வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்! Print E-mail
Monday, 21 August 2017 07:24

மறுமையில் கிடைக்கும் ஷஃபாஅத்!

      மௌலவி யூனுஸ் தப்ரீஸ்      

இந்த உலகம் அழிக்கப்பட்டு மறுமை நாள் ஏற்ப்படுத்தப்பட்டவுடன் மக்களெல்லாம் கப்ருக்குள்லிருந்து வேக, வேகமாக வெளியேறுவார்கள். யாரும் யாருக்கும் உதவி செய்ய முடியாத அந்த நாள், எனக்கு என்ன நடக்குமோ என்று அச்சம் நிறைந்த பயங்கரமான அந்த மறுமை நாள். அந்த நாளில் சிலரால் பாவிகளுக்கு பரிந்துரை(ஷஃபாஅத்) மூலம் ஈடேற்றம் கிடைக்கும். பாவிகளுக்கு எந்த, எந்த அடிப்படையில் (ஷஃபாஅத்) பரிந்துரை கிடைக்கும் என்பதை தொடர்ந்து விளங்கிக் கொள்வோம்.

மலக்குமார்களின் ஷஃபாஅத்

மறுமை நாளில் அல்லாஹ்வின் விசேச படைப்புகளான குறிப்பிட்ட மலக்குமார்களுக்கு ஷஃபாஅத் செய்யும் அனுமதியை அல்லாஹ் கொடுக்கிறான் அந்த மலக்குகளின் ஷபாஅத்தின் மூலம் ஒரு தொகை பாவிகளுக்கு சுவனம் செல்லும் பாக்கியம் கிடைத்து விடும்.

“அன்றியும் வானங்களில் எத்தனை மலக்குகள் இருக்கின்றனர்? எனினும், அல்லாஹ் விரும்பி, எவரைப்பற்றித் திருப்தியடைந்து, அவன் அனுமதி கொடுக்கின்றானோ அவரைத் தவிர வேறெவரின் பரிந்துரையும் எந்தப் பயனுமளிக்காது” (அல்குர்ஆன் 53:26)

Read more...
 
ஸலவாத்து சொல்வோம் Print E-mail
Thursday, 19 February 2009 08:37

ஸலவாத்து சொல்வோம்

"யார் என்மீது ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணமாக அல்லாஹ் அவருக்கு பத்து மடங்கு அருள்புரிகிறான்." - நபி صلى الله عليه وسلم அவர்கள்

நபி صلى الله عليه وسلم அவர்கள் மூலமாக மிகச்சிறந்த வழிகாட்டுதலை அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ளான். அல்லாஹ்வால் தரப்பட்ட பொறுப்பை சரியான முறையில் அவர்கள் நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் செய்தியில் கூடுதல் குறைவின்றி அப்படியே நம்மிடம் ஒப்படைத்தார்கள்.

மக்கள் நேர்வழி அடையவேண்டும் என்பதற்காக ஈடுபட்ட போராட்டத்தில் எண்ணற்ற துன்பங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டும் தாங்கிக்கொண்டார்கள். நமது தாய் தந்தை மற்றும் அனைவைரையும் விட அவர்கள் மீது அன்பு வைப்பது நம்மீது கடமையாகும்.

நம்மில் சிலர் ஸலவாத் என்றாலே நபிகள்صلى الله عليه وسلمஅவர்களிடம் நான் எதனையோ கேட்கிறோம் என்று கருதிக்கொண்டுள்ளனர். உண்மை அதுவல்ல. மாறாக நபிصلى الله عليه وسلم அவர்களுக்காக நாம்தாம் துஆச் செய்கிறோம்.

Read more...
 
கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும் Print E-mail
Monday, 16 November 2020 18:33

கலாசாரத்தை அழிக்கும்  நாகரீக மாற்றமும்,  முறையற்ற உறவுகளும்

1. நண்பனின் மனைவியை அடைவதற்காக நண்பனை கொலை செய்தவன் கைது.

2. கள்ளக் காதலுக்காக பெற்ற பிள்ளையை வெட்டி ஃப்ரிஜ்ஜுக்குள் வைத்த தாய்!

3. ஆண் நண்பர்களுக்கு மது விருந்து கொடுத்து பிறந்த நாள் கொண்டாடிய பெண் கற்பழித்துக் கொலை.

4. தாய் மகன் கொலை, நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் பெண் மணிக்கனக்கில் பேசியது அம்பலம்.

நாள் தோறும் நாளிதழ் திறந்தால் குறைந்த பட்சம் நாலு செய்திகள் இப்படி நம் கண்களை கவ்விக்கொள்ளும். பெரும்பாலான செய்திகளில் காணப்படுவது என்ன?

முறையற்ற உறவும், கூடா நட்பும் தான் இவற்றின் மூல காரணங்கள். அருவருக்கத்தக்க விதத்தில் உறவுகளை வளர்த்துக் கொண்டு பின் அதிலிருந்து வெளிவரமுடியாமல் திண்டாடி, காமமாய்க் கசிந்து கோபமாய் மாறி கொலையில் முடிந்து செய்தித்தாளில் புகைப்படமாகி ஊர்வாய்க்கு அவலாய் முடியும் அவலம் வேறெங்கும் இல்லை. நம் தமிழகத்தில் தான்.

கலாச்சாரத்தின் பிறப்பிடமான நமது நாட்டின் மனித உறவுகள்  கட்டற்ற முறையில் முறையற்ற வகையில், தவறான பாதையில் போகிறதே! யார் காரணம்? 

ஆண்களா இல்லை ஆண்களைக் கவரும் பெண்களா?

இருபாலரும் ஒரு சேர வழிதவறிச் செல்ல காரணம் என்ன?

சமூகமே அப்படித்தான் இருக்கிறது அதனால் தனிமனிதர்கள் இப்படி மாறிவிட்டார்கள் எனலாமா?

இல்லை இல்லை தனிமனிதர்களின் மாற்றங்கள் இப்போது சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்ல வேண்டுமா?

Read more...
 
உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு! Print E-mail
Monday, 26 March 2012 08:49

    உலக கல்வியும், மார்க்க கல்வியும்: உங்கள் குழந்தைக்கு!     

பெரும்பாலான பெற்றோர்கள் கேட்கும் கேள்வி, மார்க்க கல்வியுடன் உலக கல்வி போதிக்கும் பள்ளி கூடங்கள் எங்கு இருக்கின்றன என்று. சென்னையிலும், பல ஊர்களிலும் உலக கல்வியுடன் இஸ்லாமிய கல்வியையும் சேர்த்து போதிக்கின்றோம் என சொல்லும் சில பள்ளிகள் இருகின்றன, இங்கு இடம் கிடைப்பது மிக மிக கடினம், இடம் கிடைத்தாலும் கல்வி கட்டணம் மிக மிக அதிகம்.

சாதாரண மக்கள் இங்கு படிப்பது நடக்காத காரியம். சரி குறைந்த செலவில் மார்க்கம் மற்றும் உலக கல்வி போதிக்கும் இஸ்லாமிய பள்ளி இருக்கின்றதா? என்றால் இல்லை என்பதுதான் உண்மை. இனிமேலும் உருவாவதற்க்கு வாய்புகளும் குறைவுதான்.

தற்போது உயர்ந்துவரும் நிலத்தின் மதிப்பு, வாடகை, ஆசிரியர் சம்பளம், கரண்ட் பில், வாகன வசதி என பல பிரச்சனைகள் இருப்பதால் இனிமேலும் யாராவது அப்படி ஒருபள்ளிக் கூடம் ஆரம்பித்தாலும் இதை சேவை அடிப்படையில் செய்ய யாரேனும் முன்வந்தாலே தவிரகுறைந்த கட்டணத்தில் பள்ளியை நடத்த இயலாது. ஏழைகள் என்ன செய்வது? வசதி குறைந்தவர்கள் பிள்ளைகளை எந்த பள்ளியில் சேர்ப்பது என இப்போது பார்ப்போம்.

Read more...
 
இஸ்லாத்தின் இலக்கணம் Print E-mail
Saturday, 16 July 2011 15:17

     மவ்லவி, ஏ. முஹம்மது இஸ்மாயில் ஃபாஜில், பாகவி    

[ மற்றவரைப் போன்றே (இஸ்லாமிய ஆண்கள், பெண்கள்) உடையணிந்து, ஆண்கள் தங்க நகை அணிந்து, தரை தட்ட கீழ் வேஷ்டிகள் கட்டுவது, நின்ற வண்ணம் சிறுநீர் கழிப்பது, சுத்தம் செய்யாதிருப்பது, குடிப்பது, சூதாடுவது, வட்டிக் கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவது போன்ற இத்யாதி செயல்பாடுகளில் பல முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இவை யாவும் கலாச்சாரச் சீரழிவாகும். முஸ்லிம்கள் வாழ்வில் இடம் பெறக் கூடாத அசிங்கங்கலாகும்.

எந்த முஸ்லிமும் பொய் சொல்லக்கூடாது. பிறரை ஏமாற்றக்கூடாது. தில்லு முல்லுகளில் ஈடுபடக்கூடாது. குறிப்பாக தொப்பி அணிந்துக்கொண்டு ஜிப்பா போட்டுக்கொண்டு தாடியும் வைத்துக்கொண்டு பாவங்களில் ஈடுபட்டால் அது உயரிய மார்க்கம் இஸ்லாத்திற்கு மேலும் இழுக்கு என்பது உண்மைதான்! அதற்காக ஒரு முஸ்லிம்தான் இதுபோன்ற சுன்னத்துகளை கடைபிடிக்காதிருக்க மேற்கண்டவாறு குற்றம் காட்டுவது அதுவும் இஸ்லாத்தை இழிவுபடுத்தும் செயலாகும். நாகரீகமான வாழ்வு என்பது இஸ்லாமிய சுன்னத் வழி முறைகளை கடைபிடிப்பதில் தான் இருக்கிறது என்பதை முதலில் நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் அந்த நாகரிக நடைமுறைகளை சொல்லாலும் அவமதிக்கக்கூடாது

முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருக்க வேண்டும். ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலா?

நீங்கள் இஸ்லாத்தில் முற்றிலுமாக நுழைந்து விடுங்கள்! என்று அல்லாஹ நம் போன்றோருக்கே கூறியுள்ளான்! ]

Read more...
 
குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள் Print E-mail
Sunday, 03 January 2021 08:19

குழந்தைகளை நேசிப்போர் இறைவனின் அருளைப் பெறுகிறார்கள்

''குழந்தைகளை நேசிப்போரும் குழந்தைகளுக்கு சேவை செய்வோரும் இறைவனின் அருளை பெறுகிறார்கள். நரகிலிருந்து விடுதலை அடைகிறார்கள்'' என்று அண்ணல்நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

ஒருமுறை ஒரு நபித்தோழர்  ''நபியவர்களே! அந்தக்குழந்தைகள் முஸ்லிம் குழந்தைகள் அல்ல''  என்றார் அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்   ''யார் குழந்தைகளாக இருந்தாலென்ன குழந்தை குழந்தைதான். எல்லாக் குழந்தைகளும் நேசத்திற்குரியதாகும்''   என்று கூறினார்கள்.]

குழந்தைகளுடனும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார்கள். குழந்தைகளுடன் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் அவர் முன்னோடியாக இருந்துள்ளார்கள்.

கைக்குழந்தைகளை  உலுக்குவதையோ மேலெறிந்து பிடிப்பதையோ பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்பவில்லை.  சற்று வளர்ந்த குழந்தைகளுடன்தான் அவ்வாறு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளையாடினார்கள். கைக்குழந்தைகளின் கழுத்து மென்மையானதால் மூளை பாதிப்படையவோ அல்லது மரண மேற்படவோ வாய்ப்புண்டு.

Read more...
 
குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா? Print E-mail
Tuesday, 22 March 2011 09:51

قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّىٰ

தூய்மையான (நற்)குணங்களைக் கொண்டவன்

திட்டமாக வெற்றி பெறுகிறான்.

குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?

    மவ்லவியா எம். வை. மஸிய்யா B.A     

குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா?

هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟

மனிதன் தனது குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு விடையளிப்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தென்படுகின்றன. அவை வருமாறு:

1. மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள முடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது என்பர் சில அறிஞர்கள்.

2. மனிதன் தனது குணங்களை மாற்றிக் கொள்ளலாம். அது அவனால் முடியாத, அசாத்த்தியமான விடயமன்று என்பர் அதிகமான அறிஞர்கள் இவ்விரு கருத்துக்களிலும், இரண்டாவது கருத்தே சரியானதாகும்.

பொதுவாக குணங்கள் இரு வகைப்படுகின்றன. அவை

1. மனிதனுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள குணங்கள்.

Read more...
 
சிதறிக் கிடக்கும் பெரும்படை..!! Print E-mail
Wednesday, 16 February 2011 07:28

சிதறிக் கிடக்கும் பெரும்படை..!!

[ முஸ்லிம் லீக் நின்றாலும் பிடிக்காது. ம.ம.க நின்றாலும் பிடிக்காது. ஆனால் நாங்களும் நிற்க மாட்டோம் என்று அடம்பிடிப்பது எந்தவகையில் நியாயம்? சமுதாய நலனை முன்னிலைப் படுத்தும் த.த.ஜ சிந்திக்கவேண்டும். உங்களுக்கிடையே உள்ள ஈகோவை எல்லாம் தேர்தலில் காண்பித்து நம் சமுதாயத்தின் பிரதி நிதித்துவத்தினை அடைய விடாமல் தடுப்பதை சிந்திக்கவேண்டும்.

த.த.ஜ - தமுமுக விற்க்கு இடையே உள்ள ஈகோ மற்றும் பொறாமை காரணமாக சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்கவிடாமல் செய்வதற்க்கு ஆயிரமாயிரம் காரணம் கூறினாலும், இன்று நமக்கு உள்ள அரசியல் அதிகார தேவைக்கு அது உதவாது!. மாறாக அது நம்மை மேலும் வலுவிழக்கவே செய்யும்!.

முஸ்லிம்களின் தாய் கழகமான முஸ்லிம்லீக் வழக்கம்போல் ஒன்றோ அல்லது இரண்டோ சீட்டுகளை மட்டும் பெற்றுக்கொண்டு திமுகவின் தேர்தல் சின்னமான உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாம்!. அல்லது தங்களின் சின்னத்தில் போட்டியிடலாம்!. இது இக்கட்சிக்கு ஆரோக்கியமான வளர்ச்சியல்ல!. முழுகட்சியையும் அது திமுக விடம் அடகு வைத்து பல வருடங்கள் ஆகிவிட்டன!.

234 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரே ஒரு முஸ்லிம்!. ஒரு அமைச்சர் கூட இல்லை!. முஸ்லிம்களின் நிலையை முன்னேற்ற சச்சார் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தவேண்டும் என்று போராட்டம் செய்து என்ன பயன்?.]

Read more...
 
வலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்! Print E-mail
Wednesday, 29 December 2010 09:06

வலது கரங்கள் சொந்தமாக்கிய பெண்கள்!

    அஃப்ஸலுல் உலமா உவைஸ்     

திருமணம் செய்யக்கூடாத பெண்களை வகைப்படுத்தி எந்த வேதமாவது சொல்லியுள்ளதா? என்றால் திருக்குர்ஆனைத் தவிர வேறெதுவும் இல்லை. பதினேழு பேரைத் திருமணம் முடிக்கக்கூடாது என்று திருக்குர்ஆன் ஒரே வசனத்தில் சொல்லிக் காட்டுகிறது.

மேலும் அல்லாஹ் பதினெட்டாவதாக ஒரு வகையாரையும் சொல்லிக் காட்டுகிறான். அதுதான் ‘வல்’ முஹ்ஸனாத்’ கற்பு பாதுகாக்கப்பட்ட பெண்கள் என்பது இதன் நேரடிப் பொருள்.

இந்த இடத்தில் ஏற்கனவே திருமணமாகிக் கணவனுள்ள பெண்கள் எனப் பொருள். நம் மொழியில் சொல்வதானால் அடுத்தவர் மனைவி. இவர்களும் கற்பை இன்னொருவனின் வேலியைக் கொண்டு அடைத்துக் கொண்டவர்கள். மற்றொருவன் அந்த வேலியை உடைத்துக் கொண்டு போக முடியாத பெண்கள்.

இந்தப் பெண்களும், அந்தக் கணவரால் விவாக விலக்குச் செய்யப்படும் வரை, தலாக்’ சொல்லப்படும் வரை, சொல்லப்பட்ட தலாக்கிற்கு ‘இத்தா’ இருந்து முடிக்கும் வரை அவளை வேறொருவன் மணக்கக்கூடாது. அப்படிச் செய்தால் அது விபச்சாரமே.

Read more...
 
'இன்ஷா அல்லாஹ்' இல்லையெனில் எதுவுமில்லை Print E-mail
Monday, 29 March 2010 08:17

وَقَالَ ارْكَبُواْ فِيهَا بِسْمِ اللّهِ مَجْرَاهَا وَمُرْسَاهَا إِنَّ رَبِّي لَغَفُورٌ رَّحِيمٌ .

''இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார். (11: 41)

நமக்கு எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் தூதராக நீண்ட காலம் சத்தியப் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு மிகக் குறைவிலான மக்களையே நேர்வழிக்கு கொண்டு வர முடிந்தது என்பதை அறிந்திருக்கிறோம்.

நேர்வழியை ஏற்றுக்கொண்ட சின்னஞ்சிறு கூட்டத்தினரின் மீது வழிகெட்ட பெருங்கூட்டத்தினரால் அளவு கடந்த சித்ரவதைகள் தொடர்ந்து கொண்டிருந்தன.

Read more...
 
வாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும் Print E-mail
Monday, 17 August 2009 06:48

வாரித்தெளிக்கும் வாக்குறுதிகளும் வல்லோனின் விசாரணையும்

لَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللّهَ يُحِبُّ الْمُتَّقِينَ

[ அப்படியல்ல! யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார்களோ, (அல்லாஹ்வுக்கு) அஞ்சியும் நடக்கின்றார்களோ (அவர்கள் தாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டார்கள்). நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு) அஞ்சி நடப்போரை நேசிக்கின்றான்.3:76 ]

கோடைக்காலம், குளிர்காலம், மழைகாலம் என்று மாறிவரும் பருவகாலங்களை போல் இது வாக்குறுதி காலம். தேர்தல்தேதி அறிவிக்கப்பட்டு திருமண[கூட்டணி] விவாகரத்து[கூட்டனிமுறிவு]கள் முடிவு செய்யப்பட்டு, படை பரிவாரங்களோடு பாமர மக்களை சந்தித்து அவர்களின் ஒரே சொத்தாக இருக்கக்கூடிய வாக்கு எனும் சொத்தை பறிக்க, 'சொத்தை' வாக்குறுதிகளை அள்ளித்தெளிக்க அரசியல்வாதிகள் கிளம்பிவிட்டார்கள்.

இந்த அரசியல்வாதிகள் அணியில் முஸ்லீம் சமுதாய அணிகளும் உண்டு. இந்த தேர்தலில் இலவச இணைப்பாக 'அரசியல் சாக்கடையை சந்தனமனம் கமழும் இடமாக மாற்றப்போகிறோம்' என்று புதிய அரசியல் அவதாரம் எடுத்துள்ள சமுதாய அமைப்புகளும் உண்டு.

Read more...
 
குழந்தைகள் எதிர்கொள்ளும் எட்டு சவால்கள் - எதிர்கொள்ளும் வழி! Print E-mail
Saturday, 14 April 2012 10:58

குழந்தைகள்  எதிர்கொள்ளும் எட்டு சவால்கள் -  எதிர்கொள்ளும் வழி! 

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தான்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அளவுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள்ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந்தைமைக்கே உரிய சந்தோஷங்களோடு இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.

'இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் குழந்தை இலக்கியப் படைப்பாளி நடராசன் மற்றும் மனநல ஆலோசகர் முனைவர் லாவண்யா ஆகியோரிடம் முன் வைத்து பேசினோம். இருவரும் வரிசைப்படுத்திய எட்டு சவால்கள், இங்கே... பெற்றோர்களின் கவனத்துக்காக இடம் பிடிக்கின்றன.

  1. தனிமை :  

'நோபல்’ பரிசுபெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், 'ஒரு காலத்தில் நியாயத்தைக் கருதி உருவாக்கி வைக்கப்பட்ட உறவுகள், இன்று லாபம் கருதும் உறவுகளாக சுருங்கிவிட்டன’ என்று வேதனையுடன் சொல்லியுள்ளார். இன்றைய குழந்தை, தான் யாருடன் விளையாடுவது என்று தீர்மானிப்பதில்கூட லாபம், சுயநலம் சார்ந்து முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 'இன்னாருடன் சேர்ந்து விளையாடினால்தான் என் குழந்தை நல்லவனாக வளருவன்’ என்ற கற்பிதத்தில் ஒவ்வொரு குழந்தையின் நட்பு வட்டமும் பெற்றோர்களால் கண்காணிக்கப்படுகிறது, சுருக்கப்படுகிறது.

பல வீடுகளில் சி.டி-க்களும் கார்ட்டூன்களுமே குழந்தைகளின் தோழமை ஆகின்றன. இப்படித் தனிமையில் வளரும் குழந்தைகள், எப்படி சோஷியலைஸ்டாக வளர முடியும்? எனவே, நண்பர்கள், உறவினர்கள் என சமூகத்திடம் பழகவிட்டு வளர்த்தெடுங்கள் குழந்தைகளை.

Read more...
 
குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி? Print E-mail
Friday, 03 February 2012 07:07

பெற்றோர்களுக்கு மிகவும் பயனுள்ள கட்டுரை

  குழந்தைகளை அடிக்காமல் வளர்ப்பது எப்படி?  

[ குழந்தைகள் அறிவின் வாசலை கண்டுபிடிப்பவர்கள். அந்த கண்டுபிடிப்பு என்ன என்பதை பற்றி நம்மால் புரிந்து கொள்ளமுடியாது. குழந்தைகள் உலகம் மிக விந்தையானது. வேடிக்கையானது. விநோதமானது. எவராலும் எளிதாக நுழையமுடியாது. அதனால் அவர்களால் எதையும் புரிந்து கொள்ளமுடியும். அவர்கள் அவ்வளவு ஆற்றல் உள்ளவர்கள்.

"குழந்தைகள் உங்களின் உடமைப் பொருள் அல்ல. அவர்கள் உங்களிடமிருந்து வந்திருக்கலாம். ஆனால் உங்கள் தயாரிப்புகள் அல்ல. அவர்கள் இயற்கையின் வெளிப்பாடு. உங்கள் எதிர்பார்ப்புகளை, விருப்பங்களை, எண்ணங்களை அவர்கள் மீது திணிக்காதீர்கள். அவர்கள் எதிர்கால உலகிற்கு நம் இறந்தகால சடங்குகளைத் திணிப்பது தவறு.

நீங்கள் வேண்டுமானால் குழந்தைகளைப் போல இருங்கள். ஆனால் உங்களைப் போல அவர்கள் இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால் ஆறுகள் பின்னோக்கிப் பாய்வதில்லை." என்ற வரிகளுக்கேற்ப குழந்தைகளை நாம் உருவாக்கினபோதும் அவர்கள் நமது அடிமைகள் அல்ல. நம் குழந்தையே ஆனாலும் நாம் அவர்களை வன்முறைக்குள்ளாக்கக்கூடாது.

‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ என்ற பழமொழியெல்லாம் உதவவே உதவாது. அணைக்கும் என்பதற்காக அடிக்க வேண்டுமா? பேசி புரிய வைத்து அவனை நல்லவனாக வளர்க்கலாம். நண்பனாகப் பழகுவதன் மூலம் ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளச்செய்யலாம். செய்தால் வளர்ந்தபிறகு நம்மை அணைப்பான். இல்லாவிட்டால் அவனும் ‘அடிக்கிற கை அணைக்கும்’ என்று அடிப்பான்.]

Read more...
 
குழந்தைகளிடையே ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி? Print E-mail
Saturday, 05 May 2012 17:20

 

      ஐ.க்யூ. வை வளர்ப்பது எப்படி?    

படிப்பதில் கவனச்சிதறல், வகுப்பில் நடத்தும் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாமை போன்ற பிரச்சினைகளுக்கு ஐ.க்யூ. குறைவுதான் காரணம். குழந்தைகளிடையே ஐ.க்யூ.வை எப்படி வளர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகிறார் மனநல மருத்துவர் டாக்டர் ஷாலினி.

அகில் சரியாகப் படிப்பதில்லை. வகுப்பில் ஆசிரியர்கள் பாடம் நடத்தினால் புரிந்து கொள்வதும் இல்லை. எதைப்பற்றியாவது பேசும்போது, கவனம் சிதறி வேறு விஷயங்களில் மனதை அலைபாய விடுகிறான். அமைதியில்லாமல் துறுதுறுவென்று எதையாவது செய்து கொண்டே இருக்கிறான். பள்ளியில் சேர்ந்தாற்போல பத்து நிமிடங்கள்கூட பாடத்தில் கவனம் செலுத்துவதில்லை. மற்ற குழந்தைகளை கிள்ளி வைத்து விடுகிறான்."

ஐந்தாவது வகுப்பு படிக்கும் அகிலனைப் பற்றி அவனுடைய வகுப்பு ஆசிரியை அளித்த புகார்ப் பட்டியல் இது.

Read more...
 
போன்ஸாய் குழந்தைகள் - "குழந்தை மேதை" Print E-mail
Saturday, 29 September 2012 22:04

  போன்ஸாய் குழந்தைகள் - "குழந்தை மேதை" 

இன்று உலகில் பல சிறுவர்கள் 'சிறுமுது அறிவர்' அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், "குழந்தை மேதை" என்று சொல்லலாம்.

இவர்களை, "சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்" என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. "அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்" என்பது இன்னொரு வரையறை.

இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.

12 வயதுச் சிறுமி அமெரிக்க அல்லது இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தாள்; 10 வயதுச் சிறுவன் பி.ஹெச்டி முடித்தான்; 8 வயதிலேயே மைக்ரோஸாஃப்ட் தேர்வுகள் எழுதி பட்டயம் பெற்றார் என்றெல்லாம் செய்திகளில் வருவார்களே இவர்கள்தான் இந்தக் குழந்தை மேதைகள்!

Read more...
 
பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு மருத்துவத் தீர்வு! Print E-mail
Sunday, 30 September 2012 14:35


  பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு மருத்துவத் தீர்வு! 

பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார் சென்னை டாக்டர்

.பிறந்தவுடனேயே குழந்தை நன்றாக அழ வேண்டும். அப்படி அழாத குழந்தைக்கு பல உடல் கோளாறுகள் வரலாம். அவற்றைக் குணப்படுத்துவதற்கான மருத்துவத் தீர்வை கண்டுபிடித்துள்ள சென்னை டாக்டர். தீபா ஹரிஹரன், அதுபற்றி விவரிக்கிறார்:

"இந்தப் பிரச்சினைக்கு பிறவி அஸ்பிக்சியா (birth asphyxia) என்று பெயர். பிறந்தவுடன் அழாத குழந்தைகளின் மூளைக்குப் போதிய அளவு ரத்தம் போகாது. இதனால் குழந்தைக்கு உடல் குறைபாடு ஏற்படவோ அல்லது கற்றலில் குறைபாடும், மன வளர்ச்சி இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.

பிறந்தவுடன் குழந்தை வாய்விட்டு அழுதால்தான் ஆக்சிஜனை நன்றாக உள்ளிழுக்கும். இதன்மூலம் இதயம், நுரையீரல் மற்றும் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பிரசவத்தில் ஏற்படும் பனிக்குடம் வற்றுவது, தொப்புள் கொடி சுற்றியிருப்பது, தலை வெளியில் வர அதிக நேரம் ஆவது போன்ற பல சிக்கல்கள், குழந்தை அழாமல் பிறப்பதற்கான காரணங்கள். இதை இப்படியே விட்டால் பின்னாளில் அதுவே நிரந்தரப் பிரச்சினையாகிவிடும்.

Read more...
 
குழந்தைகளும் பாசமொழியும் Print E-mail
Tuesday, 07 May 2013 17:19

குழந்தைகளும் பாசமொழியும்

குழந்தைகளுடன் பாசத்தையும் நேசத்தையும் வெளிப்படுத்துவதற்கு பல முறைகள் உள்ளன. நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு முறைகளில் எமது பாசத்தையும் அன்பையும் வெளிப்படுத்துகின்றோம்.

ஒவ்வொருவரும் தனியாள் வேறுபாடு அடிப்படையில் வெவ்வேறு பாச மொழிகளை தெரிந்தோ தெரியாமலோ பயன்படுத்தி வருகிறோம். எமக்குப் புரியும் மொழியில் பாசம் காட்டப்படும் போது எமது மனம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது.

பல முறை முயன்றும் எமது மொழி துணைவிக்கோ பிள்ளைக்கோ விளங்காவிட்டால் எமது பாசம் அவர்களுக்குப் புரியாது. இன்னொரு மொழி தமக்குப் புரியாத போது ஏற்படும் ஏமாற்றம், கவலை, கோபம், இயலாமை போன்றன பாசத்தை காட்டுவதிலும் ஏற்படுகின்றது.

பிறருக்கு புரியக்கூடிய வகையில் பாசத்தை எவ்வாறு காட்டலாம், பாச மொழிகள் எத்தனை வகை என்ற கேள்விகள் இப்போது உங்களுக்கு எழக்கூடும்.

Read more...
 
குழந்தைகளும் ஆடையும் Print E-mail
Thursday, 23 May 2013 06:13

குழந்தைகளும் ஆடையும்

குழந்தைகளுக்கு தமது ஆடைகள் குறித்து அக்கறை கிடையாது.

மற்றவர்களுக்கு முன்னால் உங்களைப் பற்றிய மதிப்பீடு உயர வேண்டும் என்பதற்காக குழந்தைகளுக்கான ஆடைகளை தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு எது சௌகரியமாக இருக்குமோ அதையே தெரிவு செய்யுங்கள்.

வழிபாட்டுகளுக்கோ, விழாக்களுக்கோ குழந்தைகளை கூட்டிச் செல்லும் போது அணிந்திருக்கும் ஆடை நீண்ட நேரத்திற்கு சௌகரியமாக இருக்குமா என்பதை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

போகிற இடத்தில் சினிங்கி எறிச்சல் பட்டு குழந்தைகள் அழுவதற்கு பிரதான காரணம் அவர்களைச் சிரமப்படுத்தும் ஆடைகளும் அணிகலன்களும் தான். இறுக்கமான சப்பாத்து. கழுத்தை உறுத்தும் சங்கிலிகள், மாலைகள், உதட்டுச் சாயம் என்று குழந்தைகளை இம்சைப்படுத்தாதீர்கள்.

Read more...
 
இளம் மனங்களில் இறையச்சம் விதை! Print E-mail
Tuesday, 23 July 2013 19:22

இளம் மனங்களில் இறையச்சம் விதை!

மனிதன் பண்புள்ளவனாக வளர்வதற்கு தன்னைப் படைத்த இறைவன் ஒருவன் இருக்கிறான் என்ற உணர்வும் அவனுக்கு நான் பதில் சொல்லக் கடமைப் பட்டுள்ளேன் என்ற உணர்வும் மிகமிக அவசியம். அதுவே இறையச்சம் எனப்படும்.

இன்று கற்கும் கல்வி மனிதனுக்கும் மனிதகுலத்துக்கும் பயனுள்ளதாகவும் தீங்கு விளைவிக்காததாகவும் இருக்க வேண்டுமானால் மாணவ இதயங்களில் இறையச்சம் கட்டாயமாக விதைக்கப் பட வேண்டும். அதுதான் அவர்களை கல்வி கற்கும்போதும் கற்ற பின்னும் நெறிமிக்கவர்களாக வார்த்தெடுக்கும்.

இறையச்சம் மனதில் நுழைந்து விட்டால் அம்மனிதனை மற்ற எந்த அச்சமும் தீண்டுவதில்லை. அதனால் அவனுக்கு சமூகத்தில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் துணிவு வந்துவிடுகிறது.
 
இறையச்சத்தை இளமனங்களில் எவ்வாறு விதைப்பது?

கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை போதிக்கப்பட்டால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு இறைமார்க்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது.

Read more...
 
சிறுவர்களுக்கு சொல்லித் தாருங்கள்... Print E-mail
Saturday, 21 September 2013 08:46

சிறுவர்களுக்கு சொல்லித் தாருங்கள்... 

அண்மைக்காலமாக, நாம் அடிக்கடி படிக்கும் செய்தி, பள்ளிக் குழந்தைகள் கிணற்றில் அல்லது ஏரியில் விழுந்து இறந்தனர் என்பதாக இருக்கிறது.

காவிரி டெல்டா மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்தில் பல்வேறு இடங்களில் இளம் சிறார்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவங்கள் பதினைந்துக்கும் மேல். பள்ளி விடுமுறை நாள்களில் இச் சிறுவர்கள் மழைநீர் குட்டை, குளங்களில் விளையாடப் போய், நீரில் மூழ்கி இறக்கின்றனர்.

தமிழகம் முழுவதும் இவ்வாறு நீரில் மூழ்கி இறக்கும் சிறார்களின் எண்ணிக்கை கணிசமாக இருக்கும். இவர்கள் நீச்சல் பழகியிருக்கவில்லை என்பதுதான் இந்த மரணங்களுக்கு முதற்காரணம்.

மழைநீர் தேங்கிய குளம், குட்டைகளில் சிறுவர்கள் குளிக்க வேண்டாம் என்று ஒரு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்த அறிக்கையும் பத்திரிகைகளில் வெளியானது. விளையாடும் குழந்தைகளை வேண்டுகோளால் தடுத்துவிட முடியுமா என்ன? கோடு போட்டு நிற்கச் சொன்னால் நிற்கின்ற வயதா அது? கத்திரியின் "நண்பகல் நிலா'வில் கிரிக்கெட் விளையாடுகிற வயதல்லவா!

நகர்ப்புறத்தில் வசிக்கும் சிறார்களுக்கு மட்டுமே நீச்சல் தெரியாது; கிராமத்துச் சிறார்கள் தங்கள் வயற்காட்டில் உள்ள கிணறுகள், ஓடைகளில் நீச்சல் பழகிவிடுவார்கள் என்கின்ற பொதுவான எண்ணம் இன்று பெரும்பாலும் தவறாகவே இருக்கிறது.

இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிவிட்டது. நகரத்தில் மட்டும் அல்ல, கிராமத்தில் வசிக்கும் குழந்தைகளையும் இரண்டரை வயதிலேயே மழலையர் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இந்தக் குழந்தைகளில் பலர் வீடு திரும்பியதும், வீட்டுப் பாடத்தை முடித்துக்கொண்டு அரசு டிவி முன்பாக பெற்றோருடன் அமர்ந்துவிடுகிறார்கள். இவர்கள் கிராமத்தில் வசித்தாலும் கிராமத்து வாழ்க்கையை வாழவில்லை.

Read more...
 
குழந்தைகளும் பாலியலும் (1) Print E-mail
Thursday, 19 September 2013 07:05

  ஏ.பி.எம்.இத்ரீஸ்    

[ குழந்தைகள் பார்வையில் எல்லாமே தூய்மையானவை, எல்லாமே அதிசமூட்டுபவை. வளர்ந்தவர்கள் நாம் தான் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தி அழித்து விடுகின்றோம். குழந்தை மீது குற்றம் சாட்டுவதற்கு நமக்கு என்ன யோக்கிதை இருக்கின்றது? நம்முடைய மேய்ப்புக் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவோம். குழந்தைகளை மேய்ப்பது ஆடு, மாடுகளை மேய்ப்பது போல (அவற்றை மேய்ப்பதற்கும் அழகான பாடத்திட்டம் வந்து விட்டது) அல்ல. எனவே நம்மிடமிருக்கின்ற வக்கிர சிந்தனைகளை விட்டு விட்டு, இறைவன் படைத்த தூய இயல்பிலிருந்து குழந்தையை அணுக வேண்டும்.

குழந்தை தொட்டில் பருவத்தில் தனது உடல் உறுப்புக்களை பயன்படுத்தி விளையாடவே விரும்பும் விளையாடுவதால் அதிக மகிழ்ச்சி அடைகின்றது. குழந்தை பிறந்த புதிதில் உடலின் பல உறுப்புகள் அதற்கு உணர்ச்சி பூர்வமாக இருக்கின்றன.

பாலியல் உறுப்புக்கள் குழந்தை கண்டு மகிழ்வதைக் கண்டு நீங்கள் கலங்கிவிடக்கூடாது. அதற்காக குழந்தையை தண்டித்து விடாதீர்கள். (குழந்தை ஏனைய வழமையான உறுப்புக்களை தேடிக்கண்டு பிடித்து விளையாடும்)

இவ்வாறான விளையாட்டை பழக்கமாக கொண்டுள்ள ஆண் குழந்தையை பார்த்து 'தொட்டால் உண்ட கொட்டையை வெட்டுவன்' என்று பெற்றோர் பயமுறுத்துவது Castration Complex மனசிக்கலை உருவாக்குகின்றது.

இது போன்ற அச்ச (பய) உணர்வுதான் சுயஇன்பம் பெறுவதற்கு வழிவகுக்கின்றது. அதாவது தனது உறுப்பை இழந்து விடுவேன் என்று அச்ச்படுவதால் அவ்வுறுப்பை பிடித்து அதன் இருப்பை தற்காத்துக் கொள்வதற்காக அசைகின்றது.

பிறப்புறுப்புகள் ஒன்றும் இழிவானவை அல்ல. ஓர் உறுப்பு மனித விருத்திக்கு வழிவகுக்கின்றது. அடுத்த உறுப்பு அவ்வாறு பிறந்த குழந்தையை போசித்து வளர்க்கின்றது. எனவே அவ்வுறுப்புக்களால் பெற்றிருக்கின்ற ஆணும் பெண்ணும் சமூகப்பங்களிப்பைச் செய்கின்றன. அவர்களுக்கு சமூகத்தில் இடமிருக்கின்றது.

அவ்வுறுப்புக்களை கெட்ட உறுப்புக்களாக கட்டமைப்பதன் மூலம் அவ்வுறுப்புக்களைப் பெற்றிருக்கின்ற பெண்ணையையும் கெட்டவனாளாக கட்டமைக்கின்றோம். அவள் ஆற்றுகின்ற சமூகப்பங்களிப்பு அற்பமாவைகளாக ஆக்கிவிடுகின்றோம். அவளை சமூகத்தின் விளிம்பு நிலைக்கு தள்ளிவிடுகின்றோம்.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 10 of 81

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article