வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஹாருன் யஹ்யா - (Part - 1) மறைக்கப்பட்ட டார்வினிஸ பொய்கள் Print E-mail
Sunday, 17 August 2008 19:59

ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள்

ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்கள் இது வரை 41 உலக மொழிகளில் மொழிப்பெயர்க்ப்பட்டுள்ளன.

இது வரைக்கும் அவரது புத்தகங்கள் 8 மில்லியன் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. அதேயளவு மக்கள் பல்வேறு பத்திரிக்கைகள் மற்றும் சஞ்சிகைகள் மூலம் இலவசமாக படித்து பயனடைந்துள்ளனர்.

இது வரை ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு 180 திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல்வேறு மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அவை  200 வெவ்வேறு நாடுகளில் 100 தொலைக்காட்சிகளில் இன்றுவரை ஒளிபரப்பபட்டு வருகின்றன.

மேலும் 13 மில்லியன் VCD திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையடப்பட்டுள்ளன. கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் மற்றும் ஒலி நிகழ்ச்சிகள் 20 VCD,வேறு நாடுகளிலுள்ள அதிகமான வானொலி நிலையங்களில் ஒலிபரப்பட்டுள்ளன.

ஆசிரியரின் ஆக்கங்களை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்ட 40 மொழிகளிலுள்ள 200 மேற்பட்ட இணையதளங்கள் மாதந்தொரும் 160 நாடுகளிலிருந்து 30 லட்சம் மக்களால் பார்வையிடப்படுகின்றன.

மாதந்தம் 4,45000 திரைப்படங்கள், 190,000 புத்தகங்கள் மற்றும் 60,000 ஒலி புத்தகங்கள்பார்வையாளர்கள் தங்களது கணிணியில் பதிந்து கொள்கின்றனர்.

இன்றுவரை, ஹாருன் யஹ்யாவின் ஆக்கங்களை மையமாக கொண்டு சுமார் 60 லட்சம் சஞ்சிகை பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

உலகம் முழுவதும் அவுஸ்திரேலியா முதல் கனடா வரையும், பிரித்தானியா முதல் மலேசியா வரையிலுமுள்ள, பல முன்னனி பல்கலைகழகங்களில் பெருளமவு கருந்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. இன்றுவரை துருக்கியில் மட்டும் 1500 கலந்துரையாடல் நடைபெற்றுள்ளன. பத்திரிக்கைகளில் இன்று வரை பல்வேறு நாடுகளில் ஹாருன் யஹ்யாவின் 5000 மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Read more...
 
ஹாருன் யஹ்யா (Part - 2) விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய் Print E-mail
Sunday, 17 August 2008 21:51

பரிணாமவாதிகளிடம் அவர்களது பிழையான கோட்பாட்டை உண்மைபடுத்தக்கூடிய எந்த சான்றும் இல்லை. இது விஞ்ஞான வரலாற்றில் பேசப்பட்ட பெரும் பொய்.

 ஓன்றன் பின் ஒன்றாக வீழ்ச்சியடைந்த கொலகான்ந்த் (Coelacanth) மற்றும் ஆர்ஷியப்டெரிக்ஸ் (Archaeopteryx)  போன்ற படிமங்கள், முன்பு பரிணாமத்திற்காக வாதாடிய இக்வியுன் வரிசை (Archaeopteryx) போன்றவைகளை ஆராய்ந்து பார்த்தால் விடுபட்ட தொடர்பு பொதுமக்கள் மத்தியில் உயிருடன் வைக்க வேண்டும் என்பதற்காகவே இவை காலத்திற்கு காலம் உயிரூட்டப்படுள்ளதை காணலாம்.

இந்த முயற்சிகள் அனைத்தும் ஹிட்டலரின் மொழியில் சொல்வதானால் மீண்டும் மீண்டும் பேசப்படும் பொய் உண்மையாகிவிடும் என்ற பிரச்சார வழிகளாகும்.ஆய்வுகள் அவர்களது கோட்பாட்டை மறுக்கிறது என்பதை பரிணாமவாதிகள் ஏற்று கொள்ளவேண்டும். விடுபட்ட தொடர்பு என்ற கட்டுக்கதையை ஒரு போதும் உண்மையாக போவதில்லை.

Read more...
 
சட்டத்தை காரணம் காட்டி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையான அநீதி! Print E-mail
Tuesday, 22 December 2015 08:12

சட்டத்தை காரணம் காட்டி பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையான அநீதி!

[ புதுடெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு லட்சக்கணக்கில் பணம் பரிசாக வழங்கப்படும் என்று பி.ஜே.பி.யின் பரிவாரம் ஒன்றிலிருந்து குரல் எழுகிறது. ஒரு முதலமைச்சரின் மகளுக்கே பாதுகாப்பு இல்லை எனும்பொழுது நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? பெண்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நாடாக மாறிவருகிறதா நமது நாடு?

பாலியல் பலாத்காரத்தால் வாழ்வை தொலைத்த பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போவது எவ்வளவு பெரிய கொடூரம் என்பதை, ஊடகத்தில் சொகுசாக அமர்ந்துகொண்டு,  சட்டத்தை காரணம் காட்டி    (சிறுவன் எனும் முத்திரையில் தப்பிக்கும்) கயவனுக்கு வக்காலத்து வாங்கும் அறிவுஜீவி எனும் அரைவேக்காடுகள் என்றைக்கு உணரப்போகிறார்கள்?]

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய சிறுவர்களுக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டு உள்ளது. சட்டத்தை திருத்த இன்னும் எத்தனை நிர்பயாக்கள் பலியாக வேண்டும்?  - ஆஷா தேவி கண்ணீர் பேட்டி

புதுடெல்லி: சிறுவனை விடுதலை செய்ததன் மூலம், நீங்கள் 18-வயதிற்கு கீழே இருந்தால் பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு சான்றிதழ் வழங்கிஉள்ளது என்று நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி கூறிஉள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் இளம்குற்றவாளியை விடுதலை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் இளம்குற்றவாளியின் விடுதலையை தடுப்பதற்கு, தற்போதுள்ள சட்டங்களின்படி எந்த விதிமுறையும் இல்லை. எனவே இது தொடர்பாக தெளிவான சட்டங்கள் தேவைப்படுகிறது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.

சுப்ரீம் கோர்ட்டின் நடவடிக்கை டெல்லி பெண்கள் ஆணைய தலைவி சுவாதி மாலிவால் பேசுகையில், “இந்திய வரலாற்றில் பெண்களுக்கு இது கருப்புநாள். இளம்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்குவது தொடர்பாக கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தத்தை நிறைவேற்றாததன் மூலம் டெல்லி மேல்-சபை நாட்டை ஏமாற்றி விட்டது” என்று கூறினார்.

Read more...
 
கொடூரமான கொசுக்கள் Print E-mail
Friday, 01 October 2010 07:22

Image result for கொசுக்கள்

 கொடூரமான கொசுக்கள்

பூனையைவிட புலிகள் வலிமையானவை என்பதை எலிகள் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆனால், கொசுக்கள் எவ்வளவு கொடூரமானவை என்பதை உலகமே ஒப்புக் கொள்ளும்!  தமிழ்நாட்டு மக்களை மரணபயத்தின் பக்கம் கொசுக்கள் மெள்ள நகர்த்திக்கொண்டு இருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.

எங்கே பார்த்தாலும் மர்மக் காய்ச்சல். சிலர் மலேரியா என்கிறார்கள். பலர் சிக்கன்குனியா என்கிறார்கள். டெங்குவில் இது ஒருவகை எனச் சொல்லப்படுகிறது. யானைக்கால் வியாதியில் கொண்டு போய் விடும் என்ற பயம் இருக்கிறது.

நடையைத் தளர்த்தி காய்ச்சல் வந்தவரின் வாழ்க்கையை ஓரத்தில் இருத்தி உட்கார வைக்கிறது. குழந்தை, பெரியவர் என வயது வித்தியாசம் இல்லை.

ஆண்,பெண் பேதம் இல்லை. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் சிறு கிளினிக் வாசல்களிலும் திருவிழாக் கூட்டம்தான். மலேரியா, சிக்கன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்கு, யானைக்கால் நோய் என என்ன பெயரிட்டு அழைத்தாலும் அவை ஐந்தும் கொசுக்களால் வருபவைதான்.

Read more...
 
தலைவலி- உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்! Print E-mail
Friday, 06 August 2010 06:52

Image result for headache

தலைவலி-  உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்!

உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.

ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,

ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும்.

ஒரு சிலருக்கு காலையில் வரும்.

ஒரு சிலருக்கு மாலையில் வரும்.

ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.

ஒரு சிலருக்கு இருபுறமும் வரும்.

ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.

ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும்.

ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.

ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.

ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.

Read more...
 
நகங்கைளைப் பாதுகாப்போம் Print E-mail
Monday, 03 January 2011 08:26

Image result for நகங்கள்

நகங்கைளைப் பாதுகாப்போம்

நகங்களை ஏதோ தேவையில்லாத பகுதியாகவோ, அல்லது அழகுபடுத்திக் கொள்வதற்காக அமைக்கப்பட்ட உறுப்பாகவோ நினைக்கிறோம். அது தவறு. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு நகங்களாகும். ஆனாலும் பெரும்பாலும் நாம் நகங்களில் வண்ணங்களை தீட்டிக் கொண்டு, நீளமாக வளர்த்துக் கொண்டு ஒரு அழகு சாதன உறுப்பாகவே பயன்படுத்துகிறோம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள். நகத்தினுடைய நிறம், வடிவம், நயம் இவற்றை வைத்து நம் ஆரோக்கியத்தையே கணிக்க முடியும் என்கிறார்கள். அனுபவம் உள்ள மருத்துவர்கள் நகத்தைப் பார்த்தே 'இன்ன நோய்' என்பதையும் சொல்லிவிடுவார்கள்.

நுண்மையான, நரம்பு கூட்டமைப்பிலான நமது விரல் நுனிகளை ஊறுபடாத வண்ணம் காப்பது நகங்களே. நாம் நுட்பமான பொருட்களை கையாளவும், நமது தொடு உணர்வுக்கும் நகம் பெரிதும் உதவுகிறது. நம் உடம்பிலுள்ள ரோமத்தில் போலவே நகத்திலும், 'புரோட்டீன் _ கெராட்டீன்' என்ற ரசாயனப் பொருள் காணப்படுகிறது
Read more...
 
சுரைக்காயின் மருத்துவக் குணங்கள் Print E-mail
Wednesday, 02 April 2014 06:56

சுரைக்காயின் மருத்துவக் குணங்கள்

மனிதனின் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களையும் கொடுப்பதில் காய்கறிகளின் பங்கு அளப்பறியது. காய்கள் அனைத்துமே எளிதில் செரிக்கும் தன்மை கொண்டவை.

நம் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் தோட்டப்பயிராக காய்கறிகளைப் பயிர்செய்து பயன்படுத்தி வந்தனர். அவற்றில் ஒன்றான சுரைக்காய் பற்றி தெரிந்துகொள்வோம்.

சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். அது வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும்.

சுரையின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.

Read more...
 
பழைய சூழ்ச்சி புதிய வடிவில்! Print E-mail
Thursday, 01 April 2010 07:58

பழைய சூழ்ச்சி புதிய வடிவில்!

[ கட்டுக்கதை என்பது கடவுள்களைப் பற்றிய மூடநம்பிக்கைகளையும், கதாநாயகர்களின் அற்புதங்களையும் உள்ளடக்கிய பழைய கதையாகும். அது மூடநம்பிக்கைகள் நிறைந்த கற்பனை சம்பவங்களைப் பற்றி பேசும்.

குர்ஆன் அதற்கு எதிரான எல்லா சதித்திட்டங்களையும் விஞ்சி நிற்கிறது என்பது அதன் தனித்தன்மையாகும். இந்த இறைவேதம் இவை போன்ற தனித்தன்மைகளையும் இயல்பாகவே மனிதனைக் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. அது இவ்வுலகின் தீய சக்திகள் தீட்டுகிற திட்டங்களை வென்றுவிடக்கூடியது.

யூதர்களின் சதித்திட்டங்களையும் கிருத்தவர்களின் சதித்திட்டங்களையும் அகில உலக அனைத்து சக்திகளையும் எவ்விடத்திலும் எல்லா நேரத்திலும் வெல்லும் திறனை இது பெற்றுள்ளது.]

Read more...
 
இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறந்தது ஏன்? Print E-mail
Monday, 23 May 2011 07:21

Related image

 இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறந்தது ஏன்?

[ எந்த ஒரு மதத்தினை பின்பற்றுவதாக இருந்தாலும் அதன் கோட்பாடுகள் வெறும் இறைவணக்கம், வழிபாடுகள் என்று நின்றுவிடக் கூடாது. அது இந்த சமுதாயத்திற்க்கும் தனி மணித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். இந்த வகையில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்து விளங்குகிறது.

தீயது தவிர்த்து நல்வழியில் செயல்பட இஸ்லாம் வெறும் இறைவழிபாடோடு நின்றுவிடாமல் எந்த ஒரு தனி மனித வாழ்விலும் குறுக்கிட்டு ஓர் நெறியான வாழ்வை வாழ வழிவகுக்கிறது.]

பொதுவாகவே எல்லா மதங்களும், பின்பற்றுவோர்களை நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே வலியுறுத்துகின்றன. ஏன் ஒருவர் இஸ்லாமை மட்டுமே பின்பற்ற வேண்டும், அப்படியெனில் மற்ற மதங்கள் கூடாதா?

முன்னறே கூறியது போல வாழ்க்கையில் நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன, இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது. ஆனால் மற்றவைகளிலிருந்து ஒரு படி மேலே சென்று எவ்வாறு அந்த தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்கிற வழிமுறைகளையும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. இஸ்லாம் நம்மைப் படைத்த ஏகனின் நேர்வழி வழிகாட்டல் உடையது, எனவே தான் இஸ்லாம் தீனுல் ஃபித்ராஹ் (மனிதனின் இயல்பான மதம்) என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை.

Read more...
 
முதுமை சுமையல்ல Print E-mail
Tuesday, 29 April 2014 09:39

முதுமை சுமையல்ல

வயதான அம்மாள் ஒருவர் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தார். அவரது மகனும் மருமகளும் அவரைத் துடைத்து, சுத்தப்படுத்தி, உணவூட்டி மிகவும் அன்புடன் கவனித்து வந்தனர். ஒருநாள் அந்த அம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். ‘‘ஏனம்மா கவலைப்படுகிறீர்கள். இது எங்கள் கடமைதான்’’ என்றனர் மகனும் மருமகளும்.

அதற்கு அந்த அம்மையார் சொன்னார், ‘‘நான் அதற்குக் கவலைப்படவில்லை. நீயும் உன் மனைவியும் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறீர்கள். உங்கள் வயதான காலத்தில் உன் மகனும் மருமகளும் உன்னை இப்படிப் பார்த்துக் கொள்வார்களா என்று நினைத்துக் கவலைப்பட்டு அழுகிறேன்’’ என்றாராம்.

முதுமை என்பதை தானும் மற்றவரும் சுமக்கும் ஒரு பெருஞ்சுமையாக சிலர் நினைக்கின்றனர். உண்மையில் முதுமை என்பது தனக்கும் சரி, மற்றவர்களுக்கும் சரி.. ஒரு சுமையல்ல. அது பல ஆண்டுகள் உழைத்த பிறகு நமக்குப் பிடித்த விஷயங்களை, நமக்குப் பிடித்த நேரத்தில் செய்வதற்காகக் கொடுக்கப்பட்ட ஒரு வசந்தகாலம்.

முதுமை என்றால் பழசாவது என்றும் பொருள் அல்ல. முதுமை என்றால் முதிர்ச்சி அடைதல் என்று பொருள். 1900-ம் ஆண்டு மனிதனின் சராசரி வயது 35தான். இப்போது அது கிட்டத்தட்ட 70 ஆக உயர்ந்திருக்கிறது. இந்தியாவில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம். இது 2050-ம் ஆண்டு 50 சதவீதமாக உயரும் என்பது முதியோருக்கான மகிழ்ச்சியான செய்தி.

Read more...
 
ஏக்கங்களைத் தீர்க்கும் "20" Print E-mail
Tuesday, 14 September 2010 13:19

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.

2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.

3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.

4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!

5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.

Read more...
 
உரிமை கொண்டாடுகிற ஆளுமை! Print E-mail
Tuesday, 19 July 2011 09:52

உரிமை கொண்டாடுகிற ஆளுமை!                                                               

அவர்கள் இருவரும் தொடர்புடைய, அவர்கள் இருவரையுமே பாதிக்கிற பிரச்சினை என்பதால் மனைவியையும் உடன் அழைத்து வந்ததாகக் கணவர் கூறினார். மனைவி, உருவில் சிறியவராகவும், பிரகாசமான கண்களுடன், உற்சாகமானவராகவும் - ஆனால், அமைதியைத் தொலைத்தவராகவும் - காணப்பட்டார்.

கணவன், மனைவி இருவருமே எளிமையானவர்களாகவும், கபடமற்றவர்களாகவும், சிநேகபாவமுள்ளவர்களாகவும் இருந்தனர். கணவர் ஆங்கிலத்தில் சரளமாக உரையாடினார்; மனைவி ஆங்கிலத்தைப் புரிந்து கொண்டு, சுலபமான கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கும் திறன் பெற்றிருந்தார்.

உரையாடல் தீவிரமடைந்து, நீண்டு, புரிந்து கொள்ளச் சற்றுக் கடினமானபோதெல்லாம் மனைவி கணவரை ஏறிட்டு நோக்க, அவர் மனைவிக்குத் தன் மொழியில் விவரித்துச் சொன்னார்.

கால் நூற்றாண்டுக்கும் மேலாக அவர்கள் தம்பதிகளாக இருப்பதையும், அவர்களுக்குப் பல குழந்தைகள் இருப்பதையும் சொன்ன கணவர் - அவர்களின் சிக்கல், குழந்தைகளாலோ அல்லது குழந்தைகள் பற்றியதோ அல்ல என்றும், அவர்களுக்கிடையேயான மனஸ்தாபமும் வருத்தமும் தான் என்றும் சொன்னார்.

மிதமான வருமானம் தரும் வேலையில் அவர் இருப்பதை விவரித்த கணவர் - இந்த உலகத்திலே ஒருவர் - அதிலும் முக்கியமாகத் திருமணமானவர் - அமைதியுடன் வாழ்வது மிகவும் கடினம் என்றும் தொடர்ந்தார்.

Read more...
 
பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம் Print E-mail
Saturday, 02 July 2011 07:42

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்

[ திருமணமான இளம் வயதில் பாலியல் குறித்த கூச்சம், வெட்கம் பலருக்கு இருக்கிறது. முழுமையான தெளிவும் பலருக்கு இருப்பதில்லை. இதனால் அப்போது முழுமையான அனுபவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை.

தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம்.

கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாகும்.

மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்.]

Read more...
 
பெண்களுக்கான இல்லற உரிமைகள் Print E-mail
Thursday, 16 September 2010 14:42

பெண்களுக்கான இல்லற உரிமைகள்

    ஃபாத்திமுத்து சித்தீக்    

[ கேரளத்து ஜஸ்டிஸ் கிருஷ்ணய்யர் தனது தீர்ப்பு ஒன்றில், ''இந்தியாவில் இன்று வழக்கிலிருக்கும் சட்டங்களில், மிக நவீனமானதாக இருப்பதோடு தவறின் விளைவாக நேரும் மணமுறிவுக்குக்கூட அனுபவபூர்வமான பொறுப்பேற்று தீரப்பளிக்கும் ஒரே சட்டம் இஸ்லாமிய சட்டம்தான்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அறியாமையாலோ, காழ்ப்புணர்ச்சியாலோ நம்முடைய கட்டுப்பாடான வாழ்க்கை நெறிமுறைகளைப் பார்க்கும் பிறசமயத்தவர்களுக்கு சுலபத்தில் கைகொடுப்பது பலதாரமணம்தான்! மனித இயல்பை நன்கு புரிந்து கொண்டு, பலதார மணத்தைப் பொறுத்தவரை இஸ்லாம் இதை ஒரு சலுகையாகத்தான் தந்திருக்கிறது.

பலதாரமணம் மூலம் முஸ்லீம்கள் சட்டபூர்வமாக பெண்களுக்குத் தரும் அந்தஸ்தை பிறசமுதாய ஆண்கள் தருவதில்லை. சின்னவீடுகளாக, வைப்பாட்டிகளாக செட்அப் செய்து கொளவதோட சரி! அல்லது ''சிகப்பு விளக்கு''ப் பகுதிகளுக்கச் சென்று சீரழிகிறார்கள். இதனால் ஏற்படும் தீமைகளை அவர்கள் எண்ணிப்பார்ப்பதில்லை. நாமும் தக்க தருணங்களில் சுட்டிக்காட்டுவதில்லை.]

Read more...
 
மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா? Print E-mail
Sunday, 18 March 2012 06:11

மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?

[ மண வாழ்வில் புரிதல் மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. புரிதல் இருந்தால் மட்டுமே விட்டுக்கொடுத்தல் உருவாகும். விட்டுக்கொடுத்தலே வாழ்வின் மிகப் பெரிய அடித்தளம் ஆகும். மண வாழ்விற்கு காதலும் காதல் சார்ந்த காமமும் முக்கியம்தான்.

காதலில்லா நெஞ்சம் நிச்சயமாக தேவைகளைப் பெறுவதில் மிகக் கடுமையாக இருக்கும். காதல் கொண்ட நெஞ்சம் மிகையுண்ட காதலால் மற்ற குறைகளை மாற்றி விடும் அல்லது ஏற்றுக் கொண்டுவிடும்.

காதலில்லா வாழ்வு நம்மை self centered personality ஆக மாற்றி நம்மை எப்போதும் இணையாத இணை கோடுகளாக மாற்றிவிடும். ஆனால் காதலுள்ள வாழ்வு இந்த இணை கோடுகளை முன்னேற்றப் பாதையில் வாழ்க்கை எனும் வண்டியைச் செலுத்த இணைந்து நிற்கும் இருப்புப் பாதைகளாக மாற்றி விடும்.

இணைகள் ஒருவரை ஒருவர் சார்ந்திருத்தல் மிக அவசியம். இது நிச்சயமாய் ஒருவரின் சுதந்திரத்தை பாதிக்கும் வகையில் இருக்கலாகாது. சார்ந்திருத்தல் என்றால் not total dependency but complimentary to each other in every way either physical, financial and or emotional. இது போன்ற சங்கதிகள் நம் வாழ்வில் நிறைந்து இருக்கும் போது காதல் வெளிப்பட்டு பலப்படும்.]

Read more...
 
கூட்டுத் துஆ ஏற்படுத்தும் விபரீதங்கள்! Print E-mail
Friday, 24 June 2011 11:39

[ "துஆ என்பது வணக்கமாகும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதி)

வணக்கமாக புரிகின்ற இந்த துஆவை பணிவுடன் அடக்கத்துடன் அச்சத்துடன் ஆசையுடன் கேட்க வேண்டும். தாழ்ந்த குரலில் கேட்கவேண்டும்.

மனம் உருகிய நிலையில் அல்லாஹ்விடம் எதைக் கேட்கிறோம் என்று அறிந்த நிலையில்- அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை வைத்த நிலையில் துஆ கேட்க வேண்டும். அப்போது தான் அந்த வணக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

துஆவுக்கான பணிவும் அச்சமும் தனியாக கேட்கும்போது தான் வருமே தவிர கூட்டத்தோடு கூட்டமாக சப்தமிடுவதால் வருவதில்லை. கூட்டத்தோடு கூட்டமாக இருந்து சப்தமிடும்போது எதைக் கேட்கிறோம் என்ற சிந்தனையோ விளக்கமோ வராது. எல்லோரும் ஆமீன் சொல்லும் போது நாமும் ஆமீன் சொல்ல வேண்டும் என்ற நினைப்பு மட்டும் வரும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூட்டு துஆ ஏற்படுத்தியதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித் தந்த பிரகாரம் தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு வரும் தனித்தனியாக அவ்ராதுகளை ஓதி விட்டு தனித்தனியாக தங்களுடைய தேவைகளை அல்லாஹ்விடம் ஒப்புவித்து பிரார்த்திக்க வேண்டும்.

யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.

யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.

யாரோ கண்டுபிடித்து உருவாக்கிய துஆவுக்கு முக்கியத்துவம் கொடுத்து சுன்னாவை புறக்கணித்து விடுகிறார்கள்.]

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) Print E-mail
Saturday, 17 September 2016 07:06

ஹஸீனா அம்மா பக்கங்கள் (5)

எது, எதில் மறைக்கப்பட்டுள்ளது?

பெண்களின் வெட்கம் அவளின் படைப்பிற்குள்,

பெண்களின் வாக்குறுதி அவளின் பரிசுத்தத்தன்மைக்குள்,

பெண்களின் தைரியம் அவளின் பொறுமைக்குள்,

பெண்களின் கண்ணியம் அவளின் மன்னிக்கும் தன்மைக்குள்,

பெண்களின் அழகு அவளின் குணத்திற்குள்,

பெண்களின் ஆற்றல் அவளின் உறுதிக்குள்,

பெண்களின் சிறப்பு அவளின் முன்யோசனைக்குள்,

Read more...
 
2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் Print E-mail
Friday, 13 October 2017 08:33

2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள்

நாளது 07-10-2017 மாலை மும்பை இந்திய ஹஜ் குழுவின் கட்டிட வளாகத்தில் 2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ளது.

1. இந்திய ஹஜ் கோட்டாவில் (170000) இந்திய ஹஜ் குழுவிற்கு 70 சதமும் (119000) தனியார் நிறுவனத்திற்கு 30 சதமும் (51000) கோட்டா தரப்பட்டுள்ளது.

2. ரிசர்வு பிரிவு A (70+) மற்றும் ரிசர்வு பிரிவு B (4வது வருட விண்ணப்பங்கள்) இரண்டையும் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ஹஜ் பயணிகளுக்கு வழங்கும் மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்ய பரிந்துரை தரப்பட்டுள்ளது.

குறிப்பு: விமான சேவை கட்டணத்தில் மட்டுமே மானியத் தொகை வழங்கப்படுகிறது என்பதாக அறிகிறோம்.

Read more...
 
மகத்தான நற்பாக்கியங்கள் Print E-mail
Thursday, 25 September 2008 18:01

மகத்தான நற்பாக்கியங்கள்

1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும்

2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.

3) 100 தடவை 'ஸுப்ஹானல்லாஹ்' என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும்.

4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை மனனமிட்டால் தஜ்ஜாலின் குழப்பங்களிலிருந்து பாதுகாப்பு பெற்று விட்டார்.

5) எவர் கடமையான தொழுகைகளுக்கு முன் பின் உள்ள பன்னிரண்டு ரக்அத் சுன்னத்தை தொழுது வருவாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகையை எழுப்புகின்றான்.

Read more...
 
மனிதர்கள் சிந்திக்க வேண்டாமா? Print E-mail
Sunday, 17 August 2008 10:50

''நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா?'' 2:44

''தான் நாடியவருக்கு அவன் ஞானத்தைக் கொடுக்கின்றான்; (இத்தகு) ஞானம் எவருக்குக் கொடுக்கப்படுகிறதோ அவர் கணக்கில்லா நன்மைகள் கொடுக்கப்பட்டவராக நிச்சயமாக ஆகி விடுகிறார்; எனினும் நல்லறிவுடையோர் தவிர வேறு யாரும் இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை''. 2:269

''அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க வேண்டாமா (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.'' 4:82

Read more...
 
ஜும்ஆவும் காணிக்கைத் தொழுகை-தஹிய்யத்துல் மஸ்ஜிதும் Print E-mail
Thursday, 21 January 2010 09:43

[ நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;  ''உங்களில் யாரேனும் பள்ளியில் நுழைந்தால் இரு ரகஅத்துகள் தொழாமல் உட்கார வேண்டாம்''.  (நூல்: புகாரி) .  இது ஜும்ஆவுக்கு மட்டுமின்றி எல்லா நேரத்துக்கும் பொருந்தும்.

சென்னை போன்ற நகரங்களில், இமாம் தமிழிலோ உருது மொழியிலோ பயானை முடித்துவிட்டு 'மிம்பரில் குத்பா' ஓதுவதற்கு முன், சுன்னத்து தொழுவதற்காக ஐந்து நிமிடங்கள் இடைவெளி கொடுக்கப்படுவதால் மஸ்ஜிதுக்குள் நுழையும் பலர், உள்ளே நூழைந்தவுடன் சுன்னத்தான 'தஹிய்யத்துல் மஸ்ஜித்' இரண்டு ரக் அத்தை தொழுகாமல் அப்படியே உட்கார்ந்து விடுவதை வழமையாக காண்கிறோம்.

இந்த குறையைப் பற்றி எந்த இமாமும் மக்களுக்கு எடுத்துச் சொன்னதாகத் தெறியவில்லை. மாதம் ஒரு முறையாவது மக்களுக்கு இதை நினைவுப்படுத்துவது சிறப்பானதாகும். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தை உயிர்ப்பிப்பதில் என்ன தயக்கம் இருக்க முடியும், அதுவும் இறையில்லத்துக்குள்.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 93 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article