Thursday, 22 January 2015 09:05 |

வேலியே பயிரை மேயும் விந்தை!
''ரபீ உல் ஆகிர் மாதத்தில் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பெயரால் மவ்லூதுகள் ஓதப்பட்டு வருகின்றன. இதில் வரம்பு மீறிய ஏராளமான ஷிர்க்கான வார்த்தைகள் உள்ளன என்பது தெரிந்தும், சில மதரஸா மாணவர்களும், ஆலிம்களும் பிடிவாதமாக மவ்லூதுகள் ஓதிவருவது ''வேலியே பயிரை மேயும் விந்தை'' போன்றுள்ளது
முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''ஏகத்துவ முழக்கம்'' அவர்கள் பார்வைக்கு...
o அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுபவனே! நீ அறிவுடையவனல்ல. அல்லாஹ்வின் பொக்கிஷத்தில் இல்லாதது எதுவுமில்லை.
o மற்ற எவரையும் விட உனக்கு மிக அருகில் இருக்கும் அல்லாஹ்விடம் கேட்காமல் மற்றவர்களிடம் கேட்கிறாயே! உனக்கு வெட்கமாக இல்லையா?"
o உனக்கு ஏதும் துன்பம் ஏற்பட்டுவிட்டால் அல்லாஹ்வை தவிர வேறு எவரும் அகற்ற முடியாது. எனவே, உனது துன்பத்தை அல்லாஹ் அல்லாதவர்களிடம் முறையிடாதே.
|
Read more...
|
Thursday, 25 August 2011 11:06 |

ஏ.பி.எம். இத்ரீஸ்
[ இன்றைய தொழில் நுட்பத்தின் அதிகாரத்தை புரிந்து கொள்வது பற்றி அறிஞர்கள் கூறும் கருத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கருத்தும் ஒத்துச் செல்வதைக் காணலாம். பொருட்களை நோக்கிய விடுபடலே அக்கருத்தாகும். தேவையான அளவுக்கு நுகரும்போதே ஆரோக்கியமான மகிழ்வான வாழ்வு கிட்டும். பொருட்கள் மீதான அதீத மோகமும் நுகர்வு வெறியும் அழிவையே தேடித்தரும் என்பதற்கு பாலைவனச்சூழலில் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உதாரணம் காட்டுகின்றார்கள்.
பொதுவாக உலக வாழ்வு குறித்தும் குறிப்பாக அதிகரித்த செல்வமும் தொழில்நுட்பமும் உருவாக்கும் சொகுசு வாழ்வும் குறித்து மற்றொரு சிந்தனையில் நபிகள் முன்வைக்கின்றார்கள். அதாவது நவீன தொழில் நுட்பத்திலும் சிதறடிக்கும் தன்மை காணப்படுகின்றது. ஒருங்கு சேரும் மக்களை சிதறடித்து தனியன்களாக உருமாற்றும் பணியை இன்றைய தொழில்நுட்பம் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறது. பெருங்கலாச்சார நடவடிக்கைகள் சிறுகலச்சார நடவடிக்கைகளை ஓரங்கட்டி விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.
செல்வம் குவிந்து நுகர்வு வெறி மேலோங்கும் போது என்ன செய்வது என சில தோழர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்ட கேள்விக்கு கவினுறு வனாந்தரங்களில் ஆடுகளுடன் அலைந்து திரிதல், ஆட்டுப் பாலை அருந்துதல், மரத்தடிகளில் வாழுதல், கனவாய்கள், பல்லத்தாக்குகளை நோக்கிச் செல்லுதல், நாடேடி வாழ்வு, பரதேசித் தன்மை பற்றியெல்லாம் நபிகள் சிலாகித்துப் பேசியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இன்றைய செல்போன் உலகின் சிதறுதல்களுக்கும் தொழில்நுட்ப உலகில் எல்லாவற்றையும் காத்திருக்கும் சேமப்படையாக மாற்றும் செயலுக்கும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இவ்வாலோசனைகள் எதிராக, எதிர் இயக்கமாக எதிர் வாழ்வு முறையாக அமையக்கூடும். இன்றைய ஜிப்சி வாழ்க்கையோடு இதனை ஒப்பிட்டு நோக்க முடியும்.]
|
Read more...
|
Wednesday, 15 December 2010 08:21 |

குழந்தைகளின் குணாதிசியங்களைத் தெரிந்து கொள்ள வேண்டியது ஒவ்வொரு பெற்றோரின் கட்டாயக் கடமை. அவ்வாறு புரிந்து கொண்டால்தான் நல்ல வாரிசுகளாக அவர்களை வளர்க்க - வார்த்தெடுக்க முடியும்.
குழந்தைகள் என்றாலே குதூகலம் தான். ஆனால் அவர்களை வளர்த்து ஆளாக்குவது அத்தனை சுலபமல்ல. குழந்தைகள் வளர்ச்சி என்பது தொடர்ச்சியான பல்வேறு செயல்களை கொண்டது. அவர்கள் குறிப்பிட்ட வயதில் குறிப்பிட்ட செயல்களைச் செய்ய வேண்டும். இவைகளைத்தான் வளர்ச்சி படிநிலைகள் என்கிறோம்.
குழந்தை அந்தந்த வயதுக்கேற்ற செயல்களைச் செய்தால்தான், சரியான வளர்ச்சி பெறுகிறது என்று அர்த்தம். ஆனாலும் ஒரு குழந்தை வளரும் விதத்திலேயே மற்ற குழந்தையும் வளர வேண்டும் என்பது அவசியமில்லை. இதை பெற்றோர் உணர வேண்டும்.
o பக்கத்து வீட்டு குழந்தை செய்வதை எல்லாம் நம்முடைய குழந்தையும் செய்ய வேண்டும் என்று பெற்றோர் எதிர்பார்பதும், புலம்புவதும் தேவையற்றது. குழந்தைகள் எந்தெந்த வயதுகளில் என்னென்ன செய்யும் என்பதை அறிந்து கொண்டால்தான் அதன்படி குழந்தைகளின் செயல்பாடுகளை கவனிக்க முடியும்.
பெற்றோர் கண்காணிக்க வேண்டிய குழந்தைகளின் வளர்ச்சி நிலைகள் நிறையவே உள்ளன. பிறந்த குழந்தையானது, 2 மாதங்களில் சிரிக்கத் தொடங்கும். 4 மாதங்களில் கழுத்து தலைசுமக்கும்படி உறுதியாகும். 8 மாதங்களில் குழந்தை எவ்வித உதவியுமின்றி சுயமாக உட்காரும், 12 மாதங்களில் எழுந்து நிற்கும்.
|
Read more...
|
Saturday, 11 September 2010 12:03 |

[ பெரும்பாலும் நான் அழகாக இல்லை, குட்டையாக இருக்கிறேன், தலைமுடி நீளமாக இல்லை, பற்கள் வரிசையாக இல்லாமல் துருத்திக் கொண்டு இருக்கின்றன, குண்டாக இருக்கிறேன், முகப்பருக்கள் அதிகமாக உள்ளன போன்ற பிரச்சினைகளே அவர்களை கவலையடையச் செய்கின்றன.
நாளாக நாளாக கவலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதனால் தங்களைப் பற்றிய தாழ்ந்த சுயமதிப்பீட்டிற்கு ஆளாகிறார்கள். விளைவு? படிப்பில் நாட்டம் குறைந்து, தனிமையை விரும்பி மற்றவர்களிடம் இருந்து விலகத் தொடங்குகிறார்கள்.
இவ்வாறு பெண்கள் தனிமையை நாடத் தொடங்கினாலே, அவர்கள் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பதை நீங்கள் உணர வேண்டும் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.]
இந்த உலகில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் பல பிரச்சினைகள் உள்ளன. பெரியவர்கள்-சிறியவர்கள், பெண்கள்-ஆண்கள், திருமணம் ஆனவர்கள் - ஆகாதவர்கள், ஏழைகள் - பணக்காரர்கள், படித்தவர்கள் - படிக்காதவர்கள், வேலைக்கு செல்பவர்கள் -சுயதொழில் செய்பவர்கள் என எல்லோரையும் இந்த பிரச்சினை என்னும் பெரும்பூதம் விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது.
இதில் பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே! அதிலும் குறிப்பாக விடலைப்பருவம் என்று சொல்லக்கூடிய பருவ வயதுகளில் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் சொல்லி மாளாதவை.
|
Read more...
|
Friday, 03 September 2010 15:45 |

புறக்கணிக்கப்பட்ட ஸலாம்!
அன்வர்தீன்
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (ஸலாம்) கூறுதல் ஆகும்.
இன்றைய காலக் கட்டங்களில், நம்மிடையே ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சலாம் கூறுதல் என்பது மிக அரிதாகிவிட்டது. அப்படியே சொன்னாலும் தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு பார்த்து சலாம் கூறி வருகிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவருக்கும் ஸலாம் கூறுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்கள்.
ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘இஸ்லாமி(யப் பண்புகளி)ல் மிகவும் சிறந்தது எது?’ என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(பசித்தவருக்கு) உணவளிப்பதும், உமக்கு அறிமுகமானவருக்கும் உமக்கு அறிமுகமற்றவருக்கும் ஸலாம் சொல்வதுமாகும்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: ஸஹீஹூல் புகாரி, பாகம் 6, அத்தியாயம் 79, எண் 6236)
|
Read more...
|
Thursday, 24 June 2010 07:20 |

இஸ்லாத்தின் பார்வையில் சிறந்தவைகள்!
o நற்செயல்களில் சிறந்தது
o உலகத்தைவிட சிறந்தது
o இறைவனிடத்தில் சிறந்தது
o சகுனத்தில் சிறந்தது
o தர்மத்தில் சிறந்தது
o செல்வத்தில் சிறந்தது
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே; அவனது சாந்தியும்-சமாதானமும் அகிலத்திற்கோர் அருட்கொடையாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், அவர்களை பின்பற்றி வாழ்ந்த, வாழுகின்ற அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் செயல்களில் எவை அனுமதிக்கப்பட்டவை என்பதையும் எவைகள் அனுமதிக்கப்படாதவை என்பதையும் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளனர். அதே நேரத்தில் நமது வாழ்வின் செயல்கள் மற்றும் நமது அமல்களில் எவைகள் சிறந்தவை என்பதையும், இன்னும் இஸ்லாம் எவைகளை சிறந்தவை என்று கூறுகிறது என்பதில் சிலவற்றை பார்க்கவிருக்கிறோம்.
|
Read more...
|
Friday, 23 April 2010 10:41 |

குழந்தைகளைக் கொஞ்சுவோம்
உனது குழந்தையின் பூ முகத்தில் நீ பதிக்கின்ற முத்தங்கள் இறைவனின் அருளைப் பெற்றுத் தரும்.
[ இன்றுகுழந்தைகளுக்கு உயர்தரமான உணவு, உறைவிடம், வாகனங்கள் என்று எல்லாவித வசதிகளும் தாராளமாகக் கிடைக்கின்றன. ஆனால் அந்தக் குழந்தைகளுக்குத் தேவையான தாயின் அன்பு அரவணைப்பு, தந்தையின் பாசப் பிணைப்பு கிடைக்காமல் விரக்தியாக, மனித சடலங்களாக வளர்கின்றனர். உலகத்தை வெறுத்து, வெறித்துக் பார்க்கின்றனர். இந்த வெறுமை அக்குழந்தைகளை ஒரு கால கட்டத்தில் தடம் புரள வைத்து விடுகின்றது.
ஒரு குழந்தை அரை மணி நேரம் குடிக்கும் தாய்ப்பால் அதன் ஆயுள் முழுமைக்கும் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கின்றது என்று மருத்துவம் கூறுகின்றது. இந்தத் தாய் அதையெல்லாம் கண்டு கொள்ளாது காலா காலம் நோயில் சிக்கித் தவிக்க வழி வகுக்கின்றாள். இது மனிதப் பண்பா? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எனவே தாய்மார்கள் இதைக் கவனத்தில் கொண்டு தங்கள் குழந்தைகள் மீது உண்மையான பாசத்தைக் காட்ட வேண்டும். பாலூட்ட வேண்டும்.
தொழுகை, தஸ்பீஹ், திக்ர், நோன்பு ஆகிய வணக்கங்கள் மூலம் மட்டுமே அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்ற எண்ணத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தகர்த்தெறிகின்றார்கள். அதனால் தான் தொழுகை என்பது அல்லாஹ்வின் முன்னிலையில் நாம் நடத்துகின்ற உரையாடல் என்றிருப்பினும் குழந்தையின் அழுகைக் குரல் காதில் விழுந்து விட்டால் அதை அப்படியே சுருக்கி விட்டிருக்கின்றார்கள்.]
|
Read more...
|
Thursday, 28 January 2010 12:05 |

இஸ்லாம் - ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் ஒரே மார்க்கம்!
உலக மதங்களிலுள்ள வேத புத்தகங்களின் அடிப்படையிலும், தத்துவங்களின் அடிப்படையிலும் பண்டைய காலந்தொட்டே பெண்கள் சமூகத்தில் இழிவானவர்களாகக் கருதப்பட்டு வந்தனர்.
பெண்களுக்கு ஆண்மா உண்டா இல்லையா என திருச்சபைகள் ஆய்வு செய்த போது!
o கணவன் இறந்தால் மனைவிகள் உயிர் வாழ தகுதியற்றவர்கள் என அவர்களை கனவனின் உடலோடு சேர்த்து எரித்த போது!
o பெண் குழந்தை பிறந்தால் அது துரதிருஷ்டம் என்றும் தங்களுக்கு இழுக்கு என்றும் அவர்களை உயிருடன் புதைத்து வந்த போது! (இன்றளவும் இது சிலரிடையே தொடர்கிறது)
o உலகின் வீழ்ச்சிக்கு பெண்கள்தான் மூல காரணம் என கிரேக்க தத்துவம் கூறிய போது!
o பெண்களுக்கு சொத்துரிமை இல்லை! ஆண் வாரிசு இல்லையென்றால் மட்டுமே பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என சில வேத வசனம் கூறுகின்ற போது! (எண்ணாகமம் 27:8)
o மனிதனின் முதல் பாவத்திற்கு காரணம் பெண்ணே எனவும் அதனால் பெண்கள் கடவுளால் சபிக்கப்பட்டவர்கள் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (ஆதியாகமம் 3:16)
o பெற்றோர்களே தங்களின் புதல்விகளை அடிமைகளாக விற்கலாம் என சில வேத வசனம் கூறுகின்ற போது! (யாத்திராகமம் 21:7-8)
|
Read more...
|
Sunday, 17 October 2010 09:45 |

''வானம் இடிந்து விழலாம்; பூமி வெடிக்கலாம்; ஆனால் – அல்லாஹ்வின் வாக்குறுதி என்றுமே பொய்யாவதில்லை!''
தலைவர் காயிதே மில்லத் அவர்கள் உடல்நலக் குறைவாக இருந்தும் கூட அலிகர் முஸ்லிம்களின் ஆவலை நிறைவேற்றுவதற்காக 5.5.1970ம் தேதி இரவு 11 மணியளவில் டில்லியிலிருந்து கார் மூலம் அலிகர் போய்ச் சேர்ந்தார்கள். கூட்டம் நள்ளிரவு ஒன்றரை மணிவரை நடந்தது தலைவர் அவர்களின் கருத்துச் செறிந்த சொற்பொழிவைக் கேட்ட மக்கள் ஆனந்தக் களிப்போடு "அல்லஹு அக்பர்" என விண்ணதிர முழங்கினர் அப்பொதுக் கூட்டத்தில் தலைவர் அவர்கள் பேசும்பொழுது கூறியதாவது
நாம் முஸ்லிம்களென்று நம்மைக் கூறிக்கொள்வதற்கு காரணம் நாம் இறைவனுடைய அடியார்களாக அவனது வேத கட்டளைகளுக்கு அடிபணிந்து நடப்பதுதான் நமக்கென்று தனி கலை கலாச்சாரம் ஆகிய வற்றைப் பேணிக் காத்து வருவதுதான்!
|
Read more...
|
Friday, 17 December 2010 06:25 |

அரபு மன்னர்களும் ஈரானும் - தொடரும் துரோகம்
BNU FATHIMA
[அம்பலப்படுத்தப்பட்டுள்ள விக்கிலீக்ஸின் கேபிளில் ஒன்று கூட சவூதி அரேபியா இஸ்ரேலுக்கு எதிராக போர் தொடுக்க முனைந்ததாகவோ குறைந்த பட்சம் பலஸ்தீன் நாடு உருவாக இஸ்ரேலுக்கு அமெரிக்கா மூலம் அழுத்தம் கொடுக்க முனைந்ததாகவே சொல்லவில்லை.
சவூதியின் பொருளாதாரம் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு உதவுகிறது என்பதற்கு உதாரணமாய் சமீபத்தில் அமெரிக்காவிடமிருந்து 60 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேலாக சவூதி ஆயுதங்கள் வாங்கியதை குறிப்பிடலாம். தற்போதைய சூழலுக்கு அவர்கள் அதை பயனபடுத்த போவதில்லை என்ற போதிலும் அவர்கள் வாங்குவதில் ஆர்வமாய் உள்ளனர்.
அரசின் அடிவருடிகளாக உள்ள சில அறிஞர்களோ ஷியா ஈரான் சுன்னி இஸ்லாத்திற்கு எதிரானது என்று கூறி யூத இஸ்ரேலுடன் கை கோர்த்தாவது ஈரானை அழிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் பாவம் அமெரிக்காவுக்கு எதிரான இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு தலைமேயேற்க சவூதி வலுக்கட்டாயமாக மறுப்பதால் தான் அவ்வெற்றிடத்தை ஈரான் நிரப்புகிறது என்பதை மறந்து விட்டனர்.
தன் நிதி மற்றும் புனித தலங்களின் காப்பாளர் எனும் அடிப்படையில் வெகு எளிதாக முஸ்லீம் நாடுகளை ஒன்றிணைத்து பலஸ்தீனை மீட்டெடுக்க சவூதியால் முடியும். ஆனால் அதன் பொருளாதரம் கூட முஸ்லீம் நாடுகளுக்கு பயன்படுவதை விட சரிந்து கிடக்கும் அமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி பிடிக்க தான் உதவுகிறது என்பது தான் யதார்த்தம்.
முஸ்லீம்களின் வீழ்ச்சியின் வரலாறு உதுமானிய கிலாபத்தின் மறைவிலிருந்து தொடங்குகிறது. இன்று முஸ்லீம் நாடுகளை வழி நடத்தும் தலைமை பொறுப்புக்கு ஈரான் முனைகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் சவூதி அரேபியா ஒட்டு மொத்த முஸ்லீம் உலகுக்கும் குறிப்பாக அரபுலகத்திற்கும் செயத தவறுகளே என உறுதிபட கூற முடியும்.]
|
Read more...
|
Monday, 22 March 2010 07:22 |

நல்ல மனைவி அமைய....
[ அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என அங்கலாய்க்கின்றோம். மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா?
''...அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
|
Read more...
|
Saturday, 27 March 2010 07:22 |

ரசிக்கும் உரிமை கணவனுக்கே
ஃபாத்திமா ஜொஹ்ரா
[ பெண்கள் ஆண்களை விடக் கூடுதலான பாகங்களை மறைக்க வேண்டும் என்பதை தங்களது நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். மறைக்கும் அளவு எது என்பதில் தான் நமக்கும் அவர்களுக்குமிடையே கருத்து வேறுபாடு. சரி நிகர் சமானம் என்பதிலோ, பெண்களின் சுதந்திரம் என்பதிலோ அல்ல.
ஒழுக்க வாழ்வில், மிகவும் மோசமாக உலகம் பின்னடைந்திருப்பதற்கு முதற் காரணம் பெண்களின் அரைகுறை ஆடைகளும், ஆண்களைச் சுண்டி இழுக்கும் அலங்காரங்களுமே.
ஒரு ஆண் குறைவான ஆடையுடன் இருந்தாலும் அவனுக்குப் பாதிப்பில்லை. ஆனால் அரைகுறையான, கிளர்ச்சியூட்டக் கூடிய ஆடையை அணிந்திருக்கும் ஒரு பெண்ணுக்கு அவளது அரைகுறை ஆடையால் தூண்டப்பட்ட ஆண்களால் பாதிப்புண்டு என்பதில் ஐயமில்லை.
பெண்களை அதிகப்படியான ஆடையணிவித்து மூடி வைப்பது அவர்களின் சுதந்திரத்திலும் உரிமையிலும் குறுக்கிடுவதாகும் என்று முழங்கும் இவர்கள் ஆபாசப் போஸ்டர்களைக் கிழிப்பதும் கண்டிப்பதும் ஏன்?
அடுத்தவர் பார்த்து ரசிக்க வேண்டும் என்ற வக்கிர எண்ணத்திற்கு சுதந்திரம் எனப் பெயர் சூட்டுவதை ஒப்புக்கொள்ள முடியாது.]
|
Read more...
|
Tuesday, 04 May 2010 09:26 |

கணவன் மனைவி உறவும் பிள்ளை வளர்ப்பும்
கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க முடியும்.
சில வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.
சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.
மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,''நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு'' எனக்கு சொல்லணும். சொன்னாநான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு. இப்படிப்பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும். மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.
பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.
''அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு'' சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்டபிள்ளையல்ல''.
|
Read more...
|
Thursday, 26 February 2009 07:34 |

கணவன் மனைவி புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள்
An Excellent & An Useful Article
ரெஹனா பானு மாஸ்கோ
திருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை ஜாலியாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்தான் விரும்புவார்கள். ஆனால் பல்வேறு காரணங்களால் பல தம்பதியர்களின் வாழ்க்கை ஜாலியாக அமைவதில்லை. முக்கியமாக புரிந்துணர்வில் ஏற்படும் கோளாறுகள் இதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது.
கட்டிலுக்கு கணவன் மனைவியாக இருந்து, விடிந்ததும் நீயா, நானா என்று மோதிக் கொள்பவர்கள் அல்லது நீ யாரோ, நான் யாரோ என்று கண்டுக் கொள்ளாமல் இருப்பவர்கள் என்று கணவன் மனைவிகள் என்ற அந்த உன்னத உறவுக்குள் போலியாக வாழ்பவர்களும் உண்டு. ஜாலி கணவன் மனைவியாக வாழ்க்கை சிறக்க இஸ்லாம் வழிகாட்டுகின்றது. அதுவே இந்தக் கட்டுரை.
திருமணம் செய்து சந்தோஷத்தை தொலைப்பதை விட திருமணம் செய்யாமலே இருந்து விடலாம் என்ற எண்ணம் கூட சிலருக்கு வருகின்றது. அதற்கு அனுமதியில்லை.
|
Read more...
|
Saturday, 13 March 2010 08:28 |

ஆண் பெண் இருவரும் மல்யுத்த வீரர்களாய் நின்றால் வாழ்க்கை குத்துப்பட்டே செத்துப்போகும். வீரத்தால் சாதிப்பது எதுவும் நிலைக்காது. அன்பால் சாதிப்பது மட்டுமே என்றென்றும் தொடரும்.
ஆண் பெண்ணைச் சார்ந்து இருத்தலும் பெண் ஆணைச் சார்ந்து இருத்தலுமே இல்லறம். சார்ந்திருப்பதே காதல். சார்ந்திருத்தலே தாய் பிள்ளை பாசம். சார்ந்திருத்தலே உலக உறவுகளின் ஆணிவேர். சார்ந்திருப்பது அடிமைத்தனமல்ல தூய்மையான அன்பு.
தன் வலிமையையெல்லாம் மீறி நான் உன்னைச் சார்ந்திருக்கிறேன் என்று சொல்லுமிடத்து வெள்ளைக்கொடி பறக்குமே!தொட்டதற்கெல்லாம் நீ உயர்வா நான் உயர்வா? என்று வீரம் பேசினால் வாழ்க்கை வாடி வதங்கி விடும்.
கல்யாண வாழ்க்கையைப் பற்றி சிலர் என்ன நினைக்கிறார்கள்;
காரில் தன் மனைவியுடன் வந்திறங்கும் ஒருவன் ஓடிப்போய் தன் மனைவிக்காக கார் கதவை பவ்யமாகத் திறக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்படியென்றால் ஒன்று, அவள் மனைவி புதுசு என்று அர்த்தமாம் அல்லது அவன் கார் புதுசு என்று அர்த்தமாம்.
|
Read more...
|
Monday, 31 May 2010 07:37 |

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.
''அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.'' (அல்குர்ஆன் 69:44)
''அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், 'இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்' என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்' என்று (நபியே!) நீர் கூறுவீராக!" (அல்குர்ஆன் 10:15)
|
Read more...
|
Monday, 15 November 2010 10:22 |

திருக்குர்ஆனும் மனிதனும்
‘மனிதன் சுதந்திரமுள்ளவன், பொறுப்புள்ளவன்,
நன்மை தீமைகளை பிரித்தறியும் ஆற்றல் உள்ளவன்,
இறைவனுடைய சட்டங்களுக்க கீழ்படியும் இயல்புள்ளவன்.
அவன் செய்த பாவங்களுக்காக பிறர் பிணை நிற்க வேண்டிய அவசியமில்லை.
அவனது குற்றங்களுக்காகவும், பாவங்களக்காகவும் அவனே மன்னிப்புக் கேட்க வேண்டும்.
அருளும், அன்பும், இரக்கமும் நிறைந்த இறைவன் அவனுடைய பாவங்களை மன்னிப்பான்’ என்கிறது திருக்குர்ஆன்.
‘ஒவ்வொரு குழந்தையும் இறைவனுக்கு கீழ்படியும் சட்டத்திற்குட்பட்டு, அதாவது முஸ்லீமாகவே பிறக்கின்றது’ என்று நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
அவ்வாறு தூய்மையாகப் பிறந்த குழந்தை, பிறகு, சூழ்நிலையின் காரணமாக மாறுபட்டு விடுகின்றது. குழந்தை மனிதனாக வளர்கின்றது. அந்த மனிதன் இறைவனால் அவனுக்கு அருளப்பட்ட பகுத்தறிவைப் பயன்படுத்துகின்றான். நல்லவனாகவோ கெட்டவனாகவோ ஆகின்றான்.
அவன் தீமை செய்தால் வருந்தி பாவமன்னிப்புத் தேடுவதற்காக இறைவன் அவனுக்கு நீண்ட அவகாசம் அளிக்கின்றான். எனவே, ஆன்மீகத்துறையில் முன்னேற்றம் அடைவதும், அடையாததும் மனிதன் கையில் இருக்கிறது.
|
Read more...
|
Tuesday, 19 January 2010 13:16 |

''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் (1)
மவ்லானா M.அப்துல் வஹ்ஹாப் M.A., B.Th., ரஹ்மதுல்லாஹி அலைஹி
''உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம். ''குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை. நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்டிச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)'' என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்'' என்று அல்லாமா முஹம்மது இக்பால் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறியிருக்கிறார்.
மனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி செய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது. இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேடவேண்டும், அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும். நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், ''இறைவா எனக்கு அறிவை வளப்படுத்து,'' என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
|
Read more...
|
Tuesday, 13 July 2010 14:58 |

அல்குர்ஆனை அதிகமாக ஓதுவோம்
அல்குர்ஆனை அதிகமாக ஓதவேண்டும். மேலும் அதனை பொருளுணர்ந்து படித்து அதன்படி செயல்பட வேண்டும்.
( يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ اقْرَأْ وَارْتَقِ وَرَتِّلْ كَمَا كُنْتَ تُرَتِّلُ فِي الدُّنْيَا فَإِنَّ مَنْزِلَتَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَأُ بِهَا )
நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின்அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ2838, அபூதாவூத், அஹ்மத்)
( الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ وَهُوَ عَلَيْهِ شَاقٌّ لَهُ أَجْرَانِ )
அல்குர்ஆனை பொருளுணர்ந்து ஓதுபவர் தூய்மையான, கண்ணியமிக்க மலக்குகளுடன் இருப்பார். அல்குர்ஆனைத் திக்கித்திக்கி கஷ்டப்பட்டு ஓதுபவருக்கு இரண்டு -மடங்கு- கூலியுண்டு என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூற்கள் : புகாரீ, முஸ்லிம் 1329)
|
Read more...
|
Thursday, 14 October 2010 12:07 |

அல்லாஹ்வை நினைவு கூறும் வழிமுறைகள்
ஒரு நம்பிக்கையாளர் தன் இலக்கான சுவனத்தை அடைவதற்கு இறைவனை நினைவு கூறுபவராக இருத்தல் அவசியம். அதிலும் ரமலானை அடைய இருக்கும் இந்நேரத்தில் எவ்வாறு நம் அன்றாட வாழ்வில் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறை நினைவுடனும் இருப்பது என்பது குறித்து பார்ப்போம்.
நமது தனிப்பட்ட வாழ்க்கை, அலுவலக வாழ்க்கை, குடும்ப வாழ்க்கை, சமூக வாழ்க்கை ஆகிய அனைத்தும் எவ்வித பாதிப்புமில்லாமல் அதே சமயம் இறைவனை எந்நேரமும் நினைவு கூறக் கூடியவர்களாகவும் இருப்பது கடினமானதாக தோற்றமளிக்கலாம். ஆனால் அது எளிமையாக இருக்க வேண்டுமானால் கீழ்காணும் நான்கை நாம் முறையாக கடைபிடித்தால் இவ்வுலகும் மறுவுலக வாழ்வும் சிறப்பாக அமையும் என்பது எனது நம்பிக்கை. முயன்று தான் பார்ப்போமே!
|
Read more...
|
|
|