Saturday, 20 July 2013 10:06 |

கரணம் தப்பினால் மரணம்
எனும் விதியின் கீழ் தவிக்கும்
'யகூதி நசாரா' கூட்டு!
இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு)திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது. ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும். இங்கு இழப்புகள் இறப்புகள், ஒரு விடயமே அல்ல. கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது. இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது. ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் . இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும், தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின்' தடைகளுக்கு முன்,' குப்பார்களின் சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது. விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது.
வாழ்க்கையே' வஹியாக்க' வேண்டிய சமூகம் காலத்தையும், சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது. அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் "நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது" என கூறவும் பட்டது. (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே.)
|
Read more...
|
Sunday, 22 May 2011 06:40 |
 
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்!
மௌலான அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்! இது தான் இன்று எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்பொழிவின் தலைப்பு!
நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான்.
அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞான விற்பன்னர்கள் என்றும், சென்ற கால் மக்களுக்கு கிடைக்கப் பெறாத அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணி வந்தான். இப்படியே அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் தவறான எண்ணத்திற்கு பலியாகி விட்டிருந்தான்.
மனிதனுக்கு இறைவன் சிறுகச் சிறுக அருளியிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒதுக்கி விட்டு பொதுவாக நாம் பார்க்குமிடத்து, ஆதிமனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலந்தொட்டு இன்று வரை ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருக்கின்றான்.
|
Read more...
|
Monday, 31 March 2014 06:31 |

ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது - SHARIA THE THREAT TO AMERICA
இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை அதாவது ஷரீஅத் அமெரிக்காவை மிரட்டுகின்றது என்ற அறிக்கையை தயாரித்தது ஏதோ ஒரு தனிமனிதரோ அல்லது ஆராய்ச்சி நிறுவனமோ அல்ல.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகன். இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கின்றது.
இதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்ல. எதிர்வரும் நாள்களில் எங்கெல்லாம் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வகுத்து தருபவர்கள்.
ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமா....?
அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா செய்து தயாராக வைத்திருக்கும் ஆயதங்களை விஞ்சிடும் வண்ணம் உள்ள ஆயுதங்கள் அமெரிக்காவை அச்சுறுத்தலாம். அல்லது அமெரிக்காவை விஞ்சும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்ற ஒரு நாடு அமெரிக்காவை அச்சுறுத்தலாம். ஆனால் ஷரீஅத் எப்படி அமெரிக்காவை அச்சுறுத்த முடியும்?
400 பக்கங்களை கொண்ட பென்டகனின் அறிக்கை சொல்கிறது ஷரீஅத்தால் அமெரிக்கா அச்சப்பட்டு நிற்கின்றது என்று!
|
Read more...
|
Monday, 06 May 2013 06:56 |
 
இந்திய அரசியல்
முஸ்லீம்களுக்கு ஹராமா?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
"இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் " (அல்குர்ஆன் 2:208).
ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது.
அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்" (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர்.
''ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.'' (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது.
வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.
|
Read more...
|
Sunday, 27 June 2010 09:05 |

விவாகரத்தும் குழந்தைகளும்
குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும்.
இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம்.
உண்மையில் பெற்றோரைவிட, குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம்.
எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பாவோ துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு.
விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகிவிட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும், ''உன்னால்தான் இதை விட்டேன்" என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள்.
|
Read more...
|
Friday, 06 January 2012 07:39 |

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]
உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.
இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.
|
Read more...
|
Tuesday, 26 January 2010 11:40 |

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)
[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.
அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]
[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]
''1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.
என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.''
|
Read more...
|
Friday, 05 February 2010 07:44 |
முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங்
[ ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார்.
நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.
இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. - முன்னால் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங்!]
இரவு 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் ''பாகிஸ்தான்'' என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது. ஏழே மாதங்களில், ''திராவிடஸ்தான்'' கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940-ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
|
Read more...
|
Thursday, 31 December 2015 06:51 |

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் இன்றைய மீலாது விழாக்கள்!
முஹிப்புல் இஸ்லாம்
பிறந்த தின விழாவெடுப்பதா...? அல்லது துக்கம் அனுஷ்டிப்பதா....?
பிறந்த தினம் விழாவாகக் கொண்டாடப் படுவது கிறித்தவர்கள் வழக்கம்.
மரித்த தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பது ஹிந்துக்கள் வழக்கம்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதயமாகிய மாதம் ரபியுல் அவ்வல்.
மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரித்ததும் அதே மாதத்தில் பிறந்த அதே தினத்தில்!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும், இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்பதில் மாற்றுக் கருத்திற்கிடமில்லை. இன்றைய முஸ்லிம்கள் இந்த தினத்தை இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உதயதினமாக -பிறந்த நாள் விழாவாகக் கொண்டாடுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்ததும் இறந்ததும் ஒரே தினத்தில்தான் என்றால் அந்தத்-தினத்தில் பிறந்த நாள் விழா கொண்டாடுவதா...? அல்லது அந்தத் தினத்தில் துக்கம் அனுஷ்டிப்பதா...?
|
Read more...
|
Tuesday, 23 July 2013 11:12 |

குடும்பத்தின் நிம்மதி உங்கள் கையில்!
ஆடிட்டர் பெரோஸ்கான்
முன் எப்போதுமில்லாத அளவுக்கு விஞ்ஞானம் மற்றும் தொழில் நுட்பத்துறையில் இமாலய முன்னேற்றத்தை மனிதன் அடைந்துள்ளான் என்பதை மறுக்கவியலாது. அதே சமயம் இவ்வளவு பெரிய முன்னேற்றத்தை அவன் அடைந்திருந்தாலும் – அவனுடைய தனிப்பட்ட வாழ்வில் நிம்மதியற்ற நிலையிலும் பல்வேறு குழப்பத்துடனும் தான் இருக்கிறான் என்பதும் கசப்பான உண்மை.
இதற்கான காரணத்தை நாம் ஆராய்ந்தால், விஞ்ஞானத்தையோ, அல்லது தொழில்நுட்பத்தையோ நாம் குறை காண முடியாது. இதற்கான விடையை தத்துவ ஞானியும் கவிஞருமான அல்லாமா இக்பால் இரண்டே இரண்டு வரிகளில் விளக்குவார்.
"தொழில்நுட்ப வளர்ச்சி என்பதும் மனித முன்னேற்றம் என்பதும் வெவ்வேறானவை"
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது விஞ்ஞான வளர்ச்சியோடு தொடர்புடையது. அது மனிதனின் உடல் சார்ந்த சொகுசான வாழ்விற்குத் தேவையானதை நிறைவு செய்யும். அது போல அவனது தேவைகளை அதிவிரைவில் செய்து முடிக்க அது உதவும். இண்டர்நெட், அதிவிரைவு வாகனங்கள் போன்றவற்றை இதற்கு உதாரணங்களாகக் கூறலாம்.
ஆனால், மனித முன்னேற்றம் என்பது மனிதனுடைய ஒழுக்கம், நற்பண்புகளை மையமாகக் கொண்டது. யாரெல்லாம் நல்லொழுக்கம், நற்பண்புகளுக்கு முன்னுரிமை அளித்து வாழ்கிறார்களோ அவர்கள் குறைவாக பொருளீட்டினாலும் நிறைவான வாழ்வுக்குச் சொந்தக்காரர்கள். ஆனால் யாரெல்லாம் பேராசையை அடிப்படையாகக் கொண்ட நவீன சிந்தாந்தங்களுக்கு அடிமைப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் அதிகமான பொருளீட்டுபவர்களாய்த் திகழ்ந்தாலும் அமைதி இன்றி தவிப்பதைத்தான் நம் அனுபவத்தில் காண்கிறோம்.
|
Read more...
|
Thursday, 28 July 2011 08:05 |

பள்ளிவாசலில் பெண்கள்: மத்ஹப்பின் பார்வையில்!
அப்துர்ரஹ்மான் மன்பஈ
இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மற்றும் அவர்களின் மாணவர்களான அபூயூசுஃப், முஹம்மது ஆகியோரின் கூற்றுப்படி வாலிபப் பெண்கள் ஜமாஅத் தொழுகைக்கு வருவது பொதுவாக வெறுக்கத்தக்கதாகும். விரும்பத்தகாத ஏதும் நிகழ்ந்து விடுவது பற்றிய அச்சத்தையே அவர்கள் காரணமாகக் கூறுகின்றனர்.
அதே சமயம் முதிய பெண்மணி ஃபஜ்ர், மக்ரிப் மற்றும் இஷா ஆகிய தொழுகைகளில் கலந்து கொள்வதை இமாம் அபூஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறைகாணவில்லை.
மாலிக்கி மத்ஹப் அறிஞர்கள் கூற்றுப்படி; ஆண்களின் இச்சைக்கு ஆளாகும் பருவத்தை தாண்டிய பெண்கள் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருவது ஆகுமானதே! அதே போல் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாத வாலிபப் பெண் வருவதும் ஆகுமானதே! விரும்பத்தகாத பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சப்படும் பெண்மணி பொதுவாக (எந்த வயதாக இருந்தாலும்) வரக் கூடாது.
ஷாஃபிஈ, ஹன்பலீ மத்ஹபு அறிஞர்கள் கூறுவதாவது: வாலிபப் பெண்ணாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அழகும் நல்ல தோற்றமும் உள்ள பெண் ஆண்கள் தொழும் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வது வெறுக்கத்தக்கதாகும். அவள் தனது வீட்டிலேயே தொழுது கொள்ள வேண்டும்.
மற்ற பெண்கள் நறுமணம் பூசாமல் கணவனின் அனுமதியுடன் கலந்து கொள்ளலாம். ஆயினும் அவள் வீட்டில் தொழுவதே சிறந்தது. (ஆதாரம்: அல்ஃபிக்ஹுல் இஸ்லாமி வஅதில்லத்துஹு (மத்ஹப் நூல்களை மேற்கோள்காட்டி) பாகம்: 2 பக்கம்: 321)
|
Read more...
|
Sunday, 21 July 2013 10:40 |

குப்பைக் குழந்தைகள் பெருங்குடியின் குப்பை மலையில் அதிகாலையிலேயே கையில் கோணிப்பையுடன் குப்பையைக் கிளறிக் கொண்டிருக்கும் கண்ணகி எனும் 8 வயதுச் சிறுமியும் குணா போன்ற பதின்வயதுச் சிறுவர்களும் தினமும் இம்மலையினைக் குடைந்தால்தான் அவர்களுக்கு 20 ரூபாயாவது கிடைக்கிறது. பகலில் எப்போதும் இவர்களைப் போலக் குறைந்தது நூறு சிறுவர்களாவது பெருங்குடிக் குப்பை மலையில் கையில் குப்பை கிளறும் குச்சிகளுடன் அலைகிறார்கள்.
உயிருக்கே உலை வைக்கும் மருத்துவமனைக் கழிவுகளான பேண்டேஜ்கள், அழுகிய சதைத் துண்டுகள், தூக்கியெறியப்படும் ஊசிகள், இரசாயனக் கழிவுகள் என எண்ணற்ற அபாயங்களுடன், எப்போதும் புகைந்து கொண்டிருக்கும் குப்பை மேட்டில் இச்சிறார்கள் அலைந்து திரிவதால் கை கால்கள் எல்லாம் ஆறாத புண்களுடனும், தீராத இருமல்களுடனும் இவர்களின் இளமை, மொட்டிலேயே கருகி நிற்கிறது. புகை மூட்டத்தினூடே, குப்பைகளைக் கொட்ட வரும் லாரிகளில் அடிபட்டு மாண்ட சிறுவர்கள் பற்றி எல்லாம் வெளியே தெரிவதே இல்லை.
இதே சிங்காரச் சென்னையில் மேட்டுக்குடிக் குழந்தைகள் சனி, ஞாயிறுகளில் சுகமாய் ஓய்வைக் களிப்பதற்கென்றே மாநகரைச் சுற்றிலும் கேளிக்கைப் பூங்காக்கள், வீடியோ கேம்ஸ் மையங்கள், அமெரிக்க இனிப்புச் சோளத்தை கொறித்தபடி வலம் வர சிட்டி சென்டர், ஸ்பென்சர் பிளாசா என எண்ணற்ற கேளிக்கை மையங்கள் உள்ளன. இக்குழந்தைகள் விளையாடுவதற்கான விலை உயர்ந்த பொம்மைகளை விற்க அரசே கண்காட்சி நடத்துகிறது. தன் செல்ல மகளிடம், அவளுக்குப் பிடித்த பொம்மையை என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்கிச் செல்லும் தாய்மார்கள் உள்ளனர்.
|
Read more...
|
Friday, 06 August 2010 06:52 |

தலைவலி- உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய்!
உலகில் அதிகமாக மக்களை தாக்கும் நோய் தலைவலியேயாகும். ஒவ்வொரு மனிதரும், தலைவலியால் பாதிக்கப்பட்டவராகவே இருப்பர்.
ஒரு சிலருக்கு தலைவலி அடிக்கடி வரும்,
ஒரு சிலருக்கு எப்பொழுதாவது வரும்.
ஒரு சிலருக்கு காலையில் வரும்.
ஒரு சிலருக்கு மாலையில் வரும்.
ஒரு சிலருக்கு ஒற்றை மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு இருபுறமும் வரும்.
ஒரு சிலருக்கு முன் பகுதி தலையில் வரும்.
ஒரு சிலருக்கு பின் மண்டையில் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கம் கெட்டால் வரும்.
ஒரு சிலருக்கு தூக்கத்திலிருந்து திடீரென விழிக்க நேர்ந்தால் வரும்.
ஒரு சிலருக்கு வெயிலில் இருந்தால் வரும்.
|
Read more...
|
Tuesday, 14 September 2010 13:19 |

1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.
2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.
3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.
4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே!
5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.
|
Read more...
|
Saturday, 02 July 2011 07:42 |

பயத்தை போக்கினால் தாம்பத்யத்தில் ஜெயிக்கலாம்
[ திருமணமான இளம் வயதில் பாலியல் குறித்த கூச்சம், வெட்கம் பலருக்கு இருக்கிறது. முழுமையான தெளிவும் பலருக்கு இருப்பதில்லை. இதனால் அப்போது முழுமையான அனுபவத்தை அவர்களால் அடைய முடிவதில்லை.
தாம்பத்திய உறவில் நாட்டமின்மை என்பது தீர்க்க முடியாத குறையில்லை என்கிறது மருத்துவம்.
கணவனது பக்குவமான அணுகுமுறை, மனைவியிடமான அவனது நடத்தை, உடல் மற்றும் மன சுகாதாரம் போன்றவையும் இப்பிரச்சினையைக் குணமாக்கும் சிகிச்சைகளில் முக்கியமாகும்.
மருத்துவரிடம் கேட்கத் தயங்கிக் கொண்டு இதை அப்படியே விட்டு விடுவது தவறு என்கின்றனர் உளவியலாளர்கள்.]
|
Read more...
|
Friday, 13 October 2017 08:33 |

2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள்
நாளது 07-10-2017 மாலை மும்பை இந்திய ஹஜ் குழுவின் கட்டிட வளாகத்தில் 2018-2022 வரையிலான ஹஜ் வரைவு திட்டங்கள் குறித்து நடைபெற்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட கருத்துகளில் சிலவற்றை இங்கே தரப்பட்டுள்ளது.
1. இந்திய ஹஜ் கோட்டாவில் (170000) இந்திய ஹஜ் குழுவிற்கு 70 சதமும் (119000) தனியார் நிறுவனத்திற்கு 30 சதமும் (51000) கோட்டா தரப்பட்டுள்ளது.
2. ரிசர்வு பிரிவு A (70+) மற்றும் ரிசர்வு பிரிவு B (4வது வருட விண்ணப்பங்கள்) இரண்டையும் நீக்கம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
3. ஹஜ் பயணிகளுக்கு வழங்கும் மானியத் தொகையை படிப்படியாக ரத்து செய்ய பரிந்துரை தரப்பட்டுள்ளது.
குறிப்பு: விமான சேவை கட்டணத்தில் மட்டுமே மானியத் தொகை வழங்கப்படுகிறது என்பதாக அறிகிறோம்.
|
Read more...
|
Tuesday, 29 June 2010 22:18 |
ஆங்கிலத்தில் சரளமாக பேசத்தெரிந்த பலருக்கு சரியாக எழுதத்தெரியாது.
இனி அந்த கவலையே வேண்டாம்.
பள்ளி முதல் கல்லூரிவரை, அலுவலகங்கள் முதல் சொந்தபந்தங்கள் வரை அனைவருக்கும் ஆங்கிலத்தில் சம்பிரதாயமான கடிதம் இனி எளிதாக எழுதலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.
தமிழ் கடிதம் எழுத சொன்னால் உடனடியாக எழுதும் நம் தமிழ் நண்பர்களுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுத கூறினால் சற்று யோசித்து எழுதுகின்றனர்.
அலுவலகத்துக்கோ, கல்லூரிக்கோ அல்லது அரசுக்கோ கடிதம் எழுத கூறினால் அவர்கள் கூறும் முதல் வார்த்தை எங்களுக்கு அனுபவம் இல்லை என்று, அனுபவம் இருந்தாலும் ஆங்கிலத்தில் எழுதினால் இலக்கண பிழை ஏற்படுமோ என்ற பயம் உள்ளது.
|
Read more...
|
Saturday, 14 February 2009 08:53 |
ஷாஜஹானின் தாஜ் மஹல்
ஷரீஅத் பேணவில்லை, ஹஜ் செய்யவில்லை, ஏராளமான மனைவிகள், சொகுசு பேர்வழிகள் என்றெல்லாம் காரணம் கூறி நம்மில் பலர் முகலாய மன்னர்களை அலட்சியப் படுத்துவது தெரிந்த விஷயம் தான். முகலாயர்களுக்கும், அல்லாஹ்விற்கும் இடையேயுள்ள விஷயங்களாக கருதி, இவைகளை விட்டுவிட்டு, அவர்களின் மற்ற நற்செயல்களுக்கு நமது வாழ்த்தை தெரிவிக்கலாமே.
முகலாய மன்னர்கள், ஷரீஅத் கோட்டையாகத் திகழும் பள்ளிவாசல்களை ஏராளமாய் நிர்மானித்துள்ளனர். அதில் குர்ஆன் வாசகங்களை ஆர்வத்துடன் அவற்றில் பக்தி சிரத்தனையுடன் எழுதியுள்ளதைப் பார்ப்போர் முலாயர்களின் இஸ்லாமியப் பற்றை உணரலாம்.
இறை அருளால் அரபி எழுத்துக்களை அலங்கரமாக வரைந்து தரும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் என்னிடம் 'தாஜ்மஹாலில் உள்ள அரபி எழுத்துக்களை பார்த்தீர்களா?' என பலர் கெட்பதுண்டு. 'இல்லை இனிமேல் தான் பார்க்க வேண்டும்' என்ற பதிலையே சொல்லிக் கொண்டிருந்த எனக்கு ஒரு கல்யாணத்திற்கு டெல்லிக்கு சென்றிருந்த போது அதைப் பார்ப்பதற்காக ஐந்து மணி நேரம் பஸ்ஸில் பயணம் செய்து ஆக்ரா கோட்டை தவிர டெல்லியுள்ள ஜும்மா மஸ்ஜித், ஹுமாயூன் சமாதி, செங்கோட்டை, குத்ப்மினார், போன்றவைகளிலும், இஸ்லாமிய கலைநுட்பத்துடன் குர்ஆன் வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளதைக் கண்டு வியப்படையாமல் இருக்க முடியவில்லை.
|
Read more...
|
Wednesday, 13 January 2010 08:57 |
பர்தா(புர்கா) என்றால் என்ன?
சுமஜ்லா
ஒரு முஸ்லிம் சகோதரியின் பேட்டி:
பர்தா என்றால் என்ன?
பர்தா என்பது உடையல்ல, அது உடைக்கு மேல் அணியும் ஒரு அங்கி தான், அதைக் கழட்டினால் உள்ளே உடை இருக்கும்!!!
ஏன் பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்கள்?
அழகாக உடை உடுத்தி, நகையெல்லாம் அணிந்து, பிறகு அதை பர்தாவால் மறைத்துக் கொள்கிறீர்களே?!
நாங்கள் திருமணம் போன்ற விஷேசங்களில், ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்கு தனி இடம் என்று ஒதுக்கி இருப்போம். இருவரும் கலப்பதில்லை. ஆக, நாங்கள் வெளியே செல்லும் போது பர்தா அணிந்து சென்றாலும், திருமண மண்டபத்தில் பெண்கள் பகுதிக்கு சென்றதும் அதை கழட்டி பையில் வைத்து விடுவோம். பிறகு திரும்பும் போது, மீண்டும் அணிவோம். உறவுகளின் இல்லங்களுக்கு செல்லும் போது இதே போலத்தான்.
|
Read more...
|
Friday, 30 July 2010 07:04 |

ஹிஜாப் தரும் சுதந்திரம்!
என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?
நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?
கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?
|
Read more...
|
|
|