வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

''நமக்கென்ன ஆச்சு!'' Print E-mail
Monday, 25 January 2016 07:56

''நமக்கென்ன ஆச்சு!''

[  என்னுடைய அனுபவத்தில் நான் சொல்கிறேன்.. நான் இந்த நாட்டில் சிலமுறை தப்லிக் ஜமாத்துடன் சென்றுயிருக்கிறேன். உலக நினைவுகளை விட்டு அல்லாஹ்வின் நினைவு மட்டும் இருக்கும் அந்த உணர்வு இருந்தது. மனசுக்கு ஒரு விதமான அமைதி இருந்தது! இந்த நாட்டில் கோடை விடுமுறை காலங்களில் நிறைய வாலிபர்கள் இந்த தப்லிக் ஜமாத்துக்கு செல்வார்கள் 

பல அற்புதமான ஒழுக்கங்களையும் இதில் கற்றுக் கொள்ளலாம்.

கடை வீதிக்கு செல்லும்போது என்ன ஒழுக்கம் பேண வேண்டும்.

பிறர் வீட்டிற்குச் சென்று நம் சகோதரர்களை தொழுகையின் பால் அழைக்கும் போது எவ்வாறு நிற்க வேண்டும். அவரை எவ்வாறு அழைக்க வேண்டும்.

அவரிடம் எப்படி பேச வேண்டும்.

அந்த வீட்டிற்கு செல்லும்போது வீட்டு கதவுக்கு நேராக நிற்கக் கூடாது.

ஜன்னல் வழியாக பார்க்கக் கூடாது.

இப்படி பல அற்புதமான நபிவழியின் வழிமுறைகளை நாம் கற்றுக் கொள்ள முடியும்.]

Read more...
 
நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!! Print E-mail
Friday, 13 March 2020 09:02

நீதியை நேசிக்கும் மக்களே! நாட்டை நேசிக்கும் மக்களே!!

நீதியை நேசிக்கும் மக்களே!

நாட்டை நேசிக்கும் மக்களே!!

நிம்மதியாய் வாழவிரும்பும் மக்களே!!

எல்லோரும் நிம்மதியாய் வாழவேண்டும் என்று விரும்புகின்ற மக்களே!!

சமூக ஒற்றுமையோடு வாழவிரும்பும் மக்களே!!

மனிதநேயத்தோடு வாழவிரும்பும் மக்களே!!

பரஸ்பர அன்போடு, புரிந்துணர்வோடு வாழ விரும்பும் மக்களே!!

இந்திய சுதந்திரத்திற்கு உழைத்த, உயிர் கொடுத்த மக்களே!!

சமயத்தை நேசிப்பதோடு, சமத்துவத்தை நேசிக்கும் மக்களே!!

மதங்களில் வாழ்வதோடு மனிதத்தை மதிக்கின்ற மக்களே!!

மதத்தை பின்பற்றுவதோடு மனிதாபிமானத்தை கடைபபிடிக்கும் மக்களே!!

நாட்டின் வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் முன்னிலைப் படுத்துகின்ற மக்களே!!

Read more...
 
நீங்கள் தேடும் 'புதையல்' உங்களுக்குள்ளேயே உள்ளது! Print E-mail
Saturday, 26 November 2016 07:29

நீங்கள்தேடும் 'புதையல்' உங்களுக்குள்ளேயே உள்ளது!

அது ஒரு பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு, ஓங்கி உயர்ந்த மரங்கள், அவற்றின் கீழ் கூட்டங் கூட்டமாக ஆட்டு மந்தைகள், கட்டுப்பாடற்று மேயும் சுகம், அதிலே லயித்து மேய்ந்து கொண்டிருந்த ஆட்டு மந்தையினூடே வழி தவறி வந்த பச்சிளம் சிங்கக்குட்டி ஒன்று சேர்ந்து கொண்டது. தன்னையும் ஒரு ஆடென்று நினைத்து ஆடுகளோடு ஆடாக அதுவும் சேர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது.

அது ஒரு அந்தி மயங்கும் வேளை தூரத்திலிருந்து சிங்கத்தின் கர்ஜனை காற்றிலே மிதந்து வந்தது. அடுத்து வந்த வலுவான கர்ஜனை பள்ளத்தாக்கில் எதிரொலித்தது. ஆடுகளுக்கு இறைவன் வழங்கிய விழிப்புணர்வு அவற்றை சிலிர்க்க வைத்தது. அச்சத்தோடு அவை தலையை நிமிர்த்தி அங்கும் இங்கும் பயத்தோடு பார்வை சுழற்றிய காட்சி சிங்கக் குட்டியின் மனதில் ஒரு கிலுகிலுப்பை ஏற்படுத்தியது.

என்னாலும் இப்படி கர்ஜிக்க முடியுமோ? அதன் உள்ளுணர்வு முடியும் கர்ஜித்துப்பார் எனக்கட்டளையிட, ஐயப்பாட்டோடு அது தணிந்த குரலில் கர்ஜித்துப் பார்த்தது. அதே கர்ஜனை தான் மீண்டும் அது ஓங்கிக் குரல் எழுப்ப சுற்றி நின்ற ஆட்டு மந்தை ஓட்டம் பிடித்தது. சிங்கக்குட்டி கர்ஜனை வந்த திசை நோக்கி ஓடிச் சென்று தன் கூட்டத்தோடு சேர்ந்து கொண்டது.

Read more...
 
முஸ்லிம் இயக்கங்கள் இல்லையெனில்.. Print E-mail
Sunday, 30 October 2016 07:59

முஸ்லிம் இயக்கங்கள் இல்லையெனில்..

[ இயக்கங்களைக் குறைகூறுவோர், தாங்கள் சமூகத்திற்கு என்ன பங்களிப்புச் செய்தோம் எனும் கேள்வியை தங்களுக்குள் எழுப்பிக்கொள்ளட்டும்.]

முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இயக்கங்களாக செயல்படுவதை இந்துத்துவவாதிகள் விரும்புவதில்லை. அவை ஒழிக்கப்படவேண்டும் என பேராவல் கொண்டுள்ளனர்.

முஸ்லிம்கள் நடத்தும் இயக்கங்கள் மீது பொதுச் சமூகத்தில் வெறுப்பைப் பரப்புவதன் மூலம், அவற்றை வலுவிலகச் செய்யும் முயற்சிகள் அவர்களால் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

இங்கே நாம் ஒன்றைக் கவனிக்கத் தவறுகிறோம். இந்துத்துவவாதிகள் முஸ்லிம் அமைப்புகளுக்கு எதிராக குழப்பம் செய்வது ஒருபக்கம் இருக்கட்டும், முஸ்லிம்களுக்குள்ளேயே இயக்கங்களுக்கு எதிரான மனோநிலையோடு சிலர் உள்ளனர். அதற்கு காரணம், அவர்கள் அரசியல் விழிப்பு உணர்வில்லாமல் இருக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

Read more...
 
யார் இந்த துலுக்கன்? Print E-mail
Sunday, 13 December 2015 06:42

யார் இந்த துலுக்கன்?

   ஒரு இந்து சகோதரனின் மனம் திறந்த பதிவு!  

நாம் நம்முடைய நெருங்கிய இஸ்லாமிய நண்பரையே ”டேய் துலுக்க பையா” என்றுதான் அழைக்கிறோம்.

துலுக்கன் என்று கூறி அவர்களை கிண்டல் செய்வதாக நினைக்கிறோம். இந்த பெயர் காரணத்தை நான் பிறகு கூறுகிறேன். உங்களில் எத்தனை பேருக்கு இஸ்லாமிய நண்பர்கள் உள்ளனர்.

எனக்கு நிறைய இஸ்லாமிய நண்பர்களை தெரியும்.

என் அனுபவத்தில் அந்த இளம் வயதில் அவர்கள் கடைபிடிக்கும் ஒழுக்க நெறிகள் நம்மில் ஒரு சிலர் கூட கடைபிடிப்பதில்லை. அப்படி யாராவது ஒரு சிலர் கடைபிடித்துவிட்டால் ”அப்பா, அவர் ரொம்ப நேர்மையானவர்பா“, என்று கூறும் அளவிற்குதான் நாம் உள்ளோம்.

அவர்களுடைய பொருளாதார, கல்வி, நிலையை பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தாழ்த்தப்பட்ட, மலைவாசி மக்களை விட மிக மோசமாக இருக்கிறார்கள். மதம் அவர்களை பல வழிகளில் தடுப்பதால் மிக நேர்மையாக பொருளீட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

Read more...
 
ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும், முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்! Print E-mail
Tuesday, 02 October 2018 06:40

[ இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களை சிந்தித்து தெளிவு பெறுவோம்.]

ஃபாஸிச மத்திய அரசின்  முஸ்லிம் விரோதப்போக்கும், முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்!

சர்வதேச அளவில் தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளை, தடைகளை, விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் புர்கா, பர்தா அணியத்தடை, மேற்கத்திய நாடுகளின் சிலதில் தாடி வைப்பதற்குத் தடை, இன்னும் சில நாடுகளில் பள்ளிவாசல்கள் கட்ட தடை, இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியப் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நடத்தத் தடை என பல்வேறு நெருக்கடிகள்.

இன்றல்ல, நேற்றல்ல இப்பிரபஞ்சத்தில் ஓரிறைக் கொள்கையை எடுத்தியம்ப ஆரம்பித்த காலம் முதற்கொண்டே போராட்ட்டக் களங்களை இறைத்தூதர்களும், அவர்களைக் கொண்டு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகங்களும் சந்தித்தே வந்துள்ளனர்.

இறுதியாக, முஸ்லிம் சமூகமே வல்லோனின் வியத்தகு சான்றுகள் மற்றும் வல்லமை, ஆகிய உதவிகளின் துணை கொண்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்திய தேசத்திலும் முஸ்லிம் சமூகம் தொடர்படியாக பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றது.

Read more...
 
நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? நாம் என்ன செய்ய வேண்டும்? Print E-mail
Sunday, 22 December 2019 17:36

நாம் என்ன செய்ய வேண்டும்?

      மக்தூம் தாஜ், சென்னை      

நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது? 

ஏன் நடந்து கொண்டிருக்கிறது?

இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன?

முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே?

தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்?

முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா?

பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே!

இஸ்லாமிய நாடுகளிலும் கூட குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், முதியவர்கள் கொல்லப்படுகிறார்களே? பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகிறதே? வீடுகள் அழிக்கப்படுகிறதே? குண்டு மழைகள் கொத்துக்கொத்தாக இறக்கப்படுகிறதே? முஸ்லிம்கள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்களே? இவ்வாறு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கேள்விக் கனைகள் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பதில்? இப்பொழுது சொல்லுங்கள்   “நாம் என்ன செய்ய வேண்டும்?”

Read more...
 
முஸ்லிம்களும் மனிதர்கள் தான்! Print E-mail
Saturday, 31 December 2016 09:06

முஸ்லிம்களும் மனிதர்கள் தான்!

வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது? என கேட்டார்.

உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர்.

சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், ''பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே!'' என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.

உண்மைதான்! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!

Read more...
 
இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்? Print E-mail
Sunday, 28 January 2018 07:33

இஸ்லாமிற்கெதிரான பதிவுகளால்    என்னென்ன நன்மைகள்?

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.

இஸ்லாமிற்கெதிரான பதிவுகள் குறித்து உரையாடும் போது முஸ்லிம்கள் பலரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்துக்கள்,

அம்மாதிரியான பதிவுகள் நம்மை சீர்தூக்கி பார்க்க உதவுகின்றன, இவற்றிற்கு பதில் கண்டெடுக்க முயற்சி செய்வதன் மூலம் இஸ்லாம் குறித்து மேலும் அறிந்து கொள்கின்றோம்.

இது போன்ற பதிவுகள் முஸ்லிமல்லாதவரை இஸ்லாம் நோக்கி கொண்டு வருகின்றன என்பன போன்றவையாகும்.

ஆம். இந்த கருத்துக்கள் உண்மைதான். இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டவர்களையோ அல்லது இஸ்லாமிற்கு வெளியே இருந்து விட்டு மீண்டும் உள்ளே நுழைந்தவர்களையோ காரணம் கேட்டோமேயானால் மேலே சொல்லப்பட்டுள்ள பதில்களில் ஏதாவது ஒன்றை பெரும்பாலானவர்கள் கூறுவார்கள்.

ஆக, இஸ்லாமிற்கு எதிரான பதிவுகள் நமக்கு நன்மைகளையே விளைவிக்கின்றன என்பது பெரும்பாலான முஸ்லிம்களின் கருத்தாக இருக்கின்றது.

Read more...
 
முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..? Print E-mail
Friday, 07 July 2017 10:40

முஸ்லிம்கள் ஏன் ஹிந்துக்களிடம் ஒட்டுவதில்லை..?

      கத்தார் பழ மாணிக்கம்      

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

இதோ என் பதில்!!

*அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!*

*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம்

"உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்;

கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்"* என்பதால்

*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி,

நோயாளிகள் பதற, குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால் 

தீபாவளியை, அவர்கள்கொண்டாடுவதில்லை.  இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா? இதனால் யாருக்கு என்ன நட்டம்?

மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !

Read more...
 
‘லிவாதத்’ - ஹராமான விஷயங்கள் ஹலாலாக கருதப்படும் போக்கு மிகவும் ஆபத்தானது! Print E-mail
Saturday, 07 July 2018 09:56

‘லிவாதத்’

-ஹராமான விஷயங்கள் ஹலாலாக கருதப்படும் போக்கு மிகவும் ஆபத்தானது!

ஹலாலான முறையில் இணையை அணுகும் முறைகளையும், அதிலுள்ள ஹராமான காரியங்களையும் பெரும்பாலோர் இன்னும் விளங்கவில்லை.

ஓதிப் படித்த நண்பர்களே ஹராமான விஷயங்களையும் ஹலாலாக கருதியதை சமீபத்தில் காண நேர்ந்தது.

நமது மதரஸா முறை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை இது உணர்த்துகின்றது.

இந்த நோய் மார்க்கம் கற்ற ஆலிம்களை முதலில் காவு வாங்கியதே இத்தகைய விளைவுகளுக்கு காரணம். சீர்திருத்தங்களும் ஆலிம்களுக்கான கவுன்சிலிங்கில் ஆரம்பிம்பதே உம்மத்தை முழுமையாக விழிப்புணர்வடையச் செய்யும் இலகுவான வழியாக இருக்கும்.

‘லிவாதத்’ என்பது மிகக்கொடிய நோயாக உள்ளது எண்ணிப்பார்க்கவே முடியாதவர்களும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். உம்மத்தை இறைவன் காக்க!

லிவாதத் என்பது அரபிசொல்

தமிழில்: ஓரினசேர்க்கை

- Abdurrahman Umari

Read more...
 
ஊனமாக்கும் ஊடகங்கள்! Print E-mail
Sunday, 27 March 2016 06:57

ஊனமாக்கும் ஊடகங்கள்!

சக மனிதன் மீதான கரிசனை நீர்த்துப் போகும்போது மானுடம் தனது அர்த்தத்தை இழந்து விடுகிறது. சக மனிதன் மீதான அன்பும், அக்கறையும் இன்று பலவீனப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. தொழில்நுட்பம் உறவுகளை வெறும் டிஜிடல் தகவல்களால் இணைக்க முயல்வதே அதன் முக்கிய காரணம்.

சமூகத்தில் தன்னை விட இளைத்தவர்கள் மீது வலிமையானவர்கள் நடத்தும் வன்முறை கற்காலத்துக்கு நம்மை கடத்திச் செல்கிறது. வலிமையானவன் வெல்வான் என்பது குகைக் கால வரலாறு. தொழில் நுட்பத்தின் அதீத வளர்ச்சி, நம்மை குகைக்குள் குடியிருக்க வைக்கிறதா?

பெண்கள் சமூகத்தின் கண்கள். பெண்கள் தான் வாழ்க்கையை அழகாக்குகிறார்கள். பெண்கள் குடியிருக்கும் வீடுகள் தான் அன்பினால் நிரம்பி வழிகின்றன. பெண்கள் கலந்திருக்கும் சமூகம் தான் நிறைவை அடைகிறது. பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை. மனித அன்பின் உச்ச நிலையான தாயும் சரி, மனித வாழ்க்கையின் மகத்துவமான மகளும் சரி, மனித பயணத்தின் மகிழ்வான மனைவியும் சரி பெண்மையின் வைர வடிவங்களே. ஆனால் அந்தப் பெண்கள் இன்று ஆண்களின் கரங்களில் சிக்கி அழிவதைக் காணும்போது ச‌மூக‌ம் அவ‌மான‌ப்ப‌டுகிற‌து.

Read more...
 
சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை! Print E-mail
Wednesday, 20 April 2016 07:05

சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துவோருக்கு எச்சரிக்கை!

இவற்றை வெற்று பிரச்சாரம் என்றோ மதபோதனை என்றோ யாரும் அலட்சியம் செய்ய வேண்டாம்.

கீழ்கண்ட எச்சரிக்கைகள் இவ்வுலகின் உரிமையாளனிடம் இருந்து வந்தவை.

எனவே இவற்றைப் பேணாவிட்டால் இன்றில்லாவிடினும் மறுமையில் தண்டனை உறுதி!

பொதுவாக மலம் கழித்து விட்டால் அனைவரும் கழுவி விடுவோம். ஆனால் சிறுநீர் கழித்தால் அதைப் பெரும்பாலானோர் தூய்மை செய்வதில்லை. அதை ஒரு அசுத்தமாகக் கணக்கிடுவதே இல்லை. ஆங்காங்கே சாலையோரங்களில் சிறுநீர் கழிப்பவர்கள் கழித்து விட்டுச் சுத்தம் செய்யாமல் இருந்து விடுகிறார்கள். இப்படி செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்.

இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு தோட்டத்தைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், ''இந்த சமாதிகளில் அடங்கியுள்ளவர்கள் வேதனை செய்யப்படுகிறார்கள். பெரிய (குற்றம்) ஒன்றுக்காக இவர்கள் தண்டிக்கப்படவில்லை. மாறாக அவர்களில் ஒருவன் சிறுநீர் கழித்து விட்டுத் தூய்மை செய்யாதவனாக இருந்தான். மற்றொருவன் கோள் சொல்ஆத் திரிபவனாக இருந்தான்'' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ்ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 2041)

Read more...
 
மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள் Print E-mail
Wednesday, 21 August 2019 17:36

மக்கள் நலம் நாடுவோரே சிந்தியுங்கள்!

நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு இன்றைய உலகின் நிலை தெளிவாகவே விளங்கும்.

மனிதன் செய்யக் கூடாதவை எவை எல்லாம் உண்டோ அவை அனைத்தையும் பெருமையுடன் செய்யும் இழி நிலைக்கு இன்று மனித குலம் தள்ளப்பட்டுள்ளது.

நான்கு கால் மிருகங்களை விட கேடு கெட்ட வாழ்க்கையை இரண்டு கால் மனிதன் செய்யும் நிலைக்கு மனிதன் தாழ்ந்துள்ளான்.

1500 வருடங்களுக்கு முன்னால் மடமை நிறைந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குடிப்பதில் பெருமை, விபச்சாரம் செய்வதில் பெருமை, கொள்ளை அடிப்பதில் பெருமை, கொலை செய்வதில் பெருமை, சூதாடுவதில் பெருமை, மூட நம்பிக்கைகளில் பெருமை என அனைத்து வகை ஒழுங்கீனங்களிலும் பெருமை பேசும் சமுதாயமாக மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருந்த காலம்.

தகப்பனுக்குப் பின்னால், தகப்பனின் மனைவிகளையே தாரமாக்கிக் கொள்ளும் மடமை. அளவுக்கதிகமான பெண்களை தாரமாக்கிக் கொள்வதில் பெருமை, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், பெண் சிசுக்களை உயிரோடு குழிதோண்டிப் புதைக்கும் அராஜகம், அற்ப காரணங்களுக்காக தலைமுறை தலைமுறையாகச் சண்டையிட்டுக் கொள்ளும் கோரம், இப்படி அன்றைய மனித குலம் நரக விளிம்பில் நின்று கொண்டிருந்தது. இந்த நிலையை இறைவனது இறுதி வாழ்க்கை வழி காட்டி நெறிநூல் 3:103-வது இறைவாக்கில் அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

Read more...
 
வீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள் Print E-mail
Monday, 30 May 2016 06:25

வீண் விரயம் செய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு இரையாகாதீர்கள்

''அளவு கடந்து (வீண்) செலவு செய்யாதீர்கள். ஏனென்றால். அளவு கடந்து (வீண்) செலவு செய்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 141)

இந்த உலகத்தில் எல்லோரும் நேசித்து, அல்லாஹ் நேசிக்கவில்லை என்றால் என்ன ஆகும்? என்பதை ஒரு கணம் யோசிக்கவேண்டும்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பதைவிட அல்லாஹ் உங்களை நேசிப்பது மிகச் சிறந்து! அல்லாஹ்வின் நேசமும், அருளும் ஒரு அடியானுக்கு வேண்டும்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்;

''நீங்கள் விரும்புவதை உண்ணுங்கள்! விரும்புவதை அணியுங்கள்! ஆனால், ஒரு நிபந்தனை. உங்களிடம் கர்வமும், வீண்விரயமும் இருக்ககூடாது. (நூல்: புகாரி)

 இன்ஷா அல்லாஹ் ரமளானுக்கு பிறகு நிறைய நிக்காஹ் நடைபெற உள்ளது. ஒரே நாளில் பல நிக்காஹ் ''எங்கே போவது என்று தெரியாமல் சீட்டு குல்லுக்கி போட்டு போகும் அளவுக்கு ஆகிவிட்ட்டது! ஒரே நாளில் நடைபெறுவதால் உணவு நிச்சயமாக வீணடிக்கப்படும் என்பதை இங்கே குறிப்பிடுகிறேன்.

Read more...
 
இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்? Print E-mail
Monday, 18 February 2019 08:39

இஸ்லாமிய சட்டங்களில் பிறர் தலையிட யார் காரணம்?

     சல்மா    

இஸ்லாமியச் சமூகத்தில்   குர்ஆனுக்கு முரணாக நடைமுறையில் இருக்கும் ஒரே நேரத்தில்  முத்தலாக்    போன்ற விஷயங்கள் இரண்டு விதமான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

ஒன்று,  இஸ்லாமியப் பெண்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.   மற்றொன்று,   இந்த நடைமுறைகளால்தான் இந்திய அளவில் இஸ்லாமிய மண விலக்கு குறித்த மோசமான ஒரு பிம்பம் இந்தியப் பொதுச் சமூகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

இஸ்லாமியச் சட்டங்கள் தெரிந்த வழக்கறிஞர்கள், ஹாஜி, கல்வியாளர்கள், மற்றும் பெண்கள் இணைந்த ஒரு சட்டரீதியான முறையீட்டு மன்றங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலாவது, இந்தப் பாதிப்புக்குள்ளான பெண்கள் தங்களது தரப்பை முன்வைக்க ஒரு இடமாக அது இருந்திருக்கும் . அவர்கள் நீதிமன்றங்களை நாடும் தேவையும் இருந்திருக்காது.    அதைக் கூட இந்த முஸ்லிம் தனி நபர் சட்ட வாரியம் அமைத்துத்தரவில்லை.

எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் வழக்கத்தில் இல்லாத, ஒரே சமயத்தில் கூறப்படும் முத்தலாக் முறை இந்தியாவில் பல வேளைகளில், நடைமுறையில் உள்ளது என்பதையும், அதனால்   தங்களது சமூகத்துப் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் அறிந்தே அதைக் கண்டும் காணாமல் புறக்கணித்துவந்திருக்கிறது    இந்த அமைப்பு.]

Read more...
 
ஹலாலான வியாபாரத்தை ஹராமாக மாற்றிக்கொள்ளும் சில வியாபாரிகள் Print E-mail
Wednesday, 15 August 2018 09:56

Image result for diamond business

ஹலாலான வியாபாரத்தை ஹராமாக மாற்றிக்கொள்ளும் சில வியாபாரிகள்

பேருவளையில் அதிகமானவர்கள் செய்யும் வியாபாரம் மாணிக்க வியாபாரம் இதில் சிலர் வியாபாரத்தில் எது    ஹலால்? எது ஹராம்? என்ற விளக்கம் இல்லாமல் வியாபாரத்தில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள்

இன்றைய உலகில் வியாபாரம் என்றால் என்ன இஸ்லாம் வியாபாரத்தை பற்றி என்ன கூறுகிறது என்று பார்க்காமல் இன்றை வியாபாரம் செல்கிறது.

வியாபாரத்தைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் 2:275 வசனத்தில் குறிப்பிடுகிறான்:

''அல்லாஹ் உங்களுக்கு வியாபாரத்தை அனுமதித்திருக்கிறான். ஆனால் அல்லாஹ் கூறும் வியாபாரத்தில் அளவை நிறுவையில் மோசடி, பொய்யான வாக்குறுதி, பொருள் கலப்படம், குறையுள்ள பொருள் விற்பனை, வாங்குபவரை ஏமாற்றுதல், பொருள் விற்பனைக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்தல், பொருளை பதுக்குதல், கொள்ளையடித்தல்,    திருடுதல், அல்லாஹ் ஹராமாக்கிய பொருளை விற்பனை செய்தல் அல்லது வாங்குதல், வாங்கிய பொருள் கைக்கு வருவதற்கு முன் விற்பனை செய்தல் போன்ற எண்ணற்ற குறைபாடுகள் கிடையாது.

ஆனால் இன்றைய வியாபாரத்தில் இவையெல்லாம் வியாபார நுணுக்கங்களாக தலை தூக்கிவிட்டன. பலர் எந்த வியாபாரம் ஹலாலானது, எந்த வியாபாரம் ஹரமானது என்பதை அறியாமலேயே வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால்தான் வியாபாரியாக இருந்து வாழ்க்கையை நடத்தும் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பற்கு இஸ்லாம் சில வரையறைகளை விதிக்கிறது.

Read more...
 
புவி நிர்வாணம் Print E-mail
Wednesday, 11 December 2019 07:09

புவி நிர்வாணம் 

      நூருத்தீன்                  

உலகளாவிய முறையில் புரட்சி(!!!). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான்.

பெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு.

அப்படியென்ன புரட்சி? புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம் என என்னென்னவோ அனாச்சாரங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அதையெல்லாம் சட்டமியற்றி முற்றிலுமாய்த் தடுக்க இயலவில்லையே என யோசித்தார்கள் மேன்மக்கள். அவர்களுக்கு அற்புத யோசனை உதித்தது.

'ஒன்றும் பாதகமில்லை; அனைத்தையும் சட்டமியற்றி அங்கீகரித்துவிட்டால்? தீர்ந்தது விஷயம்!!!'

நமக்குப் புரியும்படியான எளிய உதாரணம் சொல்வதென்றால், 'மது' தப்பு, பாவம், தீங்கு என்று நம்மிடம் குத்துமதிப்பாய் ஓர் அனுமானம் உள்ளது. அதை, 'சொன்னால் கேட்கிறார்களா இந்தக் குடிமக்கள்? குடித்தே தீருவேன் என்று நிற்கிறார்களே' என்று திட்டிவிட்டு அரசாங்கமே சப்ளை செய்து லாபம் பார்க்கிறார்கள் இல்லையா, அதைப்போல்தான்.

இப்படி உருவாகியுள்ள புரட்சியினூடே நடைபெறும் மற்றொரு பக்கவிளைவு, அழிக்கப்படும் சொரணை. அதாவது, ஒரு விஷயத்தை   insensitive   ஆக்குவது.

சென்னைக்குப் புதிதாய் வருபவருக்குத்தானே கூவம் 'கப்பு'. அதன் கரையோரம் வாழ்பவர்களுக்கு? உதாரணமாய்ப் பார்த்த மது எளிய போதை. அதைவிட மகா போதையான சமாச்சாரம் ஒன்று உண்டு. மாது!

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள். கனடா நகரிலுள்ள டொராண்டோ நகர் காவல்துறை அதிகாரி ஒருவர், "பெண்கள் ஒழுக்கமற்றவளைப் போன்ற (slut) உடை அணியாதிருந்தால் வன்புணர்வுக்கு ஆட்படுவதைத் தவிர்க்கலாம்" என்று சொல்லிவிட்டார். கொதித்துவிட்டார்கள் பெண்கள்.

Read more...
 
புறந்தள்ளுங்கள் -Dr.ஃபஜிலா ஆசாத் Print E-mail
Saturday, 04 April 2020 07:50

புறந்தள்ளுங்கள்

    dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

Lot of problems in the world would disappear if we talk to each other instead of about each other – Ronald Reagan

ஒருவரைப் பற்றி பேசுவதற்கு பதிலாக ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டால் இந்த உலகில் பெரும்பாலான பிரச்னைகள் மறைந்து விடும் – ரொனால்ட் ரீகன்

ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கோ மீட்டிங்கிற்கோ செல்லும்போது நீங்கள் அங்கிருப்பவர்களிடம் சகஜமாக சந்தோசமாக பழகிக் கொண்டிருக்க அதில் சில பேர் உங்களை அவாய்ட் பண்ணுவதுபோல பட்டும் படாமலும் பழகிய அனுபவம் உங்களுக்கு என்றேனும் நிகழ்ந்துள்ளதா?

திடீரென என்ன ஆயிற்று இவர்களுக்கு, நன்றாகத்தானே பழகிக் கொண்டிருந்தார்கள் என்று பலவாறு உங்களை நீங்களே கேள்வி கேட்டு அவர்களுடன் அன்று வரை நடந்த நிகழ்வுகளையெல்லாம் திரும்பத் திரும்ப மனதில் ஓட விட்டு ஏதேனும் தவறுதலாக நடந்ததா என்றெல்லாம் ஆராய்ந்து, ஒன்றும் புரியாமல் குழம்பிய மனதுடன், சென்றிருந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாமல் தவித்திருப்பீர்கள்.

உங்களைப் பற்றி ஏற்கனவே யாரோ ஏதோ சொல்லி அங்கிருந்தவர்களிடம் உங்களைப் பற்றிய ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தி இருந்து பின்பு அதனை அறிய வரும்போது உங்களுக்குள் ஏற்படும் இயலாமையும் வருத்தமும் உங்களை சோர்வடையச் செய்யும். உங்களைப் பற்றிய தவறான எண்ணங்களை எப்படிச் சரி செய்வது என்று உங்கள் மனம் பதறும்.

Read more...
 
மௌனம் பேசும் - Dr. ஃபஜிலா ஆசாத் Print E-mail
Thursday, 13 February 2020 08:00

மௌனம் பேசும்

    Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

[   உணர்ச்சி வசப்படுகிறவர்களால் உண்மையை உணர முடியாது. விழிப்புணர்ச்சியோடு செயல்பட இயலாது. எந்த சூழலிலும் தன் உணர்ச்சிகளை தன் கைவசம் வைத்துக் கொள்கிறவர்களால் மட்டுமே எதையும் திட்டமிட்டபடி செய்ய முடியும்.]

பேச வேண்டிய நேரத்திலே மௌனமாக இருப்பதும் தவறு. மௌனமாக இருக்க வேண்டிய நேரத்திலே பேசுவதும் தவறு என்பார்கள். மௌனமாக இருக்க வேண்டிய நேரம் என்றால், எந்த நேரத்திலும் நியாயத்தை பேசுவதில் என்ன தவறு இருக்க போகிறது என்று தான் பலருக்கும் தோன்றும்.

இடம் பொருள் ஏவல் கருதி, மௌனமே பல இடங்களில் சிறந்த மொழியாவது மட்டுமல்லாமல், சிறந்த செயலாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் உடனடியாக ரியாக்ட் பண்ணாமல் சில விஷயங்களை நாம் தூர நின்று பார்ப்பதே மகிழ்ச்சி தரும் என்கிறது வாழ்வியல்.

அது ஒரு கோடை காலம். மழையற்ற வெயிலின் கடுமையில் எப்போதும் இல்லாத அளவு வறட்சி ஏற்பட, அந்த கிராமத்தில் இருந்த குளத்தில் நீர் வற்றி விடுகிறது. மற்ற பறவைகள் எல்லாம் வேறு நீர்நிலைகள் நோக்கி பறக்க, அந்த குளத்தில் இருந்த ஆமை மேல் அதீத நட்பு கொண்ட இரண்டு வெள்ளைப் புறாக்கள் மட்டும் நட்பை பிரிய முடியாமல் நீரற்ற அந்த குளத்தையே சுற்றி சுற்றி வருகின்றன.

Read more...
 
இணைந்திருங்கள் - Dr. ஃபஜிலா ஆசாத் Print E-mail
Thursday, 02 January 2020 17:44

இணைந்திருங்கள்

    Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்     

[ பெரும்பாலும் யாரோ ஒருவரை சீராடுவதற்கும் யாரோ சிலரோடு போராடுவதற்கும் மட்டுமே ஒன்று சேர பழகி இருக்கிறோம்.

வெற்றி என்பது மகிழ்ச்சி என்றும், ஒருவனின் தோல்வி மற்றவனின் வெற்றி என்பதும் விளையாட்டின் விதிகளாக இருக்கலாம். வாழ்வின் விதி வேறு. அது உனக்கும் எனக்குமாக சேர்ந்து பகிர்ந்து உண்பதையே மகிழ்ச்சி என்கின்றது.

விற்பவனின் இலாபம் வாங்குபவனின் ஆதாயம் எனும் win-win கொள்கையே வாழ்வின் உன்னதம், மகிழ்ச்சியின் மூலதனம்.

ஒருவரின் திறமை என்பது அவருக்கானது மட்டுமல்ல. life is balancing. உன்னிடம் இருப்பதை நீ கொண்டு வா என்னிடம் இருப்பதை நான் தருகிறேன் என்று ஒருவருக்கொருவர் இணக்கமாக பகிர்ந்து கொள்ளும்போது எல்லோருடைய தேவையும் இனிதே நிறைவேறுகிறது.]

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 100

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article