வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

பெண்களுக்கான இல்லற உரிமைகள் Print E-mail
Thursday, 16 September 2010 14:42

பெண்களுக்கான இல்லற உரிமைகள்

    ஃபாத்திமுத்து சித்தீக்    

[ கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ''இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.

பலதாரமணம் மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி! அல்லது ''சிகப்பு விளக்கு''ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.]

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) Print E-mail
Saturday, 17 September 2016 07:06

ஹஸீனா அம்மா பக்கங்கள் (5)

எது, எதில் மறைக்கப்பட்டுள்ளது?

பெண்களின் வெட்கம் அவளின் படைப்பிற்குள்,

பெண்களின் வாக்குறுதி அவளின் பரிசுத்தத்தன்மைக்குள்,

பெண்களின் தைரியம் அவளின் பொறுமைக்குள்,

பெண்களின் கண்ணியம் அவளின் மன்னிக்கும் தன்மைக்குள்,

பெண்களின் அழகு அவளின் குணத்திற்குள்,

பெண்களின் ஆற்றல் அவளின் உறுதிக்குள்,

பெண்களின் சிறப்பு அவளின் முன்யோசனைக்குள்,

Read more...
 
2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் Print E-mail
Friday, 13 October 2017 08:33

2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள்

நாளது 07-10-2017 மாலை மும்பை இந்திய ஹஜ் குழுவின் கட்டிட வளாகத்தில் 2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ளது.

1. இந்திய ஹஜ் கோட்டாவில் (170000) இந்திய ஹஜ் குழுவிற்கு 70 சதமும் (119000) தனியார் நிறுவனத்திற்கு 30 சதமும் (51000) கோட்டா தரப்பட்டுள்ளது.

2. ரிசர்வு பிரிவு A (70+) மற்றும் ரிசர்வு பிரிவு B (4வது வருட விண்ணப்பங்கள்) இரண்டையும் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ஹஜ் பயணிகளுக்கு வழங்கும் மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்ய பரிந்துரை தரப்பட்டுள்ளது.

குறிப்பு: விமான சேவை கட்டணத்தில் மட்டுமே மானியத் தொகை வழங்கப்படுகிறது என்பதாக அறிகிறோம்.

Read more...
 
ஆங்கிலத்தில் கடிதங்கள்: இனி எளிதாக எழுதலாம்! Print E-mail
Tuesday, 29 June 2010 22:18
 
ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.

பள்ளி முதல் கல்லூரிவரை, அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.

அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

Read more...
 
ஷாஜஹானின் தாஜ் மஹல் Print E-mail
Saturday, 14 February 2009 08:53
 
ஷாஜஹானின் தாஜ் மஹல்

ஷரீஅத் பேணவில்லை, ஹஜ் செய்யவில்லை, ஏராளமான மனைவிகள், சொகுசு பேர்வழிகள் என்றெல்லாம் காரணம் கூறி நம்மில் பலர் முகலாய மன்னர்களை அலட்சியப் படுத்துவது தெரிந்த விஷயம் தான். முகலாயர்களுக்கும், அல்லாஹ்விற்கும் இடையேயுள்ள விஷயங்களாக கருதி, இவைகளை விட்டுவிட்டு, அவர்களின் மற்ற நற்செயல்களுக்கு நமது வாழ்த்தை தெரிவிக்கலாமே.

முகலாய மன்னர்கள், ஷரீஅத் கோட்டையாகத் திகழும் பள்ளிவாசல்களை ஏராளமாய் நிர்மானித்துள்ளனர். அதில் குர்ஆன் வாசகங்களை ஆர்வத்துடன் அவற்றில் பக்தி சிரத்தனையுடன் எழுதியுள்ளதைப் பார்ப்போர் முலாயர்களின் இஸ்லாமியப் பற்றை உணரலாம்.

இறை அருளால் அரபி எழுத்துக்களை அலங்கரமாக வரைந்து தரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் 'தாஜ்மஹாலில் உள்ள அரபி எழுத்துக்களை பார்த்தீர்களா?' என பலர் கெட்பதுண்டு. 'இல்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும்' என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கல்யாணத்திற்கு டெல்லிக்கு சென்றிருந்த போது அதைப் பார்ப்பதற்காக ஐந்து மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து ஆக்ரா கோட்டை தவிர டெல்லியுள்ள ஜும்மா மஸ்ஜித், ஹுமாயூன் சமாதி, செங்கோட்டை, குத்ப்மினார், போன்றவைகளிலும், இஸ்லாமிய கலைநுட்பத்துடன் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

Read more...
 
முஸ்லீம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? Print E-mail
Friday, 22 August 2014 10:12

M U S T   R E A D

[ புனிதமிக்க நமது சமுதாயம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட சம்பவங்கள் இன்று நல்ல மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களில் கேட்கின்றனவே! அந்தத் குடும்பங்களிலெல்லாம் மார்க்கம் எடுபட்டுப் போய்விட்டதா? அன்னியக் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிபோய் விட்டோமா? கால ஓட்டத்தில் கரைந்து விட்டோமா?

மார்க்கத்தை மார்பில் ஏந்திய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மாற்றங்கள் வருமா? இதயங்களில் இடி விழும் இப்படிப்பட்ட இகழ்வுகள் இனியாவது நடக்காதிருக்குமா? நம் இளைய சமுதாயம் இஸ்லாத்தின் பிடிக்குள் இனியாவது தலையெடுக்குமா? முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் நடக்கும் அவலங்கள். இன்று இந்த ஊர்களில் வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரத்தை அறிந்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் சூர்யாக்களும், சிவகார்த்திகேயன்களும், இன்னும் இவர்களைப் போன்ற கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.]

சமீபத்தில் விஜய் டிவியில் ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் இளம் முஸ்லிம் பெண் போட்டியின் பங்கேற்பாளராக அமர்ந்திருக்க, எதிரில் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ், கேள்விகளுக்கு நடுவே அந்தப் பெண்ணைப் பார்த்து, “உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?” என்று கேட்கிறார். உடனே “சூர்யா!” என்று பதில் வருகிறது. இதனைக் கேட்ட பிரகாஷ்ராஜ் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து “உண்மையாம்மா?” என்று கேட்கின்றார். புர்கா அணிந்திருந்த அந்தத் தாயார் மகிழ்ச்சிப் பூரிப்பில் வாயெல்லாம் பற்களுடன் “ஆமாம்” என்கிறார்.

Read more...
 
அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம்! Print E-mail
Saturday, 31 May 2014 09:08

அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம்!

முழு உலகையும் சதி, வஞ்சகம், மோசடி, பொய், துரோகம் முதலான இரகசிய நடவடிக்கைகளை வைத்து சமூகம் இயங்குகிறது.

இதில் தேர்ச்சியடைபவர்களையே தொழில் மன்னன், அரசியல் இராஜதந்திரி, நிர்வாகப் புலி என்று அழைக்கிறார்கள். சமூகத்தின் சிறந்த “ரோல் மாடல்களாக’ப் பத்திரிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

இவர்களைப் பற்றிய செய்திகளும் மக்களுக்கான நோக்கிலிருந்து மதிப்பிடப்படாமல், இரகசியக் கலைகளில் வல்லவர் யார் என்ற கருத்தே உருவாக்கப்படுகிறது.

இதற்குப் பொருத்தமாக பத்திரிகைகளும் அரசியல் செய்திகளை கொள்கை, கோட்பாடு, மக்கள் நிலையிலிருந்து எழுதாமல் கிசுகிசு பாணியில் புனைகிறார்கள். இன்றைக்கு அரசியல் செய்திகளை அறிய கழுகு, சங்கர்லால், வம்பானந்தா போன்ற “ஆய்வாளர்களின்’ ஆய்வுகளைத்தான் மக்கள் படிக்கின்றனர்.

Read more...
 
மூன்று வேளை சாப்பாடு ஏன்? Print E-mail
Sunday, 28 November 2010 08:59

மூன்று வேளை சாப்பாடு ஏன்?

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும்.

பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

Read more...
 
மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்! Print E-mail
Friday, 21 September 2012 19:36

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்ஸ" (அல்குர்ஆன் 9:71)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்..." (அல்குர்ஆன் 3:110)

இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

Read more...
 
"ஈதுல் அள்ஹா" நல்வாழ்த்துக்கள் Print E-mail
Friday, 01 September 2017 14:59

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று  ஈதுல் அள்ஹா  பெருநாள்

கொண்டாடும் அனைவருக்கும்

உளமார்ந்த

ஈத் முபாரக்

M.A.Mohamed Ali,B.A.

-adm. www.nidur.info

 
40 - ஹதீஸ் குத்ஸிகள் (4) Print E-mail
Tuesday, 13 July 2010 12:08

31. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மன்னிக்கப்படுவார்கள் (முன் சமுதாயத்தில்) ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிய போது, தனது மக்களை அழைத்து, நான் மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கி, பின்பு எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு அல்லாஹ் பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன் மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான், நீ செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எது? அதற்கு அம்மனிதன்; அதிபதியே! உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான். இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

32. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் பாவம் செய்துவிட்டு, அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக, என்று வேண்டினான்.

அல்லாஹ் : என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

Read more...
 
இல்லறம் இனிக்க! Print E-mail
Tuesday, 30 August 2011 11:02

இல்லறம் இனிக்க !

  பெண்களுக்கு :    

o உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.

o அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.

o பிடிவாத குணம் இருக்க கூடாது.

o வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..

o எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லணும்.

o மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது.

o எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.

Read more...
 
திருமணம், காதல், டீனேஜ் பருவம் - ஒரு நேர்காணல் (1) Print E-mail
Monday, 04 July 2011 07:37

மிகச்சிறந்த ஆய்வுகளில் ஒன்று!

[ அல்லாஹ் பாலியல் உணர்வை பற்றும் நெருப்பாகவே படைத்துள்ளான். திருமணம் இன்றேல் அந்நெருப்பு உடலை, உள்ளத்தை, ஏன் சமூகத்தைக் கூட எரித்துவிடும்.

இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது. மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது. இதில் முன்னையது நிறைவேறினால்தான் பின்னையது நிறைவேறும்.

மனிதன் எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் அவன் எப்போது மனம் முடிக்க வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கலாம். எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நீங்கள் பசிவரும்போது என்று கூறுவீர்கள். எனவே இச்சை ஏற்படும் போது மனிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம்.

பாலியல் பசியுள்ளவனின் நிறைவு அதை அடைவதிலேயே தங்கியுள்ளது. அவன் பெண்ணைப் பார்ப்பதாலும் பேசுவதாலும் அது நிறைவேறுமா! உணவைப் பார்ப்பதாலும் அதை முகர்வதாலும் பசி அடங்கிவிடுமா! அதுபோலத்தான் காதலும். காதலியின் அழகை கண்களால் பருகுவதாலோ அவள் குரலை காதால் கேட்பதாலோ அவன் பசி அடங்காது. அது பூட்டைத் திறப்பதிலேயே அடங்கும். அவ்வாறே காதலன் காதலியின் ஆடைக்காக காதலிக்க முடியாது. ஆடைக்காக காதலித்தால் அது நீங்கியதும் காதல் போய்விடும்.

15 வயதில் ஏற்படும் பாலியல் உணர்வை 30 வயதில் கொண்டுபோய்த் தீர்ப்பது நியாயம்தானா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வயதில் திருமணம் செய்வதை தடுக்கும் சமூகம் இவ்வுணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் வழிமுறைகளைத் தூண்டியும் விட்டுள்ளது.

நிர்வாணப்படங்களும், ஆண் பெண் கலப்பு விளம்பரங்களும் தொடர்களும் அப்பாவி இளைஞனையும் யுவதியையும் என்ன செய்யும் என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும் அங்கும் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையிலேயே கல்விமுறையும் அமைந்துள்ளது. கற்கை முடியும்வரை இவர்கள் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? படி, படி என்று கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?]

Read more...
 
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதிகள்! Print E-mail
Sunday, 04 September 2011 09:31

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதிகள்!

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.

வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.

Read more...
 
படைப்பின் தொழில் நுட்பம் (1) Print E-mail
Sunday, 17 January 2010 09:21

MUST READ

 பி.எஸ்.அலாவுதீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி  

இஸ்லாம்

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

Read more...
 
Making the most of the 10 blessed days of Dhul-Hijjah Print E-mail
Friday, 26 September 2014 06:12

Making the most of the 10 blessed days of Dhul-Hijjah

By His wisdom, Allah Ta’ala gave preference to some places and times over others.

For Muslims, Friday is the best day of the week.

Ramadan is the best month of the year, “Laylat al-Qadr” is the best night in Ramadan.

The day of “Arafah” is the best day of the year. Likewise the first ten days of the month of “Dhul-Hijjah” are the blessed days for Muslims.

Allah Ta’ala says in the Quran what means: {By the daybreak, by the ten nights, by the even and the odd, by the passing night – is this oath strong enough for a rational person?} (Al-Fajr 89:1-5)

Early Muslim scholars differed on what is meant by the “ten nights”. But most of them agreed that the ten nights refer to the first ten days of Dhul-Hijjah.

In another verse Allah Ta’ala says: { to attain benefits and mention Allah Ta’ala’s name, on specified days.} (Al-Hajj 22:28)

Most of the Quran commentators view that the specific days are the ten days of Dhul-Hijjah.

What a great virtue attached to those days which pass unnoticed by many people nowadays.

Read more...
 
Western countries more Islamic than Muslim countries: study Print E-mail
Saturday, 14 June 2014 06:23

இஸ்லாமிய மாண்புகளை பின்பற்றுவதில் முன்நிற்கும் மேற்கத்திய நாடுகள்

Western countries more Islamic than Muslim countries: study

by Damien McElroy

The Koran’s teachings are better represented in Western societies than in Islamic countries, which have failed to embrace the values of their own faith in politics, business, law and society, a leading academic at George Washington University has said.

A study of 208 countries and territories has found that the top countries in both economic achievement and social values are Ireland, Demark, Luxembourg and New Zealand. Britain also ranks in the top ten.

The first Muslim-majority nation is Malaysia ranking at 33, while the only other state in the top 50 is Kuwait at 48.

Read more...
 
பர்தா(புர்கா) என்றால் என்ன? Print E-mail
Wednesday, 13 January 2010 08:57

 

பர்தா(புர்கா) என்றால் என்ன?

         சுமஜ்லா      

ஒரு முஸ்லிம் சகோதரியின் பேட்டி:

பர்தா என்றால் என்ன?

பர்தா என்பது உடையல்ல, அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!

ஏன் பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்கள்?

அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!

நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.

Read more...
 
காட்டுமிராண்டிகள் யார்? Print E-mail
Saturday, 23 January 2010 09:34

காட்டுமிராண்டிகள் யார்?

புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்; காட்டுமிராண்டிகள் யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளட்டும்.

புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்தான் உண்மையாகவே காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். தங்களைப்போல் எல்லோருமே காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டுமென்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆசை!

எது காட்டுமிராண்டித்தனம்? மனித இனத்திற்கும் விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று - பாலியல் குறித்த விஷயங்களில் விலங்கினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் மனித இனம் அப்படியல்ல. பல கட்டுப்பாடுகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டவன்மனிதன்.

விலங்குகளைப்போல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை ஆதரிக்கும் அத்தனை பேருமே காட்டுமிரண்டிகள்தான். இவர்களில் போலித்தனமான அறிவு ஜீவிகளும் அடக்கம். இந்த போலியான அறிவு ஜீவிகளால்தான் இன்றைய உலகம் சின்னாபின்னமாகிக்கொண்டு வருகிறது.

மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் வித்தியாசம் காணத்தெரியாத இவர்கள் அறிவு ஜீவிகளாம்! வெட்கக்கேடு. (வெட்க உணர்வை தூக்கி எறிந்து விட்டவர்கள்தானே...! இவர்களுக்கு கண்ணியமிக்க புர்காவைப்பற்றி விமரிசனம் செய்வதற்கு எவ்வித அறுகதையும் இல்லை.

பித்தலையைப்பார்த்து இளித்ததாம் ஈயம் என்று கூட சொல்வது தவறு; பசும்பொன்னைப்பார்த்து பொறாமைப்பட்டதாம் ஈயம் என்று சொல்லவேண்டும். வைரத்தை கூழாங்கற்களாக மதிப்பிடும் பார்வையற்றவர்கள்; இவர்களுக்கு பெயர் அறிவுஜீவிகளாம்!!!

Read more...
 
ஹிஜாப் தரும் சுதந்திரம்! Print E-mail
Friday, 30 July 2010 07:04

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

என்ன பார்க்கிறாய்?

என்னைப் பார்க்கும்போது

என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?

கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?

இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்

கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?

கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

Read more...
 
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி! Print E-mail
Tuesday, 26 August 2008 08:28

ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி

தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான்.

வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.

இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.

இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.

நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 97 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article