வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களிலும் நோன்பு நோற்கக் கூடாது! Print E-mail
Tuesday, 15 October 2013 12:06

இரு பெருநாட்களிலும் நோன்பு வைக்கக் கூடாது, அது போல் ஹஜ் பெருநாளைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய தினங்களிலும் நோன்பு வைக்கக் கூடாது.

o  "அய்யாமுத் தஷ்ரீக்" (எனும் ஹஜ்ஜுப் பெருநாளுக்கு அடுத்த மூன்று நாட்களான துல்ஹஜ் 11, 12, 13 ஆகிய) நாட்கள், உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: நுபைஷா பின் அம்ர் பின் அவ்ஃப் அல்ஹுதலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2099)

o "(மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா), (மதீனாவிலுள்ள) மஸ்ஜிதுந் நபவீ, (ஜெரூசலேமிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1189)

o "மஸ்ஜிதுல் ஹராமில் தொழும் ஒரு தொழுகையானது மற்ற பள்ளிகளில் தொழும் இலட்சம் தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது, எனது பள்ளியில் (மஸ்ஜிதுந் நபவீ) தொழும் ஒரு தொழுகையானது (மற்ற பள்ளிகளில் தொழும்) ஆயிரம் தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது, மஸ்ஜிதுல் அக்ஸாவில் தொழும் ஒரு தொழுகையானது (மற்ற பள்ளிகளில் தொழும்) ஐநூறு தொழுகைகளுக்கு ஈடான நன்மையுடையது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ 1821)

Read more...
 
ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் (1) Print E-mail
Thursday, 26 November 2009 19:27

 

    ஹஜ்ஜுப் பெருநாள் சட்டங்கள் (1)     

الله أكبر الله أكبرلااله الا الله والله أكبر الله أكبر ولله الحمد

''ஈத்'' என்னும் அரபுச் சொல்லுக்கு திரும்பத் திரும்ப வருதல் என்பது பொருளாகும்.பெருநாள் ஆண்டு தோறும் திரும்பத் திரும்ப வருவதால் இப்பெயர் பெற்றது.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மதீனா நகர் வந்தபோது மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை வினவியபோது நாங்கள் பண்டு தொட்டு விளையாடுவதற்காகவும்,பொழுது போக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்றார்கள். அப்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்,

இரு பெரு நாட்கள்

''அல்லாஹ் அவ்விரண்டு (திருவிழாக்களு) க்கும் பதிலாக அவ்விரண்டைவிடச் சிறந்த திருநாட்களை பதிலாக வழங்கியுள்ளான். அவை: ஒன்று ஈதுல் அள்ஹா! (குர்பானி வழங்கும் தியாகத் திருநாள்!) மற்றொன்று ஈதுல் ஃபித்ர் ! (ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள்!) என்று அறிவித்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹுதெரிவித்தார்கள். (ஆதாரம் : அபூ தாவூது நஸயீ)

Read more...
 
லப்பைக்கல்லாஹும்ம லப்பைக், Print E-mail
Wednesday, 25 November 2009 14:06

லப்பைக்கல்லாஹும்ம லப்பைக்,

லப்பைக்க லா ஷரீகலக்க லப்பைக்,

இன்னல் ஹம்த வந்நிஃமத லகவல் முல்க்,

லா ஷரீகலக்.

துல்ஹஜ் 8 ஆம் நாள்:

துல்ஹஜ் 8 ஆம் நாள் தர்வியா நாளாகும். யார் தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்ய நாடியிருக்கின்றார்களோ அவர்கள் மீண்டும் இஹ்ராம் கட்டிக் கொண்டு, ஹஜ்ஜுக்கான கிரியைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மீகாத் எல்லையில் எவ்வாறு இஹ்ராம் கட்டிக் கொண்டீர்களோ, அதற்கு என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடித்தீர்களோ, அதைப் போலவே இப்பொழுது இஹ்ராம் கட்டிக் கொள்ளும் பொழுதும் கடைபிடிக்க வேண்டும். இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். மக்கா வாசிகளும் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

Read more...
 
'கஅபா' உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா Print E-mail
Sunday, 20 September 2015 06:40

'கஅபா' உலக முஸ்லிம்களின் ஒரே கிப்லா

அல்லாஹ் கூறுகிறான், ''நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உமது முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் திசையில் திருப்புவீராக! எங்கே நீங்கள் இருந்தாலும் உங்கள் முகங்களை அதன் திசையிலேயே திருப்பிக் கொள்ளுங்கள். அவர்களில் அநீதி இழைத்தோரைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்தச் சான்றும் இருக்கக் கூடாது என்பதும் என் அருட்கொடையை உங்களுக்கு நான் முழுமைப் படுத்துவதும், நீங்கள் நேர்வழி பெறுவதுமே இதற்குக் காரணம். (அல்குர்ஆன் 2:150)

முதல் ஆலயம் அல்லாஹ் கூறுகிறான், ''மனிதர்கள் (அல்லாஹ்வை வணங்குவதற்கு) அமைக்கப்பட்ட முதல் வீடு 'பக்கா' (மக்கா)வில் உள்ளது தான். அது பரகத்துச் செய்யப்பட்டதாகவும், அகிலத்தாருக்கு நேர்வழியாகவும் இருக்கிறது.'' (அல்குர்ஆன் 3:96)

'கஅபா' ஆலயத்தை முதன் முதலில் கட்டியவர்கள் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவார்கள். அதை புணர் நிர்மாணம் செய்தவர்கள் நபி இபுறாஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் முதலில் கஅபாவைக் கட்டினார்கள். பிறகு 40 வருடங்களுக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் உள்ள ''மஸ்ஜிதுல் அக்ஸா''வைக் கட்டினார்கள். இதற்குப் பின்வரும் செய்தி சான்றாக உள்ளது.

அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ''நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பூமியில் முதலில் அமைக்கப்பட்ட பள்ளி எது? எனக் கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல் மஸ்ஜிதுல் ஹராம்' (கஅபா) என்று கூறினார்கள். பிறகு எது? என்றேன். 'அல் மஸ்ஜி துல் அக்ஸா' என்று கூறினார்கள். இந்த இரண்டிற்கும் மத்தியில் எத்தனை (வருடங்கள் இடைவெளி?) என்று கேட்டேன். நாற்பது வருடங்கள் என்று கூறினார்கள். நூல்: புகாரி (3366)

Read more...
 
தவாஃபில் விஞ்ஞானம்! Print E-mail
Wednesday, 01 February 2012 08:39

கஃபாவை நல்லடியார்கள் வலம்வரும் கண்கொள்ளாக் காட்சி

தவாஃபில் விஞ்ஞானம்!

 டாக்டர் பி. ஹாமிது அப்துல் ஹை, மதுரை  

‘தவாஃப்’ என்ற சொல்லின் பொருள், ஒரு பொருளை அதன் நான்கு புறங்களிலும் சுற்றுதல் என்பதாகும். புனிதக் கஃபாவான அல்லாஹ்வின் திருவீட்டை ஏழு முறைச் சுற்றி முடிப்பது ஒரு தவாஃப் ஆகும். உம்ரா, ஹ்ஜ்ஜு முதலியப் புனிதப்பயணங்களை மேற்கொள்ளும் பேறு பெற்றவர்கள் கஃபாவைச் சென்றடைந்தவுடன் நிறைவேற்றும் கட்டாயக் கடமையாகும்.

கஃபாவைத் தவிர, உலகிலுள்ள இறையில்லங்கள் அனைத்திலும் ஒருவர் நுழைந்தவுடன் அதன் காணிக்கைத் தொழுகையான தஹிய்யத்துல் மஸ்ஜித் (நஃபில்) தொழுது கொள்ள வேண்டும். ஆனால், உலகின் முதல் இறையில்லமாம் கஃபாவை தரிசிப்பவர்கள் ‘தவாஃப்’ செய்வதே அதற்குரிய காணிக்கையாகும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்பு நிலவிய அறியாமைக் காலத்தில் அரேபிய மக்கள் கஃபாவை நிர்வாணமாக வலம் வரும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். ஆனால், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமறையின் 9 ஆவது அத்தியாயமான சூரத்துத் தவ்பா (பச்சாதாபம்) அருளப்பட்ட பின்பு (அல்குர்ஆன் 9:17) ஹளரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பி அந்த ஆபாச வழக்கத்தை தடுத்து நிறுத்தி தடைசெய்து விட்டார்கள்.

Read more...
 
ஓ கஃபாவே! Print E-mail
Monday, 03 August 2015 07:44

ஓ கஃபாவே!

  முஹம்மது சிராஜுத்தீன், கிளியனூர்  

உனக்குத்தான் எத்தனை சிறப்பு. உலகின் அனைத்து முஸ்லிம்களும் தொழுகையின்போது உன்னை நோக்கியே தொழுகின்றனர். நிற இன பேதமின்றி ஏழை பணக்காரன் பேதமின்றி உன்னை நோக்கி வருகின்றனர்.

நீ வல்ல இறைவனால் அபய பூமி என்றும் அறிவிக்கப்பட்டாய்.அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் நீ இன்றளவும் அபயபூமியாகவே இருக்கிறாய். 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் நீ இருந்து வருகிறாய்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஹஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக நீ அமைந்திருக்கும் மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின்அதீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ 3860).

மக்காவை நோக்கி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இச்சொற்கள், உன் சிறப்பை மேலும் அபீஸீனிய மன்னனின் ஆட்சியில் ஏமன் நாட்டின் பிரதிநிதியாக செயல்பட்டு வந்த ஆப்ரஹா என்பவன் கி.பி. 571-ல் பிரமாண்டமான யானைப் படை ஒன்றைத் தயார் செய்து உன்னை இடிப்பதற்காக அனுப்பிவைத்தான், அதை அழிப்பதற்காக அபாபீல் என்ற பறவைகளின் சொண்டுகிளில் சூடேற்றப்பட்ட கற்களை கவ்விக்கொண்டு வரச் செய்து, அந்தப்படையை மெண்டு துப்பிய வைக்கோலைப்போல் அல்லாஹ் ஆக்கினான்.

இங்கு என்னால் ஒரு கேள்வி எழுவதை தடுக்க முடியவில்லை. உனக்கு ஏன் இத்தனை சிறப்பு. படைத்த இறைவனே உன்னை நேரடியாக பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன?

Read more...
 
ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை Print E-mail
Thursday, 12 November 2009 08:29

ஹாஜிகளுக்கு ஒரு டாக்டரின் அறிவுறை

     Dr.ஜெ.முஹ்யித்தீன்அப்துல் காதர் MBBS, MS     

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள். பல்வேறு தயாரிப்புகள், பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. ஆனால், மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர். அது, உடல்நலம்!

ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ''உடல்நலம்'' குறித்ததாகும். ஏனெனில், ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம்.

பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ''ஹஜ்'' செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன. இதனைத் தவிர்த்து ''ஆரோக்கியமான ஹஜ்'' ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.

1. ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்! எப்போது ஹஜ்ஜிற்காக ''விண்ணப்பிக்கிறார்களோ'' அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில், நடைப்பயிற்சிதான்.

Read more...
 
அடக்கத்தின் உறைவிடம் அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா Print E-mail
Thursday, 24 June 2010 06:56

அஸ்மா பின்த் அபீ பக்ர் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்; ''என்னை ஜுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.

அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.

(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அழைத்தார்கள்.

என்னை தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக, 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன்.

Read more...
 
ஹஜ்ஜின் நடைமுறை விபரங்கள் Print E-mail
Saturday, 29 November 2008 21:27

    துல்ஹஜ் 8 ஆம் நாள்:    

துல்ஹஜ் 8 ஆம் நாள் தர்வியா நாளாகும். யார் தமத்துஃ முறைப்படி ஹஜ் செய்ய நாடியிருக்கின்றார்களோ அவர்கள் மீண்டும் இஹ்ராம் கட்டிக் கொண்டு, ஹஜ்ஜுக்கான கிரியைகளுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மீகாத் எல்லையில் எவ்வாறு இஹ்ராம் கட்டிக் கொண்டீர்களோ, அதற்கு என்னென்ன விதிமுறைகளைக் கடைபிடித்தீர்களோ, அதைப் போலவே இப்பொழுது இஹ்ராம் கட்டிக் கொள்ளும் பொழுதும் கடைபிடிக்க வேண்டும். இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும். மக்கா வாசிகளும் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ள வேண்டும்.

    இஹ்ராமிற்குப் பின்,  

லப்பைக்கல்லாஹும்ம பி ஹஜ்

என கூறிக்கொள்ள வேண்டும்.

பொருள் : இதோ நான் வந்து விட்டேன், யா அல்லாஹ்! ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்காக!

Read more...
 
40 - ஹதீஸ் குத்ஸிகள் (4) Print E-mail
Tuesday, 13 July 2010 12:08

31. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

மன்னிக்கப்படுவார்கள் (முன் சமுதாயத்தில்) ஒரு மனிதன் தன் மீது அநீதி இழைத்தவனாக பெரும் பாவங்கள் செய்து கொண்டிருந்தான். மரணம் அவனை நெருங்கிய போது, தனது மக்களை அழைத்து, நான் மரணமுற்றவுடன் என்னை எரித்து தூளாக்கி, பின்பு எனது சாம்பலை கடலிலே பரவலாக வீசி விடுங்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீது ஆணையாக எனது அதிபதியிடம் நான் சிக்கினால் அவன் வேறு யாரையும் தண்டிக்காத அளவிற்கு என்னை தண்டித்து விடுவான். என கூறினான். அவனது மக்களும் அவ்வாறே செய்தனர்.

பின்பு அல்லாஹ் பூமியிடம் நீ விழுங்கியதை வெளிக்கொணர்ந்து விடு எனக் கட்டளையிட்டான். அம்மனிதன் மீண்டும் உருவாகி நின்றான். அல்லாஹ் அம்மனிதரிடம் கேட்டான், நீ செய்த அச்செயலை செய்யும்படி உன்னை தூண்டியது எது? அதற்கு அம்மனிதன்; அதிபதியே! உன்மீது எனக்குப் பயம் இருந்ததினால் (அவ்வாறு நான் செய்தேன்) என்று பதிலளித்தான். இதன் காரணமாக அல்லாஹ் அம்மனிதனுக்கு மன்னிப்பளித்தான். (நூல் : புகாரி, முஸ்லிம்)

32. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : (அல்லாஹ்வின்) அடியான் ஒருவன் பாவம் செய்துவிட்டு, அல்லாஹ்வே! என் பாவத்தை மன்னிப்பாயாக, என்று வேண்டினான்.

அல்லாஹ் : என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

பிறகு அவன் மீண்டும் பாவம் செய்துவிட்டு என் அதிபதியே! என் பாவத்தை மன்னிப்பாயாக என வேண்டினான்.அல்லாஹ் என் அடியான் பாவம் செய்து விட்டான். மேலும் அவன் பாவங்களை மன்னிக்ககூடிய அல்லது அவற்றுக்கு தண்டனை விதிக்ககூடிய ஒரு அதிபதியுள்ளான் என்பதை அறிந்துள்ளான். என்று சொன்னான்.

Read more...
 
கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா? Print E-mail
Sunday, 25 December 2011 07:37

கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?

இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரை

கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். (நூல்: திர்மிதீ)

உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (நூல்: முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும் பொதுவான விதியாகும்.

கடன் உள்ளவருக்கு ஹஜ் கடமை இல்லை என்பதையும் தாண்டி, கடனே இல்லாவிட்டாலும், ஹஜ்ஜுக்குச் சென்று வரும் பொருளாதார வசதியில்லாதவருக்கும் ஹஜ் கடமை இல்லை. அதாவது, கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றவில்லை என்பதற்கான கேள்விக்கு பொருளாதார வசதியற்றவர் உள்ளாக மாட்டார். ஹஜ் செய்வதற்கான பொருளாதாரம் அவரிடம் இல்லை; எனவே ஹஜ் செய்யவில்லை என்றாகிவிடும்.

ஒருவரின் ஹஜ் பயணத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் கடனும் உள்ளது. இப்போது உடனடியாகக் கடனை அடைத்து, ஹஜ் பயணத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும். மரணம் எப்பவும் சம்பவிக்கலாம் என்பதைக் கருத்தில் கொண்டு கடன் அடைக்கப்பட வேண்டும்.

Read more...
 
கணவனைப் பற்றிய 11 பெண்களின் இலக்கியச் சுவை நிறைந்த வர்ணனை! Print E-mail
Wednesday, 14 March 2012 08:25

கணவனைப் பற்றிய பதினோரு பெண்களின் இலக்கியச் சுவை நிறைந்த வர்ணனை!

[ முன்குறிப்பு: இது கதையோ கற்பனையோ அல்ல.   அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், நஸாஈ, திர்மிதீ ஆகிய நபிமொழி திரட்டில் பதிவு செய்யப்பட்ட உண்மையான  சம்பவம்.]

பொதுவாக மனைவிமார்கள் தங்கள் கணவரைப்பற்றி அடுத்தவர்களிடம் நிறை, குறைகளைச் சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்வது எல்லா நாடுகளிலுமுள்ள வழக்கம்தான். மனைவியிடம் நல்லவன் என்று நற்சான்றிதழ் கிடைப்பது லேசுபட்ட காரியமல்ல! ஆனால் தான் திருமணம் முடித்துக்கொண்ட அத்தனை மனைவிமார்களிடமும் மிகவும் சிறந்தவர் எனும் நற்சான்றிதழ் பெற்றவர்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களாகத்தான் இருக்க முடியும்.

ஒரு ருசிகரமான சம்பவத்தை இங்கு வாசகர்களுக்காக தருகிறோம். காரணம், இந்த சம்பவத்தில் சில கணவர்களின் சிறந்த அடையாளங்கள் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தை கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ரசித்துக்கேட்டு தன்னையும் ஒப்பிட்டுள்ளார்கள்.

ஆம், இதில் வரும் ஒரு கணவரை தனக்கு ஒப்பிட்டு அவரைப்போல் நானும் உனக்கு சிறந்த கணவன் என்று தனது அன்பு மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் பெருமையாக எடுத்துக்கூறியும் உள்ளார்கள். அதை அண்ணாரின் இல்லறத் துணைவியான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் அப்படியே ஏற்று ஆமோதித்துள்ளார்கள்.

Read more...
 
பிஸ்மில்லாஹ் உரத்துக் கூறுவீர்! Print E-mail
Wednesday, 25 April 2012 13:51

 

பிஸ்மில்லாஹ் உரத்துக் கூறுவீர்!

    மௌலானா முஸ்தபா ஷரீப் நக்ஷபத்தி    

[ ஹதீஸ் - தூங்கப் போகும் முன் பிஸ்மில்லாஹி கூறி நடவடிக்கைகளை மூடி வையுங்கள்.

காலையில் கண் விழித்தவுடன் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறி துவக்குவீர்.

அரிசி உலையில் போடும் முன் மகளிர் ‘‘பிஸ்மில்லாஹ்’’ கூறி போட வேண்டும்.

இண்டர்நெட், செல்போன், அன்றாட பழக்கம் பிஸ்மில்லாஹ் கூறுவதை ஒத்தி போடுகிறோம்.

தவ்ஃபீக். நல்லறம் சில நேரங்களில் உரத்துக் கூறுவீர். உறவினர்களும் பழக்கப்படுவர். பிள்ளைகளும் கற்றுக் கொள்வர்.

‘‘அல்ஹம்துலில்லாஹ்’’ கூறாவிடின் அந்த காரியம் தரித்திரம்.

இன்னொரு ரிவாயத், பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கினால் தரித்திரம் பிடிக்கும்.

வீட்டை விட்டு வெளியே வர, உள்ளே செல்ல தனித்தனி துஆ உண்டு. ஆனால் பிஸ்மில்லாஹ் பொது துஆ. ]

Read more...
 
திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (1) Print E-mail
Monday, 31 May 2010 07:37

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

''அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.'' (அல்குர்ஆன் 69:44)

''அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், 'இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்' என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்' என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 10:15)

Read more...
 
இல்லறம் இனிக்க! Print E-mail
Tuesday, 30 August 2011 11:02

இல்லறம் இனிக்க !

  பெண்களுக்கு :    

o உங்கள் துணைவருக்கு பிடிப்பது போல் உங்களை மாற்றிக்கொள்ளுங்க.

o அவருக்கு பிடித்த உணவுகளை சமைத்துக்கொடுங்க.

o பிடிவாத குணம் இருக்க கூடாது.

o வேலைக்கு போயிட்டு வரும் ஆண்களிடம் வீட்டுக்கு வந்தவுடன் படபடவென்று வீட்டில் நடந்த விசயங்களை உளர கூடாது..

o எந்த நேரத்தில் என்ன விசயம் பேசினாலும் பொறுமையுடன், இனிமையாகவும் அமைதியாகவும் எடுத்து சொல்லணும்.

o மாத கடைசியில் விலையுயர்ந்த பொருட்களை வாங்கி கேட்டு தார்சர் பண்ண கூடாது.

o எந்த ஒரு சூழ்நிலையிலும் இருவரும் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசக்கூடாது.

Read more...
 
திருமணம், காதல், டீனேஜ் பருவம் - ஒரு நேர்காணல் (1) Print E-mail
Monday, 04 July 2011 07:37

மிகச்சிறந்த ஆய்வுகளில் ஒன்று!

[ அல்லாஹ் பாலியல் உணர்வை பற்றும் நெருப்பாகவே படைத்துள்ளான். திருமணம் இன்றேல் அந்நெருப்பு உடலை, உள்ளத்தை, ஏன் சமூகத்தைக் கூட எரித்துவிடும்.

இறைவன் மனிதனுக்கு இரண்டு அடிப்படை உணர்வுகளை கொடுத்துள்ளான். ஒன்று தன்னைப் பாதுகாக்கும் உணர்வு. இவ்வுணர்வே அவனை சாப்பிடத் தூண்டுகிறது. மற்றது அவன் இனத்தைப் பாதுகாக்கும் உணர்வு. அதுவே அவனை இனவிருத்தி செய்யத்தூண்டுகிறது. இதில் முன்னையது நிறைவேறினால்தான் பின்னையது நிறைவேறும்.

மனிதன் எப்போது சாப்பிட வேண்டும் என்ற கேள்வியை நாம் எழுப்பினால் அவன் எப்போது மனம் முடிக்க வேண்டும் என்பதற்கான பதிலைக் கண்டுபிடிக்கலாம். எப்போது சாப்பிட வேண்டும் என்று கேட்டால் நீங்கள் பசிவரும்போது என்று கூறுவீர்கள். எனவே இச்சை ஏற்படும் போது மனிதன் திருமணம் முடிக்க வேண்டும் என்று நாம் கூறுவோம்.

பாலியல் பசியுள்ளவனின் நிறைவு அதை அடைவதிலேயே தங்கியுள்ளது. அவன் பெண்ணைப் பார்ப்பதாலும் பேசுவதாலும் அது நிறைவேறுமா! உணவைப் பார்ப்பதாலும் அதை முகர்வதாலும் பசி அடங்கிவிடுமா! அதுபோலத்தான் காதலும். காதலியின் அழகை கண்களால் பருகுவதாலோ அவள் குரலை காதால் கேட்பதாலோ அவன் பசி அடங்காது. அது பூட்டைத் திறப்பதிலேயே அடங்கும். அவ்வாறே காதலன் காதலியின் ஆடைக்காக காதலிக்க முடியாது. ஆடைக்காக காதலித்தால் அது நீங்கியதும் காதல் போய்விடும்.

15 வயதில் ஏற்படும் பாலியல் உணர்வை 30 வயதில் கொண்டுபோய்த் தீர்ப்பது நியாயம்தானா என்பதை சம்மந்தப்பட்டவர்கள் சிந்திக்க வேண்டும். இந்த வயதில் திருமணம் செய்வதை தடுக்கும் சமூகம் இவ்வுணர்வை கொழுந்துவிட்டெரியச் செய்யும் வழிமுறைகளைத் தூண்டியும் விட்டுள்ளது.

நிர்வாணப்படங்களும், ஆண் பெண் கலப்பு விளம்பரங்களும் தொடர்களும் அப்பாவி இளைஞனையும் யுவதியையும் என்ன செய்யும் என்பதை சமூகம் உணர்தல் வேண்டும். பல்கலைக்கழகத்திற்குச் சென்றாலும் அங்கும் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய வகையிலேயே கல்விமுறையும் அமைந்துள்ளது. கற்கை முடியும்வரை இவர்கள் இவ்வுணர்வைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு? படி, படி என்று கூறுவதால் மட்டும் பிரச்சினை தீர்ந்துவிடுமா?]

Read more...
 
படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதிகள்! Print E-mail
Sunday, 04 September 2011 09:31

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதிகள்!

குறட்டை விடுவது, அதிகாலையில் எழுந்து லைட் போடுவது, புரண்டு படுப்பது இதுபோன்ற சின்னச் சின்ன விஷயங்களில் சில விதிமுறைகளை பின்பற்றுங்கள்.. படுக்கை அறை இன்பமயமாகும், ரொமான்ஸ் அதிகரிக்கும் என்கின்றனர் குடும்பநல நிபுணர்கள்.

வீட்டில் உள்ள அறைகளில் பெட்ரூம் முக்கியமானது. தூங்கி ஓய்வெடுப்பதற்கு மட்டும் அல்ல.. மனதை ரிலாக்ஸ் செய்து மகிழ்வதற்கும் ஏற்ற அறை. குறிப்பாக தம்பதிகளுக்கு. ஆனால், அங்கும் சில சிரமங்கள், பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அதை பெரிதுபடுத்தாமல் சமாளிக்க பழகி கொண்டால் ரொமன்ஸ் அதிகரிக்கும். இல்லை என்றால் வாழ்க்கை வெறுப்பாகிவிடும் என்கின்றனர் குடும்ப நல நிபுணர்கள்.

படுக்கை அறை பழக்கவழக்கங்களில் தம்பதியர் இடையே வேறுபாடுகள் இருக்கும். இருவரில் ஒருவர் குறட்டை விடும் நபராக இருக்கலாம். இது மற்றவரின் தூக்கத்துக்கு இடைஞ்சலாக, எரிச்சலாக இருக்கும். சில எளிய வழிகளை பின்பற்றினால் பிரச்னையை சமாளிக்கலாம். நீங்கள் குறட்டை விடும் நபராக இருந்தால், ‘நாசல் ஸ்டிரிப்’ அணியலாம் அல்லது டாக்டரை சந்தித்து நிவாரணம் தேடலாம்.

Read more...
 
படைப்பின் தொழில் நுட்பம் (1) Print E-mail
Sunday, 17 January 2010 09:21

MUST READ

 பி.எஸ்.அலாவுதீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி  

இஸ்லாம்

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

Read more...
 
Islam in India Print E-mail
Sunday, 07 June 2015 21:48

Islam in India

Today, there are over 500 million Muslims throughout the Indian subcontinent (India, Pakistan, and Bangladesh), making it one of the largest population centers of Muslims in the world.

Since Islam first entered India, it has contributed greatly to the area and its people.

Today, numerous theories about how India came to be such a largely Muslim land exist. Politically, some (such as the Hindutva movement in India) try to make Islam seem foriegn to India, by insisting it only exists because of invasions by Arab and Persian Muslims. The truth, however, is far from that.

The Earliest Muslim Indians

Even before the life of Prophet Muhammad (Peace Be Upon Him) in the 600s, Arab traders were in contact with India. Merchants would regularly sail to the west coast of India to trade goods such as spices, gold, and African goods. Naturally, when the Arabs began to convert to Islam, they carried their new religion to the shores of India. The first mosque of India, the Cheraman Juma Masjid, was built in 629 (during the life of Prophet Muhammad) in Kerala, by the first Muslim from India, Cheraman Perumal Bhaskara Ravi Varma. Through continued trade between Arab Muslims and Indians, Islam continued to spread in coastal Indian cities and towns, both through immigration and conversion.

Read more...
 
தஜ்ஜால் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் (1) Print E-mail
Wednesday, 14 November 2012 21:23

தஜ்ஜால் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் (1)

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம். முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 

மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன் 'கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, 7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057)

Read more...
 
Making the most of the 10 blessed days of Dhul-Hijjah Print E-mail
Friday, 26 September 2014 06:12

Making the most of the 10 blessed days of Dhul-Hijjah

By His wisdom, Allah Ta’ala gave preference to some places and times over others.

For Muslims, Friday is the best day of the week.

Ramadan is the best month of the year, “Laylat al-Qadr” is the best night in Ramadan.

The day of “Arafah” is the best day of the year. Likewise the first ten days of the month of “Dhul-Hijjah” are the blessed days for Muslims.

Allah Ta’ala says in the Quran what means: {By the daybreak, by the ten nights, by the even and the odd, by the passing night – is this oath strong enough for a rational person?} (Al-Fajr 89:1-5)

Early Muslim scholars differed on what is meant by the “ten nights”. But most of them agreed that the ten nights refer to the first ten days of Dhul-Hijjah.

In another verse Allah Ta’ala says: { to attain benefits and mention Allah Ta’ala’s name, on specified days.} (Al-Hajj 22:28)

Most of the Quran commentators view that the specific days are the ten days of Dhul-Hijjah.

What a great virtue attached to those days which pass unnoticed by many people nowadays.

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 95 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article