வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் Print E-mail
Thursday, 26 February 2009 07:34

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் 

An Excellent & An Useful Article

       ரெஹனா பானு மாஸ்கோ     

திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு. ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.

திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.

Read more...
 
கல்யாண வாழ்க்கை! Print E-mail
Saturday, 13 March 2010 08:28

ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.

ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர்.  சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.

தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து வெள்ளைக்கொடி பறக்குமே!தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா? என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி விடும்.

கல்யாண வாழ்க்கையைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்;

காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.

Read more...
 
திருக்குர்ஆனும் மனிதனும் Print E-mail
Monday, 15 November 2010 10:22

திருக்குர்ஆனும் மனிதனும்

‘மனிதன் சுதந்திரமுள்ளவன், பொறுப்புள்ளவன்,

நன்மை தீமைகளை பிரித்தறியும் ஆற்றல் உள்ளவன்,

இறைவனுடைய சட்டங்களுக்க கீழ்படியும் இயல்புள்ளவன்.

அவன் செய்த பாவங்களுக்காக பிறர் பிணை நிற்க வேண்டிய அவசியமில்லை.

அவனது குற்றங்களுக்காகவும், பாவங்களக்காகவும் அவனே மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அருளும், அன்பும், இரக்கமும் நிறைந்த இறைவன் அவனுடைய பாவங்களை மன்னிப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.

‘ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு கீழ்படியும் சட்டத்திற்குட்பட்டு, அதாவது முஸ்லீமாகவே பிறக்கின்றது’ என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அவ்வாறு தூய்மையாகப் பிறந்த குழந்தை, பிறகு, சூழ்நிலையின் காரணமாக மாறுபட்டு விடுகின்றது. குழந்தை மனிதனாக வளர்கின்றது. அந்த மனிதன் இறைவனால் அவனுக்கு அருளப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றான். நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆகின்றான்.

அவன் தீமை செய்தால் வருந்தி பாவமன்னிப்புத் தேடுவதற்காக இறைவன் அவனுக்கு நீண்ட அவகாசம் அளிக்கின்றான். எனவே, ஆன்மீகத்துறையில் முன்னேற்றம் அடைவதும், அடையாததும் மனிதன் கையில் இருக்கிறது.

Read more...
 
அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம் Print E-mail
Tuesday, 13 July 2010 14:58

அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம்

அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்பட வேண்டும்.

( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا )

நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ2838, அபூதாவூத், அஹ்மத்)

( الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ )

அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுபவர் தூய்மையான, கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1329)

Read more...
 
அல்லாஹ்வை நினைவு கூறும் வழிமுறைகள் Print E-mail
Thursday, 14 October 2010 12:07

அல்லாஹ்வை நினைவு கூறும் வழிமுறைகள்

ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.

நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே!

Read more...
 
நீங்க டீன் ஏஜ் ‘ஆ’ ஒழுங்காகத் தூங்குங்கள்! Print E-mail
Tuesday, 27 December 2011 07:41


            நீங்க டீன் ஏஜ் ‘ஆ’ ஒழுங்காகத் தூங்குங்கள்!                

முழுக்க முழுக்க பதின் வயதினரை மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று இன்றைய பதின் வயதினரை (டீன் ஏஜர்) ஒழுங்காகத் தூங்குங்கள் என எச்சரிக்கிறது.

போய் தூங்குங்கள் என பெரியவர்கள் சொன்னாலும் இந்த பதின் வயதினர் (டீன் ஏஜர்) அவற்றைக் காதுகொடுத்துக் கேட்பதில்லை. அப்படிப் பட்டவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாய் வந்திருக்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று.

பதின் வயதினரை (டீன் ஏஜர்) மட்டும் வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த இந்த ஆய்வின் முடிவு ஒழுங்கான தூக்கம் இல்லாத பதின் வயதினருக்கு உயர் ரத்த அழுத்த நோய் வரும் என அதிர்ச்சிச் செய்தியை தந்துள்னது.

சரியான தூக்கம் இல்லாதவர்கள் அதிக எடையுடையவர்களாய் மாறும் அபாயம் இருப்பதாக முன்பு ஒரு ஆராய்ச்சி முடிவு கூறியது நினைவிருக்கலாம். இப்போது அதைவிட அச்சுறுத்தல் தரும் இந்த ஆய்வு முடிவு வெளியாகி இருக்கிறது.

Read more...
 
கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது! Print E-mail
Friday, 23 December 2011 07:24

Image result for கேன்சருக்கான அறிகுறிகள்

    கேன்சர் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது!    

நீண்ட காலமாக புற்று நோய்க்கு(CANCER) கீமொதெரபீ (CHEMOTHERAPY) சிகிச்சை மட்டுமே உள்ளது என்பதை மறுத்து அதற்கு மாற்று வழி உள்ளது என்பதை ஜான்ஸ் ஹாப்கின்ஸ்(JOHNS HOPKINS) சொல்கிறார். இங்கே உங்களின் பார்வைக்காக ஆங்கிலத்தி்லிருந்து தமிழுக்கு மொழி மாற்றம் செய்துள்ளேன்.

கேன்சர் பற்றி ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சொல்வதை கவனியுங்கள்:

1) ஒவ்வொரு மனிதனின் உடம்பிலும் கேன்சர் செல்கள் உள்ளது, அது சாதாரண டெஸ்டில் தெரிய வராது, அவை சில பில்லியன் செல்களாக பெருக்கம் ஆன பின்புதான் தெரிய வரும். கேன்சர் சிகிச்சைக்குப் பின், டாக்டர் நோயாளியின் உடம்பில் கேன்சர் இல்லை என்று சொன்னால், இதற்க்கு உண்மையான அர்த்தம் சோதனையால் அந்த உடம்பில் உள்ள கேன்சர் செல்லை கண்டுபிடிக்கும் படியான எண்ணிக்கையில் இல்லை என்று மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

2) ஒரு மனிதனின் வாழ்நாளில் 6 முதல் 10 க்கு மேற்பட்ட முறை கேன்சருக்கான செல் உருவாகிறது.

3) ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி (immune system) வலுவாக இருக்கும்போது கேன்சருக்கான செல் அழிக்கப்பட்டு, பெருக்கம் அடைவதற்கான வாய்ப்பும் தடுக்கப்பட்டு, டயுமர்(tumors) ஏற்படுவதற்கான வாய்ப்பும் தடுக்கப்படுகிறது.

Read more...
 
இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்! Print E-mail
Monday, 12 April 2010 09:43

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழக்காதீர்கள்!

  இப்னு ஹனீஃப்  

மனிதர்கள் பெரும்பாலும் பாவங்களைச் செய்ய விரும்பாதவர்களாக, பாவத்தில் ஈடுபட்டாலும் பாவம் என்று அறிந்த நிலையில் அதை செய்தவர்களாக, செய்பவர்களாக, அதை நினைத்து மனம் வருந்திடக் கூடியவர்களாக, அவற்றில் இருந்து எப்படியாவது விரைவில் விடுபட முயல்பவர்களாகவே, (அதில் தோல்வியடைந்தவர்கள் அல்லது வெற்றி பெற்று நேர்வழியில் வாழ்பவர்கள் ஆகிய இரு சாராரும்) இருப்பது யதார்த்தமான ஒரு மனித இயல்பு ஆகும்.

இதற்கு மாற்றமாக விதி விலக்காக ஒரு சிலர் பாவங்களில் மூழ்கியும் அதை விட்டு விடுபடாமலும், அதையே தொடர்வது இருப்பினும் ஏதாவது ஒரு நேரம் அதை நினைத்து வருந்திடாமல் இருக்கமாட்டார் என்பதை மறுக்க இயலாது. அவர் பாவமன்னிப்பு கேட்பது கேட்காமல் இருப்பது என்ற எந்த நிலையில் இருப்பினும் புத்தி சுவாதீனமுடன் இருப்பின் அவர் இதை தமது வாழ்வில் ஏதேனும் ஒரு கணமாவது நினைத்து வருந்தி பச்சாதாபப்படாமல் இருக்க மாட்டார்.

ஆனால் ஒருவர் தாம் செய்வது பாவம் என்று அறியாமல் அதை தொடரும் போது அதை நன்மையென்று கருதி பலரும் செய்வதைக் காணும் போது அதை ஒரு தவறு என்று கூட கருதாமல் மார்க்க காரியம் எனும் அடிப்படையில் செயல்படும் போது அவர் அந்தச் செயல்களுக்குப் பாவமன்னிப்பு கேட்கும் வாய்ப்பே இல்லாத நிலையில் மரணித்து விடுகிறார் என்பது மிகப் பெரிய இழப்பு என்பதில் ஏதும் சந்தேகமில்லை.

Read more...
 
இஸ்லாமிய இயக்கத்தில் இணைவது கடமையா? Print E-mail
Sunday, 27 December 2009 07:50

இஸ்லாமிய இயக்கத்தில் இணைவது கடமையா?

   நிஃமத்துல்லாஹ்   

ஒவ்வொரு முஸ்லிமும் ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற கூற்று உண்மையா? அப்படியெனில் ஒரு நாட்டில் பல இஸ்லாமிய அமைப்புகள் இருந்து ஒரு நடுநிலைவாதிக்கு நேர்வழியிலுண்டான அமைப்பை தேர்ந்தெடுத்து, அதில் சேர்வது என்பது மிகக் கடினமான செயலாயிற்றே?

இதன் நிலைகளை காண்போம். பல தெளிவான ஹதீஸ்கள் எந்த ஒரு முஸ்லிமும், அவன் வாழும் பகுதியிலுள்ள முஸ்லிம் சமுதாயத்தை விட்டும் பிரிந்து வாழக்கூடாது என்பதை அறிவிக்கின்றன. மேலும் சமுதாயத்தை விட்டு பிரிந்து வாழ்வதை வன்மையாக கண்டிக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முஸ்லிமும், முஸ்லிம் சமுதாயத்தின் ஒரு அங்கத்தவராகவே இருக்கிறார். அவர் அதனுடைய வளர்ச்சிக்கு பாடுபடுபவர்களுள் ஒருவராக எப்பொழுதுமே திகழ வேண்டும்.

சில ஹதீஸ்களின் நேரடிமொழி பெயர்ப்பு ஏதாவது ஒரு இஸ்லாமிய அமைப்பை சார்ந்திருப்பது கடமை என்ற உணர்வை தோற்றுவிக்கிறது. இது தவறு. ஏனெனில் பரவலான கருத்துக்கள் அடங்கிய ஒரு வாக்கை (சொல்லை) ஒரு குறிப்பிட்ட வரையறுக்குள் உட்படுத்துவது கூடாது. சரியானதொரு ஆதாரம் இல்லாமல் அவ்வாறு செய்ய முடியாது.

நாம் அனைவரும் முஸ்லிம் சமுதாயத்தில், உம்மத்தில் ஓர் அங்கத்தவராக திகழ இஸ்லாம் வேண்டுகிறது. அங்ஙனம் ஒரு அங்கத்தவராக திகழ்வதனால் ஏற்படும் பயன் நாம் அனைவரும் தயாராக முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் எல்லா காரியங்களிலும் எல்லா நிலைகளிலும் உதவியாக இருக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. அது அமைதி மற்றும் உடன்படிக்கை நேரங்களானாலும் அல்லது போர் நேரங்களானாலும் அல்லது சுகமான மற்றும் செழுமையான நேரங்களானாலும் அல்லது கடினமான மற்றும் தாங்க முடியாத கஷ்ட நேரங்களானாலும் சரியே!

Read more...
 
மனநிலை பாதிப்பால் வயிற்றுப்போக்கு! Print E-mail
Tuesday, 03 March 2009 16:05

 மனநிலை பாதிப்பால் வயிற்றுப்போக்கு!

     எஸ்.எம். பதூர் முஹ்யித்தீன்       

[ ஒரு இன்பத்தை அனுபவித்து கொண்டு, அந்த இன்பம் கிடைக்காவிட்டால் அதையே நினைத்து நினைத்து மூழ்குகிற போது எதிர்மறையான பின் விளைவுகளை ஏற்படுத்தி விடுகிறது.]

சில நாட்களுக்கு முன்பு 20 வயதுள்ள ஆண்மகனை அழைத்துக் கொண்டு அவனுடைய அம்மா என்னுடைய மருத்துவமனைக்கு வந்தார். நல்ல திடமான தேகம், கல்லூரியில் படிப்பு, விளையாட்டு வீரர்.

பையனுக்கு என்னம்மா? 15 நாளா இவனுக்கு வயிற்றுப் போக்கு இருக்குது. எல்லா வைத்தியமும் செய்தாச்சு. வயிற்றுப் போக்கு நிக்கமாட்டேங்குது டாக்டர்.

வயிற்றுப் போக்கு போகக்கூடாது ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெறணும். குளுக்கோஸ் ஏத்தனும். ஒரு சில டெஸ்ட் எல்லாம் எடுக்கணுமேம்மா!

"இந்தாங்க டாக்டர், ஒரு பெரிய மருத்துவமனைக்கு போய் அட்மிட் பண்ணி குளுக்கோஸ் ஏத்தி எல்லா டெஸ்ட்டும் செய்தாச்சு, விவரம் எல்லாம் இந்த பைலில் இருக்குது வாங்கிப் பார்த்தேன், அனைத்தும் இருந்தன."

Read more...
 
எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் 'கத்னா' Print E-mail
Thursday, 19 April 2012 16:11

    எய்ட்ஸ் அபாயத்தைக் குறைக்கும் 'கத்னா'    

ஆண்கள் கத்னா செய்து கொள்வது எய்ட்ஸ் அபாயத்தை பெருமளவு குறைக்கும் என்று ஆராய்ச்சியில் தெரிய வருவதாக கனடா நாட்டைச் சேர்ந்த இரண்டு மருத்துவ ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றார்கள்.

மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அழித்து உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக் கூடிய ஆட்கொல்லி எய்ட்ஸ் பரவுவதிலிருந்து இவ்வுலகத்தைக் காக்க, ஆண்கள் கத்னா செய்து கொள்வதை இவ்வுலகின் எல்லாப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துவது மிகவும் அவசியம் என்று அந்த நிபுணர்கள் சொன்னதாக கனடா நாட்டைச் சேர்ந்த பிரஸ் நியூஸ் ஏஜென்ஸி என்ற பத்திரிக்கைகளுக்காக செய்திகளை சேகரிக்கும் நிறுவனம், இந்தக் கூடுதல் விபரத்தை தெரிவிக்கிறது.

ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸை அதிக அளவில் தடுக்கலாம் என்று அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டாக்டர் ஃப்ராங்க் பிளம்மர் கண்டுபிடித்துள்ளதாக மத்திய கனடாவின் மனிடோபா பிரதேசத்தின் தலைநகரமான வின்னிபெக்கிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கையிலும் இந்த செய்தி வெளியாகியிருக்கிறது.

அந்த பத்திரிக்கையில் வெளியான செய்தியில், இரண்டு ஆராய்ச்சியாளர்கள் கென்யா நாட்டு நைரோபி பல்கலைக்கழகத்தோடு சேர்ந்து கூட்டு ஆராய்ச்சித் திட்டத்தை நடத்தி எய்ட்ஸ் ரகசியங்களை வெளிக் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நடத்திய இந்த ஆராய்ச்சியையே அவர்களது மேற்கண்ட முடிவுகளுக்கு அடிப்படையாக கொள்கின்றனர்.

Read more...
 
டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்! Print E-mail
Wednesday, 07 November 2012 05:39

டெங்குவுக்கு சூப்பர் மருந்து பப்பாளி இலைகள்!

தற்போது டெங்கு காய்ச்சலால் பாதிப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பொதுவாக இந்த டெங்கு காய்ச்சல் கொசுக்களின் மூலமாக பரவுகிறது. இந்த நோய் வந்தால், கடுமையான காய்ச்சலுடன், உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் அளவு குறைவதோடு, தசை வலி, மூட்டு வலி போன்றவை ஏற்படும். சிலசமயங்களில் இந்த நோயால் மரணம் கூட ஏற்டும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய நோய்க்கு இதுவரை எந்த ஒரு சிறப்பான மருத்துவமும் இல்லை.

பப்பாளி இலைகள் இதற்கு தீர்வாக அமைகிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் தற்போது பப்பாளி இலைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது. ஏனெனில் பப்பாளி இலையின் சாறு, உடலில் உள்ள இரத்த தட்டுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தற்போதைய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதிலும் அந்த ஆய்வை வன இந்திய மேலாண்மை கல்லி நிறுவனம், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்து பேரைக் கொண்டு சோதனையை நடத்தியது. இதில் அவர்களுக்கு பப்பாளி இலையின் சாறு கொடுக்கப்பட்டது. இதனால் பப்பாளி இலையின் சாற்றில் உள்ள சத்துக்கள், அவர்களுக்கு இருந்த டெங்கு காய்ச்சலை முற்றிலும் சரிசெய்துவிட்டது.

Read more...
 
குடல்வால் (Appendicities) நோய் - அதை நீக்கும் எளிய முறை Print E-mail
Saturday, 10 March 2012 21:08

Image result for appendicitis surgery

குடல்வால் (Appendicities) நோய் -அதை நீக்கும் எளிய முறை

சிறுகுடலானது உடம்பின் இரைப்பையிலிருந்து தொடர்கின்றது. இக்குடலுக்குள் நுழையும் உணவானது, மெல்ல மெல்ல தள்ளப்படுகின்றது.

அதாவது கடல் அலையைப் போல், காற்றின் குவிதல், விரிதலால், உணவு தள்ளப்பட்டுச் சென்று, சீரணமாகிச் சத்து உறிஞ்சப்பட்ட பின்னர், சக்கை அல்லது மலம் பெருங்குடலின் மூலமாய் வெளியே கொண்டு போய்ச் சேர்க்கப் படுகின்றது.

அன்றாடம் உட்கொள்ளும் உணவில், நாம் அறியாமல் சேரும், சிறு கற்களும், குடலுக்குள் நுழைந்து, பின் மலத்துடன் வெளிப்பட்டுவிடும்.

Read more...
 
குளிர்ச்சியையும், நறுமணத்தையும் தரும் வெட்டிவேர்! Print E-mail
Saturday, 29 October 2011 06:41

Related image

        குளிர்ச்சியையும் நறுமணத்தையும் தரும் வெட்டிவேர்!         

பூக்களின் வாசனை நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் வேரின் வாசனையினால் வெப்பம் தணிந்து குளுமை ஏற்படும் என்று நம்மில் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு வகை புல் இனத்தை சேர்ந்த வெட்டிவேர் மருத்துவ குணம் நிறைந்தது. நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும்.

வேர் கொத்துக் கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின் புல்லையும் வேரையும் வெட்டி நடுவில் உள்ள துண்டை மீண்டும் புதிதாக நட்டு பயிரிடுவதால் வெட்டி வேர் என வழங்கப்படுகிறது.

   செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்    

இதில் ரெசின், நிறமி, அமிலம், லைம், உப்பு, இரும்பு ஆக்சைடு, எளிதில் ஆவியாகும் எண்ணெய் உள்ளது. இதன் மருத்துவ பயன்கள் ஏராளம்.

Read more...
 
நல்ல தூக்கம் மகிழ்ச்சியும் இருந்தால் மனிதன் மிகவும் இளமையாக இருப்பான் Print E-mail
Thursday, 29 December 2011 07:08

 Image result for good sleeping

நல்ல தூக்கம் மகிழ்ச்சியும் இருந்தால் மனிதன் மிகவும் இளமையாக இருப்பான்

    டாக்டர் ஆ. தாமரைச்செல்வன்      

‘மெத்தைய வாங்கினேன்

தூக்கத்தை வாங்கலை’

என்ற பாடல் நம் காதுகளில் அடிக்கடி ஒலிக்கிறது. இதற்கு அர்த்தம்தான் என்ன?

o தூக்கமின்மைக்கான மூன்று விதமான காரணங்கள்

o தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.

o தூக்கமின்மை மனநிலை காரணமாக

o தூக்கமின்மை நோயின் காரணமாக

o தூக்கமின்மை, தவறான பழக்க வழக்கங்கள், சுகாதாரம் மற்றும் சூழ்நிலை.

o குழந்தைகளுக்கான தூக்கமின்மை ஏற்படக் காரணங்கள்

o வயது வந்தவர்களுக்கு மற்றும் வயதானோருக்கு ஏற்படும் தூக்கமின்மைக்கான காரணங்கள்

o கனவுகளால் தூக்கமின்மை

o படுக்கும் விதம்

Read more...
 
வெட்கமா சமூக பதட்ட கோளாறா? Print E-mail
Sunday, 28 December 2008 08:12

Image result for வெட்கமா சமூக பதட்ட கோளாறா?

          வெட்கமா சமூக பதட்ட கோளாறா?            

குழந்தைகள், சிறுவர்சிறுமியர், மாணவ மாணவியர், பதின்பருவத்தினர் அனைவரையும் குழந்தைகள் என்ற பொதுப்பெயரில் அழைக்கலாம்.

சில குழந்தைகள் பள்ளிக்கூடம் திறக்கும் போது மகிழ்கின்றனர். பல, கோடை விடுமுறை இன்னும் தொடராதா? என ஏங்கி முனுமுனுப்புடன் வகுப்பை தொடங்குகின்றனர்.

பள்ளி சூழலுடன் பழகிக்கொள்ள அதிக நாட்கள் எடுக்கும் பிள்ளைகள் மிகவும் மோசமாக மாட்டிக்கொள்பவர்களான உளவியல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் எவ்வளவு வெட்க உணர்வுள்ளவர்கள் என்றால், அவர்கள் சமூக பதட்டக் கோளாறு என்ற உளவியல் சிக்கலில் மூழ்கியுள்ளார்கள் என்று உளநல மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களிடையே இந்த சமூக பதட்டக் கோளாறு பரவி வருகிறது என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

இயல்பான வெட்கம் மனநோயாக மாறக்கூடும் என்று எண்ணும்போது வியப்பாகவும் குழப்பமாகவும் உள்ளது. இளைஞர் ஒருவர் அமைதியானவராக யாருடனும் பழகாதவராக இருந்தால் உளவியல் மருத்துவர் அவருக்கு சமூக பதட்ட கோளாறு நோய் உள்ளது என்று சிகிச்சைக்கு பரிந்துரை செய்வார்.

அமெரிக்க குழந்தைகளிடம் வெட்கம் எவ்வளவு பரவலாக இருக்கிறது என்றால் 42 விழுக்காடு அமெரிக்க குழந்தைகள் பொதுவாக வெட்கத்தை வெளிக்காட்டுகின்றனர்.

ஆய்வின்படி, இந்த வெட்கக்குணம் வயது கூடக்கூட அதிகமாகிறது.

Read more...
 
நகம் கடிக்கும் பழக்கத்துக்கு விடை கொடுப்போம்! Print E-mail
Monday, 23 February 2009 07:35

நகம் கடிக்கும் பழக்கத்துக்கு விடை கொடுப்போம்!

      டாக்டர். வி.எம். சசிகுமார்       

( நகம் கடிக்கும் பழக்கம் குழந்தை கைகளை அசைக்க கற்றுக் கொள்ளும் போதே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. இந்த நகம் கடிக்கும் மற்றும் விரல் சப்பும் பழக்கங்களை பெருமளவில் ஆண்களை விட பெண்களே கொண்டுள்ளனர்.

இவ்விரண்டு பழக்கங்களுமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளே. இந்த பழக்கம் உடையவர்கள் மிகவும் எளிதில் உணர்ச்சிவசமடையும் மனநிலை கொண்டவர்களாகவே இருப்பர்.)

குழந்தைகளுக்கு சளிப்பிடிப்பதும் மூச்சு விட திணறுவதும் இயல்பான ஒன்றுதான். அதே நேரம் அடிக்கடி இந்த தொல்லைகள் தொடர்ந்தால் முறையான சிகிச்சை மிகவும் அவசியமாகிறது. பொதுவாக சளியுடன் கூடிய தொண்டை வலி பெரும்பாலும் டான்சில் அழற்சியாலேயே உண்டாகிறது.

பலமுறை சரியான மருந்துகளை கொடுத்த பேதிலும் இந்த தொல்லைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும். சில குழந்தைகள் மூக்கால் சுவாசிப்பதைவிட வாய்வழியாக சுவாசிப்பதைப் பழக்கமாக கொண்டிருக்கும். நாம் இதனை பழக்கம் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இதற்கு மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இவை அனைத்தும் அடினாய்டு என்னும் அழற்சி நோய் காரணமாக இருக்கலாம்.

Read more...
 
காய்கறிகளின் பயன்கள் Print E-mail
Saturday, 22 November 2008 07:11

காய்கறிகளின் பயன்கள்

பொதுவாக உடல் ஆரோக்கியதிற்கு காய்கறிகள் மிகவும் அவசியம். அதனால் தான் மருத்துவர்கள் உணவில் அதிக அளவில் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே கண்களைப் பாதுகாக்கும் விஷயங்கள் அடங்கி உள்ளன.

பச்சைக் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சியும், இரும்பு மற்றும் கால்சியம் சத்துகளின் முதன்மை ஆதாரங்களும் அடங்கி உள்ளன. இவை கண்களுக்கு மிகவும் நல்லது.தினமும் எதாவது ஒரு கீரை வகை சேர்ப்பது உடல் நலத்துக்கு ஏற்றது.

சீனாவில் உள்ள மக்கள் 400 வகையான காய்கறிகளை சமைத்து உண்கிறார்கள். மேலும், இயற்கையோடு இயைந்த விளைச்சலில் காய்கறிகளை அறுவடை செய்து உண்கிறார்கள். இதனால் அவர்களது ஆயுள் காலம் அதிகரிக்கிறது.

நாமோ 50 வகைககளுக்கும் குறைவான காய்கறிகளையே சமைத்து உண்கிறோம். அதிலும் பல காய்கறிகள் ஆங்கிலக் காய்கறிகள்... நமது ஆயுள்காலம் பற்றி சொல்லவா வேண்டும்...

Read more...
 
சாப்பிட்ட உடன்... Print E-mail
Sunday, 27 May 2012 05:43

Image result for சாப்பிட்ட உடன்...

     சாப்பிட்ட உடன்...     

சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால், அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதலை விளைவிக்கும்.

சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது, அது கெடுதியானது. காரணம் உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது.

எனவே சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர். ஏனெனில் தேநீர் இழையில் ஆசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு.

Read more...
 
ஜாலியான கணவன் மனைவி Print E-mail
Wednesday, 19 May 2010 09:04
 
ஜாலியான கணவன் மனைவி
 
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.

கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு.

ஜாலியான கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.

''உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும், மக்களையும் ஏற்படுத்தினோம்.'' (அல்குர்ஆன் 13:38)

Read more...
 
கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி? Print E-mail
Tuesday, 18 May 2010 08:38
Image result for கணவன் மனைவி சண்டை

கணவனின் கொடுமைகளை எதிர்கொள்வது எப்படி?

[ மனைவியைக் கொடுமைப்படுத்துவது என்கிற சமூகத் தீமைக்கு இன்னதுதான் காரணம் என்று சுட்டிக்காட்ட முடியாது. சமூகம் வன்முறையை சகித்துக்கொள்வதற்கு பதிலாக அதை முறியடிப்பதில் இறங்கினால்தான் இந்தத் தீமையை ஒழிக்க முடியும். எந்த காரணத்திற்காகவும் யாரையும் சித்திரவதை செய்ய யாருக்கும் உரிமை இல்லை.

பெண்கள் கணவர்களால் தங்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை சகித்துக்கொண்டால் அது குழந்தைகளை பாதிக்கும் என்பதை மறக்கக் கூடாது. இல்லையென்றால் அது இன்னொரு தலைமுறைக்கும் தொற்றிக்கொள்ளும், தொடரும். கோபத்தைக் கையாள்வது எப்படி என்று ஒரு தாய் தன் மகனுக்கும் கற்றுக்கொடுக்க இது ஒரு வாய்ப்பு. கொடுமையைத் தாங்கிக்கொண்டால் பிறகு ஒரு நாள் மகனும் தந்தையைப் போல்தான் நடந்துகொள்வான்.

வரதட்சிணைக் கொடுமை என்றால் கூட போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்க வைக்கலாம். ஒரு கணவன் தன் மனைவியைக் கொடுமைப்படுத்த எத்தனையோ காரணங்கள் இருக்கும். ஆனால் வரதட்சிணைக் கொடுமைக்குத்தான் போலீஸ் முக்கியத்துவம் கொடுக்கிறது. 'சாதா' கொடுமைகளை குடும்ப விவகாரம், அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளவேண்டிய விஷயம் என்று அலட்சியப்படுத்துகிறது.

ஒரு பெண் முதலில் தான் ஒரு தனிநபர், பிறகுதான் ஒரு மனைவி, தாய் என்பதை மறந்துவிடக் கூடாது. கணவன் கொடுமைப் படுத்துகிறான் என்றால் அதை எப்படிக் கையாளுவது என்பது பற்றி அவள்தான் முடிவு செய்ய வேண்டும். சித்திரவதை செய்யப்படும் பெண்கள் தன்னைப் பற்றி உயர்வான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவேண்டும்.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 78 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article