வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

Western countries more Islamic than Muslim countries: study Print E-mail
Saturday, 14 June 2014 06:23

இஸ்லாமிய மாண்புகளை பின்பற்றுவதில் முன்நிற்கும் மேற்கத்திய நாடுகள்

Western countries more Islamic than Muslim countries: study

by Damien McElroy

The Koran’s teachings are better represented in Western societies than in Islamic countries, which have failed to embrace the values of their own faith in politics, business, law and society, a leading academic at George Washington University has said.

A study of 208 countries and territories has found that the top countries in both economic achievement and social values are Ireland, Demark, Luxembourg and New Zealand. Britain also ranks in the top ten.

The first Muslim-majority nation is Malaysia ranking at 33, while the only other state in the top 50 is Kuwait at 48.

Read more...
 
நபிகள் நாயகம் صلى الله عليه وسلم அவர்களின் சொற்பொழிவுகள் (9, 10, 11) Print E-mail
Friday, 25 March 2011 08:58

     ஒன்பதாவது சொற்பொழிவு    

ஹிஜ்ரி எட்டு, ஜமாதுல் அவ்வலில், ஸிரியாவிலுள்ள மூத்தா என்ற இடத்தில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அதே சமயம் மதீனாவில் மஸ்ஜிதின் மிம்பரில் நின்றபடி நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிகழ்த்திய உரை:

‘ஜைது (ரளியல்லாஹு அன்ஹு) கொடி பிடித்தார், அவர் கொல்லப்பட்டார்.

பிறகு ஜாஃபர் (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தாங்கி நின்றார்; அவரும் கொல்லப்பட்டார்.

பின்னர் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரளியல்லாஹு அன்ஹு) அதைத்தூக்கிப் பிடித்தார்; அவரும் வீழ்ந்துவிட்டார்.

பின்னர், தான் தளபதியாக நியமனம் பெறாமலே காலீத் இப்னு வலீத் (ரளியல்லாஹு அன்ஹு) கொடியைத்தூக்கி உயர்த்தினார். அவர் வெற்றியடைந்து விட்டார்...

(போரில் மாண்ட) அவர்கள் நம்முடன் இப்பொழுது இருந்திருப்பின் அது நமக்குத் திருப்தி தந்திராது. அவர்கள் நம்முடன் இப்போது இருந்திருப்பின் அது அவர்களுக்குத் திருப்தி உண்டாக்கியிருக்காது.’

(நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறுகையில் அவர்களின் இரு கண்களிலிருந்தும் கண்ணீர் பொல பொலவென்று உதிர்ந்தது. (நூல்: புகாரி)

Read more...
 
ஹஜ்ஜுக்காக பசுக்களை விற்ற மூதாட்டி! Print E-mail
Thursday, 24 October 2013 06:58

ஹஜ்ஜுக்காக பசுக்களை விற்ற மூதாட்டி!

'கடந்த இருபத்தைந்து வருடங்களாக ஹஜ்ஜூக்கு வர முயற்சி செய்து கொண்டுள்ளேன். ஒவ்வொரு வருடமும் ஹஜ்ஜூக்கு செல்வதற்கான பணம் என்னிடம் முழுமையடையாமல் போகும். உடன் எனது ஹஜ்ஜு செய்ய வேண்டும் என்ற ஆவலை அடக்கிக் கொள்வேன். ஆனால் இந்த வருடம் இறைவன் எனது ஆவலை பூர்த்தி செய்துள்ளான். இந்த வருடமும் போதிய பணம் சேரவில்லை. முடிவில் எங்களது வீட்டில் இருந்த இரண்டு பசுக்களை விற்று ஹஜ்ஜுக்கான பணத்தை பூர்த்தியாக்கினேன்' என்று ஆவலோடு சொல்கிறார் 80 வயதைக் கடந்த ஜைனப். இவர் நமது நாடான இந்தியாவிலிருந்து ஹஜ்ஜு செய்ய வந்தவர்.

'இரண்டு பசுக்கள் போனதைப் பற்றி கவலை இல்லை. ஆனால் எனது 25 வருட கனவு இன்று பூர்த்தியானது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. உலக முஸ்லிம்கள் அனைவரோடும் 'எல்லோரும் ஒரு தாய் மக்கள்' என்ற உணர்வோடு நான் செய்த இந்த ஹஜ்ஜை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அந்த அளவு சந்தோஷத்தோடு உள்ளேன்.

மக்கா நகரம் என்னை பிரமிப்புக்குள்ளாக்கியது. எனக்கு மிகுந்த திருப்தியையும் மன நிம்மதியையும் தந்தது இந்த அழகிய ஊர். எனக்கு அனுமதி கிடைத்தால் இறக்கும் வரை இந்த ஊரிலேயே தங்கி விடலாம் என்று கூட எண்ணுகிறேன். இன்று எனது குடும்பத்தை காண எனது நாட்டுக்கு செல்கிறேன். என் வாழ்நாளில் இந்த ஊரையும் இங்கு நான் பெற்ற படிப்பினைகளையும் மறக்க இயலாது. இந்த வாய்ப்புகளை அளித்த அந்த ஏக இறைவனுக்கே புகழ் அனைத்தும்.' என்கிறார் ஜைனப்.

Read more...
 
பர்தா(புர்கா) என்றால் என்ன? Print E-mail
Wednesday, 13 January 2010 08:57

 

பர்தா(புர்கா) என்றால் என்ன?

         சுமஜ்லா      

ஒரு முஸ்லிம் சகோதரியின் பேட்டி:

பர்தா என்றால் என்ன?

பர்தா என்பது உடையல்ல, அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!

ஏன் பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்கள்?

அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!

நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.

Read more...
 
காட்டுமிராண்டிகள் யார்? Print E-mail
Saturday, 23 January 2010 09:34

காட்டுமிராண்டிகள் யார்?

புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்; காட்டுமிராண்டிகள் யார்? என்பதை முதலில் விளங்கிக் கொள்ளட்டும்.

புர்கா போடுவது காட்டுமிராண்டித்தனம் என்று முழக்கமிடுகின்றவர்கள்தான் உண்மையாகவே காட்டுமிராண்டிகளாக வாழ்கிறார்கள். தங்களைப்போல் எல்லோருமே காட்டுமிராண்டிகளாக வாழ வேண்டுமென்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு ஆசை!

எது காட்டுமிராண்டித்தனம்? மனித இனத்திற்கும் விலங்கினத்திற்கும் உள்ள வேறுபாடுகளில் ஒன்று - பாலியல் குறித்த விஷயங்களில் விலங்கினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால் மனித இனம் அப்படியல்ல. பல கட்டுப்பாடுகளுக்கும் சட்ட திட்டங்களுக்கும் உட்பட்டவன்மனிதன்.

விலங்குகளைப்போல் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறையை ஆதரிக்கும் அத்தனை பேருமே காட்டுமிரண்டிகள்தான். இவர்களில் போலித்தனமான அறிவு ஜீவிகளும் அடக்கம். இந்த போலியான அறிவு ஜீவிகளால்தான் இன்றைய உலகம் சின்னாபின்னமாகிக்கொண்டு வருகிறது.

மனிதனுக்கும் விலங்கினங்களுக்கும் வித்தியாசம் காணத்தெரியாத இவர்கள் அறிவு ஜீவிகளாம்! வெட்கக்கேடு. (வெட்க உணர்வை தூக்கி எறிந்து விட்டவர்கள்தானே...! இவர்களுக்கு கண்ணியமிக்க புர்காவைப்பற்றி விமரிசனம் செய்வதற்கு எவ்வித அறுகதையும் இல்லை.

பித்தலையைப்பார்த்து இளித்ததாம் ஈயம் என்று கூட சொல்வது தவறு; பசும்பொன்னைப்பார்த்து பொறாமைப்பட்டதாம் ஈயம் என்று சொல்லவேண்டும். வைரத்தை கூழாங்கற்களாக மதிப்பிடும் பார்வையற்றவர்கள்; இவர்களுக்கு பெயர் அறிவுஜீவிகளாம்!!!

Read more...
 
ஆண் பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்! Print E-mail
Thursday, 28 January 2010 12:05

இஸ்லாம் - ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!

உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.

பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!

o கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!

o பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது! (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)

o உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது!

o பெண்களுக்கு சொத்துரிமை இல்லை! ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது! (எண்ணாகமம் 27:8)

o மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (ஆதியாகமம் 3:16)

o பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (யாத்திராகமம் 21:7-8)

Read more...
 
ஹிஜாப் தரும் சுதந்திரம்! Print E-mail
Friday, 30 July 2010 07:04

ஹிஜாப் தரும் சுதந்திரம்!

என்ன பார்க்கிறாய்?

என்னைப் பார்க்கும்போது

என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?

கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?

இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்

கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?

கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

Read more...
 
ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி! Print E-mail
Tuesday, 26 August 2008 08:28

ஆபாசமும் அபத்தமும்தான் ஃபேஷன் டெக்னாலஜி

தொழிற் கல்விப் படிப்புகளில் தற்போது அதிகக் கவனம் பெற்றுள்ளது உணவு தயாரிப்பு (கேட்டரிங்), ஆடை வடிவமைப்பு (ஃபேஷன் டெக்னாலஜி) ஆகியவைதான்.

வெளிநாடுகளுக்குச் சென்று அதிகம் சம்பாதிக்க முடியும் என்ற ஆவலைத் தூண்டும் (உண்மையோ, பொய்யோ) துறையாக சில ஆண்டுகளாக இவை பிரபலமடைந்துள்ளன.

இவற்றின் ஒரு பகுதியாக "ஃபேஷன் டெக்னாலஜி' எனப்படும் ஆடை வடிவமைப்பு பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கும் போதும், வழக்கமான கல்லூரி ஆண்டு விழாக்களிலும் "ஆடை அலங்கார அணிவகுப்பு' கட்டாயம் இடம்பெறுகிறது.

இங்கே தான் குழப்பமே. இந்த அலங்கார அணிவகுப்புகள் தமிழ்நாட்டு கலாசாரத்துக்கு கொஞ்சமும் பொருந்தாத அரைகுறை நடை, உடை, பாவனைகளுடன் அமைந்து விடுகின்றன.

நிச்சயமாகப் பொது இடங்களில் போட்டுக் கொண்டு வெளிவர முடியாத ஆடைகளை மட்டுமே அணிந்து கொண்டு, வழக்கமான மேடை கலாசாரமாகிய ஒளி வெள்ளத்தில், "ஆணிக்கால்' வந்தவரைப் போல "ஹை ஹீல்ஸ்' செருப்பு அணிந்து நடந்து வரும் இளம்பெண்கள், மேடையின் முன் அமர்ந்திருக்கிற நூற்றுக்கணக்கான மக்களுக்கு "பறக்கும் முத்தமும்' கொடுக்கிறார்கள்.

Read more...
 
வரதட்சணை வாங்குவது ஹலாலா? ஹராமா? மக்ரூஹா? மக்ரூஹ் தஹ்ரீமா? Print E-mail
Monday, 23 March 2009 08:29

  எம்.ஏ.முஹம்மது அலீ  

[ வரதட்சணை வாங்குவது ஹலாலா, ஹராமா, மக்ரூஹா, மக்ரூஹ் தஹ்ரீமா...?

ஹலாலாக இருந்தால் இந்த கட்டுரையே தேவையில்லை, ஒதுக்கித்தள்ளி விடுங்கள்.

ஹராமாக இருந்தால், 'அதை' ஒட்டு மொத்தமாக, இது ஹராம்தான் என்று தெள்ளத்தெளிவாக அறுதியிட்டுக் கூற தயக்கம் ஏன்?

ஹராமென்று முடிவெடுக்கும் பட்சத்தில் எந்த அடிப்படையில்; மார்க்க அறிஞர்களால் இதுபோன்ற திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகின்றன? ]

வரதட்சணைப்பற்றி கவலைப்படாத பெற்றோர்களில்லை, பேசாத தலைர்களில்லை, எழுதாத பத்திரிகைகளில்லை. ஆனால் ஏதோ கடலில் பெருங்காயத்தை கரைத்தது போன்று மிகவும் குறைந்த அளவுக்குத்தான் தடுக்க முடிந்ததே தவிர அதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட முடியவில்லை என்பதுதான் உண்மை. எப்போதுமே வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்ற சமுதாயம்தானே நாம்!

சொல்வதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது! அனைத்திற்கும் அல்லாஹ்வின் அருட்கொடையாக, மானிட சமுதாயம் அத்தனைக்கும் வழிகாட்டியாக, எல்லாவற்றிர்க்கும் முன்னுதாரணமாக விளங்கும் எம்பெருமானார் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனையை பின்பற்ற வேண்டிய சமுதாயம், நமது நாட்டில் கடந்த சில தலைமுறைகளாக வரதட்சணையின் கோரப்பிடியில் சிக்கி இருப்பதைப் பார்க்கும்போது வரதட்சணைப்பற்றி இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஒரு தெளிவான பார்வை நமது சமூக மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை என்றே தோன்றுகிறது.

ஏன் மக்கள் உள்ளங்களில் அழுத்தமாகப் பதியவில்லை?!

Read more...
 
பெண்கள் பற்றி புராணங்கள்! Print E-mail
Thursday, 07 June 2012 07:01

பெண்கள் பற்றி புராணனங்கள்! 

பெண்கள்-எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடையாத, நம்பத்தகாத, சாக வேண்டிய, கழுதை போன்ற நிலையற்ற புத்தி படைத்த, கெட்ட பிறப்பு வேறு எதுவுமில்லை.

பெண் குலத்தை இழிவு படுத்துவதில் மகாபாரதமும், காவியங்களும் சிறிதும் பின் வாங்கவில்லை.

புரபசர் இந்திரா எம்.ஏ., (சாஸ்திர காவ்ய திரு.வித்யாலங்கார் எம்.ஓ.எல்., முதலிய பட்டம் பெற்றவர்) எழுதிய பழைய இந்தியாவில் பெண்கள் நிலை என்னும் புத்தகத்தில் 11-ஆம் பக்கம் முதல் 26- ஆம் பக்கத்திற்குள் உள்ளவற்றிலிருந்து...

அதாவது அவர்கள் பெண்களைப் பற்றி இந்து மத ஆதாரங்களான வேத சாஸ்திரங்கள் புராண இதிகாசங்கள் ஆகியவைகளிலும், பண்டைய அரசு நீதியிலும் காணப்படுவதைத் தொகுத்துக் குறிப்பிட்டிருப்பதாவது:

1- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 8-3-17) பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள். அவர்கள் நம்பத்தகாதவர்கள்

2- ஊர்வசி புரூரவ முனிவருக்குச் சொன்னது: (ரிக்வேதம் - 10-95-10) பெண்கள் நட்பு நீடித்ததல்ல. அவர்கள் கழுதைப்புலியின் தன்மையுடையவர்கள்.

Read more...
 
தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய பார்வை Print E-mail
Wednesday, 05 June 2013 06:26

தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய பார்வை

இந்நாட்டு சமய இலக்கியங்கள் அனைத்துமே பெண்களின் கண்ணீர் காவியங்கள். கணவன் என்னதான் கொடுமை செய்தாலும் அதை பொறுமையுடன் சகிப்பதுதான் இறைபக்திக்கு நெருக்கம் என்று போதித்துள்ளன.

பஞ்சபாண்டவர்கள் தம் தாயின் உபதேசத்தை தவறாக புரிந்து, அதாவது... கொண்டுவந்த பிச்சையை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை, உங்களோடு இருக்கும் பெண்ணை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பொருள் எடுத்து, ஒரு பெண்ணை ஐவர் மணந்து அவளுக்கு பத்தினி(!) பட்டமளித்த விளக்கங்கள் அனேகம்.

ஓநாய்களின் அன்பு எப்படி உண்மையில்லாததோ அதே போன்று பெண்களின் அன்பும் உண்மையில்லாதது. உலகத்து மாந்தர் பெண்களை பெண்களை நம்ப வேண்டாம். (தேவி பாகவதம்)

ஆற்றையும் காற்றையும் நம்பலாம். கோபமத யானையை நம்பலாம். சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திண்டாடுவீரே..... (இந்து சமய சான்றோர்)

தொல்காப்பியம் காலத்தில் ஒருவன் எத்துனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெண்களைப் போகப் பொருளாக வருணிக்கின்றது. தொல்காப்பியத்தின் கற்பு இயல் பிரிவில் (பக்கம் 46) பரத்தையர் பிரிவினை என்று பெண்கள் ஆண்களின் வடிகால்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காதற்பரத்தை, கற்பரத்தை, சேரிபரத்தை, காமகிழத்தி என்று பிரித்து ஆண்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் செல்வதை அனுமதிக்கிறது.

ஆண்கள் நடத்தும் காமலீலைகளை, விபச்சார வெறித்தனங்களைப்பற்றி வாய் திறக்காமல் பெண்களுக்கு மட்டும் கற்பு நெறி போதிக்கிறது தொல்காப்பியம். (களவியல்)

சங்க காலத்திலும் இதே நிலைதான் பெண்கள் தங்கள் வாழ்வின் அடிப்படை தேவையான துணை ஆடவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து நின்றார்கள். அரசகுல பெண்களுக்கும் இதே நிலைதான் என்று புறநானூறு கூறுகிறது.] 

Read more...
 
பெண்கள் மீதான வன்முறை: முதல் எதிரி அரசுதான்! Print E-mail
Friday, 11 October 2013 21:16

o  பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடும் முதன்மை எதிரி யார்?

o  நீதித்துறையும் மையப் புலனாவுத்துறையும் பெண்களைப் பாதுகாக்குமா?

o  பெண்களுக்கு எதிராக நிற்கும் ஒட்டுமொத்த அரசாங்க அமைப்புகள்

o  ஓட்டுக்கட்சிகளின் யோக்கியதை என்ன?

o  பாலியல் வன்முறைக்கு எதிராக ஜனநாயகப் புரட்சி தேவை!

Read more...
 
ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்! Print E-mail
Sunday, 03 February 2013 17:51

ஆண்களை அடக்கும், இஸ்லாத்தின் பெண்களுக்கான உரிமைகள்!

இஸ்லாத்தை சாராதவர்களின் பார்வையில் இஸ்லாம் என்பது விவாதத்திற்குரிய விஷயமாகவே இருந்துவருகிறது. அப்படிபட்ட விமர்சகர்கள் எடுக்கும் முதல் ஆயுதம் 'இஸ்லாத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுகிறார்கள்' என்பதே...

இந்த ஆயுதம் உண்மையில் கூரிய கத்தியா அல்லது அட்டை கத்தியா   என தெரிந்துக்கொள்ள வேண்டுமானால், இறைவனின் கட்டளைகள் இறங்கிக்கொண்டிருந்த அந்த ஆரம்ப காலகட்டத்தில்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பார்வையின் கீழ் வாழ்ந்த இஸ்லாமியப் பெண்மணிகளின் நிலையை பார்ப்பது சரியான அணுகுமுறையாக இருக்கும். சில இடங்களில் இஸ்லாமிய ஆண்கள் எல்லாம் பாவம் என சொல்ல வைக்கும் :-) மேலும்  எந்த இடங்களில் தான் (?) பெண்கள் இழிவாக நடத்தப்பட்டார்கள் என்று புரியும்! அல்லது எவ்விதத்தில் இஸ்லாமிய பெண்கள் குறைந்தவர்கள் என்ற உண்மை தெரியவரும் இன்ஷா அல்லாஹ்!

இன்றைய காலகட்டத்தில் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு தான் வீட்டிற்கு திரும்புகிறான். ஆனால் அவன் மனைவியோ காலை முதல் இரவு  தூங்க போறதுக்குமுன் பாத்திரம் கழுவுற வரைக்கும் மிஷின்னா செயல்படணும். இது தான் இன்றைய 99 சதவீத பெண்களின் நிலை. ( மிச்சம் 1 சதவீதம்  ஆளுங்க அதிஷ்ட்டக்காரங்களா இருப்பாங்க... கண்டுக்கவேண்டாம் விட்டுதள்ளுங்க :-)  பெண்ணினத்திற்காக எழுதப்படாத  இந்த 'மாடா உழைக்கணும்' விதியில்  இன பாகுபாடே கிடையாது! இஸ்லாமும் அதையே தான் சொல்கிறது என்கிறீர்களா? ம்ம் ஆமா.. ஆனா இல்ல :-)

Read more...
 
பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய வழிமுறையே தீர்வு Print E-mail
Sunday, 17 February 2013 15:32

பெண்களின் பாதுகாப்பிற்கு இஸ்லாமிய வழிமுறையே தீர்வு

[ புதுவலசை அல் மஸ்ஜிதுல் ஜாமியா பள்ளியில் 04-01-2012 அன்று ஜும்ஆவில் ஆலிம் சகோதரர் அஹமது அமீன் மிஸ்பாஹி அவர்கள் ''தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பாலியல் வன்முறைகளுக்கும், முறைகேடுகளுக்கும் இஸ்லாமிய கொள்கைகளை பின்பற்றுவது தான் சரியான தீர்வு'' என்ற அடிப்படையின் தலைப்பில் நிகழ்த்திய உரையாகும் இது.]

இக்கால பெண்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி சஹாபி பெண்களின் வரலாறுகளை, நமது காலங்களில் தங்களது கண்ணியத்தை பாதுகாக்க இஸ்லாத்தை கேடயமாக பயன்படுத்திய சகோதரிகளின் வாழ்க்கையின் உதாரணங்களை மேற்கோள்காட்டி தெளிவான ஆதாரங்களுடன் கூடிய விழிப்புணர்வு உரை மிகவும் சிறப்பாகவும், இன்றைய காலகட்டத்திற்கு அவசியமானதாகவும் இருந்தது.

இன்றைய சூழ்நிலையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என்பதனை சமீபகாலமாக வந்து கொண்டிருக்கும் செய்திகள் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. அரசாங்கம் கூறும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது ஒரு கண்துடைப்பே என்ற எண்ணத் தோன்றுகிறது. ஆனால் இன்னும் பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை. இன்று நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகள் அதற்கு உதாரணம்.

Read more...
 
தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை Print E-mail
Tuesday, 28 October 2014 10:55

தங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை

[ விரிவான ஆய்வுக்கட்டுரை ]

6000 வருடங்களுக்கு முன்பாக மனிதன் கண்டெடுத்த முதல் உலோகமானது தங்கம் என்று வரலாற்றுத் தகவல்கள் சொல்கின்றன. இரும்புத்தாதுவும், தாமிரமும் (செம்பு) மனித இனத்திற்கு மாபெரும் பயனை அளித்ததாக சொல்லப்பட்டாலும், அதற்கும் முன்னறே கண்டுபிடக்கப்பட்ட உலோகம் தங்கம். அவ்வுலோகத்தின் தன்மையும், மஞ்சள் நிறமும், அதன் மீது ஏற்றிவைக்கப்பட்ட மதிப்பும் காலம் காலமாக அதன் மீது மாபெரும் நாட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

குறிப்பாக பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு மன்னராட்சி முறை ஏற்பட்ட பின்பு தங்கம் மற்றும் இதர இரத்தினங்கள் ‘அரச’ மரியாதை பெற்று பின்பு மதங்களின் ஊடுருவலால் (இந்தியச் சூழலில் பார்ப்பனிய ஊடுருவலால்) ‘புனிதத் தன்மை’ ஏற்றிவைக்கப்பட்டது. 

அரச நாணையம் உள்ளிட்ட வடிவங்களில் புழங்கி வந்த தங்கமானது ஒரு காலக் கட்டத்திற்குப் பிறகு வேறு உலோகங்களிற்கு மாற்றம் பெற்றது.  மூன்று தலைமுறைக்கு முன்னர் 60 ரூபாய்க்கு பவுன் வாங்க முடிந்தக் காலம் போய் ஒரு கிராம் 500 ரூபாய் என்ற அளவை 9 அல்லது 10 வருடங்களுக்கு முன்னர் எட்டியது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தங்கத்தின் விலை பன்மடங்காக உயர்ந்து 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 2564 ரூபாய் ஐ எட்டியுள்ளது. ஏன் இந்த திடீர் விலையேற்றம்?

Read more...
 
என்னைக் கவர்ந்த இஸ்லாம்! Print E-mail
Wednesday, 22 December 2010 09:32

[ இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று!

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்''. (திருக்குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.'' (திருக்குர்ஆன் 3:102)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!'' (திருக்குர்ஆன் 3:200)]

Read more...
 
ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1) Print E-mail
Saturday, 24 November 2012 07:17

ஹிந்துத்துவாவாதிகள் முஸ்லிம்களை ஏன் வெறுக்கின்றனர்? (1)

  அ.மார்க்ஸ் பதில்   

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து கோவில்களை சிதைத்தார்களா?

இந்துக்கள் மீது 'ஜிஸியா' என்னும் தண்டனை வரி? மத மாற்றம்?

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முஸ்லிம் லீக் கட்சி காரணம்?

போன்ற கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார், பேராசிரியர் அ.மார்க்ஸ்.

கேள்வி - பதில் தொகுப்பு:

இந்த நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர். வந்தேறிகளுக்கு வக்காலத்து வாங்குவதுதான் உங்கள் நோக்கமா?

வரலாற்று நூல்கள் உங்களுக்கு அப்படிப் போதித்துள்ளன. ஆனால் வரலாற்றை ஆழமாக யோசித்துப் பார்த்தோமானால் இன்று இஸ்லாமியரை அந்நியர் எனச் சொல்லும் பலரும் ஏதோ ஒரு காலத்தில் இங்கே வந்து குடியேறியவர்கள்தான் என்பது விளங்கும். வடமொழி வேதங்களில் (கி.மு. 1500-கி.மு.500) 'தஸ்யு'க்கள் என்னும் உள்நாட்டு மக்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் படை எடுத்து வந்த ஆரிய மொழி இனத்தவரால் அடிமையாக்கப்பட்டார்கள். இந்த ஆரீயர்கள் ரிக் வேதக் காலத்தில் கால்நடை வளர்க்கும் மேய்ச்சல் இனத்தவராக ஈரான் வழியாக இந்தியாவில் புகுந்து இங்கிருந்த விவசாய மக்களுடன் கலந்து, உள்நாட்டுப் பழங்குடியினரை அடிமையாக்கிச் சூத்திரர்களாகவும், தீண்டத்தகா தவர்களாகவும் ஆக்கினார்கள்.

ரஜபுத்திரர்கள் கூடத் துருக்கியர்கள் குடியேறிய காலத்தில் இங்குக் குடியேறியவர்கள்தான். சௌகான், பரிகரர், சோலங்கி எல்லாம் வந்தேறிகள்தான். எனில் இஸ்லாமியரை மட்டும் வந்தேறிகள் எனச் சொல்வது என்ன நியாயம்? "ஆரியர் வருகை" எனச் சொல்லும் நம் பாட நூல்கள் "இஸ்லாமியர் படை எடுப்பு" எனச் சொல்வது பிஞ்சு மனத்தில் வகுப்பு வாதத்தை பதிப்பதில்லையா? இங்குள்ள கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் இந்த நாட்டுக் குடிமக்களாக இருந்து மதம் மாறியவர்கள்தான். யாருக்கும் வக்காலத்து வாங்குவதல்ல நமது நோக்கம். அரசியல் நோக்கில் இங்கே பரப்பப்பட்டுள்ள மதவெறி பல்லாயிரக்கணக்கானோர் கொன்று குவிக்கப்படுவதற்குக் காரணமாகியுள்ளது.

Read more...
 
ஷவ்வால் மாத ஆறு நோன்பு Print E-mail
Saturday, 19 September 2009 17:16

ஷவ்வால் மாத ஆறு நோன்பு

       இப்னு ஹனீஃப்       

ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம்.

இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும். எனினும் இந்த ஷவ்வால் நோன்பைக் கடமையான நோன்பு என்று கருதக் கூடாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் "எவர் ஒருவர் ரமளான் மாதத்தின் நோன்பையும் நோற்று பின்னும் அதைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்பையும் நோற்கின்றாரோ (அவர்) வருடம் முழுவதும் நோன்பு நோற்றதற்குச் சமம்". (ஆதாரம்: முஸ்லிம்)

ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி அறியாமல், அதனையும் நோற்று ஆண்டு முழுவதும் நோன்பு நோற்ற நன்மையைப் பெறுவதில் கவனம் செலுத்தத் தவறி விடுகின்றோம்.

Read more...
 
தொழுகை ஓதுதலை ஒலிபரப்ப வேண்டாம்! Print E-mail
Saturday, 13 November 2010 11:20

பள்ளிவாசலில் தொழுவதை வெளி மைக்கின் மூலம் ஒலிபரப்ப வேண்டாம் என்று தமிழகத்தின் மூத்த ஆலிம்களில் ஒருவரான மவ்லவீ, டி.ஜே.எம்.ஸலாஹுத்தீன் ரியாஜி அவர்களைத் தலைவராகக் கொண்ட நெல்லை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை கேட்டுக்கொண்டுள்ளது.

உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய தீர்மானம். ஒவ்வொரு மஹல்லாவும் பொறுப்புணர்வுடன் அதை ஏற்று நடப்பது மிகவும் அவசியம் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை.

நோன்பு கால தராவிஹ் தொழுகைக்கு தெருவுக்குத்தெரு மைக்கை கட்டி வயோதிகர்களையும், நோயாளிகளையும், பெண்களையும், குழந்தைகளையும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவிகளையும் பற்றி சிறிதுகூட கவனத்தில் கொள்ளாமல்; தொல்லைக்குள்ளாக்கும் செயலை ஏதோ நன்மையான காரியமாக் கருதி அதை நடைமுறைப்படுத்தி வருவது அமைதி மார்க்கமான இஸ்லாம் காட்டித் தந்த வழியல்ல.

கூட்டுத்தொழுகை என்பது பள்ளிவாசலுக்கு வருகின்றவர்களுக்கு மட்டுமே. அதை வெளி மைக் மூலமாகவும் தெருவுக்குத்தெரு குழல் ஒலிபெருக்கி மூலமாகவும் ஒலிபரப்பும்போது வீட்டிலுள்ள பெண்கள் தனித்து தொழும்போது அது எவ்வளவு இடையூறை விளைவிக்கும் என்பதை எவரும் கருத்தில் கொண்டதாகத் தெரியவில்லை.

Read more...
 
உறங்கும் மனிதனே விழித்தெழு! - மகாகவி அல்லாமா இக்பால் Print E-mail
Thursday, 02 February 2012 09:10

MUST  READ

  முஸ்லிம்களே! முஸ்லிம்களாக வாழுங்கள்! 

[ மவ்டீகத்தில் மூழ்கியிருக்கும் முஸ்லிமே! உன்னை தூய்மையானவனாக ஆக்கிக் கொள்!

‘புறப்படு மகனே! இஸ்லாமிய புனிதப் பாதையில் புறப்படு! உனது உண்மையான நிலைமையை உலக மக்கள் இன்னும் அறிந்து கொள்ளவில்லை. இவ்வையகத்தின் வாழ்க்கைக்கு முன்மாதிரயாக இருந்து அதைச் சீர்திருத்த நீ இன்னும் தேவைப்படுகிறாய்.

இளைப்பாறும் நேரம் உனக்கு எங்கிருக்கிறது? நீ செய்ய வேண்டிய பணி இனியும் எவ்வளவோ இருக்கிறதே! ஏகதெய்வக் கொள்கையின் மெய்யொளியைப் பூரணமாக்கும் சேவைக்காக உன்னுடைய தூண்டுதல் இவ்வுலகினுக்கு இன்னும் தேவையாய் இருக்கிறதே!

உனது ஊக்கத்தின் இயக்கத்தாலே உலகவாழ்க்கை பிரகாசமடைய வேண்டும். இறைவனுடைய கலீஃபாவாக – பிரதிநிதியாக உலகில் நீயே பிரகாசிப்பாய்.’ – மகாகவி, அல்லாமா இக்பால் ரஹ்துல்லாஹி அலைஹி ]

Read more...
 
சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்... Print E-mail
Thursday, 03 February 2011 08:59

சமூக ஒற்றுமைக்காக ஏங்கும் இதயங்கள்...

இஸ்லாமிய சமுதாயத்தின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்கும் போது, அல்லாஹ்வின் இறுதி தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தோடு ஒன்றுபட்ட, ஒரே சமுதாயம் என்ற கட்டமைப்பு முற்றுப் புள்ளி பெற்றுவிட்டது. நபிகளார் இந்த உலகைப் பிரிந்த நேரத்திலிருந்தே பிரிவினை சக்திகள் சமூகத்திற்குள் ஊடுருவி பிளவு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்த சமூகம் ஒன்று பட்டுவிடக் கூடாது என்பதில் யூதர்களும், கிருத்தவர்களும் குறியாக இருந்தனர். அவர்கள் எவ்வாறு வேதம் அருளப்பட்டபின்னரும் தங்களுக்குள் வேற்றுமையை ஏற்படுத்தி சிதறிப்போனார்களோ அதைப்போன்றே மற்ற சமூகங்களும் ஆகிவிட வேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

அவர்களுடைய இந்த சூழ்ச்சியை முறியடித்துக் காட்ட வேண்டும் என்ற நோக்குடன் எந்தெந்த காலத்திலெல்லாம் இஸ்லாமிய சமுதாயம் ஓர் அணியில் ஒன்று சேரவேண்டும் என்ற முயற்சியில் இறங்கியதோ அப்போதெல்லாம் அந்த முயற்சியைத் தகர்ப்பதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் முழு முயற்சியோடு செயல்பட்டனர். அதில் அவர்கள் வெற்றியும் கண்டார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 96 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article