வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

பெருமை வேண்டாம்! Print E-mail
Tuesday, 16 September 2008 13:39

 

பெருமை வேண்டாம்!

"பெருமை எனது மேலாடையாகும். வல்லமை எனது கீழாடையாகும். இதில் எதாவதொன்றில் எவனாவது என்னோடு போட்டியிட்டால், அவனை நரகத்தில் வீசுவேன" என்று அல்லாஹ் கூறுவதாக நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்க்ள கூறினார்கள். (ராவி: அபூ ஹ¤ரைரா ரளியல்லாஹ¤ அன்ஹ¤, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத்)

இது நன்கு கவனித்து மனதில் நிறுத்த வேண்டிய படிப்பினைக்குரிய ஹதீஸாகும். எந்த செயலால் நரகத்தில் தூக்கி வீசப்படும் நிலை ஏற்படுமோ, அந்த விஷயம் இன்று சர்வதேச அளவில் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு மாநிலத்திலும், மாவட்டத்திலும், தாலுகா, ஊர், தெரு, வீடு என்ற உலகம் தழுவி வியாபித்து நிற்கின்றன.

பிறப்பால், இறப்பால், நிறத்தால், செல்வத்தால், கல்வியால் பெருமையடிக்கும் மக்களை சர்வ சாதாரணமாக எங்கும் காண்கிறோம். தாம் கொண்ட பெருமையால் சமுதாயத்தில் ஏற்படக் கூடிய பாதக விளைகள் என்ன? அது நம்மைப் போன்ற சக மனிதர்களிடம் எத்தனைப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதையெல்லாம் எண்ணிப் பார்க்காமல் பெருமையடிப்பதால் கடும் விளைவுகளை உலகம் சந்தித்துள்ளது.

Read more...
 
பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்! Print E-mail
Monday, 11 October 2010 07:33

flower cute bear love rose romance romantic friendship pink toy teddy bear affection relationship stuffed animal greeting card emotion teddy feelings valentine's day stuffed toy

பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்!

நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்ரஹ்மதுல்லாஹி அலைஹிகூறினார்;

ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா, 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

Read more...
 
நற்குணங்கள் தடுமாறிப் போனதேன்? Print E-mail
Saturday, 08 February 2014 07:04

நற்குணங்கள் தடுமாறிப் போனதேன்?

M.ஜமீலா B.A (Arabic), அஸ்மா அரபி கல்லூரி, ஏர்வாடி

இஸ்லாம் இறைவனை மட்டும் வணங்கி அவனை மட்டுமே சார்ந்து இருக்க சொல்லவில்லை தன் குணங்களையும் நற்குணங்களால் அழகாக்கிகொள்ளக் கட்டளையிருகிறது.

''உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதனைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.'' (அல்குர்ஆன் 67:2) என்று இறைவன் கூறுகிறான்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் “நற்குணங்களை முழுமைப்படுத்துவதற்காகவே இறைவனிடமிருந்து அனுப்பப்பட்டுள்ளேன்” என்றார்கள் (ஆதாரம்: முஅத்தா)

உண்மை நிலைத்து நிற்பதற்காக அவர்கள் பல்வேறு துயரங்களிலும் தன் நற்குணங்களை விடவில்லை தன் தோழர்கள் தவறு செய்தால் கூட அவர்களை கண்ணியமான வார்த்தைகளான (என் தாயும் தந்தையும் உனக்கு அர்ப்பணம் ஆகட்டும் இறைவன் உனக்கு அருள் புரியட்டும்) போன்றவற்றைக் கொண்டே தன் நாவைப் பயன்படுத்தியுள்ளார்கள்.

இன்று யாராவது தவறு செய்தால் என்ன சொல்கிறோம் என்று யோசிக்காமல் தீயவார்த்தைகளுக்கு தன் நாவை பயன்படுத்தி திட்டுகிறோம்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது வாய்மூடி மவுனமாயிருங்கள்”. (ஆதாரம்-புகாரி)

Read more...
 
உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! Print E-mail
Saturday, 12 December 2009 08:27

உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்!

ஒரு குழந்தைக்கு, தன்னைப் பற்றிய அபிப்ராயமும், தன் தகுதிகள் குறித்த அறிமுகமும் பெற்றோர்களின் பாராட்டிலிருந்தோ வசவில் இருந்தோ பிறக்கிறது. சின்னத்தவறொன்றுக்கு ''அட மக்குப் பயலே!'' என்று தலையில் குட்டு வாங்கும்போது குட்டு, தலையில் பதிகிறது. தான் ஒரு மக்கு என்கிற எண்ணம் மூளையில் பதிகிறது.

அக்கறையாலும் அன்பாலும், குழந்தை திருந்த வேண்டும் என்ற தவிப்பிலும்தான் எல்லாப் பெற்றோரும் கண்டிக்கிறோம். ஆனால் குழந்தைகள் மனதில் என்ன பதிவை விடுகிறோம் என்பதுதான் முக்கியம்.

உங்கள் குழந்தை சராசரியாகப் படிக்கிறதா?

இன்னும் படுக்கையை நனைக்கிறதா?

சொன்னதைக் கேட்க மறுக்கிறதா?

சொல்வது காதில் விழுவதேயில்லையா?

விருந்தினர் வந்தால் எழுந்து உள்ளே போய் விடுகிறதா?

சகஜ பாவமில்லாமல் சங்கோஜமாய் வளர்கிறதா?

இத்தனை இருந்தாலும்... நம்புங்கள்! உங்கள் குழந்தையும் சாதிக்கும்.

Read more...
 
"அந்த" பசிக்கு ஏன் மூன்றாவது நபர்? Print E-mail
Wednesday, 06 July 2011 14:43

 "அந்த" பசிக்கு ஏன் மூன்றாவது நபர்?  

why do you looking third person for ''that'' matter?

குடும்பங்கள் தொடர்பாக பிரச்சினைகளை ஆய்வுசெய்கின்ற போது ஆய்வாளர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கக்கூடிய, அதிக சிக்கல்களை தரக்கூடிய ஒரு பிரச்சினைதான் தன் கணவர் or மனைவி இருக்கும் போது பிற பெண்ணை or ஆணை தேடுவதும் தொடுவதுமாகும்.

ஒரு கணவன் ஒரு பெண்ணை தனது மனைவியாக ஏற்று வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கும் போது அந்த கணவன் தனது "அந்த" இல்லற உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேறு ஒரு பெண்ணை அல்லது வேறு ஒரு தடுக்கப்பட்ட முறையை நாடுகிறான், து நமது சமூகத்தில் ஒரு தொட்டுநோயாக பரவி சமூக சீரழிவுக்கு வித்திட்டிருக்கிறது.

உண்மையில் எமது சமுகத்தில் இந்தத் தொட்டுநோய் பரவுவதற்கு சில காரணங்கள் இருப்பது தெரியவருகிறது:

Read more...
 
ஒத்தி வைக்காதே, ஒதுக்கப்படுவாய்! Print E-mail
Tuesday, 04 May 2010 07:37

ஒத்தி வைக்காதே, ஒதுக்கப்படுவாய்!

''அப்புரமா பார்த்துக்கலாம் இப்போ என்ன அவசரம்'' என்று சொல்லக்கூடியவர்கள் சமுதாயத்தில் நிறைய பேர் உண்டு. ''பிறகு''''பிறகு'' என்று ஒத்தி வைக்க நேரம் காலம் கைவசம் உள்ளவர்கள் நிகழ்காலத்தை நிராகரிக்கிறார்கள். எதிர்காலத்தைப் பாழாக்குகிறார்கள். அவர்களுக்கு இது தெரிவதில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் ஒத்தி வைத்தால் வாழ்க்கை அவர்களை ஒத்தி வைத்துவிடும்.

ஒத்திவைப்பு என்பது சின்ன சம்பவம் அல்ல. முன்னேற்றத்தை, வளர்ச்சியை, வெற்றியை, உயர்வைத் தள்ளிப்போடும் கசப்பான நிகழ்ச்சி. அவமானப்பட வேண்டிய அக்கிரமம். பதைபதைக்க வேண்டிய பயங்கரம். ஆனால், பலருக்கும் இது புரிவதில்லை.

காலை ஐந்து மணிக்கு அலாரம் அடிக்கிறது. எழுந்திருக்க வேண்டியவர் அலாரம் அடிக்கும் கடிகாரத்தை ஓங்கி அடிக்கிறார். கடிகாரம் கப் சிப். வாய் மூடிக்கொண்டது. உண்மையில் அலாரம் மீது அடி விழவில்லை. அவரது முன்னேற்றம் என்கிற முதுகெலும்பின் மீது விழுந்த அடி அது. படுக்கையை விட்டு எழுகின்ற நேரத்தை அவர் தள்ளிப்போடவில்லை. தமது தோல்வியை விட்டு எழுகின்ற முயற்சியை அவர் தள்ளிப் போட்டிருக்கிறார்.

இன்னும் கொஞ்ச நேரம் தூங்கலாமே, பிறகு எழுத்திருக்கலாமே என்று எழுவதை ஒத்தி வைக்கிறவர்கள் எழுச்சியை ஒத்தி வைக்கிறார்கள்.

Read more...
 
உலக அதிசயம் - மனித மூளை! Print E-mail
Saturday, 06 February 2010 08:14

உலக அதிசயம் -  மனித மூளை!

       சுஜாதா      

(அற்புதமான கட்டுரை)

[ மூளையின் முன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருக்கின்றன.

ஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.]

ஒரு விமர்சனம் - ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.

குழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,

நம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,

ஊசிக்காதில் நூலைச் செருகுவது,

கம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,

உப்பு - புளிப்பு - தித்திப்பு எல்லாம் உணர்வது,

"தலைவர் அவர்களே! தாய்மார்களே!" என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது - கெட்டது - குற்றம் - பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,

"பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்?" போன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி - தியானம் இவை அனைத்துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் - மூளை!

Read more...
 
பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு உதவலாம்? Print E-mail
Tuesday, 26 May 2009 07:11

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை!   பெற்றோர்

குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும்?

எந்தப் பாதையில் உங்கள் குழந்தை பயணம் செய்ய விரும்புகிறதோ அதில் பயணம் செய்யப் பழக்கினால் இறுதி வரை பயணம் திசைமாறாது. பெற்றோர் தமது குழந்தைகள் தமக்குச் சொந்தம் என்று செயல்படாமல் பாதுகாவலர்களாகச் செயல்படவேண்டும்.

ஐக்கிய அமெரிக்காவிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழக ஆய்வின்படி விமானப் படையில் பணியாற்றும் பல இளைஞர்கள் அதைத் தேர்வு செய்ததற்குக் காரணம் அவர்கள் விமானப் படையில் பணியாற்றும் பெற்றோர்களின் குழந்தைகளாக இருப்பதே என்று தெரிய வந்துள்ளது. ராணுவக் குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு அத்தகைய சூழல் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

வணிகம் அல்லது தொழிலை நடத்தும் குடும்பத்தைச் சார்ந்த இளைஞர்கள் அவை சார்ந்த தகவலை பெறுவது, உயர்கல்வி கற்பது ஆகியவற்றில் பெற்றோர்களின் தாக்கத்தைக் கொண்டிருப்பதைக் காண முடியும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளுக்குப் பொறுப்பைக் கொடுத்து உற்சாகப்படுத்தி, தவறுகள் நிகழ்ந்தாலும் மீண்டும் ஊக்கப்படுத்தி வளர்ப்பர். வினோத் என்பவனின் தந்தை கார்களை வாங்கி விற்கும் தொழிலைக் கொண்டவர். ஒருமுறை அவர் தனது சொந்த காரை, அப்போதுதான் ஓட்டுனர் உரிமம் பெற்ற தனது மகனிடம் கொடுத்து பெட்ரோல் போட்டு வரும்படி கூறினார்.

Read more...
 
1500 ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் எழுதிய பைபிளில் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு! Print E-mail
Thursday, 14 March 2013 08:05

1500 ஆண்டுகளுக்கு முன் கோஸ்பல் பரனபாஸ் எழுதிய பைபிளில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றிய முன்னறிவிப்பு!

லன்டன்: சமீபத்தில் மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகளுக்கு முந்திய பைபிளில், ஏசு (ஈஸா அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வருகையைப்பற்றி அறிவித்திருப்பது வாடிகனில் தீப்பொறியாக பற்றிக்கொண்டது.

போப் பெனெடிக் XVI பார்க்க விரும்பிய, கடந்த 12 ஆண்டுகளாக துருக்கியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த பைபிள் கோஸ்பல் பரனபாஸ் என்பவரால் எழுதப்பட்ட பைபிள் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.

தங்க எழுத்துக்களால் அராமிக் மொழியில் எழுதப்பட்டுள்ள அந்த பைபிள், 2000 ஆம் ஆண்டு துருக்கியில் ஒரு கடத்தல் நடவடிக்கையின்போது மறுபடியும் கண்டுபிடிக்கப்பட்டது.

Read more...
 
'பால்'மணம் மாறாக் குழந்தைகளுக்காக...! Print E-mail
Monday, 26 January 2009 08:27

'பால்'மணம் மாறாக் குழந்தைகளுக்காக...!

இதெல்லாம் இந்தியாவில் மட்டும் ஏன் நடக்க மாட்டேன் என்கிறது?' என்ற கனத்த கேள்வியை மனதில் இறக்கி வைக்கும் பல சம்பவங்கள் வெளிநாடுகளில் நடந்துகொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், சீனாவில் பால் கலப்படம் தொடர்பாக இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளித்துள்ள சம்பவம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, கலப்படம் செய்யப்பட்ட பால் பவுடர் அருந்தியதால் சீனாவில் 6 குழந்தைகள் இறந்தன. 2.5 லட்சம் குழந்தைகள் சிறுநீர் மற்றும் சீறுநீரகக் கற்கள் பிரச்னையால் பாதிக்கப்பட்டன. இதற்குக் காரணம், கறந்த பாலில் புரதச் சத்து அதிகம் இருப்பதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த, மெலாமைன் என்ற ரசாயனப் பொருளை கலந்து விற்றதுதான் என்பது பின்னர் தெரியவந்தது.

மெலாமைன் ரசாயனத்தை உற்பத்தி செய்து கொடுத்த சாங் யூஜுன், பால் உற்பத்திக் கூடத்திலிருந்து கலப்படம் செய்த பாலை விற்பனை செய்த ஜெங் ஜின்பிங் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய இன்னும் 21 பேருக்கு பல்வேறு தண்டனைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சர்வதேச சந்தையில் சீனாவின் பால்பவுடர் விற்பனைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைப்பதற்காகத்தான் சுமார் ஐந்து மாதங்களில் விரைந்து விசாரணை நடத்தி, மரண தண்டனை போன்ற தீர்ப்பினை அளித்துள்ளது என்பது உண்மைதான். ஆனால், இந்தியக் குழந்தைகளில் 99 சதவீதம் பேர் சீனாவில் நடந்த அதே காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை என்பதை நாம் உணரவில்லை. இங்குள்ள குழந்தைகள் எதற்காக இறக்கின்றன என்று தெரியாமலேயே இறந்துகொண்டிருக்கின்றன.

Read more...
 
குழந்தையின் மூளை ரகசியக் களஞ்சியம்! Print E-mail
Sunday, 23 May 2010 14:19

குழந்தையின் மூளை ரகசியக் களஞ்சியம்!

இந்த அவசர உலகில் எத்தனை அவசரமான வேலைகள் இருந்தாலும் குழந்தைக்கென நீண்ட நேரத்தை ஒதுக்க வேண்டியது முக்கியம்.

குழந்தையின் மூளை, ரகசியக் களஞ்சியம். அதன் எண்ணற்ற விந்தைகளை விஞ்ஞானிகள் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக அறிந்து வருகிறார்கள்.

கருவிலேயே தொடங்குகிறது இதன் கதை. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரோன்கள் - உருவாகின்றன. என்ன வேகத்தில்? நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்!

கோடிக் கணக்கில் நியூரோன்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன. இவையெல்லாம் மிகக் கவனமாக ஏற்படுத்தப் பட்டவை.

குழந்தைகள் பிறந்தவுடன் அவர்களின் மூளை ஏறத்தாழ ''வெறுமையானது''. அதாவது எதையுமே கற்றுக் கொள்வதற்கு தயாராக இருக்கும்.

Read more...
 
ஜஸ்வந்த்சிங் நூலும், வரலாற்று உண்மைகளும் Print E-mail
Thursday, 01 October 2009 10:00

இந்திய முஸ்லீம்களும் பிரிவினை வீண்பழிகளும்  

[ ''முஹம்மதலி ஜின்னா ஒரு மதச்சார்பற்ற தலைவர், தான் கொண்ட லட்சியத்தில் வெற்றிவாகை சூடி, தனக்கென புகழ்வ வரலாற்றை உருவாக்கிக்கொண்ட மாபெரும் தலைவராவார்'' என எல்.கே.அத்வானி பாராட்டியதை விட ஜஸ்வந்த்சிங் ஒன்றும் அதிகம் பாராட்டவில்லை. மாறாக ஜின்னா அரசியலில் எடுத்த தவறான முடிவுகளை கண்டித்தும் எழுதியிருப்பது நூலை முழுமையாக படிக்கும்போது புரிந்துகொள்ள முடியும்.]

தாய்த்திரு இந்திய நாட்டின் சுதந்திர தினமணி விழாவை நாடெங்கிலுமுள்ளநூறு கோடி இந்திய மக்கள் உவகை பொங்க கோலாகலமாக கொண்டாடி வரும் மகிழ்ச்சியான வேளையில்-பா.ஜ.க. மூத்தத் தலைவர், முன்னாள் வெளியுறவு அமைச்சர் திருமிகு. ஜஸ்வந்த்சிங் அவர்களால் எழுதப்பட்ட''ஜின்னா-இந்தியப் பிரிவினை-சுதந்திரம்''என்ற நூலை 17-08-2009 ந்தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது.நூல் வெளியீட்டு விழா நிறைவுகூட பெற்றிருக்காது, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.கபாசிஸ்டு கூடாரங்களில் இந்நூல் பூகம்பத்தை ஏற்படுத்திவிட்டது.

நாற்பது ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க வுக்கு தொண்டாற்றியதால் மூத்தத்தலைவராக மதிக்கப் பட்டு வந்த ஜஸ்வந்த்சிங் நொடிப்பொழுதில் கட்சிக்கு துரோகம் செய்தார்- கட்டுப்பாட்டை மீறினார்- கட்சியின் லட்சியத்தை சிதைத்துவிட்டார் என்று குற்றம் சுமத்துப்பட்டு, அவரை கட்சியிலிருந்து நீக்கியதற்கு, பா.ஜ.க கூறியிருக்கும் காரணம், ''முஹம்மது அலி ஜின்னாவைஅளவுக்கு மீறி பாராட்டி தனது நூலில் ஜஸ்வந்த்சிங் எழுதிவிட்டார் என்பதுதான்.

''முஹம்மதலி ஜின்னாவை தான் பெரிதும் மதிக்கிறேன் இந்திய சுதந்திரத்திற்காக போராடி விடுதலை வீரர், இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு அரும்பாடுபட்டவர், முஹம்மதலி ஜின்னா போற்றுதலுக்குறிய இந்தியக்குடிமகன்'' என்று காந்திஜியால் புகழப்பட்டவர். இந்திய முஸ்லீம்களின் அரசியல் சாசன உரிமைகளை மீட்டுத்தரும் போராட்டத்தில் பெரும் பங்குவகித்தவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்கு பாடுபட்ட மதச்சார்பற்ற தலைவர் முஹம்மதலி ஜின்னாஜின்னா, பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா மட்டும்காரணமில்லை, நேருஜியும்- சர்தார் வல்லபாய் படேலும்தான் முதல் முக்கியமானவர்கள். ஆனால் ஜின்னாவை மோசமானவர்- பிரிவினைவாதியாக இந்தியாவில் சித்தரித்து காட்டிவிட்டார்கள். ஜஸ்வந்த்சிங் தனது நூலில்  முஹம்மதலி ஜின்னா குறித்து எழுதியிருக்கும் கருத்துக்கள், அளவுக்கு மீறிய பாராட்டு என்றோ, புகழாறம் என்றோ யாரும் கூறிடமாட்டார்.

Read more...
 
நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம் Print E-mail
Wednesday, 28 July 2010 07:26

நன்னடத்தையை வலியுறுத்தும் இஸ்லாம்

 மெளலவி J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி  

''எவர்கள் இறையச்சம் கொள்கிறார்களோ, மேலும் நன்னடத்தையை மேற்கொள்கிறார்களோ அத்தகையவர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான். (சூரத்துல்அந் நஹ்ல்128)

புகழ் அனைத்தும் அகிலத்தார்களைப் படைத்துப் பரிபாலிக்கும் அல்லாஹ்விற்கே உரியது. நிச்சயமாக இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களின் இம்மை, மறுமை, வாழ்விற்குத் தேவையான எல்லா வற்றையும் சரியான முறையிலும் இலேசான முறையிலும் கற்றுத் தரக்கூடிய மார்க்கம். அம்மார்க்கம் பெண்களின் ஆடை விஷயத்தில் எவ்வாறு ஆடை அணிய வேண்டும் என்ற ஒழுக்கமான நன்னடத்தையையும், கண்ணியமான தூய வாழ்க்கைக்கும் வழி காண்பிக்கின்றது.

இவ்விஷயத்தில் ஆழமாக சிந்தித்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்வும், முழுமையான ஒழுக்கங்களையும் உள்ளடக்கிய மார்க்கம் இஸ்லாம் என்று தெளிவாக விளங்க முடியும். 

இறைவன் அருள்மறையில் கூறுகிறான். நபியே! நீர் உன் மனைவி மார்களுக்கும், உம் பெண் மக்களுக்கும் ஈமான் கொண்டவர்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களின் தலை முன்றானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக: அவர்கள் (கண்ணியமானவர் களென) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும். அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க அன்புடையோன் (அல் அஹ்ஜாப் 59)

Read more...
 
உறவினர்கள் உருப்பட.....! Print E-mail
Tuesday, 03 March 2009 05:43

உறவினர்கள் உருப்பட.....!

     அபூஃபெளஸிமா    

"நீர் உம்முடைய நெருங்கிய உறவினர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!'' (அல்-குர்ஆன் 26:214)

"என்னிடமிருந்து ஒரேயொரு செய்தி(வசனம்) கிடைத்தாலும் அதைப் பிறருக்கு எடுத்துரையுங்கள்." (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு. நூல்: புகாரி)

அல்லாஹ், தான் மனிதவினத்திற்காக அனுப்பிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்து மேற்கூறிய வசனத்தை அருளியதிலிருந்து அவன் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உறவினர்கள் மீது விசேடமான அன்பை வைத்திருந்தான் என்று சிலருக்கு எண்ணத் தோன்றும்.

அனைத்துப் படைப்பின் மீதும் ஆளுமையுள்ள அல்லாஹ் அப்படி ஏன் விசேடப்படுத்தினான் என்பதை முதலில் சிறிது அறிதல் நல்லதென்று எண்ணுகிறேன். அந்தக் காலத்தில் அரபியர் மத்தியிலேயிருந்த குலப் பெருமை, குடும்ப கௌரவம் ஆகிய விதிமுறைகள் அதியுன்னதமாகப் பேணப்பட்டு அரபகம் முழுக்க வேரூன்றி இருந்தன. தத்தமது குடும்பங்களின், உறவினர்களின் ஒட்டுமொத்தமான கௌரவத்தைக் கொண்டு முழு அரபகத்திலும் அவர்களின் தனித்தன்மையைப் பறைசாற்றி தாம் மற்றவர்களை விடச் சிறந்தவர்கள் என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.

Read more...
 
தாயின் மனநிலையே சேயின் மனநிலை! Print E-mail
Thursday, 28 October 2010 10:03

தாயின் மனநிலையே சேயின் மனநிலை!

தாயின் ஒவ்வொரு மாற்றமும் கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஏற்படும். உடலாலும், மனதாலும் கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு என்றாலும் அது குழந்தையின் வளர்ச்சியில் பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

சில குழந்தைகள் 2 அல்லது 3 வயது வரை எந்த பாதிப்புமில்லாமல் வளரும். ஆனால் திடீரென்று காய்ச்சல் அடிக்கும், பின் அந்தக் குழந்தையின் இடுப்புப் பகுதிக்குக் கீழ் செயலிழக்க ஆரம்பிக்கும். இதன் காரணத்தை அகத்தியர் தன்னுடைய பாலவாகடத்தில் தெளிவாகக் கூறியுள்ளார்.

அதாவது ஒரு பெண் எப்போது கருவுறுகிறாளோ அன்றிலிருந்து அந்தப் பெண்ணிற்கு உண்டாகும் மாற்றங்கள் கருவிலிருக்கும் குழந்தைக்கும் உண்டாகும். இவ்வாறு ஏற்படும் பாதிப்புகள் அல்லது மாற்றங்கள் குழந்தை பிறந்த பின் 2 அல்லது மூன்று ஆண்டுகள் வளர்ந்த பின் கூட ஏற்படும்.

ஒரு குழந்தை முழுமையாக வளர்ச்சியடையவும் எதிர்காலத்தில் மனதாலும் உடலாலும் ஊனமில்லாமல் பிறந்து வளரவும் கருவுற்ற பெண்கள் சில நடைமுறைகளைக் கடைப்பிடித்து வரவேண்டும்.

Read more...
 
பழ. கருப்பையா கட்டுரை Print E-mail
Monday, 14 September 2009 12:05

Image result for indian flag

[ பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!]

கெட்டிதட்டிப் போய்விட்டது பா.ஜ.க

ஒரு கட்சிக்காரர், எதிர்த்தரப்பினர் ஒருவரைப் பாராட்டினார் என்பதற்காக அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டுவிட்டார் என்னும் செய்தி நடுநிலையிலிருந்து பார்க்கிற யார் யாருக்கும் செரிக்க முடியாத ஒன்றாகும்!

அண்மையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், பாகிஸ்தானைத் தோற்றுவித்த முகமது அலி ஜின்னாவைச் சமயச் சார்பற்றவர் என்று சொல்லிவிட்டாரென்றும், வல்லபாய் பட்டேலை பிரிவினையோடு தன்னுடைய நூலில் தொடர்புபடுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டிக் கட்சியை விட்டு நீக்கிவிட்டனர்.

இஸ்லாமியர்களும் இந்துக்களும் வேறு வேறு; அவர்களின் நடை, உடை, பாவனை, பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தும் வேறு வேறு; அவர்கள் கடைப்பிடிக்கின்ற சட்டங்கள் வேறு வேறு என்றெல்லாம் நாட்டை உடைத்து, அதன் காரணமாக இரு தரப்பாரின் ரத்தமும் ஆறாகப் பெருகி ஓடக் காரணமாகி, கடைசியில் மத அடிப்படையிலான பாகிஸ்தானைப் பிரித்துக் கொண்டு போன ஜின்னா, எப்படி மதச் சார்பற்றவராக இருக்க முடியும் என்னும் கேள்வியே ஜஸ்வந்த் சிங்கின் "கல்தா'வுக்குக் காரணம்!

பாகிஸ்தான் பிரிவினைக்கு ஜின்னா முதன்மைக் காரணம்தான். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு நேருவும், வல்லபாய் பட்டேலும் துணைக் காரணங்கள் அல்லவா! ஜின்னாவைத் தலைமுழுகி விட்டு மீதமுள்ள இந்தியாவை எல்லா அதிகாரங்களோடும் நிம்மதியாக ஆளலாம் என்று ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் கருதியது வரலாற்று உண்மைதானே!

Read more...
 
திருக்குர் ஆன் அருளப்பட்டதன் நோக்கம் Print E-mail
Sunday, 25 January 2009 14:39

திருக்குர் ஆன் அருளப்பட்டதன் நோக்கம்

''தன்னிடமுள்ள கடுமையான தண்டனை குறித்து எச்சரிப்பதற்காகவும் நல்லறங்கள் புரிந்தோருக்கு நிச்சயமாக அழகான பரிசு இருக்கிறது என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (இவ்வேதத்தை அருளினான்) அதில் (பரிசாகப் பெறக் கூடிய சொர்க்கத்தில்) அவர்கள் என்றென்றும் நிலைத்திருப்பார்கள்.'' (அல்குர்ஆன் 18:02,03)

திருக்குர்ஆன் எவ்விதக் குறைபாடும் முரண்பாடும் இல்லாமல் அருளப்பட்டதாகக் கூறிய இறைவன் இவ்வசனங்களில் திருக்குர்ஆன் அருளப்பட்ட நோக்கத்தைத் தெளிவு படுத்துகிறான்.

அந்த நோக்கம் மறுமை வாழ்க்கை குறித்து எச்சரிப்பது தான். இந்த ஒரு நோக்கத்திற்காகத் தான் திருக்குர்ஆன் அருளப்பட்டுள்ளது என்பதை மேற்கண்ட வசனங்கள் கூறுகின்றன.

இவ்வுலகில் வாழும் மனிதன், தீமை செய்பவர்கள் சொகுசான இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பதையும் நல்லறங்களில் ஈடுபடுவோர் துன்பங்களில் உழல்வதையும் காண்கிறான்.

நல்லவனாக வாழ்ந்தால் ஒரு பயனும் இல்லை. தீயவனாக நடப்பதால் ஒரு கேடும் இல்லை என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. அவனும் தீயவனாக மாறி விடுகிறான்.

இந்த மனநிலையை மாற்றியமைப்பது தான் திருக்குர்ஆன் அருளப்பட்டதற்கான நோக்கம்.

Read more...
 
பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்! Print E-mail
Thursday, 22 May 2014 06:13

பெண்களுக்கு எதிரான முதல் குற்றம்!

[ எங்காவது ஒரு வீட்டில் ஒரு பெண் இருக்கிறாள் என்று தெரிந்தால் அதை மோப்பம் பிடித்து அந்த வீட்டை சுற்றி நாய்கள் காத்துக் கிடப்பதைப் போல ஆண்களின் கூட்டம் காத்துக் கிடக்கும்   ஒரு சூழ்நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை! ]

இவ்வுலகில் மனிதன் அமைதியாக இனிமையான வாழ்வு வாழவேண்டும் என்பதற்காக இங்கு ஆணுக்குத் துணையாக பெண்ணையும் படைத்து அவர்களுக்கு தன் புறத்தில் இருந்து நேர்வழி காட்டுதலையும் தந்தருளியுள்ளான் இறைவன்.

ஆனால் மனிதனின் குறுகிய மற்றும் சுயநலம் வாய்ந்த செயல்பாட்டின் காரணமாக அவனது வழிகாட்டுதலைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ விழைந்ததன் காரணமாக பல துன்பங்களை மனித இனம் அனுபவிக்க வேண்டிய அவல நிலையில் உள்ளது.

இன்று பெருகிவரும் பாலியல் வன்முறைகளாக ஆங்காங்கே நடப்பவை அதன் ஒரு சிறிய வெளிப்பாடுதான். இந்த பாலியல் வன்முறைகள் பெருகுவதற்கு ஒன்றல்ல இரண்டல்ல பல காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் குறைந்து வரும் ஆண் – பெண் விகிதம். அதாவது பெண்களின் எண்ணிக்கைத் தட்டுப்பாடு!

Read more...
 
பிறந்த குழந்தை பாலுக்கு அழுதால்... Print E-mail
Thursday, 19 August 2010 12:24

பிறந்த குழந்தை பாலுக்கு அழுதால்...

அப்...பாடா!... இத்தனை கஷ்டப்பட்டு ஒருவழியாக நல்லபடியா குழந்தை பிறந்துவிட்டது! பெரிய தொல்லைவிட்டது... என்று எந்தத் தாயும் பிரசவத்துக்குப் பின் நினைத்துவிட முடியாது.!

கர்ப்பப்பைக்குள் இருந்தவரை குழந்தைக்கான ஆகாரத் தேவையை தாய்தான் மறைமுகமாகப் பார்த்துக்கொண்டாள். அதாவது, அவள் சாப்பிட்ட உணவின் சத்துக்கள் குழந்தைக்கு, தொப்புள்கொடி மூலம் சென்றடைந்தன.

குழந்தை வெளியே வந்ததும் தாயின் பொறுப்புகள் பல மடங்கு கூடித்தான் போகிறதே தவிர குறைவதில்லை! அதில் முக்கியமான பொறுப்பு, குழந்தையின் ஆகாரத் தேவையை வேளாவேளைக்குப் பார்த்துக் கொள்ள வேண்டியது.

பிரசவித்த தாய் அதற்கு ஏற்பாடு செய்யப் பெரிதாக மெனக்கெட வேண்டாம் என்றும், பூ போன்ற பட்டுப் பாப்பாவுக்கு பரிசுத்தமான, சத்தான ஆகாரம் கிடைக்க வேண்டும் என்கிற எண்ணத்திலும்தான் இறைவன், அந்த ஆகாரத்தையும் தாயின் உடலில் இருந்தே பாப்பாவுக்குக் கிடைக்கும்படியாகச் செய்திருக்கிறார்.

Read more...
 
CAA & NRC தடுக்க என்ன வழி? -தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா! Print E-mail
Sunday, 22 December 2019 17:19

CAA & NRC தடுக்க என்ன வழி? - தி.மு.க.விற்கு தேர்தல் வியூகம் வகுக்கும் ஐபேக் பிரசாந்த் கிஷோர் சொல்லும் ஐடியா!

நாடு முழுவதும் `தேசிய குடிமக்கள் பதிவேடு' கொண்டு வர வேண்டும் என்பது இந்தியக் குடியுரிமையை மதிப்பிழக்க வைப்பதற்குச் சமம். நீங்கள் நிரூபிக்கும்வரை செல்லாது - பிரசாந்த் கிஷோர்.

பிரசாந்த் கிஷோர் ( Twitter )
குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சிக்கு எதிராகப் போராட்டங்கள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் `குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதைத் தவிர்க்க இரண்டு சிறந்த வழிகள் உள்ளன’ என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Read more...
 
காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...! Print E-mail
Thursday, 06 February 2014 07:07

காந்தியின் ரத்தம் இன்னும் காயவில்லை...!

“இது காந்தி பிறந்த நாடு, இங்கு வன் முறைக்கு இடமில்லை” என்று முகத்தை, சாந்தமாகவும், பாந்தமாகவும் கஷ்டப்பட்டு வைத்துக்கொண்டு நரேந்திர மோடி பேசுகிறார். இவருடைய சித்தாந்த குருவான நாதுராம் கோட்சேயும், பிரார்த்தனைக்கு வந்துகொண்டிருந்த மகாத்மா காந்தியை வணங்குவதுபோல நடித்துத்தான் அவரை வதை செய்தான். காந்தியை கொன்று முடித்துவிட்ட இவர்கள் இப்போது அவர் விதைத்துச்சென்ற மதச்சார்பின்மை, மதநல்லிணக்கம், மக்கள் ஒற்றுமை போன்ற தத்துவக்கோட்பாடுகளை அறுத்து முடித்துவிட முயல்கிறார்கள்.

குஜராத்தில் மோடியின் ஆட்சியில்தான் சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் கொஞ்சம் கூட மனிதத்தன்மையின்றி நர வேட்டையாடப்பட்டார்கள். ஆனால் இவரோ காந்தியத்தின் கடைசி வாரிசு போல தன்னை வரித்துக்கொண்டு வார்த்தைப்பந்தல் போடுகிறார். 1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மகாத்மா காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக்கொலை செய்தான் என்பது ஒற்றைவரி வரலாறு. ஆனால் கோட்சேயின் பின்னால் ஒரு வெறிபிடித்த கும்பலே இருந்தது என்பது மறைக்கப்பட்ட, ஆனால் மறக்கக்கூடாத வரலாறு.

ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து மகாசபை ஒருபோதும் காந்தியை ஏற்றுக் கொண்டதில்லை. அவர்கள் கடல் கடந்து பாசிச ஹிட்லரையும், முசோலினியையும் தங்கள் நெஞ்சப்பரப்பில் வைத்து நேசித் தார்கள். ஹிட்லர் அப்பாவி யூதர்களை வேட்டையாடியதுபோல இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களை ஒரேயடி யாக ஒழித் துக்கட்ட வேண்டும் என்றுவிரும்பினார்கள். அதற்கு காந்தி முன் வைத்த மதச்சார்பின்மை கோட்பாடு இவர்களுக்கு தடைக்கல்லாக இருந்தது. காந்தி கொலையின் பின்னணியில் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு பங்கு உண்டு என்று கூறும்போதெல்லாம் அவசரமாக மறுக்கிறார்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பினால் இயக்கப்படுகிற பாஜகவினர்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 76 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article