வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை - இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்! Print E-mail
Friday, 12 November 2010 15:53

A protest in India against child sex abuse

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை -

இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்! 

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் - பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி - அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது.

குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.

Read more...
 
கவனம்! வாலிபப்பருவம்! Print E-mail
Friday, 10 October 2014 06:50

கவனம்! வாலிபப்பருவம்!

நாம் இவ்வுலக வாழ்க்கையில் மூன்றுவித பருவமாற்றங்களை சந்திக்கவேண்டியுள்ளது. அது குழந்தைப் பருவம். இளமைப் பருவம், முதுமைப் பருவமாகும்.

இம்மூன்று பருவத்திலும் மிக முக்கியமான பருவமாக வாலிபப்பருவம் இருக்கிறது. இவ்வாலிபப்பருவத்தின் ஆரம்பநிலையை மிகக் கவனமுடன் கடந்து செல்லவேண்டியதாக இருக்கிறது.

இப்பருவம் மனிதனது வாழ்வின் நல்வழியையும் தீயவழியையும் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக இருக்கிறது.

இந்த ஆரம்பநிலை வாலிபப்பருவத்தை ஒருமனிதன் எவ்வித கலங்கமுமின்றி கடந்து வந்து விட்டானேயானால் அம்மனிதன் இவ்வுலகவாழ்வில் அனைத்திலும் மிகத் தூய்மையானவனாக வெற்றிபெற்றவனாக ஆகிவிட அதிக வாய்ப்பு உள்ளது.

காரணம் இப்பருவத்தைக் கடக்கும்போது மனதுடன் நிறைய போராட வேண்டி உள்ளது. மனதில் உள்ள கட்டுப்பாட்டை இப்பருவத்தைக் கடக்கும்வரை பலமாக பிடித்து நிறுத்திவைக்கவேண்டியதாக இருக்கிறது.

வாலிபப்பருவத்தின் ஆரம்பகட்டத்தில் எதிலும் அனுபவமில்லாத காரணத்தினால் எதையும் பெரும் பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் அலட்ச்சியமாக பொறுப்பில்லாமல் விளையாட்டாக நடந்து கொள்ளும் பருவமாக இருக்கிறது. ஆனால் இதன் பின்விளைவுகளை அனுபவப்பட்ட பின்னரே அறிந்து கொள்வார்கள்.

Read more...
 
தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள் Print E-mail
Friday, 30 August 2013 14:46

தலாக், குளா, ஃபஸ்க்கே நிகாஹ்வின் இஸ்லாமிய வழிமுறைகள்

"இறைநம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் 'ருகூவும்' ஸுஜூதும் செய்யுங்கள். உங்கள் இறைவனுக்கு அடிபணியுங்கள். மேலும், நற்பணியாற்றுங்கள். (இதன் மூலம்) நீங்கள் வெற்றி அடையக்கூடும்! மேலும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எவ்வாறு ஜிஹாத் செய்ய வேண்டுமோ அவ்வாறு ஜிஹாத் செய்யுங்கள்.

அவன் (தனது பணிக்காக) உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். மேலும், அவன் தீனில் - வாழ்க்கை நெறியில் உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் வைத்திடவில்லை.

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கத்தில் நிலைத்திருங்கள். அல்லாஹ் உங்களுக்கு 'முஸ்லிம்கள்' என்றுதான் முன்பும் பெயர் சூட்டியிருந்தான்;

இதிலும் (குர்ஆனிலும் உங்களுக்கு அதே பெயர்தான்!) - தூதர் உங்கள் மீது சான்று வழங்குபவராகவும், நீங்கள் மக்கள் மீது சான்று வழங்குபவர்களாகவும் திகழ வேண்டும் என்பதற்காக!

எனவே, தொழுகையை நிலைநாட்டுங்கள்; ஜகாத் கொடுங்கள், மேலும், அல்லாஹ்வை இறுகப்பற்றிக் கொள்ளுங்கள். அவன் தான் உங்களுடைய பாதுகாவலன், அவன் எத்துணைச் சிறந்த பாதுகாவலன்; மேலும், அவன் எத்துணைச் சிறந்த உதவியாளன்! (திருக்குர்ஆன் 22 : 77,78)

Read more...
 
மறுமணத்திற்கான அவகாசம் - இத்தா (சட்ட விளக்கம்) Print E-mail
Wednesday, 30 October 2013 07:59

மறுமணத்திற்கான அவகாசம் -

இத்தா (சட்ட விளக்கம்)

திருமணமான ஒரு முஸ்லிம் பெண் கணவனால் விவாகரத்து செய்யப்பட்டாலோ அல்லது கணவன் இறந்து விட்டாலோ குறிப்பிட்ட நாட்களுக்கு சில காரியங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரபு மொழி வழக்கில் இதை 'இத்தா' என்று குறிப்பிடுவர். காத்திருத்தல் என்ற பொருளில் இது பயன்படுத்தப் படுகிறது.

1) கணவனால் விவாகரத்து செய்யப்பட்டப் பெண் விவாகரத்து செய்த கணவனுக்காக மூன்று மாதவிலக்கிலிருந்து தூய்மை அடையும்வரை காத்திருக்க வேண்டும். இதுப்பற்றிய விரிவான விளக்கம் நமது இணையத்தளத்தில் இடம் பெற்றுள்ள 'தலாக் சட்டமும் தவறான புரிதல்களும்' என்ற கட்டுரையில் இடம் பெற்றுள்ளது.

2) கணவன் இறந்துப் போன பெண்ணுக்குரிய இத்தா.

"உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். காத்திருக்கும் தவணை முடிந்ததும் அவர்கள் தங்கள் காரியத்தில் ஒழுங்காக எதையும் செய்துக் கொள்ளலாம்'' (அல் குர்ஆன் 2:234)

'இத்தா இருக்கும் பெண்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புபவர்களாக இருந்தால் தங்கள் கர்ப்பத்தில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைக்கக் கூடாது' (அல் குர்ஆன் 2;:228)

'கர்ப்பிணி பெண்களின் காத்திருக்கும் (இத்தா) தவணை பிரசவிக்கும் வரையிலாகும்' (அல் குர்ஆன் 65:4)

Read more...
 
நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும் Print E-mail
Friday, 05 June 2015 06:22

ஸஹாபாக்களும் சிறப்புகளும்

M U S T   R E A D

நபித் தோழர்களின் நிலையும் நம்பிக்கையும்

  சையத் அப்துர் ரஹ்மான் உமரி  

ஆற்றலும் வல்லமையும் மிக்க அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தூதருக்குத் தோள் கொடுக்க இந்த உம்மத்தில் மிகச் சிறந்த சான்றோர்களைத் தேர்ந்தெடுத்தான்.

இஸ்லாமின் அழைப்புப் பணியை அவர்கள் முன்னெடுத்தச் சென்றார்கள். தப்லீக் எனும் அடைக்கலப் பொறுப்பை அவர்கள் சுமந்தார்கள்.

அருகிலுள்ளவர்கள், தொலைவில் உள்ளவர்கள், தீனைப் பற்றி அறிந்தோர், அறியாதோர் அனைவரிடமும் தப்லீக் எனும் அடைக்கலத்தை கொண்டு போய்ச் சேர்க்கும் பணிக்காக உலகத்தையும் உலக இன்பத்தையும் துறந்தார்கள்.

இன்னல்களும் இடுக்கன்களும் சூழ்ந்த பாதையைத் தமதாக்கிக் கொண்டார்கள். துன்பங்களையும் தொல்லைகளையும் சகித்துக் கொண்டார்கள்.

பாருலகின் மூலை முடுக்கெல்லாம் இந்நன்னெறியைக் கொண்டுபோய் சேர்க்கும் வரை ஓயவில்லை; ஒதுங்கி நிற்கவில்லை.

காலம் நெடுக, வரலாறு முழுக்க அவர்தம் பணிச் சிறப்பை நம்மால் உணர முடியும். இஸ்லாமின் தரப்பிலிருந்தும் முஸ்லிம்களின் தரப்பிலிருந்தும் அவர்களுக்கு உரிய நிறைவான கூலியை அல்லாஹ் நல்கட்டும்.

Read more...
 
செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா? எது சுன்னா? (1) Print E-mail
Tuesday, 26 March 2013 06:31

செய்ததை அப்படியே செய்வதா, நோக்கமறிந்து செய்வதா? எது சுன்னா? (1)

    உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்     

"நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு கருமத்தை எப்படிச் செய்தார்களோ அதனை அப்படியே செய்வதுதான் ஸுன்னா. அதனை மாற்றிச் செய்தால் சுன்னா புறக்கணிக்கப்படுகின்றது. மாற்றிச் செய்பவர் நபியையே புறக்கணிக்கிறார். எனவே, நபிகளாரின் சுன்னாக்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டும்."

இந்தக் கூற்றை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முயற்சியே இவ்வாக்கம். இந்தக் கூற்றை விளங்குவதற்கு முதலில் பின்வரும் வினாவை எடுத்துக் கொள்வோம்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அனைத்துக் கருமங்களையும் அவர்கள் செய்தது போலவே செய்ய வேண்டுமா?

சில செயல்களை நபிகளார் செய்தது போலவே செய்ய வேண்டும். அத்தகைய செயல்கள் வரிசையில் முதல் இடம்பெறுவது வணக்க வழிபாடுகளாகும்.

வணக்க வழிபாடுகளான தொழுகை, நோன்பு போன்ற அமல்களில் நபிகளார் எதை, எப்படிச் செய்தார்களோ அதை அப்படியே செய்ய வேண்டும். சில அமல்களை அவர்கள் இரண்டு விதமாகச் செய்திருந்தால் நாமும் இரண்டு விதமாகச் செய்யலாம். சிலதை மூன்று விதமாகச் செய் திருந்தால் நாமும் மூன்று விதமாகச் செய்யலாம். அவற்றுள் ஒன்று ஆதார பலம் கூடியதாக அல்லது குறைந்ததாக இருக்கலாம். எனினும், நபிகளார் செய்த முறைகளில் ஒன்றைப் பின்பற்றுவது ஆகுமானதே.

Read more...
 
தம்பதிகளுக்குள் `தடுமாற்றம்' ஏன்? Print E-mail
Monday, 03 October 2011 08:54

     தம்பதிகளுக்குள் `தடுமாற்றம்' ஏன்?     

பஸ், ரெயிலில் புதுமணத் தம்பதிகள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

அருகருகே ஒட்டி அமர்ந்திருப்பார்கள். எந்நேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

அவர்கள் முகத்தில் புன்னகை இருக்கும். பேச்சில் சிணுங்கல் தெரியும்.

சாலையின் இருமருங்கிலும் அவர்களை கடந்துபோகும் ஒவ்வொன்றும் சந்தோஷ சமாச்சாரங்களாக இருக்கும்.

அப்போது அவர்கள் வாழ்க்கை சந்தோஷ சாம்ராஜ்யம் போன்றிருக்கும்.

நாலைந்து மாதங்கள் கடந்திருக்கும்...

அதே பஸ், ரெயில் பயணம். அதே சக பயணிகள். சாலை இருமருங்கிலும் அதே காட்சிகள். எல்லாம் பழையதுபோல் இருந்தாலும் இந்த தம்பதிகளின் சுபாவம் மட்டும் தலைகீழாய் மாறியிருக்கும்.

கொஞ்சல் இல்லை.

பேச்சில் சிணுங்கள் இல்லை.

நெருக்கமும் இல்லை.

நீ யாரோ நான் யாரோ என்பதுபோல் ஆளுக் கொரு பக்கமாய் இறுக்கத்துடன் காணப்படுவார்கள்.

Read more...
 
மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை Print E-mail
Monday, 07 February 2011 11:02

மனைவிக்கு ''இல்லற சுகம்'' அளிக்க வேண்டியது கணவனின் கடமை

 மவ்லவி, எஸ். லியாகத் அலீ, மன்பஈ  

[ இறைவணக்கத்தில் ஈடுபட்டதன் காரணமாக மனைவியை மகிழ்விக்க முடியவில்லை என்று காரணம் கூறித் தப்பிக்கவும் முடியாது. இரவில் சில பகுதியை மட்டுமே இறைவணக்கத்துக்காக ஒதுக்கலாமே தவிர முழு இரவையும் வணக்கத்திலேயே கழித்துவிட அனுமதியில்லை. ஏனெனில் தனது துணைவிக்கு சுகமளிப்பதும் இறைவணக்கத்தின் பாற்பட்டதே.

மனைவிக்கு பணம் அனுப்புவதும், நகை வாங்கிப் போட்டு அழகு பார்ப்பதும், கோடிக்கணக்கில் சொத்துக்களை அவள் பெயரில் வாங்கிக் குவிப்பதும் மனைவியை மகிழ்விப்பதாகவோ, அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்துவிட்டதாகவோ அர்த்தமாகாது.

தன் தந்தை தாயுடன் வாழ்ந்தபோது உணவு, உறைவிடம், உடை போன்ற தேவைகள் அவளுக்கு நிறைவாகவே இருந்தன. இவற்றுக்காக அவள் நம் இல்லம் தேடி வரவில்லை. அவளுக்கு திருமணம் நடந்திருப்பது இதற்காக அல்ல, இல்லற சுகத்திற்காக மட்டுமே என்பதைப் புரிந்து அந்த விஷயத்தில் அவளை பரிபூரண திருப்தி பெறச் செய்வது கணவன் மீது நீங்கா கடமை.

தன் மனைவியை மகிழ்விக்கச் செய்யும் காரியங்களில் முதன்மையானது அவளுக்குத் தான் அளிக்கின்ற இல்லற இன்பமே என்பதை ஒவ்வொரு கணவனும் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.]

Read more...
 
காலையில் எழுந்ததும் 'பசிக்கிறதா'? Print E-mail
Friday, 20 May 2011 11:33

  காலையில் எழுந்ததும் ''அந்த.....'' பசியா?    

[ உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா...?]

இன்னும் சூரியன் உதிக்காத காலைப் பொழுது, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், ஜன்னலைத் திறக்கும்போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பரவசமான நிலையில் உங்களது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.

இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான்.

ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பசி' உணர்வு எழுவது சகஜம். அதேசமயம், பெண்களுக்கு அந்த உறவில் பெரும்பாலும் நாட்டம் ஏற்படுவதில்லை.

Read more...
 
தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்! Print E-mail
Sunday, 27 March 2011 08:05

தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்!

மாதவிடாய் நாட்களைத்தவிர்து மற்ற நாட்கள் அனைத்துமே கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட ஏற்ற நாட்கள்தான். இருந்தாலும் சில நாட்களில் அந்த இல்லற (உடல்) உறவை தவிர்த்திருப்பது ஆரோக்கியம். அவை எந்தெந்த நாட்கள்? இதோ உங்களுக்காக!

o கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.

o பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.

o சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

Read more...
 
நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள்! Print E-mail
Saturday, 16 April 2011 12:38

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள்!

கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.

கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....

இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை..... இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.

அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான்.

ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான். ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.

Read more...
 
மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா? Print E-mail
Sunday, 25 September 2011 07:24

மண முறிவுகளுக்கு மன முறிவுகள் மட்டுமே காரணமா?

[ காதலில்லா நெஞ்சம் நிச்சயமாக தேவைகளைப் பெறுவதில் மிகக் கடுமையாக இருக்கும். காதல் கொண்ட நெஞ்சம் மிகையுண்ட காதலால் மற்ற குறைகளை மாற்றி விடும் அல்லது ஏற்றுக் கொண்டுவிடும். எனவே காதல் மணமென்றாலும், பெற்றோர் முடித்த மணமென்றாலும் காதல் நிறைந்திருந்தால் மணவாழ்வு நிறைவு பட நிலைக்கும்.

முதலில் இணைகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயலவேண்டும். இது ஒரு இணை மற்றவரை கூர்ந்து கவனிப்பதாலேயேதான் உருவாகும். பொதுவாகவே இனக்கவர்ச்சியற்ற காதல் உருவாவது இப்படித்தான். பழகப் பழக மற்றவரிடம் இருக்கும் தனித்தன்மை கொண்ட குணங்களிலிருந்து அவரிடமுள்ள சிறு சிறு அசைவுகள் வரையில் நம்மை கட்டியிழுத்து மயக்கி அவரது நிலையான அருகாமைக்காக வெகுவாக ஏங்க வைக்கும்.]

மண முறிவுகள் ஒருவகையில் மக்களின் மன சுதந்திரத்தினை பறை சாற்றும் ஒரு செயலாக இருந்தாலும் இந்த மண முறிவுகள் தடுக்கப் படவேண்டிய சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதே இன்றைய பேச்சு.

மண வாழ்வானது ஒருவரை மேம்படுத்தக் கூடியதுதான் - மகிழ்ச்சியுடன் இணைகள் வாழ்வைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் வாழ்வு அமையும் போது. மேற்சொன்னபடி இல்லாத வாழ்வு வறண்ட பாலைக்குச் சமம் என சான்றோர் பகன்றிருக்கின்றனர். அத்தகைய வன்முறை நிறைந்த மண வாழ்வை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல ஏற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்பதே உண்மை.

Read more...
 
''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' Print E-mail
Thursday, 25 February 2010 07:49

Image result for அல்லாஹ்வின் கயிறு

''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்''

''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.'' (திருக்குர்ஆன் 3:103)

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

''ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

Read more...
 
அல்லாஹ்வை நம்புதல் Print E-mail
Friday, 05 March 2010 14:36

Image result for allaah

அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

அல்லாஹ் எங்கே இருக்கின்றான் என்று உன்னிடம் யாராவது கேட்டால் நீ அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் எவ்வாறு அமர்வது அவனுக்குத் தகுதியானதோ அந்த விதத்தில் அமர்ந்திருக்கிறான் என்று கூறவேண்டும்

அல்லாஹ் அர்ஷில் அமர்ந்துள்ளான் என்பதற்கு அதிகமான திருக்குர்ஆன் வசனங்கள் சான்றாக உள்ளன. பின்வரும் வசனங்களிலிருந்தும் ஹதீஸிஆருந்தும் அல்லாஹ் வானத்திலுள்ள அர்ஷில் உள்ளான் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்

''வானத்தில் உள்ளவன் பூமியில் உங்களைப் புதையச் செய்வதில் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) நடுங்கும்'', (அல்குர்ஆன் 67:16.)

''அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.'' (அல்குர்ஆன் 20:5).

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு அடிமைப் பெண்ணிடம் அல்லாஹ் எங்கே இருக்கின்றான்? என்று கேட்டார்கள்.

அப்பெண், அல்லாஹ் வானத்திலிருக்கிறான் என்று கூறினாள்.

நான் யார்? எனக் கேட்டார்கள். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று கூறினாள்.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவளது எஜமானனிடம் இவள் முஃமினான பெண்மணியாவாள்.

இவளை உரிமை விட்டுவிடு என்று கூறினார்கள். (அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் (836)

Read more...
 
முதலில் செவிப்புலன் பிறகு பார்வைப்புலன்! Print E-mail
Friday, 19 February 2010 10:47

குர்ஆன் கூறும் கருவியல்

மனிதன் தன் தாயின் கருவறையில் வளாந்துக் கொண்டிருக்கும் காலக்கட்டத்தில் முதலில் (5 வது மாதம்) அவனுடைய காதுகள் முழுவளாச்சியடைகிறது, அதன் பின்னரே (7 வது மாதம்) அவனின் கண்கள் முழு வளாச்சியடைகின்றது என்பதை கி.பி. 20 ம் நூற்றாண்டின் அறிவியலாளாகள் நவீன கருவிகளின் உதவியோடு ஆராய்ந்து அறிந்த அறிவியல் உண்மையை, இருண்ட காலம் என அறிவியலாளாகளால் கூறப்படும் 1400 ஆண்டுகளுக்கு முன்னரே அல்லாஹ்வின் அருள்மறை வசனம் கூறியிருப்பது அருள்மறை ஓர் இறைமறை என்பதற்கு மேலும் ஒர் ஆதாரமாகும்.

''பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் - இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.'' (அல் குர்ஆன் 32:9) 

''(பின்னர் ஆண், பெண்) கலப்பான இந்திரியத் துளியிலிருந்து நிச்சயமாக மனிதனை நாமே படைத்தோம் - அவனை நாம் சோதிப்பதற்காக அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்'' (அல்குர்ஆன் 76:2)

Read more...
 
கள்ளக் கணவனின் நெருக்கமும்! கட்டிய கணவனின் மரணமும்!... Print E-mail
Friday, 17 September 2010 15:57

No automatic alt text available.

கள்ளக் கணவனின் நெருக்கமும்! கட்டிய கணவனின் மரணமும்!...

சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக, ஈரான் நாடு தான் ஓரளவு இஸ்லாமிய குற்றவியல் சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், அந்த நாட்டில் விபச்சாரத்தில் ஈடுப்பட்ட ஒரு பெண்ணிற்கு ஈரான் ஷரியத் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தது. அதுவும் பொது மக்கள் முன்னிலையில் கல்லால் எரிந்து கொள்ளப்படவேண்டும் என்று.

இஸ்லாத்தை அழிக்க நினைக்கும் நாடுகளும், அதன் அபிமானிகளும், எதற்க்கெடுத்தாலும் மனித உரிமை பேசும் அதன் ஆர்வலர்களும், இந்த தண்டனையை விமர்சனம் செய்தனர். அது மட்டுமல்லாமல் இந்த தண்டனையை குறைக்க வேண்டும் அல்லது ரத்து செய்யவேண்டும் என்று கொக்கரித்தனர். இது தொடர்பான ஒரு செய்தி நாளிதழ் ஒன்றில் 07 -09 -2010 அன்று வெளியானது.

அதில் "உலகநாடுகள் கண்டித்த, இந்த செயலை ரமளான் மாதத்தில் அந்த நாடு நிறைவேற்ற இருந்தது. ரமளான் மாதத்தில் இப்படி செய்வதற்கு அரபு நாடுகள் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பியதால் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு பரபரப்பான தகவலாக பரப்பியது அதன் உண்மை நிலையை அறிந்துக்கொண்டு விஷயத்திற்கு வருவோம்.

Read more...
 
Why do we sleep? Print E-mail
Sunday, 31 May 2009 07:12

Image result for Why do we sleep?

    The science of sleep    

We spend a third of our lives doing it.

Napoleon, Florence Nightingale and Margaret Thatcher got by on four hours a night.

Thomas Edison claimed it was waste of time.

Why do we sleep?

So why do we sleep? This is a question that has baffled scientists for centuries and the answer is, no one is really sure. Some believe that sleep gives the body a chance to recuperate from the day's activities but in reality, the amount of energy saved by sleeping for even eight hours is miniscule - about 50 kCal, the same amount of energy in a piece of toast.

Read more...
 
ரிலாக்ஸ் பிளீஸ்...! Print E-mail
Thursday, 17 February 2011 09:46

Image result for relax

ரிலாக்ஸ் பிளீஸ்...!

      கவ்சல்யா       

[ என் கூச்சல் கேட்டு மெதுவா...?!! வந்த என்னவர் அவர் பங்குக்கு ஏதோ சமாதானம் செய்தார்... என் மண்டைக்கு எதுவும் ஏறல... புலம்பறதையும் நிறுத்தல... அப்பதான் தூக்கத்தில் இருந்து எழுந்த என் பையன் பக்கத்தில வந்து, "ஏம்மா வருத்த படுறீங்க, உங்களை விட அதிகமா ரோஜா செடியை லவ் பண்றவங்க தான் இந்த மாதிரி எடுத்திட்டு போய் இருப்பாங்க, அதை அவங்க நல்லா பார்த்துப்பாங்க, ப்ரீயா இருங்க...டென்ஷன் படாதிங்க"னு ரொம்ப சாதாரணமா சொல்லிட்டு போய்ட்டான்...! நான் அப்படியே திக் பிரமை பிடிச்சி நின்னுட்டேன்.

என்ன ஒரு தெளிவு! என்ன அழகான நேர்மையான எண்ணம்! இது ஏன் எனக்கு இல்லை?? அந்த நிமிஷம், சக மனிதர்களையும் நேசிக்கணும் என்பதை சொல்லாமல் அறிவுறுத்தி சென்ற என் மகனை நினைத்து எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.]

உற்சாகம் எதில் இருக்கிறது ?? என்று கேட்பதை விட அப்படினா என்ன என்று கேட்ககூடிய நிலையில் தான் இப்ப நம்ம நிலைமை இருக்குனு சட்னு சொல்லிடலாம்...?! வேலை, விலைவாசி,கல்யாணம், குடும்பம். குழந்தை, படிப்பு.......இப்படி நாம புலம்பறதுக்கு நமக்கு நிறைய விஷயம் இருக்கு. பணம் பின்னாடி ஓடவே நேரம் சரியாக இருக்கிறது இந்த காலத்தில நான் உற்சாகம் அப்படின்னு சொன்னா கிலோ என்ன விலைன்னு தான் கேட்கவேண்டியது இருக்கிறது.

Read more...
 
மருத்துவத்தின் அரசியல் (1) Print E-mail
Monday, 25 October 2010 08:00

மருத்துவத்தின் அரசியல்

MUST READ

       மருத்துவர்,அ.உமர் ஃபாரூக்      

மருத்துவ உலகின் எந்த ஒரு விஷயம் பற்றி விவாதித்தாலும் அதன் பின்னால் நிழலாய்த் தொடரும் வலைப்பின்னலில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் தப்பிவிட முடியாது. வெளிப் படையாய்த் தெரியும் பல விஷயங்கள் அதன் ஆழத்தில் திட்டமிட்டு பின்னப்பட்ட அரசியலின் மேல் தான் நிறுவப்பட்டிருக்கின்றன.

நம்நாட்டு மருத்துவக்கல்வியின் கட்டமைப்பு பற்றி நாம் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். சமீபத்தில் ஊழல் வழக்கில் கைதான இந்திய மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் பற்றி இன்று நாடே பேசிக்கொண்டிருக்கிறது என்றாலும் அத்தனையும் கடந்து நுட்பமான உள்முகங்களுக்குச் செல்லலாம்.

இந்திய மருத்துவக் கவுன்சில் (Indian Medical Council) என்ற பெயரில் இருந்தே அரசியல் துவங்குகிறது.

இந்தியாவின் ஹோமியோபதி மருத்துவக் கல்வியை முறைப்படுத்த Indian Homeo Medical Council, சித்தமருத்துவ, ஆயுர்வேதக் கல்வியை முறைப்படுத்த Indian Siddha and Ayurvedha Medical Council.

இப்படி அந்தந்த மருத்துவமுறைகளின் பெயர்களிலேயே மாற்று மருத்துவக் கவுன்சில்கள் இயங்குகின்றன. எனில் ஆங்கில மருத்துவக் கவுன்சில் Indian Allopathic என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் Indian Medical Council என்ற தன் பெயரிலேயே இந்தியாவின் மருத்துவத் தலைமை நிறுவனமாகத் தோற்றமளிக்கிறது.

இந்த ஆங்கில மருத்துவக் கவுன்சில் தன் துறையான ஆங்கில மருத்துவத்தில் மட்டும் தலையிடாமல், எல்லா மருத்துவத்துறைகளின் கல்வித் திட்டங்களிலும் அரசு ஒத்துழைப்போடு மூக்கை நுழைக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக்கவுன்சில் பிறதுறைகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவ தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கூட நாம் கேட்கலாம். மாற்று மருத்துவக்கல்வியில் ஆங்கில மருத்துவம் கலந்ததால் இந்த 50 ஆண்டுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன; எதிர்காலத்தின் மாற்று மருத்துவ வளர்ச்சியே கேள்விக்குறியாகும் அளவிற்கு.

Read more...
 
உலமாக்களும் பாமர மக்களும் Print E-mail
Monday, 09 September 2013 06:22

   அப்துல் ஹமீத் (ஷரஈ)   

சமூகத்தில் சில தவறுகள் மார்க்கம் என்ற போர்வைக்குள் தவறே இல்லாதது போல் ஒளிந்து கொள்ளும் போது அதை திரை நீக்கி வெளிச்சத்துக்கு கொண்டுவருவதே நமது நோக்கமாகும். தனிப்பட யாரையும் சாடுவது நமது நோக்கமல்ல.

பிரபல்யத்துக்காக அல்லது பிரபல்யம் அடைந்து விட்டோம் என்பதற்காக தான் இதுவரை சொன்ன கருத்தை நடு நிலையோடு சிந்திக்காமல் அதனை வலுப்பெற வைக்க வரிந்து கட்டிக் கொள்ளும் நிலை பற்றிப் பார்ப்போம்.

خالف تعرف

''முரண்படு பிரபல்யமடைவாய்'' என்று ஒரு அரபுப் பழமொழி உள்ளது. எல்லோருக்கும் மாற்றமான கருத்தை எவராவது ஒருவர் சொன்னால் அவர் அங்கு பிரபல்யம்தான்.

அது போல் இன்று அழைப்பாழர்களாகச் செயற்படும் சில உலமாக்களும் மற்றும் பாமர மக்களும் பிரபல்யத்துக்காக ஒரு சில முரண்பட்ட கருத்துக்களை தேடித் தேடி சொல்வதும் அல்லது இதுவரைகாலமும் அடித்துச் சொன்ன ஒரு கருத்து தவறி விடாமல் இருக்க முட்டுக் கட்டைகளாக பொருத்தமற்ற ஹதீஸ்களையும், அதில் இல்லாத வார்த்தைகளை ஹதீஸ்கள் போன்று பயன்படுத்துவதையும் அவதானிக்கக்கூடியதாய் உள்ளது.

Read more...
 
நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிடுவோம் Print E-mail
Thursday, 19 May 2011 08:05

Related image

நெஞ்சங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிடுவோம்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

தயவு செய்து மார்க்கத்தின் பெயரால் குடுமிப்பிடி சண்டை செய்யாதீர்கள். 

قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ ۖ بِيَدِكَ الْخَيْرُ ۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِير

(நபியே!) நீர் கூறுவீராக: 'அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்; இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்; நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப் பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். (அல்குர்ஆன் 3:26)

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 Next > End >>

Page 91 of 97

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article