வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

அமெரிக்காவின் அரசியல் சாசன சட்டத்தைக்கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது! Print E-mail
Tuesday, 29 September 2015 06:31

அமெரிக்காவின் 'அரசியல் சாசன சட்டம்' என்பது கூட தெரியாத ஒருவர், அதிபர் வேட்பாளராக வலம் வருவது வெட்கக் கேடானது!

- பென் கார்சனின் துவேஷ கருத்துக்கு 12 வயது சிறுவன் 'யூசுப்' பதிலடி..!

அமெரிக்க அதிபர் தேர்தலில் 'ரிபப்ளிகன்' கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் 'பென் கார்சன்' ஒரு முஸ்லிம் அமெரிக்க அதிபராக வரக்கூடாது என்ற துவேஷ கருத்தை வெளியிட்டிருந்தார்.

இதற்கு 'யூசுப் தயார்' என்ற 12 வயது முஸ்லிம் சிறுவன் பதிலடி கொடுத்துள்ளார்.

நான் அமெரிக்க அதிபராகி 'பென் கார்சன்' போன்ற முஸ்லிம் விரோத சக்திகளின் தீய எண்ணங்களை தகர்த்துக் காட்டுவேன் என்று கூறியுள்ளார், யூசுப்.

Read more...
 
மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் Print E-mail
Saturday, 26 September 2015 07:29

மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள்

மக்காவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியான 4 தமிழர்கள் பற்றி உருக்கமான தகவல்கள் கிடைத்து உள்ளன.

தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 20 லட்சம் பேர் மக்காவுக்கு ஹஜ் பயணம் சென்று உள்ளனர். இந்தியாவில் இருந்து 1+ லட்சம் பேர் சென்றுள்ளனர்.

மக்கா அருகே மினா நகரில் நேற்று முன்தினம் சாத்தான் தூண் மீது கல் எறியும் நிகழ்ச்சியின் போது திடீரென ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 700-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்தனர். மேலும் 800-க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உயிர் இழந்தவர்களில் 14 பேர் இந்தியர் என்பதும், அதில் 4 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவார்கள்.

தமிழர்கள் 4 பேரின் உடல்களும் மக்காவிலேயே நல்லடக்கம் செய்யப்படுகிறது.

Read more...
 
Tragedy that shook us all Print E-mail
Friday, 25 September 2015 22:29

Tragedy that shook us all

Eyewitnesses told  that it was jostling by some stronger pilgrims caught behind a slower group including elderly people that led to the disaster.

They said security personnel were pleading with pilgrims to stay back, but they were too caught up in their fervor to listen and continued to press ahead, resulting in a stampede.]

Thursday’s heartbreaking Mina tragedy shocked and grieved everybody.

While the incident underlined the need for more efforts to bolster safety measures, the massive operation undertaken by the Kingdom to ensure a secure and comfortable Haj cannot be ignored.

The Kingdom spends billions of riyals on the Haj management and deploys the best resources to implement gigantic projects at the holy sites. The Kingdom considers this task as its Islamic duty. The government does not make any profits from its massive Haj operation, which is second to none in size and volume.

Handling two to three million Muslims from 164 different countries and cultures is a mammoth task.

No one in the world has the kind of experience the authorities here have gained in ensuring a smooth pilgrimage.

It is a phenomenal organizational feat.

The wellbeing and security of such a vast concentration of people in such a relatively small area is a big undertaking.

Read more...
 
நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்! Print E-mail
Friday, 18 September 2015 06:38

நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளது - அமெரிக்க பத்திரிகை அலறல்!

நேட்டோ படையை மிஞ்சும் இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாக அமெரிக்க பத்திரிக்கையான வால் ஸ்ட்ரீட் (THE WALL STREET JOURNAL) அலறியுள்ளது.

இது தொடர்பாக அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ள முழு செய்தியில்...

நேட்டோ படைகளை மிஞ்சும் ஒரு இஸ்லாமிய படையை சவூதி அரேபியா உருவாக்கியுள்ளதாகவும், இதன்மூலம் அமெரிக்காவிற்கு இனி மத்தியகிழக்கில் வேலையில்லை என்பதை சவூதி மன்னர் சல்மான் சொல்லாமல் சொல்லி சொல்லியிருக்கிறார் என்று தனது தலையங்கத்தில் கூறியிருக்கிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கவின் நடவடிக்கைகள் எதிர்பார்த்த பயனை தரவில்லை என்பதை அறிந்த பிறகே சவூதி மன்னர் சல்மான் புதிய இஸ்லாமிய கூட்டணியை உருவாக்கியிருப்பதாக கூறியிருக்கும் அந்த பத்திரிகை இதன் மூலம் மத்திய கிழக்கில் ஏகபோக ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக சவுதி அரேபியா தன்னை மாற்றிகொண்டு விட்டது என்றும் இதனால் அமெரிக்காவின் முக்கியத்துவம் மத்திய கிழக்கில் வெகுவாக குறைந்து விட்டது என்றும் அந்த பத்திரிகை கூறியிருக்கிறது.

Read more...
 
மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு! Print E-mail
Wednesday, 16 September 2015 20:12

மக்காவில் கிரேன் விபத்து: வரலாறு காணாத நஷ்ட ஈட்டுத்தொகையை வாரி வழங்க சவூதி மன்னர் உத்தரவு!

ஹாஜிகளின் விபத்து குறித்து சவூதி மன்னர் சல்மான்  பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உயிரிழந்த ஹாஜிகளின் குடும்பத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனம் இரத்தபணமாக தலா 3 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 53 லட்சம்) வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கிடையில் சவூதி அரேபிய அரசின் சார்பில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70 கோடி) வழங்கப்படும். பலத்த காயம் அடைந்து நிரந்தரமாக உறுப்புகளை இழந்து  இயலாமையில் தள்ளப்பட்டவர்களுக்கும் இதே தொகை 1 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் ரூ1.70 கோடி) வழங்கப்படும் என்றும்,

படுகாயம் அடைந்த ஹாஜிகளுக்கு நிவாரண தொகையாக தலா 5 லட்சம் ரியால் (இந்திய மதிப்பில் ரூ 87 லட்சம்) வழங்கப்படும் என்றும்,

இறந்தோரின் குடும்பத்திலிருந்து இருவர் மன்னரின் விருந்தாளிகளாக அடுத்த வருடம் 2016 ஹஜ்ஜுக்கு வந்து செல்லும் முழு செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

காயம்பட்டு இம்முறை ஹஜ் செய்ய இயலாமல் போனவர்கள், குணமடைந்து அடுத்து வருடம் ஹஜ் செய்வதற்கான அனைத்து செலவையும் சவூதி அரசு ஏற்கும் என்றும்,

Read more...
 
ஒரு சிறுவனின் மரணத்தின் விளைவு Print E-mail
Wednesday, 09 September 2015 07:49

ஒரு சிறுவன் மரணத்தின் விளைவு

o ஆண்டுக்கு 5 லட்சம் என்ற எண்ணிக்கையில், அகதிகளுக்கு புகலிடம் அளிக்கவுள்ளதாக ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது.

o  அகதிகளுக்காக ரூ.74,336 கோடி சுமையை ஏற்கிறது ஜெர்மனி

o சிரியா அகதிகளுக்காக தீவையே விலைக்கு வாங்கும் தொழிலதிபர்!

o   24,000 அகதிகளை ஏற்க பிரான்ஸ் முடிவு!

Read more...
 
அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்! Print E-mail
Tuesday, 28 July 2015 21:37

அப்துல் கலாமின் கடைசி 5 மணிநேரங்கள்!

"நாங்கள் இருவரும் பேசி 8 மணிநேரங்களுக்கு மேல் ஆகிறது. தூக்கம் வரவில்லை. அவருடனான நினைவுகள் கண்ணீராய் வருகிறது. ஜூலை 27. மதியம் 12 மணிக்கு கவுகாத்தி விமானத்தில் அமர்ந்தோம். அவர் 1A இருக்கையில் அமர, நான் 1C இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் கருப்பு வண்ண ‘கலாம் சூட்’-ஐ அணிந்திருந்தார். ‘அருமையான கலர்!’ என்றேன்.

2.5 மணிநேரப் பயணம். எனக்கு டர்புலென்ஸ் ஆகாது. ஆனால், கலாமுக்கு அது ஒரு பிரச்னையே இல்லை. ஒவ்வொரு முறை டர்புலென்ஸ் காரணமாக விமானம் ஆட்டம் காணும்போது, நான் பயத்தில் அமர்ந்திருக்க, ஜன்னலை மூடிவிட்டு, 'இப்போது பயம் போயிருக்குமே!’ என்பார்.

கவுகாத்தியில் இருந்து ஷில்லாங்கில் உள்ள இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்டுக்கு 2.5 மணிநேரம் காரில் பயணம். மொத்தமான 5 மணிநேரப் பயணத்தில் நாங்கள் நிறைய பேசினோம், விவாதித்தோம். இதுவரை நூற்றுக்கணக்கான முறை அவருடன் பயணித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையுமே விஷேசமான அனுபவமாகவே இருக்கும்.

இந்தக் கடைசி பயணத்தில் இருந்து 3 முக்கிய சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன்...

Read more...
 
Ramadan’s Last Ten Nights and Days Print E-mail
Tuesday, 07 July 2015 21:18

Ramadan’s Last Ten Nights and Days

In this blessed month of Ramadhan, we have now come to the grand finale – the last ten days of Ramadhan that are regarded as the “cream” of Ramadhan. In it is a night that Qur’an tells us is better than 1000 months (yes, monthsஸnot days!)

The Messenger of Allah (peace and blessings of Allah be upon him) said:

“There has come to you Ramadaan, a blessed month which Allah has enjoined you to fast, during which the gates of heaven are opened and the gates of Hell are closed, and the rebellious devils are chained up. In it there is a night which is better than a thousand months, and whoever is deprived of its goodness is indeed deprived.” (Hadith Narrated by An-Nasaa’i, 2106; Ahmad, Sahih At-Targheeb, 999.)

So, in preparation for the grand finale, here is a checklist of some of the things that we can all do to make the remaining days of Ramadaan work to our advantage:

Read more...
 
In New York, both Eids officially recognized as school holidays Print E-mail
Sunday, 08 March 2015 12:28

In New York, both Eids officially recognized as school holidays

For the first time in the city's history, public schools will observe two Muslim holidays.

New York City is now the largest school district in the country to recognize two Muslim holidays on its official calendar.

Mayor Bill de Blasio announced on Wednesday the addition of Eid al-Adha and Eid al-Fitr to the calendar, calling it a “change that respects the diversity of our city.”

“Hundreds of thousands of Muslim families will no longer have to choose between honoring the most sacred days on their calendar or attending school,” de Blasio said in a statement. “This is a common sense change, and one that recognizes our growing Muslim community and honors its contributions to our City.”

The two holidays will be added to the calendar for the 2015-16 school year, which includes several Jewish and Christian holidays, such as Christmas, Easter, Passover and Rosh Hashanah.

Read more...
 
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (3) Print E-mail
Saturday, 13 March 2010 07:20

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (3)

     டாக்டர் ஷேக் சையது M.D    

[ மனித சந்ததிகளை விந்துவிலிருந்து படைத்த செய்தியை அல்லாஹ் சுமார் 15 இடங்களில் கூறுகிறான். 12 இடங்களில் நுத்ஃபா என்ற வார்த்தையையும், 3 இடங்களில் மாஉ என்ற வார்த்தையையும் பயன்படுத்தி கூறியுள்ளான்.

நுத்ஃபா என்பதற்கு சுத்தமான நீர் என்பது பொருளாகும். ஆணுடைய விந்து, எந்த வித மாசுகளும் சென்றடைந்திராத பாதுகாப்பான இடத்திலிருந்து வெளியேறுவதால் அதற்கு நுத்ஃபா என்ற பெயர் பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணுறுப்பிலிருந்து குதித்து வெளியாகும் வழுவழுப்பான திரவத்திற்கு விந்து எனப்படும்.

இந்த விந்துவில் இறைவன் செய்யும் விந்தைகள் இறைவனுக்கு மட்டுமே தெரிந்த வித்தையாகும். அற்பமான ஒரு துளி விந்துவில் பல அதிசயங்கள் நிகழ்த்தியிருப்பது அவனுடைய வியத்தகு அத்தாட்சிகளில் ஒன்றாகும்.

குதித்து வெளியாகும் நீர் என்று கூறப்பட்டிருப்பது சிறுநீரிலிருந்து விந்தை வித்தியாசப்படுத்தி காட்டுவதற்காகவே தெரிவு செய்து போடப்பட்ட வார்த்தை. சிறுநீருக்கு குதித்து வெளியாகும் தன்மையில்லை. விந்து மட்டுமே குதித்து வெளியாகும் தன்மையில் உள்ளதாகும். அந்த தன்மை ஏன் விந்திற்கு மட்டும் உள்ளது என்று சிந்தித்தால் அதிலும் அல்லாஹ் செய்துள்ள அறிவியலின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள முடிகிறது.

பெண்ணிடம் உள்ள கர்பப்பை மிக ஆழத்தில் இருப்பதால் அதனை நோக்கி செலுத்தப்படும் விந்து, சாதாரணமாக வேகமின்றி ஆண் உறுப்பிலிருந்து வெளியாகுமானால் அது கர்ப்பப் பையை சென்றடைவது சாத்தியக்கூறு குறைவு. குதித்த நிலையில் அழுத்தத்துடனும் வீரியத்துடனும் விரைவாக வெளியாகும் போதுதான் அந்த விந்து கர்ப்பப் பையில் சரியான இடத்தை நோக்கி சென்றடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.]

Read more...
 
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் (6) Print E-mail
Thursday, 25 March 2010 07:22

டாக்டர் ஷேக் சையது M.D

விந்து உற்பத்தி

விந்து எங்கிருந்து உற்பத்தியாகி வெளியேறுகிறது என்பதை இந்த தொடரில் பார்ப்போம். விந்துபை விரையில் (Testis) உற்பத்தியாகிறது.

விரை சதாவும் விந்துவினை உற்பத்தி செய்து கொண்டே இருக்கும். அங்கு உற்பத்தியாகும் விந்து அதன் குழாய்வழியாக கடத்தப்பட்டு விந்துப்பபையில் சேமிக்கப்படுகிறது.

தேவை ஏற்படும் போது அந்த விந்துப்பையிலிருந்து வெளியேறுகிறது. இது இன்றைய மருத்துவ உலகம் கண்டுபிடித்த அறிவியல் தகவலாகும்.

இந்த விரை உடலைவிட்டும் பிரிந்து தனியாக இருக்கிறது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயமாகும்.

விந்து எங்கு உற்பத்தியாகி, வெளியேறுகிறது என்பது குறித்து இறை வேதம் குர்ஆன் என்ன கூறுகிறது என்று சற்று கவனிப்போம்.

خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ

Read more...
 
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 Next > End >>

Page 98 of 98

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article