வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

தர்மத்தின் சிறப்புகளை உணர்த்தும் பொன்மொழிகள் Print E-mail
Tuesday, 05 June 2012 06:13

  தர்மத்தின் சிறப்புகளை  உணர்த்தும் பொன்மொழிகள் 

o  குடும்பத்திற்குச் செலவு செய்வதும் தர்மமே!

o  அறம் செய்தோர் அர்ஷின் நிழலில்..

o  இறந்தவருக்காக தர்மம்

o  வங்கியில் வளரும் தர்மம்

o  பெருநரகை விட்டு காக்கும் சிறு பேரீச்சம்பழம்

o  மனைவியின் தர்மத்தில் கணவனுக்குப் பங்கு

o  சிறந்த தர்மம் எது?

o  இறுக்கினால் இறுகி விடும்

o  இறைவனிடம் கையேந்தும் இரு மலக்குகள்

o  சுவனத்தின் ஸதகா வாசல்

o  மரம் நடுதல்

o  உறவினருக்கு உதவுவதில் உயர்ந்த கூலி

o  அல்லாஹ் சொல்லும் சேதி

o  தர்மமே நமது சொத்து

o  அல்லாஹ்வின் மன்னிப்பு

Read more...
 
"அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது" Print E-mail
Wednesday, 06 June 2012 08:00

''அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.'' (அல் குர்ஆன் 12:111)

ஒவ்வொரு வருடமும் இரு பெருநாட்களும் நம்மைக் கடந்து சென்று கொண்டே தான் இருக்கிறது. நாமும் புத்தாடைகள் அணிந்து மகிழ்ச்சியோடு இரு பெருநாட்களையும் வழியனுப்பிக் கொண்டு தான் இருக்கின்றோம். ஆனால் இந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் மாற்றங்களையும் நாம் பெற்றிருக்கின்றோமா? என்பது தான் இப்போது நாம் மிகவும் அவசியமாக அலச வேண்டிய விஷயமாகும்.

நோன்புப் பெருநாளாக இருந்தாலும், தியாகத் திருநாளாகிய ஹஜ்ஜுப் பெருநாளாக இருந்தாலும் அந்தந்த கால கட்டங்களில் அந்தப் பெருநாட்களின் மூலம் நாம் பெற வேண்டிய பாடங்கள் மக்களுக்கு போதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன.

உதாரணத்திற்கு இப்போது நம்மை கடந்து சென்ற ஹஜ்ஜுப் பெருநாளை எடுத்துக் கொள்வோம். ஹஜ்ஜுப் பெருநாள் என்ற பெயரைக் கேட்டாலே நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும், அவர்களுடைய மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துணைவியார் அன்னை ஹாஜரா அலைஹிஸ்ஸலாம் ஆகிய இவர்களின் வரலாறுகளும், தியாகங்களும் தான் நம்முடைய மனதிற்கு வருகின்றது.

இறைவன் ஏன் இந்தச் சரித்திரங்களைக் கூற வேண்டும்?

நாம் கதை போல் கேட்டு விட்டுச் செல்வதற்காகவா?

இல்லை, அவற்றிலிருந்து படிப்பினை பெற வேண்டும் என்பதற்காகவா?

Read more...
 
முஸ்லிம் ஒரு பயனுள்ள மனிதர் Print E-mail
Tuesday, 02 October 2012 05:47

முஸ்லிம் ஒரு பயனுள்ள மனிதர் 

  கோவை மௌலானா அப்துல் அஜீஸ் பாஜில் பாகவி . 

[ அல்லாஹ் நம்மில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் நன்மை செய்வதற்குரிய ஒரு வாய்ப்பை அல்லாஹ் வழங்கியிருக்கிறான். ஆனால் நாம் என்ன செய்கிறோம். நமக்கு மற்றவர்கள் என்ன செய்தார்கள் என்று பார்க்கிறோமே தவிர நாம் மற்றவர்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிப்பதில்லை.

பள்ளி வாசலுக்கு சென்று நான்ஃபேன் போடக்கூடாதா? என்று சண்டை போடுகிற நாம், மின்சாரத்திற்கு எவ்வளவு கொடுத்திருப்போம் என்று யோசிப்பதில்லை.

நேர்மையாக நடந்து கொள்கிற முஸ்லிம்களை காணோம். இரக்கப்படுகிற, இனிமையாகப் பேசுகிற, உபகாரம் செய்கிற, உண்மையாக வாழ்கிற முஸ்லிம்களை காணோம். ஒரு சில நல்ல காரியங்களைச் செய்தாலும் அதில் தாங்கள் சார்ந்திருக்கிற இயக்கம் அல்லது அமைப்புக்கு பெயர் தேடித்தருவதற்காக செய்கிறார்கள். பிரதிபலனை எதிர்பாராமல் எல்லோருக்கும் பொதுவான நல்ல காரியங்களில் உழைக்க முஸ்லிம்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.]

Read more...
 
சுவர்க்கவாசிகளின் உணவு எது? Print E-mail
Tuesday, 19 October 2010 11:20

 

மவ்லவீ, S.முஹம்மது லியாகத் அலீ மன்பஈ

அண்ணலார் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஊழியர் தவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

‘நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமூகத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது யூதர்களின் மார்க்க அறிஞர்களில் ஒருவர் அஙகு வந்தார். ‘அஸ்ஸலாமு அலைக்க யா முஹம்மத்’ என்று சொன்னார். உடனே எனக்கு கடும் கோபம் வரவே அவரைப்பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். அதனால் அவர் கீழே விழுந்துவிடப் பார்த்தார்.

‘ஏன் என்னை பிடித்துத் தள்ளுகின்றீர்?’ என்று என்னிடம் அவர் கேட்டார்.

"யா முஹம்மத் என்று எங்கள் உயிரினும் மேலான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பெயர் சொல்லி அழைக்கின்றீர். ‘யா ரசூலல்லாஹ்’ என்று சொல்லி அழைக்க வேண்டியது தானே!" என்று கடிந்தேன்.

அதற்கு அவர், ‘நான் அவர்களை அன்னாரின் குடும்பத்தார்கள் சூட்டிய பெயர் சொல்லித்தானே அழைத்தேன். அதில் என்ன தவறு?’ என்று திருப்பிக் கேட்டார்.

எங்களுக்குள் நடைபெறும் தகராறை முடித்து வைக்கும் முகமாக அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘நிச்சயமாக என் குடும்பத்தார் எனக்கு சூட்டிய பெயர்தான் முஹம்மது. அதைச் சொல்லி அவர் அழைத்தது சரிதான்’ என்று கூறி அவரை வரவேற்றார்கள்.

Read more...
 
'அந்த கழுதையின் பிணத்தின் மாமிசத்தை திண்ணுங்கள்'!!! Print E-mail
Monday, 18 October 2010 06:57

  மவ்லவி, லியாகத் அலீ மன்பஈ  

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருச்சபையில் ‘மாயிஸ்’ என்ற தோழர் வந்து, தான் ஒரு பெண்ணுடன் தவறான முறையில் நடந்து கொண்டதாகச் சொன்னார். அவரின் சொல்லை நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தார்கள்.

எனவே அவர் மீண்டும் மீண்டும் சொன்னார். நான்கு தடவை சொல்லி முடித்தார். அப்பொழுதும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதுவும் பேசவில்லை.

ஐந்தாவது முறை அவர் சொல்லும்போது அவரிடம் ‘நீர் அவளுடன் உடலுறவு கொண்டீரா?’ என்று கேட்டார்கள்.
‘ஆம்!’ என்றார் அவர். 

‘உன்னில் நின்றும் ‘அது’ அவளின் நின்றும் ‘அதிலே’ மறையுமளவுக்கு நடந்தீரா?’ என்று மீண்டும் வினவினார்கள்.
மறுபடியும் ‘ஆம்!’ என்றார் அவர்.

அப்பொழுதும் அவரை குற்றவாளி என்று ஒப்ப பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மனம் வரவில்லை. மேலும் தொடர்ந்து பல கேள்விகள் கேட்டார்கள்.

‘சுர்மா புட்டியிலே சுர்மா குச்சி மறைவது போலவும், கிணற்றுக்குள்ளே கயிறு மறைவது போலவும் மறைந்ததா?’ என்று கேட்டார்கள். 

‘ஆம்!’ என்றே மறுபடியும் அவர் கூறினார்.

‘விபச்சாரம் என்றால் என்னவென்று தெரியுமா?’ என்று கேட்டவுடன், அவர் விஷயத்தை படு பயங்கரமாக வெளிப்படுத்த விரும்பியவராக, ‘ஆம்! ஓர் ஆண்மகன் தன் மனைவியுடன் ‘ஹலாலாக’ நடந்து கொள்வானே அதே காரியத்தை அப்பெண்ணுடன் நான் ‘ஹராமாக’ நடத்தி விட்டேன்’ என்றார்.

‘இவ்வாறு சொல்வதன் மூலம் உமது நோக்கம் யாது?’ என்று இறுதியாகக் கேட்டார்கள்.

Read more...
 
வஹனிலிருந்​து விடுபடுவோம் வலிமை பெறுவோம் Print E-mail
Wednesday, 05 December 2012 08:27

வஹனிலிருந்​து விடுபடுவோம் வலிமை பெறுவோம்

      ஹஸனீ       

عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعى عليكم كما تداعى الأكلة إلى قصعتها فقال قائل ومن قلة نحن يومئذ قال بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقال قائل يا رسول الله وما الوهن قال حب الدنيا وكراهية الموت

உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் செளபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு நேரம் வரும் உலக நாடுகள் உங்களுக்கு (இஸ்லாத்திற்கு) எதிராக ஒன்று கூடுவார்கள். இன்னும் உங்களுக்கு எதிராக செயல்பட மற்றவர்களையும் அழைப்பு கொடுப்பார்கள் அந்த அழைப்பு எப்படி இருக்கும் என்றால் பசியோடுள்ளவன் உணவுத்தட்டின் பக்கம் மற்றவர்களை அழைப்புகொடுப்பது போன்றிருக்கும்.

ஒரு நபித்தோழர் கேட்டார்கள் அந்த நாளில் நாம் சிறுபான்மையினராக இருப்போமா?

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: இல்லை நீங்கள் எண்ணிக்கையில் மிகுந்து இருப்பீர்கள் ஆனால்,வெள்ளத்தின் நூரையைப்போன்று இருப்பீர்கள்.

இறைவன் உங்களைப்பற்றிய பயத்தை உங்கள் எதிரிகளின் மனதிலிருந்து எடுத்துவிடுவான். உங்களின் உள்ளத்தில் வஹன் வந்து விடும்.ஸஹாபாக்கள் கேட்டார்கள் : "யா ரஸுலுல்லாஹ் வஹன் என்றால் என்ன?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "உலக ஆசையும், மரணத்தைப்பற்றிய பயமும் தான். (அபூதாவூத்)

Read more...
 
கதைகளின் பின்னணியில் – ஒளியிலிருந்து...! Print E-mail
Sunday, 24 November 2013 06:55

கதைகளின் பின்னணியில் – ஒளியிலிருந்து...!

எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அடியார்களில் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மிகச் சிறந்தவர்களாக ஆக்கியுள்ளான்; அவர்களை இறுதி நபியாகவும், மறுமையில் ‘ஷஃபாஅத்’ என்னும் பரிநந்துரை செய்பவர்களாகவும், ‘மகாமுன் மஹ்மூத்’ என்ற உயர் பதவிக்கு உரியவர்களாகவும் அவர்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்துள்ளான் என்பதில் முஸ்லிம்களிடையே கருத்து வேறுபாடு இல்லை.

அல்லாஹ் அவர்களுக்கு எந்தச் சிறப்புகளை வழங்கி இருப்பதாகக் கூறி இருக்கிறானொ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், எந்த சிறப்புகள் தனக்கு இருப்பதாகக் கூறியுள்ளார்களோ. அவற்றைத் தவிர நாமாகப் புகழ்கிறோம் என்ற பெயரில் கற்பனைக் கதைகளை கட்டி விடுவது மிகப் பெரும் குற்றமாகும். காரணம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உரிய தனிச்சிறப்புகள் அல்லாஹ் சொல்லாமல் நாமாக அறிந்து கொள்ள இயலாத ஒன்றாகும். இவ்வாறு வரம்பு மீறிப் புகழ்வதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

“ஷைத்தான் உங்களைக் கெடுத்து விட வேண்டாம். நான் அப்துல்லாவின் மகன் முஹம்மதாவேன். மேலும் அல்லாஹ்வின் தூதருமாவேன். அல்லாஹ் எனக்கு வழங்கியுள்ள தகுதிக்கு மேல் என்னை நீங்கள் உணாத்துவதை நான் விரும்ப மாட்டேன்.” (நூல்கள் : அஹ்மத், பைகஹீ, ஸுனன் ஸயீது இப்னுமன்ஸுர்.)

“எனது தகுதிக்கு மேல் என்னை உயர்த்தாதீர்கள்! ஏனெனில் அல்லாஹ் என்னை (அவனது) தூதராக ஆக்குமுன்பே என்னை (அவனது) அடியானாக ஆக்கி விட்டான்.” (நூல்கள் : ஹாகீம், தப்ரானி)

“கிறிஸ்தவர்கள் மர்யமுடைய மகன் ஈஸாவை வரம்பு மீறி புகழ்ந்தது போல், என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள்." (நூல்கள் : புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயில் திர்மிதீ, மஜ்வுல் பவாயித்)

Read more...
 
குறை சொல்லிப் புறம்பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான் Print E-mail
Friday, 22 October 2010 08:49

''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). (அல்குர்ஆன்104:1-9)

இன்று புறம் பேசுவது மனிதர்களிடையே ஒரு பொழுது போக்கு போல் ஆகிவிட்டது. இது இம்மை மறுமை இரண்டிலும் மனிதனை நாசமாக்கிவிடும். ஆனால் அதை அவர்கள் உணர்வதே இல்லை. புறும் என்பது ஒருவருடைய குறையை அவருக்குப் பின்னால் பேசுவதாகும். இச்செயலை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. இருந்தபோதும் புறம் பேசாத மக்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். காரணம் அக்குற்றத்தின் கடுமையை மக்கள் சரியாக உணரவில்லை.

கொலை, களவு, விபச்சாரம், மது அருந்துவது போன்றவை தீய நடத்தை என்பதை ஏற்றுக் கொள்ளும் மனிதன்; புறம் பேசுவதை சாதாரணமான குற்றமாக நினைக்கின்றானோ என்னவோ அதைப்பற்றி கவலையே படாதவனாக காலம் தள்ளிக் கொண்டிருக்கிறான். அதிலும் சிலருக்கு மற்றவர்களை குறை சொல்லாவிட்டால் தூக்கமே வராது என்றுகூட சொல்லலாம். மற்றவர்களைப்பற்றி எதையேனும் அவிழ்த்து விடவேண்டுமே! இல்லையென்றால் உண்ட உணவு செரிக்காதே என்கின்ற ரகமும் உண்டு.

Read more...
 
ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற! (1) Print E-mail
Friday, 02 July 2010 07:49

ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற, முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?

''நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்''. (2:208)ஷைத்தானிய சூழ்ச்சிகளை தகர்த்தெரிந்து அல்லாஹ்வின் அருளைப்பெற முஸ்லிம்கள் செய்ய வேண்டியவைகள் பற்றி அறிந்துகொள்வதற்கு முன்னர் சில அடிப்படையான விஷயங்களைத் தெரிந்து கொள்வோம்.

முஃமின்கள் (இறைவிசுவாசிகள்) மீது ஷைத்தானுக்கு அதிகாரமில்லை.

''இறைவிசுவாசிகளே! ஷைத்தானின் சூழ்ச்சிகள் மிகப் பிரம்மாண்டமாகவும் சக்திமிக்கதாகவும் தெரிந்தாலும் உண்மையில் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன் என்பதை முதலில் விளங்கிக் கொள்ளுங்கள். ஆம் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி, அவனது கட்டளைகளை சரிவர நிறைவேற்றி, அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த இறைநெறியில் வாழும் ஒரு உண்மை முஃமினுக்கு முன்னால் ஷைத்தான் மிகவும் பலஹீனமானவன். ''இன்னும் அல்லாஹ்வின் பாதுகாப்பில் உள்ள அத்தகைய முஃமின்கள்மீது ஷைத்தானுக்கு எவ்வித அதிகாரமில்லை.''

Read more...
 
இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும் Print E-mail
Tuesday, 27 March 2012 07:34

இறைவனிடம் உரிமை கலந்த உறுதியுடன் கேட்க வேண்டும்

ஒரு வீட்டின் கதவு வேகமாகத் திறக்கப்பட்டது. ஏழு அல்லது எட்டு வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனை அவனது தாய் கடுமையாக அடித்து, வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டு, "எனது எந்த பேச்சையும் கேட்காத உன்னை இனி இந்த வீட்டில் நான் பார்க்க விரும்பவில்லை, எங்கு வேண்டுமென்றாலும் போய்த்தொலை" என்று விரட்டிவிட்டு படீரென்று கதவை சாத்திக்கொண்டாள்.

வாசலில் நின்று கொண்டு சிறுவன் தேம்பித்தேம்பி அழுதான். மெதுவாக அந்த தெருவின் முனை வரை சென்றவன் ஏதோ நினைத்தவனாக திரும்பவும் அந்த வீட்டின் வாசல் படியில் வந்து அமர்ந்தான். அழுதுகொண்டும், யோசித்துக்கொண்டும் இருந்தவன் சற்று நேரத்தில் அப்படியே வாசல் படியிலேயே படுத்து உறங்கி விட்டான்.

சிறிது நேரம் கழித்து ஏதோ வேலை நிமித்தமாக அவனது தாய், வீட்டின் வாசல் கதவைத் திறந்தாள். அடித்துத் துரத்தப்பட்ட மகன் வாசலில் படுத்துறங்குவதைப் பார்த்தவள் கோபத்துடன்; தூங்கிக்கொண்டிருந்த மகனின் தலைமுடியை பிடித்து இழுத்து தர தரவென்று அவ்விடத்தைவிட்டு அவனை அப்புறப்படுத்துவதில் முனைந்தாள். சிறுவன் ஒப்பாரி வைத்து கத்த ஆரம்பித்தான்.

Read more...
 
அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்... Print E-mail
Saturday, 21 November 2009 08:40

அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்குமுன்...

    குலாம் தஸ்தகீர்    

1. அல்லாஹ்வைப் போற்றிப் புகழுதல்

 பிரார்த்தனை செய்வதற்கு முன் அல்லாஹ்வைப் போற்றிப் புகழவேண்டும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் கூறவேண்டும். அது ஏனெனில், நிச்சயமாக நீர் அல்லாஹ்விடம் அவனுடைய அருட்கொடைகளை, கருணைகளை, பாவமன்னிப்பை கேட்கப்போகிறீர். எனவே, அல்லாஹ்வுடைய தகுதிக்கேற்றவாறு எதிலே புகழ்வார்த்தையும், மேன்மைப்படுத்திப் பேசுதலும் இருக்குமோ அத்தகைய ஒரு முன்னுரையை நீர் முதலில் அவனுக்காக முற்படுத்துவதே இவ்விடத்தில் பொருத்தமான ஒரு செயலாக இருக்கும்.

இதற்குச் சான்றாக பின்வரும் நபிமொழியைப் பாருங்கள்!

''அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அமர்ந்திருந்தபோது, ஓர் ஆடவர் அந்நேரம் வந்தார். தொழுது முடித்தார். பின்னர், யாஅல்லாஹ்! எனக்கு நீ பாவம் பொருத்தருள்வாயாக! எனக்கு நீ அருள் செய்திடுவாயாக! என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'தொழுது முடித்தவரே! நீர் அவசரப்பட்டுவிட்டீர்! நீர் தொழுது முடித்தால் அல்லாஹ் அவனுக்குத் தகுந்தவைகளைக் கொண்டு புகழ்வீராக! பின்னர் என்மீது ஸலவாத்துக் கூறுவீராக! பின்னர் அவனிடம் பிரார்த்திப்பீராக!'

Read more...
 
பொருளுணர்ந்து 'துஆ"ச்செய்வோம் Print E-mail
Tuesday, 03 December 2013 10:57

Image result for பொருளுணர்ந்து 'துஆ"ச்செய்வோம்

பொருளுணர்ந்து 'துஆ"ச்செய்வோம்

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

திருக்குர்ஆனில் ஏராளமான 'துஆ'க்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு 'துஆ'வும் நம்மைப்படைத்த அந்த ஏக இறைவனே நமக்கு அவற்றைக்கொண்டு "அவனிடம்" கேட்குமாறு கற்றுக்கொடுப்பது போன்று அமைந்திருப்பதை என்றைக்கேனும் நாம் கவனித்திருக்கிறோமா?

தொழுகையாளிகளில் எத்தனை பேர் 'துஆ'வின் அர்த்தத்தை விளங்கி 'துஆ' கேட்கிறோம்? மஸ்ஜிதில் இமாம்கள் செய்கின்ற 'துஆ'வுக்கு "ஆமீன்" சொல்வதோடு சரி...! அதன் பொருள் என்னவென்பதைப் பற்றியெல்லாம் நமக்கு தெரிந்துகொள்ள வேண்டும் எனும் ஆர்வம் இருப்பதில்லை. எல்லாம் நமது இமாம்களுக்கு மட்டும் தெரிந்தால் போதும் என்று நினைப்புதான் காரணமோ என்னவோ?!.

மேலுள்ள திருக்குர்ஆனிலுள்ள (நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கேட்டதாக அல்லாஹ் குறிபிட்டுள்ள) ஒரு 'துஆ'வின் அர்த்தத்தை ஒருமுறை படித்துப்பாருங்கள். எவ்வளவு பொருள் நிறைந்த ஒரு அற்புதமான 'துஆ' இது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.

Read more...
 
வார, மாத, வருட தொழுகையாளிகளே! பிறரை நம்பி மோசம் போகாதீர்கள்! Print E-mail
Saturday, 02 August 2014 09:39

வார, மாத, வருட தொழுகையாளிகளே!

பிறரை நம்பி மோசம் போகாதீர்கள்!

“இறைவழியில் அவனுக்காக நீங்கள் முயற்சி செய்ய வேண்டிய முறைப்படி முயற்சி செய்யுங்கள். அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளான். இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. இதுதான் உங்களின் தந்தையாகிய இப்ராஹீமின் மார்க்கமாகும். (அல்லாஹ்வாகிய) அவனே இதிலும் இதற்கு முன்னரும் உங்களுக்கு முஸ்லிமீன் எனப் பெயரிட்டுள்ளான்....” (22:78)

உங்களுக்கு(ஒவ்வொன்றையும்) எளிதாக்கவே அல்லாஹ் விரும்புகிறான். மேலும் பலவீனமான நிலையில் மனிதன் படைக்கப் பட்டுள்ளான். (4:28) (மேலும் பார்க்க : 54:17,22,32,40)

இந்த குர்ஆன் வசனங்களில் திட்டமாகத் தெள்ளத் தெளிவாக இம்மார்க்கத்தில் எவ்வித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை. மிகமிக எளி தாக்கப்பட்டது, நீங்கள் முறைப்படி குர்ஆனில் முயற்சி செய்யுங்கள் எனக் கட்டளையிட்டுள்ளான் அல்லாஹ். அடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டலைப் பாருங்கள்:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : நிச்சயமாக, இந்த மார்க்கம் எளிதானது. இந்த மார்க்கத்தை எவரேனும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அது அவரை மிகைக்காமல் விடாது. எனவே (கூடுதலான வழிபாடுகள் உட்பட அனைத்துக் காரியங்களிலும்) நடுநிலையையே கடைப்பிடியுங்கள். இயன்றதைச் செய்யுங்கள். நற்செய்தி பெறுங்கள். காலையும், மாலையும் இரவில் சிறிது நேரத்தையும் துணையாக்கிக் கொள்ளுங்கள். (அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ :39)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள்; (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள்; நற்செய்திகளைச் சொல்லுங்கள். வெறுப்பேற்றி விடாதீர்கள். (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, புகாரீ : 69)

குர்ஆனும், ஹதீஃதும் மிகமிக எளிதானது. பாமரனும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் தெளிவாக விளங்கி அதன்படி நடக்க முடியும் என்று உறுதி கூறுகின்றன குர்ஆனும் ஹதீஃதும்!

Read more...
 
மரணித்த பின்பும் தொடரும் நன்மைகள் Print E-mail
Thursday, 22 April 2010 08:26

Related image

மரணித்த பின்பும் தொடரும் நன்மைகள்

      என்.எம். அப்துல் முஜீப்        

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கின்றார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் பின்வருமாறு நவின்றுள்ளார்கள். ''(ஒரு மனிதன் மரணித்து விட்டால் அவனுடைய அனைத்துச் செயல்களும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. ஆனால் மூன்று விஷயங்கள் மட்டுமே எஞ்சியிருக்கும். (அவை)

நிலையான தான தர்மம் (ஸதகத்துல் ஜாரியா)

பயனளிக்கக் கூடிய அறிவு

தனக்காகப் பிரார்த்திக்கக் கூடிய சிறந்த பிள்ளை'' (ஆதாரம் : முஸ்லிம்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஅறிவிக்கும் இந்த ஹதீஸ் முஸ்லிம் (3:1631), அபூதாவூத் (3:2880), ஸுனன் அத்திர்மிதி (3:1376), ஸுனன் அந்நஸாயீ (6:3549), முஸ்னத் அஹ்மத் (2:316) ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் தராதரம் பற்றிக் கூற வந்த இமாம் அபூ ஈஸா அவர்கள், அது 'ஹஸன் ஸஹீஹ்" எனக் குறிப்பிடுகிறார். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையை வைத்து நோக்கும் போதும் இது ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் ஒரு மனிதன் மரணித்து இவ்வுலகிற்கு பிரியாவிடை கொடுக்கும் போது தொடர்ந்தும் அவனுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய 3 விஷயங்கள் மிகவும் இரத்தினச் சுருக்கமாகச் சொல்கிறது.

Read more...
 
''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' Print E-mail
Thursday, 25 February 2010 07:49

Image result for அல்லாஹ்வின் கயிறு

''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்''

''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! நீங்கள் பகைவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்கள் உள்ளங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்தினான். எனவே அவனது அருளால் சகோதரர்களாகி விட்டீர்கள்! நரகத்தின் விளிம்பில் இருந்தீர்கள். அதிலிருந்து உங்களைக் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக இவ்வாறே தனது சான்றுகளை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.'' (திருக்குர்ஆன் 3:103)

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம் மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட இதைத் தவறாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

''ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதன் அடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

Read more...
 
ஸலவாத்தும் அதன் சன்மானங்களும் Print E-mail
Thursday, 14 January 2010 12:15

ஸலவாத்தும் அதன் சன்மானங்களும்

  ஷம்சுல்லுஹா ரஹ்மானி  

அல்லாஹ்வின் இறுதித் தூதரான முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைய முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்க கோடான கோடி மக்கள் காத்திருக்கின்றனர். ஒருவர் மீது அன்பு கொண்டு விட்டால் அந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரைப் புகழ ஆரம்பித்து விடுவது மனித இயல்பு! அப்படிப் புகழும் போது மனிதன் வரம்பு கடந்து விடுகின்றான். தான் நேசிப்பவரைக் கடவுள் அந்தஸ்திற்குக் கொண்டு சென்று விடுகின்றான். அதனால் தான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அந்த வாசலை அடைக்கின்றார்கள்.

''கிறிஸ்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். (அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 3445)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அதுதான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்.

Read more...
 
தஜ்ஜால் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் (1) Print E-mail
Wednesday, 14 November 2012 21:23

தஜ்ஜால் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகள் (1)

தஜ்ஜால் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த முன்னறிவிப்புகளை முதலில் அறிந்து கொள்வோம். முஸ்லிம் சமுதாயத்தில் தஜ்ஜால் பற்றி பல விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. 

மார்க்கத்தைப் பற்றிய ஞானம் சிறிதும் இல்லாத சிலர் தஜ்ஜாலைப் பற்றி அதிகமாகக் கற்பனை செய்து கதைகள் புனைந்துள்ளனர். அவனது தலை, வானத்துக்கும், கால் தரைக்குமாக இருப்பான். கடலில் அவன் நடந்து சென்றால் அவனது கரண்டைக் காலுக்குத் தான் கடல் நீர் இருக்கும். கடலில் மீன் பிடித்து சூரியனுக்கு அருகில் அதைக் காட்டி சுட்டுத் தின்பான் என்றெல்லாம் கடோத்கஜன் 'கதையிலிருந்து காப்பியடித்துக் கூறுகின்றனர்.

இன்னும் சிலர் தஜ்ஜால் பற்றி எதுவுமே அறியாதவர்களாக உள்ளனர். இம்மூன்று சாராரின் அறியாமையையும் அகற்றுவதற்காக தஜ்ஜால் பற்றிய எல்லா முன்னறிவிப்புகளையும் விரிவாக எடுத்து வைப்போம்.

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக் கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3057, 3337, 6173, 7127, 3338, 3440, 3441, 4403, 5902, 6173, 6999, 7026, 7123, 7127, 7128, 7131, 7407, 7408, 3057)

Read more...
 
ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று Print E-mail
Tuesday, 16 July 2013 10:48

Pin on Trade Show Tips

ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்த காலத்தில், ரமலான் மாதத்தில் நடந்த முக்கியமான நிகழ்வுகளில் மூன்று நிகழ்வுகள் முக்கியமானவைகளாக கருதலாம்.

  முதலாவதாக அல்குர்ஆன் :   

உலகம் அழியும் வரை உள்ள மக்களுக்கு வழி காட்டக்கூடிய அருள்மறையாம், அல்குர்ஆன், புனித ரமலான் மாதத்தில் இறக்கி அருளப்பட்டது. ஆகையால், இந்த மாதத்தை அடைந்தவர்கள்,தக்வா – இறை அச்சத்தை பெறுவதற்காக நோன்பு நோற்க இறைவன் கட்டளை இட்டுள்ளான்.

  இரண்டாவதாக, பத்ருப்போர்  : 

காபிர்களிடத்தில் இஸ்லாத்தைப் பற்றிய அச்ச உணர்வை ஏற்படுத்திய போர். சத்தியம் மற்றும் அசத்தியத்திற்கெதிரான போர். ஆகையால்தான் அன்றைய தினத்தை யவ்முல்புர்கான், அதாவது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்து அறிவித்த நாள் என்றழைக்கப்படுகிறது.

Read more...
 
நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள். உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது! Print E-mail
Saturday, 26 October 2013 06:37

Image result for jannathul firdouse

நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள், உங்களுக்கு சொர்க்கம் உறுதியாகிவிட்டது!

அலீ இப்னு அபீ தாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்; இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குதிரை வீரர்களான என்னையும், அபூ மர்ஸத் (ம்னாஸ் இப்னு ஹுஸைன்) அவர்களையும், ஸுபைர் இப்னு அவ்வாம் அவர்களையும், 'நீங்கள் 'ரவ்ளத்து காக்' என்னுமிடம் வரை செல்லுங்கள்; ஏனெனில், அங்கு (ஒட்டகச் சிவிகையில் இணைவைப்பவர்களில் ஒருத்தி இருக்கிறாள். இணைவைப்பவர்(களின் தலைவர்)களுக்கு ஹாதிப் இப்னு அபீ பல்தஆ அனுப்பியுள்ள (நம்முடைய ரகசியத் திட்டங்களைத் தெரிவிக்கும்) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும்; (அவளிடமிருந்து கடிதத்தைக் கைப்பற்றி வாருங்கள்)" என்று கூறினார்கள். (பிறகு நாங்கள் புறப்பட்டுப் போனோம்.)

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட இடத்தில் அந்தப் பெண் தன்னுடைய ஒட்டகத்தில் சென்று கொண்டிருக்க, அவளை நாங்கள் அடைந்தோம். அவளிடம், 'கடிதம் (எங்கே? அதை எடு)" என்று கேட்டோம். அவள், 'எம்மிடம் கடிதம் எதுவுமில்லை" என்று பதிலளித்தாள். (அவள் அமர்ந்திருந்த) ஒட்டகத்தை நாங்கள் படுக்க வைத்து (அந்தக் கடிதத்தைத்) தேடினோம். எந்தக் கடிதத்தையும் நாங்கள் காணவில்லை.

அப்போது, 'இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொய் சொல்லமாட்டார்கள். ஒன்று, நீயாக கடிதத்தை எடு(த்துக் கொடு); அல்லது உன்னை(ச் சோதிப்பதற்காக உன்னுடைய ஆடையை) நாங்கள் கழற்ற வேண்டியிருக்கும்" என்று நாங்கள் சொன்னோம். விடாப் பிடியாக (நாங்கள்) இருப்பதை அவள் கண்டபோது, (கூந்தல் நீண்டு தொங்கும்) தன்னுடைய இடுப்புப் பகுதிக்கு அவள் கையைக் கொண்டு சென்றாள். அவள் ஒரு துணியை இடுப்பில் கட்டியிருந்தாள். (அங்கிருந்து) அ(ந்தக் கடிதத்)தை வெளியில் எடுத்தாள். அந்தக் கடிதத்துடன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி நடந்தோம்.

Read more...
 
பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஒப்பற்ற இடம்பெற்ற ஜைனப் கொபோல்டு Print E-mail
Sunday, 10 December 2017 09:18

Image result for ஜைனப் கொபோல்டு

பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற இடம்பெற்ற ஜைனப் கொபோல்டு 

[ பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஜைனபு கொபோல்டுக்கு ஓர் ஒப்பற்ற இடமுண்டு. சவுதி அரசாங்கத்தின் விருந்தினராக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய முதல் முஸ்லிம் ஆங்கிலப் பெண்மணி இவர். ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு 1933  ]

"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத் தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும்.

ஆனால், நான் எப்போதுமே முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின் கொபோல்டு என்ற ஜைனபு.

ஏனென்றால், தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்) வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி, அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார்  ஜைனப் கொபோல்டு  (Zainab Cobbold)

இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால், முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக் கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை (புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.

Read more...
 
ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்! Print E-mail
Friday, 08 November 2013 06:08

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது.

அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 73 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article