வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா? Print E-mail
Monday, 11 June 2012 06:06

 

    நோய் எதிர்ப்பு சக்தி இல்லையா?    

மழைக் காலங்களில் மருந்துவ மனைகளில் கூட்டம் நிரம்பி வழியும் அதிலும் சிறு குழந்தைகளை தூக்கி கொண்டு நிற்கும் தாய்மார்களே அதிகம் காணப்படுவர்.

குழந்தைகளை என்ன தான் கவனமாக பார்த்துக் கொண்டாலும் எப்படியோ சளி பிடித்து விடுகிறது என்ற புலம்பலை எல்லோர் வீட்டிலும் கேட்கலாம். மாதம் 1 முறை மருத்துவரை சந்தித்து ஆண்டிபயாடிக் மருந்துகளை சாப்பிட்டால் தான் குழந்தைகளின் சளித்தொல்லை நீங்கும். ஆனால் இதே தொல்லைகள் அடுத்தமாதமும் தொடரும். மாத மாதம் ஆண்டிபயாடிக் மருத்துகளை எடுக்காவிட்டால் சளித்தொல்லை அதிகமாகி குழந்தைகளுக்கு காசநோய் உண்டாகிவிடும்

வாய்ப்புள்ளதால் சளியை உடனே குறைக்க பலதரப்பட்ட ஆண்டிபயாடிக் மருத்துகளை சாப்பிட வேண்டியுள்ளது.

வெந்நீர் குடித்தாலும், சுத்தமான உணவு சாப்பிட்டாலும், மழையில் நனையாமல் இருந்தாலும் கூட அடிக்கடி ஏன் சளி பிடித்து விடுகிறது என டாக்டரிடம் கேட்டால் உங்கள் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது என்று பதில் வரும்.

Read more...
 
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (1) Print E-mail
Sunday, 30 September 2012 07:01

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (1)

     மார்பகம் என்றால் என்ன?    

ஒவ்வொரு மார்பகமும் லோப்ஸ்(lobes) எனப்படும் 6 முதல் 9 அடுக்கடுக்கான மடிப்பு சதைகளானது. ஒவ்வொரு சதையும் லோப்யூல்ஸ் (lobules) எனப்படும் பல சிறு இதழ்களைக் கொண்டு பாலைச் சுரக்கும் சில டஜன் குமிழ்களாக முடியும். இத்தகைய மடிப்புத்தொங்கு சதைகள், சதைகள், சிறு இதழ்கள் முனைப் பகுதி குமிழ்கள் அனைத்தையும் மெல்லிய இழை நாளங்கள் ஒன்றிணைக்கின்றன.

இந்த இழை நாளங்கள் மார்பகத்தின் நடுவிலுள்ள ஆரியோலா (areole) எனப்படும் கரும் வட்டத்தின் நடுவிலுள்ள முலைக்காம்பில் ஒன்றிணைகின்றன. சிறு இதழ்களுக்கும் நாளங்களுக்கும் இடையேயுள்ள இடைப்பகுதியைக் கொழுப்புப் பொருட்கள் நிறைக்கின்றன. மார்ப்கத்தில் சதைப்பற்று ஏதும் இருக்காது. ஆனால் மார்ப்கத்தின் அடிப்பகுதியில் சதைப்பற்று இருந்து விலா எலும்புகளை மறைக்கின்றன.

ஒவ்வொரு மார்பகமும் இரத்த நாளங்களையும் லிம்ப்(lymph) எனப்படும் வர்ணமற்ற நிணநீர் திரவத்தை எடுத்துச் செல்லும் நாளங்களையும் கொண்டுள்ளது. இந்த லிம்ப் நாளங்கள் அவரை விதை வடிவிலுள்ள லிம்ப் நோட்ஸ் (Nodes )எனப்படும் முடிச்சுகளில் செல்லுகின்றன. இத்தகைய லிம்ப் நோட்ஸ்கள் கூட்டங் கூட்டமாக அக்குகளின் மேழேயும் தோற்பட்டை எலும்புகளின் மேலும் மார்ப்கங்களிலும் உள்ளன. இத்தகைய லிம்ப் நோட்ஸ் உடலின் மற்ற பல பாகங்களிலும் உள்ளன.

Read more...
 
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (2) Print E-mail
Sunday, 30 September 2012 06:55

மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (2)

  மார்பகப் புற்று நோயின் வகைகள்

மார்பகப் புற்று நோயில் பல வகைகளுண்டு. எளிய வகைகள் கிழே தரப்பட்டுள்ளன.

1. நாளப்புற்று நோய் (Ductoal carcinome)

இது மிகச் சாதாரணமாக வரும் மார்பகப் புற்றுநோய் வகையாகும். நாளங்கள் தடிப்பதின் வழி இது துவங்கும்.

2. மடிப்பு சதை புற்றுநோய் (lobuler carcinome)

இது மார்பகத்தின் மடிப்புச் சதைகளில் உண்டாகும்.

3. முற்றிலும் பரவிய புற்றுநோய் (metastatic)மார்பகத்தின் வெளிப்பகுதியில் புற்றுநோய் முற்றிலும் பரவிய பின்னர் புற்றுநோய் அணுக்கள் அக்குளின் கீழேயுள்ள லிம்ப் நோட்களில் அதிகமாகப் பரவும். எப்போது இத்தகைய முடிச்சுகளில் புற்று நோய் பரவுகிறதோ, புற்றுநோய் அணுக்கள் உடலின் மற்ற எல்லா பாகங்களிலும் பரவும் அபாயம் உருவாகிறது.

Read more...
 
மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (3) Print E-mail
Sunday, 30 September 2012 06:21

  மார்பகப் புற்றுநோய் பற்றி விவரங்கள் (3)     

மார்பகப் புற்று நோய்க்கு மருத்துவம் எது?

மார்பகப் புற்று நோயின் மருத்துவம், கட்டியின் அளவு, இருப்பிடத்தைப் பொறுத்து, பரிசோதனை சாலையின் பரிசோதனை முடிவுகளையும், நோயுள்ள படி நிலையையும், நோயீன் தன்மையைப் பொறுத்தும் அமையும் மருத்தும் என்பது தணிப்பட்டது அல்லது முழு உடல் சார்ந்தது

மார்பு பகுதிக்கு மட்டும் மருத்துவம்

ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள புற்றுநோய் அணுக்களை நீக்கவோ, அழிததலோ கட்டுபடுத்துதலோ இந்த வகை மருத்துவத்தின் தன்மையாகும். அறுவை மருத்துவம், அதிரொலி பாய்ச்ச மருத்துவங்கள் இந்த வகை மருத்துவத்துக்குட்பட்ட மருத்துவமாகும்.

Read more...
 
நெஞ்சுவலி - உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை Print E-mail
Wednesday, 19 December 2012 07:07

நெஞ்சுவலி (மாரடைப்பு) நேரத்தில் உங்கள் உயிரை நொடியில் காப்பாற்றிக் கொள்ள வழிமுறை

தனியாக இருக்கும் போது நெஞ்சுவலி (மாரடைப்பு) வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது ?

மாலை மணி 6:30! வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள்.

அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது,

நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள், திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்.

Read more...
 
பைல்ஸ் (Piles ) எனப்படும் மூல நோய் - விரட்ட வழிகள்! Print E-mail
Thursday, 27 December 2012 20:46

பைல்ஸ் (Piles)எனப்படும் மூல நோய்: விரட்ட வழிகள்!

மலக்குடற் குதத்தின் அருகில் ஏற்படும் வீக்கம் மூலவியாதி என்று அழைக்கப்படுகிறது.

வலி, இரத்தக் கசிவு, மலம் இறுகுதல், உட்காரும் போது வலி என்பன இந்த நோயின் அறிகுறிகளாகும்.

மல வாசலில் நல்ல இரத்தத்தைக் கொண்டுவரும் குழாய்கள், அசுத்தமான இரத்தத்தைக் வெளியேற்றும் குழாய்கள் இருக்கின்றன.

அசுத்த இரத்தத்தை வெளியேற்றும் குழாய்களில் ஏற்படும் வீக்கம் மூல நோயாக இடம் பெறுகிறது.

மூல நோய் இரு வகைப்படும் 1. உள் மூலம், 2.வெளி மூலம். உள் மூலத்தில் மேல் பகுதி இரத்தக் குழாய்களும் வெளி மூலத்தில் கீழ்ப் பகுதி இரத்தக் குழாய்களும் வீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன.

Read more...
 
பித்தப்பைக் கற்களை தடுக்க - 'தவிர்க்க மற்றும் சேர்த்துக்கொள்ள' வேண்டிய உணவுகள் Print E-mail
Thursday, 27 December 2012 06:01

Image result for பித்தப்பைக் கற்களை தடுக்க 

           த்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ?           

இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு.

வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம். 

பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.

பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. 

வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

Read more...
 
மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்! அமெரிக்க ஆய்வில் தகவல்! Print E-mail
Monday, 31 March 2014 07:59

மன அழுத்தத்திற்கு மருந்து இறை நம்பிக்கைதான்! அமெரிக்க ஆய்வில் தகவல்!

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என, அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள, மெக்லீன் மருத்துவமனையின் மருத்துவரும், மனவியல் துறையின் நிபுணருமான டேவில் ரோஸ்மேரின், இந்த ஆய்வு தொடர்பாக, 159 பேரிடம், பல்வேறு விதமான சோதனைகளை நடத்தினார்.

கடவுள் நம்பிக்கை, நோய் குணமடைவது குறித்த எதிர்பார்ப்பு மற்றும் சாதாரண சிகிச்சை முறை போன்றவை குறித்து, பாதிக்கப்பட்ட நபர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடவுளிடம் அதிகமான பக்தியுள்ள நபர்களுக்கு, மனஅழுத்த நோயின் தாக்கம், மிகவும் குறைவாக இருந்தது இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. கடவுளைப் பற்றிய சிந்தனையோ, பக்தியோ துளியும் இல்லாத நபர்களுக்கு, மனஅழுத்தம் நோயின் தாக்கம்,எந்த வகையிலும் குறையவில்லை.

ரோஸ் மேரின் குறிப்பிடுகையில், “கடவுளிடம் நம்பிக்கை வைப்பதன் மூலம், மனநல சிகிச்சை பெறுவோருக்கு, தங்கள் பிரச்னையிலிருந்து விடுபடுவோம் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. இதுதான் இந்த ஆய்வின் முக்கிய அம்சம். இந்த ஆய்வு, இனி வரும் மருத்துவ உலகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்,” என்றார்.

Read more...
 
மிட் நைட் எக்சர்சைஸ்! Print E-mail
Monday, 11 June 2012 05:59

 Image result for midnight exercise

             மிட் நைட் எக்சர்சைஸ்!             

நானும் தான் தினமும் மூச்சு வாங்க நடக்கிறேன், மிஷினில் ஏறி வெயிட் பார்த்தால், குறையவே மாட்டேங்குதே, நாள் கணக்கில் ஓடியும், ஒரு கிலோ கூட குறைய மாட்டேங்குதே..." என்று மனதுக்குள் புலம்பும் ரகமா நீங்கள்?

அப்படியானால், நீங்கள் உங்கள் எடை குறைய, பணத்தை கண்டபடி யார் யார் சொல் கேட்டோ, செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்? வேண்டாம், பணத்தை கண்டபடி செலவழிப்பதை விடுங்கள்.

அதுபோல, வெயிட் குறைய, தண்ணீர் குடிக்க கூட பயப்படுவீர்களே, சாப்பிடுவதையும் குறைத்து விடுவீர்கள், சில சமயம், உடற்பயிற்சி செய்வதற்காக மணிக்கணக்கில் வயிற்றை காய வைப்பீர்களே, உண்மை தானே. அதையும் முதலில் விடுங்கள்.

Read more...
 
அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் Print E-mail
Monday, 31 October 2016 10:50

அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான்

பொது சிவில் சட்டத்தை பிஜெபி விவாதப்பொருளாக்கியது இந்திய மக்களுக்கு இஸ்லாத்தை எடுத்து சொல்ல கிடைத்த நல்ல வாய்ப்பாக பார்க்கிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

தலாக் என்றால் என்ன? அல்குர்ஆனில் விவாகரத்து பற்றி என்ன சொல்லப்பட்டு உள்ளது என்பதை அனைத்து டிவிக்களும் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்னும் பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியுள்ள உரிமைகள் சுதந்திரம் பற்றி சொல்லச் சொல்ல சாதாரன பாமரமக்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள்.

ஏதோ ஒன்றை நினைத்து ஏதோ ஒன்றை செய்துவிட்டதை இப்போது பிஜெபி அரசு உணர்கிறது. ஆனால் நிலமை பிஜெபியின் கைமீறி போய்விட்டது.

யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை நிலை நிறுத்தியே தீருவான் என்பது நிறுபிக்கப்பட்டுள்ளது.

Read more...
 
'நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை' - பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல் Print E-mail
Tuesday, 08 December 2015 07:20

'நிவாரணப் பணிகளில் முஸ்லிம்கள் முன்னிலை' - பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல்

இது நாம் சொல்வதல்ல; பாதிக்கப்பட்ட மக்களின் ஒருமித்த குரல். ஆனால், இதில் எனக்கு வியப்பில்லை.

காரணம், முஸ்லிம்கள் ஊடகத்தில் முகத்தைக் காட்டிக்கொள்ளவோ தீவிரவாதப் பழியைத் துடைக்கவோ நல்லபேர் எடுக்கவோ இந்த மகத்தான சேவையைச் செய்யவில்லை. அவர்கள் பின்பற்றும் மார்க்கம் சொன்ன கட்டளைக்கு அடிபணிந்து, இறைவனின் அன்பையும் நெருக்கத்தையும் எதிர்பார்த்தே இந்தத் தொண்டை மேற்கொண்டனர்.

ஒரு உண்மையான முஸ்லிம், மற்றவர் துயரத்தைக் கண்டு வாளாவிருக்கமாட்டான். ஓடிப்போய் தன்னால் முடிந்த உதவிகளை நல்குவான். அது, தம்மைக் கொல்ல வந்த பகைவனாக இருந்தாலும் சரியே!

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இல்லாத பகைவர்களா? அந்தப் பகைவர்களுக்குக்கூட நன்மையே செய்யுமாறுதான் இறைவன் கட்டளையிட்டான். அப்படி நடந்துகொண்டால் பகைவனும் நண்பனாகக்கூடும் என்று விளக்கமளித்தான்.

“நன்மையும் தீமையும் சமமாகா. நன்மையைக் கொண்டே (தீமையை) வெல்வீராக! அப்போது, யாருக்கும் உமக்குமிடையே பகைமை இருக்கிறதோ அவர்கூட உற்ற நண்பரைப் போன்று மாறிவிடுவார்” (அல்குர்ஆன் 41:34) 

Read more...
 
ஜூனியர் விகடன் கட்டுரை! படிக்கும்போதே கண் முன் ஓடும் காட்சிகள்! Print E-mail
Tuesday, 08 December 2015 22:47

இன்றய ஜூனியர் விகடன் கட்டுரை.. படிக்கும் போதே கண் முன் ஓடும் காட்சிகள்..

முகம் சுளிக்க வைக்கும் குடிசைப் பகுதிகளுக்குள் எல்லம் ஒயிட் காலர்கள் ஓடியாடி உதவுகிறார்கள். குடிசைவாசிகளோடு உணவைப் பிரித்து உண்கிறார்கள். ‘எங்கள் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளுங்கள்’ எனக் குரல்கள்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் விளிம்பு நிலை மனிதர்கள். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தங்கியிருந்தவர்களுக்கு இஸ்லாமியர்கள் உணவளித்தார்கள்.

மொழி தெரியாத மாநிலங்களில் இருந்துகூட ஆதரவுக் கரங்கள். தண்ணீர் தராத கர்நாடகாகூட கண்ணீரோடு நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது. காவடி தூக்கியவர்களும், பால் குடம் எடுத்தவர்களும், மண் சோறு சாப்பிட்டவர்களும், லாயிட்ஸ் ரோட்டில் ஒப்பாரி வைத்தவர்களும் எங்கே போனார்கள்?

சவப்பெட்டி தூக்கிய இஸ்லாமியர்கள்..!

‘எங்கள் பாட்டி இறந்துவிட்டார். உடலைக் கொண்டு செல்ல முடியாமல் தவிக்கிறோம். உதவி செய்யுங்கள்’ - மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த த.மு.மு.க-வினருக்கு சூளைமேடு ஏரியாவில் இருந்து வந்தது இப்படியொரு தகவல்.

சூளைமேடு பகுதியில் வசிக்கும் பிரிட்டோ என்ற போலீஸ்காரரின் பாட்டி அந்தோனி அம்மாள் மருத்துவமனையில் இறந்துவிட்டார். பிரிட்டோ போனில் உதவி கேட்க களத்தில் குதித்திருக்கிறார்கள் த.மு.மு.க-வினர்.

Read more...
 
முஸ்லீம்களுக்கு வீடு என்ன... உயிரையே கொடுப்போம்! Print E-mail
Saturday, 12 December 2015 10:34

முஸ்லீம்களுக்கு வீடு என்ன... உயிரையே கொடுப்போம்!

வெள்ள பாதிப்பு மீட்பு பணியில் முஸ்லீம் அமைப்புகளின் பங்களிப்பு குறித்து மக்கள் மனதார பாராட்டியிருந்ததை ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். கழுத்தளவு தண்ணீரில் சென்று மக்களுக்கு உணவு வழங்கியதாகட்டும், சாக்கடைகளை சுத்தம் செய்ததாகட்டும் அனைத்தும் அர்ப்பணிப்போடு நடந்தன. பணியில் ஈடுபட்ட முஸ்லீம் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள் இது குறித்து என்ன நினைக்கிறார்கள், அந்த முனைப்பை இயக்கியது எது? அவர்களை சந்தித்து உரையாடினோம்.

மதம் சார்ந்து மட்டும் அதிகம் போராடும் இயக்கங்கள் ஒரு பொதுப் பிரச்சினைக்காக அனைத்து பிரிவு மக்களுக்காகவும் பெருமளவில் அணிதிரண்டு வேலை செய்திருக்கின்றனர். இந்த இணைப்பு மக்களிடம் இணக்கத்தையும், ஜனநாயகத்தையும், சகோதர உணர்வையும் ஓரளவிற்கேனும் அறிமுகப்படுத்தும்.

முஸ்லீம் மக்கள் குறித்து இந்துக்களின் பொதுப்புத்தியில் உருவாக்கப்பட்டிருக்கும் வன்மத்தையும் இந்த வெள்ள நிவாரணப் பணி அழித்து விட்டிருக்கிறது.

ஊடகங்களில் முஸ்லீம் அமைப்புகள் குறித்த செய்திகள் பெரும்பான்மையாகவும், ஆர்.எஸ்.எஸ் குறித்த செய்திகள் சிறுபான்மையாகவும் வருவதைக் கண்டு இந்துமதவெறியர்கள் தாங்கவொண்ணா எரிச்சலில் இருக்க வேண்டும்.

உண்மையில் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மை மக்களின் பேரைச் சொல்லி இயங்கும் மதவெறியர்களை தோற்கடித்திருக்கிறார்கள்.

தவ்ஹித் ஜமா அத் அமைப்பினரை ஆபாசமாக வசைபாடிய கல்யாணராமன் எனும் பா.ஜ.க மதவெறியனுக்கு இந்துக்களே திருப்பி அடித்திருக்கின்றனர், முகநூலில். இவையெல்லாம் தமிழக மண்ணில் இந்துமதவெறிக்கு எதிராகவும் அதே நேரத்தில் ஜனநாயக உணர்வின் அடிப்படையிலும் மக்கள் திரள்வதற்கும் சேர்வதற்கும் வழியெடுத்துக் கொடுக்கும்.

Read more...
 
"முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க" Print E-mail
Thursday, 10 December 2015 07:13

உதவுவாரில் எங்கே பார்த்தாலும் குல்லாக்கள்... TNTJ, TMMK,  SDPI,..

பாதிக்கப்பட்டோரில் யாரைக் கேட்டாலும்...

"பாய்கள்", "முஸ்லீம்காரவங்க வந்து காப்பாத்துனாங்க",

"சாய்புகள்தான் சாப்பாடு போட்டுகிட்டிருக்காங்க".

'தொடக்கி விட்டுவிட்டார்கள்' என்றில்லை;

'இடையில்தான் வந்தார்கள்' என்றில்லை;

'திணறி நின்றார்கள்' என்றில்லை;

'சோர்ந்து விலகிவிட்டார்கள்' என்றில்லை!

தங்கள் மனிதத்தை தங்கள் கடவுளுக்கும்,

தங்கள் ஆண்மையை தங்கள் எதிரிகளுக்கும்,

தங்களுக்கும் உணர்த்திக்கொண்ட இவர்களது அதிரவைக்கும் அற்பணிப்பு!

Read more...
 
தம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க! Print E-mail
Thursday, 10 December 2015 07:06

தம்பி, எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க!

கடலூர் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஊடகங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்கள் உடனடியாக கிடைக்கிறது.

ஆனால், குக்கிராமங்கள்...?

கடலூர் மாவட்டம், வடலூர் குறிஞ்சிப்பாடி தாண்டி அன்னவல்லி என்கிற கிராமத்தில் நண்பர்களோடு நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர்,

"தம்பி எங்க கஷ்டத்த உங்க கஷ்டமா நினைச்சி பாவிக்கிறிங்க, இந்த நாளு நாளா சாம்பார் சாதம், புளி சாதம், சப்பாத்தி, கஞ்சினு பலபேர் பலவிதமா இயற்கை உருவாக்கின எங்கள் பசிக்கு உங்களால் முடிந்தளவு உதவிகளை பெருவதில் ஆறுதல் அடைகிறோம் நாங்கள்"

"இது நமக்கான உதவிதானம்மா"

Read more...
 
விளம்பரம்! விமர்சனம்! Print E-mail
Sunday, 13 December 2015 06:37

விளம்பரம்! விமர்சனம்!

    Mohamed Ali    

[   இந்த நாட்டில் குடிகாரனுக்கும், பொம்பளைப் பொறிக்கிப்பயலுக்கும் பெயர் சமூக ஆர்வலராம். தொண்டு செய்பவனுக்குப் பெயர் விளம்பர விரும்பியாம்! ]

சத்தமில்லாமல் நாங்களெல்லாம் சேவை செய்கின்றோம், ஆனால் குறைகுடம் கூத்தாடும் என்ற பழமொழிக்கேற்ப 'முஸ்லிம்களின் விளம்பர அலப்பறை தாங்கவில்லை' என்று சில பிரிவினைவாதிகளும், ஆளுங்கட்சியை நம்பிப் பிழைக்கும் சிலரும் எழுதி அதை மிகக் கடுமையாகப் பரப்பியிருக்கிறார்கள். முஸ்லிம்கள் செய்யும் களப்பணிகளை விட அதிகமாக இந்த விமர்சனம் முஸ்லிம்களின் மீது சாட்டப்படுகின்றது.

சுதந்திர போராட்ட காலத்தில் அதிகமான பணிகளையும், தியாகத்தையும் இஸ்லாமியர்கள் செய்தார்கள். கப்பல் வாங்க காசு கொடுத்தார்கள். INA இந்திய தேசிய ராணுவம் அமைக்க சுபாஷ் சந்திர போஸூக்கு தன் சொத்தையெல்லாம் எழுதிதந்தார்கள்.

விளம்பரங்கள் செய்யாமல் ரகசியமாக செய்த காரணத்தால் முஸ்லிம்கள் எல்லாம் இன்றைக்கு தேசதுரோகிகள் ஆகி விட்டோம். ஆனால் போஸ்ட் ஆபிஸ் வாசலில் நின்று போஸ்ட் பாக்ஸில் தீயை அள்ளிப்போடும் போது அதை பராக்கு பார்த்துக் கொண்டிருந்தவர்கள் எல்லாம் தியாகி ஆகிவிட்டார்கள் என்று நேற்று ஒரு சகோதரர் எழுதியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

Read more...
 
நீதிபதி பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு! Print E-mail
Tuesday, 19 January 2016 07:26

நீதிபதி பதவிகளில் முஸ்லிம்கள் புறக்கணிப்பு: நேஷனல் லாயர்ஸ் நெட்வொர்க்' (NLN) தகவல்!

மாநில உயர்நீதிமன்றங்களில் மொத்த நீதிபதி பணியிடங்கள் 601 .

முஸ்லிம் நீதிபதிகளின் எண்ணிக்கை 25 மட்டுமே..!

அதிலும் 10க்கும் மேற்பட்டோர், இந்த ஆண்டிலேயே ஒய்வு பெற உள்ளனர்.

2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 14.2% உள்ள முஸ்லிம்களின் விகிதாச்சாரப்படி 86 முஸ்லிம்கள், மாநில உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளாக இருக்கவேண்டும்.

போதிய தகுதிகள் இருந்தும் நீதிபதி நியமனங்களில் முஸ்லிம்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

Read more...
 
அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள் Print E-mail
Friday, 08 July 2016 12:06

அதிகாரவர்க்கத்தின் கண்களை உறுத்தும் முஸ்லிம்கள்

    ஆளூர் ஷாநவாஸ்    

கோவை, பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்ட மதானியும், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு சட்ட உதவி வழங்குவதாக சித்தரிக்கப்பட்ட ஒவைசியும், பங்களாதேஸ் பயங்கரவாதிகளுக்கு தூண்டுகோலாய் இருந்ததாக பழி சுமத்தப்படும் ஜாகிர் நாயக்கும் நாடறிந்த ஆளுமைகள்.

சமூக, அரசியல், ஆன்மீகத் தளங்களில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு அறவழியில் பயணிப்பவர்கள்.

அத்தகைய இவர்களை அதிகார வர்க்கம் குறிவைப்பது ஏன்? பயங்கரவாதத்தோடு இவர்களை இணைப்பது எதனால்?

Read more...
 
அமெரிக்க முஸ்லிம்கள் Print E-mail
Friday, 06 May 2016 06:24

அமெரிக்க முஸ்லிம்கள்

     ஆரூர். யூசுப்தீன்    

சமீபத்திய ஒரு செய்தி முஸ்லிம்கள் அனைவரின் மனதில் கோபத்தை ஏற்படுத்தியது. அச்செய்தி உணர்த்தும் பொருள் அனைவருக்கும் வெறுப்பை ஏற்படுத்தியது. முஸ்லிம்கள் இனி அமெரிக்காவில் நுழைய அனுமதிக்க கூடாது என்று அமெரிக்க நாட்டின் அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் டொனால்ட் ட்ராம்ப் கூறிய செய்திதான் அது.

உண்மையில் டொனால்ட் கூறிய வார்த்தைகள் அவர் மனதில் ஏற்பட்ட மாற்றத்தினால் வெளிவந்தவை. கடந்தகால நிகழ்வுகளில் முஸ்லிம்கள் மீது ஆதிக்கவர்க்கம் திணித்த பொய்யான குற்றசாட்டுகள் தான் இதற்கு முக்கிய காரணிகள்.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் முஸ்லிம்கள் இருப்பு 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் தான் காணப்படுகிறது.

உண்மையில் அமெரிக்காவின் ஆக்கம், உருவாக்கம், வளர்ச்சி மற்றும் நிலைநிறுத்தல் ஆகிய அனைத்து பக்கங்களையும் முஸ்லிம்கள் நிரப்பியுள்ளனர்.

Read more...
 
கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் 15 கேள்விகள்! Print E-mail
Friday, 19 June 2015 04:21

கட்டாய ஹெல்மெட்: நீதிமன்றத்தின் முன் வைக்கப்படும் 15 கேள்விகள்!

[வாகன ஓட்டிகள் மீது அக்கறை கொண்ட நீதிமன்றம், விபத்திற்கு காரணமாகும் டாஸ்மாக் சரக்கை ஏன் ஒழிக்க உத்தரவு போடக் கூடாது?]

வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறினால் ஓட்டுனர் உரிமம் ரத்து என்ற கடுமையான உத்தரவும் மக்களை திசை திருப்பியும், கவலையிலும் ஆழ்த்தியுள்ளது. பள்ளிக் கல்விக்கே பல ஆயிரங்களை இழந்து நிம்மதியைத் தொலைத்த மக்கள் மீண்டும் ஹெல்மெட் மூலம் நிம்மதி இழக்கின்றனர்.

நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், சட்டத்துக்கு உட்பட்டே வாழ்கிறோம் என்று சொல்லும் நடுத்தர வர்க்கம் அதிகம் உபயோகிக்கும் வாகனமான இரு சக்கர வாகனத்திற்கு இவ்வளவு கட்டுப்பாடா? இரு சக்கர வாகனத்தில் இருந்து கடன் வாங்கியாவது கார் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கார் விற்பனை மேலும் உயரும். இதனால், மேலும் போக்குவரத்து சிக்கல் ஏற்படும் எனபதே உண்மை.

குருப்பெயர்ச்சி ஜூலை 12. ஆனால், போக்குவரத்து போலீசுக்கு குரு பகவான் ஜூலை 1 முதலே பண மழையில் மிதக்க விடப்போகிறார். தீர்ப்பு சொன்ன நாளில் இருந்தே எப்போது ஜூலை 1 வரும் என போக்குவரத்து போலீசார் அபராத 'வசூல் கடமை' செய்ய தயாராகி வருகின்றனர். வண்டிச் சாவி பறிப்பு, ஒருமையில் தரக்குறைவாக பேச்சு, முதியவர்களிடம் வீரம், தீவிரவாதியிடம் காட்ட வேண்டிய வீரத்தை அப்பாவிகளிடம் காட்டுவது என போலீஸ் 'சாதனைகள்' தொடர இருக்கின்ற நிலையில், நீதிமன்றத்தின் கவனத்திற்கு சில கேள்விகள்.

Read more...
 
இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10 கோடியைத் தொடுகிறது! Print E-mail
Monday, 03 October 2011 08:05

அதிகரிக்கும் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை 60 வயதை கடந்தோர் 9.84 கோடி பேர்

டெல்லி: 2011ம் ஆண்டில் இந்தியாவில் 60 வயதைக் கட்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 9.84 கோடியாக அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் ஆண்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டின் 60 வயதை கடந்த மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 7.7 கோடியாக இருந்தது. இதில் ஆண்கள் 3.8 கோடி, பெண்கள் 3.9 கோடி பேர்.

மொத்த மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் 7.5 சதவீதம் உள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், ஹரியானா, ஒரிஸ்ஸா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கோவா, கேரளா ஆகிய மாநிலங்களில் தேசிய சராசரியைவிட மூத்த குடி மக்கள் அதிக அளவில் உள்ளனர்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 79 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article