வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குவோம் Print E-mail
Tuesday, 14 May 2013 06:31

சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குவோம்

அல்லாஹ் கூறுகின்றான்...

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

''நிச்சயமாக முஃமின்கள் (அனைவரும்) சகோதரர்களே. ஆகையால் உங்களுடைய சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குங்கள். மேலும் உங்கள் மீது ரஹ்மத் (கருணை) செய்யப்பட வேண்டுமானால் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (சூரா ஹுஜுராத் 49:10)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது, முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வது நம் கடமை என்பதை உணரலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்...

مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا

''(உங்களில்) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அந்த (நன்மையில்) ஒரு பாகம் அவருக்கு உண்டு. (சூரா நிஸா 4:85)

Read more...
 
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! Print E-mail
Saturday, 07 March 2020 07:25

Image result for பாபர் மஸ்ஜித்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி அவர்கள் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதிகள் D.Y சந்திர சூட், அசோக் பூஷன், S. அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் (Open Court) விசாரிக்காமல் நீதிபதிகளின் தனியறைகளில் (Chamber) விசாரணை நடத்தி கடந்த 12.12.2019 அன்று தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் கடந்த 11.02.2020 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மறு சீராய்வு (Curative Petition) மனு தாக்கல் செய்யப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்டு பட்டியிலப்பட உள்ளது.

Read more...
 
தீர விசாரிப்பதே மெய்! Print E-mail
Monday, 25 July 2011 07:49

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

[ o மாமியாரைப் பற்றி...

o மருமகளைப் பற்றி...

o நண்பர்களுக்கு மத்தியில்...

o தீர விசாரிப்பதே மெய்.

o அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.]

யாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.

நம்புவது போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.

Read more...
 
அருள்மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும் Print E-mail
Thursday, 02 June 2011 09:54

அருள்மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும்

1400 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட அருள்மறை அல்குர்ஆன் இன்றுவரை அதன் அசல் வடிவில் பாதுகாக்கப்பட்டு இருப்பதானது அதன் நிரந்தர அற்புதத் தன்மையை காட்டி நிற்கின்ற அதேவேளை வானிலிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களில் அல்குர்ஆன் மாத்திரம் எவ்விதத் திரிபுகளுக்கும் அப்பாற்பட்டிருப்பதானது அதன் புனிதத் தன்மையையும் உலகிற்கு உரத்துச் சொல்லி நிற்கின்றது.

''தௌறாத்'' வேதம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட இறை வேதம் என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால் இன்று அவர்களிடம் உள்ள வேதம் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதம் கிடையாது. அவர்கள் மரணித்ததன் பிற்பாடு பல நூற்றாண்டுகள் கடந்து புதுமையாகப் புகுத்தப்பட்ட வேத வாக்கியங்களின் மொத்த வடிவமே இன்று அவர்களிடம் காணப்படுகிறது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.

''யூதர்களில் சிலர் வார்த்தைகளை அதற்குரிய இடங்களில் இருந்து மாற்றுகின்றனர்.'' (அல்குர்ஆன் 4:46)

அதே போன்று இன்று கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்ற ''இன்ஜீல் மத்தே'', ''மொர்கிஸ்'', ''லோகா'', ''யோஹ்னா'' போன்ற வேதங்களுக்கும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட ''இன்ஜீல்'' வேதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

Read more...
 
தகாபுல் - இஸ்லாமியக் காப்புறுதி Print E-mail
Friday, 13 May 2011 08:32

தகாபுல் - இஸ்லாமியக் காப்புறுதி

  இர்ஃபான் அஷ்கர்  

தகாபுல் என்ற சொல் பரஸ்பரம் உதவிக்கொள்ளுதல் என்ற மொழிக்கருத்தைக் கொடுக்கின்றது. அதாவது இரு சாராருக்கிடையிலான ஒரு கூட்டுறவு ஒப்பந்தத்தின் படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகும். எதிர் காலத்தில் மனிதனுக்கோ அல்லது ஏதாவது நிறுவனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கோ ஏற்படக்கூடும் எனக் கருதும் இழப்பிற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைச் செய்து கொள்வதையே காப்புறுதி (தகாபுல்) என்கின்றோம்.

 தோற்றப் பின்னனி:

பண்டைய அரபிகளிடத்தில் ‘ஆகிலா’ முறையிலான காப்புறுதி நடைமுறையில் இருந்து வந்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவரின் குடும்பத்தினர் அதற்கான தண்டப்பணத்தை கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு செலுத்தினர்;. இவ்வாறு பணம் செலுத்துபவர்கள் ஆகிலா என்றளைக்கப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தகைய காப்புறுதி வகையை அங்கீகரித்தார்கள்.

Read more...
 
அநாதைகளை ஆதரிப்போம் Print E-mail
Wednesday, 08 September 2010 13:56

எம்பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநாதைகளை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அயலவர்களை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.

அல்லாஹ்வின்  கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என அல்-குர்ஆன் கட்டளையிடும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றுமை பற்றி எவ்வளவோ வரைவிலக்கணங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு துன்பம், நோய் இடையூறு ஏற்படுமிடத்து அதற்காக முன்னின்று உதவக் கூடியவன் மற்றுமொரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.

Read more...
 
முஸ்லிம்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல! Print E-mail
Friday, 20 May 2011 11:20

இது ஒரு தமிழரின் பார்வை...

இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

[ பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே...

அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே..! அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?

கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.]

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

Read more...
 
கண் மூடிக் கொண்ட பின்னால்... Print E-mail
Wednesday, 19 August 2015 06:59

கண் மூடிக் கொண்ட பின்னால்...

  அபூ சுமையா, நாகை.  

சாவின் பெயராலும் அனாச்சாரங்கள்....

கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.

சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும்.

வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்!

சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள மாட்டான் தான். பொறுமையைப் கைக் கொண்டு பணியைத் தொடரத்தான் பணிக்கிறது இஸ்லாம். அதற்காக இப்படியா? அதுவும் நெய்ச்சோறும் குருமாவும்!

தூர தொலைவிலிருந்து வரும் உற்றார் உறவினர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு எனச் சப்பைக் கட்டு கட்டுவார்கள். சரி! அவர்கள் எளிய சோறு சாப்பிட மாட்டார்களா? பிரியானிக்காகத்தான் புறப்பட்டு வந்தார்களா? எளிய இல்லங்களைக்கூட இந்தப் பாழும் வழக்கம் விட்டு வைக்கவில்லையே? மார்க்கத்தின் பெயரால் ஒரு கடமையைப் போலன்றோ ஆக்கி விட்டார்கள்.

Read more...
 
முஸ்லிம்களே இதற்கு முழுப் பொறுப்பு! Print E-mail
Monday, 21 January 2013 21:51

முஸ்லிம்களே இதற்கு முழுப் பொறுப்பு!

இன்று உலகளாவிய அளவில் அநியாயங்கள், அக்கிரமங்கள், பண்பாட்டுச் சிதைவுகள், ஒழுக்கச் சீர்கேடுகளான புகை, குடி, விபச்சாரம்.

சூது, லஞ்சம், கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, கற்பழித்துக் கொலை, ஈவ்டீஸிங் என வெறுக்கப்படவேண்டிய அனைத்துக் கெட்ட செயல்களும் வரவேற்கப்படுகின்றன, வளர்க்க்பபடுகின்றன.

வியாபாரிகளிடம் பொய், பித்தலாட்டம், ஏமாற்று, கலப்படம், அளவையில் மோசடி, அடுத்தவனைக் கெடுத்து தான முன்னேற விரும்பல், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து தனக்கு உரிமையில்லாதவற்றை முறை தவறி அடைதல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

அரசு அதிகாரிகளிடம் ஒழுக்கக் கேடுகள், பணியில் முறைகேடுகள், கடமைகளை நிறைவேற்றுவதில் பொறுப்பற்ற தன்மை, லஞ்சம், மது, மாது, சூது, கூடாவழிகளில் சொத்து சேர்த்தல் என அனைத்துத் தீய செயல்களும் மலிந்து காணப்படுகின்றன.

மக்களுக்கு சேவை செய்வதாகக் கூறிக் கொண்டு புற்றீசல்போல் கிளம்பும் அரசியல்வாதிகள் செய்யும் அட்டூழியங்களுக்கும், அநியாயங்களுக்கும் எல்லையே இல்லை. மக்களை ஏமாற்றி அவர்களின் பொருளை நியாயமின்றி சுருட்டுவதிலும் கொடிகட்டிப் பறக்கிறார்கள்.

Read more...
 
லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு) Print E-mail
Friday, 27 March 2009 18:09

(MUST READ  MORE THAN ONCE)

லவ்ஹுல் மஹ்ஃபூல் (பாதுகாக்கப்பட்ட ஏடு)

[ லவ்ஹுல் மஹ்ஃபூல் பாதுகாக்கப்பட்டதாகும். ஆகவே அதிலுள்ளவற்றை அழிக்கவோ மாசுபடுத்தவோ முடியாது. 

குர்ஆன் இதை "உம்முல் கிதாப்" (புத்தகங்களின் தாய்)

"கிதாபுன் ஹாஃபிலூன்" (அனைத்தும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்)

"கிதாபின் மக்நூன் (மிகவும் பாதுகாக்கப்பட்ட புத்தகம்) அல்லது புத்தகம் போன்ற பல பெயர்களில் அழைக்கிறது.

மனிதன் முகம் கொடுக்கும் அனைத்தை பற்றியும் கூறப்படுவதால் அதை கிதாபின் மின் கப்லி (கட்டளை புத்தகம்) என்றும் அழைக்கப்படுகிறது. இறைவன் பல வசனங்களில் லவ்ஹுல் மஹ்ஃபூல் பற்றி குறிப்பிடுகிறான். முதலில் அந்த புத்தகத்திலிருந்து ஒன்றுமே மறையாது.

"அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார். மேலும் கரையிலும் கடலிலும் உள்ளவற்றையெல்லாம் அவன் அறிவான், அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை." (6:59) ]

தகவல். . . . .ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பை விட இன்று இதன் விளக்கம் வித்தியாசமாக இருக்கிறது. விஞ்ஞானிகள் தகவல் தொடர்பான விதிகளை (theory) உருவாக்கி கொண்டிருக்கிறார்கள். சமூக விஞ்ஞானிகள் "தகவல் தொழிநுட்ப யுகத்தை" பற்றி பேசுகிறார்கள். தகவல் இன்று மனிதனுக்கு தேவையான ஒன்றாக மாறி வருகிறது.

Read more...
 
நான்கு தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்! Print E-mail
Monday, 19 November 2012 20:41

நான்கு தீர்மானிக்கப்பட்ட அம்சங்கள்! 

[ 1. நோய் நமக்கு பரிகாரம். 2. சக்திக்கு மீறி துன்பம், சிரமம் வராது. 3. எவ்வளவு சாப்பாடு, எங்கே மரணம், எப்போது மரணம், 4. சுவனவாதியா நகரவாதியா? நான்கும் தாயின் கருவறையில் 120 நாள் முடிந்ததுமே தீர்மானமாகிவிட்டது.]

மீடியாவில், செய்தி ஊடகங்களில் முஸ்லிம், இஸ்லாம், குர்ஆன், நபிகளாருக்கு எதிராக செய்திகள் வெளிவந்து கொண்டேயுள்ளன. இது புதியதல்ல.

குர்ஆன் ஊடுருவல் முயற்சி நடைபெற்றது. நபிகளார் குறித்து திரைப்படம் எடுக்கின்றனர். சல்மான் ருஷ்டி தப்பும் தவறுமாக சாத்தானிக் வெர்சஸ் எழுதினார். சூரா இன்ஷிரா அத்தியாயம் 94 வசனம் 4. ''வரஃபஹ்னா லகதிக்ரக்'' - உமது நினைவை உயர்த்தினோம்.

முழு உலகம் முயற்சித்தாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மதிப்பை குறைக்க இயலாது. தினமும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. அல்லாஹ், வானவர், மனிதர் ஒரு சேர நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது சலவாத் சொல்கிறோம்.

Read more...
 
முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள் (1) Print E-mail
Tuesday, 06 September 2011 20:24

முஸ்லிம் பெண்கள் அறிய வேண்டிய சட்டங்கள்

ஆசிரியர் : ஷேக் டாக்டர் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல் ஃபவ்ஸான், தமிழாக்கம் : S. கமாலுத்தீன் மதனி

வெளியீடு : அறிவு ஆராய்ச்சி மற்றும் மார்க்கத்தீர்ப்பளிக்கும் தலைமையகம், ரியாத்.

 முன்னுரை 

பிரிவு - 1  பொதுவான சட்டங்கள்

இஸ்லாத்திற்கு முன்பு பெண்கள் நிலை

இஸ்லாத்தில் பெண்கள் நிலை

இஸ்லாத்தின் எதிரிகள் பெண்ணுரிமையைப் பறிக்கின்றனர்

பணிக்குச் செல்லும் பெண்கள் கவனிக்க வேண்டியவை

Read more...
 
ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது? Print E-mail
Saturday, 11 February 2012 07:21

ஆண்களிடம் இல்லாத பெண்களின் சிறப்புக்குணம் எது?

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.

உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண் ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல காதலனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண் தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.

Read more...
 
பூவையருக்கு பூப்போன்ற அறிவுரைகள் (1) Print E-mail
Monday, 22 August 2011 10:50

 1. எனது இனிய இஸ்லாமிய சகோதரிகளே!

எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்ந்து கொள்ளுங்கள்!

அல்லாஹ் கூறுகின்றான்:

தர்மத்தை பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுத்துவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. (அன்னிஸா- 4 : 14)

உங்கள் பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுத்தரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் உனது பேச்சை பதிவு செய்துகொண்டிருக்கின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான்:

ஒவ்வொருவரின் வலது புறத்திலும், இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எழுதும் இரு வானவர்கள் மனிதனிடம் இல்லாமல் எந்தச் சொல்லையும் அவன் மொழிவதில்லை. (காஃப்- 50 : 17,18)

Read more...
 
அவள்..... அவள்...... அவள்.... Print E-mail
Wednesday, 04 January 2012 08:23


 அவள்..... அவள்...... அவள்....

மனைவி பிரசவத்துக்காகப் பிறந்த வீட்டுக்குச் செல்லும்போது, ‘இங்க பாரு, ஒரு ஆண் வாரிசைப் பெத்து எடுத்தீன்னா உடனே பக்கத்து வீட்டுக்கு போன் பண்ணிச் சொல்லு. பெண் குழந்தை பிறந்ததுன்னா தகவலே சொல்ல வேணாம். உங்க வீட்லயே இருந்துடு’ என்றார் கணவர்.

‘பெண் குழந்தையும் நம்ம குழந்தைதானே? ஏன் இப்படிப் பேசுறீங்க?’

‘ஏன் பேச மாட்டே? ரெண்டு தங்கச்சிகளைக் கரை சேர்க்கறதுக்குள்ள என் பாடு திண்டாட்டமா ஆச்சு. இதுல எனக்கும் ஒரு பொண்ணு பொறக்கணுமா? நமக்கு ஒரே ஒரு குழந்தைதான். அதுவும் என் வாரிசா இருக்கற மாதிரி ஆணாகத்தான் இருக்கணும்.’

’பொண்ணா பொறக்கறது ஒண்ணும் என் கையில இல்லை. ஆணோ, பொண்ணோ பொறக்கறதுக்குக் காரணம் ஆம்பிள்ளைங்கதான்னு படிச்சிருக்கேன்!’

‘படிச்சவள்ங்ற திமிர்ல பேசறீயா? இந்தக் கதை எல்லாம் வேண்டாம். கிளம்பு!’

Read more...
 
வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (1) Print E-mail
Saturday, 22 October 2011 07:45

   வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (1)  

"மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;;;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்; அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள்; மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்." (அல்குர்ஆன் 04:01)

இறைவன் தன்னுடைய திருமறை நெடுகிலும் இந்த முஸ்லிம் சமுதாயத்தைப் பார்த்து, ஓ! இறைநம்பிக்கை கொண்டவர்களே! என்று விளித்துப் பேசுவதைப் பார்க்கலாம். இறைவன் நிர்ணயித்துள்ள வரம்புகளின் மீது நம்முடைய முழு கவனத்தையும் செலுத்தினோமென்றால், அந்த வரம்புகளின் இறுதி முடிவு வெற்றியை அடித்தளமாகக் கொண்டிருப்பதைக் காணலாம். அவனது அந்த கருணையின் அடிப்படையில் தான் நாம் இன்று ஒரு வெற்றிகரமான சமுதாயத்தின் சொந்தக்காரர்களாக, இறைநம்பிக்கை கொண்டவர்களாக இருந்து கொண்டிருக்கின்றோம்.

Read more...
 
பெண்ணுக்கு ஓய்வென்பது எப்போது....?! Print E-mail
Friday, 06 January 2012 08:48

58 – 60 வயதில்  ஓர் ஆண் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட முடியும்.  ஆனால் ஒரு பெண்? 

சலிப்பு - இந்த வார்த்தையை நாம் அடிக்கடி உபயோகப்படுத்துகிறோம். மதியம் சமைத்த உணவை இரவும் கொடுத்தால் சலிப்பு வந்துவிடுகிறது. ஒரு சேனலைத் தொடர்ச்சியாக அரை மணிநேரம் பார்க்க முடிவதில்லை.

ஒரே விஷயத்தைப் பேசிக்கொண்டிருந்தால் சலிப்பு ஏற்படுகிறது. ஆனால் காலம் காலமாகப் பெண்கள் ஒரே வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு மட்டும் சலிப்பு என்பதே கிடையாதா?

படித்தவராக இருக்கலாம். படிக்காதவராக இருக்கலாம். ஏழையாக இருக்கலாம். வசதியானவராக இருக்கலாம். வேலைக்குச் செல்லலாம். வேலைக்குச் செல்லாமல் இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வேலைகளில் இருந்து மட்டும் தப்பிக்க முடியாது.

அதிகாலையிலேயே எழ வேண்டும். வாசல் பெருக்க வேண்டும். பால் காய்ச்ச வேண்டும். ஒவ்வொருவரும் எழுந்து வர வர அவர்கள் விருப்பப்படி கலந்துகொடுக்க வேண்டும். காய் நறுக்க வேண்டும். காலை டிபன், மதிய உணவு என்று பம்பரமாகச் சுழல வேண்டும்.

வீட்டில் உள்ள பெரியவர்களுக்குப் பிரத்யேக உணவும் இருக்க வேண்டும். குழந்தைகள் விரும்பும் வகையில் அவர்களுக்குப் பிடித்த உணவும் செய்ய வேண்டும். (இரண்டு குழந்தைகள் இருந்தால் இரண்டும் வெவ்வேறு உணவுகளைக் கேட்கும்!) ஞாபகமாக செய்த ஐட்டங்களை அடிக்கடி செய்யாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

Read more...
 
உயர் கல்வியும் இன்றைய நிலையும்! Print E-mail
Monday, 24 February 2020 07:55

உயர் கல்வியும் இன்றைய நிலையும்!

     Noor Mohamed      

கீழ்திசை தேசங்களில், பல்கி பெருகி உள்ள பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டிருக்கிறது, அங்கு பயிலும் ஆய்வு (PhD) மாணவர்களின் ஆராய்ச்சி அறிக்கை சமூகத்தின் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தற்போதைய நிலையில் சமூகம் எதிர்கொண்டிருக்கும் சூழலியல், மருத்துவம், முதலாளித்துவ பொருளாதாரம், புவிசார் அரசியல், சமூக நீதி, கல்வியியல், வேளாண்மை, மற்றும் நீர் மேலாண்மை, இது போன்ற துறைகளில் சமூகம் எதிர் கொள்ளும் இன்னல்களுக்கு எந்தவொரு மிக பெரிய அளவில் தீர்வுகளை, கீழ்திசை நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியாகும் ஆராய்ச்சி மாணவர்களின் (PhD) ஆய்வு முடிவுகள் பெரும் விளைவை ஏற்படுத்தவில்லை சமூகத்திற்கு.

மாறாக சிறு மற்றும் குறு தொழில் பட்டறையில் பணிபுரியும் இளைஞர்கள் தன்னார்வமாக, தேவைக்கு ஏற்ப புதிய இயந்திர கண்டுபிடிப்புகளை படைக்கிறார்கள் நாம் செய்திகளில் காண்கிறோம். இவை போன்று ஏண் கீழ்திசை நாடுகளின் ஆய்வு துறையின் மூலம் பெரிய அளவில் மாற்றத்தை காணமுடியவில்லை, ஏன் இந்த நிலை? இவைகளை யார் கட்டுபடுத்துகிறார்கள்?

Read more...
 
திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!! Print E-mail
Saturday, 16 August 2008 19:42

திருமண வீட்டில் வீடியோ! எச்சரிக்கை!!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு திருமணத்தில்... திருமண மண்டபத்தில் நிகாஹ் நடந்து கொண்டிருந்தது. ஊர் மக்கள் பெரும்பாலோர் கலந்து கொண்ட அந்த திருமண வைபவத்தில் மிகவும் அதிர்ச்சி தரும் ஒரு காட்சி பார்வையில் பட்டது.

மணமகளிடம் 'திருமண ஒப்புதல் கையெழுத்து' வாங்குவதற்காக, பெண் வீட்டார்கள் மணப்பெண்ணுக்கு ஒதுக்குப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைகிறார்கள். மணப்பெண்ணிடம் கையெழுத்தும் வாங்குகிறார்கள். இதில் என்ன அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா? இனிமேல்தான் அந்த அதிர்ச்சியே!

மணப்பெண்ணிடம் கையெழுத்து வாங்கியபிறகு பெண்வீட்டு ஆடவர்கள்; நிகாஹ் மஜ்லிசுக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் மணகள் கையெழுத்திடுவதை 'வீடியோ' எடுப்பதற்காக சென்றவர்கள் மணமகளின் கையெழுத்தை பதிவு செய்ததோடு நிற்கவில்லை. மணப்பெண் தங்கியிருக்கும் அறையில் மணமகள் முக்காட்டை விலக்கி கேமராவுக்கு 'போஸ்' கொடுப்பதற்காக; தோழிகள் போன்ற பெண் வீட்டார்களே பெண்ணின் முக்காடை விலக்கி விட மணப்பெண் கூச்சத்தில் தடுத்தாலும், தோழிகள் கழுத்து நகைகளை சரிசெய்யும் சாக்கில் முக்காடு விலக்கப்படுகிறது. இதை 'வீடியோ கேமராவும்' பதிவு செய்கிறது.

கொடுமையிலும் கொடுமை என்னவென்றால், இந்த காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பும் செய்யப்படுகிறது. அந்த நிக்காஹ் மஜ்லிஸில் இரு புறமும் வைக்கப்பட்டிருக்கும் தொலைக்காடசிப் பெட்டியில் அந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும்போது, இங்கு மஜ்லிஸில் இமாம் திருமண ஒப்பந்த நடைமுறைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

Read more...
 
உள்ளமும் உறங்கட்டுமே! Print E-mail
Monday, 16 August 2010 22:14

உள்ளமும் உறங்கட்டுமே!

[ அற்புதமான கட்டுரை ]

நான் பணம் படைத்தவர்களைப் பார்த்தோ, அழகாக இருப்பவர்களைப் பார்த்தோ, உயர் பதவியில் இருப்பவர்களைப் பார்த்தோ ஏக்கப்பெருமூச்சு விட்டதில்லை.

இவர்கள் எல்லோரையும் விட, படுத்தவுடன் சட்டெனத் தூங்கிப் போய் விடுகிறார்களே, அவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள். அவர்களைப் பார்த்தால்தான் பொறாமையாக இருக்கும்.

நம்மில் எத்துணை பேருக்குப் படுத்தவுடன் தூக்கம் வருகிறது?

தேவையற்ற எண்ணங்களும், சிந்தனைகளும் மனத்தை அலைக்கழிக்க, தூக்கம் என்னவோ வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நம் பெரிய துக்கமே தூக்கமின்மைதான்.

நித்தமும் வாழ்க்கையோடு "மல்லு'க்கட்டிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக் கானோர் நிம்மதியாகத் தூங்குகின்றனரே! விடியலே அவர்கட்கு ஒரு பெரிய கேள்விக்குறி. அவர்களைப் பொறுத்தவரை அந்த நிமிடமே சத்தியமானது; நிரந்தரமானது. அடுத்த நாளை ஆண்டவனிடம் விட்டு விட்டு ஆனந்தமாகத் தூங்குகின்றனர். இவர்களுக்குத் கொசுக்கடியும் தெரிவதில்லை; கோடை வெப்பமும் தெரிவதில்லை.

ஆனால் பஞ்சு மெத்தையும், பட்டு விரிப்பும், குளிரூட்டியும் பலருக்குத் தூக்கத்தைத் தருவதில்லை. காரணம், இவர்கள் உள்ளம் உறங்குவதில்லை. சதா சர்வ நேரமும் சிந்தனைகள். அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டு, தோல்விகளுக்காக வருந்தி, விடியலில் சந்திக் கப்போகும் பிரச்சினைகள் பயமுறுத்த, தூக்கம் தொலைந்து போகும். இதெல் லாம் தூக்கமின்மைக்கான காரணங்கள் என்றாலும், இயற்கையாகவே சரியாகத் தூக்கம் வராதவர்களும் உண்டு.

Read more...
 
கோபத்தால் ஆகாதெனினும்...! Print E-mail
Friday, 15 May 2009 07:33

கோபத்தால் ஆகாதெனினும்...!

நமது அன்றாட வாழ்வில் வாதங்கள், சர்ச்சைகள் என்பதை ஒவ்வொரு கணத்திலும் சந்தித்து வருகிறோம். சாதாரணமாகவே எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் அதில் நம் மனதில் தோன்றிய எண்ணத்திற்குத் தடையாகவோ அல்லது நம் எண்ண ஓட்டத்திற்கு எதிரான மாற்றுக் கருத்துகளோ ஆலோசனைகளோ முன்வைக்கப்படும்போது மனதில் விசாலமின்றி அவற்றை எதிர் கொள்வதால் நமது குறுகிய சிந்தனைகள்/முன் முடிவுகள் சர்ச்சைகளுக்குத் தூபமாக அமைகின்றன.

மனநலவியல் ரீதியில் Phase of Denial என்றழைக்கப்படும் இத்தகைய குணம், எதிர்பார்ப்புக்கும் யதார்த்த நிலைக்கும் இடையில் நடக்கும் ஒரு போராட்டமே!

தினசரி அலுவலில், வியாபாரத்தில், வீட்டில், கடைத்தெருவில், பொதுவிடங்களில் என்று எங்குப் பார்த்தாலும் இந்த வாத-பிரதிவாதங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

குடும்பப் பிணைப்பிற்குள் மனைவி அல்லது கணவனோடு, பெற்றோர்களோடு, சகோதர சகோதரிகளோடு கருத்துப் பரிமாற்றங்கள் வாதங்களாகி, விவாதங்கள் விதாண்டாவாதங்களாகி, சர்ச்சைகள் முற்றி, இறுதியில் மனக்கசப்பும் விரக்தியும் ஏற்படுவது மனித வாழ்வில் ஒரு வாடிக்கையாகவே மாறிப்போய் இருக்கிறது.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 75 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article