வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு Print E-mail
Sunday, 18 April 2021 13:27

ரமழான் மாதத்துக் கொடையின் சிறப்பு

     Sayed Abdurrahman Umari     

ரமழான் மாதத்தில் செய்யப்படுகின்ற கொடைக்கும் மற்ற மாதங்களில் வழங்கப்படுகின்ற கொடைக்கும் பெரிய வேறுபாடு இருக்கின்றது. ரமழான் மாதத்தில் வழக்கத்தை விட கூடுதலாக இறை வழிபாட்டில் ஈடுபடுவோரைக் கண்டறிந்து அவர்களுக்கு கொடையளிக்க வேண்டும் என்பது மனதில் கொள்ள வேண்டிய அம்சமாகும்.
.
சம்பளம் வாங்கும் வைலைக்கு போவோர் ரமழான் மாத இபாதத்துகளை செய்ய வேண்டுமெனில் கண்டிப்பாக அவர்களுடைய ஊதியம் குறைந்துவிடும். அன்றாட வாழ்வு கேள்விக்குறியாக ஆகிவிடும்
.
அவ்வாறே இஃதிகாஃப் இருப்போர்,   குர்ஆன் கற்க நாடுவோர்,   குர்ஆனையும் இறைமார்க்கத்தையும் கற்றுக் கொடுப்போர்,   ரமழானை சிறந்தமுறையில் பயன்படுத்திக் கொள்ள விழைவோர்,   இறையில்லப் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வோர்,   முஸ்லிம் உம்மாவின் நலனுக்காக உழைப்போர்   போன்றவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு பணவுதவி செய்யவேண்டும்.

Read more...
 
அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை! Print E-mail
Friday, 04 May 2018 09:06

 

அல்லாஹ்வின் கருணைக்கு எல்லையில்லை!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே! தவறிழைப்பவர்களில் சிறந்தவர் தாம் செய்த தவறுக்காக மனம் வருந்தி மன்னிப்பு தேடிக்கொள்பவரே!"

(அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"என்னைப் பின்பற்றுவோர் அறியாமையால், மறதியால் அல்லது கட்டாயத்தினால் செய்திடும் தவறுகளை அல்லாஹ் என் பொருட்டால் மன்னித்து விட்டான்." (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;

"தான் பாவம் செய்யும் ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கோரிடும் மனிதர் நிரந்தர பாவியாக கணிக்கப்பட மாட்டார். அவர் நாளொன்றுக்கு எழுபது முறை அதே பாவத்தில் வீழ்ந்த போதிலும் சரியே!"

(அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

Read more...
 
ஏழை யார்? Print E-mail
Friday, 06 November 2009 08:21

ஏழை யார்?

 

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ''ஏழை யார்? என்பதை நீங்கள் அறிவீர்களா? என எங்களிடம் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள்.

''எவரிடம் வெள்ளிக் காசும், பொருள்களும்,இல்லையோ அவரே எங்களில் ஏழை'' என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.

''என் சமுதாயத்தில் ஏழை என்பவன், மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய நன்மைகளுடன் வருவான்.

ஆனாலும் அவன் இவனை ஏசினான், இவனை இட்டுக்கட்டினான்.

இவர் பொருளை சாப்பிட்டான் (கொலை செய்து) இவனது இரத்தத்தை ஓட்டினான்.

இவனை அடித்தான் என்ற குற்ற நிலையிலும் வருவான். அப்போது இவனது நன்மைகளிலிருந்து (இவனால் பாதிக்கப்பட்ட)வர்களுக்கு பிரித்து வழங்கப்படும்.

Read more...
 
முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை Print E-mail
Thursday, 29 August 2019 19:14

முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை

“எனது இந்த உம்மத் (இறைவனின் விஷேட) கருணையைப் பெற்ற உம்மத்தாகும். இந்த (உம்மத்துக்குரிய) தண்டனைகள் மறுமையில் வழங்கப் படுவதில்லை. மாறாக, இவ்வுலகிலேயே (இந்த உம்மத்) தண்டிக்கப் பட்டு விடும். சோதனைகளும், பூகம்பங்களும், (அநியாயமாகக்) கொல்லப் படுவதுமே (இந்த உம்மத்துக்கான இவ்வுலகத்) தண்டனைகளாகும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத் 4278)

அப்போது இந்த உம்மத்திலுல்லோரில்; மறுமையில் யாரும் நரகம் செல்லமாட்டார்களா? எனும் சந்தேகம் சிலருக்கு தோன்றலாம்...

இணைவைக்காத, பெரும்பாவங்கள் செய்யாத, இறைநம்பிக்கையாளருக்கு அவர் செய்த மற்ற பாவங்களுக்கான தண்டனையை இவ்வுலகிலேயே அல்லாஹ் வழங்கிவிடுவான் என்ற விளக்கத்தை இந்த ஹதீஸில் இருந்து நாம் விளங்கிகொள்ளலாம்.

நயவஞ்சகம், இணைவைப்பு, மிதமிஞ்சிய பெருமை போன்ற பாரதூரமான பாவ காரியங்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடும் போது அவர் தன்னாலேயே இந்த உம்மத்திலிருந்து வெளியேறி விடுகிறார். வெளிப் பார்வையில் இவ்வாறானோர் இந்த உம்மத்தைச் சார்ந்தோராகத் தெரிந்தாலும், அல்லாஹ்வின் பார்வையில் இவர்கள் நபியின் உம்மத்தைச் சார்ந்தோர் அல்ல. எனவே, ஏனைய சமூகங்களைப் போல் இவர்களையும் அல்லாஹ் மறுமையில் பிடிப்பான்.

Read more...
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்.. Print E-mail
Saturday, 29 June 2019 07:13

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹில்லம் அவர்களே பொறாமைப்படும் நபர்..

மிகவும் சுமை குறைந்த முஃமின்,

தொழுகையில் பெரும் பங்கு பெற்றவர்,

தனது இரட்சகனை சிறந்த முறையில் வணங்கக்கூடியவர்,

தனிமையிலும் அல்லாஹ்வை வழிபடுபவர்,

மக்களிடம் பிரபலமில்லாமல் இருப்பவர்,

அவரை நோக்கி விரல்களால் சுட்டிக்காட்டப்படாதவர்,

போதுமான அளவே தன் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடியவர்,

மேலும் அதன் மீது பொறுமையுடன் வாழ்க்கையைக் கழிப்பவர்.

Read more...
 
இன்பமும் துன்பமும் நன்மையாய் அமைந்திட! Print E-mail
Sunday, 15 May 2011 08:51

ரியாளுஸ் ஸாலிஹீன்

ஸுஹைப் பின் ஸினான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்:

''ஓர் இறை நம்பிக்கையாளனின் விவகாரம் குறித்து நான் ஆச்சரியம் அடைகிறேன்.

அவனுடைய ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது.

இது ஒரு நம்பிக்கையாளனுக்கே அன்றி வேறெவருக்கும் வாய்க்கப் பெறவில்லை!

அவனுக்கு மகிழ்வு நிலை வந்தால் நன்றி செலுத்துகிறான்.

அது அவனுக்கு நன்மையாக அமைகிறது.

அவனுக்கு கஷ்ட நிலை வந்தால் பொறுமை காக்கிறான்.

அதுவும் அவனுக்கு நன்மையாக அமைகிறது!’ (நூல்: முஸ்லிம்)  

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைநம்பிக்கையாளரின் நிலைமை குறித்து வியப்பை வெளிப்படுத்தியது அவரைச் சிறப்பிக்கும் வகையில்தான்! அவரது இறைநம்பிக்கையையும் அதிலிருந்து மலரும் வாழ்க்கைப் போக்கையும் திருப்பங்களையும் மெச்சிப் பாராட்டியே நபியவர்கள் கூறினார்கள். அவனது ஒவ்வொரு விஷயமும் அவனுக்கு நன்மையாகவே அமைகிறது என்று!

Read more...
 
"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!" Print E-mail
Friday, 01 June 2012 06:13

"இறைவா! என் முகத்தை நரகத்தைவிட்டும் திருப்புவாயாக!" 

புகாரி ஹதீஸ் 806. அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்:

இறைத்தூதர் அவர்களே! கியாமத் நாளில் எங்கள் இறைவனை நாங்கள் காண முடியுமா? என்று சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள்.

நபித்தோழர்கள் 'இறைத்தூதர் அவர்களே! இல்லை' என்றார்கள். மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் நீங்கள் ஜயம் கொள்வீர்களா?' என்று கேட்டார்கள். அதற்கும் நபித்தோழர்கள் 'இல்லை' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இதே போல்தான் நீங்கள் உங்களின் இறைவனைக் காண்பீர்கள்' என்று கூறினார்கள்.

தொடர்ந்து, 'கியாமத் நாளில் மக்களெல்லாம் ஒன்று திரட்டப் பட்டதும் யார் எதனை வணங்கினார்களோ அதைப் பின் பற்றிச் செல்லட்டும்' என்று இறைவன் கூறுவான். சிலர் சூரியனைப் பின்பற்றுவர். வேறு சிலர் சந்திரனைப் பின்பற்றுவர். மற்றும் சிலர் தீய சக்திகளைப் பின்பற்றுவர். இந்த சமூகம் முனாஃபிக்குகள் உட்பட அதே இடத்தில் நிற்பர்.

Read more...
 
அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை! Print E-mail
Tuesday, 25 December 2012 11:12

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன்.

அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் "யர்ஹமுக் கல்லாஹ்' (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக) என்று (மறுமொழி) கூறினேன்.

உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் "என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டேன்.

மக்கள் (பதிலேதும் கூறாமல்) தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன்.

Read more...
 
'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது' Print E-mail
Thursday, 01 August 2013 10:04

நன்மை பயக்கும் நபிமொழி - 84

'நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது.

இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும்.

எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்;

காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்'

என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார். (ஸஹீஹ் புகாரி 39)

 

"யார் சுயமரியாதையோடு நடந்து கொள்கிறாரோ அவரை அல்லாஹ் சுயமரியாதையுடன் வாழச்செய்வான்.

யார் (இன்னல்களைச்) சகித்துக் கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான்.

யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான்.

பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை''

என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6470)

 

ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது; ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,

கடமையான தொழுகைகளை நான் தொழுது,

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்று,

(மார்க்கத்தில்) அனுமதிக்கப்பட்டவற்றை அனுமதிக்கப்பட்டவை என்றும் விலக்கப்பட்ட வற்றை விலக்கப்பட்டவை என்றும் ஏற்று வாழ்ந்து,

இவற்றைவிட வேறெதையும் அதிகமாகச் செய்யாவிட்டாலும் நான் சொர்க்கத்தில் நுழைந்துவிடுவேனா?" என்று கேட்டார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''ஆம்" என்றார்கள்.

அந்த மனிதர் அல்லாஹ்வின் மீதாணையாக! இவற்றைவிட வேறெதையும் நான் அதிகமாகச் செய்யமாட்டேன்" என்று கூறினார். (நூல்: முஸ்லிம் 18)

Read more...
 
ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது? Print E-mail
Monday, 19 February 2018 07:14

ஒருவர் செய்யும் நற்செயல் 50 நபித்தோழர்களின் நற்செயலுக்கு ஈடாவது எப்போது?

பொறுமையின் காலத்தில் நற்செயலுக்கான பரிசு...

அல்லாஹ்வின் தூதர்  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: ''உங்களுக்குப் பின்னால் ஒரு காலம் வரும். அது பொறுமையின் காலமாகும். அக்காலத்தில் பொறுமையாக இருப்பது என்பது சூடான நிலக்கரியில் தத்தளிப்பது போன்றதாகும். அந்த சமயத்தில் எவர் ஒருவர் நற்செயல் புரிகிறாரோ அவர் உங்களில் 50 பேர் அந்த நற்செயலைப்புரிந்தால் என்ன பரிசைப் பெறுவீர்களோ அதை அவர் (ஒருவரே) பெறுவார்.''

ஸஹாபாக்கள் சிலர் கேட்டார்கள்: ''அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் 50 பேர் பேருக்கான பரிசுகளா?''

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: (இல்லை) உங்களில் 50 பேர் பெறும் பரிசு."

(நூல்கள்: அபூ தாவூத் 4341, திர்மிதீ 3085)

Read more...
 
இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள் Print E-mail
Tuesday, 12 April 2016 06:43

இறைத்தூதர் மட்டுமே அறிந்த மூன்று விஷயங்கள்

அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி (யூத மதத்தில் இருந்த) அப்துல்லாஹ் பின் சலாம் அவர்களுக்கு எட்டியது. உடனே அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து சில விஷயங்களைக் குறித்துக் கேட்டார். "தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.  பிறகு, 

1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது?

2. சொர்க்கவாசி முதலில் உண்ணும் உணவு எது?

3. குழந்தை தன் தந்தையின் சாயலிலோ அல்லது தன் தாயின் சாயலிலோ இருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள்.

Read more...
 
"என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கத்தில் நுழைவார்கள்" Print E-mail
Wednesday, 28 February 2018 08:39

Related image

o    'என்னை மறுத்தவர் தவிர என் சமுதாயத்தினர் அனைவரும், சொர்க்கத்தில் நுழைவார்கள்!' இறைத்தூதர் அவர்களே! மறுப்போர் யார்? என்று கேட்கப்பட்டது. 'எனக்குக் கட்டுப்பட்டவர், சொர்க்கத்தில் நுழைவார். எனக்கு மாறு செய்தவர், என்னை மறுத்தவராவார்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

o     '(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).

o     ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ''அழ்பாஉ'' என்ற ஒட்டகை இருந்தது. அதை எந்த ஒட்டகையாலும் முந்த முடியாது அல்லது முந்த முயற்சித்தது கூட கிடையாது. ஒரு காட்டரபி தன் பெண் ஒட்டகை மீது ஏறி வந்து, அதை முந்திவிட்டார். இது முஸ்லிம்களுக்கு துயரத்தை ஏற்படுத்தி விட்டது.. இதைக் கேள்விப்பட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''உலகில் எந்தப் பொருள் உயர்ந்தாலும், அதை (ஒரு நேரத்தில்) தாழ்த்துவது என்ற கடமை அல்லாஹ்வின் மீது உள்ளது'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

Read more...
 
அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள் Print E-mail
Thursday, 12 April 2018 08:41

அநீதிக்கு உதவி செய்பவர்கள் மற்றும் செய்யாதவர்கள்

      அநீதிக்கு உதவி செய்பவர்கள்       

அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள்.

மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை.

இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

''எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள்.

அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள்.

அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை.

நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை.

அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.

Read more...
 
போலி ஹதீஸ்கள் உருவானது எப்படி? Print E-mail
Thursday, 08 March 2012 13:40

  போலி ஹதீஸ்கள் உருவானது எப்படி? 

சில வரலாற்று ஆசிரியர்கள் போலி ஹதீஸ்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்திலேயே தோற்றம் பெற்றிருக்க வேண்டும் என்கின்றனர். ஏனெனில் அக்காலத்தில் வாழ்ந்த யூத, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாத்தின் எதிரிகள் முஸ்லிம்களை வழிகெடுப்பதற்காக சிலவேளை ஹதீஸ்களைப் புணைத்திருக்கலாமென அவர்கள் கருதுகின்றனர்.

"யார் என்மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கிறாரோ அவர் தங்குமிடம் நரகமாகும்" என்ற ஹதீஸை இவர்கள் தமது கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகின்றனர்.

அத்துடன் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் தம் ஆட்சிக்காலங்களில் ஹதீஸ்களை அறிவிப்பதில் கையாண்ட கடுமையான நிபந்தனைகள் அக்காலப்பிரிவில் போலியான ஹதீஸ்கள் தோற்றம் பெற்றதனையே சுட்டிக்காட்டுகின்றன. என இவர்கள் அபிப்பிராயப்படுகின்றனர்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அல்லது அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலங்களில் ஹதீஸ்கள் புணைந்துரைக்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. இவ்வாறு அக்காலத்தில் எவராவது புனைந்திருந்தால் கட்டாயம் தண்டிக்கப்பட்டிருப்பார்கள். அவ்வாறு தண்டனை வழங்கப்பட்டமைக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.

Read more...
 
ஆயிரத்தில் ஒருவர் ! Print E-mail
Wednesday, 25 July 2018 19:53

ஆயிரத்தில் ஒருவர்!

(மறுமை நாளில்) அல்லாஹ் (ஆதிமனிதரை நோக்கி) ஆதமே! என்று அழைப்பான்.

அதற்கு அவர்கள் (இறைவா!) இதோ கீழ்படியக் காத்திருக்கிறேன். (கட்டளையிடு) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் என்று கூறுவார்கள்.

அப்போது அல்லாஹ் "(உங்கள் சந்ததிகளில்) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்" என்று கூறுவான்.

ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் "எத்தனை நரகவாசிகளை?" என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் "ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை (தனியாகப் பிரித்திடுங்கள்)" என்று பதிலளிப்பான்.

(அப்போதுள்ள பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) பாலகன் கூட நரைத்து (மூப்படைந்து) விடுகின்ற, கர்ப்பத்தை(ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இது தான்.

மக்களை (அச்சத்தால்) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்க மாட்டார்கள். மாறாக, அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.

Read more...
 
மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா...?! Print E-mail
Thursday, 17 January 2019 08:40

மரக்கன்று நடுவதால் இவ்வளவு நன்மைகளா...?!

"எந்த ஒரு முஸ்லிம் ஒரு மரக்கன்றை நடுகின்றாரோ, அது மரமாக உருவாகி பலனைத்தருகின்றபோது,

அதன் காய் கனிகளை, இலை தழைகளை எந்தப் பிராணி புசித்தாலும், அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அம்மரத்தின் பொருட்களிலிருந்து ஏதாவதொன்றை எவராவது திருடிச் சென்றாலும் அம்மரத்தை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்.

அதாவது, அம்மரத்தின் மூலம் பெறப்படும் ஒவ்வொரு பலன்களுக்குப் பதிலாக அம்மரக்கன்றை நட்டவருக்கு தர்மம் செய்த நன்மை கிடைக்கும்"

என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். (அறிவிப்பளர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

Read more...
 
மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார்? வஹியின் வெளிச்சத்தில்! Print E-mail
Thursday, 25 July 2019 20:47

Image result for mahdi alaihis salam in tamil

மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார்? வஹியின் வெளிச்சத்தில்!
.
“மஹ்தி வெளிப்பட்டு விட்டார்!” என்று உங்களிடம் யார் சொன்னாலும், கீழ்வரும் அடையாளங்கள் அனைத்தும் பூர்த்தியாகாத வரை அதை நம்பவே வேண்டாம்.
.
அடையாளம் 1:

உண்மையான மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) என்பவர் ஸஊதி அரேபியாவில், மக்கா நகரில் மட்டுமே வெளிப்படுவார்.
.
அடையாளம் 2:

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது நேரடி வழித்தோன்றலாகவே மஹ்தி இருப்பார். இன்னொரு விதத்தில் சொன்னால், அவர் குரைஷி குலத்தைச் சேர்ந்த ஓர் அரபியாகவே இருப்பார்.

Read more...
 
அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்! Print E-mail
Wednesday, 03 June 2015 05:59

அறிந்துக்கொள்ள வேண்டிய அற்புதமான விஷயங்கள்

3375. அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:  ஒரு முதியவர் தம் இரு புதல்வர்களுக்கிடையே தொங்கியபடி நடந்துவந்ததைக் கண்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவருக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். மக்கள், ”இவர் (கஅபாவரை) நடந்துசெல்வதாக நேர்ந்திருக்கிறார்” என்று கூறினர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ”இவர் தம்மை (இவ்விதம்) வேதனை செய்துகொள்வது அல்லாஹ்வுக்கு அநாவசியமானது” என்று கூறிவிட்டு, அவரை வாகனத்தில் ஏறிச் செல்லுமாறு பணித்தார்கள். -இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)

3373. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) இறைவன் விதியாக்காத எதையும் நேர்த்திக் கடன் அவனுக்குக் கொண்டுவந்து சேர்க்காது. மாறாக, விதியை ஒத்ததாகவே நேர்த்திக் கடன் அமையும். அதன் மூலம் கஞ்சனிடமிருந்து அவன் வெளிக்கொணர விரும்பாதது வெளிக்கொணரப்படுகிறது. இதை அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)

3369. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: நேர்த்திக்கடன் (விதியில்) எதையும் துரிதப்படுத்தவும் செய்யாது; தாமதப்படுத்தவும் செய்யாது. நேர்த்திக்கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம் ஏழைக்கு) வெளிக் கொணரப்படுகிறது (அவ்வளவுதான்). இதை இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 26)

Read more...
 
நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள் செய்து விடுகிறோமே! ஏன்? Print E-mail
Saturday, 17 April 2021 14:35

நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு

விலங்கிடப்பட்டாலும் சில தவறுகள்

செய்து விடுகிறோமே! ஏன்?

நோன்பு காலங்களில் ஷைத்தானுக்கு விலங்கிடப்படுகிறது. இருந்தாலும் சில தவறுகள் தெரிந்தோ தெரியாமலோ செய்து விடுகிறோமே ஏன்? என ஒரு நண்பர் கேட்டார்.

நோன்பு காலங்களில் இறைவன் ஷைத்தான்களை விலங்கிடுவது உண்மைதான் என்றாலும் நம்மிடமிருந்து வெளியாகும் தவறுகள் ஷைத்தான்களால் மட்டுமல்ல. நமது நப்ஸ் எனும் மனோ இச்சைகளின் மூலமாகவும் தவறுகள் வெளியாகும்.

உலகில் மனிதனுக்கு பெரும் எதிரி நப்ஸ் என சொல்லப்படும் மனோ இச்சைதான் .ஷைத்தானை விட பெரும் எதிரி. எனவேதான் கண்மனி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் யுத்தத்திலிருந்து வந்தவுடன் சிறிய போரிலிருந்து விடுதலையாகி பெரிய போருக்கு தயாராகிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

நபித்தோழர்கள் யாரசூலுல்லாஹ் தபூக் யுத்தமே பெரும் போர்தானே அதைவிட பெரிய போரா? என கேட்டபோது ஆம் உங்கள் நப்ஸோடு (மனதோடு)போர் செய்ய வேண்டும் அதுவே ஜிஹாதுல் அக்பர் பெரிய போர் என கூறினார்கள்.

Read more...
 
''லாஇலாஹ இல்லல்லாஹ்'' மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு சுவனம் உறுதி Print E-mail
Thursday, 30 April 2020 17:31

 

''லாஇலாஹ இல்லல்லாஹ்''

மொழிந்து ஏற்றுக்கொண்டவர்க்கு

சுவனம் உறுதி

அல்லாஹ்வின் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

''எவர் தமது உள்ளத்தில் ஒரு வாற்கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில்,

"லாயிலாஹ  இல்லல்லாஹ்'  (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று சொன்னாரோ,

அவர் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

எவர் தமது இதயத்தில் ஒருமணிக் கோதுமையின் அளவு நன்மை இருக்கும் நிலையில்,

"லாயிலாஹ இல்லல்லாஹ்''  சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

எவர் தமது உள்ளத்தில் ஓர் அணுவளவு நன்மை இருக்கும் நிலையில்,

"லாயிலாஹ இல்லல்லாஹ்''  சொன்னாரோ அவரும் நரகத்திலிருந்து வெளியேறிவிடுவார்.

'' (அறிவிப்பாளர்:  அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி 44)

Read more...
 
எட்டு விதமான சொர்க்கங்கள் Print E-mail
Sunday, 06 December 2015 06:38

எட்டு விதமான சொர்க்கங்கள்


முதலாவது சொர்க்கம் - ஜன்னத்துல் பிர்தௌஸ்

1) போதும் என்ற மனம் கொண்டவர்கள்.
2) தினமும் பாவமன்னிப்பு (தவ்பா) தேடுபவர்கள்.
3) நல்லவர்களுடன் சேர்ந்து இருப்பவர்கள்.
4) பொறாமையை விட்டு நீங்கிக் கொள்பவர்கள்.


இரண்டாவது சொர்க்கம் - தாருஸ் ஸலாம்

1) அனாதைகளை ஆதரிப்பவர்கள்.
2) விதவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்கள்.
3) ஸலாம் சொல்பவர்கள்.
4) முஸ்லிமின் தேவை அறிந்து உதவி செய்பவர்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 92

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article