வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை இனிதாக! Print E-mail
Sunday, 04 December 2011 07:21

முஸ்லிம் பெண்களின் வாழ்க்கை இனிதாக!

     ஃபாத்திமா ஷஹானா (கொழும்பு)     

உலக மக்கள்தொகையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றனர் அதேபோல் பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளும், கொடுமைகளும் அதிகரித்தே காணப்படுகின்றது. இவ்வாறு பெண்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளின், கொடுமைகளின் பின்னணியில்பெரும்பாலும் இன்னொரு பெண் இருப்பதே ஆச்சரியத்திற்குரிய விஷயமாகும். அல்லது தாங்களே தங்களுக்கு இழைக்கப்படும்அநீதிகள், கொடுமைகளுக்கு காரணமாகவும் அமைகின்றனர்.

இஸ்லாமிய மார்க்கம் பெண்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கியுள்ளது. இறைவனால் அருளப்பட்ட அல்குர்ஆனில் பெண்கள் என்ற பெயரில் ஒரு அத்தியாயம் கூட இருக்கின்றதென்றால் இஸ்லாம் பெண்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் வழங்கியுள்ளது என்பதை உணரலாம். இன்று பெண் உரிமைக்காக வாய் கிழியப் பேசும் பெண்களின் புரட்சி பேச்சளவிலேயே உள்ளது. ஆனால், இஸ்லாம் செயல் வடிவில் காட்டவேண்டிய அத்தனை திட்டங்களையும் சீராக வகுத்துத்தந்துள்ளது.

பெண்களுக்கு கடமைகள் இருப்பதுபோல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. (அல்குர்ஆன் 2:228)

Read more...
 
பள்ளிவாசலில் பெண்களா? Print E-mail
Saturday, 25 February 2012 08:17

  பள்ளிவாசலில் பெண்களா?     

பள்ளிவாசலுக்கு பெண்கள் வரலாமா? கூடாதா? என்பது ஏதோ மார்க்க சட்டத்தோடு மட்டும் சம்பந்தப்பட்ட தலைப்பல்ல! சமூகத்தின் மிக முக்கியமான ஒரு பாடம்.

பள்ளிவாசலுக்கு பெண்கள் வந்தே ஆகவேண்டும் என்போர் முன்வைக்கின்ற காரணங்களையும் பள்ளிவாசலில் பெண்களை அனுமதிக்கவே மாட்டோம் என்போர் சுட்டுகின்ற வாதங்களையும் இந்தக் கட்டுரை அலசுகின்றது.

கூடுமா? கூடாதா? என்னும் ரீதியில் சடங்குப் போக்கில் எப்பிரச்சனையையும் ஆராயாமல் அனைத்துக் கோணங்களையும் உள்ளடக்கி ஆரீஅத்தின் தீர்வை எட்டுவதற்கு இக்கட்டுரை பயனளிக்கும் என்று நம்புகிறோம்.

எதிர்பார்ப்புகளும், யாதார்த்தங்களும்

முஸ்லிம் பெண்களில் பலர் பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்வதை சர்வ சாதாரணமாக காண்கிறோம். குறிப்பாக, குழந்தைச் செல்வமற்ற பெண்கள் கோவில்-சர்ச் போன்ற பகுதிகளில் தொட்டில் கட்டித் தொங்க விடுவதை செய்திகள் மூலம் அறிகிறோம்.

இஸ்லாம் தடை செய்துள்ள வழிபாடுகளில் துவங்கி கோவில் வழிபாடு என்ற அளவுக்கு பெண்களின் நடவடிக்கைகள் மாறிவிட்டன. இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் அதிகம் இருப்பது ஆண்களிடமா? பெண்களிடமா? என பட்டிமன்றம் வைத்தால் "பெண்களிடம்தான்’ என தீர்ப்பு கூற வேண்டியிருக்கும்.

இணைவைத்தல் என்பதில் மட்டுமல்ல, குடும் பத்தில் குழப்பம், நிம்மதி இல்லா வாழ்க்கை, குழந்தை வளர்ப்பில் கோளாறு, உற்றார் உறவி னரை ஆதரிப்பதில் தடுமாற்றம் என பெண்கள் பெருந்தோல்வியில் சிக்கி உள்ளனர்.

Read more...
 
ஃபேர், ஸ்லிம், பியூட்டிஃபுல் கேர்ள் Print E-mail
Sunday, 01 January 2012 07:38

  ஃபேர், ஸ்லிம், பியூட்டிஃபுல் கேர்ள்-Fair, Slim, Beautiful Girl   

[ அழகு என்பதற்கு இதுதான் அர்த்தம் என்று யாராலும் சொல்லிவிட முடியாது என்றெல்லாம் இல்லை. நாம் எதை அழகாக நினைக்கிறோம் என்பதே முக்கியம். ஆணோ, பெண்ணோ குணம், அன்பு, சிந்தனை, அறிவு, செயல் போன்றவற்றில் நல்லவிதமாகத் தன்னை வெளிப்படுத்தும்போது அழகனாகவோ, அழகியாகவோ மாறிவிடுகிறார்கள். இந்தக் குணங்களுடன் சமூக அக்கறையும் சேர்ந்துகொள்ளும்போது பேரழகனாகவும் பேரழகிகளாகவும் ஆகிறார்கள்.]

பெரும்பாலான உயிரினங்களில் ஆண் உயிரினங்களே கண்கவர் வண்ணங்கள், இனிமையான குரல் போன்ற சிறப்பம்சங்களைப் பெற்றிருக்கின்றன. இனப்பெருக்கத்துக்கு பெண்ணை அழைக்க வேண்டிய தேவை இருப்பதால் ஆண் உயிரினங்கள் இயற்கையிலேயே சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளன.

ஆண் மயில் அழகிய தோகையை விரித்து நடனமாடி, குடும்பம் நடத்த பெண்ணை அழைக்கும்.

இனப்பெருக்கக் காலங்களில் ஸ்டிக்கில் பேக் என்ற ஆண் மீன், பெண் மீனைக் கண்டவுடன் உடல் நிறங்களை மாற்றிக்கொண்டு நடனமாடி, பெண்ணைக் கவர்ந்திழுக்கும்.

ஆண் குயில் பெண் குயிலை அழைக்க இனிமையாகப் பாடும். ஆண் வெட்டுக்கிளிகளும் இதே போலச் செய்கின்றன.

ஆண் சிங்கம் பிடரிமயிருடன் கம்பீரமாகக் காட்சியளிக்கும். கோழியை விட சேவல் வண்ணங்கள் நிறைந்தும் கொண்டையுடனும் தோற்றம் தரும்.

அதே போலத்தான் மனிதனும். ஆனால் ஆண்கள் உலகம் ‘அழகு’ என்ற வார்த்தைக்குள் பெண்களைச் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது.

Read more...
 
இஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள் Print E-mail
Thursday, 05 August 2010 14:03

இஸ்லாத்தை முறிக்கும் 10 விஷயங்கள்

[ ஒரு முஸ்லிம் இஸ்லாத்தை முறிக்கும் பல காரியங்களால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறிவிடுகிறான். அதனால் அவனுடைய உயிரும் உடமையும் இஸ்லாத்தின் பாதுகாப்பிலிருந்து நீங்கிவிடுகிறது. மேலும் அக்காரியத்தை செய்ததினால் இஸ்லாத்தை விட்டே அவன் வெளியேறியவனாகிறான் என்ற செய்திகளை மார்க்க அறிஞர்கள் மதம் மாறியவனைப் பற்றிய சட்டத்தின் கீழ் குறிப்பிடுகின்றார்கள்.

இஸ்லாத்தை முறிக்கும் செயல்களில் மிகவும் ஆபத்தான, மக்கள் மத்தியில் அதிகமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் பத்து விஷயங்களை அஷ்ஷைக் முஹம்மது பின் அப்துல் வஹ்ஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி மற்றும் அவர்களைப் போன்ற அறிஞர்கள் தொகுத்தளித்துள்ளார்கள்.

இஸ்லாத்தை முறிக்கும் மேற்கூறிய செயல்களை வேண்டுமென்றே செய்வதற்கும் விளையாட்டாகவோ, பயந்தோ செய்வதற்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் கிடையாது. நிர்ப்பந்திக்கப்பட்டவரை தவிர.

இவை அனைத்தும் மிகக் கொடிய விளைவை ஏற்படுத்தக் கூடிய, நம் சமுதாயத்தில் அதிகமாக மலிந்து கிடக்கும் செயல்களாகும். எனவே ஒவ்வொரு முஸ்லிம் இவ்விஷயங்களில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும். இவை தம் வாழ்வில் நிகழ்ந்து விடக்கூடாது என மிகவும் பயப்பட வேண்டும்.]

Read more...
 
நீட்டப்படும் மாதங்கள்! Print E-mail
Monday, 30 August 2010 12:48

நீட்டப்படும் மாதங்கள்!

மேக மூட்டம் காரணமாக முப்பது நாட்களைப் பூர்த்தி செய்துவிட்டு மறுநாள் தலைப்பிறை என்று முடிவு செய்கிறோம். ஆனால் வானில் பிறை சற்று பெரிதாகத் தெரிகின்றது. ஆஹா இது இரண்டாவது பிறையல்லவா? முதல் பிறையைத் தவறவிட்டு விட்டோமே? என்று அலட்டிக் கொள்ளக் கூடாது. முந்தைய மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான் என்று எண்ணிக் கொள்ள வேண்டும். அதாவது அல்லாஹ்வின் பார்வையில் இன்னும் மாதம் பிறக்கவில்லை என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.]

கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை கூறும்ஹதீஸ் இது தான்.

حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا محمد بن فضيل عن حصين عن عمرو بن مرة عن أبي البختري قال خرجنا للعمرة فلما نزلنا ببطن نخلة قال تراءينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين قال فلقينا ابن عباس فقلنا إنا رأينا الهلال فقال بعض القوم هو ابن ثلاث وقال بعض القوم هو ابن ليلتين فقال أي ليلة رأيتموه قال فقلنا ليلة كذا وكذا فقال إن رسول الله صلى الله عليه وسلم قال إن الله مده للرؤية فهو لليلة رأيتموه - مسلم

நாங்கள் உம்ராவுக்காகப் புறப்பட்டோம். பதன் நக்லா என்ற இடத்தில் ஓய்வெடுத்தோம். அப்போது பிறை பார்க்க முயன்றோம். (பிறை தென்பட்டது) சிலர் இது மூன்றாவது இரவின் பிறை என்றனர். மற்றும் சிலர் இரண்டாவது இரவின் பிறை என்றனர்.

நாங்கள் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களைச் சந்தித்து இது பற்றிக் கூறினோம். அதற்கவர்கள் நீங்கள் எந்த இரவில் பார்த்தீர்கள்? என்று கேட்டார்கள். இந்த இரவில் பார்த்தோம் என்று விடையளித்தோம்.

அதற்கு இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ''பிறையைப் பார்க்கும் வரை (முதல்) மாதத்தை அல்லாஹ் நீட்டியுள்ளான்'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளனர். எனவே பிறையை எந்த இரவில் நீங்கள் பார்த்தீர்களோ அந்த இரவுக்குரியது தான் என்று விளக்கமளித்தார்கள். (அறிவிப்பவர் : அபுல்பக்தரீநூல் : முஸ்லிம்)

Read more...
 
"என் பெயரால் பொய் கூறாதீர்கள்" - நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் Print E-mail
Monday, 05 July 2010 07:57

சாதாரண பாமரன் பொய் சொல்லும் நிலை மாறி, சில ஆலிம்கள் தங்கள் 'வாதம்' வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அல்லது முழுக்க முழுக்க சுயஆதாயத்துக்காக ''இறையச்சத்தை தூக்கி எரிந்துவிட்டு'' துணிந்து பொய் சொல்ல ஆரம்பித்துள்ளனர். அவர்களுக்கும் மறுமையில் கேள்வி கணக்கு உண்டு என்பதை நினைவு படுத்தும் விதமாக...

o "என் பெயரால் பொய் கூறாதீர்கள்! ஏனென்றால் என் பெயரால் பொய் கூறுவது நரகில் சேர்க்கும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o "யார் என் பெயரால் பொய் கூறுகிறானோ, அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். 'வேண்டுமென்றே' என்ற வார்த்தையையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக நான் நினைக்கின்றேன் என்று அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

o "யார் என்மீது திட்டமிட்டு பொய் கூறுகின்றானோ அவன் தனது தங்குமிடத்தை நரகமாக ஆக்கிக் கொள்ளட்டும்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: இப்னு மாஜா, புகாரி, முஸ்லிம்)

Read more...
 
ஒப்பாரிக்கு இஸ்லாம் தடை! Print E-mail
Tuesday, 20 April 2010 09:37

[ சோகத்தை வெளிப்படுத்துவது கண்களாலும், உள்ளத்தாலும் ஏற்ப்பட்டால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்படுவதாகும் இறையருளுக்கு உரியதாகும். கையாலும், நாவாலும் ஏற்படுமானால் அது ஷைத்தானிடமிருந்து ஏற்படுவதாகும். (இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு: அஹ்மத்) 

''ஒப்பாரி வைப்பவளையும் ஒப்பாரியைக் கேட்டு மகிழ்பவளையும் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சபித்தார்கள்.'' (நூல்: முஸ்லிம்)

''ஓலமிட்டு அழுபவள் மரணத்திற்குமுன் தௌபா(பாவ மன்னிப்பு கோரல்) செய்யவில்லையானால் தாரினால் சட்டை போடப்பட்டு நரகத்தில் வேதனை செய்யப்படுவாள்.'' (ஆதாரம் : முஸ்லிம், இப்னுமாஜா)

''ஒப்பாரி வைத்து அழுபவர்கள் நரகத்தில் இரு வரிசையாக நிறுத்தப்படுவார்கள்.

ஒரு நாயைப் பார்த்து இன்னொரு நாய் குரைத்துக் கொண்டிருப்பது போல குரைத்துக் கொண்டிருப்பார்கள்.'' (ஆதாரம் : தப்ரானி)]

ஒப்பாரியுடன் அழுவது கூடாது

முஸ்லிம் அல்லாத சிலரின் வீடுகளில் இறப்பு ஏற்பட்டுவிட்டால் அவர்கள் குழுவாக அமர்ந்து அழுவார்கள். காலப் போக்கில் அழுவதற்காக கூலிப்பட்டாளமே உருவானது. கூலிக்கு மாரடித்தல் என்ற சொல் இதற்காக வந்ததுதான்.

முஸ்லிம் அல்லாத சிலரின் வீடுகளில் அழுவோரின் ஒப்பாரிக்குரல் வெளியே கேட்க வேண்டும் என்பதற்காக ஒலிபெருக்கி அமைத்தும் தரப்படும். ஒப்பாரி வைக்கப் படாத வீடுகள் விமர்சனத்திற்கு உள்ளாவதால் ஊருக்கு பயந்தேனும் ஒப்பாரி வைக்கும் வழக்கம் இன்றைக்கு முஸ்லிம் வீடுகளிலும் வந்துவிட்டது.

Read more...
 
வாய்மையே வெல்லும்! Print E-mail
Sunday, 14 March 2010 08:35

MUST READ

  மௌலவி M.முஜீபுர்ரஹ்மான் உமரீ   

[ அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை முஸ்லிம்கள் கண்டு கொள்ளவோ, அமருமாறு கூறுவதோ கிடையாது, இந்நிலையில், அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் நபியே! என்னிடமிருந்து நீங்கள் மூன்றை ஏற்றுக் கொள்ளவேண்டும்! என்று கூறினார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சரி! ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். அரபு மக்களில் மிகவும் கவர்ச்சி மிக்க, அழகான என்னுடைய மகள் உம்மு ஹபீபாவை உங்களுக்கு மணமுடித்துத் தருகிறேன்! என்றார்கள்.

அதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இரண்டாவதாக, என்னுடைய மகன் முஆவியாவை உங்களுடைய எழுத்தாளனாக நியமிக்கின்றேன்! என்றார்கள். அதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

மூன்றாவதாக, நான் முஸ்லிம்களை எதிர்த்து யுத்தம் செய்தது போன்று இறை நிராகரிப்பாளர்களை எதிர்த்துப் போரிட என்னை படைத் தளபதியாக்க வேண்டும்! என்றார்கள். அதையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏற்றார்கள்.

அபூசுஃப்யான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் மறுக்காமல் அப்படியே ஏற்றுக் கொள்வராக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தார்கள் என்று அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூசுமைல் அவர்கள் கூறுகிறார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)]

இஸ்லாம் 1400 வருட கால வரலாறுப் பயணத்தில் எழுச்சியையும் வளர்ச்சியையும் மட்டுமே கண்டு வருகிறது. தோல்வியும் வீழ்ச்சியும் இஸ்லாத்திற்கு முன் மண்டியிட்டது.  தடைக் சுவறுகள் தவிடுபொடி ஆயின.

Read more...
 
மூஃமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன் Print E-mail
Friday, 02 April 2010 08:11

மூஃமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிக்கும் இறைவன்

[''அந்நாளில் சில முகங்கள் செழிப்புடனும் தம் இறைவனைப் பார்த்துக் கொண்டுமிருக்கும்' (அல்குர்ஆன் 75:22,23)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பவுர்ணமி இரவில் நிலவைப் பார்த்தார்கள். அந்த முழு நிலவை நீங்கள் காண்பது போல் உங்கள் இறைவனையும் நிச்சயமாகக் காண்பீர்கள் என்று அப்போது கூறினார்கள். (அறிவப்பவர்: ஜரீர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 

''நிச்சயமாக அல்லாஹ் மூமின்களுக்கு சிரித்த நிலையில் காட்சியளிப்பான். (இது மஹ்ஷர் வெளியில் நடக்கும்)' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.]

''நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்''. (அல்குர்ஆன் 78:17,18)

நியாயத் தீர்ப்பு நாளில் மக்களின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதை இதுவரை அறிந்தோம். இறைவன் அந்நாளில் விசாரிக்கும் முறை எவ்வாறு இருக்கும்? இதை இனி அறிந்து கொள்வோம்.

Read more...
 
மகத்தான செய்தி Print E-mail
Tuesday, 30 March 2010 08:00

ஓர் உலகமகா செய்தி

''அம்ம யதஸாஅலூன்' என்று துவங்கும் இந்த அத்தியாயம் 'அந் - நபா' அத்தியாயம் என்றழைக்கப் படுகின்றது. இதன் பொருள் 'மகத்தான செய்தி' என்பதாகும். இந்த அத்தியாயத்தில் மகத்தான ஒரு செய்தி பற்றிக் கூறப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்துள்ளது.

நாற்பது சிறிய வசனங்களைக் கொண்ட இந்த அத்தியாயம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டதாகும்.

''எதைப் பற்றி அவர்கள் வினா எழுப்புகின்றனர்? அவர்கள் எதில் (இரு கூறாகப் பிளவுபட்டு) கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ, அந்த மகத்தான செய்தியைப் பற்றியா (வினா எழுப்புகின்றனர்)?' (அல்குர்ஆன் 78:1,2,3) என்று இந்த அத்தியாயம் துவங்குகிறது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தமது ஏகத்துவப் பிரச்சாரத்தையும் மரணத்திற்குப் பின் இன்னொரு வாழ்க்கை உள்ளது என்பதையும் போதனை செய்த போது அவர்களை ஏற்காத மக்கள் ஏகத்துவத்தை எதிர்ப்பதை விட மறுமை வாழ்வையே கடுமையாக எதிர்த்தார்கள். மரணத்திற்குப் பின்னால் ஒரு வாழ்க்கை இருக்கிறதா என்பதே பெரும் சர்ச்சைக்குறிய விஷயமாக அவர்களுக்கு இருந்தது. அந்த வாழ்க்கையில் அவர்களுக்கு நம்பிக்கையில்லாததே ஏகத்துவத்தை அவர்கள் நிராகரிக்கக் காரணமாக இருந்தது என்று கூறலாம்.

Read more...
 
தமிழ் முஸ்லிம் நண்டுகள்! Print E-mail
Tuesday, 06 July 2010 07:17

தமிழ் முஸ்லிம் நண்டுகள்!

ஒரு கூஜாவுக்குள்ளே நிறைய நண்டுகள் இருந்துச்சாம். ஹிந்து நண்டுகள், கிறித்துவ நண்டுகள், முஸ்லிம் நண்டுகள் எல்லாம் இருந்துச்சாம்..உள்ள இருந்த ஹிந்து நண்டுகள் சாதி அடிப்படையில் உயர்சாதி நண்டுகள், பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், மிக பிற்படுத்தப்பட்ட சாதி நண்டுகள், தாழ்த்தப்பட்ட சாதி நண்டுகள் அப்படின்னு பல பிரிவுகளாக இருந்துச்சாம்.

அது போலவே கிறித்துவ நண்டுகளும் சாதி அடிப்படையில் பிரிந்து .நாடார் கிறுத்துவ நண்டுகள் - வன்னிய கிறுத்துவ நண்டுகள், தலித் கிறித்துவ நண்டுகள் அப்படின்னு கிடந்ததாம் - ஆனால் முஸ்லிம் நண்டுகளெல்லாம் மத்த நண்டுகள பாத்து ஏளனமா சிரிச்சக்கிட்டே சொன்னிச்சாம் "நாங்கல்லாம் ஒரே மாதிரியான நண்டுகள்.. ஏற்ற தாழ்வு எங்களுக்குள்ள கிடையாது" அப்படின்னு.. பிற நண்டுகளும் அத நம்பி .. அடடா... முஸ்லிம் நண்டுகள் மாதிரி 'சகோதரத்துவத்தோட' ஒத்துமையா இருக்கனும்னு நெனச்சி பெருமூச்சு விட்டதாம்.

Read more...
 
முஸ்லீம்களுக்கு மிகப்பெரும் எச்சரிக்கை! Print E-mail
Tuesday, 13 July 2010 13:09

முஸ்லீம்களுக்கு மிகப்பெரும் எச்சரிக்கை!

      மு.மன்சூர் அலி,  மயிலாடுதுறை    

உலக முடிவு நாள் எப்பொழுது சம்பவிக்கும் என்று ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனக்குள் கேள்வி எழுப்பி கொண்டே இருந்தான். அதற்கு தீர்வாக மனிதர்களுக்கு இறுதிநாளின் அடையாளங்களை நினைவுபடுத்துகிறோம்.

பொறுப்புடனும், பொறுமையுடனும் படித்து மரணத்தைப் பற்றியும், மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கையைப் பற்றியும் பயந்து, சிந்தித்து உலக இறுதி நாளின் நெருக்கத்தில் நாம் இருக்கிறோம் என்பதை நினைவில் நிறுத்தி இறைவனுக்கு மட்டுமே கட்டுப்பட்டு நடப்போமாக என்று எங்களையும், உங்களையும் கேட்டுக்கொண்டு ஆரம்பம் செய்கிறோம்.

இந்த உலகம் நிரந்தனமானது அல்ல. பிறந்ததெல்லாம் இறந்தே ஆகவேண்டும் என்ற நியதியுடைய இவ்வுலகத்தின் அழிவை பற்றி விஞ்ஞானிகள் கூறும் பொழுது:- "உலகின் அழிவு துவங்கிவிட்டது. நாம் ஒரு மாய நேரத்தில் வாழ்ந்து கொண்டிருக்றோம். மனித இனம் என்ற சுவடே இல்லாமல் அழிந்தொழியும்.

பூமியானது தூள்தூளாகி அனைத்து மூலக்கூறுகளும், அணுக்களும் தூசியாகி விண்வெளியில் பறக்கும்" என்று விஞ்ஞானிகள் விஞ்ஞான வளர்ச்சியின் உச்சாணியில் இருந்து கொண்டு ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

Read more...
 
ஒன்றுபடுவோம்! Print E-mail
Tuesday, 20 October 2009 08:15

துண்டாடப்பட்ட பட்ட இயக்கங்கள் அமைப்புகள் ஒவ்வொன்றும் ஒற்றுமையாக அல்லாஹ்வின் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என ஒங்கி ஒலிக்கின்றனர். இவர்கள் எல்லோரும் பற்றிப் பிடித்திருப்பது குர்ஆனைத்தான். ஆனால் இவர்களிடையே ஒற்றுமை இல்லாத காரணத்தால்தான் இப்படி பிளவுண்டு கிடக்கின்றனர். இவர்கள் இலக்கை எட்ட முடியாமல் எங்கோ நின்று எதையோ செய்து கொண்டு இதுதான் 'இஸ்லாமியப் பணி' என்று திருப்திப் பட்டுக்கொள்கின்றனர்.

குர்ஆன் என்ற தனது கயிற்றை அடியார்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பற்றிப் பிடிக்கத்தான் அல்லாஹ் கோருகின்றான். இங்கே நிகழ்வதென்ன?

ஜமாஅத்தே இஸ்லாமி என்றும், முஜாஹித் என்றும், ஸலபி ஜமாஅத் என்றும், அஹ்லே ஹதீஸ் என்றும், JAQH என்றும், TNTJ என்றும் இன்னும் எத்தனையோ இயக்கங்கள் அமைப்புகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்கள். ஆனால் தாங்கள் குர்ஆனையே பற்றிப் பிடித்திருப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். ஏன் இந்த நிலை?

Read more...
 
பெருநாள் தொழுகைக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாய கடமை! Print E-mail
Saturday, 23 May 2020 19:41

பெருநாள் தொழுகைக்கு முன்பு செய்ய வேண்டிய கட்டாய கடமை!

      Rahmath Rajakumaran       

நோன்பை முழுமைப்படுத்தும் வகையில் ‘ஸக்காத்துல் பித்ர்’ எனும் கட்டாய ஈகையை நிறைவேற்ற வேண்டும்.

தொழுகையில் நாம் ஏதேனும் மறந்துவிட்டால் அதாவது ஓர் ‘ரக்அத்தை’ மறந்துவிட்டால் அல்லது என்ன ஓதினோம் என்பதை மறந்துவிட்டால் இறுதியில் மறுபடியும் ‘இரு சஜ்தாக்கள்’ செய்து அந்தப் பிழை மன்னிக்கக் கோருவோம்.

அதேபோல் நோன்பில் நாம் அறிந்து அறியாமல் செய்யும் தவறை ஈடுசெய்வதற்காகவும், ஈகைத் திருநாளில் யாரும் பட்டினியோடு இல்லாமல் உண்டு பசி தீர்த்து மகிழ்ந்திருக்க வேண்டும் என்பதற்காகவும், இறைவனுக்காக நோன்பு இருந்து அதனை முழுமைப்படுத்தியதற்கு நன்றி செலுத்துவதற்காகவும் கட்டாயம் ‘ஸக்காத்துல் பித்ரை’ நாம் நிறைவேற்ற வேண்டும்.

நோன்பு நோற்ற அனைவரும் அவர்களின் பொறுப்பிலும் பராமரிப்பிலும் உள்ள பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் அனைவர் மீதும் இந்த ஈகைக் கடமையாகும். உங்கள் வீட்டில் உங்களுக்குப் பணிவிடை செய்யும் பணியாள் இருந்தாலும் அவர் உங்கள் பொறுப்பில் வருவதால் அவருக்கும் சேர்த்து ‘ஸக்காத்துல் பித்ர்’ தருவது மிகவும் சிறப்பான செயலாகும்.

Read more...
 
ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது? Print E-mail
Friday, 22 May 2020 13:29

ஸகாதுல் பித்ரை பணமாக ஏன் வழங்க முடியாது?

o  ஸகாதுல் பித்ரை உணவாகவே வழங்க வேண்டும் என்பதற்கான ஆதாரங்கள்

o  பணமாக வழங்கலாம் எனக் கூறுவதால் ஏற்படும் விபரீதங்கள்

o  பணமாக வழங்கலாம் எனக் கூறுவோரின் வாதங்களும் பதில்களும்

ஸகாதுல் பித்ரை ஏழைகளுக்கு பணமாகக் கொடுப்பதே மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் அவர்களின் தேவையை விட அதிகமாக உணவுகள் அவர்களிடம் குவிந்தால் அவற்றை குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள் என்ற ஒரு வாதம் தற்காலத்தில் மிகவும் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

ஆனால் இக்கருத்து உணர்ச்சிகளுக்கு நெருக்கமாக இருந்தாலும் பிக்ஹ் கலையின் அடிப்படைகளுக்கும் விதிகளுக்கும் முரணானதாகும்.

Read more...
 
ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன? Print E-mail
Wednesday, 20 May 2020 13:08

ஸதக்கத்துல் ஃபித்ரு என்றால் என்ன?

     அப்துர் ரஹ்மான் உமரி       

யாரெல்லாம் கொடுக்கவேண்டும்?

எப்போதுகொடுக்கவேண்டும்?

எவற்றைக்கொடுக்கவேண்டும்?

உணவுப் பொருள் என்பதை எவ்வாறு புரிந்துகொள்வது?

ஸகாத்துல் ஃபித்ரு கொடுப்பதற்கு என்ன காரணம்?

நிர்ணயிப்பது சரியா?

இறைமறை குர்ஆனின் வழிகாட்டுதல்

Read more...
 
குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (1) Print E-mail
Wednesday, 02 October 2013 08:06

குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்? (1)

["குர்ஆனை எல்லோரும் விளங்கிக் கொள்ள முடியாது" என்ற பேச்சுக்கே இடமில்லை.]

ஒரு முஸ்லிம் அரபியை நேசிப்பவன். அரபியைக் கற்றுக் கொள்ள ஆசைப்படுபவன் என்பதில் நமக்கு ஐயம் இருக்கமுடியாது. முஸ்லிம்கள் அனைவரும் அரபியைக் கற்றுக் கொள்ள முயல வேண்டும்.

இக்கட்டுரையைக் காரணம் காட்டி, "அரபி கற்றுக் கொள்ளத் தேவையில்லை" என்ற தவறான முடிவுக்கு யாரும் வந்துவிட வேண்டாம். அரபி மொழியைக் காரணம் காட்டி, சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வையும், பிரிவினையையும் உண்டாக்கி, மார்க்கத்தை வியாபாரமாக்கி, ஒன்றுபட்ட சமுதாயத்தைச் சிதறடித்து, ஒரு சாரார் உலக ஆதாயம் அடைவதைத் தெளிவு படுத்தி சமத்துவ சமுதாயம். ஒன்றுபட்ட சமுதாயம், உருவாக, முஸ்லிம்கள் அனைவரும் ஆலிம்களாக, முஸ்லிம் சமுதாயத்தின் சிந்தனையைத் தூண்டுவதே இந்த ஆக்கத்தின் நோக்கமாகும்.

நீண்ட நெடுங்காலமாக அரபி கற்றவர்கள் மட்டுமே, அதிலும் 16 கலைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே குர்ஆனை விளங்கிக் கொள்ள முடியும் என்ற ஒரு வலுவான எண்ணம் முஸ்லிம் சமுதாயத்தில் நிலவி வருகின்றது.

இதன் காரணமாக அரபி மதரஸாக்களில் 7 ஆண்டுகள் செலவிட்டு ஸனது பெற்று வரும் மவ்லவிகளும் குர்ஆனை நேரடியாக விளங்க முற்படுவதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கக் கூடிய முன்சென்ற பெரியார்களான மனிதர்களின் அபிப்பாரயங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை எடுத்து நடந்து வருகின்றனர்.

மார்க்கப் பிரச்சினை ஏதும் எழுந்தால், இந்த மவ்லவிகள் குர்ஆனையும், ஹதீதையும் பார்ப்பதை விட்டு, மனித அபிப்பிராயங்களுடன் கலந்து எழுதப்பட்ட பிக்ஹு நூல்களையே வேதநூல்களாக(?) ஏற்றுச் செயல்பட்டு வருகின்றனர்.

மவ்லவிகளின் இந்த போக்கும், இந்த மவ்லவிகளின் மீது அபார நம்பிக்கை வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் போக்கும் சரியானதா? என்பதை  குர்ஆன், ஹதீது வெளிச்சத்தில் ஆராய்வோம்.

Read more...
 
இறை நம்பிக்கையாளார்கள் எப்படி நிம்மதியடைவார்கள்? Print E-mail
Thursday, 11 December 2014 09:35

இறை நம்பிக்கையாளார்கள் எப்படி நிம்மதியடைவார்கள்?

[ "ஒரு முறை ரஷ்யப் படைகள் என்னை பிடிக்க வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது நான் அவர்களுக்கு 30 மீட்டர் அருகில் இருந்தபோதும் நான் மிகுந்த மன அமைதியுடன் தூங்கிக் கொண்டிருந்தேன்.

மேலும் எனதருகில் 120mm பீரங்கிக்குண்டு விழுந்தது ஆனால் அது வெடிக்கவில்லை மற்றும் ரஷ்யா எங்களது தலைமையகத்தின் மீது நடத்திய வான்வழித்தாக்குதலில் நான்கிற்கு மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டன, அதுவும் வெடிக்கவில்லை.

அல்ஹம்துலில்லாஹ்! இறுதியாக அல்லாஹ் எங்களிடம் ரஷ்யப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். சுப்ஹானல்லாஹ்!" -ஷேக் உஸாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி ]

Read more...
 
இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்படியுங்கள் Print E-mail
Tuesday, 14 February 2012 07:41

இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கீழ்படியுங்கள்

"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்." (அல்குர்ஆன் 4:59)

நீங்கள் இறைவனையும் இறைத்தூதரையும் பின்பற்றவேண்டும். இதனால் மற்றவரின் வார்த்தையை நீங்கள் எந்தக் கட்டத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று நினைத்து விடாதீர்கள். உண்மையில் அதன் கருத்து, கண்களை மூடிக்கொண்டு நீங்கள் எவருக்குப் பின்னாலும் நடக்கக்கூடாது.

ஒருவர் உங்களிடம் ஒரு செயலைச் செய்யச் சொன்னால், அவர் இறைவனுடைய, இறைத்தூதருடைய கட்டளைக்குத் தக்கபடிச் சொல்கிறாரா அல்லது முரணாகச் சொல்கிறாரா என்று நீங்கள் எப்போதும் கவனித்துக் கொண்டிருக்க வேண்டும். தக்கபடி சொன்னால், அவர் சொல்வதை நீங்கள் நிச்சயம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

Read more...
 
இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ! Print E-mail
Wednesday, 15 February 2012 09:08

இறை பிரியத்தோடு உலகில் தலைநிமிர்ந்து வாழ!

ஸஹல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ''இறைவனின் பிரியத்திற்கும், மக்களின் பிரியத்திற்கும் என்னை ஆளாக்குமே அப்படிப்பட்ட ஒரு செயலை எனக்கு சொல்லுங்கள் யா ரஸுலுல்லாஹ்'' என்று கேட்டார்

அதற்கு நபி அவர்கள் ''உலக பற்றற்று வாழுங்கள் அல்லாஹ் உங்களை பிரியப்படுவான், மக்கள் கைகளில் உள்ளதை பற்றற்று இருங்கள் மக்கள் உங்களைப் பிரியப்படுவார்கள்'' என்று உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

இயற்கையாகவே மனிதன் சமூகத்தோடு கலந்து வாழுகிற அமைப்பிலே படைக்கப்பட்டிருக்கிறான், அவன் சமூகத்தில் மதிப்பிற்குரியவனகவும் குடும்பத்தில் பிரியத்திற்குரியவனாகவும் வாழ ஆசைபடுகிறான்.

இப்படி வாழும்பொழுது இறைவனின் பொருதத்தை பெற்றவனாகவும், அவனது பிரியத்திற்குரியவனாக வாழ ஆசைபடுகின்றான், அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வை எப்படி அமைக்கவேண்டும் என்று சஹாபாக்கள் தீட்சண்னியமாக கேட்டுவைத்தார்கள்

Read more...
 
இஸ்லாமும் நாகரீகமும் Print E-mail
Saturday, 11 February 2012 08:23

MUST  READ

இஸ்லாமும் நாகரீகமும்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் கூடாரங்களில் வாழந்தார்களே அந்தக் காலத்திற்குப் பின்நோக்கிப் போக நீங்கள் விரும்புகின்றீர்களா? இஸ்லாம் அந்த முரட்டுத்தனமான அரேபிய நாடோடிகளுக்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம். ஏனெனில் அவர்களைக் கவர்ந்திடும் அளவிற்கு அது எளிமையானது.

ஆனால் விண்ணைப் பிளந்த விரைந்து செல்லும் விமானங்களையும், நைட்ரஜன் குண்டுகளையும், நுட்பம் நிறைந்த சினிமாக் கருவிகளையும் கொண்ட இன்றைய உலகிற்கு இறைவன் உண்டு என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் ஏற்புடையதாகுமா?

முன்னேறிவிட்ட இன்றைய உலகில் இந்தக் கொள்கையால் எந்தப் பலனும் விiளாது. ஏனெனில் அது மாற்றங்களுக்கு உட்படாதது, நிலையானது. ஆகவே நாம் உண்மையிலேயே நாகரிகமடைந்த உலகின் ஏனையப்பகுதிகளைப்போல் முன்னேற வேண்டுமானால் இஸ்லாத்தை உதறிவிடுவதைத் தவிர வேறு வழியில்லை.'

இரண்டாண்டுகளாக எகிப்து நாட்டில் இருந்து வருகின்ற ஒரு 'படித்த' ஆங்கிலேயரால் மேலே குறிப்பிட்டவை எனக்கு நினைவூட்டப்பட்டன. இந்த ஆங்கிலேயர் ஐக்கிய நாடுகள் சபையால் (UNO) எகிப்துக்கு அனுப்பப்பட்டவர்கள்.

ஏகிப்தில் வாழ்ந்தவரும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்க்குத் தேவையான திட்டங்களை வகுத்துத் தரும்படி அனுப்பப்பட்ட ஐக்கிய நாட்டுசபை குழுவின் ஒரு உறுப்பினர் இந்த ஆங்கிலேயர், அந்த விவசாயிகளின் நலனில் அக்கறைக் கொண்டவர்களைப்போல் காட்டிக்கொள்ளும் இந்தக் குழுவினர் அம்மக்களின் மொழியைத் தெரிந்துகொள்ள முயன்றதுமில்லை.

ஐக்கிய நாட்டு சபையின் தூதுக்குழுவுக்கும் எகிப்து நாட்டு விவசாயிகளுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளராக நான் அனுப்பப்பட்டேன். அப்போது தான் நான் இந்த ஆங்கில அதிசய மனிதனை சந்தித்தேன்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 72 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article