Thursday, 04 August 2016 02:41 |

'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்!
மெளலானா, சத்ருத்தீன் இஸ்லாஹி
தமிழாக்கம்: மெளலவி, அப்துர் ரஹ்மான் உமரி
முஸ்லிமாக இருப்பதற்கு 'இஸ்லாம் என்றால் என்ன?' என்பதைத் தெரிந்து கொள்வது எவ்வளவு அவசியமோ அதே அளவு 'எது இஸ்லாம் இல்லை?' என்பதைத் தெரிந்து கொள்வதும் அவசியமாகும். இல்லாவிட்டால் இஸ்லாமை அதன் தனிப்பட்ட தூய வடிவில் பாதுகாப்பதோ, பின்பற்றுவதோ இயலாது போய்விடும்.
இன்று நாம் இஸ்லாமைப் பற்றி உண்மையான நல்ல விஷயங்கள் சிலவற்றைத் தெரிந்து கொள்வோம், நாளை இஸ்லாம் அல்லாத வேறு சில விஷயங்களைத் தெரிந்து கொள்வோம். இறுதியில் எது உண்மையான சொத்து என்பதை உணர முடியாமல், இயற்கையான உருவில் - அம்மண வடிவில் - நுழைவதில்லை. இஸ்லாமியப் பசுத்தோலைப் பொற்த்திக்கொண்டும், 'சலுகை'(ருஃக்ஸத்)களின் பெயராலும் தான் நுழைகின்றது. முஸ்லிம்களோ மிகமிக எளிதாக அதற்குப் பலியாகிவிடுகின்றனர். இல்லா மாஷா அல்லாஹ்!
முந்தைய சமூகத்தினர் தங்களுடைய இறைத்தூதர்களிடமிருந்து தூய, கலப்பற்ற தீனைப் பெற்ற பின்னும் - ஒன்றிரண்டு தலைமுறைக்குள்ளாக வழிகெட்டுப் போனதற்கு இதுதான் காரணமாக இருந்துள்ளது.
|
Read more...
|
Monday, 10 February 2020 17:26 |

சுதந்திரம் இலவசமில்லை!
Abdurrahman Umari
[ நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.
சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே!
அன்னியரைக் குற்றம் சொல்லி காலம் தள்ளும் நாள் கடந்தாயிற்று. நாம் பெற்ற சுதந்திரத்தையும், வகுத்துக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தையும் பேணிப் போற்றிக் காக்க வேண்டுமானால், நம் சமூகத்தின் கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை சடுதியில் களையவேண்டும்.
|
Read more...
|
Friday, 29 May 2015 06:05 |

விஞ்ஞானத்தின் வாலில்
ஜியாவுத்தீன் சர்தார்
Don't Miss it, MUST READ
[ முஸ்லிம் விஞ்ஞானிகளின் ஒரு தலைமுறையே அறிவியல் சொல்வது அனைத்தும் உண்மையோ உண்மை என்று நம்புகிறது. அதே நேரத்தில் யாராவது அறிவியலை விமர்சித்தாலோ, சீர்படுத்த நினைத்தாலோ அவர் மீது கேள்விக் கணைகளை தொடுக்கின்றது.
அறிவியல் அனைத்தும் நன்மைக்கே என்று நம்புவதானது, அறிவியல் மனித குலத்துக்கே சேவை செய்கின்றது. எனவே முஸ்லிம் சமூகத்தின் தேவைகளையும் அது பூர்த்தி செய்து தனதாக்கிக் கொள்ளும் என்கிற தீய முடிவின் பால் இட்டுச் செல்லும்.
இறைவனின் வஹியை நீரூபிக்க அறிவியலின் அவசியம் எல்லாம் தேவையில்லை. ஒரு வேலை ஏதேனும் ஒரு அறிவியல் உண்மை குர்ஆனோடு ஒத்துப் போகவில்லை என்றால், அல்லது குர்ஆன் குறிப்பிடுகின்ற ஒன்றை நவீன அறிவியல் தவறு என்று நிரூபித்து விட்டது என்றால் குர்ஆன் 'பாதில்' (நஊதுபில்லாஹ்) ஆகிவிடுமோ?
இப்போது குர்ஆனில் கூறப்பட்டுள்ள, தற்கால அறிவியலால் நிரூபிக்கப்பட்ட ஒரு கருத்து, நாளை தவறு என்று ஒதுக்கப்பட்டு அவ்விடத்தை வேறொரு கருத்து பிடித்துக் கொண்டால் - என்ன ஆகும்?
உண்மைக்கான ஒரு தேடலே அறிவியல். அதனுடைய கண்டுபிடிப்புகளும், உண்மைகளும் குர்ஆனுடைய வசனங்களை போன்று சரியானவையும் அல்ல. ஆகவும் முடியாது.
“இல்ம்” குர்ஆனோடு முடிந்துவிடுவதில்லை, குர்ஆனில் இருந்து தொடங்குகின்றது.]
|
Read more...
|
Friday, 05 June 2009 07:51 |

பறப்பதற்கே சிறகுகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
M U S T R E A D
[ ஆண்பெண் உறவு மனித வாழ்வில் எவ்வாறு அமைந்து வந்துள்ளது என்பதை நாம் வரலாற்றில் ஆராய்ந்து பார்த்தோமானால் ஒன்று அது முற்றலட்சியப் (Negligence) படுத்தப்பட்டு வந்துள்ளது. இல்லையென்றால் அதிதீவிர பக்கச் சார்பு (Exaggeration) உடையதாக இருந்துள்ளது,
ஒரு பக்கம் எந்த பெண் தாயாக இருந்து மனிதனைப் பெற்றெடுத்து ஆளாக்குகிறாளோ மனைவியாக இருந்து களிப்பையும் மகிழ்வையும் அவனுக்கு அளிக்கிறாளோ, அதே பெண், பணிப்பெண்ணாக அல்ல, அடிமையாக ஆக்கப்படுகிறாள்.
விற்கவும் வாங்கவும் செய்யப்படுகிறாள். சொத்துரிமையும் வாரிசுரிமையும் அவளுக்கு அறவே தரப்படுவதில்லை, குற்றத்தின் வடிவாக, அவமானத்தின் உருவமாக அவள் கருதப்படுகிறாள். அவளுடைய தனித்துவமும் ஆளுமையும் வளர்ந்தோங்க எந்த விதமான விதமான வாய்ப்பும் அளிக்கப்படுவதில்லை. ]
அறிவின் சிகரங்களையெல்லாம் எட்டிப் பிடித்து விட்டதாக என்னதான் மனிதன் மார்தட்டிக் கொண்டாலும், தன்னைப் பற்றிய பௌதிக உண்மைகளைக் கூட அவன் இன்னமும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் உண்மையாகும். மனித மூளை எவ்வாறு இயங்குகின்றது? என்பதைக்கூட அவனால் விளங்கிக் கொள்ள இயலவில்லை.
|
Read more...
|
Thursday, 14 May 2015 06:31 |

MUST READ
இறைநம்பிக்கையாளர்களின் அடையாளம்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ o நம்முடைய இளைய தலைமுறையினரில் பெரும்பாலோர் தொழுவதே கிடையாது. அவர்களுக்கும் ஷைத்தானுக்கும் யாதொரு பகையும் கிடையாது; பகையே இல்லாததால் படைக் கருவிகளுக்கும் வேலையே இல்லை! பகைவனோடு தோழமையை ஏற்படுத்திக் கொண்டு, இப்போது அவர்கள் வெகுநிம்மதியாக உள்ளார்கள்.
o இன்னும் பலபேர் தொழுகையை என்னவோமுறையாகக் கடைபிடித்து வருவார்கள். அதே சமயம், இஸ்லாமுக்கு விரோதமான எல்லாவகையான அனாச்சாரங்களிலும் மாசுகளிலும் மூழ்கிக் கிடப்பார்கள். ஒரே நேரத்தில் அல்லாஹ்வோடும் ஷைத்தானோடும் உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்று இத்தகையவர்கள் நினைக்கிறார்கள் போலும்!!
o இன்னும் சிலருக்கு தொழவேண்டும் என்கிற ஆர்வம் எல்லாம் கிடையாது. ஆனாலும் மக்களுக்காக ஐவேளை தொழுது கொண்டிருப்பார்கள். ஷைத்தானோடு போராடவேண்டும் என்பதற்காக அல்ல, மக்கள் தம்மைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே தோழுது வரும் மக்கள் இவர்கள்!
o அடுத்ததாக, பொதுமக்கள்! பாவம், அவர்கள் தொழுவதே மிகவும் குறைவு. அதுவும் தங்களுடைய பாவக்கறையைப் போக்கிக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலும் தங்களுடைய முறையற்ற அபிலாஷைகள் நிறைவேற வேண்டுமே என்ற எண்ணத்திலும் தொழும் மக்களே அதிகம்!!
o பொதுவாக முஸ்லிம்களை எடைபோட்டுப் பார்த்தால் இப்படித்தான் நாம் அவர்களை வகுக்க வேண்டியிருக்கின்றது. தொழுகை என்றால் என்ன? அதை எவ்வாறு முறையாகத் தொழுக வேண்டும்? என்பதை நன்கு உணர்ந்து தொழக்கூடிய இறைநம்பிக்கையாளர்களும் காணப்படவே செய்கிறார்கள். ஆனாலும் பெரும்பாலான மக்கள் ஏற்கனவே விளக்கிக் கூறிய கூட்டத்தைச் சார்ந்தவர்களாகவே காணப்படுகிறார்கள்.]
|
Read more...
|
Friday, 08 May 2015 06:02 |

M U S T R E A D
மாற்றப்படவேண்டிய அழைப்பியல்முறை
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்துலில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப் பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டு விட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?
இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படி யென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.
இன்று இஸ்லாம் தான் மிகவும் வேகமாக பரவுகிறது. The Fastest Growing Religion in World என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். அன்புச் சகோதரர்களே, நாம் உண்மையான இஸ்லாமை சரியான வடிவில் முறையாக மக்களிடம் சொன்னால் இன்னும் இப்படிப்பட்ட வார்த்தைகளையும், வாக்கியங்களையும் கேட்டுக் கொண்டேயிருக்க மாட்டோம். ஏன்? மக்கள் மாக்களிலிருந்து மக்களாகியிருப்பார்கள். தஅவாவைக் காட்டிலும் இஸ்லாஹ்வே எஞ்சியிருக்கும்.
உலகில் காணப்படும் சமயங்களோடு பத்தோடு பதினொன்றாக இருக்கட்டும் என்றெண்ணி அல்லாஹ் இஸ்லாமை இறக்கவில்லை. அனைத்து மார்க்கங்களைக் காட்டிலும் மேலோங்க வேண்டும் என்பதற்காக இறக்கி வைத்தான். ஆனால், இன்று உலகில் உள்ள மதங்களில் இஸ்லாமும் ஒன்று என்கிற நிலைமை தான் உள்ளது.
|
Read more...
|
Friday, 05 June 2015 06:22 |

ஸஹாபாக்களும் சிறப்புகளும்
M U S T R E A D
நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
ஆற்றலும் வல்லமையும் மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதருக்குத் தோள் கொடுக்க இந்த உம்மத்தில் மிகச் சிறந்த சான்றோர்களைத் தேர்ந்தெடுத்தான்.
இஸ்லாமின் அழைப்புப் பணியை அவர்கள் முன்னெடுத்தச் சென்றார்கள். தப்லீக் எனும் அடைக்கலப் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள்.
அருகிலுள்ளவர்கள், தொலைவில் உள்ளவர்கள், தீனைப் பற்றி அறிந்தோர், அறியாதோர் அனைவரிடமும் தப்லீக் எனும் அடைக்கலத்தை கொண்டு போய்ச் சேர்க்கும் பணிக்காக உலகத்தையும் உலக இன்பத்தையும் துறந்தார்கள்.
இன்னல்களும் இடுக்கன்களும் சூழ்ந்த பாதையைத் தமதாக்கிக் கொண்டார்கள். துன்பங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டார்கள்.
பாருலகின் மூலை முடுக்கெல்லாம் இந்நன்னெறியைக் கொண்டுபோய் சேர்க்கும் வரை ஓயவில்லை; ஒதுங்கி நிற்கவில்லை.
காலம் நெடுக, வரலாறு முழுக்க அவர்தம் பணிச் சிறப்பை நம்மால் உணர முடியும். இஸ்லாமின் தரப்பிலிருந்தும் முஸ்லிம்களின் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு உரிய நிறைவான கூலியை அல்லாஹ் நல்கட்டும்.
|
Read more...
|
Monday, 06 July 2015 21:49 |

முறிந்த சிலுவை
ரியாஸ் பீட்டர்
தவ்ஹீது கலிமாவை முன்மொழிந்து இஸ்லாமிய சகோதரத்துவத்திற்குள் என்னை ஐக்கியப்படுத்திக் கொண்ட போது பாசத்தோடும் பிரியத்தோடும் முஸ்லிம் சகோதரர்கள் என்னை அரவணைத்துக் கொண்டதை ஒரு போதும் மறக்க முடியாது.
சத்தியத்தைத் தேடி அலைந்த என் கதை “முறிந்த சிலுவை”யை முடிக்குந் தறுவாயில் இன்று நான் அவற்றை நினைத்துக் கொள்கிறேன். அல்லாஹ்வின் கிருபையும் முஸ்லிம் சகோதரர்களின் அன்பும் தொடர் வற்புறுத்தலும் மட்டும் இல்லாமலிருந்தால் என்னால் இக்காரியத்தை செய்திருக்கவே இயலாது!.
இஸ்லாமிய நந்நெறியைத் தழுவவைத்து என் மீது அல்லாஹ் புரிந்துள்ள பேரருளை நினைத்துப் பார்த்து நன்றி செலுத்தவே இந்த என் கதையை எழுதிக் கொண்டுள்ளேன்.
முறையற்ற என்னுடைய தத்துப்பித்தென்ற சில சொற்கள் யாருடைய உள்ளத்திலாவது சத்திய மெழுகுவர்த்தியை பற்ற வைக்க உதவி விடாதா என்ற எதிர்பார்ப்பும் நப்பாசையுமே என்னை எழுதத் தூண்டியன.
இஸ்லாமை ஆராய்பவர்கள், புதிதாய் இஸ்லாமைத் தழுவியவர்கள், பிறவி முஸ்லிம்கள் அனைவருக்கும் நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். தேடல் மற்றும் ஆராய்ச்சியின் பெயர் தான் இஸ்லாம்!. இஸ்லாமைப் புரிந்து தூய்மையான ஒரு முஸ்லிமாக மாற நீங்கள் ஆசைப்பட்டால் நீங்கள் இஸ்லாமைப் பற்றி ஆராய்ச்சி செய்தே தீர வேண்டும்.
|
Read more...
|
Tuesday, 30 June 2015 04:44 |


"ஹிஃப்ழுல் ஈமான்'
தர்கா வழிபாடா? வழிகேடா?
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
"தர்' என்றால் இறந்துபோன உடல் எனப்பொருள். "காஹ்' என்றால் "இடம்' எனப்பொருள். ஈது தொழுகை தொழும் திடலை "ஈத்காஹ்' என்று அழைக்கிறோம் அல்லவா? இவ்வுலகில் வாழ்ந்து மறைந்துபோன அவ்லியாக்கள், இறை நேசர்கள் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் இடம் "தர்கா' என்று அழைக்கப்படுகின்றது.
இறந்துபோன அவ்லியாக்கள் உயிரோடும் உணர்வோடும் இருக்கிறார்கள். நம்முடைய அழைப்புக்கு செவிமெடுக்கிறார்கள். நமக்காக அவர்கள் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள் என்றொரு பரவலான நம்பிக்கை இந்திய நாட்டு மக்களிடையே காணப்படுகின்றது.
இஸ்லாம் இந்நம்பிக்கையை ஆதரிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இத்தகைய நம்பிக்கைகள் தவறு என்பதை வலியுறுத்தவே இஸ்லாம் இம்மண்ணுலகுக்கு வந்தது.
"தர்கா'வை வலம் வருவது, முத்தமிடுவது போன்ற செயல்கள் செய்யப் படுகின்றன. இவை சரியா, ஷரீஅத் இதைச் சரி காண்கிறதா? என்பது குறித்து மெளலானா அஷ்ரஃப் அலி தானவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆராய்ந்துள்ளார்கள்.
ஹகீமுல் உம்மத் மெளலானா அஷ்ரஃப் அலி தானவி (ரஹ்மத்துல்லாஹி அலைஹி) இந்தியாவில் தோன்றிய தலைசிறந்த உலமாக்களில் ஒருவராவார். இஸ்லாமியக் கல்வியிலும் கேள்வியிலும் சிறந்த குடும்பம் ஒன்றில் ஹிஜ்ரி 1280 ஆம் ஆண்டு மெளலானா பிறந்தார்கள். உ.பி. மாநிலம் தேவ்பந்த் நகரிலுள்ள தாருல் உலூம் படசாலையில் பயின்று ஹி.1301 ஆமாண்டு மெளலானா ரஷீத் அஹ்மத் கங்கோஹி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) அவர்களுடைய கரங்களினால் பட்டம் பெற்றார்கள்.
தொடர்ந்து பல்வேறு பாடசாலைகளிலும் இஸ்லாமிய மையங்களிலும் பணியாற்றினார்கள். அக்கால கட்டத்தில் முஸ்லிம் உம்மாவின் நிலை மிகவும் பரிதாபத்திற்கு உரியதாக இருந்தது. இஸ்லாம் என்றால் என்ன? எனும் அடிப்படை அறிவும் அற்ற மக்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.
முஸ்லிம்களிடையே இரண்டு மிகப்பெரும் நோய்கள் பரவிக் கொண்டிருந்தன. ஒருபுறம் ஆங்கிலேய ஆட்சிக்கு அவர்கள் அடிமைப்பட்டுக் கிடந்தார்கள். மேலைப் பண்பாட்டைப் பின்பற்றினால்தான் வெற்றிபெற முடியும் என்ற எண்ணம் அவர்களுடைய சிந்தனையில் வெகுவாக ஊறிப்போயிருந்தது.
|
Read more...
|
Wednesday, 12 December 2018 08:05 |

ஈமான் என்றால் என்ன? நம்பிக்கையும் நினைப்பும்!
மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி
ஈமான் என்றால் என்ன? என்பதைப் பற்றி நமக்கு ஓரளவு தெரியும்.
இறைவனை நம்பியேற்றுக் கொண்டவர்களும் அவன் காட்டிய வழியில் வாழ்வை அமைத்துக் கொண்டவர்களும் முஃமின்கள் என்பதையும் நாம் அறிவோம்
நாமும் முஃமின்கள், நாமும் நம்பிக்கையாளர்கள் என்னும் எண்ணம் நம்முடைய நெஞ்சத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது.
நம்மிடம் ஈமான் இருக்கின்றது என நாமெல்லாம் நினைத்துக் கொண்டுள்ளோம்
இந்த ‘நினைப்பு’ தான் இன்று பெரும் ஆபத்தாக உரு வெடுத்துள்ளது.
நம்பிக்கை என்றால் என்ன?
நம்பிக்கை இருப்பதாக நினைத்துக்கொள்வது என்றால் என்ன? என்பதை கொஞ்சமும் உணராத மக்களாகவே நாமிருக்கிறோம்
‘நினைப்பு’ மயக்கத்தைத் தருகின்றது. ‘மயக்கம்’ மனநிம்மதியைத் தருகின்றது. ‘மனநிம்மதி’ தொலைந்துபோன பாதையைப் பற்றி சிந்திக்கவிடாமல் நம்மைத் தடுத்து விடுகின்றது.
|
Read more...
|
Friday, 24 December 2010 09:31 |
மவ்லவி ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி
''தஜ்கியா'' விற்கான முதல் நிலை அமைப்பு ''இஹ்திஸாப்'' ஆகும்.
இஹ்திஸாப் என்றால் சுய பரிசோதனை என்று பொருள்.
அதாவது தன்னைத் தானே. தன்னுடைய அமல்களைத் தானே - சோதித்துக் கொள்வது ஆகும்!.
வான்மறையில் வல்ல இறைவன் கூறுகிறான்˜
'இறைநம்பிக்கை! கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள். மேலும் நாளைய தினத்திற்காக எதனைத் - தயார் செய்து வைத்திருக்கின்றான் என்று ஒவ்வொரு மனிதனும் (எண்ணிப்) பார்க்கட்டும்!' (59˜18)
'நாளைக்காக எவ்வெவ்வற்றை சேகரித்துக் கொண்டுள்ளீர்கள் என்று கணக்கெடுக்கும்படி அல்லாஹ் இவ்வசனத்தில் அறிவுறுத்துகிறான். என்று கூறுவார்கள்.
அதாவது - 'நீங்கள் விசாரிக்கப்படும் முன்னால் உங்களை நீங்களே விசாரித்துக் கொள்ளுங்கள்!'
இஹ்திஸாப் - ஒரு முஃமினுடைய தவிர்க்க இயலாத பண்பாகும்.
|
Read more...
|
Tuesday, 05 January 2010 08:15 |

தஸ்கியா (உளத்தூய்மை) என்றால் என்ன?
ஸைய்யத் அப்துர் ரஹ்மான் உமரி
[ தீமையைவிட்டுத் தூரவிலகி இருப்பவரே - தூய்மை'யைப்பெற்றுக் கொள்ள முடியும்! ஆதலால், 'தஸ்கியா' அடைவதற்கான மூலகாரணமாக இறையச்சமே அதாவது 'தக்வா'வே உள்ளது. 'தக்வா'வைப் பெற்றவர்தாம் 'தஸ்கியா' வைப்பெற்றுக்கொள்ள முடியும்.
தஸ்கியா'வின் செயல்வடிவ வெளிப்பாடாக உள்ளது தொழுகை ஆகும். ஈமான் பில்லாஹ் என்பதன் முதல் வெளிப்பாடே தொழுகைதான்! ஷரீ அத்தின் துவக்கப் புள்ளியாகவும், ஷரீஅத்தைச் சூழ்ந்து வரையறையாகவும் தொழுகையாகவும் தொழுகையே உள்ளது.]
'தஸ்கியத்துந் நப்ஸ்' என்றால் 'உள்ளத்தூய்மை' எனப்பொருள்! உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்ற பயிற்சிகளை 'தஸ்கியா' எனுஞ்சொல்லால் குறிப்பிடுவார்கள்.இஸ்லாமிய சன்மார்க்கப் பணியில் ஈடுபடுபவர்களும் தூய மூமின்களாக வாழும்வேட்கை கொண்டோரும் தத்தமது உள்ளத்தை அவ்வப்போது தூய்மைப் படுத்திக் கொண்டே இருக்கவேண்டும்.
'தஸ்கியா' என்றால் தூய்மைப்படுத்துவது, வளர்ந்தோங்குவது எனப்பொருள்! இவ்விரண்டு பொருள்களுக்குமிடையே அபார ஒற்றுமை உள்ளது. எந்தப்பொருள் சீர்குலைவிலிருந்தும் முறைகேட்டிலிருந்தும் 'தூய்மை'யாய் உள்ளதோ அதுவே வளர்ச்சி அடைகின்றது. 'களை'களை நீக்கி தூய்மைப்படுத்தினால்தான் பயிர் செழிப்படைகின்றது. முறைகெடான வழிகளில் செல்வதை தடுத்து நிறுத்தினால்தான் முறையான வழியில் முன்னேறுவது சாத்தியமாகும்.
|
Read more...
|
Thursday, 22 March 2018 07:53 |

அஹ்ஸாப் (அகழ்ப்) போரின் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சிகள்
சையத் அப்துர் ரஹ்மான் உமரி
முக்கியமான திருப்புமுனை என்று இஸ்லாமிய வரலாற்றில் ஏதேனும் ஒன்றைக் குறிப்பிட நினைத்தால் அஹ்ஸாப் போரைக் குறிப்பிடலாம். இறை நம்பிக்கையாளர்களின் ஈமானிற்கு எதிரிகள் கூட உரைகல்லாக மாறிப்போன அற்புதத்தை அகழ் போரில் நாம் காணலாம்.
பகைவர்களைக் கண்டு, அவர்களுடைய பிரம்மாண்டமான படைகளைக் கண்டு பயப்படாமல், பீதி அடையாமல் பொங்கிப் பொங்கி ஈமான் பிரவாகம் எடுப்பது. உண்மையான இறை நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் தான் என்கிற பேருண்மையும் அங்கே புலப்பட்டது!
‘அகழ்’* என்பது அராபியர்களுக்கு முன்பின் அறிமுகமாகாத ஒன்று! அகழைத் தோண்டும் தற்காப்புக் கலையால் குறைந்த எண்ணிக்கையிலான படையைக் கொண்டே மிகப் பெரிய எதிரிப்படையைச் சமாளிக்கும் வாய்ப்பு இருந்தது. உயிரிழப்பும் மிகவும் குறைவாகவே ஏற்படும்.
|
Read more...
|
Monday, 08 July 2019 07:08 |

மவ்லவி அப்துர் ரஹ்மான் உமரி
குர்ஆனையும் அறிவியலையும் ஒப்பிட்டுப் பழம்பெருமை பேசி வந்த பேச்சுக்கள் இனி தேவையில்லை!
மதிப்பிற்குரிய Mansoor Ali அவர்கள் ஒரு பின்னூட்டத்தில்... பொதுவாக மனிதன் - தன்னிடம் இருக்கின்ற ஐந்து புலன்களின் வழியாகத் தான் அறிவைப் பெறுகின்றான். வளர்த்துக் கொள்கின்றான். புலன்கள் வழியே நாம் பெறுகின்ற அந்த 'அறிவியல் அறிவு' எந்த அளவுக்கு உண்மையானவை? நம்பத் தகுந்தவை?
உண்மையில் நாம் நமது கண்களால் ஒன்றைப் பார்த்து அறிந்து கொள்வது எப்படி தெரியுமா? நம் கண்களின் எதிரே உள்ள ஒரு பொருளின் பிம்பம் நமது விழித் திரையில் (Retina) தலை கீழாக விழுகிறது. அந்த பிம்பம் குறித்து மூளைக்குத் தகவல் அனுப்பப் படுகிறது. மூளை ஒன்றைப் புரிந்து கொள்கிறது. மூளை புரிந்து கொண்டது சரியாகவும் இருக்கலாம், தவறாகவும் இருக்கலாம். கண்களால் நாம் பெறும் அறிவின் நம்பகத் தன்மை இவ்வளவு தான்! மற்ற புலன்கள் வழி நாம் பெறுகின்ற தகவல்களின் நிலையும் அதே தான்!
அதனால் தான் சொன்னார்களோ - 'கண்ணால் பார்ப்பதுவும் பொய் - காதால் கேட்பதுவும் பொய்' - என்று! விஞ்ஞானிகள் ஆய்வு செய்கிறார்களே ஆய்வுக் கூடங்களில். அந்த ஆய்வின் முடிவுகள் எல்லாம் சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டவை தானா? அவற்றில் சந்தேகங்களுக்கு இடமே இல்லை என்றால் - அதுவும் கேள்விக்குறி தான்! பின் ஏன் நேற்று சொன்ன ஒரு அறிவியல் கறுத்தை இன்று மாற்றிக் கொள்கிறார்கள்?
ஒளி நேர்கோட்டில் பரவுகிறது என்ற கருத்து இன்று எங்கே போயிற்று?
அணுவைப் பிளக்க முடியாது என்று அன்று டால்ட்டன் சொன்ன கோட்பாடு இன்று என்ன ஆனது?
|
Read more...
|
Wednesday, 08 January 2020 08:28 |

அராஜகத்தின் இலக்கணம்
Abdurrahman Umari
[ நாட்டார்கள், நாட்டை விட கொள்கைகளும் கோட்பாடுமே முக்கியம் என்று நம்புவார்களேயானால், நாடு நாசமாவது நிச்சயம். அவ்வாறு தேசம் துண்டாகிவிடாமல் பாரதத்தை நம் கடைசி மூச்சு வரைப் பேணிப் போற்றிக் காப்பது குடிமக்களின் தலையாய கடமை.
சுதந்திரம் ஒரு மிகச் சந்தோஷமான சங்கதி. ஆனால் சுதந்திரம் இலவசமில்லை! நம் தோள்களில் பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது. நாட்டில் நடக்கும் நல்லதும் கெட்டதும் இனிமேல் விடிவது நம் தலையிலேயே!
அன்னியரைக் குற்றம் சொல்லி காலம் தள்ளும் நாள் கடந்தாயிற்று. நாம் பெற்ற சுதந்திரத்தையும், வகுத்துக்கொண்ட அரசியல் அமைப்பு சட்டத்தையும் பேணிப் போற்றிக் காக்க வேண்டுமானால், நம் சமூகத்தின் கொடூரமான ஏற்றத்தாழ்வுகளை சடுதியில் களையவேண்டும்.
|
Read more...
|
Thursday, 15 February 2018 07:24 |

இளமையை இறையடிமைத்தனத்தில் கழி!
அப்துர் ரஹ்மான் உமரி
‘பருவகால இச்சைகளுக்குப் பலியாகாத இளைஞனைக் கண்டு உன்னிறைவன் வியப்படைகிறான்.’ (அபூ யஅலா, அஹ்மத்/ சஹீஹ் என்கிறார் அல்பானி)
இந்நபிமொழியில் உள்ள ‘ஸப்வத்துன்’ எனும் சொல், பருவ கால இச்சைகள், வாலிபத் தேட்டங்கள், பொழுதுபோக்கு கேளிக்கைகளில் ஆர்வம் போன்றவற்றை இது குறிக்கும்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அற்புதமான பண்பு இது!
சிறு வயதில் ஞானம் பெற்றவனால்தான் இது சாத்தியம்! அப்புறம் ஏன் இறைவன் வியப்படைய மாட்டான்?
ஒருவன் சிறுவயதிலிருந்தே இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுள்ளான். பெரும்பாவங்களில் விழாமல் சிறுசிறு குற்றங்களை வழக்கப்படுத்தாமல் பாதுகாக்கப்படுகிறான். அவற்றைப் பற்றிய கேள்விகள் மறுமையில் அவனுக்கு இல்லவே இல்லை! ஸுப்ஹானல்லாஹ்! எவ்வளவு உன்னத பேறு இது!
|
Read more...
|
Thursday, 25 January 2018 07:29 |

அகத்தின் அழகே அழகு . ஸைய்யித் அப்துர் ரஹ்மான் உமரி
(1) பொதுவாக நாம் மற்றவர்களிடம் துஆ செய்யுமாறு கோரும்போதும் மற்றவர்களுக்காக துஆ செய்யும்போதும் உடல்நலத்திற்கு முதலிடம் அளிக்கின்றோம்.
(2) இஸ்லாமியக் கண்ணோட்டத்தின்படி உடல்நலம், உண்மையில் அக நலத்தை சார்ந்துள்ளது, அகநலத்தைப் பின்தொடர்ந்தே வருகின்றது.
(3) அக நலத்தையே இஸ்லாம் பெரிதும் வலியுறுத்துகின்றது.
(4) அஷ்ஷிஃபாஉல் காமில் – Real Shifa – என்பது உண்மையில் அக நலமே ஆகும்.
(5) தூய அகத்தோடு மனிதன் பிறக்கின்றான், அதே நிலையில் தூய அகத்தோடு உலகைப் பிரிந்து தன்னிறைவனை சந்திப்பவன் வெற்றி பெறுகின்றான்.
(6) வாழ்வு முழுக்க அகம் மாசடையாமல் பார்த்துக்கொள்வதே உண்மையில் இஸ்லாமியத் தன்மையாகும்.
(7) சிந்தனைக் கோளாறுகள், மனஅழுக்குகள் ஆகியவையே அகத்தைப் பாழ்படுத்துகின்றன.
(8) இஸ்லாமிய மருத்துவத்தில் அக நலத்திற்கே முதலிடம் முக்கிய இடம் அளிக்கப்படுகின்றது.
(9) அக நலத்தில் தமானிய்யத் (இறைதீர்மானங்களில் திருப்தி) முதல் நிலை வகிக்கின்றது. ஸலாமத் (சலனமற்ற தன்மை) இதன் உச்ச நிலை ஆகும்.
|
Read more...
|
Tuesday, 21 July 2020 07:42 |

மற்றவர்களின் மனவருத்தத்தை ஈட்டாதீர்கள் Sayed Abdur Rahman Umari
ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றவர்களுக்கு மன ஆறுதலை அளிக்கும் பரினை விநியோகிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பார்.
‘மென்மையால் நிரம்பியவர், கருணையால் நிறைந்தவர்’ என இறுதித்தூதர் எம்பெருமானாரைப் பற்றி எடுத்துச்சொல்கின்றது, வான்மறை குர்ஆன். .. சில ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் நபிமொழித் தொகுப்பு ஒன்றை சரிபார்க்கும் பணி வந்தது. நானும் ஹாஃபிழ் முஹ்யுத்தீன் காஸிமி அவர்களும் சில அத்தியாயங்களை சரிபார்த்துக் கொடுத்தோம். ஹதீஸ் மொழிபெயர்ப்பாளர் எனும் அடைமொழியோடு கூடிய ஆலிம் பெருந்தகை ஒருவர் செய்திருந்த மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பதைக் காட்டிலும் கடினமானது மற்றவர்கள் பெயர்த்ததை சரிபார்ப்பது . இறைத்தூதரின் பல சொற்பிரயோகங்களுக்கு சரியான பொருளையும் அதற்கு நிகரான தமிழ்ச்சொல்லையும் தேடி வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருந்தது.
பல நபிமொழிகள் நம்பவேமுடியாத திகைப்பை ஏற்படுத்தின. நாங்கள் பணிசெய்யும் ‘அழகைப்’ பார்த்து பணியைக் கொடுத்தவர் திரும்பப் பெற்றுக்கொண்டார். . மகிழ்ச்சியிலும் வியப்பிலும் ஆழ்த்திய நபிமொழிகளில் ஒன்று இது!.
الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ
ஆனால் இதன் சரியான மொழிபெயர்ப்பை யாரும் தருவதில்லை.
‘தனது கரத்தாலும் நாவாலும் மற்றவர்களுக்கு எத்தொல்லையும் தராமல் இருப்பவரே உண்மை முஸ்லிம்’ என்றே மொழிபெயர்க்கிறார்கள்.
|
Read more...
|
Monday, 17 August 2020 17:45 |

ஷிர்க் (ஓரிறைவனைவிட்டு வேற்றுத் தெய்வங்களுக்கு அடிபணிதல்) (1)
Syed Abdur Rahman Umari
o இஸ்லாமின் அடிப்படைகள்
o ஓரிறைக் கொள்கையே மனிதனின் தேவை
o ஷிர்க், குஃப்ர் என்பதன் விளக்கம்
o ஷிர்க்கை பற்றிய தவறான விளக்கம்
o ஷிர்க்கிற்கான காரணம்
o ஷிர்க் மனிதர்களிடத்தில் எவ்வாறு தோன்றுகிறது?
o ஷிர்க்கின் துவக்கம்
o சிலைகள் பிறந்த கதை!
o இஸ்லாமும் ஜாஹிலிய்யத்தும்
o சிலைகளின் நவீன வடிவங்கள்
o முஸ்லிம்களுடைய தவறான புரிதல்
o "ஷிர்க்" என்றால் என்ன?
o முஸ்லிம்களை வழிகெடுப்பது எப்படி?
o நவீன சிலைகள்
o வழிபாடு என்றால் என்ன?
o ஷிர்க்கைப் பற்றிய தவறான கண்ணோட்டம்
o ஷிர்க் என்பது அல்லாஹ்வுக்கு எதிரான சதி
o ஷிர்க் என்பதே அறியாமை
o ஷிர்க் மன்னிக்க முடியாத பெருங்குற்றம்
o இஸ்லாமோடு தொடர்பில்லாத முஸ்லிம்களின் செயல்கள்
o ஷிர்க் ஃபிஸ் ஸாத்
o ஷிர்க் ஃபில் சிஃபாத்
o ஷிர்க் ஃபில் லவாஜிம்
|
Read more...
|
Saturday, 25 July 2020 07:36 |

அவமதிப்பும் உயிர்ப்பறிப்பும் (1)
மௌலானா அபுல் கலாம் ஆஸாத்
தமிழாக்கம் தி. சை. அப்துர் ரஹ்மான் உமரி
இன்று நம்முன் விடைகளை எதிர்பார்த்து சில கேள்விகள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன.
1) இறுதித்தூதர் இறைவனின் தூதரை யாரேனும் ஒருவன் அவமதித்து விட்டால், கேவலமாக திட்டித் தீர்த்தால் அவனுடைய உயிரைப் பறித்து விட வேண்டும் என்பதுதான் இஸ்லாமியச் சட்டமா? அவனுடைய தலைக்கு விலையை நிர்ணயிப்பது முஸ்லிம்கள் மீதான மார்க்கக் கடமையா?
2) ஊர் பேர் தெரியாத யாரோ ஒருவன் இறைத்தூதரைக் கேவலப்படுத்தி விட்டான். அவன் யாரென்று அவன் சார்ந்துள்ள சமூக மக்களுக்கே சரியாகத் தெரியாது. அம்மக்கள் அவனைக் கண்டிக்கவும் இல்லை. ஒட்டுமொத்தமாக அந்த சமூகமக்கள் அனைவரையும் புறக்கணிப்பதும் ஊர் விலக்கம் செய்வதும்தான் இஸ்லாமியக் கட்டளையா?
3) இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாத — முஸ்லிம் அல்லாத ஒருவன் இவ்வாறு செய்தாலும் அவனைத் தீர்த்துக் கட்டுவதுதான் இஸ்லாமியத் தண்டனையா?
4) தன்குற்றத்தை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டு வருத்தம் தெரிவித்த பின்பும் அதனை ஒப்புக் கொள்ளாமல் வேறு வகையான தண்டனைகளை முஸ்லிம்கள் அவனுக்கு வழங்கித்தான் ஆக வேண்டுமா?
இஸ்லாமிய சட்டநெறிமுறைகளில் தண்டனைகளின் நிலை இப்பிரச்சனையின் உள்ளே ஆழப்புகுமுன் இரண்டு விஷயங்களைப் புரிந்து கொள்வது அவசியம் ஆகும்.
|
Read more...
|
|
|