வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரை! Print E-mail
Sunday, 02 August 2009 21:59

இறைத்தூதர் صلى الله عليه وسلم அவர்களின் இறுதிப் பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது. அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.

அதுதான் ஹிஜ்ரி 10-ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள்.

அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல்ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து 'மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள்.

அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம்அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது 'கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, 'பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள்.

Read more...
 
சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்! Print E-mail
Tuesday, 25 December 2018 08:52

சக்தி பெறுவோம்! சமூகத்தை சக்தி படுத்துவோம்!

      மௌலவி, ஹாஃபிழ், பஷீர் அஹமது உஸ்மானி     

உலகத்தையே இஸ்லாம் வழிநடத்திய காலகட்டம் என்று பொன்னெழுத்துக்களால் வரலாற்றில் பதியப்பட்டிருக்கின்றது.

அந்த காலகட்டங்களில் முஸ்லிம் சமூகம் எல்லா வகையான சக்திகளையும், வலிமைகளையும், ஆற்றல்களையும் பெற்றிருந்தது எனவும் புகழப்பட்டுள்ளது.

தான் பெற்றிருந்த சக்தியை இஸ்லாத்தின் உயர்வுக்கும், எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் அனைத்து வழிகளிலும் அந்த சமூகம் பயன்படுத்தியது.

அதன் விளைவாக உலகமே இஸ்லாத்தின் தலைமையின் கீழ் நிழலும், நிம்மதியும் பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படியான ஓர் உயரிய நிலைக்கு இஸ்லாத்தின் தலைமையை இந்த உலகம் முழுமைக்கும் மீண்டும் கொண்டு வரவேண்டிய கடமையும், கடப்பாடும் இந்த உம்மத்திற்கு இருக்கின்றது.

சக்தி பெறுவதும், தான் பெற்றிருக்கும் சக்தியைக் கொண்டு தன் சமூகத்தை சக்திபடுத்துவதும் ஓர் முஃமினின் தலையாய கடமை என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

Read more...
 
தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் Print E-mail
Friday, 14 September 2018 07:28

தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்

தனி மனித மூக வாழ்வில் இறை நியதிகள்  (நூல்)

ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.

மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.

இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.

இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.

நீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.

Read more...
 
'முகஸ்துதி'யைவிட்டு தவிர்ந்து கொள்வோம்! Print E-mail
Wednesday, 13 January 2010 07:47

'முகஸ்துதி'யை

 

விட்டு தவிர்ந்து

 

கொள்வோம்!

MUST READ

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ''யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாள்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். (அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-6499)

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக!

இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Read more...
 
தவறு செய்யாதவன் மனிதனே அல்ல !. Print E-mail
Sunday, 13 December 2009 08:21

[ தவறு செய்யாதவன் மனிதனே அல்ல!

தவறு செய்யக் கூடியவனே மனிதன்!

ஆனால் தான் செய்த தவறுக்காக வருந்த வேண்டும்!

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்

வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்

என்று அழகாக தமிழ் கவிஞன் எழுதினான். மனிதன் என்பவன் வருந்தித் திருந்தி தனது தவறுகளை சீர் படுத்திக் கொண்டு தானும் வாழவேண்டும் தன்னைப் போல் பிறரும் வாழ வேண்டும் என்றக் கொள்கையில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.]

Read more...
 
உனக்குக் கீழே.. உள்ளவர் கோடி..! Print E-mail
Monday, 23 November 2009 06:56

உனக்குக் கீழே.. உள்ளவர் கோடி..!

[  கால் செருப்பில்லை என்று ஒருவர் கவலையுடன் நடந்து வருகின்றபோது, தன் எதிரே வருகின்ற ஒருவர் காலே இல்லாமல் நொண்டி அடித்துக் கொண்டு ஆனந்தமாகச் செல்வதைப் பார்த்து தன் மனதை ஆற்றியும் தேற்றியும் கொள்கின்றார்.

இது போல் அழகில் குறைந்தவர் அழகானவரைப் பார்த்து பொருமிக் கொண்டிருக்காமல் தன்னை விட அழகில் குறைந்தவரைப் பார்த்து தன்னை அமைதிப் படுத்திக் கொண்டால் அவர் பூரண நிம்மதி அடைகின்றார்.

''செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால், உடனே (அவற்றில்) தம்மை விடக் கீழானவர்களை அவர் பார்க்கட்டும்''  என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.  (அறிவிப்பவர் : அபூஹுரைரா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், நூல் : புகாரி 6490)]

பொருளாதார ரீதியில் தன்னை விட செல்வந்தனாக இருப்பவனைப் பார்த்து மனிதன் தன்னை வேதனையில் ஆழ்த்திக் கொள்கின்றான். அவன் மீது பொறாமைப் பட்டு ஏக்கப் பெருமூச்சு விடுகின்றான். இறுதியில் அந்தப் பணக்காரனை கொலை செய்யக் கூட துணிந்து விடுகின்றான். இது போல் ஒரு எளிய குடும்பம் செல்வந்த குடும்பத்தைப் பார்த்து கவலைப் படுகின்றது.

ஒரு நாடாளும் மன்னன் தனது நாட்டை விட பொருளாதார செழிப்பில் உள்ள நாட்டைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். இதன் இறுதிக் கட்டம் போரில் போய் முடிகின்றது. இலட்சக்கணக்கான உயிர்கள் மடிகின்றன.

Read more...
 
ஈமானின் ஒளி விளக்கு Print E-mail
Saturday, 18 July 2009 06:36

மவ்லானா மவ்லவி K.செய்யிது முஹம்மது மதனீ D.P.S

  களா கதர்   

[ அல்லாஹ்வுடைய ''களாகதர்'' என்று சொல்லக்கூடிய ''விதி''யை ஒவ்வொரு முஸ்லிமும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.]

ஈமானின் ஆறாவது பர்ளு களாகதர் பற்றி ஈமான் கொள்வதாகும். களாகதர் என்ற அரபி வார்த்தைக்கு நிர்ணயம் என்றோ விதி என்றோ தமிழில் விளக்கம் கூறலாம். இன்னும் இதைப்பற்றி தெளிவாகக் கூறுவதென்றால் அல்லாஹ் தஆலாவால் அவனியி;ல் படைக்கப்பட்ட அனைத்திற்கும் ஒரு நிர்ணயத்தை(விதியை) வரையறுத்துவிட்டான்.

மனிதர்கள் முதல் உலகில் வாழும் ஜீவராசிகள் வரை அனைவற்றிற்கும் பிறப்பு முதல் இறப்புவரை அவற்றிற்கு வழங்கப்படும் ரிஜ்கு, ஏற்றத்தாழ்வுகள்,வெற்றிதோல்விகள், அவன் ஈமான் கொள்வது அல்லது ஈமான் கொள்ளாமலிருப்பது மற்றும் ஒவ்வொரு வினாடியும் ஏற்படும் நிகழ்வுகள் அனைத்தைப்பற்றியும் அல்லாஹ் ஒரு நிர்ணயத்தை(விதியை) தெளிவாக விதித்துவிட்டான். இதனையே களாகதர் என்று அரபியில் கூறுகிறோம்.

எனவே ஒரு மனிதன் அல்லது மற்ற உயிரினங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தி;ல் பிறக்கும் அல்லது இறக்கும் என்றோ, அல்லது ஒரு குறிப்பிட்ட இன்ன நாளில் பரம ஏழை ஒருவன் பணக்காரனாகிவிடுவான் என்றோ அல்லது பணக்காரன் பரம ஏழையாகிவிடுவான் என்றோ அல்லாஹ் விதித்து விட்டால் அச்செயல் நடப்பதை எத்துனை பெரிய சக்தியாலும் மாற்ற இயலாது. அது நடைபெற்றே தீரும்.

Read more...
 
பூமியைப் போன்ற பொறுமை! Print E-mail
Sunday, 15 March 2020 09:13

பூமியைப் போன்ற பொறுமை!

மிகச்சிறந்த கட்டுரை

     கே.ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ     

[ கோபத்தின் மூலம், நன்மையா? தீமையா? என்று தனிமையில் நாம் சிந்தித்துப் பார்த்தால்... நன்மையை விட தீமையே நிறைந்து காணப்படும்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்,

''ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால்; ஏளனம் செய்தால்; குறைகண்டால்; பலருக்கு மத்தியில் மானபங்கப்படுத்தினால்; அதைப் பொறுத்துக் கொள்ளுங்கள்.

அதற்குப் பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ அவமானப்படுத்தவோ வேண்டாம்!

ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே செய்த அந்தச் செயலே அவனை அவமானப்படுத்தப் போதுமான ஒன்றாகும்''. (அபூதாவூது)

(இறைவன் மீது பயபக்தியுடையோர்) தங்களின் கோபத்தை மென்று விழுங்கி விடுவார்கள். மனிதர்களின் குற்றங்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் இத்தகைய நல்லோர்களை நேசிக்கின்றான் (அல்குர் ஆன் 3:134) ]

Read more...
 
வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை Print E-mail
Wednesday, 23 November 2011 07:39

Image result for இஸ்திகாரா தொழுகை

        வெற்றியின் இரகசியம் – இஸ்திகாரா தொழுகை        

بسم الله الرحمن الرحيم

سر النجاح   ومفتاح الخير والبركة والفلاح

o  ஒரு வாலிபன் ஒரு பெண்னை திருமணம் செய்வதற்காக வேண்டி இஸ்திஹாரா தொழுகையை தொழுகின்றான்; பின்னர் திருமணத்துக்காக தயாராகின்றான்; அப்போது அவனது சகோதரன் அப்பெண்னை திருமணம் முடிப்பதை விட்டும் அவனைத் தடுக்கின்றான். வேறு குடும்பத்தில் பெண் பார்க்க வேண்டுகிறான்.

அந்த வாலிபனோ, தான் பார்த்த பெண்னை மணம் முடிப்பதற்காக தனது சகோதரனை கவரும் வகையில் பல முயற்சிகளை மேற்கொள்கிறான்; ஆனால் அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இறுதியில் வேறொரு பெண்னை மணக்கின்றான்.

குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பின்னர் அவ்வாலிபனுக்கு முதலாவது திருமணம் பேசப்பட்ட அப்பெண் மரணிக்கின்றாள். தற்போது அவனுக்கு தான் தொழுத அந்த இஸ்திஹாரா தொழுகையில் முழுமையான திருப்தி ஏற்பட்டதோடு தன்னை தடுத்த தனது சகோதரனின் விருப்பமின்மை அவனுக்கு நல்லதாக அமைந்தது.

Read more...
 
அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை! Print E-mail
Thursday, 14 February 2019 07:56

அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை!

உலகில் வாழும் மனிதர்களில் சிலர் வரம்புமீறி கொலை, களவு, ஏமாற்று, மோசடி, பொய், பித்தலாட்டம், விபச்சாரம் போன்ற பாவத்திற்குமேல் பாவங்களையும், அநியாயங்களையும் செய்தவண்ணமாகவே இருக்கின்றனர்.   

மக்கள் பணத்தை சுரண்டி கொழுப்பது பல அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் பொழுதுபோக்காகவே போய்விட்டது.   மனிதர்கள் வகுத்த பலவீனத்திலும் பலவீனமான சட்டங்களிலிருந்து தப்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து குதூகளிக்கின்றனர்.   

தண்டனையிலிருந்து தப்புவது ஹல்வா சாப்பிடுகின்ற மாதிரி அவர்களுக்கு எளிதாக இருப்பதால் தவறு செய்வதைப்பற்றியோ, அநியாயம் செய்வதைப் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.

ஆனால்,

இவை அத்தனையும் கானல் நீராக மற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவர்கள் செய்த எந்த சிறு குற்றத் தண்டனையிலிருந்து கூட தப்ப முடியாது எனும்போது பெரும் குற்றங்களின் தண்டணையிலிருந்து தப்புவது துளியும் முடியாத காரியம்.

Read more...
 
இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்! Print E-mail
Saturday, 06 May 2017 06:59

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைஞர்களிடம் காட்டிய அணுகுமுறையும், அவர்களிடம் பழகிய விதமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆற்றல் மிக்க இளைஞர்களை அண்ணலார் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றிக் காட்டினார்கள். அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் துடிக்கும் இள ரத்தத்தை சமூக நலன்களுக்கு பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒளிர்ந்து மின்னியவர்கள் பலர். அவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருந்தார்கள் என்பது இன்பமளிக்கிறது. அலீ இப்னு அபூதாலிப், ஜஅஃபர் இப்னு அபூதாலிப், உஸாமா பின் ஸைத், முஸ்அப் இப்னு உமைர், பர்ரா இப்னு ஆஜிப், ஸைத் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அம்ர் இப்னு அல் ஆஸ் போன்ற பிரபல நபித்தோழர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்.

Read more...
 
அஞ்சாமை அழைப்பாளனின் உடைமை Print E-mail
Wednesday, 23 September 2009 17:49

அஞ்சாமை அழைப்பாளனின் உடைமை

     மௌலானா மௌதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி     

சத்திய அழைப்பாளன் ஒருவனிடம் இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பு ''கால இன்னனி மினல் முஸ்லிமீன்'' அதாவது ''நான் நிச்சயமாக முஸ்லிமாக உள்ளேன்'' என்பது.

இந்தக் கருத்தைப் புரிந்து கொள்வதற்கு நாம் மக்கா நகரின் சூழலுக்கு ஒரு மீள் பயணம் செய்ய வேண்டும்.தன்னந்தனியாக ஒருவர் எழுந்து நின்று, ''நான் ஓரிறைக்கொள்கையை ஏற்றவனாக அல்லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து முஸ்லிமாக இருக்கிறேன்''எனப் பிரகடணம் செய்வது சாதாரண நிகழ்வன்று.

இது கட்டற்ற கொடுமைகளுக்கும் காட்டுவிலங்காண்டித்தனத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்து முகமன் கூறி வரவேற்பதைப் போன்றது.

எனவே ஒரு சத்திய அழைப்பாளன் அல்லாஹ்வின் பால் அழைக்கிறவன் என்பது மட்டுமன்று, உன்னத பண்புகளைக்கொண்ட உத்தமனாக விளங்குபவன் என்பது மட்டுமன்று, கடும் பகைவர்களுக்கு இடையிலும், கடுமையான சூழலிலும் தனி ஒருவனாக நின்று தான் ஒரு முஸ்லிம் என்று அறிவிப்பதில் அச்சமோ, தயக்கமோ, தடுமற்றமோ கொண்டவனாக இருக்க்க் கூடாது. துணிச்சலாக, வெளிப்படையாக,''ஆம்; நான் முஸ்லிம்தான். நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்'' என்று பறைசாற்றுபவனாக இருக்க வேண்டும்.

Read more...
 
பகுத்தறிவாளர்களின் சிந்தனைக்கு! Print E-mail
Sunday, 18 October 2009 08:58

இவ்வுலக

வாழ்க்கைக்கு

பகுத்தறிவு

அவசியமா?

      அபூ பாத்திமா     

தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறவர்கள் மனிதக் கற்பனையில் குறிப்பாக புரோகிதர்களின் கற்பனையில் படைக்கப்பட்ட எண்ணற்ற கோடிக்கணக்கான பொய்க கடவுள்களை மறுப்பதற்குப் பதிலாக அகில உலகங்களையும், அவற்றிலுள்ள அனைத்தையும், மனிதளையம் படைத்து ஆட்சி செய்யும் அந்த ஒரேயொரு இறைவனையும் மறுத்து வருகிறார்கள்.

 மனிதனும் மற்ற ஐயறிவு பிராணிகளைப் போன்ற ஒரு பிராணியே! அவற்றைப் போல் பிறந்து வளர்ந்து இணைந்து அனுபவித்து மடிந்து மண்ணோடு மண்ணாகப் போகிறவனே! ஓரிறைவன், மறு உலக வாழ்க்கை என்பதெல்லாம் சுத்த ஹம்பக்; மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் மதவாதிகளின் கற்பனை என்று கூறி வருகிறார்கள்.

அவர்களின் பிரதான அடிப்படைக் கொள்கை மனிதனும் எண்ணற்ற பிராணிகளைப் போல் ஒரு பிராணி என்பதேயாகும். மனிதப் பிராணி அல்லாத இதர அனைத்துப் பிராணிகளுக்கும் இருப்பது ஐயறிவு மட்டுமே. ஆனால் மனிதனுக்கு மட்டும் விசேஷமாக ஆறாவது அறிவான பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை ஓரிறை மறுப்பாளர்களான பகுத்தறிவு நாத்திகர்களும் மறுக்க மாட்டார்கள்.

Read more...
 
விதியும் மூன்று பந்துகளும் Print E-mail
Monday, 29 July 2013 09:42

Image result for three ball

விதியும் மூன்று பந்துகளும்

குழந்தைகளே! இன்றைய ஈமானிய அமர்வை தெளபீகுல் ஹகீமின் கதையோடு தொடங்கப் போகின்றேன். தெளஃபீக் எகிப்து நாட்டவர். அவர் ஒரு எழுத்தாளர். நிறைய கதைகளை எழுதியுள்ளார். நான் கூறப் போகும் கதை விதியைப் பற்றியது. கழா கத்ர் என்றும் சொல்வர்.
 
விதியை நான் திறமையான விளையாட்டு வீரனாக கருதுகின்றேன். அவன் ஒரு பொது மைதானத்தில் நிற்கின்றான். அவன் காற்றில் கையை அசைக்கின்றான். அவன் மூன்று பந்துகளை வீசி விளையாடுகின்றான். அவனைச் சுற்றி மக்கள் நிற்கின்றனர். அவர்கள் பல வயதினர். பல இனத்தவர். அவர்கள் எல்லோரும் தமது கழுத்தை உயர்த்தி வாயைப் பிளந்து கொண்டு அந்த வீரனின் கைகளில் சுழன்றாடும் மூன்று பந்துகளையும் பார்க்கின்றனர்.
 
முதல் பந்தின் மீது பணம் என்று எழுதப்பட்டுள்ளது.

இரண்டாவது பந்தின் மீது ஆரோக்கியம் என்று எழுதப்பட்டுள்ளது.

மூன்றாவது பந்தின் மீது நிம்மதி என எழுதப்பட்டுள்ளது.
 
விதி மக்களைப் பார்த்து சத்த்மிட்டுக் கத்தியது. மனிதர்களே! நான் செய்வதைப் போல உங்களால் செய்து காட்ட முடியுமா?

Read more...
 
பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்! Print E-mail
Saturday, 14 March 2020 07:11

பெண்ணுரிமையும் ஆணாதிக்க எதிர்ப்பும்!

[   ஒரு கணவனிடம் சந்தோஷம் இல்லையெனில் அவனிடமிருந்து விலகி, வேறொரு கணவனைத் திருமணம் முடித்துக் கொண்டு செல்வதுதான் சரியான வழிமுறை.

தற்போது வாழ்கிற கணவனின் மூலம் சந்தோஷம் கிடைக்கவில்லையெனில் அந்த அநியாயத்தை சகித்துக் கொண்டு வாழவேண்டும் என்றெல்லாம்   இஸ்லாம் சொல்லவில்லை.   அதற்கு மாற்று வழி முதலாவது திருமணத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு கணவனை மணப்பதுதான்   அந்தப் பெண்ணுக்கான சரியான உரிமை.

இஸ்லாமல்லாத மதங்களில் பெண்களுக்கு இந்த உரிமை வழங்கப்படாததால்   அந்த உரிமையைக் கேட்டுப் பெறுவதற்குப் பதிலாக ஒட்டுமொத்த ஆண் சமூகத்தையும் வெறுப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்..

"புரட்சி'  என்ற   போர்வையைப் போர்த்திக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் போகலாம், வரலாம்   என்பதற்காக இப்படி   "பெண் உரிமை'  என்றும்   "ஆண் ஆதிக்க எதிர்ப்பு'  என்றும் கிளம்பிவிடுகிறார்கள்.

ஆண்தான் பெண்களை நிர்வகிக்க வேண்டும் என நாம் சொல்லும் போது, சமூகத்தில் தங்களை முற்போக்குவாதிகள் போன்று காட்டிக் கொள்ளும் சில ஆண்களும் சில பெண்களும் இது ஆணாதிக்க சமூகம் என்று அருவருக்கத்தக்க ஒரு சொல்லைப் போன்று விஷமப் பிரச்சாரம் செய்கின்றனர்

பெண் சுதந்திரம் என்று உளறிக் கொண்டு, எந்த ஆணுடனும் சுற்றித் திரியலாம், எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரியலாம், வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலத்திற்கும் சுதந்திரமாகச் சென்று வரலாம் என்று நினைக்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால் ஆண் ஆதிக்கம், பெண்ணின் சுதந்திரம் பறிப்பு என்றெல்லாம் கூப்பாடு போடுவாப்ர்கள். அதையும் முற்போக்கு போன்று பேசுவார்கள். ஆனால் அவர்களது கருத்தும் பேச்சும்தான் பிற்போக்குத்தனமானது. அறிவியலுக்கும் நடைமுறை அனுபவத்திற்கும் கூட எதிரானது.]

Read more...
 
ஆணினம் உலகில் அழிந்து கொண்டு வருகிறதா? Print E-mail
Friday, 23 March 2018 08:35

ஆணினம் உலகில் அழிந்து கொண்டு வருகிறதா?

 Are men going extinct?

     எஸ்.ஹலரத் அலி,- திருச்சி     

[   இனி வருங்காலத்தில் ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று அல்லாஹ்வின் தூதர்   ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் முன்னறிவித்ததை நவீன அறிவியல் இன்று உறுதிப்படுத்துகிறது.]

அல்லாஹ் படைத்த பெரும்படைப்புகளில் மனிதப்படைப்பு ஒன்றாகும்.எல்லா படைப்புகளையும் படைத்து இறுதியில் களிமண் சத்திலிருந்து ஆதி தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை படைத்தான்.

அவர்களிலிருந்து ஹவ்வா அலைஹிஸ்ஸலாம். இப்படி ஒரு ஜோடி ஆண் பெண்ணிலிருந்து மனித வர்க்கம் பல்கிப்பெருகியது.

பிறக்கும் குழந்தைகள் சிலநேரம் ஆணாகவும், சிலநேரம் பெண்ணாகவும் பிறப்பதற்கு என்ன காரணம்?

அன்று மதீனாவில் வாழ்ந்த அப்துல்லாஹ் இப்னு ஸலாம் என்னும் யூத மதகுரு, ஆண,பெண் குழந்தை பிறப்பு குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சில கேள்வி கேட்டார்.

Read more...
 
'மனித இனம்' என்று சொல்வதில் உள்ள 'ஆண் சார்புத் தன்மை' பொருளற்றதாகி வருகிறதா...?! Print E-mail
Sunday, 16 September 2012 18:05

( மிக முக்கியமான கட்டுரை )

'மனித இனம்' என்று சொல்வதில் உள்ள 'ஆண் சார்புத் தன்மை' பொருளற்றதாகி வருகிறதா...?!

[ ''இனப்பெருக்கத்துக்கு ஆண்களின் சரீர ஒத்தாசை இன்றியமையாதது அல்ல'' என்று அறிவியலார்கள் அறிவித்திருப்பது ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.

கருத்தரிப்பதிலும் பிள்ளை பெறுவதிலும் அதைப் பேணி வளர்த்து ஆளாக்குவதிலும் ஆண்களின் பங்குபணி வரவரக் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பெண்கள் எல்லா விதங்களிலும் ஆண்களுக்குச் சமானமானவர்களாகவும் சில விதங்களில் ஆண்களைவிட மேம்பட்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.

"மனித' இனம் என்று சொல்வதில் உள்ள ஆண் சார்புத் தன்மை பொருளற்றதாகி வருகிறது. அதை "மனிதி' இனம் என மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிற அளவுக்கு ஓர் இடைவெளியற்றதும், நெருக்கமானதும் இன்றியமையாததுமான தாயினப் பிணைப்பு மனிதச் சிற்றினத்தின் அடையாள வரையறையாக அமைந்திருப்பது வெளிப்பட்டு வருகிறது.

ஆண்களின் அலட்டலும் அலம்பலும் அளவுக்கு மீறி அதிகமாகிக் கொண்டே போனால் கலவியில்லாக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் ஆபத்து இருக்கிறது அல்லது காரியமானதும் கணவனைக் கழற்றிவிடுகிற போக்கு அதிகரிக்கலாம். ]

Read more...
 
தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! Print E-mail
Sunday, 27 November 2011 07:13

பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்! அதுபோன்று உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்!

முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!

நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒருபடைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப்பீர்களா?

இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!

Read more...
 
குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்! Print E-mail
Friday, 26 August 2011 11:37

குடும்பங்களில் ஏமாறுதலும், ஏமாற்றுதலும்!

  பெற்றோரின் வருமானத்தில் நம் நிலை:  

பிறக்கும் போது நாம் பணத்துடன் பிறப்பதில்லை வெறும் கைகளை மடக்கியும், நீட்டியும் தான் பிறக்கின்றோம் இப்படிப்பட்ட நேரத்தில் நாம் தாயின் மடியில் தவழ்ந்துக் கொண்டும் தந்தையின் கழுத்தை இறுக்கிப்பிடித்துக்கொண்டும் பற்களை இழித்துக் காட்டி பார்ப்பவரையெல்லாம் பரவசப்படுத்திக் கொண்டிருப்போம். இந்த பருவத்தில் நமக்கு பொருளாசையோ, பொன்னாசையோ, சொத்து சுகத்தை சேர்த்துக் கொள்ளும் எண்ணமோ வருவதில்லை!

வளரும் பருவத்தில் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் பாடம் படிக்க வேண்டும் வீட்டுப்பாடம் எழுதவேண்டும் என்ற ஆர்வம் தான் நமக்கு அதிகமாக வரும், ஏன்! ஒரு நோட்டு புத்தகம் வாங்குவதாக இருந்தாலும் தந்தையின் வருமானத்தை எதிர் நோக்கித்தான் இருப்போம், நம்முடைய பள்ளித் தேர்வுக்கட்டணம் கட்டுவதற்கு கூட நமக்கு மாணவப் பருவத்தில் வழி இருக்காது இந்த பருவத்தில் குடும்ப சொத்தை அபகரிக்கும் எண்ணம் நம் மனதில் துளியளவும் வருவதில்லை!

Read more...
 
விலக முடியாத பந்தங்கள்! Print E-mail
Thursday, 30 June 2011 14:03

விலக முடியாத பந்தங்கள்!

காலம் மனிதனிடம் ஒரு கேள்வி கேட்டது! ‘நீ விரும்புவது விடுதலையையா... ஜெயிலையா?’ என்று! ‘விடுதலையைத்தான் விரும்புகிறேன்’ என்று மனிதன் சொன்னான்.

அவனிடமே ‘மரணத்தைக் கண்டு அஞ்சுவாயா?’ என்றது காலம். ‘ஆமாம்’ என்று பதிலளித்தான் மனிதன்.

பந்த சிறைக்குள் சிக்கிக் கிடக்கும் உங்களுக்கு முதுமையை தந்து வாழ்க்கையில் முற்றுபெறும் விடுதலையை அளிக்கிறேன். ஆனால் அதற்கு மரணம் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டு அழுது புரள்கிறீர்களே.! ஏன்?’ என்று கேட்டது காலம்.

மனிதன் பதிலளிக்காமல் தலை குனிந்து நின்றான்!

பறவைபோல் ஆனந்தமாக பறந்து திரியும் ஆன்மா பந்த சிறைக்குள் சிக்கி தாய் வயிற்றில் குழந்தையாகிறது.

தாய் வயிறு குழந்தைக்கு முதல் சிறை. அது நிறைவாகும் போது திறந்த வெளி ஜெயிலான இந்த பூ உலகுக்குள் பிரவேசம்.

உண்மையில் இந்த உலக வாழ்க்கை மிக மிக குறுகலான நெருக்கடியான பந்தச் சிறை. பிறக்கும் குழந்தையானது இருவருக்கு மகன், சிலருக்கு தம்பி, அடுத்தவர்களுக்கு மருமகன்... மாமா... சித்தப்பா...!

அவர்கள் ஒவ்வொருவரும் உறவு முறை என்றதொரு கம்பிக் கூண்டோடுதான் அவனை நெருக்குகிறார்கள்.

சில கூண்டு ஜெயில்கள் அவனை அடைக்கின்றன. சிலவற்றுக்குள் அவனே போய் அடைபட்டுக்கொள்கிறான். வளரும் போது உறவுக் கூண்டுகள் அவனை பலவாறு இறுக்கிக்கொள்கின்றன. பந்தச் சங்கிலிகள் பலவாறு அவனை முறுக்கிக்கொள்கின்றன.

அவைகள் மட்டுமா...?

பெண்ணின் அன்பில் விசாரணைக் கைதியாக இருந்து காதல் சிறைக்குள் சிக்குகிறான்.

Read more...
 
இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு Print E-mail
Monday, 05 December 2011 22:32

இளைஞர்களைக் கண்கானிப்பதில் பெற்றோர்களின் பொறுப்பு

   அமீருல் அன்சார் மக்கி    

ஒரு சமூகத்தின் முதுகெலும்பாக திகழ்வது இளைஞர் சமூகம்தான். ஒரு சமூகத்தின் வெற்றியும் வீழ்ச்சியும் அவர்கள் கையிலேயே உள்ளது.

ஒரு சமூகத்தில் நல்ல மாற்றம் வருவதற்கு பங்களிப்பு செய்பவர்கள் இளைஞர்களே. இதனால்தான் ஆண்மீகவாதிகள் தொடக்கம் அரசியல் வாதிகள்வரை இவர்களை தவறான அடிப்படையில் வழிநடாத்தி தமது விருப்பங்களையும் எண்ணங்களையும் சமுகத்தில் பிரதிபலிக்கச் செய்கிறார்கள்.

இதனால் இளமைப் பருவத்தை சரியான முறையில் பயன்படுத்துவதென்றால் அந்த சமூதாயத்தில் உள்ள பெற்றோரின் கண்காணிப்பு இன்றியமையாததாகும்.

அல்லாஹ் மனிதனுக்கு வழங்கிய அருட்கொடைகளில் இளமைப் பருவம் மிகமுக்கியமானது. இந்தப்பருவத்தில் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு அவனது தூதரின் வாழ்க்கையைப் பின்பற்றி நடப்பது என்பது இஸ்லாத்;தில் மகத்தான நன்மையைப் பெற்றுத்தரும் என்பதை ஹதீஸ்களில் காணலாம்.

அர்ஷில் நிழல் பெறும் ஏழு கூட்டத்தினரில் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வளர்ந்த இளைஞரும் ஒருவர் என நபியவர்கள் அடையாளப் படுத்துவது இந்தப் பருவத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்துகிறது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 98

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article