வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

எது தர்மம்? Print E-mail
Monday, 29 May 2017 19:46

எது தர்மம்?

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.

மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.

"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள். (அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022)

Read more...
 
பெண்களுக்கு ஸகாத் கடமையா? Print E-mail
Monday, 23 March 2015 06:22

பெண்களுக்கு ஸகாத் கடமையா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை!

திருக்குர்ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:

[33:33] (நபியின் மனைவிகளே!) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.

ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு! ஆண்கள் அல்ல!

Read more...
 
ஜகாத் பெட்டி Print E-mail
Saturday, 19 May 2018 13:48

ஸகாத் பெட்டி

     முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி     

[ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?

ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் "ஸகாத் பெட்டி" ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.

தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் "நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த "ஸகாத் பெட்டியில் போடுங்கள்" என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.]

Read more...
 
ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண் Print E-mail
Sunday, 27 July 2014 00:04

ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று.

ஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள்.

பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும்; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி.

ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம்.

Read more...
 
கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக்கொண்டிருக்கிறது Print E-mail
Sunday, 12 April 2020 10:53

o  கரோனா விடுமுறை எடுக்காமல் பரவிக் கொண்டிருக்கிறது!

o  அமெரிக்காவில் கரோனா அதிகமாக பரவ காரணம்...

o  கரோனாவை விரட்ட கழிப்பறைச் சுத்தமும் முக்கியம்!   

o  தும்மலும் இருமலும்தான் கரோனா பரவுவதன் முக்கியமான காரணிகளா?

Read more...
 
பதவி ஆசை கொடூரமானது, ருசி கண்டவர்களை அது விடாது! Print E-mail
Sunday, 05 February 2012 08:50

பதவியாசை கொடூரமானது, ருசிகண்டவர்களை அது விடாது!

  கா. அஹ்மத் அலீ பாகவி 

[ ‘முஸ்லிம் குடி மக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால் அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தை தடைசெய்து விடுகிறான்.’ (நூல்: புகாரி) இந்த நபிமொழி, பதவியாளர்களுக்கு விடப்பட்ட பகிரங்க எச்சரிக்கையாகும்.

கோர்ட்டு, வழக்கு என்று வக்ஃபுச் சொத்துக்களை வீணடிக்கின்ற பொறுப்பாளர்கள், மு(த்)தவல்லி பொறுப்பை இறுக்கிப் பிடித்துக்கொண்டு மார்க்கத்தை அப்பட்டமாக மீறுகின்ற, பொதுப்பணத்தை சூறையாடி வயிற்றுக்குள் நெருப்பை அள்ளிக் கொட்டிக் கொள்கிற ஜமாஅத் நிர்வாகிகள் மேற்படி நபிமொழியை மீண்டும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.]

முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் அந்த ஊர் என்றைக்கும் இல்லாமல் பரபரப்புடன் காணப்பட்டது. விசாரித்தபோது ஜமாஅத் நிர்வாகிகள் தேர்வு ஓரிரு நாளில் நடைபெறப்போவதாக சொன்னார்கள். இரு கோஷ்டி தலைவர்கள் களம் காண்கின்றனர். அதனால்தான் இவ்வளவு பரபரப்பு என்றனர். தேர்தல் முடிந்து விட்டதா? என்று சிலநாட்கள் கழித்து விசாரித்தபோது போட்டி கடுமையாகி கலவரச்சூழல் ஏற்பட்டு குழப்பம் நிலவியதால் நிர்வாகம் செலற்றுப்போனதாக ஊர் மக்கள் கவலைப்பட்டனர்.

நம்மில் பலர் இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். பதவியைப் பிடிப்பதற்காக மேற்கொள்கிற சிரமத்தில் ஒருபங்குகூட அந்தப் பொறுப்பை நிர்வகிப்பதில் செலவிடுவதில்லை. உலகிற்கே தீர்ப்பளிக்க வேண்டிய இந்த நடுநிலை சமுதாயத்தின் பதவிப் பிரச்சனைகளுக்கு காவல் நிலையமம் நீதி மன்றமும் தான் தீர்ப்பளிக்க வேண்டியுள்ளது.

Read more...
 
தூயவனை நெருங்க தூய்மை அவசியமே! Print E-mail
Sunday, 12 February 2012 07:54

தூயவனை நெருங்க தூய்மை அவசியமே!

உலக மக்களில் பெரும்பாலானவர்கள் கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள்.கடவுள் நம்பிக்கை கொண்ட பலர் கடவுளை சரியாக புரியாத காரணத்தினால் பல பிரச்சினைகளுக்கும், சிக்கள்களுக்கும் ஆளாவதை நாம் கண்டு வருகிறோம்.

கடவுளின் கடவுள் தன்மையை சரியாக விளங்காமை, கடவுளை நெருங்குவதற்காக சரியான முறையை அறியாமை இதுபோன்ற பல காரணங்களினால் இன்றைக்குப் பலர் கடவுளுக்காகவென்று தங்கள் சொத்துக்களையும், செல்வங்களையும் இழந்து நடுத்தெருவில் நிற்பதைப் பார்க்கிறோம்.

இன்னும் சிலரோ தான் கடவுளை எப்போதும் நினைக்க வேண்டும், கடவுளுக்கு பணிவிடைகள் செய்ய வேண்டும் என்பதற்காக தனது உடல், உள தூய்மையைப் பற்றியோ அல்லது கடவுளை நெருங்கியதாக சொல்லிக் கொள்பவர்களின் தூய்மையைப் பற்றியோ கொஞ்சம் கூட சிந்திக்காமல் அசுத்தங்களின் மொத்த உருவங்களாக, அழுக்குகளின் பிறப்பிடங்களாக மாறியிருக்கிறார்கள்.

Read more...
 
நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்! Print E-mail
Sunday, 21 July 2013 10:44

Image result for avoid bypass operation

நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்!

இது உண்மைச் சம்பவம்....

இச்செய்தியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தயவு செய்து கவனியுங்கள். உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன் நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்!

தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Read more...
 
வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்! Print E-mail
Friday, 26 December 2014 08:01

வியர்வை நாற்றத்தை ஒரே நாளில் நீக்கலாம்!

பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும். ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும்.

சிலர் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களை உடலெங்கும் பூசி இருப்பதும் நமக்கு தெரிந்த ஒன்று தான், வியர்வை துர்நாற்றம் அடிக்கிறது என்கிறது மருந்து கேட்டால் வியர்வை வராமல் செய்துவிடும் ஆபத்தான மருந்துகளும் கிடைக்கிறது,

சரி சித்த மருத்துவரிடம் சென்று மருந்து கேட்டால் அவர் 5 வகையான கூட்டு சரக்கு மருந்து இதை அரைத்து தினமும் பூச வேண்டும் என்று சொல்கின்றனர், இவற்றை எல்லாம் தாண்டி ஒரு அதிசயம் கடந்த மாதம் நண்பர் ஒருவர் மூலம் இயற்கை உணர்த்தியது.

மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்யும் நபர் ஒருவர் வியர்வை நாற்றம் தனக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது, வாசனைத்திரவியங்களை தாண்டியும் கூட சில நேரங்களில் தன் உடலில் இருந்து நாற்றம் அடிக்கிறது என்று பலமுறை நம்மிடம் தெரிவித்து இருந்தார், எல்லோருக்கும் இருக்கும் சாதாரண விசயம் தானே என்று அலட்சியமாக இருந்தோம் ஒருநாள் மிகுந்த மனவருத்தத்தோடு வந்தார். தன் நண்பர்கள் கூட இப்போது அருகில் வந்து பேசுவதில்லை என்றார். இப்போது தான் இதன் முக்கியத்துவம் நமக்கு தெரிந்தது.

வியர்வை நாற்றத்தை நீக்கும் அந்த கனி ”எலுமிச்சை“ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா? சரியாக மூன்று மணி நேரம் தான்!

Read more...
 
மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா? Print E-mail
Thursday, 31 October 2013 06:53

மூளைச்சாவில் இருந்து ஒருவர் மீள முடியுமா?

நான் போன மாதம் என் வேலை விஷயமாக ஒருவரை சந்தித்தேன். அவர் ஒரு ஹிந்து. நன்கு படித்து ஈரோட்டில் சொந்தமாக ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியும் ஒரு ஸ்கூலும் நடத்தி வருபவர். என் கணவரின் உடல்நிலை பற்றியும், மூளையில் ஹெமரேஜ் ஆனது பற்றியும் வலது கை இயக்கம் சரியாக மருந்தே இல்லை என்றும் சொன்னேன். அதற்கு அவர் சொன்ன விஷயங்கள் அப்படியே அவரின் மொழியில் தருகிறேன்:

”உங்க பெற்றோர் வீடு இருப்பதாக சொல்லும் கந்தசாமி வீதியில் குடியிருக்கும் முஹம்மத்அலி-யை உங்களுக்கு தெரியுமா?”

“தெரியும் ஆனால் அவ்வளவாக பழக்கம் இல்லை”

“மேடம்... அவருடைய பேரன் 3 வயது குழந்தை. பிறந்ததில் இருந்து ஹார்ட்டில் சின்னதாக ஒரு பிரச்சினை இருந்து வந்தது. அவர்கள் குடும்பம் இருப்பது சவூதியில். அவர்கள் அக்குழந்தையை அழைத்துக் கொண்டு ஹஜ்ஜுக்கும் சென்று வந்தனர். அக்குழந்தை கிராஅத் ஓதும் அழகைக் கண்டு சவூதிகளே வியந்து பாராட்டி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த குழந்தை இந்தியாவில் இருந்த போது திடீரென்று சுயநினைவை இழந்து விட்டது. அக்குழந்தையை ஒரு ஹாஸ்பிடலில் சேர்த்து சிகிச்சை அளித்தார்கள்.

என்ன செய்தும் குழந்தைக்கு சுயநினைவு மட்டும் வரவே இல்லை. இதற்கும் மேல் இதற்கு ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டார்கள்.

Read more...
 
அல்லாஹ் ''அர்ஷ்'' மீது உள்ளான் Print E-mail
Thursday, 26 August 2010 10:15

அல்லாஹ் ''அர்ஷ்'' மீது உள்ளான்

       டாக்டர் யூ.எல். அஹ்மத் அஷ்ரஃப்       

பேராசிரியர், மன்னர் காலித் பல்கலைக்கழகம்-அப்ஹா, சவூதி அரேபியா

குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் தீர்ப்புக்களுக்கிணங்க அல்லாஹ் அர்ஷ் மீது உள்ளான் என நம்புவது ஒவ்வொரு முஸ்லீம் மீதும் கடமையாகும்.

அர்ஷ் எனும் சிம்மாசனம் ஏழு வானங்களுக்கும் அப்பால் உள்ளது, அதுதான் படைப்புகளின் இறுதிப்பகுதியாகும், அர்ஷின் கீழ்தான் சுவர்க்கம் உள்ளது.

ஸஹாபாக்கள், தாபியீன்கள், மரியாதைக்குரிய நான்கு இமாம்களாகிய அபூ ஹனீஃபா ரஹ்மதுல்லாஹி அலைஹி, மாலிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி, ஷாஃபீஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி, அஹ்மத் பின் ஹம்பல் ரஹ்மதுல்லாஹி அலைஹிஆகியோர்களும்

மற்றும் ஹதீஸ் கலையில் பிரசித்தம் பெற்ற இமாம்களாகிய புகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி, முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி, அபூதாவுத் ரஹ்மதுல்லாஹி அலைஹி, திர்மிதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, நஸாயி ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் இப்னு மாஜா ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள்.

இன்னும் முஸ்லிம்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமான முஹ்யத்தீன் அப்துல்காதிர் ஜீலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் இக்கொள்கையைத்தான் வலியுறுத்துகிறார்கள்.

Read more...
 
இஸ்லாம் ஓர் அதிசயம் Print E-mail
Friday, 11 June 2010 22:13

இஸ்லாம் ஓர் அதிசயம்

ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால்நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா.

ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா? அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை.. திருக்குர்ஆன் சரியில்லை என்று அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும்.

ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

Read more...
 
'முகஸ்துதி'யைவிட்டு தவிர்ந்து கொள்வோம்! Print E-mail
Wednesday, 13 January 2010 07:47

'முகஸ்துதி'யை

 

விட்டு தவிர்ந்து

 

கொள்வோம்!

MUST READ

நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் ''யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாள்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நால்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். (அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி-6499)

தனிமையில் ஒரு நன்மையைச் செய்வதை விட, பிறர் இருக்கும் போது தான் அதில் அதிக ஈடுபாடு காட்டி செய்கிறோம். ஏன்? அடுத்துவர்கள் மெச்சம் வேண்டும் என்தற்காக! வேலை செய்யாமல் சோம்பாலாக இருக்கும் தொண்டர்கள், தலைவர் வந்தால் சுறுசுறுப்பாக வேலைகளைச் செய்வார்கள். அவரிடத்தில் நற்பெயர் எடுக்கவேண்டும் என்பதற்காக!

இவ்வாறு மறுமை வெற்றியை முன்னிலைப் படுத்தாமல், மறுமையில் நன்மை தரும் செயல்களில் முகஸ்துதியை விரும்பினால், அதனால் நன்மை கிடைக்காததோடு தண்டனையும் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

Read more...
 
சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குவோம் Print E-mail
Tuesday, 14 May 2013 06:31

சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குவோம்

அல்லாஹ் கூறுகின்றான்...

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

''நிச்சயமாக முஃமின்கள் (அனைவரும்) சகோதரர்களே. ஆகையால் உங்களுடைய சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குங்கள். மேலும் உங்கள் மீது ரஹ்மத் (கருணை) செய்யப்பட வேண்டுமானால் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (சூரா ஹுஜுராத் 49:10)

மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு மத்தியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்துவது, முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் இல்லாமல் வாழ்வது நம் கடமை என்பதை உணரலாம்.

அல்லாஹ் கூறுகின்றான்...

مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا

''(உங்களில்) எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அந்த (நன்மையில்) ஒரு பாகம் அவருக்கு உண்டு. (சூரா நிஸா 4:85)

Read more...
 
பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்! Print E-mail
Saturday, 07 March 2020 07:25

Image result for பாபர் மஸ்ஜித்

பாபர் மஸ்ஜித் வழக்கு தீர்ப்பினை மறு சீராய்வு செய்யக்கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் வடக்கு மண்டல செயலாளர் அனீஸ் அன்சாரி அவர்கள் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து மறு சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி S.A பாப்டே மற்றும் நீதிபதிகள் D.Y சந்திர சூட், அசோக் பூஷன், S. அப்துல் நசீர், சஞ்சீவ் கன்னா ஆகியோர் பாபர் மஸ்ஜித் நில உரிமை வழக்கில் பல்வேறு தரப்பினரும் தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுக்களை திறந்த நீதிமன்றத்தில் (Open Court) விசாரிக்காமல் நீதிபதிகளின் தனியறைகளில் (Chamber) விசாரணை நடத்தி கடந்த 12.12.2019 அன்று தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில் கடந்த 11.02.2020 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் மறு சீராய்வு (Curative Petition) மனு தாக்கல் செய்யப்பட்டு, அது உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்காக தேதி நிர்ணயிக்கப்பட்டு பட்டியிலப்பட உள்ளது.

Read more...
 
தீர விசாரிப்பதே மெய்! Print E-mail
Monday, 25 July 2011 07:49

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِن جَاءكُمْ فَاسِقٌ بِنَبَأٍ فَتَبَيَّنُوا أَن تُصِيبُوا قَوْمًا بِجَهَالَةٍ فَتُصْبِحُوا عَلَى مَا فَعَلْتُمْ نَادِمِينَ.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:6)

[ o மாமியாரைப் பற்றி...

o மருமகளைப் பற்றி...

o நண்பர்களுக்கு மத்தியில்...

o தீர விசாரிப்பதே மெய்.

o அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஆட்சி காலத்தில் ஓர் நாள்.]

யாராவது ஒருவர் தரக் கூடியத் தகவலை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு யாருடைய விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம் என்றும் நன்றாக விசாரித்தே சிறந்த முடிவை மேற்கொள்ள வேண்டும் தவறினால் கைசேதப்படுவீர்கள் என்று 1400 வருடங்களுக்கு முன் உலக பொதுமறை திருமறைக் குர்ஆன் மனித சமுதாயத்தை நோக்கி எச்சரிக்கை விடுத்தது.

நம்புவது போன்று பேசிக் கழுத்தறுப்பதும், பார்ப்பது கேட்பது போன்று செட்டப் செய்து நாடகமாடுவதும் சிலருக்கு கை வந்த கலை என்பதால் கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று முன்னோர்கள் கூறினர்.

Read more...
 
அருள்மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும் Print E-mail
Thursday, 02 June 2011 09:54

அருள்மறையின் அற்புதமும் மானிடத்தின் இயலாமையும்

1400 வருடங்களுக்கு முன்னர் அருளப்பட்ட அருள்மறை அல்குர்ஆன் இன்றுவரை அதன் அசல் வடிவில் பாதுகாக்கப்பட்டு இருப்பதானது அதன் நிரந்தர அற்புதத் தன்மையை காட்டி நிற்கின்ற அதேவேளை வானிலிருந்து இறக்கியருளப்பட்ட வேதங்களில் அல்குர்ஆன் மாத்திரம் எவ்விதத் திரிபுகளுக்கும் அப்பாற்பட்டிருப்பதானது அதன் புனிதத் தன்மையையும் உலகிற்கு உரத்துச் சொல்லி நிற்கின்றது.

''தௌறாத்'' வேதம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட இறை வேதம் என்பதை நாம் யாவரும் அறிவோம். ஆனால் இன்று அவர்களிடம் உள்ள வேதம் மூஸாவின் மீது இறக்கப்பட்ட வேதம் கிடையாது. அவர்கள் மரணித்ததன் பிற்பாடு பல நூற்றாண்டுகள் கடந்து புதுமையாகப் புகுத்தப்பட்ட வேத வாக்கியங்களின் மொத்த வடிவமே இன்று அவர்களிடம் காணப்படுகிறது. இதனை அல்குர்ஆன் பின்வருமாறு சுட்டிக்காட்டுகிறது.

''யூதர்களில் சிலர் வார்த்தைகளை அதற்குரிய இடங்களில் இருந்து மாற்றுகின்றனர்.'' (அல்குர்ஆன் 4:46)

அதே போன்று இன்று கிறிஸ்தவர்களிடம் காணப்படுகின்ற ''இன்ஜீல் மத்தே'', ''மொர்கிஸ்'', ''லோகா'', ''யோஹ்னா'' போன்ற வேதங்களுக்கும் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட ''இன்ஜீல்'' வேதத்திற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது.

Read more...
 
தகாபுல் - இஸ்லாமியக் காப்புறுதி Print E-mail
Friday, 13 May 2011 08:32

தகாபுல் - இஸ்லாமியக் காப்புறுதி

  இர்ஃபான் அஷ்கர்  

தகாபுல் என்ற சொல் பரஸ்பரம் உதவிக்கொள்ளுதல் என்ற மொழிக்கருத்தைக் கொடுக்கின்றது. அதாவது இரு சாராருக்கிடையிலான ஒரு கூட்டுறவு ஒப்பந்தத்தின் படி ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதாகும். எதிர் காலத்தில் மனிதனுக்கோ அல்லது ஏதாவது நிறுவனங்கள் மற்றும் இயந்திரங்களுக்கோ ஏற்படக்கூடும் எனக் கருதும் இழப்பிற்கு முன்கூட்டியே பாதுகாப்பு நடவடிக்கை ஒன்றைச் செய்து கொள்வதையே காப்புறுதி (தகாபுல்) என்கின்றோம்.

 தோற்றப் பின்னனி:

பண்டைய அரபிகளிடத்தில் ‘ஆகிலா’ முறையிலான காப்புறுதி நடைமுறையில் இருந்து வந்தது. ஒருவர் கொலை செய்யப்பட்டால் கொலை செய்தவரின் குடும்பத்தினர் அதற்கான தண்டப்பணத்தை கொலை செய்யப்பட்டவரின் வாரிசுகளுக்கு செலுத்தினர்;. இவ்வாறு பணம் செலுத்துபவர்கள் ஆகிலா என்றளைக்கப்பட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இத்தகைய காப்புறுதி வகையை அங்கீகரித்தார்கள்.

Read more...
 
அநாதைகளை ஆதரிப்போம் Print E-mail
Wednesday, 08 September 2010 13:56

எம்பெருமானார் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அநாதைகளை ஆதரியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

அயலவர்களை ஆதரியுங்கள், நோயாளர்களை பார்வையிடுங்கள், அவர்களது சுகத்திற்காக பிரார்த்தனை புரியுங்கள், அண்டை வீட்டான் பசித்திருக்க தான் மாத்திரம் புசிப்பவன் என்னைச் சார்ந்தவன் அல்ல என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்.

அல்லாஹ்வின்  கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் என அல்-குர்ஆன் கட்டளையிடும் போது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒற்றுமை பற்றி எவ்வளவோ வரைவிலக்கணங்களை விரிவாக விளக்கியுள்ளார்.

ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு துன்பம், நோய் இடையூறு ஏற்படுமிடத்து அதற்காக முன்னின்று உதவக் கூடியவன் மற்றுமொரு முஸ்லிமாகவே இருக்க வேண்டும்.

Read more...
 
முஸ்லிம்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல! Print E-mail
Friday, 20 May 2011 11:20

இது ஒரு தமிழரின் பார்வை...

இந்தக் கட்டுரையின் நோக்கம் நேரடியாகவே சொல்வதற்கு முனைவது தான்.

[ பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே...

அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே..! அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?

கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.]

நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.

ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.

Read more...
 
கண் மூடிக் கொண்ட பின்னால்... Print E-mail
Wednesday, 19 August 2015 06:59

கண் மூடிக் கொண்ட பின்னால்...

  அபூ சுமையா, நாகை.  

சாவின் பெயராலும் அனாச்சாரங்கள்....

கண்களிரண்டும் மூடிக் கொள்கின்றன – மீண்டும் திறவா வண்ணம். “இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்”.

சகப்பு மாற்றுகிறார்களோ என்னவோ அதற்குள் கசாப்புக் கடைக்கு ஆள் போகும். மளிகைக் கடைக்கு வேறொரு ஆள் பறக்கும். பண்டாரியைத் தேடிக்கொண்டு வரச் சொல்லிப் பல குரல் எழும்பும்.

வழியின்றி வேதனைகளை அனுபவித்து ஓய்ந்து போனவனை மண் மூடிக் கொண்ட பின், கூடி அமர்ந்து உண்டிட!.. என்ன கேவலம்!

சாப்பிட வேண்டியதுதான். ஆண்டான்டு அழுதாலும் மாண்டவன் மீள மாட்டான் தான். பொறுமையைப் கைக் கொண்டு பணியைத் தொடரத்தான் பணிக்கிறது இஸ்லாம். அதற்காக இப்படியா? அதுவும் நெய்ச்சோறும் குருமாவும்!

தூர தொலைவிலிருந்து வரும் உற்றார் உறவினர்களுக்காகத்தான் இந்த ஏற்பாடு எனச் சப்பைக் கட்டு கட்டுவார்கள். சரி! அவர்கள் எளிய சோறு சாப்பிட மாட்டார்களா? பிரியானிக்காகத்தான் புறப்பட்டு வந்தார்களா? எளிய இல்லங்களைக்கூட இந்தப் பாழும் வழக்கம் விட்டு வைக்கவில்லையே? மார்க்கத்தின் பெயரால் ஒரு கடமையைப் போலன்றோ ஆக்கி விட்டார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 74 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article