வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

விபரீத நேர்ச்சைகள்! Print E-mail
Friday, 09 April 2010 09:58

விபரீத நேர்ச்சைகள்!

நேர்ச்சை! இது நம் பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகி இருக்கிறது. நம் தேவைகள் நிறைவேறுவதற்காகவோ அல்லது நமக்கு ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்கள், பிரச்சனைகள் நீங்குவதற்காகவோ நாம் ஏதாவது ஒரு வகையில் நேர்ச்சைகளை செய்கிறோம். பொதுவாக, நேர்ச்சை செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

அல்லாஹ் கூறுகின்றான்:

"இன்னும் செலவு வகையிலிருந்து நீங்கள் என்ன செலவு செய்தாலும், அல்லது நேர்ச்சைகளில் எந்த நேர்ச்சை செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதனை நன்கு அறிவான்'' (அல்குர்ஆன்: 2:270)

"மர்யமே அவற்றை உண்டு ஆற்று நீரைப் பருகி கண் குளிர்ந்து இருப்பீராக! பின்னர் எந்த மனிதரையேனும் பார்க்க நேரிட்டால் மெய்யாகவே அர்ரஹ்மானுக்காக நான் நோன்பிருப்பதாக நேர்ந்திருக்கிறேன்; ஆதலால் இன்று எந்த மனிதருடனும் பேச மாட்டேன்' என்று கூறுவீராக!'' (அல்குர்ஆன்: 19:26)  

"இம்ரானின் மனைவி 'என் இறைவனே! என் கர்ப்பத்திலுள்ள குழந்தையை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன். எனவே (இதை) என்னிடமிருந்து நீ ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீ யாவற்றையும் செவியுறுவோனாகவும் நன்கு அறிபவனாகவும் இருக்கின்றாய்' என்று கூறினார்'' (அல்குர்ஆன்: 3:35)

Read more...
 
இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே Print E-mail
Monday, 30 May 2011 21:03

 

இணைவைப்புக்குத் துணைபோகும் அத்தனைப் பேரும் ஷைத்தானின் ஏவலாட்களே!

إِنَّ اللَّـهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّـهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்’ (அல்குர்ஆன் 4:116)

[ திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக பஷீரன் என கூறுகிறான். இதற்கு அல்லாஹ் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடியவன் என பொருள்படும். அதாவது ஒருவர் எங்கிருந்துக் கொண்டும் மேலும் எத்தகைய சூழலில் இருந்துக் கொண்டும் அழைத்தாலும் அவரைப் பார்க்கக் கூடியவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அதுமட்டுமல்லாமல் அவன் அவனுடைய படைப்பினங்கள் அனைத்தையும் ஒரே நேரத்தில் பார்க்கக் கூடிய ஆற்றல் உள்ளவனாகவும் இருக்கிறான். இந்த ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கும் இல்லை.

மேலும் திருக்குர்ஆனில் அல்லாஹ் தன்னுடைய பண்புகளில் ஒன்றாக அஸ் ஸமீவுன் என கூறுகிறான். இதற்கு ஒருவர் எங்கிருந்துக் கொண்டு கேட்டாலும், எத்தகையை சூழலில் இருந்துக் கொண்டு கேட்டாலும் கேட்கும் வல்லமை, ஆற்றல் பெற்றவன் என பொருள்படும். மேலும் ஒரே நேரத்தில் பல கோடி நபர்கள் அழைத்தாலும் அவர்களின் அழைப்பையும் கேட்கக் கூடியவன் எனவும் பொருள்படும். இந்த பண்பு, ஆற்றல் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் இல்லை.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல் குர்ஆன் 42 : 11.)

அல்லாஹ், ''வான்முட்டும் அளவு பாவம் செய்தால் கூட மன்னிக்க காத்திருக்கிறான், ஆனால் இணைவைப்பைத்தவிர!'' ஆகவே, அன்பிற்கினிய சகோதரர்களே! இணைவைப்பின் பக்கம் தலை வைத்துக்கூடப் படுக்காதீர்கள்.]

Read more...
 
மத வியாபாரம் மது வியாபாரத்தை விட மோசமானது! Print E-mail
Saturday, 04 June 2011 19:55

மத வியாபாரம் மது வியாபாரத்தை விட மோசமானது!

[  அல்லாஹ் விதித்த விதியை அவன் மறைவாய் வைத்திருக்கும் போது அதைக் கணித்துச் சொல்கிறேன் என்று சொல்பவர் யாராக இருந்தாலும், அவர் அல்லாஹ்வுக்கு நிகராகத் தன்னைப் பிரகடனப் படுத்திவிட்டார் என்றே அர்த்தம். அவரிடம் சென்று தங்கள் காரியங்களுக்கெல்லாம் நல்ல நாள் பார்ப்பது உள்ளிட்ட எல்லாமே ஷிர்க் (இணைவத்தல்) என்பதை உணரவேண்டும்.

 

இது போன்ற ஆலிம்கள் ஜோதிடம் பார்ப்பதையும், மந்திரவாதம் பார்ப்பதையும் தொழிலாகக் கொண்டுள்ளார்கள். இந்த ஆலிம்களிடம் சென்று மறுமைக்கான பாவத்தைச் சேர்ப்பது ஒருபக்கம் இருக்க, இம்மையில் ஏற்படும் நஷ்டமோ சொல்லிமாளாது.

இவர்களிடம் நோயென்று போனால் எந்த நோயையுமே நோயென்று பார்ப்பதில்லை. ஒன்று பேயென்று சொல்வார்கள்; அல்லது செய்வினை என்று சொல்வார்கள்.

அதற்கு பரிகாரம் என்ற பெயரில் பெரிய லிஸ்ட் போட்டு பணத்தை கறப்பார்கள்.

அதையெல்லாம் சிறமேற்கொண்டு செய்தும் நோய் தீராமல் ஊரிலே இருக்கின்ற அத்தனை டாக்டர்களிடமும் போய் மாத்திரை வாங்கித் தின்பார்கள். என்னய்யா இப்படி? என்று கேட்டால் "பேய்க்கும் பார்க்கணும், நோய்ய்க்கும் பார்க்கணும்னு சொல்லியிருக்காங்கள்ள" என்பார்கள்.]

Read more...
 
மனித சமுதாயத்தின் வழிகேட்டிற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர்கள் யார்? Print E-mail
Friday, 02 December 2011 07:20

மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்!

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும். மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது. நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Read more...
 
தர்காஹ் - எதற்காக உருவாக்கப்பட்டது? யார் அறிமுகப்படுத்தியது? Print E-mail
Wednesday, 10 February 2010 08:32

தர்காஹ் என்பது என்ன?

எதற்காக உருவாக்கப்பட்டது?

யார் அறிமுகப்படுத்தியது?

தர்காஹ் என்பது ஃபாரசீக மொழியிலிருந்து வந்த சொல்லாகும் (Persian: درگه) இதற்கான விளக்கம் என்னவென்றால் ஒரு கட்டிடம் என்பதுவே.

இந்த தர்காஹ் கட்டிடத்தை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர்கள் பாரசீக நாட்டைச் சேர்ந்த ஸூஃபிக்கள் தான்.

மேலும் இவர்களால் வழிகாட்டப்பட்ட இந்த தர்காஹ் வழிமுறைக்கும் நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்காட்டித்தந்த இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமு மில்லை. இது முழுக்க முழுக்க,  முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க, முழுக்க முழுக்க வழிகேடாகும்.

Read more...
 
'ஷிர்க்' என்றால் என்ன? Print E-mail
Wednesday, 23 September 2009 18:00

'ஷிர்க்' என்றால் என்ன?

'ஷிர்க்' என்றால் அரபி மொழியில் 'பங்கு' என்று அர்த்தம். நீங்களும், உங்களுடைய நண்பர்களும் சேர்ந்து ஒரு கம்பெனியை ஆரம்பிக்கிறீர்கள். தமிழில் அதை 'குழுமம்' என்கிறோம். (குழுவாக ஆரம்பித்துள்ளதால்) அரபியில் அதை 'ஷிர்க்கா' என்கிறார்கள். பங்காளியை அதாவது பார்ட்னரை 'ஷரீக்' என்கிறார்கள். எல்லாரும் சமம் என்று கூறுகின்ற பொது உடைமைக் கொள்கையை (கம்யு{னிஸக் கொள்கையை) அரபியில் 'இஷ்திராகிய்யா' என்கிறார்கள்.

ஷரீஅத்தில் 'ஷிர்க்' என்றால், படைத்த இறைவனோடு இன்னொன்றை இணையாக்குவது என்று பொருள். அதாவது. . . . .

1) அல்லாஹ்வை விட்டுவிட்டு இன்னொருவனை இறைவனாக படைத்தவனாக கருதினால் இது 'ஷிர்க்'

2) நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான வசதிகளையும் வாழ்வாதாரங்களையும் அல்லாஹ் அல்லாத இன்னொருவன் அளிப்பதாகக் கருதினால் அது 'ஷிர்க்'

3) நன்மையையும் தீமையையும் தரக்ககூடிய சக்தி யாருக்காவது இருப்பதாக நினைத்தால் அது 'ஷிர்க்'

4) அல்லாஹ் அல்லாத இன்னொரு சக்தி இருப்பதாக நம்பி அல்லது இன்னொருவருக்கு சக்தி இருப்பதாக நம்பி அவரையோ அதனையோ திருப்திப் படுத்த முயற்சி செய்தால் அது 'ஷிர்க்'

5) அல்லாஹ் அல்லாத ஒரு சக்திக்கு முன்னால் தலை வணங்கினாலோ நேர்ச்சை செய்தாலோ துஆ கேட்டாலோ அது 'ஷிர்க்'

Read more...
 
இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூஃபிகள் Print E-mail
Tuesday, 27 September 2011 07:15

அருமை சகோதரர்களே! ஷிர்க்கான வழிகெட்ட சூபிசக்கொள்கைகளை அவர்களுடைய புத்தகங்களிலேயே அதாவது "இஹ்யா உலூமுத்தீன்" மற்றும் "தபகாத்துஸ் ஷஃரானிய்" போன்ற நூல்களில் எப்படி யெல்லாம் எழுதி வைத்திருக்கிறார்கள் என்பதை கட்டுரையாளர் தெளிவாக சுருக்கமாக விவரித்திருக்கிறார்

பொறுமையாக படித்து பாருங்கள். இவர்கள் முரீது என்ற முறையிலும் தரீக்கா என்ற முறையிலும் எப்படிப்பட்ட கொள்கைகளை இஸ்லாம் என்கிற பெயரில் நுழைத்து மக்களை வழி கெடுத்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

     இபாதத்களைக் கொச்சைப் படுத்தும் ஸூஃபிகள்    

புஸ்தாம் நகரில் மக்கள் மத்தியில் நன் மதிப்புப் பெற்ற ஒரு வணக்கவாளி இருந்தார். இவர் அபூ யஸீத் அல் புஸ்தாமியின் மஜ்லிஸில் தவறாமல் கலந்து கொள்பவராக இருந்தார் . ஒரு நாள் இவர் அபூ யஸீதிடம் ஷேக் அவர்களே! நான் முப்பது வருடங்களாகத் தினமும் விடாமல் நோன்பு நோற்று வருகின்றேன் . இரவு முழுக்க தூங்காமல் நின்று இறை வணக்கம் செய்கின்றேன். அப்படியிருந்தும் உங்களிடமுள்ள மெஞ்ஞான அறிவு எனக்குக் கிடைக்கவில்லையே! என்று ஆதங்கப்பட்டார் அதற்கு அபூ யஸீத் 'நீ முன்னூறு வருடங்கள் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கினாலும் இந்த மெஞ்ஞானம் உனக்குக் கிடைக்காது என்று கூற அவர் ஏன்? என வினவினார்.

Read more...
 
அல்லாஹ்வுக்கும் நமக்கும் தடுப்பும் இல்லை! திரையும் இல்லை! Print E-mail
Monday, 08 December 2014 06:55

"நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலராக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்." (அல்குர்ஆன்-18:102)

மாமறை அல்குர்ஆன் இவ்வாறு தெளிவாக அறிவித்த பின்பும், மக்கள் 'தர்கா' மாயைகளில் விழுவார் களேயானால் அவர்களைவிட கைசேதத்துக்குரியவர்கள் யார் இருக்க முடியும்?அல்லாஹ் அல்லாத எதனிடமும் அவரிடமும் நமது தேவைகளைக் கேட்பதும் பாதுகாப்புத் தேடுவதும் இறைக்கு இணை வைத்தல் என்னும் மாபெரும் கொடிய பாவமாகும். அதாவது 'ஷிர்க்' ஆகும். இது விஷயத்தில் நாம் கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.

பச்சைத் தலைப்பாகைகளுடன் பவனி வரும் போலி வேடதாரிகளை 'இறை நேசர்கள்' என்றும், 'நடமாடும் வலீ' என்றும் கருதி, நமது பொன்னான நேரத்தையும் - பொருளையும் செலவழித்து, நமது பகுத்தறிவையும் - இறை நம்பிக்கையையும் இறையச்சத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைத்து விட்டு அவர்கள் பின்னாலேயே செல்வோமேயானால் நம்மைவிட நஷ்டமடைந்தவர்கள் எவரும் இலர்.

அல்லாஹ், அருள் மறையிலே அழகாக நமக்கு எச்சரிக்கின்றான்.

"நாங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகிறோம் என்று வாயளவில் கூறுபவர்களும் மனிதர்களில் உள்ளனர் (உண்மையில்) அவர்கள் விசுவாசிகள் அல்லர்". (அல்குர் ஆன் 2:8)

Read more...
 
நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். Print E-mail
Monday, 14 September 2009 16:49

[ ஒரு இறை நேசரையோ அல்லது நபிமார்களின் பெயரையோ குறிப்பிட்டு அவர் பொருட்டால் என்று கேட்பதற்கு இஸ்லாத்தில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. மேலும் இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டதாகும்.]

இந்த தரீக்கா - ஷைகு - முரீது - பைஅத் கூட்டத்தில் நுழைந்து விட்டீர்களேயானால் மூளை சலவை செய்யப்பட்டு வாழ்நாள் முழுவதையும் உடல் உழைப்பு, பொருளுடன் அவர்களுக்கே அர்ப்பணம் செய்வதாக மீற முடியாத வாக்குறுதி அளித்துவிட்டு திண்டாட்டதிற்குள்ளாகி விடக்கூடிய‌ நிலை உருவாகிவிடும்.

முரீது என்பது, சூபியிஸம் மற்றும் தப்லீக் ஜமாஅத் போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும்.

இஸ்லாத்தில் தஸவ்வுஃப் என்னும் ஆன்மிக நெறிமுறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் அறியப்படுகிறது.

இந்த வழிகெட்டக் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தாங்களாகவே இஸ்லாத்தில் புதிய கொள்கைளைப் புகுத்தினர்.

Read more...
 
இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்! Print E-mail
Saturday, 23 March 2013 07:21

 

இறைவனின் கண்ணியத்தை குறைப்பவர்கள்!

அந்த ஏக நாயனான அல்லாஹ்வை அவனது தகுதியிற்கு ஏற்றாற்போல் கண்ணியப்படுத்தாதவர்களும் மறுமை நாளின் கடும் வேதனைக்கு உள்ளாவார்கள். இவர்கள் இரு சாரார்கள்

1) படைப்பினங்களை அல்லாஹ்வின் அளவிற்கு உயர்த்தியவர்கள்.

2) அல்லாஹ்வின் கண்ணியத்தை அவனது படைப்பினங்களின் அளவிற்கு குறைத்தவர்கள்.

இருவரும் குற்றவாளிகளே.....

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப் பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன். (அல்குர்ஆன் 39:67)

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். மேலும் அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற் குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன். (அல்குர்ஆன் 4:171)

Read more...
 
சுன்னாவை அவமதிக்கும் செயல்! Print E-mail
Saturday, 04 May 2013 06:21

சுன்னாவை அவமதிக்கும் செயல்!

''அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.'' (அல்குர்ஆன் 33:21)

குர்ஆனையும் சுன்னாவையும் மறுத்து வாழ்வது என்பது நம்முடைய நம்பிக்கையில் – ஈமானில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்க்கையில் அது மிகப் பெரியதொரு தாக்கத்தை ஏற்படுத்தி விடக் கூடியதாக இருக்கின்றது.

குர்ஆனிலும் மற்றும் சுன்னாவிலும் தகுந்த பரீட்சயம் அல்லது அறிவு இல்லாததன் காரணமாக இன்றைக்கு முஸ்லிம்கள் தாங்கள் கண்களில் காண்பதெல்லாம் இஸ்லாம் என்று ஷேக்மார்கள் பின்னாலும் முரீதுகள் பின்னாலும் அவ்லியாக்கள் பின்னாலும் உலமாக்கள் பின்னாலும் ஓடிக்கொண்டு இஸ்லாம் அல்லாதவைகளை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து வருவதைப் பார்த்து வருகின்றோம்.

மேலும் இவர்களைப் பின்பற்றுவதும் அவர்களிடம் தங்களது கோரிக்கைகளை வைப்பதும் அவர்களது கப்றுகளுக்கு ஜியாரத் செய்வதும் நன்மையான காரியங்கள் என்றும், அவை நன்மைகளைகளையும் இறைப் பொறுத்தத்தையும் பெற்றுத் தரும் என்றும் நம்பிக்கொண்டு அவர்களைப் புனிதமானவர்களாகக் கருதி தங்களது பிழை பொறுத்தருளப் பிரார்த்திப்பதும் இன்று நடைமுறையில் முஸ்லிம்களிடம் காணப்பட்டுக் கொண்டிருக்கும் வழிகேடுகளாகும்.

இன்னும் முக்கியமான நாட்களாக சில நாட்களைத் தேர்வு செய்து கொண்டு அந்த நாட்களில் சூரா ஃபாத்திஹாவை ஓதுவது குர்ஆனைக் குழுவாக அமர்ந்து ஓதி அதனை கத்தம் செய்வது மேள தாளத்தோடு சந்தனக் கூடு எடுப்பது அவுலியாக்களின் பிறந்த மற்றும் இறந்த தின வைபவம் கொண்டாடுவது இவைகளெல்லாம் இஸ்லாத்தில் உள்ளவை என்றும் இவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இறைவனுடைய நெருக்கத்தையும் பாவ மன்னிப்பையும் நன்மைகளையும் பெற்றுத்தரக் கூடியவைகள் என்று நம் முஸ்லிம்கள் பின்பற்றி வருகின்றார்கள்.

Read more...
 
தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான் Print E-mail
Wednesday, 19 September 2012 18:55

தாயத்தைத் தொங்க விட்டவன் அல்லாஹ்வுக்கு இணை வைத்துவிட்டான்!

கிரக பலன்களையும் ராசி பலன்களையும் நம்புவது நட்சத்திரங்கள் மூலமாக ராசி பலன் பார்ப்பதும், கோள்கள், நட்சத்திரங்களால் உலகில் மாற்றங்கள் எற்படுகின்றன என நம்புவதும் குஃப்ராகும்.

ஜைது இப்னு காலித் அல்ஜுஹனி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு முறை நபி அவர்கள் ஹுதைபிய்யாவில் சுப்ஹு தொழுகையை தொழ வைத்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுகை முடிந்தவுடன் மக்களை முன்னோக்கி,

"உங்களது இறைவன் என்ன கூறினான் என்பதை அறிவீர்களா?' என்று வினவினார்கள். "அல்லாஹ்வும் அவனது தூதருமே நன்கறிந்தவர்கள்' என நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான் "எனது அடியார்களில் என்னை விசுவாசித்தவரும் என்னை மறுத்தவரும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் கிருபையாலும் அவனது அருளாலும் நமக்கு மழை பொழிந்தது என்று கூறியவர் என்னை விசுவாசித்து கிரகங்களை மறுத்தவராவார். இன்ன கிரகத்தின் காரணமாக மழை பொழிந்தது என்று கூறுபவர் என்னை நிராகரித்து கிரகத்தை விசுவாசித்தவராவார்.'' (நூல்: முஸ்லிம்)

Read more...
 
சலாத்துன் நாரியா ஓதலாமா? Print E-mail
Friday, 28 August 2015 06:55

சலாத்துன் நாரியா ஓதலாமா?

தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் சலாதுன் நாரியா என்ற நரக சலவாத்தை மார்க்கம் என்று கருதி ஓதும் வழக்கம் இருந்து வருகின்றது. சில குறிப்பிட்ட தடவைகள் ஓதினால் ஏழைகள் பணக்காரர்கள் ஆகிவிடுவார்கள் என்ற தவறான எண்ணத்தில் ஆலிம்களை அழைத்து அவர்களுக்குரிய கட்டணங்கள் கொடுத்தும் ஓதப்பட்டு வருகின்றது.

இது மார்க்கத்தில் உள்ளதா என்று அறிந்து கொள்ள கடமைப்பட்டுள்ளோம்.

இந்த சலவாத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப்பின் வந்த சில அறிவீனர்களால் உருவாக்கப்பட்டது.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்த்தெறியும் பல கருத்துக்கள் இதில் பொதிந்து கிடக்கின்றன.

நார் என்றால் நெருப்பு, நரகம் என்று பொருள். சலவாதுன் நாரிய்யா என்றால் நரகில் கொண்டு பொய் சேர்க்கும் சலவாத் என்று இதன் உட்கருத்துக்களுக்கு தகுந்தவாறு இதை ஓதுவதால் நரகம் தான் கிடைக்கும் என்று பொருத்தமாக பெயரிடப்பட்டுள்ளது என்பதை உணராமல் சிலர் சொர்க்கத்தில் கொண்டு பொய் சேர்க்கும் என்று அமல் செய்து வருகின்றனர்.

எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானது என்பதை பார்ப்போம்.

Read more...
 
லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம் Print E-mail
Tuesday, 05 January 2016 06:54

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன் மகனுக்கு செய்த உபதேசம்

    குழந்தைகள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக வளர    

லுக்மான் என்ற ஒரு இறையச்சம் கொண்ட ஞானி தன் மகனுக்கு செய்த உபதேசத்தை இறைவன் தன் திருமறையில் பெற்றோர்களும் பிள்ளைகளும் பாடம் பெறுவதற்காக வேண்டி எடுத்துரைக்கிறான்:

அல்குர்ஆன்  31:13. இன்னும் லுஃக்மான் தம் புதல்வருக்கு: “என் அருமை மகனே! நீ அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே; நிச்சயமாக இணை வைத்தல் மிகப் பெரும் அநியாயமாகும்,” என்று நல்லுபதேசம் செய்து கூறியதை (நினைவுபடுத்துவீராக).

(இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனைக் குறிக்கும் அரபுச்சொல் அல்லாஹ் என்பதாகும். ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்பது இதன் பொருளாகும்.)

இவ்வுலகைப் படைத்த இறைவனை மட்டுமே வணங்கவேண்டும் என்று மக்களுக்கு போதிப்பது பெற்றோரின் முதலாவதும் முக்கியமானதும் ஆன கடமையாகும்.

படைப்பினங்களைக் காட்டி அவற்றைப் படைத்தவனை பகுத்தறிவு பூர்வமாக அறிமுகப்படுத்தி அவனோடு நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது ஓர் அறிவார்ந்த செயலாகும். அந்த இறைவன் நமக்கு வழங்கிவரும் அருட்கொடைகளை நினைவூட்டி அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி உள்ளவனும் நம் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவனும் ஆவான் என்பதை குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

Read more...
 
கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை - துணிவுரை! Print E-mail
Monday, 15 May 2017 07:35

கொள்கைரீதியாக நடைபெற்ற ஒரு முஃப்தியின் தெளிவுரை - துணிவுரை!

1995 ஆம் ஆண்டாக இருக்கலாம். ஒரு நாள் அஸ்ர் நேரம். அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபுக் கல்லூரியின் பள்ளிவாசலில் அஸ்ர் தொழுகை முடிந்தவுடன் பாக்கியாத்தின் முஃப்தி பட்டேல் ஸாஹிப் ரஹ்மதுல்லாஹி அலைஹி எழுந்து மக்கள் முன் உரையாற்றத் தொடங்கினார். மாணவர்களும் பொதுமக்களும் வழமைக்கு மாறான அவரின் அந்நேர உரையை மிகக் கவனமாகக் கேட்டனர்.

மக்கள் பலர் அல்லாஹ்வுக்கு இணைவைத்து அழைப்பதைத் தடுக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. எனவே அது குறித்துப் பேசிவிட்டு, அதை ஓர் உதாரணத்தோடு விளக்குமுகமாக,

''யா ஃகௌஸ் முஹ்யித்தீன்'' என்று அழைப்பதும் ''யா திருப்பதி'' என்று அழைப்பதும் ஒன்றுதான். இரண்டுமே ஒரே அளவிலான ஷிர்க்தான் என்று கூறி உரையை முடித்தார்.

பின்னர் அவரே துஆ ஓதினார். அதில் டி.வி.யின் சீர்கேட்டிலிருந்து பாதுகாப்பாயாக என்ற துஆவும் அடக்கம். துஆ முடிந்தவுடன் பாக்கியாத்தின் முதல்வர் பி.எஸ்.பி.ஜெய்னுல் ஆபிதீன்  ஹள்ரத் எப்போதும்போலவே இயல்பாகத் தம் இல்லம் நோக்கிச் சென்றுவிட்டார்கள்.

Read more...
 
மனிதநேயமற்ற பட்டதாரிகள் Print E-mail
Tuesday, 30 October 2018 07:08

மனிதநேயமற்ற பட்டதாரிகள்

படிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாற்றமாகத் தான் பட்டதாரிகளின் நிலை உள்ளது.

கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாகப் பேசுகிறார்கள். அரை நிர்வாணமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள்.

இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றன. மக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத் தான் இவர்கள் படித்தார்களா?

கல்வியின் நோக்கம் என்னவோ அதைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. மருத்துவர் நோயாளிகளிடம் கூறும் கனிவான வார்த்தைகள் பாதி நோயைக் குணப்படுத்தி விடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள்.

Read more...
 
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி Print E-mail
Tuesday, 28 February 2012 07:07

 

''லாஇலாஹ இல்லல்லாஹ்'' மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி

ஒரு முஸ்லிம் செய்த பாவத்தை அல்லாஹ் நாடினால் மறுமையில் மன்னிக்கலாம். அவருடைய தண்டனையைத் தள்ளுபடி செய்து நேரடியாகவே அவர் சொர்க்கம் செல்லலாம். இதற்கு நபிமொழிகளில் ஆதாரம் உள்ளது.

உபாதா பின் ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், "அல்லாஹ்விற்கு எதையும் இணைக ற்பிக்கமாட்டோம்; விபசாரம் புரியமாட்டோம்; திருடமாட்டோம் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா?'' என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்குரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும்.

Read more...
 
முந்திக்கொள்ளுங்கள்! Print E-mail
Tuesday, 10 November 2009 16:47

ஏழு நிலைகளை நீங்கள் அடைவதற்கு முன் நற்செயல்களைக் கொண்டு முந்திக்கொள்ளுங்கள்.

1  மறதியில் ஆழ்த்தும் வறுமை,

2  அநீதியிழைக்கத் தூன்டும் செல்வம்,

3  உடலில் கெடுதலை உண்டாக்கும் நோய்,

4  சொல்லை பலவீனப் படுத்தி விடும் முதுமை,

5  விரைந்து வரும் மரணம்,

Read more...
 
அறுபது முழ உயரம்...! Print E-mail
Sunday, 26 February 2012 10:41

     அறுபது முழ உயரம்!    

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (முதல் மனிதர்) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை (களி மண்ணிலிருந்து) படைத்தான். அப்போது அவர்களின் உயரம் அறுபது முழங்களாக இருந்தது.

பிறகு, 'நீங்கள் சென்று அந்த வானவர்களுக்கு ஸலாம் (முகமன்) கூறுங்கள். அவர்கள் உங்களுக்குக் கூறும் (பதில்) வாழ்த்தைக் கேட்டுக் கொள்ளுங்கள். அதுதான் உங்கள் முகமனும் உங்கள் சந்ததிகளின் முகமனும் ஆகும்" என்று சொன்னான்.

அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (வானவர்களிடம் சென்று), 'அஸ்ஸலாமு அலைக்கும் - உங்களின் மீது சாந்தி பொழியட்டும்" என்று கூறினார்கள்.

அதற்கு வானவர்கள், 'உங்களின் மீதும் சாந்தியும் கருணையும் பொழியட்டும்" என்று பதில் கூறினார்கள். 'இறைவனின் கருணையும் (உங்களின் மீது பொழியட்டும்)' என்னும் சொற்களை வானவர்கள் (தங்கள் பதில் முகமனில்) அதிகப்படியாக கூறினார்கள்.

எனவே, (மறுமையில்) சொர்க்கத்தில் நுழைபவர்கள் ஒவ்வொருவரும் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உருவத்தில் தான் நுழைவார்கள். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்திலிருந்து இன்று வரை (மனிதப் படைப்புகள்) (உருவத்திலும், அழகிலும்) குறைந்து கொண்டே வருகின்றன" என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்.

Read more...
 
மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பது? Print E-mail
Wednesday, 03 August 2011 11:36

     டாக்டர் ஜாகிர் நாயக்     

1. மறுமை (இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கை) நம்பிக்கை கண்மூடித்தனத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

2. மறுமை நம்பிக்கை தர்க்க ரீதியான நம்பிக்கையாகும்.

3. ஒரு முஸ்லிம் சமுதாயத்தில் பலம் வாய்ந்த, செல்வாக்கு மிகுந்த குற்றவாளியை, அவன் செய்வது குற்றம் என்று எளிதாக நம்ப வைக்க முடியும்.

4. எல்லா மனிதர்களும் நீதி நிலை நிறுத்தப்படுவதை விரும்புகிறவர்களே!

5. இறைவன், என்னை தண்டிக்கவில்லை. ஏன்?

6. யாரெல்லாம் அநியாயம் செய்கிறார்களோ, அவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப் படவேண்டும்.

7. இவ்வுலகில் நாம் வாழுகின்ற வாழ்க்கை, மறு உலக வாழ்க்கைக்கான ஒரு தேர்வு.

8. இறுதித் தீர்ப்பு மறுமை நாளில் இருக்கிறது.

9. நாஜி கொடுங்கோலன் ஹிட்லருக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட சட்டம் என்ன தண்டனை வழங்கியிருக்க முடியும்?.

10. அல்லாஹ் - ஹிட்லரை - அறுபது லட்சம் தடவை நரக நெருப்பினால் எரிக்கக்கூடிய வல்லமை பெற்றவன்:

11. மறுமை நம்பிக்கை இல்லாமல் மனித நலன் மற்றும் நல்லது, கெட்டது என்ற சிந்தனையே இல்லை.

Read more...
 
நூறு கொலை செய்தவனுக்கும் மன்னிப்பு உண்டு. ஆனால்....?! Print E-mail
Saturday, 14 May 2011 10:21

அபூ ஸயீதில் குத்ரி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ‘உங்களுக்கு முன்னர் வாழ்ந்து சென்ற சமுதாயத்தில் ஒருமனிதன் இருந்தான். அவன் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்திருந்தான்!

பிறகு அவன், இந்தப் புவிவாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று விசாரித்தான். ஒரு துறவியின் பக்கம் அவனுக்கு வழி காட்டப்பட்டது. அவரிடம் வந்தான். நான் தொன்னூற்றி ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டேன். எனக்கு மன்னிப்பு உண்டா? என்று அவரிடம் கேட்டான். அவர், கிடையாது என்று சொல்லி விட்டார். உடனே அவரையும் கொலை செய்து அவருடன் நூறைப் பூர்த்தியாக்கினான்.

பிறகு இப்புவி வாழ் மக்களில் அதிகம் அறிந்தவர் யார் என்று கேட்டான். கல்லி அறிவுபெற்ற இன்னொரு மனிதரின் பக்கம் அவனுக்கு வழிகாட்டப்பட்டது. (அவரிடம் சென்று) கேட்டான்: நான் நூறு பேரைக் கொலை செய்துள்ளேன். எனக்குப் பாவமன்னிப்பு உண்டா?

அவர் சொன்னார்: ஆம், உண்டு! பாவமன்னிப்புப் பெறவிடாமல் உன்னை யாரால் தடுக்க முடியும்? நீ இன்ன இன்ன ஊருக்குச் செல்! அங்கு, அல்லாஹ்வை வணங்கி வழிபட்டுக் கொண்டிருக்கும் மக்கள் உள்ளனர்., அவர்களுடன் சேர்ந்து நீயும் அல்லாஹ்வை வணங்கு. உனது சொந்த ஊருக்கு நீ திரும்பி விடாதே! அது கெட்டதொரு பூமியாகும்!

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article