வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

அழகின் பொக்கிஷம் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம் Print E-mail
Tuesday, 02 June 2009 14:25

இறையருளுக்கு இது ஓர் எடுத்துக்காட்டு..

[ எவளது வீட்டில் அவர் இருந்தாரோ அவள் அவரை மயக்கலானாள். வாசல்களையும் அடைத்து 'வா!' என்றாள். அதற்கவர் ''அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன். அவனே என் இறைவன். எனக்கு அழகிய தங்குமிடத்தை அவன் தந்துள்ளான். அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள்'' எனக் கூறினார். திருக்குர்ஆன் 12: 23. ]

யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் சிறுவயதாக இருந்த பொழுது அவர்களுடைய தந்தை யாக்கூப் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் அவர் மீது அதிகப் பிரியமுள்ளவராக இருந்தார்கள்.

இதை சகித்துக்கொள்ள முடியாத யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய பிற சகோதரர்கள் அவரை அழைத்துச்சென்று கிணற்றில் இறக்கினார்கள்.

அவ்வழியே வந்தப் பயணிகளில் ஒருவர் தண்ணீருக்காக வாளியை கிணற்றில் விடவே கிணற்றுக்கடியிலிருந்து சிறுவர் யூஸூஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்கள் மேல்நோக்கி சப்தம் கொடுத்து அதை செவியுற்றப் பயணியின் மூலம் இறைவனின் பேருதவியால் வெளியே வந்து விடுகின்றார்கள்.

சிறுவர் யூஸூஃப்அலைஹிஸ்ஸலாம்அவர்களை கிணற்றிலிருந்து வெளிக்கொண்டு வந்தப் பயணக்கூட்டம் எகிப்தில் ஒருவரிடம் அற்ப விலைக்கு விற்று விடுகின்றனர். அற்ப விலை கொடுத்து சிறுவர் யூசுஃப் அலைஹிஸ்ஸலாம்அவர்களை வாங்கியவர் தனது வீட்டில் வளர்க்கின்றார்.

Read more...
 
ஷீஆக்களின் வழிகெட்ட கொள்கைகள் (1) Print E-mail
Friday, 04 June 2010 06:34

இஸ்லாம் என்ற வாழ்க்கைத் திட்டத்தின் மூலம் ஜாஹிலிய்யா சமூகத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரே சமுதாயமாக மாற்றியமைத்தார்கள். அதற்கு முன்னர் அவர்கள் குலத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் சிதரிக்கிடந்தனர். இவர்கள் போன்று சண்டையிட்டுப் பிரிந்த சமுதாயம் உலகில் யாரும் இருக்கவில்லை. இஸ்லாத்தின் ஒளிக்கீற்று அவர்களின் வாழ்வில் பட்ட பின்னர் உலக வரலாற்றில் அந்த சமுதாயத்தில் காணப்பட்ட ஒற்றுமை போன்று ஒரு போதும் காணப்பட்டதில்லை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பின்னர் இந்த ஒற்றுமையைக் குலைப்பதை இலட்சியமாகக் கொண்டவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு முதலில் பலியானவர்கள் ஷீஆக்களும் காரிஜியாக்களுமாவர். இந்த இரு பிரிவினரும் இஸ்லாத்திற்கு கேடு விளைவித்த அளவுக்கு வேறு எந்தப் பிரிவினரும் கேடு விளைவித்ததில்லை.

இப்பிரிவுகள் தோன்றுவதற்கு தனியொரு நபர் மீது கொண்ட விருப்பு வெறுப்பு என்பனவே காரணங்களாக அமைந்தன. அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மீது வெறுப்பு எல்லை மீறிப் போனதால் காரிஜிய்யா என்ற பிரிவு தோன்றியது.

அரசியல் காரணங்களுக்காக அலி ரளியல்லாஹு அன்ஹு அவர்களை எதிர்க்க ஆரம்பித்த இந்தக் கும்பல் அல்லாஹ்வின் தூதர் பெயரால் பொய்களைப் பரப்பி அல்குர்ஆனுக்கு தவறான விளக்கம் கூறி கிளர்ச்சி செய்தனர்.

Read more...
 
நாமும் வாழ்த்துவோம்! "பாரக்கல்லாஹு லக்குமா...." Print E-mail
Sunday, 14 June 2020 08:26

நாமும் வாழ்த்துவோம்! "பாரக்கல்லாஹு லக்குமா...."

இவர் வழக்கறிஞர் இஷ்ரத் ஜஹான். டெல்லி ஜகத்புரியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பெண் கவுன்சிலரான இவர், இரண்டு நாட்களுக்கு முன்புதான் திகார் சிறையிலிருந்து 10 நாட்கள் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி, டெல்லி கஜூரி காஸில், ஷாஹின்பாக் பாணியில் அமைதியாக நடைபெற்ற CAA எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மேடையில் இருந்து வெளியேற மறுத்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சமூக செயற்பாட்டாளரான இஷ்ரத், “வடகிழக்கு - டெல்லி கலவரத்திற்கு சதித்திட்டம் தீட்டியவர்” என்ற குற்றச்சாட்டின் பேரில், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் கைது செய்யப்பட்டார். அவர் மீது மேலும் பல பிரிவுகளின் கீழ் பொய்வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

Read more...
 
இவ்வுலக வாழ்க்கை Print E-mail
Thursday, 11 February 2010 09:20

MUST READ

இவ்வுலக வாழ்க்கை

[ ஒருமுறையல்ல நூறு முறை படிக்க வேண்டிய கட்டுரை ]

[ ''மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே!'' (9:38)

''இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) மயக்கும் சொற்ப இன்பமேயன்றி வேறில்லை.'' (57:20)

''இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமேயன்றி வேறில்லை! எனினும் பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது (இவ்வளவு கூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?'' (6:32)

''உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?''(அல்குர்ஆன் 6:32)

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெரும் கருணை குர்ஆன் மூலம் வெளிப்படுவதைத் தெளிவாக மனிதன் அறிந்து கொள்கிறான். குர்ஆனின் மூலமே மறுமையைப் பற்றிய மிகச் சரியான உண்மைகளை இறை நம்பிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். உண்மையான மார்க்கமே மறுமையைப் பற்றிய யதார்த்தங்களை அறிவிக்கவல்லது.]

மனிதர்களை உண்மையான நேர்வழியில் செலுத்த வழிகாட்டும் இறுதி இறை வெளிப்பாடாகிய குர்ஆன், இவ்வுலக வாழ்க்கையின் நோக்கம் இறைவனுக்கு அடிபணிவதே ஆகும். மனிதன் இறைவனுக்கு அடிபணிகின்றானா அல்லவா என்று சோதிப்பதற்காகவே அவன் அனுப்பப்பட்ட இடம்தான் இவ்வுலகம் என்றும் குர்ஆன் அறிவிக்கின்றது.

Read more...
 
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள் Print E-mail
Wednesday, 17 February 2010 08:26

Gain-Taqwa-Tips

 இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்

     இம்மையில் ஏற்படும் பயன்கள்:      

அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்

''அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்''. (அல்-குர்ஆன் 2:194 & 9:36)

இறையச்சமுடையவர்களுக்கு திருமறை நேர்வழி காட்டும்!

''இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்''. (அல்-குர்ஆன் 2:2)

பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் எதிரிகளின் சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது!

''நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன்'' (அல்-குர்ஆன் 3:120)

Read more...
 
லா இலாஹ இல்லல்லாஹ் Print E-mail
Sunday, 10 January 2010 08:57

லா இலாஹ இல்லல்லாஹ்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

எல்லாப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமானது. அவனின் சலாத், சலாம், பரக்கத் நம் உயிர்களைவிட உயர்ந்த மதிப்புள்ள நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீதும், அவர்களின் குடும்பத்தினர், தோழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படட்டும்.

இந்த இஸ்லாமிய செய்திக் குழு மூலமாக உங்களுக்கு அன்போடு ஒரு கோரிக்கை வைக்கின்றோம்.

நம்முடைய ஒவ்வொரு தொழுகையிலும் உலக முஸ்லிம்களின் ஒற்றுமைக்காக அல்லாஹ்விடம் மண்டாடுவோம்.

மற்றும் நம் பகுதி இஸ்லாமிய இயக்கங்களான சுன்னத் ஜமாஅத், ஜமாஅதுல்முஸ்லிமீன், ஜாக், ததஜ, தமுமுக, கிலாஃபத், ஜிஹாத், இதஜ மற்றும் இதுபோன்ற இயக்க சகோதரர்களின் உள்ளங்களுக்கு மத்தியில் உண்மையான ''லா இலாஹ இல்லல்லாஹ்'' என்ற வார்த்தையின் மூலம் நேசத்தை ஏற்படுத்துவோம்.

அல்லாஹ் கூறுகின்றான்...

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

''நிச்சயமாக முஃமின்கள் (அனைவரும்) சகோதரர்களே.ஆகையால் உங்களுடைய சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானத்தை உண்டாக்குங்கள்.மேலும் உங்கள் மீது ரஹ்மத் (கருணை) செய்யப்பட வேண்டுமானால் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (சூரா ஹுஜுராத் 49:10)

Read more...
 
சிறுமைப்படுத்தி நரகில் தள்ளும் பெருமை! Print E-mail
Wednesday, 13 May 2009 12:06

சிறுமைப்படுத்தி நரகில் தள்ளும் பெருமை!

மனிதர்களில் சிலர் பெருமைக்காக வாழ்பவர்கள் உண்டு. இவர்கள் ஒரு சிறு துரும்பை அசைத்தாலும், அதை மலையளவில் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தி பெருமைப்பட்டுக்கொள்வார்கள்.

இன்னும் சிலர் உண்மையிலேயே உதவும் உள்ளத்தோடு சில உதவிகளை சிலருக்கு செய்வார்கள்.   இவர்கள் பெருமைக்காக செய்வதில்லை ஆனால், இவர்கள் செய்த உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் அல்லது இவர்கள் செய்த உதவிகளை காணும் சிலர், இவர்களின் இந்த பணியை புகழ்ந்துரைக்கும்போது அவர்களின் உள்ளத்தில் பெருமை குடிகொண்டுவிடும்.

அதுபோல வசதிபடைத்தவர்களும், தங்களை உயர்ந்த படைப்பாக கருதிக்கொண்டிருப்பவர்களும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படுபவர்களை விடதங்களை தாங்களே பெருமைக்குரியவர்களாக கருதுபவர்களையும் பார்க்கலாம்.

அதுபோல் சாதாரணமாக எளிமையாக இருப்பவர்கள் தங்களுக்கென ஒரு அமைப்பும், ஒரு கூட்டமும் உருவாகிவிட்டால் தங்களை மிஞ்ச ஆளில்லை என்ற பெருமையும் கர்வமும் கொள்கிறார்கள்.

மேலும் மார்க்கத்தில் சிலவிஷயங்களில் தெளிவு இருக்கின்ற காரணத்தால், எதோ முழுமையாக இஸ்லாத்தை கரைத்து குடித்துவிட்டவர்களை போல கர்வம் பிடித்து அலைபவர்களையும் அறிஞர்கள் என்ற போர்வையில் காணலாம். இவ்வாறாக பெருமை ஏதேனும் ஒரு வடிவில் பெரும்பாலோரை ஆட்டிவைக்கும் நிலையில் பெருமை பற்றிய சில விஷயங்களை பார்க்கலாம்.

Read more...
 
நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை! Print E-mail
Thursday, 31 October 2013 07:50

நடுநிலைச் சமுதாயத்தின் இன்றைய நிலை!

ஒன்று பட்டிருந்த மனித சமுதாயம் ஷைத்தானின் மேலாதிக்கத்தால், பகமை மேலோங்கி, மூடத் தனத்தில் மூழ்கி, நரக நெருப்புக்குழியின் கரையில் நெருங்கிய போதெல்லாம், இறைவன் தன் கருணையால் நபிமார்களை அனுப்பினான். நேர்வழி காட்டுதலையும் அந்நபிமார்கள் மூலம் சிதருண்ட மக்களுக்கு அவ்வப்போது அருளி சகோதரர்களாக்கினான்.

இவ்வாறு அருளப்பட்ட அனைத்து முந்தைய வேதங்களையும் உள்ளடக்கியதே இறுதி மறையாம் அல்குர்ஆன். இக்குர்ஆனில் முந்திய காலங்களில் நடந்த அனைத்து நல்லது கெட்டதுகளையும், மிகத்தெளிவாக விளக்கி எச்சரித்து, மக்களை பண்பட்ட இறை நெருக்கமுள்ளவர்களாக வாழ வகை செய்துள்ளான் வல்ல அல்லாஹ்.

இவ்வளவு தெளிவான இறுதி வேதமுள்ள நிலையிலும் உலக மக்களும், குறிப்பாக இதைப் பின்பற்றுகிறோம் என்று வானளாவ சொல்லும் முஸ்லிம்களும், இறைவழி காட்டுதலுக் கொப்ப வாழ்கிறார்களா? முந்தைய ஒன்றுபட்ட சமுதாயத்தைக் கூறு போட்டுச் சிதைத்து, மக்களைச் சுரண்டி தங்களின் வயிறுகளை நிரப்புவதோடு மறுமையில் மிகப் பெறும் நஷ்டத்தை ஏற்படுத்தியவர்கள் புரோகித பூசாரிகள் என்பதை இறைவன் தனது திரு மறையில் மிகத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறான்.எனினும் நாம் எவ்வித படிப்பினையும் பெறாதவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அன்றைய, இன்றைய யூத கிறிஸ்தவ சமுதாயங்கள் எப்படி புரோகித குருமார்களை சுய சிந்தனையற்று, குறுட்டுத்தனமாக நம்பி மோசம் போனதோ, இப்போதும் போய்க் கொண்டிருக்கின்றனவோ, அதே வழியில் இறுதிவேதம் கொடுக்கப்பட்ட நாமூம் மோசம் போய் கொண்டிருக்கிறோம்.

Read more...
 
முஸ்லிம் சமூகத்தின் ஆடுகளம் எது? அது தற்போது எங்கே ஆடிக் கொண்டிருக்கிறது? Print E-mail
Saturday, 07 June 2014 06:16

முஸ்லிம் சமூகத்தின் ஆடுகளம் எது? அது தற்போது எங்கே ஆடிக் கொண்டிருக்கிறது?

உணர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் தொடராகத் தந்து கொண்டிருந்த போட்டி நிகழ்வுகள் வெற்றிக் கோப்பையை ஒரு குழுவின் கைக்கு வழங்கி மறுகுழுவின் கண்ணீரோடு முடிவடைகின்றன.

தஃவாக்களமும் ஒரு ஆடுகளம் தான். இந்த அடுகளம் பற்றி அல்லாஹ்;

“...மாறாக நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது விட்டெறிகிறோம். அது அசத்தியத்தின் மூளையைத் தகர்க்கிறது. அப்போது அசத்தியம் அழிந்து போகிறது.” 21:18 என்று கூறுகிறான்

இங்கும் இரு போட்டிக் குழுக்கள் மோதுகின்றன. எனினும் ஆடுகளத்தில் பந்து இல்லை. ஆடுகளத்தில் சத்தியம் எஞ்சுவதா? அசத்தியம் மிஞ்சுவதா? என்பதே ஆட்டத்தின் இறுதியில் எதிர்பார்க்கபடும் முடிவு?

Read more...
 
நபிமார்களின் உண்மை வாரிசுகளாக நாம் திகழ... Print E-mail
Saturday, 21 June 2014 06:55

நபிமார்களின் உண்மை வாரிசுகளாக நாம் திகழ...

அன்பு சால் ஆலிம் பெரும் மக்களே! சற்று நடுநிலை வகித்து இந்தக் கட்டுரையை ஆராய்ந்து படியுங்கள்.

நாமல்லோரும் மெளலவி என்ற பட்டமும் நம் பெயருக்கு முன் வரவேண்டும் என்பதற்காகவோ, அல்லது சாப்பாடு கிடைக்கின்றது என்பதற்காகவோ, மதரஸாக்களுக்குச் சென்று ஓதவில்லை. நம் பெற்றோர்களும் அப்படி நினைக்கவில்லை. யாரும் அப்படி நினைக்கவும் மாட்டார்கள். மாறாக நம்பிள்ளைகள் அல்லாஹ்வுடைய வேதத்தைக் கற்றுத்தேரவண்டும் நபி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீதுகளைத் தெளிவாக உணர்ந்து மார்க்கத்தை அறிந்து, புரிந்து செயல்பட வேண்டும். பூரணமாக அறிஞர்களாகத் திகழ வேண்டும் என்று எந்தப் பெற்றோரும் அவாவுறுவார்கள். நம்முடைய ஆசையும் அதுதான்!

ஆனால், நமது அவா நிறைவேறியதா? என்றால் 100க்கு 95 சதவிகிதம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காரணம் குர் ஆன், ஹதீதுகளைப் படிக்கச் சென்ற நமக்கு குர்ஆனை நேரடியாகக் கற்றுத் தந்தார்களா? ஆதாரப்பூர்வமான ஹதீதுகள் பதிவாகியுள்ள கிரந்தங்களை நமக்கு பாட நூலாகக் கற்பித்தார்களா? அவைகளை சனதுகளோடு விளக்கிக்கூறி மனனம் செய்ய வைத்தார்களா? இல்லை.

ஏதோ அஜ்மீரிலே காட்டி மக்களை ஏமாற்றுவார்களே வருடத்திற்கு ஒரு முறை காஜாபந்தே நவாஸ் அவர்களின் சட்டை என்று, அதுபோல் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ புகாரி, முஸ்லிம், மிஷ்காத், அபூதாவூத், திர்மிதீ, பைஹக்கி, நஸயி போன்ற கிரந்தங்களை எடுத்து ஒரு சிலவற்றை வாசித்துவிட்டு, திரும்பவும் வைத்து விடுவார்கள். பாட நூல்களாக மேற்கூறியவற்றை போதித்தார்களா? மதஹபுகள் பேரால் யார்,யாரோ எழுதிய தூர்ருல் முக்தார், ரத்துல் முக்தார், ஷரகுல்விகாயா, பத்தவாயே ஆலம்கீரி போன்ற குப்பைகளை அல்லவா போதித்தார்கள். அதை வைத்துத் தானே (நம்பித்தானே) இது நாள் வரை அமல் செய்து வருகிறோம்.

Read more...
 
ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே! Print E-mail
Monday, 07 October 2013 06:33

[தற்போது அனைத்துப் பகுதிகளிலும் வறுமையில் திருடுபவனை விட வசதியான வாழ்க்கை வாழ்வதற்காகவே திருட்டு,மோசடி போன்ற குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உயர்ந்து கொண்டு இருக்கிறது.

மானத்திற்கு பங்கம் விளைவிக்கும் இத்தகைய குற்றம் செய்பவர்கள் சிறிதும் வெட்கப்படாமல் பயமில்லாமல் சமுதாயத்தாருடன் சகஜமாக பழகுவதுதான் மிக ஆச்சரியத்திற்க்குரிய விசயமாக இருக்கிறது.

ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே நேர்மையாக சம்பாரிக்க எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்பதை உணர்ந்து பிற இல்லாத ஏழை எளியோரின் சூழ்நிலையையும் சற்று சிந்தித்து ஆடம்பரத்தைக் குறைத்துக் கொள்வதுடன் ஆட்டையைப் போடுவதையும் நிறுத்திக் கொண்டால் நாம் மேன்மக்கள் என்று போற்றப் படுவதுடன் நம் சன்னதியர்களுக்கும் முறையான வாழ்க்கை வாழ ஒரு வழிக்காட்டியாய் அமையும்..!!!]

  ஆட்டையை போட்டுவிட்டு ஆடம்பர செலவு செய்யும் ஆசாமிகளே!  

நாகரீகம் வளர வளர மனிதனின் அத்தியாவசியத்தேவையை விட ஆடம்பரத்தேவைகளே அதிகமாகிட்டது. அதை பூர்த்திசெய்ய மனிதனால் தனது நேர்மையான வருமானத்தில் தேவைகளை ஈடு செய்ய முடியவில்லை. ஆகவே மனசாட்சிக்கு விரோதமான பல மோசடி வேலைகளை செய்கின்றனர். அது ஒருபுறமிருக்க நாட்டில் தற்போது வின்னைத் தொடுமளவுக்கு விலைவாசியின் ஏற்றம் ஒருபுறம் உயர்ந்து கொண்டே இருக்கிறது.

அவசியமற்ற ஆடம்பரத் தேவைகளை மனிதன் அவசியமாகிக் கொண்டதன் காரணமாகவும், உழைப்பில்லாமல் ஆடம்பரவாழ்க்கைக்கு அடிமையாகியதன் விளைவினாலும் தனது வறட்டு கௌரவத்தினால் இத்தகைய சூழ்நிலையை மனிதன் உருவாக்கிக் கொண்டதால் மனசாட்சி, நீதி, நேர்மை, நியாயம் ஆகியவை செத்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லமுடியும். 

Read more...
 
சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு! Print E-mail
Saturday, 20 December 2014 08:11

சுய இன அழிவுக்கு இரையாகும் நாடு!

குழந்தைகளுக்கு உரிய மதிப்பை கொடுக்க மனிதன் மறுத்துவருவதால் அவன் இனமே அழியும் தருவாயில் உள்ளது.

குழந்தை பிறப்பு என்பது உலகில் இயற்கையானது. ஆனால் மனிதன் தான் பெற்ற குழந்தை தன் உணவில் பங்கு கேட்குமோ என்றும் தன் ஆடம்பரம் மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று தரம்தாழ்ந்து சிந்திக்க ஆரம்பித்தான். அதன் விளைவாக தன் சுயநலம் மற்றும் பொறுப்பின்மை மேலிட தான் பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமின்றி கொன்று குவித்தான்.

எந்த விலங்குகளும் கூட செய்யத் துணியாத அந்த கருணையற்ற செயல் அது! அச்செயலை  குடும்பக் கட்டுப்பாடு என்று அழகிய பெயர் சூட்டி சமூகமும் ஆமோதித்தது.

நாட்டு வளங்களை முறைப்படி கையாளத்  திறமையில்லாத சுயநல அரசியல் வாதிகளும் அதைத் தங்கள் குறைகளை மறைக்கக் கேடயமாக பயன்படுத்திக் கொண்டனர். ஊழலால் நாட்டைக் கொள்ளை அடித்தவர்கள் மக்கள் தொகைப் பெருக்கமே நாடு முன்னேறாததற்குக் காரணம் என்று மக்களுக்கு மூளைச்சலவை செய்தனர்.

அழகிய சொல்லாடல்களைக் கையாண்டனர். நாளும் பொழுதும் ஊடகங்கள் மூலம் மக்களை மூளைச்சலவை செய்தனர். “நாமிருவர் நமக்கு மூவர்’’ என்று தொடங்கி மூவர் இருவராகி இறுதியில் “நாமிருவர் நமக்கு ஒருவர்” என்று சுருக்கினர். இன்னும் சில சமூகப் பொறுப்பில்லாத கயவர்கள் “நாமே இருவர், நமக்கு ஏன் இன்னொருவர்?” என்று சிந்திக்கவும் செயல்படுத்தவும் செய்தனர். அப்படி இருக்கும்போது அந்த ஒருவர் பெண்ணாய் வந்துவிட்டால் என்ன நடக்கும்? அனைவருக்கும் தெரிந்ததே!

Read more...
 
விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்! Print E-mail
Sunday, 12 January 2014 07:40

விழுமியங்களற்ற ஓர் உலகை நோக்கி மனித சமூகத்தை வழிநடத்தும் புதிய மதம்!

இன்று அனைத்து மதங்களையும் புறந்தள்ளி விட்டு அனைவர் மீதும் செல்வாக்குச் செலுத்துகின்ற ஒரு புதிய மதம் உலகில் தோற்றம் பெற்றிருக்கிறது. அதுதான் மேலைத்தேய நாகரிகம் ஆகும்.

இந்த மதம் மத்திய கால ஐரோப்பாவின் கைத்தொழில் புரட்சியோடு தோற்றம் பெறுகிறது. மேலைத்தேய நவீன நாகரிகம் கிறிஸ்தவ உலகில் தோன்றினாலும் அது மதத்திற்கெதிராகவே தோற்றம் பெற்றது.

மத்திய கால ஐரோப்பாவில் கைத் தொழில் புரட்சியோடு ஆரம்பமாகிய அறிவியல் புரட்சியின் வரலாற்றை உற்றுநோக்கினால் அறிவியலும் மதமும் பலமாக மோதிக் கொண்ட ஒரு வரலாற்றை நாம் அங்கு காண முடியும்.

குறிப்பாக, நவீன அறிவியலோடு கிறிஸ்தவம் பலமாக மோதியது. அந்த மோதலில் கலிலியோ கலிலி, கொப்பனிகஸ் போன்ற பெரும் விஞ்ஞானிகள் பலியானார்கள். எனினும், அந்த மோதலின் இறுதியில் அறிவியல் வென்று மதம் தோற்றுப்போனது. அதன் விளைவாக, கிறிஸ்தவ ஐரோப்பா தனது மதத்தை தேவாலயங்களுக்குள் மட்டுப்படுத்திக் கொண்டு  நவீன அறிவியலின் கையில் மனித வாழ்க்கையை ஒப்படைத்து விட்டது.

அதனைத் தொடர்ந்து நவீன அறிவியல் மனித வாழ்க்கைக்குத் தேவையான சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் வடிவமைத்தது. உணவு, உடை, பழக்க வழக்கங்கள், ஆண் பெண் உறவுகள், அவற்றுக்கான புதிய வரையறைகள், திருமணம் இல்லாத குடும்ப வாழ்க்கை, முதியோர்களுக்கு மடம், குழந்தைகளுக்கு Day Care Center, தந்தை தெரியாத குழந்தைகளுக்கு சட்ட அந்தஸ்த்து, ஆணும் ஆணும் குடும்பம் நடத்தலாம், பெற்றார், பிள்ளைகளைக் கண்டிப்பதும் கட்டுப்படுத்துவதும் தடை...

Read more...
 
காதலின் பெயரால் அட்டூழியம் Print E-mail
Tuesday, 25 February 2014 06:14

 

காதலின் பெயரால் அட்டூழியம்

காதல் என்பது புனிதமானதுதான், அது முறைப்படி திருமணம் செய்து கொண்ட கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும்வரை சரியே! ஆனால் அந்த வரம்புக்கு அப்பாற்பட்டு யாருக்கு இடையில் ஆனாலும் அது கள்ளக் காதலே! அது தண்டனைக்குரிய பாவமே! – இது வெறும் வெற்றுப் பேச்சு அல்ல. இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் தனது வேதம் மூலமாகவும் தூதர் மூலமாகவும் விடுக்கும் எச்சரிக்கை இது!

காதல் என்றவுடன் இளகும் மனது பெரும்பாலோருக்கும் உண்டு. அதனால்தான் சினிமா நாடகங்கள் ஊடகங்கள் போன்றவை காதலோடு காமத்தையும் கலந்து காட்டி மக்களின் நேரத்தையும் செல்வத்தையும் கறப்பதோடு பெரும் கலாச்சார சீரழிவையும் சமூகத்தில் பரப்புகிறார்கள். சமூகத்தில் குடும்ப உறவு முறிவுகள், அனாதைகள் மற்றும் தந்தைகள் இல்லாத குழந்தைகள் உருவாக வழிவகுக்கிறார்கள்.

இப்போக்கு சரியா அல்லது தவறா என்பதை நாமே முடிவு செய்ய கீழ்கண்ட கேள்விகளை நமக்கு நாமே கேட்டுப் பார்ப்போமே!

Read more...
 
புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும் Print E-mail
Thursday, 09 January 2014 06:27

புதுப்பிக்கப்பட்ட உறவும் குற்ற உணர்வும்

நான் இல்லத்தரசி. திருமணமாகிப் பத்து ஆண்டுகளாகின்றன. கண்ணுக்குக் கண்ணாக ஒரு மகன். காதல் திருமணமோ என பார்ப்பவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்குப் பாசத்துடன் இருக்கும் கணவன். இதில் எந்தச் சிக்கலுமே இல்லை. ஆனால் என் மனம்தான் சில நாட்களாகக் குற்ற உணர்ச்சியில் மறுகிக் கிடக்கிறது.

நாள் முழுவதும் வீட்டிலேயே அடைந்திருக்கிறேனே என்று என் வாசலை விசாலப்படுத்த விரும்பினார் என் கணவர். எனக்கெனத் தனியாக லேப் டாப் வாங்கிக் கொடுத்து, ஃபேஸ் புக்கை அறிமுகப்படுத்திவைத்தார். ஃபேஸ் புக் மூலம் என் பள்ளி, கல்லூரித் தோழிகளை மீண்டும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. இளமை திரும்பியதுபோல உற்சாகத்துடன் வலம் வந்தேன்.

இவர்களுக்கு நடுவேதான் என் பள்ளித் தோழன் ஒருவனும் ஃபேஸ் புக்கில் அறிமுகமானான். ஆண், பெண் பால் வேறுபாடுகள் தெரியாத அந்தப் பருவத்தில் என் மனதுக்கினியவன் அவன். வகுப்பில் அத்தனை பெண்கள் இருந்தாலும் என்னிடம் மட்டுமே பேசுவான். எதைச் செய்தாலும் என்னைக் கேட்டுத்தான் செய்வான். என்னை யாராவது, ஏதாவது சொல்லிவிட்டால் தாங்க மாட்டான். அவர்களை என்னிடம் மன்னிப்புக் கேட்கவைத்துவிட்டுத்தான் மறு வேலை பார்ப்பான்.

அப்பாவின் வேலை காரணமாக நாங்கள் வேறு ஊருக்குச் சென்றுவிட்டதால் அவனுடன் தொடர்பே அற்றுப்போயிற்று. ஆனால் அவனை ஃபேஸ் புக் மீட்டுத் தந்தது.

Read more...
 
இந்து என்ற பாசிச உணர்வு எப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! -அருந்ததி ராய் Print E-mail
Saturday, 09 November 2013 06:17

இந்து என்றபாசிச உணர்வுஎப்போதும் உழைக்கும் மக்களுக்கு எதிரானது! அது ஒரு குறிப்பிட்ட சாதியினரின் சுரண்டலுக்கும், சுக போகத்துக்கும் உருவாக்கப்பட்டது! -அருந்ததி ராய்

22, டிசம்பர் 2008-ல் வெளிவந்த, "அவுட் லுக்" இதழில் அருந்ததி ராய் "9 IS NOT 11 AND NOVEMBER ISN'T SEPTEMBER" என்ற கட்டுரையில்-ஆர்.எஸ்.எஸ்-க்கு 45000 கிளைகள் உண்டு, அதனுடைய அறக்கட்டளைகள் மற்றும் ஏழு மில்லியன் தன்னார்வ ஊழியர்கள் மூலம் இந்தியா முழுவதும் (சிறுபான்மையினர் மீது) தன்னுடைய வெறுப்புக் கொள்கையை பரப்பி வருகிறது என்கிறார்!

பாசிச இந்துத்துவம் தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள, அதாவது உழைக்கும் மக்களை தொடர்ந்து சுரண்டிவரவும், அவர்களை தொடர்ந்து ஒடுக்கி வரவும் பல்வேறு செயல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது!

இந்துத்துவ பாசிசத்தின் இந்த செயல்திட்டங்களை நிறைவேற்ற பாசிச சக்திகள் அரசியல் பிரிவு, வன்முறைப் பிரிவு, மாணவர் பிரிவு, கல்விப் பிரிவு,சிந்தனைப் பிரிவு, எழுத்துத் துறை, மதப் பிரிவு, சமுக ஒருங்கிணைப்புப் பிரிவு தத்துவப் பிரிவு என்று பல்வேறு பிரிவுகளாக அணிதிரண்டுள்ளன.

பாசிச சக்திகளின் இத்தகைய பிரிவுகள் அனைத்தும் இந்தியாவை இந்து (பாசிச) நாடாக்க வேண்டும் என்ற பொது சிந்தனையைக் கொண்டு,செயலாற்றி வருபவைகளே!

Read more...
 
மலரட்டும் மனிதநேயப் பொருளாதாரம் Print E-mail
Saturday, 23 November 2013 07:31

மலரட்டும் மனிதநேயப் பொருளாதாரம்

அக்கறை செலுத்துகிறோம் என்கிற பெயரில் குழந்தைகள் மீது அதிக ஆளுமை செலுத்தி அவர்களை சிதைக்க முற்படுவதுபோல, முதியோரையும் அதிக அலட்சியத்தால் பலரும் வதைக்கிறார்கள். கடந்த படிப்படியான ஆண்டுகளில் இந்தியாவில் மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துவருகிறது.

2011 மக்கள்தொகை கணக்கெடுப் பின்படி நாட்டின் மக்கள்தொகையில் 65 வயதைக் கடந்தவர்கள் 4.8% பேர். இதில் ஆண்கள் 4.6%, பெண்கள் 5%. தமிழகத்தில் 65 வயதைக் கடந்தவர்கள் 5.4% பேர். இதில் 5.3% ஆண்கள், 5.5% பெண்கள். அரசுத் துறைகளில் 58 முதல் 60 வயது வரையிலும் தனியார் துறைகளில் 65 வயது வரையிலும் தொழிலாளர்கள் வேலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

65 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வேலையில் இருப்பதும் ஊதியம் ஈட்டுவதும் இயலாத காரியம். ஆனால், இன்று பெரும்பாலான இடங்களில் உழைக்கும் முதியோரைப் பார்க்க முடிகிறது. இவர்களில் பலர் நிர்ப்பந்தத்தால் உடல், மனம் நோக உந்தித் தள்ளப்பட்டே உழைக்க நேரிடுகிறது. இவர்கள் மூலம் சமூகத்துக்குக் கிடைக்கப்பெறுவது பொருளாதாரம் அல்ல; இருளாதாரம்!

Read more...
 
கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்! Print E-mail
Saturday, 06 September 2014 06:46

கருட புராணம் கூறும் 28 கொடிய நரகங்கள்!

1. பிறன்மனைவி, குழந்தை, பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.

2. கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள், கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.

3. அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.

4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.

5. ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.

6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.

Read more...
 
விவேகானந்தரின் மறுபக்கம்! Print E-mail
Sunday, 10 August 2014 19:19

விவேகானந்தருக்கு விழா எடுப்போரே அவரின் மறுபக்கத்தை மறைப்பது ஏன்?

விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு விழாவாம்; இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று சில சக்திகள் ஊதிப் பெருக்கி உலகை வலம் வருகின்றன.

அஞ்சல் தலை வெளியீடு, நினைவு நாணயம் வெளியிடுதல், முக்கிய வீதி களுக்குப் பெயர் சூட்டுதல் பல்கலைக் கழகங்களில் ஆய்வு மய்யம் என்று களே பரமாகக் காரியங்கள் நடந்து கொண்டுள்ளன. விவேகானந்தர் ரதம் என்ற ஒன்றைக் கிளப்பி விட்டுள்ளனர். கல்வி நிலையங்களில் எல்லாம் புகுந்து புகுந்து வருகிறது.

உளுந்தூர்ப் பேட்டையில் ரதம் வந்த போது 10 ஆயிரம் லிட்டர் பாலாபிஷேகம் செய்தனராம். 100 வகைப் பலகாரங்கள் நிவேதிக்கப்பட்டனவாம். ராமகிருஷ்ண மடங்களும், தமிழ்நாடு ராமகிருஷ்ண விவேகானந்த பால பிரச்சார பிரச்சார் பரிஷத்தும் இணைந்தும் இவற்றை நடத்திக் கொண்டுள்ளன.

Read more...
 
சமூக வலைதளங்களும் முஸ்லிம் இளைஞர்களும் Print E-mail
Sunday, 13 July 2014 04:18

சமூக வலைதளங்களும் முஸ்லிம் இளைஞர்களும்
-தமிழ்நாட்டை முன்வைத்து!

  H. பீர் முஹம்மது   

உலகம் முழுக்க சமூக வலைதளங்கள் தன் வலையை வலுவாகப் பின்னிக்கொண்டு வருகின்றன. நவீன உலகில் இணையம் பயன்படுத்துவோரின் ஆறாவது மற்றும் ஏழாவது விரலாக, சமூக வலைதளங்கள் மாறிவிட்டன.

பரஸ்பர கருத்துக்கள் மற்றும் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் வழி திறப்பாக நவீன உலகில் பரிணமித்திருக்கும் சமூக வலைதளங்களை, முஸ்லிம் இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்தினார்கள்? பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? இதன் பின்னால் நிகழும் உளவியல், சமூகவியல், அரசியல் பின்னணியை ஆராய வேண்டியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டு இளைஞர்கள் குறித்து அதிகம் கவலை கொள்ள வேண்டியுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ், மாஷா அல்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர், அஸ்ஸலாமு அலைக்கும், நவூதுபில்லாஹ், தவக்கல்து அலல்லாஹ்,.... இப்படியான வார்த்தைகள்தான் காலையில் பேஸ்புக்கைத் திறக்கும்போது அதிகமும் நம்மால் காணமுடிகிறது. ஏதேனும் பள்ளிவாசல் படத்தையோ அல்லது மக்கா-மதீனா படத்தையோ போட்டால் போதும்; விழாமல் எழுந்து நின்று கம்ப்யூட்டரின் மவுசை சொடுக்குகிறார்கள், நம் இளைஞர்கள்! குறைந்தது ஆயிரம் லைக்குகள் விழுகின்றன. இதைப்பார்த்து பரவசப்படும் பதிவேற்றியவர், மேலும் மேலும் படங்களை இணையத்திலிருந்து நகல் எடுத்து அப்படியே ஒட்டித் தள்ளுகிறார்கள்.

Read more...
 
ஆணிடம் இல்லாத பெண்ணின் குணங்கள்! Print E-mail
Monday, 26 December 2011 07:22

  ஆணிடம் இல்லாத  பெண்ணின் குணங்கள்!  

அரவணைப்பு என்பது வாழ்க்கைக்கு ஆதாரமானது, ஆதரவளிப்பது. எல்லாவற்றையும் அரவணைத்து ஆலோசனை கூறி, வாழ்வதற்கும், வளர்வதற்கும் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் தயங்காமல் செய்யக் கூடியவள் பெண். இப்படிப் பிறருக்கு உதவி செய்து கொண்டு, அந்த உதவி செய்யும் குணத்தையே தான் வாழ்வதற்கும், பயன்படுத்திக் கொள்வதுதான் பெண்ணின் அடிப்படையான சிறப்பு குணம்.

உதவுவதன் மூலம் உயிர் வாழலாம் என்ற உண்மையை மனித வரலாற்றின் துவக்கக் காலத்திலேயே பெண் அறிந்து வைத்திருந்தாள்.

உலகில் நிலைத்து வாழ்வதற்கு, தனது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என ஆணுக்கு வலியுறுத்தப்பட்டதை போலவே, பெண்ணுக்கும், உலகில் சுமூகமாக வாழ்வதற்கு இணக்கமாகவும், பிறருக்கு உதவும் நிலையிலும் இருக்க வேண்டும் என போதிக்கப்பட்டிருக்கிறது.

நல்ல பராமரிப்பாளனாக, நல்ல பாதுகாவலனாக, நல்ல தந்தையாக, நல்ல கணவனாக இருந்து மேற்கண்ட அனைத்துத் தேவைகளையும் நிறைவு செய்த ஆண்தான் அவளுக்குத் தேவைப்பட்டான். இத்தகைய திறனுள்ள ஆடவனைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவளுடைய பாலுணர்வு மட்டுமின்றி, பராமரிக்கும் திறனும், பரிவும் மிகப் பெரிய ஆயுதங்களாக இருந்தன.பாலின்பத்தையும், பராமரிப்பையும் அந்த காலத்து பெண்கள்தான் தங்களுக்கு சாதகமான ஆயுதமாக பயன்படுத்தினார்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 71 72 73 74 75 76 77 78 79 80 Next > End >>

Page 71 of 87

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article