Friday, 08 February 2013 05:21 |

''இஸ்லாம் உலகம் முழுவதற்கும் பொருந்திப் போகக்கூடிய மார்க்கம்'' - இம்ரான் கான்
[ 1980-களில் என் வாழ்க்கையில் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்களால் நான் இறைவனை நோக்கித் திரும்பினேன். அதில் ஒன்று கிரிக்கெட். அந்த ஆட்டத்தில் நான் மாணவனாக இருந்த காரணத்தால், உண்மையில் நான் எதிர்பார்க்கும் வாய்ப்பு இறைவன் நாடியிருந்தால் மட்டுமே கிடைக்கும் என்று உணரத்தொடங்கினேன். அந்த நேரத்தில் இறைவனை நான் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு தெளிவாகவே இருந்தது.
திருக்குர்ஆன் முஸ்லிம்களை "தீவிரவாதிகள்" என்று அழைக்காமல் "நடுநிலையாளர்கள்" என்றே அழைக்கிறது. இறைத்தூதருக்கு, "மக்களிடம் சென்று இறைச் செய்திகளை சொன்னால் போதும்; மக்கள் இஸ்லாத்தை ஏற்றார்களா இல்லையா என்று கவலைப்படத் தேவையில்லை" என்று கூறப்பட்டது. எனவே அடுத்தவர் மீது உங்கள் கருத்தை திணிக்கலாமா எனும் கேள்விக்கே அங்கு இடமில்லை.
மிக மோசமான செயல், சில தனி நபர்கள் அல்லது குழுக்கள் தங்கள் அரசியல் நலன்களுக்காக இஸ்லாத்தினைத் தங்கள் விருப்பம் போல் வளைத்துக் கொள்கிறார்கள்.
இன்றைய நாளில் இஸ்லாத்தில் சில கடமைகளை மட்டும் எடுத்துக்கொள்ளும் நாடுகளும், மதத்தின் பேரால் மக்களின் உரிமைகளை மீறும் நாடுகளும்தான் இஸ்லாமிற்கு மோசமான விளம்பரங்கலைத் தருகின்றன. உண்மையில், இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு கீழ்படியும் சமூகம்தான் விடுதலையடைந்த சமூகமாக இருக்க முடியும்.]
|
Read more...
|
Monday, 18 February 2013 11:05 |

பாலியல் வன்முறையின் விசாரணை - பெண்ணின் கண்ணியம் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும்
பாலியல் வன்முறையின் தன்மையை நாம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. எப்பொழுதெல்லாம் ஒரு பெண்ணின் தன்னாட்சி நிலைக்கெதிராக ஒரு ஆண் உறவு கொள்கிறானோ அங்கே அந்தச் சம்பவம் நிகழ்கிறது. அங்கே பெண்ணின சமத்துவ உரிமை, அவளுடைய சுயமதிப்பு தாக்கப்படுகிறது.
கற்புடமை, கன்னித்தூய்மை போன்ற கருத்துப் படிவங்கள் கட்டமைக்கப்படுவதற்கு முன்பே எப்பொழுதெல்லாம் அவள் மேல் ஆண் பாலியல் அதிகாரம் செய்ய முனைந்தானோ அங்கே அந்தக் குற்றம் நடைபெற்றது.
ஆணாதிக்க சமூகத்தில் இந்தக் குற்றத்தை குடும்ப கெளரவம், மானம் என்ற சாயமும், புனிதம், தூய்மை என்ற வர்ணமும் பூசப்பட்டு அந்த வன்முறையின் உண்மைத் தன்மை மறைக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நடைபெறும்பொழுது ஒரு கொடுங்குற்றம் நடைபெறுகிறது, இதற்கு அவள் பொறுப்பல்ல, அதற்கும் கெற்ரவத்திற்கும் இணைப்பும் இல்லை. அவள் எவ்விதத்திலும் களங்கப்படவுமில்லை. இதை முதலில் நாம் புரிந்து கொண்டால் தான் பெண்ணுக்கு நீதி கிடைக்கும், அவள் உரிமை பாதுகாக்கப்படும்.
இந்த உரிமைப் பறிப்பு அவளுடைய மனப்பக்குவத்தின் வளர்ச்சியையோ, எனது உடல் என்ற புலனுணர்வையோ சார்ந்ததில்லை. அவளுடைய சம்மதமின்றி நடக்கிறது. அவள் வாய் திறந்து வேண்டாம் என்று சொல்லாமல் மெற்னமாக இருந்தால் அது சம்மதமாகாது. அவள் அச்சத்தால் ஆற்றலிழந்து போயிருக்கலாம், பலவந்தத்தால் அவள் கைகள் செயலற்றுப் போயிருக்கலாம், இந்தச் செயலின் தாக்கத்தை மனதளவில் புரிந்துகொள்ள முடியாத சிறுமியாக இருக்கலாம், மாற்றுத்திறனாளியாக இருக்கலாம், மனவளர்ச்சியடையாதவராக இருக்கலாம். எவ்வாராயினும் அது அப்பெண்ணின் மீது ஏற்பட்ட அதிகாரத்தாக்குதலே.
|
Read more...
|
Friday, 12 November 2010 15:53 |

குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை -
இந்தியாவில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பெரும் ரகசியம்! 
குழந்தைகள்மீதான பாலியல் கொடுமை (Child Sexual Abuse) இந்தியாவில் மறுத்து, மறைத்துவைக்கப் பட்டிருக்கும் பெரும் ரகசியம். காரணம், அறியாமை, ஒப்புக்கொள்வதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்த குழப்பம், அச்சம், இப்படிப் பல. விளைவு: குழந்தைகள் பாதுகாப்பு உரிமையை இழக்கின்றனர். இக்கொடுமையை அனைத்து வகைப்பட்ட குழந்தைகளும் - பொருளாதார, சமூக, சாதி, பால் வேறு பாடின்றி - அனுபவிப்பதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.
பள்ளிகளின் அவல நிலை குற்றங்கள் நடப்பதற்கு ஆதரவான சூழ்நிலையை உருவாக்குகிறது.
குறிப்பாக, சுயநிதிப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு, அதிலும் பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற சூழல்; அவற்றில் இருட்டு மூலைகளில் பதுங்கி, குழந்தைகளின் இயற்கை யான இயலாமையையும் அறியாமையையும் பயன்படுத்திக்கொண்டு பாயக் காத்திருக்கும் வக்கிரங்கள்; இப்பள்ளிகளின் ஆங்கில மீடியத்தையும் தேர்ச்சி விகிதங்களையும் கண்டு பெருமிதம் கொண்டு, குழந்தைகளைக் காவு கொடுக்கும் பெற்றோர்; பள்ளிகளின் மேல் எந்தக் கண்காணிப்பும் செலுத்தாத கல்வித் துறை; குழந்தைகளின் வளர்ச்சியில் அக்கறையற்ற சமூகம். இத்தனைக்கும் பலியாகின்றனர் குழந்தைகள்.
|
Read more...
|
Monday, 03 October 2011 08:54 |


தம்பதிகளுக்குள் `தடுமாற்றம்' ஏன்?
பஸ், ரெயிலில் புதுமணத் தம்பதிகள் பயணம் செய்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?
அருகருகே ஒட்டி அமர்ந்திருப்பார்கள். எந்நேரமும் பேசிக்கொண்டிருப்பார்கள்.
அவர்கள் முகத்தில் புன்னகை இருக்கும். பேச்சில் சிணுங்கல் தெரியும்.
சாலையின் இருமருங்கிலும் அவர்களை கடந்துபோகும் ஒவ்வொன்றும் சந்தோஷ சமாச்சாரங்களாக இருக்கும்.
அப்போது அவர்கள் வாழ்க்கை சந்தோஷ சாம்ராஜ்யம் போன்றிருக்கும்.
நாலைந்து மாதங்கள் கடந்திருக்கும்...
அதே பஸ், ரெயில் பயணம். அதே சக பயணிகள். சாலை இருமருங்கிலும் அதே காட்சிகள். எல்லாம் பழையதுபோல் இருந்தாலும் இந்த தம்பதிகளின் சுபாவம் மட்டும் தலைகீழாய் மாறியிருக்கும்.
கொஞ்சல் இல்லை.
பேச்சில் சிணுங்கள் இல்லை.
நெருக்கமும் இல்லை.
நீ யாரோ நான் யாரோ என்பதுபோல் ஆளுக் கொரு பக்கமாய் இறுக்கத்துடன் காணப்படுவார்கள்.
|
Read more...
|
Friday, 20 May 2011 11:33 |

காலையில் எழுந்ததும் ''அந்த.....'' பசியா?
[ உடல்களின் உறவை விட உள்ளங்களின் நெருங்கிய உறவுதான் இல்லறத்தில் மிக மிக முக்கியமானது, இல்லையா...?]
இன்னும் சூரியன் உதிக்காத காலைப் பொழுது, தூரத்தில் கொக்கரக்கோ சத்தம், ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெளிச்சம், ஜன்னலைத் திறக்கும்போது லேசான இதமான காற்று, படுக்கை அறையில் பரவசமான நிலையில் உங்களது துணை, அவரது அமைதியாக மூடியிருக்கும் கண்கள், அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமின்றி ரசிக்க வைக்கும்.
இப்படிப்பட்ட அழகைப் பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் தோன்றும் உணர்வு - இப்போது உறவு வைத்துக் கொண்டால் என்ன என்பதுதான்.
ஆண்களில் பெரும்பாலானோருக்கும் இந்த காலை நேர 'பசி' உணர்வு எழுவது சகஜம். அதேசமயம், பெண்களுக்கு அந்த உறவில் பெரும்பாலும் நாட்டம் ஏற்படுவதில்லை.
|
Read more...
|
Sunday, 27 March 2011 08:05 |

தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்!
மாதவிடாய் நாட்களைத்தவிர்து மற்ற நாட்கள் அனைத்துமே கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட ஏற்ற நாட்கள்தான். இருந்தாலும் சில நாட்களில் அந்த இல்லற (உடல்) உறவை தவிர்த்திருப்பது ஆரோக்கியம். அவை எந்தெந்த நாட்கள்? இதோ உங்களுக்காக!
o கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.
o பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.
o சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.
|
Read more...
|
Saturday, 16 April 2011 12:38 |

நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்ச்சியோடு சுவர்க்கத்தில் நுழையுங்கள்!
கணவன் மனைவி உறவு மனித வாழ்க்கையின் மற்றெல்லா உறவுகளையும் விட மிக ஆச்சர்யம் தரத்தக்க உறவு எனலாம். யார் யாருக்கோ பிறந்தவர்கள் திருமணத்திற்குப் பிறகு திடீரென்று இணைந்த பின்னர் இருவரது உள்ளங்களிலும் பெருக்கெடுக்கும் காதல், பிரியம், நெருக்கம், தாம்பத்யம், கருணை, கனிவு, பரிவு, விட்டுக் கொடுத்தல் முதலானவற்றிற்கு நிகரில்லை. அதற்கான காரணம் என்ன என்றும் நாம் அறிய முனைவதில்லை.
கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும்? அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை....
இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பாலும், நிகரற்ற அருட்கொடைகளாலும், தனது பேராற்றல் மிக்க நுண்ணறிவாலும் காரண கர்த்தாவாக இருக்கின்றான் எனும் உண்மையை அல்-குர்ஆன் எடுத்தியம்புவதை..... இக்கட்டுரைக்குள் தேடுங்கள்.
அல்லாஹ் தன்னந்தனியாக இருந்தான். தன்னுடைய சக்திகளை வெளிப்படுத்த வேண்டுமென நாடினான். தன்னைத்தான் அறிவதற்காக ஓர் அற்புதமான சிருஷ்டியை படைக்க நாடினான். தன் கற்பனையில் உருவானபடி மனிதனைப் படைத்தான். படைத்துத் தன் பிரதிநிதியாக, கலீஃபாவாக பூமியில் ஆக்கினான்.
ஆணைப் படைத்த இறைவன் ஆணுக்குத் துணையாகப் பெண்ணையும் படைத்தான். அதுவும் ஆணின் விலா எலும்பிலிருந்தே பெண்ணைப் படைத்தான். படைக்கப்பட்ட ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் விரும்ப வேண்டுமென நாடினான். எனவே, பெண்ணிடத்தில் ஒரு கவர்ச்சியை வைத்தான். ஆணிடத்தில் கம்பீரத்தை வைத்தான். ஆகையால் ஆண் பெண்ணை விரும்புகிறான். பெண்ணும் ஆண்மையை விரும்புகிறாள்.
|
Read more...
|
Monday, 25 October 2010 08:00 |

மருத்துவத்தின் அரசியல்
MUST READ
மருத்துவர்,அ.உமர் ஃபாரூக்
மருத்துவ உலகின் எந்த ஒரு விஷயம் பற்றி விவாதித்தாலும் அதன் பின்னால் நிழலாய்த் தொடரும் வலைப்பின்னலில் இருந்து அவ்வளவு எளிதில் யாரும் தப்பிவிட முடியாது. வெளிப் படையாய்த் தெரியும் பல விஷயங்கள் அதன் ஆழத்தில் திட்டமிட்டு பின்னப்பட்ட அரசியலின் மேல் தான் நிறுவப்பட்டிருக்கின்றன.
நம்நாட்டு மருத்துவக்கல்வியின் கட்டமைப்பு பற்றி நாம் தொடங்குவது பொருத்தமானதாக இருக்கும். சமீபத்தில் ஊழல் வழக்கில் கைதான இந்திய மருத்துவக் கவுன்சிலின் இயக்குநர் பற்றி இன்று நாடே பேசிக்கொண்டிருக்கிறது என்றாலும் அத்தனையும் கடந்து நுட்பமான உள்முகங்களுக்குச் செல்லலாம்.
இந்திய மருத்துவக் கவுன்சில் (Indian Medical Council) என்ற பெயரில் இருந்தே அரசியல் துவங்குகிறது.
இந்தியாவின் ஹோமியோபதி மருத்துவக் கல்வியை முறைப்படுத்த Indian Homeo Medical Council, சித்தமருத்துவ, ஆயுர்வேதக் கல்வியை முறைப்படுத்த Indian Siddha and Ayurvedha Medical Council.
இப்படி அந்தந்த மருத்துவமுறைகளின் பெயர்களிலேயே மாற்று மருத்துவக் கவுன்சில்கள் இயங்குகின்றன. எனில் ஆங்கில மருத்துவக் கவுன்சில் Indian Allopathic என்றுதான் இருந்திருக்க வேண்டும். ஆனால் Indian Medical Council என்ற தன் பெயரிலேயே இந்தியாவின் மருத்துவத் தலைமை நிறுவனமாகத் தோற்றமளிக்கிறது.
இந்த ஆங்கில மருத்துவக் கவுன்சில் தன் துறையான ஆங்கில மருத்துவத்தில் மட்டும் தலையிடாமல், எல்லா மருத்துவத்துறைகளின் கல்வித் திட்டங்களிலும் அரசு ஒத்துழைப்போடு மூக்கை நுழைக்கிறது.
இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவக்கவுன்சில் பிறதுறைகளில் தன் ஆதிக்கத்தைச் செலுத்துவ தால் என்ன ஆகிவிடப் போகிறது என்று கூட நாம் கேட்கலாம். மாற்று மருத்துவக்கல்வியில் ஆங்கில மருத்துவம் கலந்ததால் இந்த 50 ஆண்டுகளில் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன; எதிர்காலத்தின் மாற்று மருத்துவ வளர்ச்சியே கேள்விக்குறியாகும் அளவிற்கு.
|
Read more...
|
Thursday, 21 July 2011 09:09 |


பெண்கள் முன்னேற்றம் - வளர்ச்சியா, வீக்கமா...?
கடத்த சில ஆண்டுகளில் கற்பனை பண்ணிபார்க்க முடியாத அளவில் பழக்கவழக்கங்களிலும் சிந்தனைகளிலும், முக்கியமாய் பெண்கள் நிலையில் பெரும் மாற்றங்கள் வந்துள்ளன. இந்த மாற்றங்கள் வளர்ச்சியா, வீக்கமா?
உறுதியாய் பெருமளவில் வளர்ச்சிதான்... ஆனால், ஆங்காங்கே வீக்கங்களும் தோன்றி உள்ளதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
அறியாப்பருவத்தில் திருமணம் நடந்து, கல்வி அறிவு மறுக்கப்பட்டு உனக்கென்று தனியாய் எந்த விருப்பு,வெறுப்பும் இல்லாமல் வாழப்பழகு என்று காலங்காலமாய் விதிக்கப்பட்டிருந்த சட்டங்களை உடைத்து கொண்டு பெண்கள் சமுதாயம் இன்று முன்னேறி உள்ளது.
மிக பெரிய அளவில் கல்வித்தகுதியை பெற்றதுமல்லாமல், ஆண்களில் உலகம் என்று முத்திரை குத்தப்பட்ட பிரிவுகளான ராணுவம், காவல்துறை, அரசியல், ஆராய்ச்சி, தொழில்நுட்பம் என்று சகலத்திலும் புகுந்து இன்றையப் பெண் வெற்றிக்கொடி நாட்டி வருகிறாள்.
|
Read more...
|
Saturday, 04 June 2011 08:40 |
 
[ பெண்களின் படைப்பு வினோதமானது அவளது அழகும், கவர்ச்சியும், நலினமும், ஆணைப் பொருத்தவரை தேவையானதாக இருக்கிறது. உலகம் முழுதும் அவள் வியாபாரப் பொருளாகிப் போனதற்கு காரணம் அவளது திறமையோ கல்வியோ அறிவோ அல்ல. அவளது உடல்தான் உடல் சார்ந்த கவர்ச்சிதான்.
பெண்மீதான தன் மோகத்தை தீர்த்துக் கொள்ளும் முயற்சியில் தான் கற்பழிப்புகள். ஈவ்டீஸிங்கள், சீண்டல் கொடுமைகள் நடக்கின்றன. இதற்கு வழி தெரியாதவர்கள் வயதுக்குவராத சிறு குழந்தைகளை ஆசை வார்த்தை பேசி கூட்டி சென்று தன் இச்சையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.
பெண்களின் உடல் மீதான ஆண்களின் சிந்தனை எப்படியெல்லாம் தன் நிலையை வெளிப்படுத்துகிறது என்பதை உலக நடப்புகள் விளக்காமலில்லை.
அகில இந்திய வானொலி - தொலைக்காட்சி இயக்குனராகவும், ஆசிய பசிபிக் நாடுகளின் மலேஷிய செனடிக் திட்ட ஆலோசகராகவும் பணியாற்றிய 'சித்ரா வைத்தீஸ்வரனி'டம் பெண்ணியம பற்றி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது.
"பெண்ணை மற்றவர்கள் பார்க்கும் விதம்?".
அவர் பதிலளித்தார். 'நான் பார்த்தவரை எல்லா சமுதாயத்திலும் முதலில் பெண்கள் செக்ஸ்சிம்பலாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்'
இந்தப் பெண்மணி ஆஸ்த்ரேலியா, சிங்கப்பூர், சீனா, மலேஷியா, கொரியா, மெக்சிகோ, பிரான்ஸ் என்று பலநாடுகளுக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்துனை நாடுகளிலும் ஆண்களின் பார்வை பெண்களின் மீது பட்டவிதத்தைத்தான் அவர் பதிலாக வெளிபடுத்தியுள்ளார்.
பெண்ணின் ஆடை கழற்றுவதில் ஆண்வக்கிரம் பளிச்சிடுகிறது என்றால் அதையே சுதந்திரம் என்று பேசும் பெண்களே உங்களின் சுதந்திர சிந்தனை நல்ல சிந்தனையா?]
|
Read more...
|
Saturday, 26 January 2013 18:48 |

புவி நிர்வாணம்
நூருத்தீன்
உலகளாவிய முறையில் புரட்சி(!!!). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான். பெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு.
அப்படியென்ன புரட்சி? புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம் என என்னென்னவோ அனாச்சாரங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அதையெல்லாம் சட்டமியற்றி முற்றிலுமாய்த் தடுக்க இயலவில்லையே என யோசித்தார்கள் மேன்மக்கள். அவர்களுக்கு அற்புத யோசனை உதித்தது.
'ஒன்றும் பாதகமில்லை; அனைத்தையும் சட்டமியற்றி அங்கீகரித்துவிட்டால்? தீர்ந்தது விஷயம்!'
நமக்குப் புரியும்படியான எளிய உதாரணம் சொல்வதென்றால், 'மது' தப்பு, பாவம், தீங்கு என்று நம்மிடம் குத்துமதிப்பாய் ஓர் அனுமானம் உள்ளது.அதை, 'சொன்னால் கேட்கிறார்களா இந்தக் குடிமக்கள்? குடித்தே தீருவேன் என்று நிற்கிறார்களே' என்று திட்டிவிட்டு அரசாங்கமே சப்ளை செய்து லாபம் பார்க்கிறார்கள் இல்லையா, அதைப்போல்தான்.
இப்படி உருவாகியுள்ள புரட்சியினூடே நடைபெறும் மற்றொரு பக்கவிளைவு, அழிக்கப்படும் சொரணை. அதாவது, ஒரு விஷயத்தை insensitive ஆக்குவது.
|
Read more...
|
Wednesday, 20 January 2010 07:26 |

பொன்மொழி முத்துக்கள்
1. சின்னச் சின்ன விஷயங்கள் சந்தோஷத்தைத் தரும். ஆனால், சந்தோஷம் சின்ன விஷயம் இல்லை.
2. செலவுக்குமேல் வரும்படி உள்ளவன் செல்வன்; வரவுக்குமேல் செலவழிப்பவன் ஏழை.
3. போனால் வராதது ஒன்றே ஒன்று; அதுதான் காலம்(நேரம்).
4. மனைவி இல்லாதவன் அரை மனிதன்.
5. ஆண்களைவிடப் பெண்களுக்குப் பசி இரு மடங்கு; புத்தி நான்கு மடங்கு; ஆனால் ஆசைகளோ எட்டு மடங்கு. (பெண்கள் வருந்தற்க)
6. அழகுக்கு ஆற்றல் அதிகம்; ஆயினும் அதைவிட ஆற்றலுடையது பணமே!
7. உள்ளத்தில் அன்பு இருந்தால் மட்டும் போதாது; அது செயலில் வெளிப்படவேண்டும்.
|
Read more...
|
Saturday, 20 July 2013 10:06 |

கரணம் தப்பினால் மரணம்
எனும் விதியின் கீழ் தவிக்கும்
'யகூதி நசாரா' கூட்டு!
இந்த முஸ்லீம் உம்மத் மிக நீண்ட காலம் தனக்கு முன் எதிர்ப்படும் தடைகளை முற்றுப்புள்ளியாக்கி எஞ்சிய மார்க்கத்தோடு (தனது அடயாளப் படுத்தலோடு)திருப்தி காணுவது; எனும் முடிவுரையிலேயே தனது போராட்ட சிந்தனைகளை மழுங்கடித்து வாழ்ந்து வந்தது. ஆனால் தடைகளை தாண்டுவது என்பது தான் இலட்சிய வாத போராட்டத்தின் உண்மையான வடிவம் ஆகும். இங்கு இழப்புகள் இறப்புகள், ஒரு விடயமே அல்ல. கொள்கை கொச்சைப் படுத்தப்படக் கூடாது. இலட்சியம் கோமா நிலைக்கு கொண்டு செல்லப் பட்டு தகுதியற்றதாக மாற்றப்படக் கூடாது. ஆனால் இதுவரை நடந்தது இந்த நாசகாரம் தான் . இந்த உம்மத்தின் சிந்தனை தெளிவின்மையும், தலைமைகளின் தவறான வழி நடாத்தலும் இஸ்லாத்தின் நடைமுறை சாத்தியம் பற்றி' குப்பார்களின்' தடைகளுக்கு முன்,' குப்பார்களின் சதிகளுக்கு முன் அதில் ஒரு அங்கமாக நின்று பிரதிபளிப்பது தான் இஸ்லாத்தின் போராட்டம் என தவறான சாயம் பூசப்பட்டது. விளைவு முஸ்லிமிற்கே 'வஹி' வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறியது.
வாழ்க்கையே' வஹியாக்க' வேண்டிய சமூகம் காலத்தையும், சூழ்நிலையையும் கூட்டுச் சேர்த்து ஒரு இணைவைப்பை இபாதத் ஆக்கியது. அதாவது வஹி மாற்ற வேண்டிய காலமும் சூழ்நிலையும் வஹியையே காலாவதி ஆக்கியது. இந்த தவறை சுட்டிக் காட்டுபவர்களிடம் "நீங்கள் சித்தாந்த வாதிகள் உங்களது போதனைகள் சாத்தியமற்றது" என கூறவும் பட்டது. (ஆகக் கொடுமையானது 'வஹியின்' முன்னுரிமை தொடர்பில் முஸ்லீம்களின் வாக்குப் பலத்தை கேட்கத் தொடங்கியதே.)
|
Read more...
|
Sunday, 22 May 2011 06:40 |
 
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்!
மௌலான அபுல் அஃலா மௌதூதி (ரஹ்)
நவ யுகத்தின் அறைகூவலும் நமது இளைஞர்களும்! இது தான் இன்று எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் சொற்பொழிவின் தலைப்பு!
நவயுகம் என்றால் என்ன? இதைப்பற்றி முதலில் நீங்கள் சிந்திக்க வேண்டும். ஒவ்வொரு காலத்திலும் வாழ்ந்து வந்த மனிதன் தனது காலத்தை நவயுகம் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறான். சென்று போக யுகம் பூர்வீகம். அதில் மனித சமுதாயத்திற்கு எத்தகைய நன்மையும் விளையவிலலை என்றே கருதி வந்தான்.
அக்கால மக்கள் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிப் போயிருந்தனர். தெளிவான சிந்தனையுள்ளவர்கள், கல்வி கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், விஞ்ஞான விற்பன்னர்கள் என்றும், சென்ற கால் மக்களுக்கு கிடைக்கப் பெறாத அனைத்து வசதிகளையும் நாம் பெற்றிருக்கின்றோம் என்றெல்லாம் எண்ணி வந்தான். இப்படியே அந்தந்த காலத்தில் வாழ்ந்த மனிதன் தவறான எண்ணத்திற்கு பலியாகி விட்டிருந்தான்.
மனிதனுக்கு இறைவன் சிறுகச் சிறுக அருளியிருந்த அறிவியல் கண்டுபிடிப்புக்களை ஒதுக்கி விட்டு பொதுவாக நாம் பார்க்குமிடத்து, ஆதிமனிதர் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலந்தொட்டு இன்று வரை ஆரம்பத்தில் எப்படி இருந்தானோ அப்படியே தான் இருக்கின்றான்.
|
Read more...
|
Monday, 31 March 2014 06:31 |

ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்துகின்றது - SHARIA THE THREAT TO AMERICA
இப்படியொரு அறிக்கை வெளிவந்துள்ளது. இந்த அறிக்கை அதாவது ஷரீஅத் அமெரிக்காவை மிரட்டுகின்றது என்ற அறிக்கையை தயாரித்தது ஏதோ ஒரு தனிமனிதரோ அல்லது ஆராய்ச்சி நிறுவனமோ அல்ல.
அமெரிக்காவின் இராணுவ தலைமையகம் பெண்டகன். இந்த அறிக்கையை தயார் செய்து இருக்கின்றது.
இதில் அங்கம் வகித்தவர்கள் அனைவரும் அமெரிக்காவின் எதிர்காலத்தை மட்டுமல்ல. எதிர்வரும் நாள்களில் எங்கெல்லாம் அமெரிக்கா போர் தொடுக்க வேண்டும் என்பதையெல்லாம் வகுத்து தருபவர்கள்.
ஷரீஅத் அமெரிக்காவை அச்சுறுத்த முடியுமா....?
அமெரிக்காவை அச்சுறுத்த வேண்டும் என்றால் அமெரிக்கா செய்து தயாராக வைத்திருக்கும் ஆயதங்களை விஞ்சிடும் வண்ணம் உள்ள ஆயுதங்கள் அமெரிக்காவை அச்சுறுத்தலாம். அல்லது அமெரிக்காவை விஞ்சும் விஞ்ஞான வளர்ச்சியை பெற்ற ஒரு நாடு அமெரிக்காவை அச்சுறுத்தலாம். ஆனால் ஷரீஅத் எப்படி அமெரிக்காவை அச்சுறுத்த முடியும்?
400 பக்கங்களை கொண்ட பென்டகனின் அறிக்கை சொல்கிறது ஷரீஅத்தால் அமெரிக்கா அச்சப்பட்டு நிற்கின்றது என்று!
|
Read more...
|
Monday, 06 May 2013 06:56 |
 
இந்திய அரசியல்
முஸ்லீம்களுக்கு ஹராமா?
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்
"இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாமில் முழுமையாக நுழைந்து விடுங்கள் " (அல்குர்ஆன் 2:208).
ஒரு முஸ்லீமின் வாழ்வில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் அடுக்களை முதல் ஆன்மீகம் வரை, பள்ளிவாயில் முதல் பாராளுமன்றம் வரை என அனைத்திற்கும் தீர்வை குர்ஆன் மற்றும் அதன் விளக்கவுரையாக திகழ்ந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்விலிருந்தே தேட வேண்டும் என குர்ஆன் வலியுறுத்துகிறது.
அதனடிப்படையில் வாழ்வின் மற்ற துறைகளை போல் அரசியல் குறித்த இஸ்லாமிய கொள்கையையும் இந்திய அரசியல் குறித்த இஸ்லாத்தின் பார்வையையும் அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
இஸ்லாத்தின் அரசியல் கொள்கைஅல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகிய முன்மாதிரி இருக்கிறது (அல்குர்ஆன் 33:21) எனும் திருமறை வசனத்திற்கேற்ப அனைத்து விடயங்களிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்ற வேண்டிய முஸ்லீம்கள் "என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறு தொழுங்கள்" (மாலிக் –ஸஹீஹுல் புகாரி 9.352) என்ற ஹதீதின் அடிப்படையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழுகையில் பின்பற்றும் முஸ்லீம்கள் கூட இஸ்லாமிய அரசியல் கொள்கை குறித்து தெளிவற்றவர்களாக உள்ளனர்.
''ஆட்சி செலுத்தும் அதிகாரம் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனை தவிர வேறு யாருக்கும் அடிபணியக் கூடாதென்று இறைவன் கட்டளையிட்டுள்ளான்.'' (அல்குர்ஆன் 12:40, 4:65, 5:18, 6:57, 7:3) என குர்ஆன் பகர்கின்றது.
வானின் அதிபதியே இப்பூமிக்கும் அதிபதி. எந்த இறைவன் பூமியை படைத்தானோ அவனுடைய சட்டங்கள் தான் பூமியை ஆள வேண்டும் என்பதையே பகுத்தறிவு உணர்த்தும்.
|
Read more...
|
Sunday, 27 June 2010 09:05 |

விவாகரத்தும் குழந்தைகளும்
குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் எல்லாமும்.
இதனாலேயே அவர்கள் மீதான நம்பிக்கையும் அன்பும் மிக அதிகம்.
உண்மையில் பெற்றோரைவிட, குழந்தைகள் அவர்கள் மீது காட்டும் அன்பு மிக அதிகம்.
எந்த நிலையிலும் தன் அம்மாவோ அப்பாவோ துன்புற, தான் காரணமாகி விடக்கூடாது என்ற பய உணர்ச்சி அவர்களிடம் உண்டு.
விவாகரத்தின் போதோ இல்லை அம்மாவும் அப்பாவும் விவாதங்கள் செய்யும் போதோ இதற்கு தான் காரணமாகிவிட கூடாது என்ற பயமும் அதனால் அவர்களை மகிழ்விக்க செய்யும் சின்ன சின்ன செயல்களிலும் இதை புரிந்து கொள்ளலாம்.
ஒரு வேலையை விட்டுவிட நேரிடும் சில பெண்கள் எந்த காரணம் கொண்டும், ''உன்னால்தான் இதை விட்டேன்" என்று சினந்து சொல்லி விட்டால் குழந்தைகள் மனம் உடைந்து போய் விடுவார்கள்.
|
Read more...
|
Friday, 06 January 2012 07:39 |

[ ஆணாயினும், பெண்ணாயினும், கன்னிப்பெண்களோ, விதவைகளோ யாராக இருந்தாலும் அவர்கள் திருமண வயதை அடைந்து வாழ்க்கைத் துணை இல்லாதவர்களாக இருந்தால் திருமண பந்தம் மூலம் ஒரு துணையைத் தேடி நல்வாழ்வை அமைத்துக் கொடுப்பது ஒவ்வொருவர் மீதும் கடமை என பொறுப்பு சாட்டுகிறது இஸ்லாம்.]
உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் தங்களுக்கான துணையை முறைப்படித் தேடி திருமண பந்தத்தில் ஈடுபடும் வாய்ப்பைப் பெறுகின்றனர். இத்திருமணம் வாரிசுகளை உருவாக்கவும், கற்புக்குப் பாதுகாப்பாகவும், உலக இன்பங்களை அனுபவிக்கவும் அவசியமானது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று.
ஆணோ பெண்ணோ, அவர்களின் திருமண வயதை அடைந்துவிட்டால் பெற்றோர்கள் அவசரப்படுத்தி கஷ்டத்தின்மேல் கஷ்டம் அனுபவித்தாவது திருமணத்தை நடத்தத் துடிக்கின்றனர். ஆனால் இந்த இல்லற இன்பத்தை சிலகாலம் சுவைத்துவிட்டுக் கணவனை இழந்து கைம்பெண்ணாக நின்றால் அவர்களுக்கென மற்றொரு துணைவனைத் தேடி இழந்த வாழ்வை மீட்டுக் கொடுக்க எவரும் முயற்சிப்பதில்லை.
இதுமட்டுமல்லாமல், ஊரிலோ, குடும்பத்திலோ, ஏன் அவர்கள் பெற்ற குழந்தைகளுக்கோ ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும்போது அந்த அப்பாவி விதவைகள் எதிர்பட்டால் அந்த காரியம் நிறைவேறாது என்று அந்தப் பெண்ணை ஏசியவர்களாகவே மீண்டும் வீடு திரும்பிவிடுவர். இதுபோன்று விதவைகளை வேதனைப்படுத்தும் ஏராளமான விஷயங்கள் பெரும்பாலும் நமது நாட்டில் நடைமுறையில் இருந்து வருகிறது.
|
Read more...
|
Tuesday, 26 January 2010 11:40 |

காயிதே ஆஸாம் ஜின்னா சாகிப் (1)
[ அரசியலிலும், காயிதே ஆஸாம் அதே அளவிற்குத் துல்லியமாக இருந்தார். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் அவர் எடுத்ததே கிடையாது. பில்லியர்ட்ஸ் விளையாடுவது போலவே, ஒவ்வொரு நிலைமையையும் பல கோணங்களில் ஆராய்ந்து முதல் முயற்சியிலேயே, வேண்டியது கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டே பின்னரே அவர் தன் செயலைத் தொடங்குவார்.
அவர் வேட்டையாடும் பொருளை மிகச் சரியாகக் கணித்து, அதை வீழ்த்துவதற்கு மிகச் சரியான ஆயுதத்தைத் தேர்ந்தொடுப்பார். அவசர அவசரமாக துப்பாக்கியை எடுத்துக் குறிபாராமல் சுடக்கூடிய வகையராக்களைச் சேர்ந்தவர் இல்லை அவர். தாக்குவதற்கு முன்னரே, அதில் உள்ள இடர்ப்பாடுகளைக் காயிதே ஆஸாம் அறிந்து தான் இருந்தார்.]
[ காயிதே ஆஸாம் முஹம்மது அலி ஜின்னாவின் காரோட்டியாகப் பல வருடங்கள் இருந்த ஆஸாத் அவரைப்பற்றி கூறும் சுவையான வரலாற்றுத்தொடர் ]
''1939ம் வருடம் முஸ்லீம் லீக் அதனுடைய வாலிபப் பருவத்தில் இருந்தது - நானும் அது போலவே தான். ஏதாவது செய்யவேண்டும் என்ற துடிப்புள்ள வயதில் இருந்தேன்... ஏதாவது. நான் திடமாகவும் கட்டுமஸ்தான உடலைக் கொண்டவனாகவும் இருந்தேன். என் வழியில் எது வந்தாலும் அதனோடு மோதுவதற்குத் தயாராக இருந்தேன். நான் எதற்கும் துணிந்தவனாக இருந்தேன்.
என் சொந்தக் கரங்களாலேயே ஏதேனும் ஒரு ஜந்துவை வடிவமைத்து அதனோடு கண்மூடித்தனமாக மல்யுத்தம் செய்வதற்கும் நான் தயாராக இருந்தேன். வாலிபம் அப்படிப்பட்டது தான். ஏதேனும் செய்யவேண்டும் என்ற துடிப்பில், அதுவும் அது மிகப் பெரிய விசயமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில், சதா சர்வகாலமும் அமைதியற்ற நிலையில் தான் இருப்போம். வெறுமனே அமைதியாக உட்கார மட்டும் முடியவே முடியாது.''
|
Read more...
|
Friday, 05 February 2010 07:44 |
முஹம்மது அலீ ஜின்னா பற்றி ஜஸ்வந்த் சிங்
[ ஜின்னா ஒரு மாபெரும் மனிதர் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வலிமைக்கும், இங்கிலாந்து ஆட்சியாளர்களின் அசாதாரண பலத்தையும் தாண்டி அவர் உயர்ந்து நின்றார்.
நேருவுக்கும், ஜின்னாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. நேரு, அதிகாரம் அனைத்தும் ஒரே இடத்தில் குவிந்திருக்க வேண்டும் என்று கருதினார். ஆனால் ஜின்னா அதிகராபப் பரவல் நிறைந்த பெடரல் அரசியலை வலியுறுத்தினார்.
இந்து-முஸ்லீகள் ஒற்றுமையின் தூதராக இருந்த ஜின்னா ஏன் பாகிஸ்தானின் தந்தையாக மாறினார். ஏன் நாடு பிளவுபடக் காரணமானார்.. அவரில் ஏன் அந்த மாற்றம் ஏற்பட்டது.. என்பதை விளக்கும் நூல் தான் இது. இந்தப் புத்தகம் எழுதி நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை.
இப்போது கூட முஸ்லீம்களை நாம் சரியாக நடத்துகிறோமா என்றால்.. இல்லை. அவர்களை வெளிகிரகவாசிகள் போல நடத்துகிறோம். அப்படி நடத்தியதால் தான் பாகிஸ்தான் என்ற தனி நாடு உருவானது. இப்போதும் அவர்களை அப்படி நடத்தி நாட்டை பிளவுபடுத்த வேண்டுமா?. - முன்னால் மத்திய அமைச்சர், ஜஸ்வந்த் சிங்!]
இரவு 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் ''பாகிஸ்தான்'' என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது. ஏழே மாதங்களில், ''திராவிடஸ்தான்'' கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940-ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.
|
Read more...
|
|
|