வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

பெண்களின் சிரிப்பும், அழுகையும், பொய்யும்! Print E-mail
Thursday, 06 October 2011 12:22

 

 

[ பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தம்மை முன்னிலை படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கும். ஆனால் பெண்களின் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும், ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாம். எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் ''டெஸ்டோஸ்டீரான்'' அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களை தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது. காரணம், பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆய்வின்படி பெண்கள் மூன்று விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறுவிஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட "உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அநேக பெண்களின் வாடிக்கை" இவர்கள் ஒருவகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாக பொய் சொல்வது மூன்றாம் வகையினர். பெண்கள், சாதாரணமாக சிராய்ப்பு, காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்லமாட்டார்கள்.]

Read more...
 
விதவைகளின் விடிவுதான் என்ன? Print E-mail
Friday, 25 November 2011 12:10

விதவைகளின் விடிவுதான் என்ன?

  ஃபாத்திமா நளீரா  

பெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அன்றும் இன்றும் பல்வேறு சக்திகளால் நசுக்கப்பட்டுப் பின் தள்ளப்படும் ஒரு ஜென்மமாகவே பெண் இருக்கிறாள்.

அரசியல், விஞ்ஞானம்,மருத்துவம் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் ஒரு சிலர் தன் நுண்ணறிவு, ஆளுமை விருத்தியால் முன்னேறி ஜொலித்தாலும் அதிகளவிலும் அதிகளவு இந்தப் பெண்களை சமுதாயம் கம்பிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறது. எப்படித்தான் முற்போக்கான கருத்துகளை சமுதாயம் அள்ளி வீசினாலும் துருப்பிடித்த கருத்துகளை விட்டு இன்னும் அகலவே இல்லை. பெண்களின் உணர்வுகளை நசுக்கி ஆண்களுக்கு எல்லா விதத்திலும் பாதை அமைத்துக் கொடுக்கிறது.

விதவைகள்! இவர்கள் விழி இருந்தும் குருடர்களாகச்; சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைம்பெண்களின் உணர்வுகளுக்கு எத்தனை வீதம் மதிப்பளிக்கப்படுகின்றதோ தெரியாது. ஆனால்; கடுமையான மன அழுத்தம், வடுக்கள், ரணங்கள், சோதனைகள் என நிகழ்கால எதிர்காலப் போராட்டம் மற்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என மீள்பார்வை இல்லாத ஒரு நிரந்தர இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜமான உண்மை.

Read more...
 
முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்! Print E-mail
Thursday, 03 June 2010 06:35

''முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்'' ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை!

டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

(டாக்டர். டட்லி வுட்பரி என்பவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு இஸ்லாமிய நாடுகளைப் பற்றியதொரு அறிக்கையைத் தயாரித்தத் தந்தவர்.)

என்னுடைய பார்வையில் இஸ்லாத்தை இரண்டாக பிரிக்கலாம்.

1. நாட்டுப் புறங்களில் வாழும் பாமர மக்களிடையே இருக்கும் இஸ்லாம். இதனை கிராமிய இஸ்லாம் (Folk Islam) என அழைக்கலாம். 2. உண்மையான இஸ்லாம் (Classical Islam).

Read more...
 
Marriage a challenge for ‘over qualified’ Muslim women Print E-mail
Thursday, 20 March 2014 21:58

Difficult to find grooms for Hyderabad's 'over qualified' Muslim women

By: Bushra Baseerat

HYDERABAD: City match-maker, Shahid Farooqui, has been faced with an unusual problem of late: of ‘over qualified’ brides-to-be.

Though his bag is teaming with profiles of several eligible women from the Muslim community between 23 and 35 years of age, he has been struggling to get many of them a perfect match.

Reason?

All these girls are armed with graduate/post-graduate degrees (M Sc, B Ed, M Tech or even B Tech) now a trend, almost unheard of until a few years ago. As a result, Farooqui says, it’s become a herculean task to find these educated women, equally qualified grooms.

Seven out of 10 women seeking alliances these days are well educated.

Read more...
 
இண்டர்நெட் - டெலிஃபோன் மூலம் திருமணம்! Print E-mail
Sunday, 06 February 2011 10:14

இண்டர்நெட் - டெலிஃபோன் மூலம் திருமணம்!

  மவ்லவி, அஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி எம்.ஏ.,பி.எட்      

[ முற்காலத்தைவிட தற்போது செய்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் நவீனமாக மிக அதிக அளவில், வியக்கத்தக்க வகையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.

எனவே ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தொலைவில் இருந்து கொண்டே தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இருசாராரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒப்பந்தம் கூடும் என அடம்பிடிப்பதில் நியாயமில்லை என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இண்டர்நெட் தகவல் சாதனம், தகவல் சாதனங்களில் மிகப்பெரும் சாதனையாகும். இதில் மணமக்கள் இருவரும் நேருக்கு நேராக, ஒருவர் பிறரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதால் இதை நவீனகால மார்க்க அறிஞர்கள் ஏகமனதாக ஏற்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் அறிய கட்டுரைக்குள் செல்லுங்கள்.]

Read more...
 
மக்கள் மக்களாக வாழட்டும் Print E-mail
Sunday, 16 February 2014 07:26

மக்கள் மக்களாக வாழட்டும்

[ திருமணம் ஓர் அற்புதமான பந்தம். திருமணம் என்பதிலும் முழுமை இல்லை; பூரணத்துவம் இல்லை. குறைபாடுகளும் இருக்கலாம்; இருக்கின்றன. எனினும், ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இக்கண்டுபிடிப்புக்கு நிகரான வேறொரு பந்தம் நிச்சயமாக இன்னும் தோன்றவில்லை.

ஆண் இன்னொரு பெண்ணால் மட்டுமே முழுமை பெறுகிறான்; பெண் இன்னொரு ஆனால் மட்டுமே நிறைவு பெறுகிறான். எல்லாவற்றையும் சட்டம் என்ற கோணத்தில் பார்த்துவிட்டு, தர்மத்தைப் புறக்கணிப்பது சமூக மேம்பாட்டுக்கு உதவாது...! அக்காலத்தில் உறவு முறை திருமணங்கள் தோன்றுவதற்கு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால் பிரச்னையை சரி செய்து உண்மையை உரத்துச் சொல்ல முடியும் என்பதே ஆகும். சமூக அங்கீகாரம் என்பது திருமண உறவு செழிக்க தோன்றியவையே...!

ஓரினசேர்க்கை எனபது ஒரு மன நோய். சரியான வயதில் உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. அனைவருக்குமே ஒவ்வொரு கட்டத்திலும் 12 வயதுக்கு மேல் 3 வருடத்திற்கு ஒரு முறை உளவியல் ரீதியான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திருமணதிற்கு முன்னும் பின்னும். தந்தையாகவோ தாயாகவோ நிலையை அடைந்த போதும், உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. ஆறறிவுக்கு கிழ் உள்ள விலங்குகள், பறவைகள் கூட தன எதிர்பாலை தான் நாடி ஈர்க்கபடுகின்றனெ.. மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த வக்கிர புத்தி.........]

Read more...
 
ஆபாசப் படங்களை பார்த்துப் பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...! Print E-mail
Friday, 07 June 2013 07:53

ஆபாசப் படங்களை பார்த்துப் பார்த்து அடிமையாகி விடும் மாணவ, மாணவிகள்...!

[ படிக்கும் வயதிலேயே ஆண் - பெண் உறவு எல்லை தாண்டி, கலாசார சீர்கேடு தலைதூக்குகிறது. கிரைம் சம்பவங்களுக்கும் வழிவகுக்கிறது. தொழில்நுட்பம் என்பது கத்தி போன்றது. ஆபரேஷனுக்கும் உதவும்; உயிரை கொல்லவும் உதவும்.

ஆபாச படங்களுக்கு அடிமையான பலரும், பிரச்னை நம்மை கை மீறி போய்விட்டது; ஆபத்தான நிலையில் உள்ளோம் என்பதை புரிந்து கொள்வதில்லை. ஒரு சிலர் மட்டுமே பிரச்னையை கூறி தீர்வு காண முன்வருகின்றனர்.

ஆபாசமான வலைதளங்களுக்குள் ஒரு சிறுவன், சிறுமி கூட உள்ளே புகுந்து விட முடியும் என்பது சர்வதேசத்துக்குமான சவால் என்றாலும், நம்முடைய கலாசாரத்துக்கு எதிராக நடத்தப்படும் மாபெரும் யுத்தம் என்பதை மறுக்கவே முடியாது. ஆபாச படங்களை அடிக்கடி பார்க்கும்போது, அதற்கு அடிமையாவதுடன் ஆண், பெண் நட்புக்கு இடையே எல்லை மீறவும், தூண்டுதலாக இருக்கும்.

மும்பை, டில்லி, சென்னை போன்ற பெரு நகரங்களில் உள்ள மாணவர்களுடன், கல்வி, விளையாட்டு, பொது அறிவு போன்ற விஷயங்களில் போட்டி போட வேண்டிய மாணவ சமுதாயம், இத்தகைய விஷயங்களில் பெருநகரத்து மாணவர்களுக்குப் போட்டியாக வளர்வதற்கு முழு முதற்காரணம், பெற்றோர்கள்; அடுத்ததாக, பள்ளி வளாகம்; இறுதியாக வெளிச்சூழல். பெற்றோர் தரும் அதீத சுதந்திரம், பள்ளி நிர்வாகங்களின் பண வேட்டை, "டிவி' போன்ற ஊடகங்களின் தாக்கம் ஆகியவற்றுடன், சமுதாய ரீதியான கட்டுப்பாடுகள் தளர்ந்து போயிருப்பதும் ஒரு காரணம்.

Read more...
 
ஊடக விபச்சாரம்: ஒழிப்பது அவசியம்! Print E-mail
Monday, 29 April 2013 13:07

ஊடக விபச்சாரம்: ஒழிப்பது அவசியம்!

  எஸ்.ஹமீத்   
 
எத்தனை விதமாகத்தான் இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்..! பாழாய்ப் போன பணத்துக்காகத் தன்னைப் பெற்றவளையும், தான் பெற்றவளையும் தன்னோடு கூடப் பிறந்தவளையும் பற்றிக் கொஞ்சமேனும் கவலைப்படாது எப்படி எப்படியெல்லாம் விபச்சாரம் புரிகிறார்கள். இப்படி விபச்சாரம் புரிய எப்படி இவர்களால் முடிகிறது..?

இவர்களெல்லாம் மனிதர்கள்தானா...? அல்லது கடவுளால் சபிக்கப்பட்ட, மனிதத் தோல் போர்த்திய மிருகங்களா...?
 
அட.. உழைத்து வாழ உடம்பில் தெம்பு இன்றியும் உரிய தொழில் இன்றியும் ஒருவேளைச் சோற்றுக்கு உதவுவார் யாருமின்றியும் வாடுகின்ற ஓர் உத்தமப் பெண் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் கூட விபசாரத்துக்கு உடன்பட மாட்டாள். 'மானங் கெட்டு மண்ணில் வாழ்வதைவிட மானம் காத்து மரணம் அணைப்பேன்' என்று அந்தப் பத்தினிப் பெண் செத்துப் போவாளே தவிர, பணத்துக்காகப் பரத்தையாகிச் சீரழிய மாட்டாள். இதுதான் தமிழ்ப் பெண்களின் பண்பாடு.

ஆனால், பணமொன்றே குறியாகப் படித்த 'மேதைகள்' இன்று செய்யும் விபச்சாரம் இருக்கின்றதே, அது கொடுமையிலும் கொடுமையானது; தமிழ்க் கலாசாரத்தின் ஆணி வேரையே அறுத்து வீசுகின்ற அநியாயம் அது; நாளைய சந்ததியினரை நாசக் குழிக்குள் புதைத்து விடுகின்ற பொல்லாத அக்கிரமம் அது.

Read more...
 
கணவரை மகிழ்விப்பது எப்படி? Part - 1 Print E-mail
Friday, 22 August 2008 18:36

கணவரை மகிழ்விப்பது எப்படி? Part - 1

(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)

நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)

மனைவியின் அழகிய வரவேற்பு

• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.

• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

• அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

• கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

Read more...
 
அதிகரித்து வரும் தலாக்! Print E-mail
Saturday, 20 June 2009 12:20

அதிகரித்து வரும் தலாக்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சமீபத்தில் தமிழகத்தின் பிரபலமான மதரஸாவின் முதல்வர் ஒருவரிடம் பேசும்போது அதிர்ச்சியான செய்தி ஒன்றை சொன்னார்கள்: ''மதரஸாவிற்கு தீர்வு கேட்டு வரும் மக்கள் 100 பேர் எனில் அதில் 90 பேர் தலாக் சம்பந்தமாகவே ஃபத்வா கேட்க வருகிறார்கள். அதுவும் தற்சமயம் பெண் வீட்டார்கள் விவாகரத்து கேட்டு வருவது அதிகரித்து வருகிறது'' என தெரிவித்தார்கள்.

கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு நாளுக்கு நாள் நசுங்கி வருகிறது. இல்லற வாழ்க்கையின் தத்துவமோ முக்கியத்துவமோ விளங்காத நிலையிலேயே பெரும்பாலும் அவர்கள் திருமணம் முடிக்கப்படுவதால் பலரது வாழ்வு அந்தரத்தில் தொங்குகின்ற நிலை ஏற்படுகிறது.

''அல்லாஹ்வின் அர்ஷை'' நடுங்கச் செய்யக்கூடிய செயலை ஏதோ ''பஸ் டிக்கட்'' வாங்குவது போல் மக்கள் எளிதாக ''கேட்கும்'' நிலை மாற வேண்டும்.

Read more...
 
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை Print E-mail
Thursday, 02 September 2010 18:09

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை

  ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா     

அடிப்படை விளக்கம்:

அல்லாஹ்வை ஈமான் கொள்ள வேண்டும் என்பதின் விளக்கம் என்னவென்றால் அல்லாஹ் தன்னைக் குறித்து அல்குர்ஆனில் கூறியிருக்கும் தன்மைகள் (ஸிஃபத்துகள்) செயல்கள் அனைத்தும் உண்மையே என நம்புவதாகும். அந்தத் தன்மைகளையும் செயல்களையும் கொண்டுதான் அல்லஹ்வை நம்பிக்கை கொள்ள வேண்டும். அத்துடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வைப்பற்றி கூறியுள்ள தன்மைகளையும், செயல்களையும் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

அல்குர்ஆனிலும் ஆதாரமிக்க நபிமொழிகளிலும் கூறப்பட்டுள்ளதில் நமது அறிவைக் கொண்டு கருத்து, பொருள் மாற்றத்தையோ செய்யக்கூடாது.

அவனுடைய தன்மைகளுக்கும் செயல்களுக்கும் படைப்பினங்களின் தன்மைகளையும் செயல்களையும் உதாரணமாக உவமையாக கூறக்கூடாது.

படைப்பினங்களின் தன்மைகளைக் கொண்டும் செயல்களைக் கொண்டும் அல்லாஹ்வின் தன்மைகளையும் செயல்களையும் விவரிக்கக் கூடாது.

அல்லாஹ்வின் தன்மைகள், செயல்கள் பற்றி கூறப்பட்டுள்ள குர்ஆனின் வசனங்களை பொருளற்றவை என்று கூறக்கூடாது.

Read more...
 
உலமாக்கள் சிந்திக்க வேண்டும்! Print E-mail
Friday, 07 January 2011 10:55

[ அல்குர்ஆன் 18:54 ஐ படித்துப் பாருங்கள். குர்ஆனில் ஒவ்வொரு உதாரணத்தையும் மனிதர்களுக்காக அல்லாஹ் மேல் விளக்கம் தேவையில்லாத நிலையில் விளக்கியுள்ளதாகக் கூறி, ஆயினும் மவ்லவிகளாகிய உங்களைப் போன்ற மனிதர்கள் அதிகமாக வீண் தர்க்கம் செய்பவர்களாக இருக்கிறீர்கள் என கண்டிக்கிறான்.

நீங்கள் அனைவரும் சிறிது நிதானமாகச் சிந்திக்க வேண்டும். மார்க்கப் பணியை சுயமரியாதையின்றி செய்து, பள்ளி முத்தவல்லிகள், மதரஸா நிர்வாகிகள் முன்னிலையில் கைகட்டி, பணிந்து கையேந்தி நிற்கும் மிகக் கேவலமான நிலை இருக்கிறது. மார்க்கத்தின் அடிப்படையே தெரியாத பணம் படைத்த முத்தவல்லிகள், தலைவர்கள் இடும் கட்டளையை ஏற்று மார்க்க முரணான செயல்களை செய்யும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்?

அவர்களது அராஜக, குர்ஆன், ஹதீஸுக்கு முரணான கட்டளைகளை நிறைவேற்றாவிட்டால், பணி நீக்கம் என்ற பெயரால் பந்தாடப்படுகிறீர்கள்! இந்த இழிவுகளையும், கேவலங்களையும், ஊர்ஊராக அலையும் அவலங்களையும் எப்படி உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறது? பிழைப்புக்கு வேறு வழி தெரியாத காரணத்தால், வறுமை உங்களை பயமுறுத்துவதால்தானே இத்தனை இழிவுகளையும், கேவலங்களையும், நாடோடி வாழ்க்கையையும் சகித்துக் கொண்டு வாழ்கிறீர்கள்?

Read more...
 
கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க! Print E-mail
Sunday, 26 February 2012 19:15

        கல்யாணத்தை தள்ளிப்போடாதீங்க!        

சாதித்த பிறகே திருமணம்’ என்பது இப்போதைய இளைஞர்களின் தாரக மந்திரமாகி வருகிறது. இப்படி கூறியே பலர் முப்பது, முப்பத்தைந்து வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிப்பு, நல்ல வேலை, பதவி உயர்வு, நல்ல சம்பளம் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வைத்து ஓடிக் கொண்டிருக்கிறோம். இலக்கை அடைந்து திரும்பிப் பார்க்கையில் நம் கையில் அனைத்தும் இருக்கும், இளமையைத் தவிர!

15 வயதிற்குள்ளாகவே, இளமைப்பருவத்தில் அடியெடுத்து வைத்து விடுகிறோம். ஆனால் 30, 35 வயதுவரை வாழ்க்கை வசதிக்காக உடல் தேவையை பூர்த்தி செய்யாமல் இயற்கைக்கு எதிராக வாழ முற்படுகிறோம்.

நம் நாட்டில் `செக்ஸ்` என்பது கெட்ட வார்த்தையாக பார்க்கப்படுகிறது. உடலுறவு பற்றி பேசுவது அசிங்கம். திருமணத்திற்கு முன்பு ஆணும், பெண்ணும் இணைவது கலாசார சீர்கேடு என சுழற்றும் சமூக சாட்டைக்கு பயந்து நமது உடலியக்க தேவைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு வாழ்கிறோம்.

தாமதமான திருமணம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கூட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. தாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு குழந்தை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. கருத்தரிக்க தாமதம். அப்படியே கருத்தரித்தாலும் சுகப்பிரசவம் கேள்விக்குறி என்ற நிலை.

Read more...
 
ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு? Print E-mail
Wednesday, 28 December 2011 09:03

ஆணுக்கும் பெண்ணுக்கும் எது அழகு? 

ஆண்களை அடிமை படுத்த நினைக்கிற பெண்களும், பெண்களை அடிமைபடுத்துற ஆண்களும் புரிந்து கொள்ளுங்கள்; நீங்க ஒருத்தர் இல்லாமல் இன்னொருவர் இல்லை.

சரி! ஆண்களே இல்லாத பெண்கள் மட்டுமே உள்ள ஒரு உலகம்; இல்லையென்றால், பெண்களே இல்லாத ஆண்கள் மட்டும் உள்ள உலகம்!- கற்பனை பண்ணிபாருங்க எவ்வளவு கொடுமை என தெரியும்.

[ சில ஆண்டுகளுக்கு முன்பு வரை விவாகரத்து என்பது அதிகம் கேட்கப்படாத வார்த்தையாகவே இருந்த்து இப்பொழுதெல்லாம் திருமணம் முடிந்த ஒரு நாளிலே பெண்களும் ஆண்களும்தான் விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றம் செல்கிறார்கள்.

நாம் இதை கொஞ்சமாவது நினைத்து பார்க்கிறோமா? பெற்ற தாய் தந்தையரின் நிலைமையை சரி அவர்கள் வயதானவர்கள் நாம் பெற்ற குழந்தைகள் வளரும் பிள்ளைகள் அவர்கள் எதிர்காலத்தையாவது சிந்திக்கின்றோமா என்றால் அதுவும் இல்லை.

ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாக புரிந்துகொள்ளாமை தான் பிரச்சினைகளுக்கு வழி வகுக்கிறது. ஒருத்தர் மேல் ஒருத்தர் அன்பாக இருங்கள். மனம் விட்டுப்பேசுங்கள், சின்ன சின்ன பிரச்சினைகளை வராமல் தடுக்க விட்டுகொடுத்து போங்கள். விட்டுக்கொடுக்கிறதால பெரிதா என்னங்க இழந்துட போறோம். விட்டுக்கொடுத்தலிலும் புரிந்துகொள்வதிலும் தான் வாழ்க்கையின் சுவை பன்மடங்கு அதிகரிக்கும்.]

Read more...
 
வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா? விட்டுப் பிடிங்க! Print E-mail
Friday, 28 October 2011 07:59

       வீட்டுக்காரரர் கோச்சுக்கிட்டாரா? விட்டுப் பிடிங்க!         

கணவன், மனைவி என்று இருந்தால் சண்டையில்லாமல் இருக்காது. சண்டை போட்டால் சமாதானம் ஆகும் வழியைத் தான் பார்க்க வேண்டுமே தவிர பிரச்சனையை பெரிதுபடுத்த முயற்சிக்கக் கூடாது.

வீட்டுக்காரர் கோச்சுக்கிட்டா மனைவிமார்கள் இப்படி எல்லாம் சமாதானப்படுத்தலாம்....

தவறு உங்கள் மீது தான் இருக்கிறது என்று தெரிந்தால் நீங்களாகவே முன்வந்து என்னங்க, மன்னிச்சுக்கோங்க தெரியாம பேசிட்டேன், மனசில வச்சுக்காதீங்க என்று கூறலாம். அவர் கண்டிப்பாக மன்னித்துவிடுவார். மாறாக ஈகோ பார்த்தால் பிரச்சனை தான் பெரிதாகும். கணவன் மனைவிக்குள் ஈகோ பார்க்கக் கூடாது.

சண்டை போட்டால் ஆளுக்கொரு அறையில் இருக்காதீர்கள். கணவர் அருகில் அமர்ந்து அவரது கையை எடுத்து உங்களை கையில் வைத்துக் கொண்டு ஏதோ திடீர் என்று கோபம் வந்துவிட்டது. அதனால் கத்திட்டேன். அதையெல்லாம் கண்டுக்காதீங்க. என் கோபம் 5 நிமிடம் தான் என்று சொல்லிப் பாருங்கள். அவருக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிடும்.

Read more...
 
உடலுறவு - ஏன் பெண்களால் சில நேரம் மறுக்கப்படுகிறது? Print E-mail
Wednesday, 28 December 2011 08:36

உடலுறவு - ஏன் பெண்களால் சில நேரம் மறுக்கப்படுகிறது?

கணவன் மனைவி உறவு ஆரோக்கியமாக இருப்பதற்கு அவர்களுக்குள் தாம்பத்திய (உடல்)உறவு என்பது நல்லவிதமாக இருக்கவேண்டும். மிக அவசியமானதும் கூட. இதை தவிர்ப்பது என்பது இருவருக்குமே பாதிப்பை மன அளவில் ஏற்படுத்தும். பல விவாகரத்துக்கு இதுதான் அடிப்படை காரணம் என்பது அதிர்ச்சியுடன் கூடிய உண்மை.

இந்த உறவை பொறுத்தவரை கணவன் விருப்பபட்டு அழைக்கும் போது மனைவி மறுப்பதுதான் பெரும்பாலான வீட்டிலும் நடைமுறையில் இருக்கிறது. அது ஏன் என்பது தெரியாமல் பல கணவர்களும் தவித்து போய் விடுவார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி பாதிக்கப்பட்டவர்கள் பலர்.

ஆண்களுக்கு மட்டும் ஏன் அந்த எண்ணம் அதிகமாக இருக்கிறது? என்ற ஒரு கேள்வி நான் சந்தித்த பல பெண்களிடமும் இருக்கிறது.

"அந்த ஆளுக்கு வேற நினைப்பே கிடையாது எப்பவும் அந்த நினைப்புதான்....?!

பிள்ளைங்க வேற வளர்ந்திட்டாங்க. இப்பவும் அப்படியே இருக்க முடியுமா..?

என்ன சொன்னாலும் புரிஞ்சுக்க மாட்டாரு...!"

இந்த மாதிரியான புலம்பல்கள் தான் பல பெண்களிடம்...!

Read more...
 
இல்லற வாழ்வை இனிதாக்கும் திறவுகோல் மகளிரிடமே! Print E-mail
Saturday, 03 December 2011 06:54

இல்லற வாழ்வை இனிதாக்கும் திறவுகோல் மகளிரிடமே!

அன்பு என்றால் எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்?

பிறந்தது முதல் பெற்றோரின் அரவணைப்பிலும் அன்பிலும் கட்டுண்டு இருக்கிறோம் என்பது சாதாரணவொரு விஷயம்.

அந்த அன்பு மற்றவர்களுக்கு பகிரப்படும் போதோ

நம்மீதான கரிசனை குறையும் போதோ நமது மனது சலனப்பட்டதில்லை, குறை தேடியதுமில்லை.

அதையும் மீறி நடக்கின்ற தப்புகளைத் தேடி சரிபண்ண முயற்சித்திருக்கிறோமா என்றால் அதுவும் இல்லை.

இது யதார்த்தம்..

Read more...
 
செக்ஸ் வாழ்க்கையும் உடல் ஆரோக்கியமும் Print E-mail
Tuesday, 07 February 2012 07:22

செக்ஸ் வாழ்க்கையும் உடல் ஆரோக்கியமும் 

உங்கள் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் உங்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியானதாக அமைவது அவசியம். இயற்கையோடு இணைந்து வாழ்வது ஆரோக்கிய வாழ்க்கைக்கு மிக முக்கியம். செக்ஸ் வாழ்க்கையும் இயற்கையோடு இணைந்த ஒன்றுதான்.

செக்ஸ் என்பது ஆரோக்கியமான விஷயம் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை தேர்ந்தெடுத்து உண்பதைப் போலவே, ஆரோக்கியமான செக்ஸ் நடவடிக்கைகள் தேர்ந்தெடுத்துப் பழகிக்கொள்ள வேண்டும். கணவனும் மனைவியும் தங்களுடைய செக்ஸ் தேவைகளை மனம்விட்டுப் பேசிக் கொள்ள வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. மனம் விட்டுப் பேசி தேவைகளை பூர்த்தி செய்கிறபோது தாம்பத்யம் ஆரோக்கியம் பெறுகிறது.

செக்ஸ் பற்றி பேசுவதோ எழுதுவதோ தீண்டத்தகாத விஷயம் என்ற பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். அது ஆரோக்கியமான விஷயம், ஆரோக்கியத்திற்குத் தேவையான விஷயம் என்பதை புரிந்து வைத்திருப்பவர்கள் மிக சிலரே! மனித இனவிருத்திக்கும், உணர்ச்சிப் பூர்வமான வாழ்க்கை அமைதிக்கும் தேவையான ஒரு விஷயத்தைப் பற்றி அறிந்துகொள்ள தயங்குவதே தவறான அணுகுமுறையாகும்.

Read more...
 
இந்தி எதிர்ப்பு - ஒரு வரலாற்றுப் பார்வை! Print E-mail
Monday, 17 December 2012 07:56

இந்தி எதிர்ப்பு - ஒரு வரலாற்றுப் பார்வை!

[ இந்தியை வெறுக்கிறோம் கூறி தமிழை தமிழரிடமிருந்து அன்னியப்படுத்தி, ஆங்கிலத்தை மேலேற்றி அனைத்துக்கும் துணைபோன இரண்டு திராவிடக் கட்சிகளின் ஐம்பது வருடச் சாதனை.

'இந்தி ஒரு போதும் இல்லை; ஆங்கிலம் எப்போதும்' முழக்கத்தை முன் வைத்தது வரலாற்றுப் பிழை. இந்தி எதிர்ப்பு தி.மு.க., அ.தி.மு.க பிழைப்பு வாதம். ஆட்சி மொழியிடத்தை இந்தி பிடித்துக் கொண்டது. ஆங்கிலம் தமிழர் வாழ்வின் அனைத்து இடத்தையும் கபளிகரம் செய்து கொண்டது.

இந்தி எதிர்ப்பு காட்டியோரின் வாரிசுகள் இன்று சிபிஎஸ் பள்ளிக்கூடங்கள். மெட்ரிக் பள்ளிகளில் படிக்கின்றனர். 12ஆம் வகுப்பு வரை தமிழ் இல்லாமல் கல்லூரி செல்கின்றனர். பிள்ளைகள் மொழியும் ஆங்கிலம், தமிழ் கேட்டு அவர்கள் பெருமை கொள்ளலாம். தமிழுக்காகவே வாழ்வது போன்று நாடகமாடும் தலைவர்களது வாரிசுகள் பெயர்கள் வடமொழியிலிருக்கின்றன.

தமிழும் முழுமையாகத் தெரியவில்லை. ஆங்கிலத்திலும் ஆளுமை இல்லை. இந்தியும் வாந்தி வருகிறது. உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்யவும் தயாரில்லை. ஆளில்லை. இதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை. வடக்கத்தியர் உடல் உழைப்பு தர வந்து குவிகின்றனர்.]

Read more...
 
மூளையைக் கொல்லாதீங்க, ப்ளீஸ்! Print E-mail
Wednesday, 13 April 2011 08:33

Related image

மூளையைக் கொல்லாதீங்க, ப்ளீஸ்!

100,000,000,000 எவ்வளவு என்று கணக்கிட்டு விட்டீர்களா? ஆம், பத்தாயிரம் கோடி; இவ்வளவு செல்கள் நம் ஒவ்வொருவரின் மூளையிலும் உள்ளன. வியப்பின் உச்சிக்கே சென்று விட்டீர்களா? இவ்வளவு செல்களையும் நாம் பயன்படுத்த முடியாவிட்டாலும், செல்களை கொல்லும் வேலையை மட்டும் செய்கிறோம்.

சரியாக சாப்பிடாமல், சரியாக தூங்காமல், உடலை சரியாக வைத்துக் கொள்ளாமல். இதனால் தான் சோர்வு முதல், பல பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஒருவர் கோமா நிலைக்கு செல்வதற்கும் இது தான் காரணம்.

   கொல்லாதீங்க    

ஆம், உங்கள் மூளையில் உள்ள செல்களை கொல்லாதீர்கள்; என்னது, நமக்கு நாமே மூளை செல்களை கொல்ல முடியுமா என்று கேட்கலாம். அது தான் இப்போது இளைய தலை முறையினரிடம் காணப்படுகிறது.

எந்த ஒரு வேலையில், தொழிலில் இருக்கும் சிலர் மட்டும் தான் "பேலன்ஸ்’ ஆக இருப்பர்; அவர்கள் சுறுசுறுப்பு குறையாது. ஆனால், சிலரைப் பார்த்தால், "டென்ஷன்ஸ’ என்றே சொல் லிக் கொண்டிருப்பர். சரியாக தூங்கமாட்டார்கள்; சாப்பிடமாட்டார்கள்; இவர்கள் தான் அதிகபட்சம் மூளை செல்களை "கொல்’கின்றனர். அதாவது, செல்கள் செயலிழந்துபோகின்றன.

Read more...
 
நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது? Print E-mail
Tuesday, 17 August 2010 20:34

நல்ல உறவுகளின் அஸ்திவாரம் எது?

[ உங்கள் உறவுகளில் நீங்கள் தவறிழைக்கும் போது மற்றவர்கள் உங்களை மன்னித்து விட்டால் மட்டும் போதாது. நீங்களும் உங்களை மன்னிக்க வேண்டும்.

மற்றவர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்க வேண்டும்.

நீங்கள் மற்றவர் வாழ்க்கையை வாழ முயற்சி செய்யக் கூடாது; அவர்கள் உங்களுக்கு நெருங்கியவராக இருந்தாலும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையை யாரும் வாழ முடியாது.

உங்கள் வாழ் நாளில் நீங்கள் பார்க்கப் போகும் அத்தனை பேரிலும், உங்களை விட்டுப் பிரியாத ஒரேயொருவர் நீங்கள் மட்டும்தான்.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் சிறப்பாக, உற்சாகமாக, அர்த்தமுள்ளதாக வாழத் தொடங்கினால் போதும். உங்களுக்கு அமையும் உறவுகளும், மகிழ்வும் உங்களை விட்டு எளிதில் விலகி போகாது.]

நாம் ஒவ்வொருவருமே வாழ்க்கையில் சில விஷயங்களக் கற்றுக் கொண்டு, அதை மனதில் பத்திரப் படுத்திக் கொள்கிறோம். விவேக முள்ளவர்கள், அந்த அனுபவங்களை தகுந்த தருணத்தில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

நிறைய பேர், நட்பில், அன்பில் வெற்றி பெற, அடுத்தவர் எதிர்பார்ப்புகளப் பூர்த்தி செய்யும் வகையில் தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் நீங்கள் திருப்திப்படுத்த வேண்டியது மற்றவரை அல்ல. உங்களைத்தான்.

மேலே இது சுயநலமல்ல. தன் மீது அன்போ, மரியாதையோ கொண்டிராத ஒருவர் அடுத்தவருடய அன்பை, மரியாதையை உய்த்துணர முடியாது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 81 82 83 84 85 86 87 88 89 90 Next > End >>

Page 87 of 91

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article