வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி! Print E-mail
Saturday, 28 March 2015 10:10

ஆயுளை அதிகரிக்கும் இஞ்சி!

''இஞ்சிக்கு அஞ்சாதது எதுவுமே இல்லை,'' என்பது சித்த மருத்துவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. எந்த மாதிரியான நோயாக இருந்தாலும் அதற்கான மருந்தில் பெரும்பாலும் இஞ்சி இடம்பிடித்துவிடும். அது இஞ்சியாக இருக்கும்போது மருத்துவத்துக்குப் பயன்படுவதைவிட, காய்ந்து சுக்கு என்றான பிறகுதான் பயன்பாடு அதிகம்.

இஞ்சியை சமையலில் தாரளமாக பயன்படுத்திக் கொள்கிறோம். பல பகுதியில் இஞ்சியை ஊறுகாயில் அதிகமாக சேர்க்கின்றனர். இஞ்சிக்கு உஷ்ணப்படுத்தும் குணம் உண்டு என்றாலும் கபம், வாதம், சிலேத்துமம் போக்குகிறது.

இஞ்சிக்கு, ஞாபக சக்தியை அதிகரிக்கும் குணம் அதிகமுண்டு. குடலில் சேரும் கிருமிகளை அழித்துவிடும். கல்லீரலை சுத்தப்படுத்துகிறது. மலச்சிக்கல், வயிற்றுவலி ஏற்பட்டால் இஞ்சிச்சாறில் சிறிது உப்பு கலந்து பருக வேண்டும்.

Read more...
 
சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் Print E-mail
Sunday, 08 February 2015 17:33

சிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் - விஞ்ஞானயின் ஆச்சரியமான உண்மை சம்பவம் !

இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எளிமையாக மிக குறைந்த செலவில் திருப்ப பெற்ற ஒரு விஞ்ஞானயின் உண்மை சம்பவம் என்பதாலும், தேதி வாரியாக செயல்பாடுகள் (ஆங்கில வலைப்பூவில் அவரது மகன் ) பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், மற்றவர...்களுக்கு நிச்சயம் பயனளிக்குமென்பதாலும் இதனை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று எதுவென்றாலும் மருத்துவமனை, மாத்திரைகள், மருந்துகள் என்று இன்றைய சமூகம் உள்ளது. ஒரு சிறு தலைவலி போல் இருந்தால் கூட உடனடி மாத்திரை. உணவே மருந்து என்று வாழ்ந்த தமிழன், இன்று மருந்தே உணவு என்று வாழ்கிறான் என்று சிலர் கூறுவது உண்மையாகத்தான் உள்ளது.

கடந்த சில வருடங்களாக நமது ஊரில், குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு சிறுநீரக செயலிழப்பு (Kidney failure) அதிகம் நடைபெறுகிறது. இதற்கு பல பெரிய வைத்தியர்கள் கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்தும் முழு பலன் அடைவதில்லை.

இங்கு முழுவதுமாய் செயலிழந்த, இன்றைய தொழிற்நுட்ப வைத்தியர்களால் இனி ஒன்றுமே செய்ய இயலாது என்று கை விடப்பட்ட ஒர் சிறு நீரகத்தின் செயல்பாட்டை 5%திலிருந்து 80%மாய், இரண்டே மாதத்தில் மாற்றிய ஒர் கதையை இங்கு கூறுகிறேன். நான் கதையென்று சொன்னவுடன், ஏதோ கட்டு கதையென்றோ, எங்கெனும் புத்தகத்தில் படித்தது என்றோ நினைக்க வேண்டாம். இது நானே அருகில் அமர்ந்து கண்டு வியந்த உண்மை.

Read more...
 
ஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும் Print E-mail
Friday, 03 April 2015 06:16

ஆறு வகையான “ஹார்ட் அட்டாக்கும் ஸ்டென்ட் சிகிச்சையும்

மாரடைப்பா... இல்லையா என்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தின் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் திடீர் மரணம் சம்பவித்துவிடும்.

உலக இதய குழு, ஐரோப்பிய இதயக் கழகம், அமெரிக்க இதயக் கழகம், அமெரிக்க ஹார்ட் சங்கம் இந்த நான்கும் சேர்ந்து, உலக ஆய்வு கூட்டமைப்பு அமைத்து, மாரடைப்பின் வகைகளை வகுத்துள்ளன.

கோல்டன் அவர் – Golden Hour

முதல் 2 மணி நேரம் “கோல்டன் அவர்’ என்று அழைக்கப் படுகிறது. கரோனரி ரத்தக்குழாயில் முழு அடைப்புக்கு காரணமான ரத்தக் கட்டியை 2 மணி நேரத்தில் கரைக்க வேண்டும். இல்லையேல், அந்த ரத்த நாளம் ரத்தம் செலுத்தும் இதயத்தசைகள் அழிந்து (நெக்ரோசில்) இதயத்தின் ரத்தத்தைச் செலுத்தும் திறன் இஜச்சன் பிராக்ஸன் (இ.எப்) குறைந்து, மூச்சு திணறல், படபடப்பு, ரத்த அழுத்தம் குறைதல், பலவித சிக்கலை ஏற்படுத்தி மரணத்தை ஏற்படுத்தும். அதனால், தான் நேரம் விரயமாகாமல் 2 மணி நேரத்தில் சிகிச்சையைத் தொடங்கி இதயத்தை காப்பாற்ற வேண்டும். இதை முதன்மை பலூன் சிகிச்சை என்று கூறுகிறோம்.

Read more...
 
உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்பதை தெரிந்துகொள்ளலாம்! Print E-mail
Monday, 04 May 2015 06:44

உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து என்ன நோய் என்பதை தெரிந்துகொள்ளலாம்!

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?

சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.


டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.

2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?

அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.

டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Read more...
 
பழங்களை எப்படி, எப்போது சாப்பிடவேண்டும்? Print E-mail
Saturday, 27 August 2016 08:49

பழங்களை எப்படி, எப்போது சாப்பிடவேண்டும்?

இது உங்கள் கண்களைத் திறக்கும் பதிவு!! கடைசி வரை முழுமையாகப்படித்து விட்டுப் பின் உங்கள்
e-list இல் இருக்கும் இருக்கும் அனைவருக்கும் அனுப்புங்கள்!!

Dr. Stephen Makeover தீராத முற்றிய நிலையிலுள்ள புற்றுநோய் நோயாளிகளுக்கு, ஒரு மரபு வழியல்லாத சிகிச்சை முறை அளித்ததில், பெரும்பாலானோர், நோயிலிருந்து மீண்டிருக்கின்றனர்.

முதலில் அவர், அவரது நோயாளிகளின், நோயைக் குணப்படுத்த சூரிய சக்தியை பயன்படுத்தினார்.

உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை பயன்படுத்தி செய்யும் இயற்கை வழிச் சிகிச்சை முறையில் நம்பிக்கையுடையவர். அவரது கட்டுரையைக் கீழே பார்ப்போம்.

புற்றுநோயைக் குணப்படுத்தும் உத்திகளில் இதுவும் ஒன்று!

புற்றுநோயைக் குணப்படுத்தும் எனது சிகிச்சைமுறைகளில், சமீபகால வெற்றிவிகிதம் 80%.

Read more...
 
ஒவ்வாமை - அலர்ஜி (Allergy) Print E-mail
Tuesday, 22 September 2015 06:52

ஒவ்வாமை - அலர்ஜி (Allergy)

  சி.எஸ். தேவநாதன்  

அலர்ஜி எனப்படும் ஒவ்வாமை ஒரு நோயோ இல்லையோ, பல நோய்களுக்கு அதுவே காரணமாகி விடுகிறது.

நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒரு நாளுக்குள் குறைந்தது நூறு தும்மல் போடுகிறவரை. கண்ணில் இருந்து நீர் ஒழுகும். மண்டை ஒரேடியாய்க் கனத்துப் போகும். அவருடைய பிரச்சனை என்ன? பூவின் மகரந்தத் தூள்கள் காற்றில் பறந்து வந்து மூச்சு வழியாய் உள்ளே போய்விட்டிருக்கும். ஒவ்வொரு மழைக் காலமும் அவருக்கு நரக வேதனைதான்.

சிலருக்கு ஆண்டு முழுதும் பிரச்சனை. மகரந்தத் தூள் மாதிரி ஒரு சிறிய பூச்சியின் ஒரு சிறிய துகள் உணவு மருந்து ரசாயனப் பொருள் இறால் மீனின் ருசி சாதாரணத் தூசு என்று பல உருவங்களில் அலர்ஜி அவர்களைத் தாக்கி விட்டிருக்கும். மூச்சுத் திணறல் மனிதரை உலுக்கி எடுத்துவிடும்.

பெற்றோரில் ஒருவருக்கு அலர்ஜி இருந்தால் அவரது குழந்தைகளில் ஒருவருக்கு அலர்ஜி வர வாய்ப்பிருக்கிறது. பெற்றோர் இருவருக்கும் அலர்ஜி இருந்தால் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு அலர்ஜி வரும்.

Read more...
 
மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன? Print E-mail
Tuesday, 20 December 2016 08:24

மூக்குக் கண்ணாடிகள் நமக்கு என்ன செய்கின்றன?

       நாகூர் ரூமி      

பார்வை என்பது மற்றவர் கண்களுக்குத் தெரியாமல் இருப்பதைப் பார்க்கமுடிகிற கலையாகும்.

மற்ற உறுப்புகளில் பிரச்னை ஏற்படும்போது, அதைக் காலப்போக்கில் சரி செய்யமுடியும் எனில், கண்ணில் ஏற்படும் பிரச்னைக்கு மட்டும் ஏன் காலம் பூராவும் கண்ணாடி அணிந்துகொண்டே இருக்க வேண்டும்?

இந்தக் கேள்வியை யாருமே கேட்பதில்லையே ஏன்?

கண்ணில் பிரச்னை ஏற்பட்டால் கண்ணாடி, அல்லது லென்ஸ், அல்லது அறுவை சிகிச்சை என்று நாம் முடிவு செய்துவிட்டோம். ஏன், அது ஒரு மத நம்பிக்கையைப்போல உறுதியடைந்த ஒன்றாகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

கண்ணாடி போட்டுக்கொள்பவர், கண்ணாடிக் கம்பெனியின் சொத்தாகி விடுகிறார். கண்கள், கண்ணாடியின் அடிமைகளாகி விடுகின்றன.

Read more...
 
சிறுநீரை அடக்க வேண்டாம்! Print E-mail
Saturday, 25 February 2017 09:17

சிறுநீரை அடக்க வேண்டாம்!

ஒரு உண்மை சம்பவம்...

15 வயது சிறுமிக்கு காய்ச்சல் என்று சில நாட்கள் முன்னதாக அந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தனர்.

அன்று மருத்துவரின் அறிவுரைப்படி அச்சிறுமிக்கு இரத்தப் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.

அன்று தான் ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை மருத்துவரும் அச்சிறுமியின் பெற்றோரும் அறிய வந்தனர்.

என்னவெனில் அச்சிறுமியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டது என்பது.

அச்சிறுமியின் பெற்றோர் கலங்கி விட்டனர்.

Read more...
 
தேன் ஏன் கெட்டுப் போவதில்லை? Print E-mail
Sunday, 08 May 2016 06:38

தேன் ஏன் கெட்டுப் போவதில்லை?

தேனீ மலர்களிலிருந்து சேகரிக்கும் தேனை அப்படியே வைத்துக் கொள்வதில்லை கூட்டுக்குச் செல்லும் போது அதறகென்று ஸ்பெஷலாக வயிற்றுக்குள் ஒரு பை வைத்திருக்கிறது அதில்தான் கொண்டு போகிறது.

வயிற்றில் இருந்து இந்தப் பையைப் பிரிக்கக் குட்டியாக வால்வு இருக்கிறது சமூகத்துக்கு வேண்டியதைச் சொந்தமாகச் சாப்பிடாமல் பாதுகாக்க...!

இந்த பையில் இருக்கையில் பூந்தேன் சில இரசாயன மாறுதல்களுக்கு உள்ளாகிறது அதிலிருக்கும் சர்க்கரை வகைகள் மாறுகின்றன.

Read more...
 
ஈயும் நோயும்! Print E-mail
Thursday, 10 August 2017 07:32

ஈயும் நோயும்!

      சா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil.,    

عن أبي هريرة رضي الله عنه يقول: قال النبي صلى الله عليه وسلم: إذا وقع الذباب في شراب أحدكم فليغمسه، ثم لينـزعه، فإن في إحدى جناحيه داء، والأخرى شفاء. (صحيح البخاري التامل: 3320)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவரது பானத்தில் ஈ விழுந்துவிட்டால் (முதலில்) அதை அவர் (அதிலேயே) அமிழ்த்தட்டும். பிறகு அதை வெளியே எடுத்துப் போட்டுவிடட்டும். ஏனெனில், ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோயும் மற்றொன்றில் நிவாரணமும் உள்ளது. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 3320)

ஈயின் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் விஷமும் மற்றொன்றில் விஷமுறிவும் உள்ளது. அது உணவுப் பொருள் அல்லது பானத்தில் வந்து அமரும்போது விஷமுள்ள இறக்கையை அமிழ்த்துவதால் விஷமுறிவுள்ள மற்றோர் இறக்கையையும் நாம் அமிழ்த்திவிட்டால் நிவாரணம் கிடைத்துவிடும். விஷமுள்ள இறக்கை ஈயின் இடப் பக்கத்திலும் விஷமுறிவு இறக்கை அதன் வலப் பக்கத்திலும் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. (ஃபத்ஹுல் பாரீ)

Read more...
 
இரும்புச் சத்தையும் கொழுப்பையும் சீராக்கும் ரத்தத் தானம் Print E-mail
Saturday, 27 June 2015 22:40

இரும்புச் சத்தையும் கொழுப்பையும் சீராக்கும் ரத்தத் தானம்

மனித உயிர்களைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கும் ரத்தத் தானம், தானங்களில் சிறந்தது என்பதில் கேள்விக்கு இடமிருக்காது. ஒருவர் செய்யும் ரத்தத் தானம், ரத்தம் பெறுபவருக்குக் கொடுக்கும் ஒப்பற்ற வாழ்நாள் பரிசு.

இரத்ததானம் அல்லது குருதிக் கொடை என்பது ஒருவர் தனது இரத்தத்தைப் பிறருக்குப் பயன்படுத்திக் கொள்ளும் மனப்பான்மையுடன் தானமாக வழங்குவது ஆகும். ஓர் ஆரோக்கியமான மனிதனின் உடலில் 5 முதல் 6 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானம் செய்பவர் ஒரு நேரத்தில் 200, 300 மி.லி. இரத்தம் வரை கொடுக்கலாம். அவ்வாறு கொடுத்த இரத்தத்தின் அளவு 24 மணி நேரத்தில் நாம் உண்ணும் சாதாரண உணவிலேயே மீண்டும் உற்பத்தியாகிவிடும்.

இரத்த தானம் செய்வதற்கு 5, 10 நிமிடங்கள் போதும். உடலில் உள்ள ஒவ்வொரு இரத்த அணுவும் (செல்கள்) மூன்று மாத காலத்தில் தானாகவே அழிந்து மீண்டும் உற்பத்தியாகிறது. இரத்த அணு உற்பத்தி என்பது உடலில் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் பணி. எனவே இரத்த தானம் செய்வதால் உடலுக்குப் பாதிப்போ, பலவீனமோ ஏற்பட வாய்ப்பில்லை.

ஒவ்வொரு முறையும் தானமாகக் கொடுக்கப்படும் ரத்தம் மூலம் மூன்று பேரைக் காப்பாற்ற முடியும்.

Read more...
 
பெண்களை வருத்தும் சிறுநீர்ப் பிரச்சினை - தீர்வு என்ன? Print E-mail
Wednesday, 22 April 2015 08:03

பெண்களை வருத்தும் சிறுநீர்ப் பிரச்சினை - தீர்வு என்ன?

மகளிர் சிறுநீர்ப் பிரச்சினைக்குச் சிகிச்சை உள்ளதா?

சிறுநீரை வெளியேற்றும் பிரச்சினை வகைகள் யாவை?

அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தூண்டும் காரணிகள் யாவை?

பிரச்சினையைக் கண்டுபிடிக்க சோதனைகள் யாவை?

சிறுநீர் கட்டுப்பாடு இல்லாத பிரச்சினைகளுக்குச் சிகிச்சை என்ன?

சிறுநீர் கசிவா? இதோ உங்களுக்கான தீர்வு

Read more...
 
சிறந்த முறையில் தர்மம் செய்வோம்! Print E-mail
Thursday, 09 May 2019 13:48

       தர்மம் செய்வதில் சிறந்த வகைகள்!        

o இரகசியமாக தர்மம் செய்தல்.

o  ஆர்வத்தோடும் தாமதிக்காமலும் தர்மம் செய்தல்.

o  தாராளமாக தர்மம் செய்தல்.

o  சிறந்தவற்றையும் ஹலாலானவற்றையும் தர்மம் செய்தல்.

நாம் செய்ய‌வேண்டிய தர்மங்கள் எவ்வாறு இருக்கவேண்டும்? இஸ்லாம் எந்த வகையில் தர்மம் செய்ய‌வேண்டும் என்று நமக்கு சொல்கிறது?

குர்ஆன் - ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக்கொள்வோம்:

Read more...
 
ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண் Print E-mail
Sunday, 27 July 2014 00:04

ஜகாத்: இஸ்லாமியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் தூண்

இன்ஷா அல்லாஹ் வெகு விரைவில் நாம் நோன்புப் பெருநாளைக் கொண்டாட இருக்கிறோம். இந்தப் பெருநாளை அரபி மொழியில் ஈதுல் பித்ர் (EID UL FITR) என்று  அழைக்கிறார்கள். தமிழில் இதை ஈகைத்திருநாள் என்று சொல்லலாம். உலக சரித்திரத்திலேயே ஈகைக்காக ஒரு ஒரு நாளை திருநாளாகக் கொண்டாடுவது இஸ்லாத்தின் சிறப்பியல்புகளில் குறிப்பிடத் தக்க ஒன்று.

ஈத்துவக்கும் இன்பத்தை கடமையாக்கிய ஈடு இணையற்ற மார்க்கமே இஸ்லாம். உலகில் தோன்றிய எந்த மதத்துக்கும் இந்த சிறப்பு இல்லை. தர்மமும் மனிதாபிமானமும் சமத்துவமும் சகோதரத்துவமும் இஸ்லாத்தின் நாடி நரம்புகளில் ஓடிக் கொண்டு இருக்கும் கொள்கைகள்.

பிற மதங்களில் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதற்குப் பரிகாரம் கோயில் உண்டியலில் காசு போடவேண்டும்; நூற்றுக் கணக்கில் தேங்காய் உடைக்க வேண்டும்; நெருப்பில் நடக்க வேண்டும்; தலையில் மொட்டை அடிக்க வேண்டும்; மண்சோறு சாப்பிட வேண்டும்; ஆணிச்செருப்பு போட வேண்டும்; அரை நிர்வாணமாய் ஓடவேண்டும்; அலகு குத்த வேண்டும்; பச்சைக்  குழந்தைகளை மண்ணில் போட்டு புதைத்து பின் மீட்டு எடுக்க வேண்டும்; மொட்டை மண்டையில் மொட்டைத்தேங்காயை உடைக்க வேண்டும்- இப்படி.

ஆனால் முஸ்லிம் ஒருவன் பாவமான செயலை செய்துவிட்டால் – அந்தப் பாவத்துக்குப் பரிகாரம் ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்; இல்லாதோர்க்கு தானியங்களை தாரைவார்க்க வேண்டும் என்பதே. அந்த வகையில் தர்மத்தை தனது மூச்சாக வைத்து இருப்பது இஸ்லாம்.

Read more...
 
சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா? Print E-mail
Sunday, 15 May 2011 06:23

சொந்த மகனுக்கு ஜகாத் கொடுக்கலாமா?

மஅன் பின் யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: (இவருடைய தந்தையும் பாட்டனாரும் நபித்தோழர்களாவர்) என் தந்தை யஜீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சில தங்க நாணயங்களைத் தர்மம் செய்வதாக எடுத்துச் சென்று பள்ளிவாசலில் இருந்த ஒரு மனிதரிடம் (யாராவது தேவையுடையோருக்கு வழங்குமாறு) கொடுத்து வைத்தார்.

நான் சென்று அவற்றை வாங்கிக் கொண்டேன். அந்தத் தங்க நாணயங்களுடன் என் தந்தையிடம் வந்தேன்.

அவரோ அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் உனக்கென நினைக்கவில்லையே! என்றார். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இந்தப் பிரச்சனையைக் கொண்டு சென்றேன். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: யஜீதே! நீ நினைத்தது உனக்கு. மஅனே! நீ பெற்றுக் கொண்டது உனக்கு. (நூல்: புகாரி)

இந்த நபிமொழி சுவையானதும் சிந்தனைக்குரியதுமான நிகழ்ச்சி ஒன்றை எடுத்துரைக்கிறது.

நபித்தோழராகிய யஜீத் ரளியல்லாஹு அன்ஹு சில தங்க நாணயங்களை எடுத்துக் கொண்டு தர்மம் செய்வதற்காக பள்ளிவாசல் சென்றபோது அங்கு ஏழைகள் யாரும் இல்லை. அங்கே அமர்ந்திருந்த ஒருவரிடம் சென்று யாராவது ஏழை எளியவர் வந்தால் அவருக்கு என் சார்பாக இவற்றை வழங்கவும் என்று சொல்லிக் கொடுத்து விட்டு வந்தார்.

Read more...
 
அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா? Print E-mail
Sunday, 13 March 2011 07:30

அணியும் நகைகளுக்கு ஜகாத் உண்டா?

 மவ்லவி, ஹாஃபிள், நூர் முஹம்மது ஃபாஜில் பாகவி

[ நகைக்கு ஜகாத் இல்லை என்று கூற வலுவான சான்றுகள் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால்தான், இராக்கில் இருந்த ஆரம்ப காலகட்டத்தில் நகைக்கு ஜகாத் இல்லை என்று கூறி வந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எகிப்து வந்த பின் அவ்வாறு கூறுவதை நிறுத்திக் கொண்டு,

"நகையில் ஜகாத் உண்டு என்று கூறப்படுகிறது. நான் இது விஷயத்தில் நல்ல தீர்வை தரவேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்." என்று கூறினார்கள். (அல் உம், தர்கீப் வ தர்ஹீப்)

ஆரம்ப காலத்தில் ஜகாத் இல்லை என்று கூறிக் கொண்டிருந்த இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இறுதியில் அக்கருத்தை மாற்றிக் கொண்டார்கள் என்பதை "அல் உம்" என்ற அவரது நூலில் பல இடங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

எனவே ஷாஃபி மத்ஹபின்படி நகைக்கு ஜகாத் இல்லை என்று கருதி ஜகாத் வழங்காமல் இமாம் ஷாஃபி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மீது பழியைப் போட்டுவிட்டு (மறுமையில்) தப்பித்து விடலாம் என்று கருத வேண்டாம். மறுமை நாளில் யாரும் யாரின் மீதும் பழி சுமத்தி விட்டு இறைவனிடமிருந்து தப்பி விட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

"நகைகளுக்கு ஜகாத் வழங்கி விட்டால் அதனை அணிந்து கொள்வதில் குற்றமில்லை" என அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: உர்வத் பின் ஜுபைர், நூல்: தாரகுத்ணி, பைஹகி)

'யார் தங்கத்தையும் - வெள்ளியையும் சேமித்து வைத்து அல்லாஹ்வின் பாதையில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்குக் கடும் தண்டனையுண்டு" (அல்குர்ஆன் - 9:34,35)

இறைவழியில் செலவு செய்யாமல் சேமித்து வைப்போருக்குத் தண்ணடணையுண்டு என்று கூறுவதால் அவற்றின் மீதும் ஜகாத் கடமையாகிறது. பெண்கள் தங்கத்தைச் சேர்த்து வைக்கவில்லை, அதன் மூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்கிறார்கள் அதனால் அதற்கு ஜகாத் தேவையில்லை என்றெல்லாம் யாரும் சமாதானம் சொல்ல முடியாது.

தம்மை அழகுபடுத்திக் கொண்டு தொழ வந்த பெண்களிடம்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபதேசம் செய்கிறார்கள். உடனே பெண்கள், தமது காது வளையங்கள், கால் மெட்டிகள், வளையல்கள் எல்லாவற்றையும் கழற்றி அவற்றை இறைவனின் பாதையில் கொடுக்கிறார்கள். (நூல்: புகாரி)]

Read more...
 
பெண்களுக்கு ஸகாத் கடமையா? Print E-mail
Monday, 23 March 2015 06:22

பெண்களுக்கு ஸகாத் கடமையா?

இஸ்லாத்தைப் பொறுத்தவரை, குடும்பப் பொருளாதாரப் பொறுப்பு ஆண்களுக்கானது என்பதால், பணம் சம்பந்தப்பட்ட ஸகாத்தும் ஆண்களுடைய கடமையே என்கிற தவறான எண்ணமே பரவலாக நிலவுகிறது. இஸ்லாத்தில் ஈமான், தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் ஆகிய ஐந்தும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமை என்றே கூறப்பட்டுள்ளதே தவிர, ஆண்களுக்கு ஐந்து கடமைகளும், பெண்களுக்கு நான்கு மட்டுமே என்று சொல்லப்படவில்லை!

திருக்குர்ஆனில், 31 இடங்களில் ஸகாத்தைப் பற்றிக் கூறும் இறைவன், அவற்றில் ஒரு இடத்திலும் ஆண்களை மட்டும் விளித்துச் சொல்லவில்லை. ”ஈமான் கொண்டவர்களே” என்றுதான் பொதுவாக அழைத்துச் சொல்கிறான். இன்னும் சொல்லப்போனால், ஒரு இடத்தில் குறிப்பாக பெண்களைத்தான் அழைத்து ஸகாத் கொடுக்கச் சொல்கிறான்:

[33:33] (நபியின் மனைவிகளே!) ..... தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்; ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்.

ஆகவே குடும்பத்தின் பொருளாதார பொறுப்பனைத்தும் ஆணின் மேல் உள்ளதால் பெண்கள், தம்முடைய ஸகாத்திற்கும் ஆணே பொறுப்பு என்று தவறாக எண்ணி தட்டிக் கழிக்க இயலாது. எப்படி பெண்களின் ஈமான், தொழுகை, நோன்பு ஆகியவற்றிற்கு அப்பெண்களேதான் பொறுப்போ, அதேபோல பெண்களின் ஸகாத்திற்கும், ஹஜ்ஜிற்கும் பெண்கள்தான் பொறுப்பு! ஆண்கள் அல்ல!

Read more...
 
தங்கம் & வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை! Print E-mail
Sunday, 15 August 2010 10:26

தங்கம் & வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை!

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும்.

நம்முடைய இஸ்லாமிய சகோதரிகளில் சிலர் தங்க நகைகளை வாங்கி சேகரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஜக்காத் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருக்கின்றனர். இவர்கள் பின்வரும் திருமறை வசனங்களையும் மற்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கையையும் பற்றி சற்று சிந்தித்து அதன்படி செயல்பட கடமைப் பட்டுள்ளார்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

"யார் தங்கத்தை (அதற்குரிய பொருளாதாரத்தை)யும் வெள்ளியை (அதன் மதிப்பீடு பொருளை)யும் சேகரித்து வைத்து அல்லாஹ்வின் வழியில் அவற்றை செலவு செய்யாமல் வாழ்கிறார்களோ அவர்களுக்கு கடின வேதனை உண்டு என்று (நபியே!) நீர் எச்சரிக்கை செய்க. மறுமை நாளில் தங்கத்தையும், வெள்ளியையும் நரக நெருப்பிலிட்டு பழுக்கக் காய்ச்சப்பட்டு அவற்றைக்கொண்டு அவர்களின் முகங்களிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். (ஜகாத் கொடுக்காது) நீங்கள் சேகரித்து வைத்ததை இதோ சுவைத்துப் பாருங்கள் என்று கூறப்படும்" அல்-குர்ஆன் (9: 34 & 35).

Read more...
 
கட்டிடங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா? Print E-mail
Saturday, 20 August 2011 11:24

கட்டிடங்களுக்கு ஜகாத் கொடுக்க வேண்டுமா?

     ஐயம்:       செல்வந்தர்கள் தங்கள் வருமானத்தை மேலும், மேலும் பெருக்க, கட்டிடங்களாக வாங்கி வாடகைக்கு விடுகின்றனர்.

அப்படி கோடிக்கணக்கான ரூபாய்கள் பெருமதிக்கு கட்டிடங்கள் இருந்தாலும், அவற்றில் லட்சக்கணக்கான ரூபாய்கள் வாடகையாகப் பெற்றாலும், வருடம் முடிவதற்குள் வாடகையாகப் பெற்ற பணத்திற்கும், புதிய கட்டிடங்களை வாங்கி விடுகின்றனர்.

ஜகாத் பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. கேட்டாலும் சொத்துக்கள் இருக்கின்றனவே அல்லாமல், ஜகாத் கொடுக்க பணமாக இல்லை என்று தங்களின் செயலை நியாயப்படுத்துகின்றனர்.

குர்ஆன், ஹதீஸ்படி இது சரியா?

Read more...
 
ஜகாத் பெட்டி Print E-mail
Saturday, 19 May 2018 13:48

ஸகாத் பெட்டி

     முனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி     

[ ஒவ்வொரு மஹல்லாவிலும் ஸகாத் கடமையானவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் சிலர் மட்டுமே முறைப்படி ஸகாத்தை வழங்கி வருகின்றார்கள். அவர்களுள் பலர் தம் மஹல்லாவில் பணியாற்றுகின்ற இமாம், முஅத்தீனிடம் பெருநாள் அன்று கைலாகு (முஸாஃபஹா) செய்யும்போது நூறு, இருநூறு, ஐநூறு என வைத்துவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இதுதான் அவர்கள் வழங்கும் ஸகாத். இது முறையா?

ஐவேளைத்தொழுகை ஒவ்வொரு பள்ளியிலும் முறைப்படி நடைபெறுவதைப் போலவே ஒவ்வொரு பள்ளியிலும் "ஸகாத் பெட்டி" ஒன்று இருக்கத்தான் வேண்டும். அதுதான் முறை. ஏனென்றால் தொழுகை, ஸகாத் இரண்டும் ஒட்டிப்பிறந்த இரட்டைக்குழந்தைகள். அவ்விரண்டையும் பிரிக்கக்கூடாது.

தொழுகைக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுபோலவே ஸகாத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  அதை ஆலிம்கள் தாம் முன்னின்று செய்ய வேண்டும்.

ஒவ்வொரு ஆலிமும் ஒவ்வொரு பள்ளியிலும் "நான் ஸகாத் வாங்க மாட்டேன். உங்கள் ஸகாத்தை இதோ இந்த "ஸகாத் பெட்டியில் போடுங்கள்" என்று அறிவிப்புச் செய்து பாருங்கள். அதன்பின் சமுதாயத்தில் மறுமலர்ச்சி ஏற்படுவதோடு உங்கள் வாழ்க்கையிலும் ஒரு திருப்பம் ஏற்படும்.]

Read more...
 
அல்லாஹ்வின் பாதையில் ஜகாத் Print E-mail
Wednesday, 24 August 2011 11:25

அல்லாஹ்வின் பாதையில் ஜகாத்

எல்லாம் வல்ல அல்லாஹ் தனது வழிகாட்டும் வான்மறையில் ஜகாத் என்னும் தானம் எந்தெந்த வகையில் செலவிடப்பட வேண்டும் என்று அல்குர்ஆன் 9:60 வசனத்தில் தெளிவுப்படுத்தியுள்ளான்.

அந்த வசனம் வருமாறு:

o (ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும்,

o ஏழைகளுக்கும்,

o தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும்,

o (இஸ்லாத்தின் பால்) உள்ளங்கள் ஈர்க்கப்பட்டவர்களுக்கும்,

o அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும்,

o கடன்பட்டிருப்பதற்காகவும்,

o அல்லாஹ்வின் பாதையிலும்,

o வழிக்போக்கர்களுக்கும் உரியவை.

(இது) அல்லாஹ் விதித்த கடமையாகும்-அல்லாஹ் (யாவும் அறிபவன். மிக்க ஞானம் மிக்கவன்.) (அல்குர்ஆன் 9:60)

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 6 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article