்) சென்று விடுகிறான். வரம்பு மீறுபவர்களுக்கு அவர்களுடைய செயல்கள் (இவ்வாறு) அழகாக்கப்பட்டு விடுகின்றன. (அல்குர்ஆன் 10:12)
|
Read more...
|
Wednesday, 16 March 2016 07:32 |

அல்குர்ஆன் கூறும் பயபக்தியும் பொறுமையும்
"மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே இருக்கும்." (அல்குர்ஆன்: 2:45)
"நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!" (அல்குர்ஆன்: 2:155)
"அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள்." (அல்குர்ஆன்: 2:156)
''(புண்ணியம் என்பது) ..இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதியை நிறைவேற்றுவோரும்; துன்பத்திலும், கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும் உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள்தான் முத்தகீன்கள் (பயபத்தியாளர்கள்)'' (அல்குர்ஆன்: 2:177)
''இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்கப் பொறுமையுடையோனுமாகவும் இருக்கிறான்.'' (அல்குர்ஆன்: 2:225)
|
Read more...
|
Saturday, 10 March 2018 09:27 |

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:82)
நிச்சயமாக எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) - நல்ல - செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் தோட்டங்கள் இருக்கும். (அல்குர்ஆன் 18:107)
திடமாக, நாம் மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.
பின்னர் (அவன் செயல்களின் காரணமாக) அவனைத் தாழ்ந்தவர்களில், மிக்க தாழ்ந்தவனாக்கினோம்.
எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களைத் தவிர - (நல்லவர்களான) அவர்களுக்கு என்றும் முடிவில்லாத நற்கூலியுண்டு. (அல்குர்ஆன் 95:4-6)
|
Read more...
|
Thursday, 22 February 2018 07:13 |

யூஸூஃப் ஸூராவின் படிப்பினைகள்
நபி யூசுஃப் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய வரலாற்றிலிருந்து சில படிப்பினைகள்
o பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் தன்னுடைய நல்ல கனவைக் கூட சொல்லிக் காட்டக் கூடாது என்கிற படிப்பினை *அல்குர்ஆன் (12: 4, 5)*
o தனிமையிலும் அல்லாஹ்வை நினைத்து அஞ்சி நடந்துக் கொள்ளும் முன்மாதிரி. *அல்குர்ஆன் (12: 23 & 33-34)*
o எப்படிப்பட்ட சோதனையான நிலையிலும் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த ஈமான் உறுதி நமக்கோர் படிப்பினை *அல்குர்ஆன் (12: 37-40)*
o தன்னை கண்ணியமாகவும், நேர்மையாகவும் நடத்தும் தன் முதலாளியிடம் துரோகம் செய்வது அநீதியென்பதை உணர்த்தும் பாடம். *அல்குர்ஆன் (12: 23)*
o நமக்கு கவலை ஏற்படுத்தும் சில விஷயங்கள் நடக்கும்போது, நமக்கு தெரியாமலே அல்லாஹ் அதில் பல நன்மைகளை வைத்திருப்பான் என்ற படிப்பினை. *அல்குர்ஆன் (12: 15)* *மற்றும் ஸூராவின் கடைசி பகுதி ஆயத்கள்)*
|
Read more...
|
Sunday, 07 October 2018 07:32 |

திருக்குர்ஆன்
தத்துவக் கவிஞர் இ. பதுருத்தீன்
திருக்குர்ஆன்
இதன் வருகை வானத்திலிருந்து!
இதன் வசனங்கள் இறையின் ஞானத்திலிருந்து !
இது பூத்தபின்தான் மானுடம் தன்
மணத்தை நுகர்ந்தது ! மவுனம் வாய் திறந்து
தன் மனத்தைப் பகர்ந்தது.
கூவும் இந்தக் குர்ஆன் எனும் குயிலின் நிறம்
கறுப்பல்ல !
|
Read more...
|
Wednesday, 27 November 2019 09:17 |

0 ''தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். (அல் குர்ஆன் 9:32)
0 ''அவனே தன் தூதரை நேர் வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பி வைத்தான் - முஷ்ரிக்குகள் (இணை வைப்பவர்கள், இம்மார்க்கத்தை) வெறுத்த போதிலும், எல்லா மார்க்கங்களையும் இது மிகைக்குமாறு செய்யவே (அவ்வாறு தன் தூதரை அனுப்பினான்.)'' (அல் குர்ஆன் 9:33)
0 ''இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான்; மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.'' (அல் குர்ஆன் 2:114)
0 ''ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்" என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!''(அல் குர்ஆன் 9:51)
|
Read more...
|
Thursday, 26 December 2019 08:14 |

நெருப்பில் படைக்கப்பட்ட ஷைத்தான் பற்றி அல்குர்ஆன்
ஷைத்தான் இப்லீஸ், நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன். (7:12, 18:50)
இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். அவருக்கு மரியாதை செய்ய மறுத்தான். (2:34, 15:31, 17:61, 20:116, 38:74)
மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான். (7:14-17, 15:36-,39, 17:62-64)
உறுதியான நம்பிக்கை கொண்டவர்களை அவனால் வழிகெடுக்க முடியாது. (16:99, 14:22, 15:42, 17:65)
இவனது சந்ததிகளே ஷைத்தான்கள் எனப்படுவோர். இவன் ஜின் இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் மற்ற ஜின்களைப் போல் இவனும் பல்கிப் பெருகுவான். (18:50)
|
Read more...
|
Sunday, 13 September 2020 17:17 |

நான் ஸூறா முல்க் பேசுகிறேன்...
நான் ஸூறா முல்க். மக்கா தான் என் ஊர். என்னை அறியாதவர்கள் உங்களில் எவரும் இருக்கமாட்டார்கள். எல்லோரும் என்னை ஸூறா முல்க் என்பதற்கு பதிலாக ஸூறா தபாறக்கா என்று அழைப்பார்கள்.
இஷா - மஃரிப் இடையேயான நேரங்களில் தான் அதிகமாக ஓதப்படுவேன். எனக்கு முப்பது வசனங்கள் இருக்கிறது. என்னை ஓத சில நிமிடங்கள் மட்டுமே ஆகும். ஆனால் பலர் என்னை ஓத சோம்பறியாகவே உள்ளனர்.
ஆனால் எவரும் துணைக்கு இல்லாத போது நான் தான் அவர்களின் நண்பன் என்று அவர்களுக்கு தெரியாது.
யாராவது என்னை ஓதினால் அவர்கள் கப்றில் (மண்ணறையில்) வெளிச்சம் பெறுவார்கள். என்னை ஓதக்கூடியவர்கள் சுவனத்தில் நுழையும் வரை நான் அவர்களுக்காக வாதிடுவேன்.
மக்கள் இன்னும் என்னை கண்டுகொள்ளாமல் இருப்பதால் நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். உன் சிறந்த நண்பனாக என்னை உனக்கு ஆக்கி கொள்ள முடியாதா?
|
Read more...
|
Tuesday, 22 September 2020 07:56 |

இரு பிரிவினர்கள் பற்றி இறைவேதம்
A. முஹம்மது அலி, M.A., M.PHIL
1. நாம் நிச்சயமாக தமூது சமூகத்தாரிடம். அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை, “நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்” என (உபதேசிக்குமாறு) அனுப்பினோம். ஆனால் அவர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து, தம்மிடையே சச்சரவு செய்து கொள்ளலானார்கள். (அல்குர்ஆன் 27:45)
2. ஒரு கூட்டத்தாரை (அல்லாஹ்) அவன் நேர்வழியிலாக்கினான். இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டனர். எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள். (அல்குர்ஆன் 7:30)
3. நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பெறும்போது நம்பிக்கையாளர்களிடம், (அதனை) நிராகரிக்க முயலும் இறை மறுப்பாளர் (காஃபிர்)கள் “நம் இரு பிரிவினரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடைய சபை அழகாகவும் இருக்கிறது?” என்று (கர்வத்துடன:. இறுமாப்புடன்) கேட்கின்றனர். (அல்குர்ஆன் 19:78)
4. அவர்களிடமிருக்கும் வேதத்தை மெய்ப்பிக்கும், ஒரு நபி அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் வழங்கப்பட்டோரில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் வேதத்தைத் திடமாகத் தாங்கள் அறியாதவர்கள் போல் தங்கள் முதுகுக்குப் பின்னால் எறிந்து விட்டார்கள். (அல்குர்ஆன் 2:101)
5. இவர்களில் ஒரு சாரார் இறைவாக்கைக் கேட்டு, அதை விளங்கிக் கொண்ட பின்னர், தெரிந்துகொண்டே அதை மாற்றிவிட்டார்கள். (அல்குர்ஆன் 2:75)
|
Read more...
|
Monday, 19 December 2016 08:22 |

MRSA-(ஷைத்தான்) குடியிருக்கும் குகை – NOSTRIL
எஸ்.ஹலரத் அலி-திருச்சி-7
''பூமி முளைப்பிக்கின்ற (புற் பூண்டுகள்) எல்லாவற்றையும் (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும், ஜோடி ஜோடியாக படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.'' (அல்குர்ஆன் 36:36)
''இன்னும் குதிரை, கோவேரி கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் அலங்காரமாகவும்,(அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைக்கிறான்.'' (அல்குர்ஆன் 16:8)
அல்லாஹ் பூமியில் படைத்த படைப்பினங்களை சுருக்கமாக, மனிதர் கால்நடை தாவரங்கள் என்று நாம் அறிந்ததை சொல்லிவிட்டு, நாம் அறியாத ஒன்றையும் பூமியில் படைத்திருப்பதாக கூறுவது சிந்திக்கத்தக்கது. உண்மையில் இவ்வசனம் எம்மக்கள் மத்தியில் ஆறாம் நுற்றாண்டில் இறங்கியதோ அந்த சஹாபா பெருமக்கள் மாத்திரமல்ல, அதைத்தொடர்ந்து 17 ஆம் நூற்றாண்டு வரையில் வாழ்ந்த மக்களும் இப்படைப்பினத்தை அறியவில்லை.
ஆம்! நம் கண்ணுக்குத் தெரியாத கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நம்மை சுற்றி வாழ்வதுஸநம் உடலையே உலகமாக நினைத்து வாழ்வதுஸ.1675 ஆம் ஆண்டு ஆண்டன் வான் லீவனாக் என்னும் டச்சு அறிஞர், தான் சொந்தமாக உருவாக்கிய நுண்ணோக்கியின் மூலம் இந்த நுண்ணுயிர்களை கண்டு உலகிற்கு அறிவித்தார்.
|
Read more...
|
Wednesday, 03 March 2021 09:02 |

இறைச்செய்தியின் ஆரம்பம்
1. 'செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு மேடையிலிருந்து அறிவித்தார்கள்.
2. ஹாரிஸ் இப்னு ஹிஷாம் ரளியல்லாஹு அன்ஹு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்' என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா குறிப்பிட்டார்கள். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்.
|
Read more...
|
Thursday, 04 March 2021 17:23 |
முஷ்ரிக்குகளின் நரித்தனங்கள் – அன்றும் இன்றும்!
ஜாஹிலிய்யக் காலத்திலே வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் பொறுத்தவரை தவ்ஹீதுர் ருபூபிய்யாவை – அதாவது இப்பிரபஞ்சத்தையும் அதிலுள்ளவர்களையும் படைத்துப் பரிபாலிப்பவன் அல்லாஹ்வே என்ற ஏகத்துவக் கொள்கையை ஏற்றிருந்தார்கள்!
இதை அல்லாஹ்வும் அவனது திருமறையின் மூலமாக உறுதிப்படுத்துகின்றான்! (பார்க்கவும்: அல்குர்ஆன் 10:31, 23:84-89, 26:63, 43:87)
அதே நேரத்தில் அவர்கள் செய்த மாபெரும் தவறு என்னவெனில் படைத்துப் பரிபாலிப்பவன் ஒரே இறைவனாகிய அல்லாஹ் தான் என்று ஏற்றிருந்த அவர்கள், அந்த அல்லாஹ் மட்டுமே வணக்கத்திற்குரியவன் என்ற ஏகத்துவத்திலும்,
அல்லாஹ்வுக்கு மட்டுமே இருக்கக் கூடிய பண்புகளை அவனுக்கே உரித்தானது என்று ஏற்றுக் கொள்ளும் விசயத்திலும் கோட்டை விட்டு அந்த இருவகையான ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து அதன் மூலம் முஷ்ரிக்குகளாக ஆனார்கள்! அதாவது,
அல்லாஹ் தான் தம்மைப் படைத்துப் பரிபாலிப்பவன் என்ற நம்பிக்கையை மக்கத்து முஷ்ரிக்குகள் கொண்டிருந்த போதிலும் பிரார்த்தனை, நேர்ச்சை, அறுத்துப்பலியிடுதல், அழைத்து உதவி தேடுதல், பாதுகாப்பு தேடுதல் போன்ற அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களை அல்லாஹ் அல்லாத அவர்களின் அவர்களின் முன்னோர்களின் வடிவில் உள்ள சிலைகளுக்கு செய்து அதன் மூலம் தவ்ஹீதுல் உலூஹிய்யா என்ற வணக்க வழிபாடுகளில் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தவேண்டும் என்ற ஏகத்துவத்தில் அல்லாஹ்வுக்கு இணைக் கற்பித்தனர்!
|
Read more...
|
Wednesday, 23 December 2020 17:51 |

நிறைந்த அர்த்தத்துடன் விரிவாக விஷயங்களை வெளியிடும் பேச்சு வன்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்’ என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹதீஸ் குதுஸியின் ஓரிடத்தில் ‘நீர் நாவை அசைக்க வேண்டியதுதான், உடனே நாம் பேசுவோம்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான். |
Thursday, 30 December 2010 10:17 |

அறிஞர்ஆர்.பி.எம். கனி, ரஹ்மதுல்லாஹி அலைஹி
‘நிறைந்த அர்த்தத்துடன் விரிவாக விஷயங்களை வெளியிடும் பேச்சு வன்மையுடன் அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்’ என்றார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். ஹதீஸ் குதுஸியின் ஓரிடத்தில் ‘நீர் நாவை அசைக்க வேண்டியதுதான், உடனே நாம் பேசுவோம்’ என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அல்லாஹ் கூறுகிறான்.
எனவே நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாவை அசைத்தால் அவர்களைப் பேச வைப்பது ரப்புல் ஆலமீன் அல்லாஹுதஆலா என்பதை உணர முடியும். அப்படி அவர்கள் நாவை அசைத்து நிகழ்த்திய சொற்பொழிவுகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபிப்பட்டம் கிடைத்ததிலிருந்து 23 ஆண்டுகளில் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இத்தகைய சொற்பொழிவுகள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கிதாபுகளின் வாயிலாகவே நமக்குக் கிடைக்கிறது. அவை சரித்திர ஆசிரியர்களாலும், ஹதீஸ் தொகுப்பாளர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு சில பழக்கங்களை கடைப்பிடித்து வந்தார்கள்.
தலையில் தலைப்பாகை கட்டிக் கொள்வார்கள்.
கையில் இரும்பு அல்லது மரத்தாலான ஒரு தடியை, போர்க்களமாக இருந்தால் ஒரு வாளை (அல்லது வில்லை அல்லது அம்பை)ப் பிடித்துக் கொள்வார்கள்.
|
Read more...
|
|
|