Thursday, 28 October 2010 10:03 |

தாயின் மனநிலையே சேயின் மனநிலை!
தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.
அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.
ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.
|
Read more...
|
Monday, 14 September 2009 12:05 |

[ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!]
கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க
ஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்!
அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.
இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் "கல்தா'வுக்குக் காரணம்!
பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!
|
Read more...
|
Sunday, 25 January 2009 14:39 |

திருக்குர் ஆன் அருளப்பட்டதன் நோக்கம்
''தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.'' (அல்குர்ஆன் 18:02,03)
திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான்.
அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.
இவ்வுலகில் வாழும் மனிதன், தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும் நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் காண்கிறான்.
நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை. தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறி விடுகிறான்.
இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.
|
Read more...
|
Thursday, 22 May 2014 06:13 |

பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!
[ எங்காவது ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்தால் அதை மோப்பம் பிடித்து அந்த வீட்டை சுற்றி நாய்கள் காத்துக் கிடப்பதைப் போல ஆண்களின் கூட்டம் காத்துக் கிடக்கும் ஒரு சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை! ]
இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழி காட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன்.
ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த செயல்பாட்டின் காரணமாக அவனது வழிகாட்டுதலைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ விழைந்ததன் காரணமாக பல துன்பங்களை மனித இனம் அனுபவிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது.
இன்று பெருகிவரும் பாலியல் வன்முறைகளாக ஆங்காங்கே நடப்பவை அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான். இந்த பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஒன்றல்ல இரண்டல்ல பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குறைந்து வரும் ஆண் – பெண் விகிதம். அதாவது பெண்களின் எண்ணிக்கைத் தட்டுப்பாடு!
|
Read more...
|
Thursday, 19 August 2010 12:24 |
 
பிறந்த குழந்தை பாலுக்கு அழுதால்...
அப்...பாடா!... இத்தனை கஷ்டப்பட்டு ஒருவழியாக நல்லபடியா குழந்தை பிறந்துவிட்டது! பெரிய தொல்லைவிட்டது... என்று எந்தத் தாயும் பிரசவத்துக்குப் பின் நினைத்துவிட முடியாது.!
கர்ப்பப்பைக்குள் இருந்தவரை குழந்தைக்கான ஆகாரத் தேவையை தாய்தான் மறைமுகமாகப் பார்த்துக்கொண்டாள். அதாவது, அவள் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் குழந்தைக்கு, தொப்புள்கொடி மூலம் சென்றடைந்தன.
குழந்தை வெளியே வந்ததும் தாயின் பொறுப்புகள் பல மடங்கு கூடித்தான் போகிறதே தவிர குறைவதில்லை! அதில் முக்கியமான பொறுப்பு, குழந்தையின் ஆகாரத் தேவையை வேளாவேளைக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது.
பிரசவித்த தாய் அதற்கு ஏற்பாடு செய்யப் பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்றும், பூ போன்ற பட்டுப் பாப்பாவுக்கு பரிசுத்தமான, சத்தான ஆகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும்தான் இறைவன், அந்த ஆகாரத்தையும் தாயின் உடலில் இருந்தே பாப்பாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்திருக்கிறார்.
|
Read more...
|
Sunday, 22 December 2019 17:19 |

CAA & NRC தடுக்க என்ன வழி? - தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!
நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு' கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது - பிரசாந்த் கிஷோர்.
பிரசாந்த் கிஷோர் ( Twitter ) குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் `குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறந்த வழிகள் உள்ளன’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
Read more...
|
Thursday, 06 February 2014 07:07 |

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...! “இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.
குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு.
ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.
|
Read more...
|
Sunday, 29 December 2013 20:11 |

பெருகிவரும் பாலியல் தொந்தரவுகள் – யார் காரணம்? ஆண்களின் வக்கிரமா? பெண்கள் உடை அணியும் முறையா?
குமுதம் சினேகிதியில் நடத்தப்பட்ட இந்த விவாதத்தில் பெண்கள் சொன்ன சில கருத்துகள்.
1. இரண்டு அர்த்தம் சொல்லும் வாசகங்களை மார்பில் அணிந்து அடுத்தவர் பார்வைக்கு அளிப்பது யார்க் குற்றம்?. இது பாலியல் தொந்தரவுகளை தாம்பூலம் வைத்து அழைப்பதாகாதா?.
2. பல பெண் குழந்தைகளின் பெற்றோரே தம் பெண்கள் இறுக்கமான மற்றும் உடலழகை எடுத்துக் காட்டும் ஆடைகளை அணிவதில் ஆர்வம் காட்டுவதுடன் பெருமையும் படுகின்றனர். இந்த நிலைக்கு ஆண்களை குறை சொல்லுதல் இரண்டாம் பட்சமாகிவிட்டது.
3. புடவை கட்டினால் லோ நெக் ஜாக்கெட், சுடிதார் போட்டாலோ துப்பட்டாவை ஒழுங்காகப் போடுவதில்லை. இல்லையென்றால் ஜீன்ஸ், டீ சர்ட்... இப்படி பண்ணினால் ஒழுங்காய் இருக்கும் ஆண்கள் கூட சபலப்படதான் செய்வார்கள்.
இதில் எழுபத்தி இரண்டு சதவீதப் பெண்கள் பெண்களுடைய உடையின் மீதான தவறை சுட்டி காண்மித்திருக்கின்றார்கள்.
|
Read more...
|
Monday, 24 October 2011 08:49 |

இதயத்தைக் கவர இனிய வழி!
[ பேச்சு என்பது வார்த்தைகளின் குவியல் அல்ல. பூக்களை அடுக்கி அடுக்கிக் கட்டப்பட்ட மாலை போல அது அழகாக இருக்க வேண்டும். அடுக்கிய புத்தகங்களைப் போல் முறையாக இருக்க வேண்டும்.
அழகு, அறிவு, திறமை, பதவி போன்ற நற்பண்புகள் வாழ்க்கைப் பயணத்தில் பலம் சேர்க்கலாம். இப்படிப்பட்ட பலங்கள் இருந்தும்கூட பலர் வெற்றியைத் தவற விட்டுவிடுகிறார்களே, என்ன காரணம்? வேறொன்றுமில்லை. அவர்களுடைய எண்ணங்களைச் சரிவர வெளிப்படுத்த அவர்களுக்குத் தெரியவில்லை.
இன்றைய இளைஞர்களிடம், கவனித்தல் திறன் குறைந்து கொண்டே வருகிறது என்கிறது ஓர் ஆய்வு. அடுத்தவர்கள் பேசும்போது அலட்சியமாக இருப்பது, அவர்கள் பேசுவதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் தம் கருத்தையே முதன்மைப்படுத்துவது என்றே இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.
கவனித்தல் என்பது உங்கள் இதயத்தையும் ஈடுபட வைப்பதுதான். கவனித்தலில் புறக்கவனம், அகக்கவனம் என்ற இரண்டு வகை உண்டு. புறக்கவனம் என்பது கவனிப்பது போல் நடிப்பது. இதில் நேர்மையான கவனம் இல்லை. மனம் வேறு எங்கோ இருக்கும். மனமும், இதயமும் ஒருமித்துக் கவனிப்பதுதான் அகக்கவனம்.]
|
Read more...
|
Thursday, 12 May 2011 08:29 |

இஸ்லாத்தை மறக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்!
அரசியலில் பங்கெடுக்கும் முஸ்லிம்கள் நாளடைவில் தேர்ந்த அரசியல்வாதிகளாகவே மாறிவிடுவதை பார்க்கிறோம். இவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதால் பெரும்பாலும் அவர்களை நாம கண்டுகொள்வதில்லை. ஆனாலும் அவர்களது செயல் இஸ்லாத்திற்கு முரணாக அமையும்போது சக சகோதரன் என்ற அடிப்படையில் சுட்டிக்கட்டவேண்டும் என்பதற்காக சமீபத்திய இரு முஸ்லிம் அரசியல்வாதிகளின் தடுமாற்றத்தை இங்கே பதிவு செய்கிறோம்.
ஜெயலலிதாவின் முந்தைய அட்சியில் அமைச்சராக இருந்தவர் அன்வர்ராஜா. இவர் பல்வேறு கல்வி நிலையங்களை நடத்தி வருகிறார். நாமறிந்தவரை அவைகளில் ஒன்றிற்கு கூட இஸ்லாமிய பெயர்கள் இல்லை. மாறாக அவரது தலைவர் எம்.ஜி.ஆர் பெயரையே சூட்டியுள்ளார். சரி! அது அவரது விருப்பம். இத்தகைய இவரது கல்வியகத்தின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்,
''எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்.(!!!!) ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள். இறைவன் தன்னுடைய படைப்புகளில் வேறுபாடு காண்பதில்லை. அதேபோல ஆசிரியர்கள் மாணவர்களை வேறுபடுத்தி பார்க்காமல் எல்லோரையும் ஒரே கண்டோட்டத்துடன் அணுகவேண்டும்' என்று பேசியுள்ளார்.
|
Read more...
|
Sunday, 21 August 2011 14:29 |

அன்றும் இன்றும் ஆறு தவறுகள்!
1) அடுத்தவர்களை பின்னுக்குத் தள்ளியோ, அழித்தோ தான் சொந்த நலனைப் பெற முடியும் என்ற தவறான கருத்தைக் கொண்டிருப்பது.
2) மாற்றவோ, சரி செய்யவோ முடியாத விஷயங்களுக்காகக் கவலைப்படுவது.
3) நம்மால் செய்ய முடியாத செயல்களை யாராலும் செய்ய முடியாது என்று நினைப்பது.
4) உப்பு சப்பில்லாத சொந்த விருப்பு வெறுப்புகளையும், அபிப்பிராயங்களையும் தள்ளி வைக்க முடியாதது.
5) மனதைப் பண்படுத்தவும், பக்குவப்படுத்திக் கொள்ளவும் தவறுவது மற்றும் நல்ல நூல்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதது.
6) நம்மைப் போலவே நினைக்கவும் வாழவும் அடுத்தவர்களைக் கட்டாயப்படுத்துவது.
|
Read more...
|
Saturday, 09 January 2010 07:35 |

முஸ்லிம்களின் வாழ்வுரிமை சாசனம்!
[ சமுதாய அக்கரை கொண்ட; குறிப்பாக ஒவ்வொரு இஸ்லாமிய இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் முழுமையாக படிக்க வேண்டிய கட்டுரை ]
[ இந்தியாவெங்கும் 20 கோடி முஸ்லீம்கள் இருந்தும் பாராளுமன்றத்தில் என்றுமே 10 எம்.பி.களுக்கு மேல் போனதே கிடையாது. பஞ்சாயத்து தேர்தல்களில் கூட முஸ்லீம்கள் பெரும்பான்மையாய் உள்ள பகுதிகளை ரிஸர்வு (தனி)தொகுதியாக்கியும் பெண்கள் தொகுதியாக்கியும் திட்டமிட்டு முடக்கிப் போட்டார்கள்.
ஒரே ஒரு அம்பேத்கார் தமது தாழ்த்தப்பட்ட 9 கோடி மக்களுக்கு 140 பாராளுமன்ற ரிஸர்வு தனித்தொகுதிகள் பெற்றுத் தந்தார். ஆனால் பல முஸ்லீம் தலைவர்கள் ஒன்று கூடி நின்றும் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் முடிவில் மனவருத்தத்துடன் மரணமடைந்தனர்.
இந்தியாவில் 30 மாநிலங்களில் மாநிலத்துக்கு 5 முஸ்லீம் எம்.பி.க்கள் என்றால் கூட 150 பேர் பாராளுமன்றத்தில் பங்கு வகிக்கலாமே இதை செய்ய முனைவது யார்? நாம்தான் வழிகாட்ட வேண்டும். தமிழகத்தில் சுமார் 60-க்கும் மேற்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் (நாம்) 80,000-ம் மேற்பட்ட வாக்காளர்கள் (முஸ்லிம்கள்) உள்ளனர்.
நன்னிலம் (நாகை மாவட்டம்) தொகுதியில் 1,20,000 முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.ஆனால், இதுவரை முஸ்லிம்கள் அங்கு சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிட்டதே இல்லை. மற்றவர்களிடம்உள்ள உணர்வு இந்திய முஸ்லீம்களுக்கு மட்டும் இல்லாது போனது ஏன்? ஏன்? ஏன்? கொடுமைகளைச் சுமந்து குனிந்து வாழ வேண்டிய கட்டாயம் என்ன? சரியான தீர்வுகள் இல்லை. வழிகாட்ட ஆள் இல்லை!
முஸ்லிம்களால் நூறு தொகுதிகளை பெறமுடியும் என்பதை காட்டிவிட்டால் எல்லா அரசியல் இயக்கங்களும் உங்கள் காலடியை கழுவி நிற்பர். கையில் வெண்னையை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுது கொண்டே அலைந்து அழுகிப் போகும் கூட்டமாய் நாமிருக்க வேண்டுமா? சுமார் 10 பாராளுமன்றத் தொகுதிகளை வெல்வதோடு 16 தொகுதி எம்.பி.க்களின் வெற்றியை நிர்மானிக்கும் வலுவுள்ளவர்கள் நாம். தமிழகத்திலுள்ள 6 மேயர்களும் முஸ்லிம்களாகவே இருக்க முடியும்!
இந்த வாழ்வுரிமை சாசனத்தை ஒரு முறைக்கு நூறுமுறை படியுங்கள். மனதில் அசை போடுங்கள். சிலர் செவிகளில் போட்டு சிந்தையில் ஏற்றுங்கள்! நடைமுறைக்கு ஒத்துப் போகும். நம் விடியலுக்கு இன்ஷா அல்லாஹ்விடை நிச்சயம் தோன்றும்.]
|
Read more...
|
Friday, 24 August 2018 07:07 |

பாஜக எழுச்சியால் இலக்கு வைக்கப்படும் இந்திய முஸ்லிம்கள்
ஃபாரா நக்வி, பிபிசிக்காக
[ செழுமையான சிறுபான்மையினர், அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் என்பவர்கள் இந்தியாவின் கடந்தகால வரலாற்றில் சின்னம் மட்டுமல்ல, ஜனநாயக எதிர்காலத்திற்கும் இன்றியமையாதவர்கள். இதனை புரிந்துக் கொண்டால்தான், இந்தியாவில் நீண்டகாலமாக தொடர்ந்து வரும் மெளனத்தை தகர்க்க முடியும்.]
உலகில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றே என இஸ்லாம் கூறுகிறது. அதாவது இஸ்லாமை கடைபிடிக்கும் அனைவரும் ஒன்றே, சமமானவர்களே என்று இஸ்லாமிய மதம் கூறினாலும், இந்திய இஸ்லாமியர்கள் பல பிரிவுகளாக பிரிந்திருக்கின்றனர். இது இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகளை மறுப்பதாக இருக்கிறது.
இந்தியாவில் சுன்னி, ஷியா, சுஃபி, போஹ்ரா, அகமதியா என பல பிரிவுகளாக இஸ்லாம் பிரிந்து கிடக்கிறது.
இந்து மதத்தினரைப் போலவே இஸ்லாமியர்களும் சாதிகளின் அடிப்படையில் பிளவுண்டு இருப்பது நிதர்சனமான உண்மை என்றாலும், இஸ்லாமிய மத குருமார்கள் அதனை தொடர்ந்து மறுத்து வருகின்றனர். இந்திய முஸ்லிம்களில் உயர் சாதியினர் அஷ்ராஃப் என்றும், நடுத்தர சாதியினர் அஜ்லாஃப் என்றும், பிற சாதியினர் அர்ஜால் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
|
Read more...
|
Sunday, 21 August 2011 14:21 |

ஒன்றரை நூற்றாண்டு மக்களாட்சி உடைப்பும் புதிய மக்களாட்சி உருவாக்கமும்
இந்தியாவில் அரை நூற்றாண்டுக்கு மேலாய் நடைமுறையிலிருக்கும் மக்களாட்சி வடிவத்தில் மக்களுக்கு எதுவும் கிடைத்ததில்லை. அரைத்த மாவையே அரைக்கும் தேர்தல், வாக்களிப்பு, ஆட்சி மாற்றம் என்ற சனநாயக உத்திகளால் வெகுமக்கள் மாவும் பெறவில்லை, தோசையும் பெறவில்லை.
பூ, காய், கனி, கிளைகள் என செழுப்பம் தர வேண்டிய மக்களாட்சிச் செடியினை அரிக்கும் வேர்ப்புழு எது? என்பதை இக்கட்டுரை பதிவு செய்கிறது.
5.1.2011 அன்று தொலைக்காட்சி செய்திகளை உருட்டிக் கொண்டிருந்தது.
o காமன்வெல்த் போட்டிகளில் ஆயிரக்கணக்கான கோடி ஊழல் செய்த கல்மாதியின் வீடுகளில், அலுவலகத்தில் சி.பி.ஐ சோதனை. தொடர்ந்து சி.பி.ஐ அலுவலகத்தில் கல்மாதியிடம் நேரில் விசாரணை
o போபர்ஸ் பீரங்கி ஊழல் வழக்கில் இத்தாலிய தொழிலதிபர் குவத்ரோசிக்கும், இந்தியர் தரகர் வின்சத்தாவுக்கும் ரூ 41 கோடி கமிஷனாக (கையூட்டு) வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பெற்ற 41 கோடி ரூபாய்க்கு வருமான வரி கட்ட வேண்டுமென வருமான வரித்துறை தீர்ப்பாயம் ஆணை பிறப்பித்தது.
|
Read more...
|
Friday, 13 May 2011 08:08 |

மண்டைக் கனம் பிடித்தோர் மண்ணைக் கவ்வியதே உலக சரித்திரம்!
பணிந்தால் உயரலாம்
எதிலும் முழுமை, அளவின்மை, வரையறையின்மை, கட்டுப்பாடின்மை அகிலத்தாரின் ஏக இரட்சகன் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே, ஆகவே அவன் பெருமைப்பட முழுத் தகுதியும் அருகதையுமுடையவன்.
எனவேதான் பெருமைக்குரியவன் எனும் அர்த்தம் தாங்கிய ‘முதகப்பிர்’ எனும் பண்பு அல்லாஹ் தஆலாவுக்கு உண்டு. எவரிடம் குறை இருக்குமோ அல்லது எவருக்கு கட்டுப்பாடு, மட்டுப்பாடு இருக்குமோ அவர் பெருமைப்பட அறவே தகுதியற்றவர், அருகதையற்றவர்.
மனிதப் பிறவிகளில் எவரும் குறையற்றவராக, அளவு, எல்லை, கட்டுப்பாடற்றவராக இல்லை என்பது எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற பேருண்மை. எனவே மனிதன் பெருமைப்பட முடியாது. குறைகள், பலவீனங்கள், சிறுமைகளுடன் எப்படி பெருமைப்படுவது?
இந்தப் பின்னணியிலேயே பெருமையை மனிதனுக்கு ஹராமாக்கியது இஸ்லாம். அதனைப் பாவமாகப் பார்ப்பதுடன் அதற்குத் தண்டனைகளையும் வாக்களித்துள்ளது. பெருமைக்காரரை அல்லாஹ் நேசிப்பதில்லை. ‘மேலும் உன் கன்னத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! மேலும் பூமியில் கர்வமாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் பெருமையாக நடப்பவர், பெருமையடிப்பவர் ஒவ்வொருவரையும் நேசிப்பதில்லை’ என இயம்புகிறது அல்-குர்ஆன். (31 : 18)
|
Read more...
|
Thursday, 24 June 2010 06:56 |

அஸ்மா பின்த் அபீ பக்ர் ரளியல்லாஹு அன்ஹா அறிவித்தார்; ''என்னை ஜுபைர் இப்னு அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு (மக்காவிலிருக்கும் போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரின் குதிரையையும் தவிர வேறு எச்சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை.
அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரின் தோல் சுமலையைத்தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால், எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டைவீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டி சுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர்.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என் கணவருக்கு வருவாய் மானியமாய்த் தந்த நிலத்திலிருந்து - நானே பேரிச்சங்கொட்டைகளை(ப் பொறுக்கி) என் தலை மீது வைத்துச் சுமந்துவருவேன். அந்த நிலம் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவில் இருந்தது.
(ஒரு நாள்) நான் என் தலை மீது பேரிச்சங்கொட்டைகளை வைத்து வந்து கொண்டிருந்தேன். (வழியில்) நான், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை, (அவர் தம் தோழர்களான அன்சாரிகளில் சிலர் அவர்களுடன் இருக்கச் சந்தித்தேன். அப்போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னை அழைத்தார்கள்.
என்னை தமக்குப் பின்னால் அமர்த்திக் கொள்வதற்காக, 'இஃக், இஃக்' என்ற சொல்லித் தம் ஒட்டகத்தை மண்டியிட வைத்தார்கள். (ஆனால்,) நான் ஆண்களுடன் செல்ல வெட்கப்பட்டேன். மேலும், நான் (என் கணவர்) ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களையும், அவரின் ரோஷத்தையும் நினைத்துப் பார்த்தேன்.
|
Read more...
|
Thursday, 22 January 2015 09:05 |

வேலியே பயிரை மேயும் விந்தை!
''ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பது தெரிந்தும், சில மதரஸா மாணவர்களும், ஆலிம்களும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவருவது ''வேலியே பயிரை மேயும் விந்தை'' போன்றுள்ளது
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்'' அவர்கள் பார்வைக்கு...
o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
o மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
o உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
|
Read more...
|
Thursday, 25 August 2011 11:06 |

ஏ.பி.எம். இத்ரீஸ்
[ இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும். பொருட்கள் மீதான அதீத மோகமும் நுகர்வு வெறியும் அழிவையே தேடித்தரும் என்பதற்கு பாலைவனச்சூழலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணம் காட்டுகின்றார்கள்.
பொதுவாக உலக வாழ்வு குறித்தும் குறிப்பாக அதிகரித்த செல்வமும் தொழில்நுட்பமும் உருவாக்கும் சொகுசு வாழ்வும் குறித்து மற்றொரு சிந்தனையில் நபிகள் முன்வைக்கின்றார்கள். அதாவது நவீன தொழில் நுட்பத்திலும் சிதறடிக்கும் தன்மை காணப்படுகின்றது. ஒருங்கு சேரும் மக்களை சிதறடித்து தனியன்களாக உருமாற்றும் பணியை இன்றைய தொழில்நுட்பம் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. பெருங்கலாச்சார நடவடிக்கைகள் சிறுகலச்சார நடவடிக்கைகளை ஓரங்கட்டி விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
செல்வம் குவிந்து நுகர்வு வெறி மேலோங்கும் போது என்ன செய்வது என சில தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கவினுறு வனாந்தரங்களில் ஆடுகளுடன் அலைந்து திரிதல், ஆட்டுப் பாலை அருந்துதல், மரத்தடிகளில் வாழுதல், கனவாய்கள், பல்லத்தாக்குகளை நோக்கிச் செல்லுதல், நாடேடி வாழ்வு, பரதேசித் தன்மை பற்றியெல்லாம் நபிகள் சிலாகித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய செல்போன் உலகின் சிதறுதல்களுக்கும் தொழில்நுட்ப உலகில் எல்லாவற்றையும் காத்திருக்கும் சேமப்படையாக மாற்றும் செயலுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வாலோசனைகள் எதிராக, எதிர் இயக்கமாக எதிர் வாழ்வு முறையாக அமையக்கூடும். இன்றைய ஜிப்சி வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டு நோக்க முடியும்.]
|
Read more...
|
Wednesday, 15 December 2010 08:21 |

குழந்தைகளின் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாயக் கடமை. அவ்வாறு புரிந்து கொண்டால்தான் நல்ல வாரிசுகளாக அவர்களை வளர்க்க - வார்த்தெடுக்க முடியும்.
குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
o பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
|
Read more...
|
Saturday, 11 September 2010 12:03 |

[ பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.
நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.]
இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள், திருமணம் ஆனவர்கள் - ஆகாதவர்கள், ஏழைகள் - பணக்காரர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள், வேலைக்கு செல்பவர்கள் -சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும் பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி மாளாதவை.
|
Read more...
|
|
|