வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

கடனும் அன்பளிப்பும் Print E-mail
Thursday, 28 August 2008 07:13

  கடன்  

ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்கள். "இறைவா! கப்ருடைய வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். தஜ்ஜாலின் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். வாழும் போதும் மரணிக்கும் போதும் ஏற்படும் குழப்பத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். பாவங்களைவிட்டும் கடனைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று நபி அவர்கள் தொழுகையில் துஆச் செய்தவார்கள். 'தாங்கள் கடனைவிட்டும் அதிமாகப் பாதுகாப்புத் தேடும் காரணம் என்ன?' என்று ஒருவர் நபி அவர்களிடம் கேட்டபோது 'ஒரு மனிதன் கடன் படும்போது பொய் பேசுகிறான்; வாக்களித்துவிட்டு அதை மீறுகிறான்" என்று நபி அவர்கள் விளக்கமளித்தார்கள். (நூல்: புகாரி)

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள். ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி அவர்களிடம் வந்து, 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்" என்றார்கள். (நூல்: புகாரி)

Read more...
 
அல்குர்ஆனை அணுகும் முறை Print E-mail
Friday, 11 March 2011 07:01

    மிக முக்கியமான சிறப்பான கட்டுரை    

    டாக்டர், அஹ்மது பாகவி PhD    

[ "வாழ்கையை நெறிப்படுத்தும் ஒரு மகத்தான வழிகாட்டி" எனப் புரிந்து கொள்ள வேண்டிய திருக்குர்ஆனைப் பற்றி சிலர் கூறும் கருத்துக்கள் ஆச்சரியமாகவும், ஆபத்தானதாகவும் இருக்கின்றன.

''அது நமக்குப்புரியாது. திருக்குர்ஆனை ஓதினால் மட்டும் போதும். அதன் சிறப்புகளைத் தெரிந்திருந்தால் மட்டும் போதும். அதன் பொருளைப் புரிந்து கொள்ளவோ, அதன் ஆழ்ந்த கருத்துக்களைத் தெரிந்து கொள்ளவோ, அதற்கான முயற்சிகளில் முனைவதோ அவசியமில்லை. அவ்வாறு அறிந்து கொள்ளவும் முடியாது. ஆலிம்களுக்கு மட்டுமே அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்!'' என்பதாகும்.

தஃலீம் புத்தகத்தைப்படிக்காது குர்ஆனின் பொருளைப் படித்ததனால் ஓர் அமீர், தனது சிஷ்யரை பலருக்கு முன்னால் கன்னத்தில் அறைந்ததையும் வேதனையோடு இங்கே குறிப்பிடவேண்டும்.

இப்படிப்பேசுவதும், அடிப்பதும் இஸ்லாமியச் சித்தாந்தகளுக்கும், நெறிமுறைகளுக்கும் அப்பாற்பட்டது, முரணானது என்பதையும், அவர்கள் இஸ்லாமிய வட்டத்திலிருந்தே வெளியேறிவிடுவார்கள் என்பதையும் ஏனோ இன்னும் இந்த முஸலிம் பெயர் தாங்கிகள் புரிந்து கொள்ளாமலிருக்கின்றனர்.

இது எவ்வளவு பெரிய பேரிழப்பையும் பேராபத்தையும் விளைவிக்கக் கூடியது என்பதையும், திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கததையே திசைதிருப்பக் கூடியது என்பதையும் நமது மக்கள் இன்னும் உணராமலிருக்கின்றனர் எனபதை எண்ணும் போது இரத்தக்கண்ணிர் வடிக்க வேண்டியதிருக்கிறது. இவை யூதகிறித்தவச் சிநதனைகளாகும்.

"நமக்குப்புரியாது" என்று ஒரு மருத்துவரே சென்ற ஆண்டு ஹஜ்ஜுக்கு வந்தபோது கூறியதைக் கேட்டதும் எந்த அளவுக்கு மூளைச்சலவைச் செய்து வைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிய வைப்பதற்கே பெரும்பாடாகிவிட்டது.

இன்று உலகிலுள்ள மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிட்டன. அரபி மொழி தெரியாது. ஆகவே, திருக்குர்ஆனை அறிந்துகொள்ள முடியவில்லை என்று எவரும் கூறிவிடமுடியாது.]

Read more...
 
கற்பனை செய் மனமே! Print E-mail
Saturday, 21 May 2011 10:09

கற்பனை செய் மனமே!

[ குழந்தைகளிடம் உள்ளதெல்லாம் மாசுமருவற்ற கற்பனைத் திறன். அல்பம் அபத்தம் மேதாவித்தனம் என்ற பாகுபாடெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் தம்மிஷ்டத்திற்கு அவர்களால் கற்பனை செய்ய முடியும்.

வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைந்திருப்பது அவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனைத் தேயவிடுவதால் என்கிறார்கள் உளவில் வல்லுநர்கள்.. "காப்பி சாப்பிட்டாச்சா?" என்றால் கண்ணெதிரே ஈரம் உலராமல் கப் இருக்க அவர்கள் பதிலுக்கு யோசிக்கக்கூடும்.

வளமான கற்பனை சிறப்பான நினைவாற்றலுக்கும் முக்கியம் ஆகும். கற்பனையுடன் இணைந்த மற்றொரு சமாச்சாரம் இருக்கிறது – இட்லியும் சட்னியும் போல! கனவு!.]

நாம் பிறந்து அழ ஆரம்பித்து அதற்கடுத்தச் செயலாய் தாயின் முலைக்காம்பில் பால் குடித்த நொடியிலிருந்து ஆறு ஆண்டுகளில் நமக்குத் தேவையான எழுபது சதவீத விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுகிறோம் என்று ஆய்ந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். மீதம் உள்ள முப்பது சதவீதத்தைத்தான் சொச்ச வாழ்நாளுக்கும் மாய்ந்து மாய்ந்து கற்றுக் கொள்கிறோமாம்!

Read more...
 
ஆங்கிலத்தில் கடிதங்கள்: இனி எளிதாக எழுதலாம்! Print E-mail
Tuesday, 29 June 2010 22:18
 
ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.

பள்ளி முதல் கல்லூரிவரை, அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.

அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.

Read more...
 
அறிவு எஜமானர்கள்! Print E-mail
Saturday, 16 April 2011 07:07

அறிவு எஜமானர்கள்!

    ஜெ.ஜஹாங்கீர்    

வேதங்களைச் சமூகங்கள் மறந்து விட்டன. வேதம் வாசிப்பது அதன் வழி நடப்பது வாழ்வை அமைப்பது எச்சமூகத்திலும் இல்லை. சிறப்பான கல்வி கொடுக்கிறோம். நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற வைத்து வாழ்க்கையில் உயர்த்துகிறோம். உயர்வான பதவிகளில் அமர்த்துகிறோம் என்று செயல்படும் பெரிய நிறுவனங்களிலிருந்து வெளியேறியவர்கள் அந்தக் கல்வி நிறுவனப் பெயரைக் காப்பதில்லை. லஞ்சம் பெறுகின்றனர்.

அறம், தர்மம், நேர்மை, நியாயத்தை வெறுக்கின்றனர். கணக்கீட்டாளர், ஊழியர் கணக்கில் குளறுபடி செய்து வேதனைப்படுத்துகின்றனர். உழைப்பை வீணாக்குகின்றனர். அதிகாரம் கைகளில் உள்ளது என்பதற்காக பொது மக்களைப் பந்தாடுவது, உயர்வான மதிப்பெண்ணும், உயர்தரக் கல்வியும் பெற்றவர்களுடைய நிலைப்பாடாகவிருக்கிறது.

வெள்ளையர் பாணியைக் காப்பியடித்து மிருகம் போல் கல்விக் கூடங்கள் நடத்தியதன் விளைவு அங்கிருந்து வெளியேறிவர்களும் மிருகமாய் நடந்து கொள்கின்றனர்.

Read more...
 
ஷாஜஹானின் தாஜ் மஹல் Print E-mail
Saturday, 14 February 2009 08:53
 
ஷாஜஹானின் தாஜ் மஹல்

ஷரீஅத் பேணவில்லை, ஹஜ் செய்யவில்லை, ஏராளமான மனைவிகள், சொகுசு பேர்வழிகள் என்றெல்லாம் காரணம் கூறி நம்மில் பலர் முகலாய மன்னர்களை அலட்சியப் படுத்துவது தெரிந்த விஷயம் தான். முகலாயர்களுக்கும், அல்லாஹ்விற்கும் இடையேயுள்ள விஷயங்களாக கருதி, இவைகளை விட்டுவிட்டு, அவர்களின் மற்ற நற்செயல்களுக்கு நமது வாழ்த்தை தெரிவிக்கலாமே.

முகலாய மன்னர்கள், ஷரீஅத் கோட்டையாகத் திகழும் பள்ளிவாசல்களை ஏராளமாய் நிர்மானித்துள்ளனர். அதில் குர்ஆன் வாசகங்களை ஆர்வத்துடன் அவற்றில் பக்தி சிரத்தனையுடன் எழுதியுள்ளதைப் பார்ப்போர் முலாயர்களின் இஸ்லாமியப் பற்றை உணரலாம்.

இறை அருளால் அரபி எழுத்துக்களை அலங்கரமாக வரைந்து தரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் 'தாஜ்மஹாலில் உள்ள அரபி எழுத்துக்களை பார்த்தீர்களா?' என பலர் கெட்பதுண்டு. 'இல்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும்' என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கல்யாணத்திற்கு டெல்லிக்கு சென்றிருந்த போது அதைப் பார்ப்பதற்காக ஐந்து மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து ஆக்ரா கோட்டை தவிர டெல்லியுள்ள ஜும்மா மஸ்ஜித், ஹுமாயூன் சமாதி, செங்கோட்டை, குத்ப்மினார், போன்றவைகளிலும், இஸ்லாமிய கலைநுட்பத்துடன் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை.

Read more...
 
நேற்று, இன்று, நாளை! Print E-mail
Thursday, 26 May 2011 06:47

நேற்று, இன்று, நாளை!

    ஆளூர் ஷாநவாஸ்    

[ இன்றைக்கு தினத் தந்தி என்கிற மிகப்பெரிய ஊடகம் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

தினகரன்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

தினமணி- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

தினமலர்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

தமிழோசை- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

ஆங்கில இதழ்களான ஹிந்துவும், எக்ஸ்பிரஸ்ஸும், டைம்ஸ் ஆப் இந்தியாவும்- யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

இந்தியா டுடேவும், விகடனும், குமுதமும் யாருடைய கையில் இருக்கிறது? எந்த சமூகத்தின் கையில் இருக்கிறது?

இவற்றில் ஏதாவது ஒன்று நம் சமூகத்தின் கையில் இருக்கிறதா?

காலையில் விழித்தவுடன் மூன்று ரூபாயைக் கொடுத்து நாம் வாங்கிப் படிக்கிற பத்திரிகைகளில் என்னென்ன வருகிறதோ, அவற்றை அப்படியே உண்மை என்று நம்புகின்றோம். அந்த அளவுக்கு நம்மிடம் கருத்துருவாக்கம் செய்யக்கூடிய வலிமை பெற்ற ஊடகமான பத்திரிகைகளின் முதலாளிகள் யார்; அவர்கள் என்ன சிந்தனை உடையவர்கள்; அவர்களின் சமூகப் பின்னணி என்ன என்பது பற்றியெல்லாம் நமக்கு ஏதாவது தெரியுமா? அவர்களைப் போல நாமும் நமது சிந்தனைகளை விதைப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த ஊடகத்தை உருவாக்குவது பற்றி என்றைக்காவது யோசித்தோமா?

இன்றைக்கு தமிழ் நாட்டு முஸ்லிம்களில் பணக்காரர்களே இல்லையா?

எல்லோருமே பீடி சுற்றிக் கொண்டுதான் இருக்கிறோமா?

ஒரு பலம் வாய்ந்த நாளிதழை நடத்துவதற்கு கூட நமக்கு வலிமை இல்லையா?

ஒரு உருப்படியான தொலைக்காட்சி நடத்தும் அளவுக்கு கூட நம்மிடம் பணம் இல்லையா?

இருக்கிறது; நம்மிடம் பணம் இருக்கிறது; பணக்காரர்களும் இருக்கிறார்கள். ஏற்கனவே அப்படி பலரும் ஒன்று கூடி பரிசோதனை முயற்சிகளில் ஈடுபட்டும் இருக்கிறார்கள். அப்படியிருந்தும் ஏன் நம்மால் அதில் வெற்றிபெற முடியவில்லை என்றால், நமக்கு ஊடக அலுவலகத்தை தான் உருவாக்க முடிந்ததே தவிர, ஊடகத்தை நடத்தும் ஊடகவியலாளர்களை நாம் உருவாக்கவில்லை.]

Read more...
 
முஸ்லீம் சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது? Print E-mail
Friday, 22 August 2014 10:12

M U S T   R E A D

[ புனிதமிக்க நமது சமுதாயம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட சம்பவங்கள் இன்று நல்ல மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களில் கேட்கின்றனவே! அந்தத் குடும்பங்களிலெல்லாம் மார்க்கம் எடுபட்டுப் போய்விட்டதா? அன்னியக் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிபோய் விட்டோமா? கால ஓட்டத்தில் கரைந்து விட்டோமா?

மார்க்கத்தை மார்பில் ஏந்திய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மாற்றங்கள் வருமா? இதயங்களில் இடி விழும் இப்படிப்பட்ட இகழ்வுகள் இனியாவது நடக்காதிருக்குமா? நம் இளைய சமுதாயம் இஸ்லாத்தின் பிடிக்குள் இனியாவது தலையெடுக்குமா? முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் நடக்கும் அவலங்கள். இன்று இந்த ஊர்களில் வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரத்தை அறிந்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் சூர்யாக்களும், சிவகார்த்திகேயன்களும், இன்னும் இவர்களைப் போன்ற கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.]

சமீபத்தில் விஜய் டிவியில் ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் இளம் முஸ்லிம் பெண் போட்டியின் பங்கேற்பாளராக அமர்ந்திருக்க, எதிரில் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ், கேள்விகளுக்கு நடுவே அந்தப் பெண்ணைப் பார்த்து, “உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?” என்று கேட்கிறார். உடனே “சூர்யா!” என்று பதில் வருகிறது. இதனைக் கேட்ட பிரகாஷ்ராஜ் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து “உண்மையாம்மா?” என்று கேட்கின்றார். புர்கா அணிந்திருந்த அந்தத் தாயார் மகிழ்ச்சிப் பூரிப்பில் வாயெல்லாம் பற்களுடன் “ஆமாம்” என்கிறார்.

Read more...
 
அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம்! Print E-mail
Saturday, 31 May 2014 09:08

அந்தரங்கம் இரசனையாக்கப்பட்ட ஒரு அவலம்!

முழு உலகையும் சதி, வஞ்சகம், மோசடி, பொய், துரோகம் முதலான இரகசிய நடவடிக்கைகளை வைத்து சமூகம் இயங்குகிறது.

இதில் தேர்ச்சியடைபவர்களையே தொழில் மன்னன், அரசியல் இராஜதந்திரி, நிர்வாகப் புலி என்று அழைக்கிறார்கள். சமூகத்தின் சிறந்த “ரோல் மாடல்களாக’ப் பத்திரிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

இவர்களைப் பற்றிய செய்திகளும் மக்களுக்கான நோக்கிலிருந்து மதிப்பிடப்படாமல், இரகசியக் கலைகளில் வல்லவர் யார் என்ற கருத்தே உருவாக்கப்படுகிறது.

இதற்குப் பொருத்தமாக பத்திரிகைகளும் அரசியல் செய்திகளை கொள்கை, கோட்பாடு, மக்கள் நிலையிலிருந்து எழுதாமல் கிசுகிசு பாணியில் புனைகிறார்கள். இன்றைக்கு அரசியல் செய்திகளை அறிய கழுகு, சங்கர்லால், வம்பானந்தா போன்ற “ஆய்வாளர்களின்’ ஆய்வுகளைத்தான் மக்கள் படிக்கின்றனர்.

Read more...
 
ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களில் பொய் மூட்டைகள்! Print E-mail
Thursday, 02 October 2014 06:44

ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களில் பொய் மூட்டைகள்!

  சீதாராம் யெச்சூரி எம்.பி.   

சமூக ஒடுக்குமுறை என்பது சாதிய ஒடுக்குமுறையையும் (caste oppression) பாலின ஒடுக்குமுறையையும் (gender oppression) உள்ளடக்கிய ஒன்று. இவற்றை ஆர்எஸ்எஸ் தங்களுடைய இந்து ராஷ்ட்ரத்தை நிறுவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே மேற்கொண்டு வருகிறது.

அதன் சமீபத்திய நிகழ்வுதான் பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் -ஜெய்பூரில் உள்ள அரசுப் பள்ளிக்கூடம் ஒன்றில், உயர்சாதி ஆசிரியருக்காக வைத்திருந்த மண்பானையிலிருந்து தண்ணீர் குடித்தார்கள் என்று காரணம் காட்டி பதினொரு தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டிருப்பதாகும். நம் நாட்டில் சாதிய மற்றும் சமூக ஒடுக்குமுறை இப்போதும் மிகவும் உச்சத்தில் இருப்பதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துகிறது.

இவ்வாறு ஒரு பக்கத்தில் தலித் மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அதே சமயத்தில், ஆர்எஸ்எஸ் இயக் கத்தின் தலைவர் தலித்துகள் இவ்வாறு ஒடுக்குமுறைக்கு உள்ளாகி இருப்பதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்பதைக் காட்டும் விதத்தில் மூன்று புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்.

அந்தப் புத்தகங்கள் மூன்றிலும், தலித்துகள், பழங்குடியினர் மற்றும் பல இதர ஒடுக்கப்பட்ட குழுவினர் மீது ஒடுக்குமுறை ஏவப்படுவதற்குத் தாங்கள் காரணம் அல்ல என்றும், மத்தியக் காலத்தில் அயல்நாடுகளிலிருந்து படையெடுத்து வந்த முஸ்லிம் கள்தான் காரணம் என்றும் அந்தப் புத்தகங்களுக்கு அணிந்துரை அளித்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். (தி இந்துஸ்தான் டைம்ஸ், செப்டம்பர் 22, 2014).

Read more...
 
உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை! Print E-mail
Sunday, 27 July 2014 22:53

உன் கையிலிருக்கும் குழந்தையைக் கொல்லலாம் என்று முடிவெடுத்தால் உன் உயிருக்கும் ஒன்றும் ஆபத்தில்லை!

ஒரு நடுத்தர வயதுப் பெண் கவலையுடன் தனக்குத் தெரிந்த மகப்பேறு மருத்துவரிடம் சென்று...

''டாக்டர், எனக்கு ஒரு பிரச்னை, அதை தீர்க்க உங்கள் உதவி நாடி வந்திருக்கிறேன் என்றாள். என் கைக்குழந்தைக்கு இன்னும் ஒரு வயது கூட முடியவில்லை. அதற்குள் மறுபடியும் கர்ப்பமாயிருக்கிறேன். அடுத்த குழந்தை இப்போது வேண்டாமென்று நினைக்கிறன்'' என்றாள்.

டாக்டர், ''அது சரி, அதற்கு நான் என்ன செய்யவேண்டும்?'' என்றார்.

அவள், ''நீங்கள் என் கருவைக் கலைத்து விட வேண்டும், உங்களைத்தான் மலை போல் நம்பியிருக்கிறேன்'' என்றாள்.
டாக்டர் சற்று நேரம் யோசித்தார். சில நிமிட மௌனத்திற்குப் பின் அந்தப் பெண்ணிடம் சொன்னார். ''உன் பிரச்னைக்கு என் மனதில் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. இதில் உனக்கும் எந்த ஆபத்துமில்லை'' என்றார்.

Read more...
 
எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க! எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க! Print E-mail
Tuesday, 20 April 2010 08:24

எதிரிக்கு பரிசளிக்கணும்னா மன்னிச்சுப்பழகுங்க!

எதிரியை தண்டிக்கணும்னா வாழ்ந்துகாட்டுங்க!

நம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான்! அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம்.

அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம். ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான்.! ஒரு நாளின் அதிக நேரத்தை அவர்களைப்பற்றிய நினைப்புதான் எடுத்துக்கொள்ளும்!

ஆனா உண்மையா எதிரிங்கிறது யார்? உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம்.

ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டுநிற்கக்கூடாது.

Read more...
 
பசி வந்தால் பறக்கும் பத்து! Print E-mail
Sunday, 11 April 2010 09:05

பசி வந்தால் பத்தும் பறக்கும்!

அது இது தான்

1. மானம்: honour and respect

2. குலம்: birth

3. கல்வி: education

4. வன்மை: caring

5. அறிவுடைமை: wisdom

Read more...
 
இணை வைக்காமல் மரணித்தவர் சுவர்க்கம் செல்வார் Print E-mail
Thursday, 31 March 2011 07:22

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் மதீனாவுடைய ‘ஹர்ரா’ என்ற (கறுப்புக்கற்கள்) நிறைந்த பூமியில் நடந்து கொண்டிருந்தேன். வழியில் உஹது மலை எமக்கு எதிர்ப்பட்டது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அபூதர்ரே! என்று அழைத்தார்கள். நான் இதோ ஆஜராகி இருக்கிறேன்.

யாரஸ¥லல்லாஹ்! என்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் "இந்த உஹதின் அளவு தங்கம் இருந்து கடனை அடைப்பதற்காகவேயன்றி அதில் ஒரு தீனாரையாவது என்னிடம் வைத்துக் கொண்டு மூன்று இரவுகள் கழிவதையும் நான் விரும்பவில்லை. மாறாக அல்லாஹ்தலாவின் அடியார்களுக்கு இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் செலவழித்துவிடவே விரும்புகிறேன்". என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் காட்டினார்கள்.

முன்னால் நடந்து கொண்டே "நிச்சயமாக இப்போது அதிகமான பொருள் வைத்திருப்பவர்கள்தான் கியாமத்துடைய நாளில் மிகக்குறைவான நன்மைகள் வைத்திருப்பார்கள். அவர்களில் தனது பொருளை இவ்வாறு, இவ்வாறு இவ்வாறெல்லாம் கொடுத்தவர்களைத்தவிர" என்று கூறி தனது வலப்புறமாகவும், இடப்புறமாகவும் பின்புறமாகவும் காட்டிவிட்டு அப்படியானவர்கள் குறைவானவர்களே" என்று கூறினார்கள்.

Read more...
 
மூன்று வேளை சாப்பாடு ஏன்? Print E-mail
Sunday, 28 November 2010 08:59

மூன்று வேளை சாப்பாடு ஏன்?

உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

காலை

காலை உணவு உடலுக்கும், மூளைக்கும் சிறந்த ஊட்டச்சத்தாகும். காலை உணவு சாப்பிடாவிட்டால் மூளை சுறுசுறுப்பை இழப்பதால் நீங்களும் சோர்வடைந்து விடுவீர்கள். மேலும் இடைவேளை நேரத்தில் தேவையில்லாமல் எதையாவது சாப்பிடத் தூண்டும்.

பிறகு மதியசாப்பாடு சாப்பிட வேண்டிய நேரத்தில் பசியின்மையும், சலிப்பும் ஏற்படும். இதனால் மதிய சாப்பாடும் தடைபடலாம். சிலர் காலை சாப்பாட்டை குறைப்பதன் மூலம் உடல் எடையை கட்டுபடுத்தலாம் என்று நினைப்பதுண்டு. தவறாமல் காலை உணவை சாப்பிட்டாலே உடல் எடை கட்டுபாட்டில் இருக்கும் என்பதுதான் உண்மை.

காலையில் பணிகள் செய்யத் தொடங்குவதால் உடலுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அவசியம். எனவே கொழுப்பு குறைந்த மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உணலாம். முட்டை, பீன்ஸ், பால் பொருட்களை சாப்பிடலாம். முளைகட்டிய தானியம், கொட்டை வகைகள், காய்கறி மற்றும் பழங்களும் காலையில் சாப்பிட ஏற்றது.

Read more...
 
கருவை உறை நிலையில் வைத்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1) Print E-mail
Friday, 16 April 2010 08:49

கேள்வி:   சில அறிவியல் ஆய்வுகள் முன்பு பேச்சளவில் மட்டும் இருந்துவந்த நிலைமாறி இப்போது நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு விட்டதால் எதார்த்த வாழ்க்கையில் அவற்றை மக்கள் செயல்படுத்த துவங்கிவிட்டார்கள், இவற்றில் உறைநிலையில் மனிதக்கருவை வைத்தல் மற்றும் குழந்தையின் பாலினத்தை (ஆணா அல்லது பெண்ணா என்று) நிர்ணயித்தல் ஆகியவை அடங்கும், மேற்கு நாடுகளில் இது சாதாரன விஷயமாகிவிட்ட நிலையில் இப்போது முஸ்லிம் நாடுகளில் நடைமுறையில் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது, இந்த ஆய்வுகள் இப்போது சோதனைக் கட்டத்தையும் ஆராய்ச்சி நிலைகளையும் தாண்டி பல முஸ்லிம் நாடுகளில் மக்களால் செயல்படுத்தப்பட்டு வருக்கிறது, ஆகவே இந்த விஷயம் தொடர்பான ஹுகும் ஷரியா என்னவென்று விளக்கிக் கூறுங்கள்; அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

பதில்:   இந்த கேள்விக்கு விடையளிப்பதற்கு முன்பாக சில உண்மைகளை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், அல்லாஹ் سبحانه وتعالى மனித இனத்தை படைத்து மனிதன் அறியாதவற்றையெல்லாம் அவனுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறான், மேலும் மனிதனிடத்திலும் இந்த பிரபஞ்சத்திலும் குறிப்பிட்ட இயல்புகளையும். நியதிகளையும். அளவுகோல்களையும் பண்புகளையும் அல்லாஹ் سبحانه وتعالى படைத்து நிர்ணயித்திருக்கிறான், இதன் காரணமாக மனிதன் ஆய்வுகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக் கூடியவனாகவும்; அதன் மூலமாக அறிவியல் ஞானத்தை பெற்றுக் கொள்ளக் கூடியவனாகவும்; ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்காக அவற்றை பயன்படுத்தக் கூடியவனாகவும் இருக்கிறான்.

Read more...
 
குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1) Print E-mail
Saturday, 17 April 2010 07:37

குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)

கட்டுரையை மேலோட்டமாக பார்க்காமல் முழுமையாக படியுங்கள்

[ பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது.

உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும்.

ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.]

Read more...
 
காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்! Print E-mail
Saturday, 10 November 2012 05:50

காலைத் தூக்கம் கவலையின் தொடக்கம்!

சூரிய உதயம் ஆகியும் கூட, யார் ஒருவர் எழவில்லையோ, அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும் என்கிறார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.

சூரியன் உதித்து விட்டால், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எழுந்து விடுவார்கள். ""காலை பஜ்ரு (தொழுகை) நேரம் தூங்கிக் கொண்டிருப்பது வாழ்க்கையில் தரித்திரியத்தை (ஏழ்மையை) உண்டாக்கும்,'' என்று கூறும் அவர்கள் காலை நேரத்தின் சிறப்பையும் எடுத்துச் சொல்கிறார்கள்.

ஒரு சமயம் அவர்கள் "எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான (சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகின்றது,'' என்றார்கள். இதுகுறித்து அண்ணலாரிடம் ஒருவர், ""அது எந்த நேரம்?'' என்றார்கள். ""காலை பஜ்ர் நேரம் தொழுகை தொடக்கத்தில் இருந்து கதிரவன் உதிக்கும் நேரம் வரை,'' என அவர்கள் பதிலளித்தார்கள்.

அதிகாலையில் மகிழ்ச்சியுடன் எழுவதற்கு என்ன வழி :

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் யோசனையைக் கேளுங்கள்.

இஷா தொழுகைக்கு முன்பு தூங்குவதும், இஷாவிற்கு பின்பு வீண் பேச்சு பேசுவதும் கூடாது.

உங்களில் எவரேனும் தூங்கிவிட்டால் ஷைத்தான் அவருடைய பிடரியின் மீது மூன்று முடிச்சுகளை போட்டு ஒவ்வொரு முடிச்சிலும் (அவருடைய உள்ளத்தில்) இன்னும் நீண்ட இரவு மீதமிருக்கிறது. நீ நன்றாக தூங்கு என்று ஊதிவிடுகிறான். ஆனால் அம்மனிதர் விழித்து அல்லாஹ்வை திக்ரு செய்வாரானால் ஒரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. பிறகு அவர் ஒளு செய்வாரானால் மற்றொரு முடிச்சு அவிழ்ந்து விடுகிறது. மேலும் அவர் தொழுதால் மூன்றாம் முடிச்சும் அவிழ்ந்து விடுகிறது. அவர் அதிகாலையில் தெளிவான உள்ளத்துடன் மகிழ்ச்சியுடன் எழும்பிவிடுகின்றார்.

Read more...
 
மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்! Print E-mail
Friday, 21 September 2012 19:36

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்ஸ" (அல்குர்ஆன் 9:71)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்..." (அல்குர்ஆன் 3:110)

இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

Read more...
 
கொள்கை - அறிவு - கருத்து - மதம்! Print E-mail
Wednesday, 19 September 2012 18:04

Related image

கொள்கை - அறிவு - கருத்து - மதம்!

தாய், தந்தை வழியே முஸ்லிமாகப் பிறந்திருந்தும் பெற்றோர் சூட்டிய பெயரை மறைத்து ரெண்டுங்கெட்டான் பெயரை அடையாளப்படுத்தி இயங்கும் தன்மை தமிழகத்திலிருக்கிறது.

இந்துக்களிடம் பொது மனிதர். ஊர், உறவுகளுக்குள் முஸ்லிம். இரண்டு வரவும் விடமாட்டோம். மதப்பெயரை வெளிக்கூறமாட்டோம். இப்போக்கு தங்களுக்கு பாதுகாப்பளிக்கும். இழப்பை ஏற்படுத்தாது, இலாபமளிக்கும். கற்பனைக் கணக்குகள். இந்து சமூகம் மதத்துடன் இணைத்தே பார்க்கும். அனுபவம் கூறும் உண்மை.

முஸ்லிம்கள் எதிராளியாகப் பார்ப்பர் இருபுறமும் ஏற்காத நிலையை ஏற்படுத்தும். இரு நூறு பேர் கூடிய திறந்தவெளி அவை கருத்தரங்கில் ஒரு இதழாசிரியர். பிறப்பு வழி முஸ்லிம். பொதுப் பெயரால் தன்னைக் காட்டிக் கொள்பவர். சமீப நாட்களாக தொலைக்காட்சிகளில் அதிகம் காணப்படுபவர் உரை தந்தார். நிகழ்ச்சி நடத்திய முக்கியஸ்தர் உரையாளரிடம் உன் மதத்தில் இருக்கிறாயா? கூறுவென்றார்.

அடுத்த நொடி, தான் முஸ்லிமல்லவென கூட்டத்தினரிடம் அறிவித்தாரவர்.

Read more...
 
"ஈதுல் அள்ஹா" நல்வாழ்த்துக்கள் Print E-mail
Friday, 01 September 2017 14:59

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

இன்று  ஈதுல் அள்ஹா  பெருநாள்

கொண்டாடும் அனைவருக்கும்

உளமார்ந்த

ஈத் முபாரக்

M.A.Mohamed Ali,B.A.

-adm. www.nidur.info

 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 94 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article