வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்! Print E-mail
Saturday, 15 June 2019 07:06

இவர்களை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்!

அல்லாஹ் மறுமை நாளில் இவர்களையெல்லாம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான் என்று நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபர்கள் யாரென்றால்...

கணவனுக்கு நன்றி செலுத்தாத மனைவியை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.   (நூல்: பைஹகி 7 : 294)

=============

1 ) மறுமை நாளில் மூன்று நபர்களை அல்லாஹ் பார்க்க மாட்டான்.
2 ) பெற்றோர்களுக்கு மாறு செய்பவன்.
3 ) மது அருந்துபவன்.
4 ) கொடுத்ததை சொல்லிக்காட்டுபவன்.   (நூல்: ஹாகிம் 7344)

=============

1 ) சொந்தத்தை முறித்து வாழ்பவன்.
2 ) மோசமான அண்டை வீட்டுக்காரன்.
ஆகிய இருவரை மறுமை நாளில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான.   (நூல்: கன்ஜுல் உம்மால் 6975)

Read more...
 
ஹாபிழ்களின் கவனத்திற்கு...! Print E-mail
Friday, 17 December 2010 07:58

ஹாபிழ்களின் கவனத்திற்கு...!

முஸ்லிம் சமூகத்தை விமர்சிக்கின்ற பலர் தங்களுடைய விமர்சனங்களில் உள்ளடக்கிய விடயங்களில் ஒன்றுதான் அல் குர்ஆனை ஓதத்தெரிந்த பலருக்கு அதன் கருத்து வியாக்கியானம் தெரிவதில்லை என்பது.

குறிப்பாக, நமது ஊர்களில் சிறிய வயதிலேயே ஹாபிழ்களாக பயிற்றுவிக்கப்பட்டு பல நூறு பேர் வெளியேறுகிறார்கள். இவர்களில் எத்தனை பேர் அல் குர்ஆனை அதன் மொழிபெயர்ப்புடன் கற்று பிறருக்கு கற்பிக்கிறார்கள்? என்ற ஒரு கேள்வி மிக முக்கியமானதாகும்.

இரண்டு வருட ஒப்பந்தத்தின் பெயரில் 10 வயது சிறார்களை நமது பெற்றோர்கள் ஹாபிழ்களாக ஆக்கப்படும் மத்ரஸாக்களில் சேர்க்கின்றனர். அல்ஹம்துலில்லாஹ். நல்ல முயற்சியின் பின் சில வருடங்கள் கடக்கும் போது ஹாபிழ் பட்டம் பெற்றவர்களாக வெளியேறுகிறார்கள்.

சில ஹாபிழ்கள் தொடர்ந்தும் மெளலவி வகுப்பில் சேர்ந்து ஏழு வருடங்கள் கற்றுத் தேறும் போது தான் மனனம் செய்த குர்ஆனை ஓதும் போது அதன் அர்த்தத்தை புரிந்து கொள்வதுடன் அதனை வைத்து தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டு பிரசாரம் செய்வதிலும் மும்முரமாக இருக்கிறார்கள்.

Read more...
 
சிறந்த முறையில் தர்மம் செய்வோம்! Print E-mail
Thursday, 09 May 2019 13:48

       தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!        

o இரகசியமாக தர்மம் செய்தல்.

o  ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்.

o  தாராளமாக தர்மம் செய்தல்.

o  சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்.

நாம் செய்ய‌வேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்ய‌வேண்டும் என்று நமக்கு சொல்கிறது?

குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:

Read more...
 
சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை! Print E-mail
Wednesday, 23 July 2014 18:03

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை!

அல்குர்ஆன் கூறுகிறது : "...பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறைவழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்."

அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ""நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்'' (அல்குர்ஆன் : 9:34,35)

அந்த ஊராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை, அல்லாஹ் வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் "உரியவை'. மேலும், உங்களில் செல்வந்தர்களுக்குள்ளேயே செல்வம் சுற்றிக் கொண்டிராமல் இருப்பதற்காகவே ஆகும்.

தூதர் உங்களுக்குக் கொடுப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாகத் தண்டிப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமை யானவன். (அல்குர்ஆன் 59:7)

Read more...
 
"பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்" சுப்ரீம் கோர்ட் உத்தரவு! Print E-mail
Saturday, 04 May 2019 08:12

"பில்கிஸ் பானுவுக்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும்" சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

யார் இந்த பில்கீஸ் பானு..?

முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட மிக பெரிய அநியாயங்களில் இதுவும் ஒன்று.

பில்கிஸ் பானு மீது நடத்தப்பட்ட கூட்டு வன்புணர்விற்கு இழப்பீடாக குஜராத் அரசு ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தனது விருப்பத்தின் பேரில் வேலை மற்றும் இட வசதி வழங்குவதற்கும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 2000த்திற்கும் அதிகமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

பெண்கள் கற்பழிக்கப்பட்டும் முஸ்லிம்களின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் அவர்கள் தங்களின் வீடுகளில் இருந்து விரட்டியும் அடிக்கப்பட்டனர்.

பில்கிஸ் பானுவின் குழந்தையை பாறையில் தூக்கி எரிந்து கொலை செய்த அந்த கும்பல் அவரையும் கூட்டாக கற்பழித்தது. மேலும் அவரது 2 வயது குழந்தை உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் கொல்லப்பட்டனர்.

Read more...
 
திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் புரிதலும் (1) Print E-mail
Thursday, 06 May 2010 07:46

திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் புரிதலும் (1)

  எச்.முஜீபுர் ரஹ்மான்  

பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.

ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது கூட சரியான மொழியாக்கம் நிகழ்வதில்லை. மேலும் இருமொழி புலமை கொண்டவர் பேசவும், எழுதவும் தெரிந்தவர் மொழிபெயர்க்கும் போது ஒரளவுக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.

ஆனால் முழுமையானதன்று.பேச்சு வழக்கு மொழியறிவை பெறாமல் வெறுமனே மொழியறிவு பெற்று ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கும் போது அநேக தவறுகள் நிகழ்கின்றன. அல்லது இரு மொழியில் புலமையுள்ளவர்களிடம் சரிபார்க்கப்பட்டு அல்லது பேசும் மொழியறிவு பெற்றவரிடம் சரிபார்க்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரதி ஒரளவுக்கு தவறுகள் இல்லாமல் இருக்கும்.

இருந்த போதிலும் எழுபது சதமான மொழிபெயர்ப்புக்கு சாத்தியமே இல்லை.ஏனெனில் மொழி என்பது வெறுமனே தகவல் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. அது மொழி பெசுபவரின் சமூகம், பண்பாடு, வரலாறு, உளவியல், இலக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களின் சாராம்சத்தை தகவமைத்து கொண்டிருக்கிறது.

எனவே தான் மொழியியல் என்ற துறை மொழியை ஆய்வு செய்யும் துறையாகவும்,சமூகத்தை வாசிக்கும் வாசிப்பாகவும் அமைந்திருக்கிறது. இரு மொழியையும் அறிந்து மொழியியலறிவையும் அறிந்தவர்கள் மொழியாக்கம் செய்யும்போது தவறுகள் குறைகின்றன.

Read more...
 
நம் எதிர்காலம் யார்கையில்...? இறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது Print E-mail
Sunday, 06 July 2014 07:52

நம் எதிர்காலம் யார்கையில்...? இறைவனின் வாக்கு ஒரு போதும் பொய்யாகாது

[ இன்று முஸ்லிம்கள் வீழ்ச்சியடைந்துள்ளனர், ஏன்? அவர்கள் குர்ஆனை விட்டு மார்க்கத்தை விட்டு நபியை விட்டு தன்னுடைய மனோஇச்சையை வழியாக்கி கொண்டதால் இதனால் இறை மார்க்கம் இஸ்லாம் வீழ்ச்சியடைந்துவிட்டதா?

ஒருபோதும் இல்லை எப்போதெல்லாம் மக்கள் இஸ்லாத்தை பற்றி பிடித்து வாழ்ந்தாரோ அப்போதெல்லாம் அவர்கள் வெற்றியடைந்தனர்.

எப்போதெல்லாம் இஸ்லாத்தை விட்டு விலகினார்களோ அப்போதெல்லாம் அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். இதை சிந்திக்க வேண்டாமா?

முஸ்லிம்கள் மானிட இனத்தின் துன்பங்களைக் கண்டும் காணாததுபோல் இருந்திட முடியாது. முஸ்லிம்கள் தங்களைச் சமுதாயத்திலிருந்து தனியாகப் பிரிந்திட முடியாது. அதுபோலவே அவர்கள் பிடிவாத குணம் உடையவர்களாகவும் இருந்திட முடியாது.

வாழ்க்கையின் எல்லா உண்மைகளைக் குறித்தும் அவர்கள் தங்கள் இதயத்தை முழுமையாகத் திறந்து வைத்திட வேண்டியவர்களாவார்கள். அவர்கள் தங்களது நோக்கை - இலட்சியத்தை, இனம், மொழி, தேசம் ஆகிய எல்லைகளைக் கடந்து செலுத்திட வேண்டியவர்களாவார்கள்.

இஸ்லாத்தை முழுமையாக செயல்படுத்திக் காட்டும்போது அவர்கள் ஏனைய மக்களோடு இரக்கம், மனிதாபிமானம் இவை தோய்ந்த இஸ்லாமிய உணர்வோடு கலந்திடும்போது மட்டுமே அவர்கள் செய்கின்ற நல்ல சேவைகள் முழுமையாக நிறைவேற்ற முடியும்.]

Read more...
 
கணிணி கற்றுத் தரும் இஸ்லாம் Print E-mail
Sunday, 29 May 2011 08:49

கணிணி கற்றுத் தரும் இஸ்லாம்

[ தமிழிலும் ஆங்கிலத்திலும் அரபியிலும் பெறுமதிமிக்க இஸ்லாமிய பொக்கிஷங்களை உள்ளடக்கிய நூற்றுக்கணக்கான கணிணி மென்பொருள்கள் இஸ்லாத்தைக் கற்றுக்கொள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும். எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு.

அரபுதெரிந்த மௌலவிமார்களின் ஆய்விற்கு பயன் படக்கூடிய மென்பொருள்கள் இன்று ஏராளமாக இலவசமாகக் கிடைக்கின்றன. என்றாலும் கவலைக்கிடமான நிலையாதெனில் அதிகமான மௌலவிமார்கள் கணிணிகள் இருந்தும் இம்மென்பொருள்களின் பெயர்கள் கூடதெரியாமல் இருப்பதுதான்.

அல்லாஹ் எமக்குத்தந்துள்ள அருள்களை உணர்ந்து கணிணியின் மூலம் ஈருலகப்பயன் பெற்றவர்களாக ஆகவேண்டும்.]

கம்பியூட்டர் இன்று மனித வாழ்வின் இன்றியமையாத ஒரு பகுதியாக மாறிவிட்டது எனலாம். அந்தளவிற்கு மனித வாழ்வின் பெரும் பகுதிகளை அது தன்னகத்தே ஆக்கிக் கொண்டுள்ளது. தொழில்த்துறை, கல்வித் துறை தகவல்துறை... என எல்லாத் துறைகளும் இனி கணிணி இல்லையேல் பெரும் சிரமத்திற்குள்ளாகும் என்பது கண்கூடு. அதிலும் தொழில் வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு கனணியின் உதவி அளப்பொரியதாகும்.

ஒருவர் ''AUTO CAD'' என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கட்டிட அமைவு முறையைக் கனணியில் வரைகிறார் ஆனால் அவர் ஒரு சாதாரண படத்தைக் கூட கையால் வரைய முடியாதவராக இருப்பார். ஆக தேர்ச்சியில்லாத துறைகளிலும் மிகத்தேர்ச்சியாக தொழில் புரிய வைத்ததும் வேலை வாய்ப்பின்மை என்றகுறையை பெருவாரிய தீர்த்துவைத்ததும் கணிணிதான்.

தகவல் பரிமாற்றத் துறையில் கணிணியின் பங்களிப்பு இதைவிடப் பன்மடங்கானது. இன்டெனெட் இணைப்பில்லாத நிலையிலும் தகவல் பரிமாற்றத்தில் கனணியின் பங்களிப்பைமறுக்கக்கூடியது. பல இடங்களுக்குப் போய் பல லட்சம் செலவளித்து செய்யவேண்டிய எத்தனையோ தகவல்களை ஒரு சில ரூபாய்களில் வீடியோக்களாக ஓடியோக்களாக படங்களை எழுத்துக்களாக பெற்றுக்கொள்ள முடிகிறது.

Read more...
 
சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ சுகம் தரும்! Print E-mail
Friday, 22 July 2011 09:16

Image result for சுத்தம் சோறு போடும்

சுத்தம் சோறு போடுகிறதோ இல்லையோ சுகம்தரும்!

      S.E.ஜியாவுத்தீன்      

[ இறால் கழுவின தண்ணீரை வீட்டில் வைத்தால் வீடு நாறிவிடுமாம்.. அதனால் முடுக்கிலும், நடு ரோட்டிலும் கொட்டுகிறார்கள். என்ன சுயநலம்.. இரண்டு பையில் நன்றாக இறுக்கி கட்டி வைத்தால் எந்த வாடையும் வராது. அந்த இறால் கழுவின தண்ணீரை வடித்து கானில் ஊற்றினால் கூட போதும்.. அதற்கும் பதில் இருக்கும், கான் நிறைந்து விடுமாம்...(சகோதரிகளுக்குள் கான் சண்டை வரும் பாருங்க..அப்பப்பா...என்னத்தை எழுத..!).

இன்னும் ஒன்றை நீங்கள் கவனிக்கலாம், பல வீடுகளில் ஜன்னல் கம்பிகளில், ஒரு மூன்று கம்பியின் ஒரு பகுதி மட்டும் அழுக்கு பிடித்து, துருல் ஏறி இருக்கும்.. என்னது என்று நினைக்கிறீர்கள்....அதான்..வீட்டில் இருந்து புளிச்..புளிச் என்று துப்பியத்தின் அடையாளம் தான்..

இன்னும் சிலர் இருக்கின்றார்கள்.. ஜன்னல் கம்பியில் படாமல் சூப்பராக..கரெக்ட் ஆ க துப்புவார்கள்..ஒலிம்பிக்கில் இந்த துப்பும் போட்டி இருந்தால், இதற்க்கு கண்டிப்பாக பதக்கம் கிடைக்கும்.. துப்பாக்கி சுடுதல் எல்லாம் சுத்த வேஸ்ட்..

தெருவிலோ, முடுக்கிலோ இடைஞ்சலாக கல்லோ, முள்ளோ கிடந்தால் அதை அப்புறப்படுத்தினால் நமக்கு நன்மை. அதை விடுங்க, நம் நகத்தை, நம் முடியை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்ன முறையில் வெட்டினால் அதற்கு நன்மை. எச்சில் துப்பி அதை மணல் கொண்டு மூடினால் அதற்கும் நன்மை.. இப்படி நன்மைகள் கொள்ளை அடிக்க எந்த மார்க்கத்தில் முடியும், சொல்லுங்க. ஆனால் இதை நாம் பின்பற்றுகிறோமா? ]

Read more...
 
வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள் Print E-mail
Tuesday, 24 April 2012 06:16

வெயில் கால சிறுநீர் பிரச்சினைகள் 

கோடை காலத்தில் சிறுநீர் எரிச்சல் அல்லது 'நீர்க் கடுப்பு' மற்றும் சிறுநீரகக்கல்லால் அதிகம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

கோடையில் தேவையான அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்போமானால் ஏற்கனவே நம் உடலில் இருக்கும் தண்ணீர் வியர்வையாகி அதிக அளவில் வெளியேறும்போது சிறு நீர் கழிக்கும் அளவு குறையும்.
கோடைகாலத்தில் மிக அதிக நேரம் வெயிலில் வேலை செய்பவர்கள் சரியான அளவு நீர்ச் சத்து ஆகாரங்களை குடிக்காமல் இருப்பதாலும் சிறுநீர் வெளியேறும் அளவு குறையும். இதனால் சிறுநீர் சற்று அடர்த்தி அதிகமாகி சற்று அடர் மஞ்சள் நிறமாக வெளியேறும் போது எரிச்சல் வலி, கடுப்பு ஏற்படலாம்.

கோடைகாலங்களில் ரயில் மூலமாகவோ, பேருந்து மூலமாகவோ நெடுந்தூரப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்த மாதிரியான நேரங்களில் நாம் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பதன் மூலம் சிறுநீர் கடுப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். 

இந்த மாதிரியான நேரங்களில் சிறுநீர் பாதையிலுள்ள கிருமிகள் பன்மடங்காகப் பெருக வாய்ப்புள்ளது. இது ஆண்களைவிட பெண்களுக்கு அதிக அளவில் வருகிறது. பெரும்பாலும் 'ஈகோலை' என்னும் பாக்ட்டீரியாவால் இந்த 'நீர் கடுப்பு நோய்' வருகிறது.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (2) Print E-mail
Monday, 22 August 2016 11:49

ஹஸீனா அம்மா பக்கங்கள் (2)

அல்லாஹ்

நான்கு வகை மக்கள்

மலக்குகளின் துஆ

தர்மம் தலைகாக்கும்

விரோதிக்கும் உதவுக!

பெற்றோரைப் பேணிக்கொள்வீர்களாக!

தூங்கி வழியும் முஸ்லிம்களே விழித்துக் கொள்ளுங்கள்!

[ வயதான எங்களின்  அன்புத்  தாயார் ஹஸீனா பீவி அவர்கள் அவ்வப்போது நூல்களைப்பார்த்து எழுதி வைத்திருந்த குறிப்புகளின் தொகுப்பாகும் இது. -adm. nidur.info]

Read more...
 
அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல்! கை குலுக்குதல்! Print E-mail
Saturday, 31 July 2010 07:35

அன்னியப் பெண்ணுடன் தனித்திருத்தல்

[ ஆண் அன்னியப் பெண்ணுடனோ, பெண் அன்னிய ஆணுடனோ முஸாஃபஹா செய்வது ஹராமாகும். அது கை உரை அணிந்து கொண்டோ, ஆடையால் கையை மறைத்துக் கொண்டோ முஸாஃபஹா செய்தாலும் சரியே! ]

மனிதனை குழப்பத்தில் ஆக்குவதிலும் ஹராமில் விழச்செய்வதிலும் ஷைத்தான் மிக ஆர்வமாக உள்ளான். இதனால் தான் அல்லாஹ் நம்மை இவ்வாறு எச்சரிக்கின்றான்.

விசுவாசம்கொண்டோரே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை மானக் கேடானதைக் கொண்டும் வெறுக்கப்பட்டதைக் கொண்டும் நிச்சயமாக (ஷைத்தானாகிய) அவன் ஏவுவான்.... (அல்குர்ஆன் 24:21)

ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களிலெல்லாம் ஓடிக்கொண்டிருக்கின்றான். மனிதனை மானக்கேடான செயல்களில் அழைத்துச் செல்லும் பாதைகளில் அன்னியப் பெண்ணுடன் தனிமையிலாக்குவதும் ஒன்று. இதனால்தான் மார்க்கம் இப்பாதையை அடைக்கிறது.

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள். (அன்னியப்) பெண்ணுடன் தனித்திருப்பவனுடன் மூன்றாம் நபராக நிச்சயமாக ஷைத்தான் இருப்பான்.(அறிவிப்பவர்: உமர்ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹமத்)

Read more...
 
அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே! Print E-mail
Saturday, 26 June 2010 09:31

  அண்ணி ஓர் அந்நியப் பெண்ணே!  

[ ஓர் அந்நியப் பெண்ணிடம் ஒருவன் பேசும் போது, ஏதாவது ஒரு வகையில் தொடர்பு கொள்ளும் போது மிக மிக ஜாக்கிரதையாகப் பேசுகின்றான். தொடர்பு கொள்கின்றான். ஆனால் தன் சகோதரனின் மனைவியிடம் இந்த ஜாக்கிரதையை எடுத்துக் கொள்வது கிடையாது.

பேராபத்து நிகழ்வதற்கு மிக முக்கியமான காரணம் பெண்ணின் ஆடையலங்காரம்! தனது கணவனின் சகோதரனேயானாலும் இஸ்லாம் பெண்ணுக்குக் கட்டளையிட்டிருக்கின்ற அந்த உடை அமைப்புடன் தான் அவன் முன் காட்சியளிக்க வேண்டும் என்ற சட்டம் பேணப்படுவதில்லை. அதிலும் இந்தக் காலத்தில் அணிகின்ற கண்ணாடி போன்ற உடைகள் உடல் உறுப்புக்களை அப்படியே பிரதிபலிக்கின்றன. இந்நிலையில் தனிமையில் சந்திப்பது, கிண்டலடித்துப் பேசுவது போன்றவை தவறான எண்ணத்திற்கு வழி வகுத்து விடுகின்றன. இவை முற்றிலும் தடுக்கப்பட்ட காரியங்கள் என்று இன்னும் இந்தச் சமுதாயத்திற்குப் புரிய வைக்கப்படவில்லை.

கொழுந்தன் - அண்ணி உறவில் காணப்படும் மிக வேதனைக்குரிய விஷயங்களில், மிக பகிரங்கமாக நடக்கும் செயல்களில் ஒன்று தான், சகோதரன் மனைவியை இரு சக்கர வாகனத்தில் கொண்டு செல்வது! இப்படி இரு சக்கர வாகனத்தில் இணைந்து செல்கையில் ஒருவரின் மேனி இன்னொருவரின் மேனியில் ஒட்டாமல் உரசாமல் வண்டியை ஓட்ட இயலுமா? அதிலும் குறிப்பாக பிரேக் போடும் போதும் மேடு பள்ளங்களிலும் இந்த உரசல்கள் நிகழாமல் இருக்குமா? இது மார்க்கத்தில் முற்றிலும் தடை செய்யப்பட்ட ஒன்றல்லவா? இதில் இன்னும் வேதனை என்னவெனில் கணவனே இதற்குப் பச்சைக்கொடி காட்டி வழியனுப்பி வைப்பது தான்.

கணவன் மைத்துனி விஷயத்திலும், மைத்துனி தன் சகோதரியின் கணவன் விஷயத்திலும் கவனமாக நடக்க வேண்டும். காரணம் இதுவெல்லாம் ஷைத்தான் எளிதாக நுழையக்கூடிய வாசல்களாகும். இந்தக் கலாச்சாரம் கைமீறிப் போய் சில இடங்களில் இஸ்லாமிய சமுதாயத்தில் கூட அக்காவையும் தங்கைள்யும் ஒரே நபர் திருமணம் முடித்து ஒன்றாக வாழ்க்கை நடத்துவதைக் காணமுடிகின்றது. இதற்குக் காரணம் வரைமுறை வரம்பற்ற பழக்கம் தான். ]

Read more...
 
கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல! Print E-mail
Wednesday, 08 February 2012 11:05

  கிளர்ச்சிகள் என்றும் மகிழ்ச்சிகள் அல்ல !  

[ கள்ள உறவு கிளர்ச்சியைத் தரலாம், அது என்றும் மகிழ்ச்சியைத் தராது. அந்தந்த நேரத்தில் மயங்க வைக்கலாம், ஆனால் என்றும் மனநிறைவைத் தராது.

மது மனக்கவலைக்கு ஒரு மருந்து என்கிற தவறான எண்ணம் பலருக்கு உண்டு. இது வரை மது எந்தப் பிரச்னையையும் தீர்த்து வைத்ததாய் யாரும் சொல்லி விட முடியாது. போதையால் பிரச்னைகள் உருவாகலாமே ஒழிய தீராது, குறையாது. மூளையை மழுங்கடித்து மந்தமாக்கி யாரும் மகிழ்ச்சியை அடைந்து விட முடியாது.

கிளர்ச்சிகளின் குணம் எப்போதும் ஒன்றே. அது நெருப்பைப் போன்றது. எத்தனை விறகு போட்டாலும் அந்த நெருப்பு எரிந்து கொண்டே இருக்கும். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். தீனி போட்டு அதன் பசியைத் தீர்க்க முடியாது. தீனி போடுவதாலேயே பசி அதிகரிக்கும். அழிவு நிச்சயம் என்ற போதிலும் அடங்கி விடாது. அது அழித்தே அணையும்.]

Read more...
 
பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும் Print E-mail
Thursday, 15 May 2014 06:41

M U S T    R E A D

பள்ளி சீருடையும், பாலியியல் குற்றங்களும்

[ பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் இக்கட்டுரையை கட்டாயம்  படிக்கவும். ]

வருங்காலத் தூண்கள், எதிர்கால இந்தியா என்றெல்லாம் வர்ணிக்கப்பட்டாலும், நம் குழந்தைகள் வாழ, ஒரு ஆரோக்கியமான சமூக சூழலை நாம் உருவாக்கிக் கொடுக்கவில்லை. குறிப்பாக பெண் குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகளைப் பார்த்தால், ஆக., 15 அர்த்த ராத்திரியில் அறிவிக்கப்பட்ட சுதந்திரம் ஆண்களுக்கு மட்டும்தான் என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

உணவு, உடை, கல்வி அனைத்திலும் ஒடுக்கப்பட்ட சமூகமாகவே இருக்கும் பெண்கள் இந்த தலைமுறையில்தான் ஓரளவு கல்விக் கூடங்கள் பக்கம் காலடி எடுத்து வைக்க அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் மட்டுமே, கிடைத்தது பெண் கல்வி; ஒழிந்தது ஆணாதிக்கம் என்று சந்தோசப்படும் சூழல் வாய்க்கவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை.

பள்ளிகளில் குழந்தைகள் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே சீருடை அணிவது நடைமுறையில் உள்ளது. ஆனால், சீருடையின் அமைப்பு பாதுகாப்பானதா என்பது விவாதித்துக்கு உள்ளாகி இருக்கிறது.

அரசு பள்ளிகளில் சில ஆண்டுகளுக்கு முன்வரை, தாவணி சீருடையாக இருந்தது. பாரம்பரிய உடை என்பதைத் தாண்டி, பாதுகாப்பு, சவுகரியங்களோடு ஒப்பிடுகையில் மேம்பட்டு இருந்த சுடிதார் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டது. தனியார் பள்ளிகள், தனித்தன்மை என்ற பெயரில் விதவிதமான சீருடைகளை நடைமுறைப்படுத்தின. "பளிச்'சிடும் தோற்றம், "கான்வென்ட்' தோரணை என பெற்றோர்களும் அந்த சீருடைகளுக்கு வரவேற்பளிக்கத்தான் செய்தனர். ஆனால், சமீபகாலத்திய குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், வேறு எங்கோ தப்பு நடக்கிறது என்ற கோணத்தில் சிந்திக்க வைத்திருக்கின்றன.

Read more...
 
தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்! Print E-mail
Monday, 17 February 2014 11:14

தமிழ் சினிமா காதலும் பள்ளி மாணவர்களும்!

[ இன்று நம் நாட்டில் சினிமாவை பார்த்துதான் அனைத்து காரியங்களும் நடைபெறுகின்றன. படிக்கிற வயதில் மாணவர்கள் காதல் செய்கிறார்கள், உடை அணிகிறார்கள், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற அணைத்து தேசதுரோக செயல்களுக்கும் சினிமாதான் முழுமுதல் காரணமாக உள்ளது.

இப்போது வரும் சினிமாக்கள் நாட்டு மக்களின் பண்பாட்டையும் நல்ல பழக்கவழக்கங்களையும் கெடுப்பதாகவே உள்ளது.

ஒழுக்கம் இல்லை என்றால் ஒரு நாடே சிதைந்துவிடும். காலையில் அலுவலுக்கு செல்லும்போது ஒரு பள்ளி சிறுமி சுவரொட்டியில் ஒட்டப்பட்ட ஒரு நடிகரின் படத்தை தனது கைபேசியில் படம் பிடித்த காட்சி அதிர்ச்சியை உண்டுபண்ணியது.. தமிழ்நாட்டில் திரைத்துறை உடனடியாக இழுத்து மூடவேண்டும். இதனால் பொதுமக்களுக்கு எந்த பயனும் இல்லை.

காதலைச் சொல்கிறோம் என்று திரைப்படம் எடுப்பவர்களே, தன்னுடைய மகளின் காதலை எதிர்த்துப் போராடுவதைப் பார்க்கிறோம். எல்லாம், உபதேசமெல்லாம் ஊருக்குதான், நமக்கல்ல என்ற கதைதான்.

இளம் பிள்ளைகள் கைபேசி உபயோகிப்பதை தடை செய்யவேண்டும். ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பிள்ளைகளை பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து நீக்கவேண்டும். அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் இருபாலார் சேர்ந்து படிப்பதை தடைசெய்ய வேண்டும் ..பிஞ்சிலே பழுத்துவிடுகின்றனர். ]

Read more...
 
பொது இடத்தில் "இச்" கொடுத்து போராடுவது ஒழுங்கீனமானது: கேரள உயர்நீதிமன்றம்! Print E-mail
Wednesday, 17 December 2014 21:29

பொது இடத்தில் "இச்" கொடுத்து போராடுவது ஒழுங்கீனமானது: -கேரள உயர்நீதிமன்றம்!

கொச்சி: பொது இடத்தில் ஒன்று கூடி முத்தம் கொடுத்து போராட்டம் நடத்துவது ஒழுங்கீனமான செயல் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தொடங்கி நாட்டின் பல பகுதிகளிலும் இந்த Kiss of Love போராட்டம் பரவி விட்டது. பல இடங்களில் கலாட்டாக்கள், அடிதடி, மோதல்களும் அரங்கேறி விட்டன.

கேரள மாநிலத்தில் நடந்த முத்தம் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. கோழிக்கோடு டவுன்டவுன் கபே ஹோட்டலில் நடந்த தாக்குதலில் கைதான யுவ மோர்ச்சா என்ற அமைப்பைச் சேர்ந்த 5 பேர் ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கமால் பாட்சா, முத்த போராட்டம் ஒழுக்கக்கேடானது, ஒழுங்கீனமானது. இந்தப் போராட்டங்களின்போது வன்முறைதான் மூளுகிறது. இதை வைத்து ரவுடிகள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடவே வழி வகுக்கிறது.

கலாச்சாரப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் சிலர் நடந்து கொண்ட விதத்தால் மாநிலம் முழுவதும் முத்தப் போராட்டம் என்ற பெயரில் சட்டவிரோதமான, ஒழுங்கீனமான செயல்கள் பரவியது வேதனை தருகிறது என்றார் நீதிபதி கமால் பாட்ஷா.

Read more...
 
சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்! Print E-mail
Monday, 09 December 2013 10:22

சென்னை அரசு மருத்துவமனையில் பள்ளிவாசல்!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அல்லாஹ்வை வணங்கும் அற்புத பள்ளி ஒன்றை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவியுள்ளனர்.

அங்கு பணிபுரியும் இஸ்லாமிய மருத்துவர்கள்! பெரும்பாலான இஸ்லாமியர்கள் இந்த மருத்துவமனையில் அன்றாடம் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதில் அதிகமானவர்கள் மருத்துவ மனையில் அனுமதித்து தங்கி சிகிச்சை பெறுகின்றனர்.

இவர்களில் பெரும்பாலனவர்கள் கட்டாய கடமையான 5 வேலை தொழுகையை நிறைவேற்ற முடியாத சூழல் உள்ளது . ஆனால் இந்த மருத்துவமனை வளாகத்துக்குள்ளேயே ஒரு பள்ளிவாசல் இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.

Read more...
 
'சைட்' அடிக்கும் ஆண்களின் கண்களைப் பிடுங்குவோம்: சந்திரசேகரராவ் அதிரடி! Print E-mail
Wednesday, 08 October 2014 06:04

'சைட்' அடிக்கும் ஆண்களின் கண்களைப் பிடுங்குவோம்: சந்திரசேகரராவ் அதிரடி!

ஹைதராபாத்: ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையிலும், பெண்களை வன் கொடுமை செய்தால் வளைகுடா நாடுகளில் இருப்பது போல கடுமையான சட்டம் கொண்டு வரவும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெண்களை கொஞ்சம் உற்றுப் பார்த்தாலே கண்களை பிடுங்குவோம் என்றும் சந்திசேகரராவ் அதிரடியாக அறிவித்துள்ளார்.

டெல்லிக்கு அடுத்தபடியாக ஹைதராபாத்தில் தான் பெண்கள் மீதான வன்கொடுமை அதிகமாக நடப்பதாக சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் தெரிய வந்தது.

குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரி மாணவிகள் மற்றும் கிராமத்து இளம்பெண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனை முற்றிலும் தடுக்கும் வகையில், ஈவ்டீசிங் செய்யும் ஆண்களை தண்டிக்கும் வகையில் கடுமையான சட்டம் கொண்டு வர தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் திட்டமிட்டு உள்ளார். இதற்கான நடவடிக்கையில் தெலுங்கானா அரசு தீவிரமாக இறங்கி உள்ளது.

Read more...
 
''காஷ்மீர் தாக்குதல்'' தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா? Print E-mail
Sunday, 17 February 2019 08:18

'காஷ்மீர் தாக்குதல்' தேர்தலுக்காக அனுமதிக்கப்பட்ட தாக்குதலா?

    கை.அறிவழகன்     

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் பாகிஸ்தானுடன் ஒரு போர் நடக்குமோ என்ற எண்ணம் கடந்த பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், காஷ்மீர், ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்களுக்கு மத்தியில் வெடிகுண்டு நிரப்பப்பட்ட வாகனத்தை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஏன்? எப்படி இந்த தாக்குதல் சாத்தியம் என்ற எண்ணம் இந்தியா முழுக்க பரவலாக மக்களிடமே உருவாகி இருந்தாலும், தேசிய ஊடகங்கள் எனப்படும் பாஜக ஊடகங்கள் போர் வெறியை உருவாக்கி வருகிறது.

o மோடி பதவியேற்ற இந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவில் பிரமாண்டமான இந்த தாக்குதல் நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நேரத்தில் எப்படி சாத்தியம்?

Read more...
 
தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய் Print E-mail
Friday, 12 January 2018 08:14

Related image

தமிழகத்தில் பிஜேபியின் திட்டத்தை வெட்ட வெளிச்சமாக்கிய NDTV பிரணாப் ராய்

ஆங்கில தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி யின் நிறுவனர்களில் ஒருவரும், இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளருமான திரு.பிரணாய் ராய் இன்று தன்னுடைய என்டிடிவி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

இந்திய அளவில் செய்தி ஊடகங்கள் மீது பாஜக அரசு காட்டி வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாஜக கையாண்டு வரும் குறுக்கு வழிகள் பற்றியும் தனது பேட்டியில் சொல்லியுள்ளார்.

அதில்,தமிழகத்தில் அதிமுக ஆட்சியை தன் கண்ணசைவில் இயக்கி வரும் மோடி மற்றும் அமித்ஷா குழுவினர், பாராளுமன்றத் தேர்தல் நெருக்கத்தில் நடிகர் ரஜினியை அரசியலில் இறக்கி விட்டு ஆதாயம் தேடும் முயற்சியில் ஏறக்குறைய வெற்றியும் பெற்றுள்ளதாகவும், அதற்கு தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் முக்கிய பிரமுகர் ஒருவர் பேருதவி செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்றி தமிழகத்தைச் சேர்ந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று பாஜக வை ப்ரமோஷன் செய்வதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், தன் பேட்டியின் முடிவில் அந்த தமிழ்நாட்டு ஊடகம், தமிழகத்தில் மிக பிரபலமாக இருக்கும் 'தந்தி டிவி' என்றும் அதன் முதன்மை செய்தி் ஆசிரியர் திரு.ரங்கராஜ் பாண்டே வை இதற்கென்றே கோடிகளில் ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் விவரிக்கிறார்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 81 82 83 84 85 86 87 Next > End >>

Page 81 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article