வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள் Print E-mail
Friday, 08 June 2012 08:28

  

    தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்    

o வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம்

o ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை

o நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு

o செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள்

o சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு

o இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை

o ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்

o பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம்

Read more...
 
இரகசியமாக தர்மம் செய்வதன் சிறப்புகள் Print E-mail
Sunday, 22 August 2010 15:44

வெளிப்படையாக தர்மம் செய்வதைவிட மறைத்து செய்வது மிகச்சிறந்தது!

"தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்;) எனினும் அவற்றை மறைத்து ஏழையெளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது; அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும்; நீங்கள் செய்வதை(யெல்லாம்) அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்" (அல்-குர்ஆன் 2:271)

வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாத அளவிற்கு இரகசியமாக கொடுத்தால் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இடம் கிடைக்கும்!

நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்:

1) நீதிமிக்க அரசன்.

2) அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன்.

3) பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன்.

Read more...
 
ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்! Print E-mail
Friday, 08 November 2013 06:08

ஏழைகளின் பங்கை மோசம் செய்யாதீர்!

இஸ்லாம், எல்லாம் வல்ல ஏகன் இறைவனால் கொடுக்கப்பட்ட இயற்கை மார்க்கம்-வாழ்க்கை நெறி அதன் சட்ட திட்டங்கள் அனைத்துத் தரப்பு மக்களை மட்டுமல்ல, அனைத்து ஜீவராசிகளையும் கவனத்தில் கொண்டு இறைவனால் வடிவமைக்கப்பட்டவை. முறையாகவும், நடுநிலையோடும் சிந்திக்கத் தெரிந்தவன் அதில் எவ்வித குறைபாட்டையும் காண முடியாது.

அதில், மனிதனின் இவ்வுலக வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையான பொருளாதாரத்தை எந்தெந்த முறைகளில் ஈட்டுவது கூடாது; ஈட்டிய செல்வத்தை எந்தெந்த முறைகளில் செலவிட வேண்டும்; எந்தெந்த முறைகளில் செலவிடுதல் கூடாது என்றெல்லாம் தெள்ளத் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது.

இறைவனது இந்த சட்டதிட்டங்களை அனைத்துத் தரப்பு மனிதர்களும் ஏற்று நடப்பார்களேயானால், இவ்வுலக வாழ்க்கையே சுவர்க்கலோக வாழ்க்கையாக ஆகிவிடும்.

Read more...
 
கொடுங்கள்.. பெறுவீர்கள்...! Print E-mail
Thursday, 19 August 2010 13:00

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்க தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்த பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்த பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்த பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்த தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.

Read more...
 
ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் வழங்க வேண்டும் Print E-mail
Sunday, 28 September 2008 15:36

ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் வழங்க வேண்டும்

ஆங்கில மூலம்: பிலால் பிலிப்ஸ் 

தமிழாக்கம்: அபூ இஸாரா

கேள்வி : முந்தைய வருடம் ஜக்காத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு (கைவசம் இருக்கும் செல்வங்கள், ஜக்காத் கொடுக்கப்பட வேண்டிய அளவுக்கு உள்ளபோது) மறு வருடமும் ஜக்காத் கொடுக்கப்பட வேண்டியது அவசியமா? சென்னையைச் சார்ந்த (இந்தியா) ஒரு குறிப்பிட்ட மார்க்க அறிஞர் வருடா வருடம் செல்வங்கள் மீது ஜக்காத் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் எதுவுமில்லை என்று வாதிடுகிறார். மேலும் ஜக்காத் என்பது செல்வங்களைத் தூய்மைப்படுத்துவதாகும். ஒருமுறை ஜக்காத் கொடுத்தாலே செல்வங்கள் தூய்மையாகிவிடுகிறது. மறுமுறையும் தூய்மைப்படுத்த வேண்டியதில்லை என்றும் கூறி வருகிறார். இது சரியானதுதானா? விளக்கம் தாருங்களேன்.

பதில் : நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அன்புத் தோழர்களான ஸஹாபா பெருமக்களின் காலத்திலிருந்து, இன்று வரை உள்ள மார்க்க அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லாமல் இருந்துவரும் வணக்கவழிபாடுகளில் 'ஜக்காத்' தும் ஒன்றாகும். ஜக்காத்தின் அளவை எட்டி, ஒரு வருடம்வரை நம் கைகளில் இருந்துவிட்ட செல்வங்களுக்கு வருடந்தோறும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்கிற கருத்தைத்தான் இஸ்லாத்தின் முதல் தலைமுறை மார்க்க அறிஞர்கள் கொண்டிருந்தனர். இன்று உள்ள மார்க்க அறிஞர்களும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளனர்.

இஸ்லாமியச் சட்டங்களைத் தொகுத்த இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலரும் இந்த சட்டத்தைப் பொருத்தவரை வருடந்தோறும் ஜக்காத் கொடுக்க வேண்டும் என்கிற கருத்தில்தான் சட்டங்களைத் தொகுத்தளித்துள்ளனர். இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்றான இந்த கடமையைச் செய்வதற்கு ஆதாரம் கேட்பது, வருடந்தோறும் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் கேட்பதற்கு ஒப்பாகும். ஏனெனில் அருள்மறை குர்ஆனில் ரமலானில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்;கிறதேயல்லாமல், வருடந்தோறும் ரமலானில் நோன்பு நோற்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

Read more...
 
செல்வமும் வறுமையும் Print E-mail
Sunday, 12 February 2017 08:34

செல்வமும் வறுமையும்

إِنَّا جَعَلْنَا مَا عَلَى الْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا ، وَإِنَّا لَجَاعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا

‘அவர்களில் அழகிய நல்லறம் செய்பவர் யார் எனச் சோதிப்பதற்காக இந்தப் பூமியின் மேல் உள்ளவைகளை அதற்கு அலங்காரமாக நிச்சயமாக நாம் ஆக்கியுள்ளோம். மேலும் அதன் மேல் உள்ளதை வறண்ட மண்ணாகவும் நாம் ஆக்கக் கூடியவர்களே!’. (அல்குர்ஆன் 18:07,08)

கடவுளை எல்லா மதத்தவர்களும் நம்புகின்றனர். ஆனால் மற்ற எந்தச் சமயத்தவர்களையும் விட முஸ்லிம்களின் கடவுள் நம்பிக்கை வலிமை மிக்கதாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

பக்திமான்களாக இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையில் துன்பங்களைச் சந்திக்கும் போது நாத்திகர்களாகி விடுவதை மற்ற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாகக் காண்கிறோம்.

கடவுள் என இவர்கள் நம்புகின்ற கற்சிலைகளுக்கு முன்னால் நின்று கொண்டு அதைத் திட்டுகின்ற காட்சியையும் மண்ணை வாரி தூற்றுகின்ற காட்சியையும் பிற மதத்தவர்களிடம் சர்வ சாதாரணமாக காண் முடிகின்றது. ‘கடவுளே! உனக்கு கண் இருக்கிறதா?’ என்றெல்லாம் துன்பம் வரும் வேளையில் புலம்புகின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.

கடவுளை நம்புகின்ற மற்ற மதத்தவர்களிடம் காணப்படும் இந்தக் கோளாறு முஸ்லிம்களிடம் காணப்படுவதில்லையே அது ஏன்?

Read more...
 
எது தர்மம்? Print E-mail
Monday, 29 May 2017 19:46

எது தர்மம்?

"தர்மம் செய்வது எல்லா முஸ்லிம்களின் மீதும் கடமையாகும்" என்று இறுதி இறைத்தூதர் பெருமானார் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது மக்கள், "ஒருவருக்கு தர்மம் செய்ய எதுவும் கிடைக்கவில்லை என்றால் என்ன செய்வது?" என்று கேட்டார்கள்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவர் தம் இரு கைகளால் (அவர்) உழைத்துத் தாமும் பயனடைவார். தர்மம் செய்(து பிறரையும் பயனடைய செய்)வார்!" என்று கூறினார்கள்.

அதற்கு மக்கள், "அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையென்றால் அல்லது அவர் அதைச் செய்யா(செய்ய இயலா)விட்டால் (என்ன செய்வது)?" என்று கேட்டனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "பாதிக்கப்பட்ட தேவையுடையோருக்கு அவர் உதவட்டும்!" என்றார்கள்.

மக்கள், "(இதையும்) அவர் செய்ய (இயல)வில்லையென்றால்?" என்று கேட்டார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்போது, "அவர் நற்காரியங்கள் செய்யும்படி பிறரை ஏவட்டும்!" என்றார்கள்.

"இதையும் அவர் செய்யாவிட்டால்?" என்று மீண்டும் கேட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவர் (பிறருக்கு எதுவும்) தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்" என்றார்கள். (அறிவிப்பவர் : அபூமூஸா அல் அஷ் அரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, ஹதீஸ் எண் 6022)

Read more...
 
சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை! Print E-mail
Wednesday, 23 July 2014 18:03

சேமித்து வைக்கும் பொருட்களுக்கு ஜகாத் வருடா வருடம் கட்டாயக் கடமை!

அல்குர்ஆன் கூறுகிறது : "...பொன்னையும், வெள்ளியையும் சேமித்து, அவற்றை இறைவழியில் செலவிடாதோருக்கு நோவினை மிக்கத் தண்டனையை (தூதரே) நற்செய்தி கூறும்."

அந்நாளில் (அவர்களின் செல்வத்தை) நரக நெருப்பில் காய்ச்சி, அதன் மூலம் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ""நீங்கள் உங்களுக்காகச் சேமித்து வைத்தது இதுதான். எனவே நீங்கள் சேமித்தவற்றைச் சுவையுங்கள்'' (அல்குர்ஆன் : 9:34,35)

அந்த ஊராரிடம் இருந்தவற்றில் அல்லாஹ் தன் தூதருக்குக் கொடுத்தவை, அல்லாஹ் வுக்கும், (அவன்) தூதருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் "உரியவை'. மேலும், உங்களில் செல்வந்தர்களுக்குள்ளேயே செல்வம் சுற்றிக் கொண்டிராமல் இருப்பதற்காகவே ஆகும்.

தூதர் உங்களுக்குக் கொடுப்பதை எடுத்துக் கொள்ளுங்கள். தடுப்பதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாகத் தண்டிப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமை யானவன். (அல்குர்ஆன் 59:7)

Read more...
 
ஏற்பது இகழ்ச்சி! Print E-mail
Friday, 18 July 2014 04:33

ஏற்பது இகழ்ச்சி!
 
மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி எம்.ஏ., எம்.ஃபில்.,
 
[ எல்லோரும் அல்லாஹ்விற்காக உண்ணா நோன்பு நோற்று, தான தர்மங்கள் செய்து நன்மைகளை அறுவடை செய்கிறோம்.

ஆனால் நம்முள் வேறு சிலரோ இந்த ரமளானில் எவ்வளவு அறுவடை செய்யலாம். எத்தனை பள்ளிகளில் வசூல் செய்யலாம். எவ்வளவு ஆதாயம் பார்க்கலாம். என்னென்ன நொண்டிச் சாக்குகளைச் சொல்லி வசூல் செய்யலாம் என்று முன்னரே கணக்குப் போட்டுக் கொண்டிருக்கின்றனர்; திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ரமளான் மாதத்தை ஓர் அறுவடைப் பருவமாக எண்ணிக்கொண்டு ஒவ்வொரு மஸ்ஜிதையும் நோக்கிப் படையெடுத்துச் செல்லக் காத்திருக்கின்றனர்.
 
தொழுகை முடிந்து வெளியே வரும்போதும் உள்ளே செல்லும்போதும் கையேந்திகளின் தொல்லைகளை அனுபவிக்காமல் செல்ல முடியாது. இத்தகைய அவல நிலைக்குச் சென்றுகொண்டிருக்கிறது இந்தச் சமுதாயம். 

அதே நேரத்தில் சிலர் தம் கொடிய வறுமையிலும் பிறரிடம் கையேந்த வெட்கப்பட்டு, கிடைத்ததைச் சாப்பிட்டுக்கொண்டும் அல்லாஹ்வை ஐவேளை தொழுதுகொண்டு சுயமரியாதையோடும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

இத்தகையோரைக் கண்ணுறும்போது திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ள இறைவசனமே நெஞ்சில் நிழலாடுகிறது: ''மக்களிடம் அவர்கள் வற்புறுத்தி யாசிக்க மாட்டார்கள்.'' (2: 273)]

Read more...
 
செய்த உபகாரத்தைச் சொல்லிக் காட்டாதீர்கள் Print E-mail
Thursday, 19 August 2010 13:22

உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் மார்க்கமே பிறருக்கு கொடுத்து உதவுகின்ற ஈகைத் தன்மையை அதிகமாக போதித்து அதை முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளில் ஒன்றாகவும் ஆக்கியிருக்கிறது. மேலும் இறைவனால் கட்டளையிடப்பட்டுள்ள இந்த கடமையை நிராகித்தவர் உண்மையான முஸ்லிமாக இருக்கமுடியாது.

தான் ஈட்டிய செல்வத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியை வறியவர்களுக்கும் இறைவன் தன்னுடைய திருமறையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கும் பகிர்நதளிக்க வேண்டும் என்று வரையறுத்துள்ள இஸ்லாம் அவ்வாறு தாம் செய்த தர்மங்களை, தாம் செலுத்திய ஏழை வரியாகிய ஜக்காத்தைப் பிறருக்கு சொல்லிக் கான்பித்தல் கூடாது என்றும் கட்டளையிடுகிறது.

நம்மில் பலர் இறைவனின் ஆனைக்குக் கட்டுப்பட்டு இறைவனிடம் மறுமையில் அதிக நன்மைகளைப் பெறவேண்டும் என்ற பேராவலில் தர்மம் செய்வது யாரென்றே தெரியாதவாறு வாரி வழங்கும் வள்ளல்களாக இருக்கின்றனர். தமது வலது கரம் கொடுப்பது இடது கரத்திற்குத் தெரியாதவாறு கொடுக்கின்றனர்.

அல்லாஹ் இத்தைகயவர்களுக்காக மறுமையில் மிகச் சிறந்த நற்பேறுகளை இன்ஷா அல்லாஹ் வழங்குவான். மேலும் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத மஹ்ஷரிலே தன்னுடைய அர்ஷின் நிழலிலே இத்தகையவர்களுக்கு இடம் வழங்குகின்றான்.

Read more...
 
ரமளான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்! Print E-mail
Monday, 06 May 2019 06:34

ரமளான் மாதத்தின் கண்கொள்ளாக் காட்சிகள்!

அமைதியின் பெயரே இஸ்லாம்! இஸ்லாத்தின் முக்கிய கடமையான ஐவேளைத் தொழுகை மக்களை வேளாவேளைக்கு ஒன்று கூட்டுவதையும் தீண்டாமை ஜாதிக்கொடுமை போன்ற சமூக பிரச்சினைகளுக்கு தீர்வுகள் காண்பதையும் அறிவீர்கள். அதைப் போலவே ஒவ்வொரு ரமளான் மாதம் வரும்போதும் நோன்பு என்ற கடமை மனித குலத்தை ஒருங்கிணைக்கும் பணியைத் தவறாது செய்கிறது.

o ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்)

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யார் ஒரு நோன்பாளிக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்கிறாரோ அவருக்கு நோன்பு திறப்பவரின் கூலி கிடைக்கிறது. இதன் மூலம் நோன்பாளியின் கூலியில் எந்தவித குறையும் ஏற்படுவதில்லை". (ஆதாரம்: அஹ்மத்)

இந்த நபிமொழிகள் ஐவேளைத் தொழுகைகளை கூட்டாகத் தொழுவதையும் சக நோன்பாளி நோன்பு திறப்பதற்காக உணவளிப்பதையும் வலியுறுத்துவதால் ரமளான் மாதத்தில் அதிகம் நன்மைகளையும் இறைப் பொருத்தத்தையும் நாடி விசுவாசிகள் இவற்றில் கூடுதல் ஊக்கத்தோடு ஈடுபடுவதை நீங்கள் காணலாம்.

Read more...
 
ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும் Print E-mail
Thursday, 10 July 2014 01:05

ஸகாத்: கோட்பாடும் நடைமுறையும்

நூல்; பக்.264 / Rs 150

உலக வளங்களை தாமே துய்க்கவேண்டும் என்ற பேராசையே மனித சமூகத்திற்கு மிகப்பெரும் அழிவை ஏற்படுத்துகின்றது. இஸ்லாம் நிரந்தரமற்ற இவ்வுலக வாழ்வில் மூழ்கி மனிதன் மறுவுலக வாழ்க்கையை மறந்துவிடுவது குறித்து எச்சரிப்பதோடு, இவ்வுலக வாழ்விலும் நடுநிலையைக் கடைபிடிக்க வழிகாட்டுகின்றது.

ஸகாத் இறைவனுக்கு மனிதன் நிறைவேற்றவேண்டிய கடமை; அதுவே சகமனிதர்களுக்கு நிறைவேற்றவேண்டிய கடமையாகவும் உள்ளது. இஸ்லாம் செல்வம் தேங்கிக்கிடப்பதை அனுமதிக்கவில்லை. இக்காலத்தில் உபரிமதிப்பை பங்கிடுவதற்கான மிகச் சிறந்த வழி ஸகாத்தை நடைமுறைப்படுத்துவதே. செல்வச்சுழற்சி ஏற்பட்டால் தான் சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினரும் பலன் பெறமுடியும்.

வாழ்க்கை ஓட்டத்தில் தங்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களை சமூகத்தின் பொறுப்பாக்கியது இஸ்லாம். அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்வதோடு அவர்களுடைய கண்ணியமும் காப்பாற்றப்படவேண்டும் என வலியுறுத்துகிறது. இதை ஓர் அறநெறிப் போதனையாக மட்டுமின்றி மார்க்கக் கடமையாகவும் ஆக்கியுள்ளது.

Read more...
 
அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல் Print E-mail
Friday, 30 June 2017 11:12

 

   அமைதிக்குப் பெயர்தான் இஸ்லாம் - நூல்    

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது.

அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும்.

அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம். மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்.

முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.

ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது. ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.

முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி, சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்..... என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே!

Read more...
 
இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும் Print E-mail
Friday, 31 August 2018 07:11

இறுதி நபியின் வாழ்வில் இறைநினைவும் பிரார்த்தனையும்

( நூல் அறிமுகம்)

      ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி     

இது ஒரு வித்தியாசமான நூல். இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திக்ர், துஆ என்பவற்றை ஒரு புதிய நோக்கில் முன்வைக்கிறது இந்த நூல். திக்ர், துஆ நூற்களில் இது ஒரு முன்மாதிரி ஆக்கம்.

இதற்கு முன் யாரும் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முற்றிலும் ஆன்மீகப் பகுதியான இவ்வாழ்வை இவ்வாறு நோக்கியதில்லை.

ஷெய்க் முஹம்மத் கஸ்ஸாலிக்கே உரிய போக்கு இது. கஸ்ஸாலி ஒரு வித்தியாசமான சிந்தனையாளர். புதிய புதிய ஆய்வுகளை அவர் எப்போதும் முன் வைத்து வந்துள்ளார். அப்படியொரு புத்தகமே இந்த நூல்.

புத்தகம் திக்ர், அவ்ராத் என்றாலும் இறை தூதரின் அற்புத வாழ்வை இந்த நூல் சொல்கிறது.

இஸ்லாத்தின் சிந்தனைகளையும், கோட்பாடுகளையும் ஆங்காங்கே விவரிக்கிறது.

மிகவும் அழகான, கவர்ச்சிகரமான நடையைக் கொண்டவர்கள் ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி. இதனை இந்த நூலில் மிகச் சிறப்பாகவே காணலாம்.

Read more...
 
"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்" நூல் அறிமுகம் Print E-mail
Thursday, 13 September 2018 12:27

"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்" நூல் அறிமுகம்

"இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும்" (நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை)

வண்டலூர் மெளலானா முனைவர் மஸ்ஊத் ஜமாலி அவர்கள் எழுதி 7.9.2018 அன்று சென்னையில் வெளியிடப்பட்ட இஸ்லாமியச் சட்டத்தின் வளமும் விசாலமும் என்ற நூலுக்கு கான் பாகவி அவர்கள் எழுதியுள்ள மதிப்புரை.

*இது, ஒரு சட்டத்துறை கலைக்களஞ்சியம்* *பேராசிரியர், அ. முஹம்மது கான் பாகவி* இஸ்லாமியச் சட்டத்துறை தொடர்பான ஆழமானதொரு தமிழ் நூலை இப்போதுதான் நான் வாசித்தேன். நூலாசிரியர் முனைவர் *மௌலானா, P.S. சையித் மஸ்வூத் ஜமாலி* அவர்களின் வாழ்நாளில் இந்த ஒரு நூலே போதும் என்று சொல்கின்ற அளவிற்கு, நூல் அற்புதமாகவும் தரமாகவும் அமைந்துள்ளது. பாராட்டுகள்!

இஸ்லாத்தில் இறைவழிபாடு, குடும்பம், சிவில், குற்றவியல், நீதி, நிர்வாகம், பொருளாதாரம்ஸ என ஒவ்வொரு துறை சம்பந்தப்பட்ட சட்டங்களும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருப்பது இம்மார்க்கத்தின் தனிச் சிறப்பாகும். எந்தவொரு வினாவுக்கும் இங்கே விடை உண்டு. செல்லும்-செல்லாது; உண்டு-இல்லை; விரும்பத் தக்கது-தகாததுஸ எனத் தெளிவான வரையறைகள் மிகக் கவனமாக வகுக்கப்பட்டுள்ளன.

இந்தச் செயல்பூர்வமான துறைச் சட்டங்களுடன், நம்பிக்கை சார்ந்த கொள்கைகளையும் உள்ளடக்கியதே ‘ஷரீஆ’ எனும் மார்க்க நெறியாகும். செயல்கள் தொடர்பான சட்ட விதிகளுக்கு, ‘ஃபிக்ஹ்’ என்று பெயர். இந்த வேறுபாட்டைத் தொடக்கத்திலேயே நூலாசிரியர் விவரித்துவிடுவது சிறப்பு.

Read more...
 
தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள் Print E-mail
Friday, 14 September 2018 07:28

தனி மனித சமூக வாழ்வில் இறை நியதிகள்

தனி மனித மூக வாழ்வில் இறை நியதிகள்  (நூல்)

ஒருவன் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வானிலும் பூமியிலும் வெற்றி பெற முடியாது. ஒருவன் இறைநிராகரிப்பாளன் என்பதற்காக அவன் உலகில் தோற்றுப் போவதுமில்லை.

மனிதன் வெற்றிக்குரிய இறை நியதிகளைக் கண்டறிந்து அதற்காக தனது ஆற்றலையும் முயற்சியையும் வலுவாகப் பிரயோகிக்கின்றபோது அவன் வெற்றி பெறுகின்றான். இல்லாதபோது அவன் தோற்றுப் போகின்றான். இது மாறாத இறை நியதி.

இந்த இறைநியதிகள் குறித்து முஸ்லிம்களிடம் எவ்வித விழிப்புணர்வும் இருப்பதாகத்தெரியவில்லை எனவும் பிரபஞ்சத்தினதும் ஏனைய உயிரினங்களினதும் இயக்கங்களை நிர்வகிக்கின்ற பிரபஞ்ச நியதிகளை ஆராய்ந்து கற்கும் அறிவியல் முயற்சிகளை முஸ்லிம்கள் கைவிட்டுப் பல நூற்றாண்டுகளாகி விட்டன.

இதன் விளைவாக அவர்கள் வாழும் உலகமோ அவர்களைப் பூண்டோடு புதை குழிக்கு அனுப்ப விரும்பும் எதிரிகளிடமிருக்கிறது என்ற பேருண்மையையும் இந்நூல் ஆழமான கவலையோடு சொல்லிச் செல்கின்றது சிந்திக்கத் தூண்டுகின்றது.

நீண்ட நெடும் தஃவா வரலாற்றின் உடனடித் தேவையை நிறைவேற்றி வைக்கும் வகையிலும் எதிர்கால அழைப்பியல் வரலாற்றை பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்றபிரக்ஞையோடும் எழுதப்பட்டதாகவே தோன்றுகின்றது.

Read more...
 
'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்' Print E-mail
Monday, 01 May 2017 07:45

'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'

[ சமூக ஆர்வலர் Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)   அவர்கள் அவ்வப்போது   இணையத்தில் எழுதிவந்த கட்டுரைகளை நூலாக தொகுத்து வெளியிட்டு வருகிறார். 'சமுதாய சிந்தனையும், முத்து சிதறல்களும்'   சகோதரர் அவர்களின் மணிமகுடமாக அமைய வாழ்த்துக்கள்.  இங்கு இடம்பெற்றுள்ள நூலின் தலைப்புகளே இந்நூலின் முக்கியத்துவத்தை   நமக்கு பரைசாற்றுகிறது. சிறப்பான கட்டுரைகளை தாங்கிநிற்கும் இந்நூல் ஒவ்வொரு இளைஞரின் கரங்களில் இருப்பது பயனுள்ளதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.  -adm.N.I.]

1) பொறுமையுடன் கேட்டுப் பாருங்கள் அல்லாஹ் பொக்கிஷத்தை மூடுவதில்லை!

2) இஸ்லாமிய மார்க்கம் பரந்து விரியக் காரணமென்ன !

3) உலகம் பிறந்தது எனக்காக உண்மை மறந்தது எதற்காக!

4) ஈமானிருந்தால் எதனையும் வெல்லலாம்!

5) கருணை காட்டுதலும், பசித்தவர் புசித்தலும் விசுவாசிகளின் கடமை!

6) திருமணம் வாழ்க்கையில் ஓர் வசந்தம்!

7) என்னோடக் கதையைக் கேளுங்கள் என் சொந்தங்களே!

Read more...
 
அண்ணலாரும் அறிவியலும் - நூல் அறிமுகம் Print E-mail
Sunday, 18 October 2015 08:04

தூண்டில் பதிப்பகத்தைத் தொடங்கிய போது, தற்போது விற்பனையில் இல்லாத சிறந்த நூல்களை மறுபதிப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தையும் முன்மொழிந்து தொடங்கினோம். அதற்கு முக்கியமானதொரு காரணம் உண்டு. நவீன அறிவியல் வளர்ச்சியில் முன்னேறியிருக்கும் இன்றைய காலகட்டத்தில் எழுத்துத் துறையில் இயங்குபவர்களுக்கு தரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

பிறமொழிகளில் உள்ள நல்ல நூல்கள் தமிழ்மொழியில் ஏராளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எத்தனையோ நூல்களும், தகவல்களும் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன.

ஆனால், முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்துத் துறையில் இயங்கியவர்களுக்கு இதுபோன்ற வசதி வாய்ப்புகள் ஏதும் கிடைக்கப் பெறவில்லை. தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நூலகங்களில் செலவிட்டு, பெரும் சிரமப்பட்டு ஒவ்வொரு நூலையும் உருவாக்கித் தந்தனர். குறிப்பாக, எத்தனையோ முஸ்லிம் எழுத்தாளர்கள் வறுமையில் வாடிய நிலையிலும் நல்ல நூல்களைத் தந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

அப்படி உருவான நூல்களில் பெரும்பாலானவை முதல் பதிப்போடு நின்று போய் இன்றைய தலைமுறையினருக்கு கிடைக்காமல் போன நிலை வேதனைக்குரிய விஷயமாகும்.

Read more...
 
MRM அப்துற் றஹீம்: தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி Print E-mail
Wednesday, 17 May 2017 07:23

M.R.M.அப்துற் றஹீம்:  தமிழில் சுயமுன்னேற்ற நூல் முன்னோடி

தமிழில் ‘இஸ்லாமியக் கலைக்களஞ்சியம்’ எழுதிய ஒரே எழுத்தாளர் M.R.M. அப்துற் றஹீம் 

இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த படைப்பாளிகளுள் ஒருவரும் தமிழில் முதன்முதலாகச் சுய முன்னேற்ற நூல்களைப் படைத்தவருமான அப்துற் றஹீம் (Abdur-Rahim) பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

o ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பிறந்தார் (1922). தொண்டி அரபி மதரஸாவில் அரபு மொழியில் தேர்ச்சி பெற்றார். பின்னர் தொண்டியிலும் காரைக்குடியிலும் ஆரம்பக் கல்வி கற்றார். புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் இன்டர்மீடியட்டும் சென்னை முகம்மதன் கல்லூரியில் பி.ஏ. பட்டமும் பெற்றார்.

o சிறிது காலம் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வந்தார். அப்போது அந்த ஊரில் இலவச நூலகம் திறக்கப்பட்டது. புத்தகங்களை விஷயவாரியாகப் பிரித்து அட்டவணை தயாரிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது.

o அப்போது அங்கே ‘லார்ட் ஆஃப் அரேபியா’ என்ற நூலைப் பார்த்தவுடன், இதை நாம் மொழிபெயர்த்தால் என்ன என இவருக்குத் தோன்றியது. இது இவரது வாழ்வையேப் புரட்டிப் போட்டது. அதை ‘அரேபியாவின் அதிபதி’ என்ற நூலாகப் படைத்தார். தமிழறிஞர் சாமிநாத சர்மா இதற்கு அணிந்துரை எழுதி சிறப்பு செய்தார். சக்தி காரியாலயம் இந்நூலை வெளியிட்டது. இது வெளிவந்தபோது இவருக்கு வயது 22.

o ‘சுதந்திர நாடு’ என்ற பத்திரிகையின் ஆசிரியராக அப்போது பணி யாற்றினார். யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் என்ற பதிப்பகத்தைத் தொடங்கினார். 1948-ல் ‘வாழ்க்கையில் வெற்றி’ என்ற இவரது நூல் வெளிவந்தது. தமிழின் முதல் வாழ்வியல் நூலான இது வாசகர்களின் ஆதரவு பெற்று விற்பனையில் சாதனை படைத்தது.

Read more...
 
தோழர்கள் - நூல் : முதலாம் பாகம் Print E-mail
Monday, 06 May 2019 07:20

தோழர்கள் - நூல் : முதலாம் பாகம்

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு 2011
விலை ₹. 150.00

இந்நூலைப் பற்றி...

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழர்கள் தொடரின் முதல் இருபது அத்தியாயங்கள்.

“இந்நூலை, நபித்தோழர்கள் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ஒருமுறை வாசிக்க வேண்டும். இத்தொகுப்பை எத்தகைய அருமையான மொழி நடையில் அமைத்துள்ளார் என்பதை அறிந்துணர்வதற்காக இன்னொரு முறை படிக்க வேண்டும். மேன்மக்களான தோழர்களின் வரலாறுகள் மூலம் படிப்பினை பெறுவதற்காக மேலும் மேலும் படிக்க வேண்டும்.” (அதிரை அஹ்மது)

புத்தகம் பெற தொடர்பு முகவரி:

Read more...
 
தோழியர் (நூல்) Print E-mail
Monday, 06 May 2019 07:54

தோழியர் (நூல்)

ஆசிரியர் நூருத்தீன்
பதிப்பகம் சத்தியமார்க்கம்.காம்
வடிவம் அச்சு நூல்
பதிப்பு 2014
பக்கங்கள் 188
விலை ₹. 70.00

இந்நூலைப் பற்றி

சத்தியமார்க்கம்.காம் இணைய தளத்தில் வெளியான நபித் தோழியரின் வரலாறு.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 7 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article