வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

"இதுதான் இஸ்லாம்" என்றால் "இது எனக்கு வேண்டும்" - லாரன் பூத் Print E-mail
Thursday, 23 June 2011 09:48

"இதுதான் இஸ்லாம்" என்றால்  "இது எனக்கு வேண்டும்" - லாரன் பூத்

[ இஸ்லாமை ஏற்றுக்கொள்ள நான் தயாரா? என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் என்ன சொல்வார்கள்? என்னுடைய பழக்கவழக்கங்களை மாற்றிக்கொள்ள நான் தயாரா? - இப்படி பல கேள்விகள் என்னுள் எழுந்தன.

மதுவை விட்டொழித்தது புது உற்சாகத்தை தந்திருக்கின்றது. உண்மையை சொல்லவேண்டுமென்றால், நான் இஸ்லாமை தழுவியதிலிருந்து மதுவை நினைத்துக்கூட பார்க்கவில்லை.

என் வாழ்நாளில் அப்படியொரு உபசரிப்பை நான் கண்டதில்லை. எப்படி தங்கள் பார்வைக்கு அந்நியமான ஒரு பெண்ணை பார்த்தவுடன் ஏற்றுக்கொண்டார்கள்?. என்னிடம் பரிவோடு கூறினார்கள் 'இங்கே உங்கள் மீது தாக்குதல் நடக்குமானால் உங்களை பாதுகாக்க நாங்கள் இருக்கின்றோம்'. இஸ்லாம் குறித்த என்னுடைய அச்சம் விலக ஆரம்பித்தது.

அவர்களின் அன்பும், இஸ்லாம் சொல்லியப்படி வாழ்ந்துவரும் தன்மையும் லாரனுடைய உள்ளுணர்வுகளை கிளறிவிட அந்த வார்த்தைகள் அவரது வாயிலிருந்து வந்து விழுந்தன.

'இதுதான் இஸ்லாம் என்றால்', எனக்குள் சொல்லிக்கொண்டேன், "இது எனக்கு வேண்டும்". முழுமனதோடு என்னை இந்த மார்க்கத்தில் ஐக்கியப்படுத்திக் கொள்ள நான் தயார்.

இஸ்லாம் ஒருவருடைய வாழ்வில் கொண்டுவரும் மாற்றங்கள் அற்புதமானவை. "எனக்கு புரியத்தொடங்கியது. இனி நான் இஸ்லாமிற்கு அந்நியமானவள் அல்ல. உலகளாவிய முஸ்லிம் சமூகத்தில் நானும் ஒரு பகுதி.

இஸ்லாமை ஏற்றுக்கொண்ட பிறகும் என் நட்பு வட்டாரம் வலிமையாகவே இருக்கின்றது. அந்தவிதத்தில் நான் அதிர்ஷ்டசாலிதான்.]

Read more...
 
உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண் Print E-mail
Tuesday, 28 June 2011 08:16

உள்ளாடையின் தூய்மையில் மனதை பரிகொடுத்து இஸ்லாத்தைத் தழுவிய ஆங்கிலேயப்பெண்

லண்டனில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கிப்படிக்கும் கல்லூரி அது. அதில் முஸ்லிம் மாணவர் ஒருவரும் படிக்கிறார். அதில் பணி புரியும் ஒரு ஆங்கிலப் பெண், மாணவர்களின் உணவு பரிமாற்றம் மற்றும் அவர்களின் ஆடைகளைத் துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதும் ஆகிய வேலையில் பணிபுரிகிறார்.

ஒரு தடவை இப்பெண், அந்த முஸ்லிம் வாலிபரிடம் ‘நான் துணி துவைத்து சுத்தம் செய்து கொடுப்பதில் உங்களக்கு திருப்தி இல்லையா?’ என்று தனது பலநாள் சந்தேகத்தை மனம் திறந்து கேட்கிறார்.

‘ஏன் இல்லை? எனக்கு முழு திருப்தி உள்ளது. நீங்கள் மிக நன்றாகத்தானே துணியை சுத்தமாக துவைத்துத் தருகிறீர்கள்’ என்று பதிலளிக்கிறார் அந்த முஸ்லிம் மாணவர்.

‘அப்படியெனில் ஏன் உங்களது ஆடையை, ஒருதடவை நீங்களே சுத்தம் செய்து விட்டு இரண்டாவது தடவை மீண்டும் என்னிடம் துவைக்கத்தருகிறீர்கள்?’ என்று தனது சந்தேகத்தைக் கேட்கிறார் அந்த ஆங்கிலப் பணிப்பெண்.

Read more...
 
இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்! Print E-mail
Saturday, 02 July 2011 07:09

   இஸ்லாத்தைத்தழுவிய சீக்கியப் பெண்  

சிறுவயது முதலே எனது தந்தை; முஸ்லிம்கள் எல்லோருமே மோசமானவர்கள் எனும் நச்சுக்கருத்தை என் மனதில் புகுத்தியிருந்தார்.

''முஸ்லிம்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர்களல்ல. பல முஸ்லிம் வாலிபர்கள், சீக்கிய பெண்களை ஏமாற்றி திருமணம் முடித்து, பாகிஸ்தானுக்கு அழைத்துச்சென்று அங்கு அவர்களை மற்றவர்களுக்கு விற்றுவிடுகின்றனர்'' என்பார்.

ஆனால் நான் எப்போதும் வித்தியாசமாக நினைத்தேன். அவரவர், தத்தமது மதம்தான் உண்மையானது உயர்வானது என்று விவாதம் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் நான் மதத்தின் அடிப்படையில் என் நண்பர்களை ஒருபோதும் தேர்ந்தெடுக்கவில்லை. இறுதியாக நான் ஒரு பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது என்னுடைய மிகச்சிறந்த நண்பர் கிடைத்தார். அவர் ஒரு முஸ்லிம் மாணவி. இதற்குமுன் அவரை நான் பார்த்ததில்லை. நல்ல முஸ்லிமாக இருந்தார். ஹிஜாப் அணிந்தவாரகவே இருந்தார்.

என்னுள் யோசிக்க ஆரம்பித்தேன், எல்லா முஸ்லிம்களும் மோசமானவர்களாக இருக்கும்போது இவர் மட்டும் எப்படி நல்லவராக இருக்கிறார்?. நாங்கள் இருவரும் வெவ்வேறு மதத்தவராக இருந்தாலும் மிகச்சிறந்த சினேகிதிகளாகவே இருந்தோம்.

விதவிதமாக நாகரீக ஆடைகளை உடுத்தக்கூடியள்தான் நான்! சிலநேரம் குடிகாரியாகக் கூட இருந்திருக்கிறேன்! ஆனால் என் சினேகிதியான அவள் என்னை சந்திக்க வரும்போதெல்லாம் நான் இப்படியெல்லாம் இருக்க மாட்.டேன்.

Read more...
 
இந்தியாவை அலற வைத்த அந்த நாள்! Print E-mail
Wednesday, 21 January 2015 06:38

இந்தியாவை அலற வைத்த அந்த நாள்!

[ 'மதம் மாறணுங்க’னு நாங்க யாரையும் வற்புறுத்தலை. 'மதம் மாறி என்னத்தைக் கண்டிய?’னு இப்பவும் சிலர் கேக்கிறாங்க. படிச்ச படிப்புக்கும், பாக்குற உத்தியோகத்துக்கும் அதை எல்லாம்விட மனுஷனா இருக்கிறதுக்குமான மரியாதை கிடைச்சிருக்கு.

அப்போலாம் நம்மளைவிட சின்ன வயசுக்காரனா இருப்பான்... ஆனா 'ஏலே’னுதான் கூப்பிடுவான். இப்போ, 'வாங்க பாய்... உக்காருங்க’னு சொல்றான். மதம் மாறுனதால கிடைச்ச  மரியாதை இது. ஆனா, இந்த நினைப்பெல்லாம்கூட என் சந்ததியோடு முடிஞ்சுபோயிரும். அடுத்தடுத்து வர்றவனுக்கு இதெல்லாம் தெரியாது.

பார்த்தீங்கன்னா... எங்க குடும்பங்களில் மாமன் முஸ்லிமா இருப்பான். மச்சான் இந்துவா இருப்பான். அப்பன் முஸ்லிமா இருப்பான். பிள்ளை இந்துவா இருப்பான். மதம் எங்களைப் பிரிக்கவும் இல்லை; குழப்பத்தையும் உண்டாக்கலை. எல்லாரும் அண்ணன் தம்பியா ஒற்றுமையா வாழ்றோம்!'' - அப்போது எடுத்த முடிவு சரியானதுதான் என்பதை இப்போதும் தீர்க்கமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார் உமர்.]

Read more...
 
என்னைக் கவர்ந்த இஸ்லாம்! Print E-mail
Wednesday, 22 December 2010 09:32

[ இஸ்லாம் ஓர் உண்மையான மார்க்கம்! அது முழுமையான மார்க்கம் என்று எனக்குத் தெரிந்தது! முஸ்லிம்கள் நல்ல பாசமாக நடந்து கொள்கிறார்கள். பைபிளில் ஏசு எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார். ஏசு கடவுளாக இருந்திருந்தால் என்னை வணங்குங்கள் என்றுதானே கூறியிருக்க வேண்டும்? ஏன் எனது கர்த்தரை வணங்குங்கள் என்று கூறுகிறார்? என்று குழம்பிப் போய் இருந்தேன். குர்ஆனைப் படித்துப் பார்த்த பிறகுதான் தெரிந்தது அந்த கர்த்தரே அல்லாஹ் என்று!

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்''. (திருக்குர்ஆன் 2:208)

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும், முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.'' (திருக்குர்ஆன் 3:102)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள் (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!'' (திருக்குர்ஆன் 3:200)]

Read more...
 
அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்தவர் இஸ்லாமை ஏற்ற அதிசயம்! Print E-mail
Thursday, 21 February 2019 09:17

 

அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்தவர் இஸ்லாமை ஏற்ற அதிசயம்!

டாக்டர் ஜெரால்ட் டர்க்ஸ் (Dr.Jerald Dirks), ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் "Masters in Divinity" பட்டம் பெற்றவர். உளவியலில் முனைவர் (Doctorate in Psychology) பட்டம் பெற்றவர். சுமார் அறுபது கட்டுரைகள் உளவியலிலும், சுமார் 150 கட்டுரைகள் அரேபிய குதிரைகளின் வரலாற்றை பற்றியும் வெளியிட்டுள்ளார்.

பைபிளில் நல்ல ஞானம் பெற்றவர். United Methodist சர்ச்சில் உதவிப் பாதிரியாராக (Deacon, Ordained Minister) இருந்தவர்.

இறைவன், தான் நாடுவோரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வரும் ஒவ்வொரு விதமும் ஆச்சர்யமூட்டுபவை, அழகானவை.

அரேபிய குதிரைகளின் வரலாற்றை ஆய்வு செய்ய ஆரம்பித்து, அதன் மூலமாக முஸ்லிம்களின் நட்பு கிடைத்து, அவர்களால் குரானை ஆராயத் தொடங்கி, 1993 ஆம் ஆண்டு இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் டர்க்ஸ். அன்றிலிருந்து இன்றுவரை அவர் நம் உம்மத்துக்கு ஆற்றிய பணிகள் அளப்பரியவை. அல்ஹம்துலில்லாஹ்

Read more...
 
ஏன் இறைவன் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? Print E-mail
Thursday, 21 February 2019 08:55

  ஏன்  இறைவன்  அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்?  

[ ஒருமுறை என் மகள் கேட்டாள், "சரி dad, குர்ஆன் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?"   இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.

நான் குர்ஆனை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். நான் எந்த அளவு குர்ஆனை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன். ஆனால் குர்ஆன், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.   அதுமட்டுமல்லாமல், குர்ஆனைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ?    சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.

என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. குர்ஆனை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குர்ஆன் தான். பலரும் என்னிடம் கேட்பார்கள்,   "இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது"   என்று. நான் இப்போது   சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம். ]

Read more...
 
நான் ஏன் (மனம்) மதம் மாறினேன்? Print E-mail
Saturday, 13 May 2017 07:15

நான் ஏன் (மனம்) மதம் மாறினேன்?

ஆந்திர எல்லைக்கும் தமிழக எல்லைக்கும் நடுவில் அந்த அழகான ஆறுபடை வீடுகளில் ஒன்றான மலைக்குன்று மீது இந்துக்கடவுள் முருகன் ஆலயம். கோயில் நிர்வாகத்தை பாரம்பரியமாக செய்து வரும் சிவலிங்க முதலியாரின் பேத்தி எட்டு வயது சிறுமி மாலினி.

17.5.1972 வருடம் பிறந்தவள்.

நான் ஏன் இஸ்லாம் ஏற்றேன்?

விடியாத அந்த அதி காலை நேரம்..எட்டு வயது சிறுமி தலையில் குளிர்ந்த கிணற்று நீரை வாரி இறைத்து தானும் குளித்து உடலெங்கும் பட்டை பட்டை திருநீறு பூசி எனக்கும் பட்டை போட்டு ஈரமான உடையுடன் தாத்தாவின் கையை பிடித்தபடி மலைக்கோவிலை நோக்கி பறப்பது போல நடப்பார் அவர் வேகத்துக்கு ஓடினாள் அந்த சிறுமி. முருகனை தூக்கத்தில் இருந்து திருப்புகழ் பாட்டு பாடி எழுப்பும்ப ணி எங்கள் இருவருக்கும்.

வழியில். அதிகாலையிலேயே பள்ளிவாசலை சுத்தம் செய்து பாங்கு சொல்ல ஓடுவார் தாத்தாவின் உயிர் நண்பர் ரசூல் பாய் தாத்தா.

இவர்கள் என்ன பேசினார்கள். கேட்போம்.

டேய் லிங்கம் மெதுவா போடா.. டேய்...ரசூலு... உடம்புக்கு முடில இல்ல..வேற யாரவது அனுப்புரது.. அவன் காத்திருப்பான் டா..

எட்டு வயது சிறுமி மாலினி இப்போது கேட்கும் அந்த கேள்வி அவள் சின்ன இதயத்தில் ஓர் விதை ஆனாது.. யார் காத்து இருப்பாங்க ரசூல் தாத்தா? ''அல்லா'' டா கண்ணு.. ''அல்லா'' ..வா...?! அவங்க எங்க இருப்பாங்க தாத்தா???

Read more...
 
இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்! Print E-mail
Saturday, 06 May 2017 06:59

இளைஞர்களை ஈர்க்கும் இஸ்லாம்!

சமூகத்தில் மிக முக்கிய பிரிவினர்தாம் இளைஞர்கள். அந்த இளைஞர்களின் கரங்களில்தான் ஒரு நாட்டின், ஒரு சமுதாயத்தின் எதிர்காலமும், பாதுகாப்பும் அடங்கியிருக்கின்றன. ஒரு நல்ல சமூகத்தின் அடிப்படை அம்சம் என்பதே இளைஞர்கள்தாம்.

இளைஞர்களின் ஆற்றல், அறிவு, நேரம் போன்றவை ஆக்கபூர்வமான பாதையில் செலவழிக்கப்பட்டு அவர்களும், அவர்கள் மூலம் சமூகமும் பலனடைய வேண்டும் என்பதுதான் இஸ்லாம் காட்டித் தந்த பாதை.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இளைஞர்களிடம் காட்டிய அணுகுமுறையும், அவர்களிடம் பழகிய விதமும் ஆச்சரியத்தை அளிக்கிறது. ஆற்றல் மிக்க இளைஞர்களை அண்ணலார் சமூகத்தின் ஒரு முக்கிய அம்சமாக மாற்றிக் காட்டினார்கள். அவர்களை ஆக்கபூர்வமாக பயன்படுத்தினார்கள். அவர்களின் துடிக்கும் இள ரத்தத்தை சமூக நலன்களுக்கு பயன்படுத்தினார்கள்.

இஸ்லாமிய வரலாற்றில் ஒளிர்ந்து மின்னியவர்கள் பலர். அவர்களில் அதிகமானோர் இளைஞர்களாக இருந்தார்கள் என்பது இன்பமளிக்கிறது. அலீ இப்னு அபூதாலிப், ஜஅஃபர் இப்னு அபூதாலிப், உஸாமா பின் ஸைத், முஸ்அப் இப்னு உமைர், பர்ரா இப்னு ஆஜிப், ஸைத் இப்னு தாபித், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு உமர், அம்ர் இப்னு அல் ஆஸ் போன்ற பிரபல நபித்தோழர்கள் அனைவரும் இளைஞர்களாக இருக்கும்பொழுது இஸ்லாத்தின் உயர்வுக்காக உழைத்தவர்கள்.

Read more...
 
வாருங்கள் அன்பாளன் அருளாளன் அல்லாஹ்வின் அழகிய மார்க்கத்தின் பக்கம் Print E-mail
Monday, 24 August 2015 07:24

"என் முன்னோர்கள் இஸ்லாம் மார்க்கத்திற்கு மாறியதற்கான காரணங்கள்"

1) பிறப்பின் அடிப்படையில் இவன் உயர்ந்த ஜாதி அவன் இழிந்த ஜாதி என்று பிரிவினையை கற்று தராத மார்க்கம்.

2) உயர் ஜாதிக்காரன் மட்டுமே வேதத்தை படிக்க வேண்டும் சூத்திரன் வேதத்தை செவியுற்றால் கூட அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்த வேண்டும் என்று சொல்லாத மார்க்கம்.

3) குறிப்பிட்ட ஜாதியினர் மட்டுமே கருவறை வரை செல்லலாம் மற்றவர்கள் செல்ல கூடாது என்று சொல்லாத மார்க்கம்.

4) காண்பதெல்லாம் கடவுள் என்று ஆறறிவுள்ள மனிதனை அவனை விட கீழ் நிலையிலுள்ளவைகளை வணங்க சொல்லி சிறுமை படுத்தாத மார்க்கம்.

5) எப்படி வேண்டுமானாலும் தரிகெட்டு வாழாமல் புனித வேததின் அடிப்படையில் வாழ வழிகாட்டும் மார்க்கம்.

Read more...
 
இஸ்லாமை ஏற்றதால் மனைவி மக்களை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை! Print E-mail
Friday, 08 December 2017 09:04

Image result for Laurence B. Brown

இஸ்லாமை ஏற்றதால் மனைவி மக்களை இழந்தாலும் அல்லாஹ் என்னைக் கைவிடவில்லை!

    லாரென்ஸ் ப்ரவுன், அமெரிக்க விமானப்படை கண் டாக்டர்     

இஸ்லாத்தை ஏற்ற பிறகு என் சொந்த வாழ்க்கையில் புயல் வீசியது. நான் இஸ்லாத்தை ஏற்றதை என் மனைவியால் தாங்க இயலவில்லை. என்னிடமிருந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தாள்.

கோர்ட்டில் நான் அடித்து துன்புறுத்தினேன் என்று கூறி விவாகரத்து கேட்டாள். ஆனால், நான் உண்மையில் மனைவியை அடிப்பவன் அல்ல. நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது. எனது இரண்டு குழந்தைகளையும் தன்னுடன் அவள் எடுத்துக் கொண்டு போனாள்.

மேலும் நீதிமன்றத்தில் 100 வருடங்களுக்கு ஜீவனாம்சம் வேண்டுமென்று வாதிட்டாள். நீதிமன்றமும் இசைந்தது. ஜீவனாம்சமாக எனது வீடு மற்றும் இரண்டு கார்களை நீதிமன்றத்தின் மூலம் பெற்றுக் கொண்டாள்.

இதற்கெல்லாம் மேலாக இன்னொரு அநியாயமும் எனக்கு நடந்தது. அது வாரத்தில் ஒரு நாள் எனது மகள்களை பார்க்கும் சமயத்தில் அவர்களை நான் அடித்து துன்புறுத்தி விடக்கூடாது என்பதற்காக பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றம் எனக்கு கூறியிருந்ததாகும்.

Read more...
 
நியூயார்க் டைம்ஸ் - இஸ்லாம் - பிரான்ஸ் Print E-mail
Sunday, 16 December 2018 08:40

Image result for muslims in france

நியூயார்க் டைம்ஸ் -   இஸ்லாம்  -  பிரான்ஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்

ஒன்றை தீவிரமாக எதிர்ப்பதால் அது விளம்பரமாக அமைந்து எதிர்க்கப்பட்டதின் வளர்ச்சிக்கு உதவி விடும் என்பது உண்மையானால் அது இஸ்லாமிற்கு மிக சரியாகவே பொருந்தும். எதிர்ப்புகளின் வளர்ச்சியில் வளர்ந்த மார்க்கம் இஸ்லாம்.

விளம்பரமாகிவிடும் என்பதற்காக இஸ்லாமை எதிர்ப்பவர்கள் எதிர்க்காமல் இருக்க போவதில்லை. அல்லது தாங்கள் சரியென்று நினைக்கும் கருத்தை உரக்க சொல்லாமல் இருக்க போவதில்லை. ஆனால் தாங்கள் சரியென்று கருதும் அதே செயலை அடுத்தவர் செய்தால் மட்டும் 'போராடதே, விளம்பரப்படுத்தாதே' என்று கூப்பாடு போடுவது ஒருவித அறியாமையே.

உண்மை என்னவென்றால், ஒன்றிற்காக போராடப்பட வேண்டியது அவசியம் என்றால், விளம்பரமாகிவிடும் என்று அமைதியாக இருந்திட முடியாது. அப்படி இருந்தால், அது, பல நேரங்களில் நம் நோக்கத்திற்கு எதிர்மறையான விளைவையே எதிர்காலத்தில் ஏற்படுத்தும். நம் மவுனமும் வீணாகிப்போகும். போராட வேண்டியதற்கு போராடாமல் மவுனமாக இருந்ததற்கான வலியை மிக அதிகமாகவே வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

சரி விடுங்க நாம் பதிவிற்குள் செல்வோம். இரு தினங்களுக்கு முன்பாக (3rd Feb 2013), நியூயார்க் டைம்ஸ் தினசரியில் பிரெஞ்சு முஸ்லிம்கள் குறித்து வெளியான கட்டுரை, நான் முதல் பத்தியில் சொன்ன கருத்தை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றது. எம்மாதிரியான எதிர்மறை எண்ணங்களும் இஸ்லாமிற்கு எவ்வித பாதிப்பையும் தரவில்லை. அவை தந்ததெல்லாம் இரட்டிப்பு வளர்ச்சி மட்டுமே.

பிரான்சில் இஸ்லாம் ஏற்படுத்தும் தாக்கத்தை, அதன் காரணிகளை அலசும் இந்த கட்டுரையோடு சில இடங்களில் ஒத்துப்போக முடியாவிட்டாலும், நிச்சயம் கவனிக்கப்பட வேண்டிய கட்டுரை என்பதில் மாற்றுக்கருத்தில்லை. உங்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைக்காமல் அந்த கட்டுரையின் தமிழாக்கத்திற்கு செல்கின்றேன்.

Read more...
 
விசித்திரமான பிரசவ கேஸைச் சந்தித்து இஸ்லாமை ஏற்ற பெண் டாக்டர் Print E-mail
Tuesday, 13 February 2018 07:41

விசித்திரமான பிரசவ கேஸைச் சந்தித்து இஸ்லாமை ஏற்ற    பெண் டாக்டர்

அமெரிக்காவில் ஓர்ஃபியா என்ற பெண் மருத்துவர் ஒரு விசித்திரமான பிரசவ கேஸைச் சந்திக்கின்றார். பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவர் ஓர் அரபியப் பெண்மணி! அந்தப் பெண் பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கின்றார். நடந்தது என்ன? அந்த மருத்துவரே விவரிக்கின்றார்.

பிரசவ வேதனையில் இருந்த அவரிடம், "எனது பணி நேரம் முடிந்து விட்டது. அடுத்து வருகின்ற ஆண் மருத்துவர் உங்கள் பிரசவத்தைப் பார்ப்பார்' என்று நான் சொன்னதும் அந்தப் பெண் அழவும் அலறவும் ஆரம்பித்து விட்டார்.

''ஆண் மருத்துவரா எனக்குப் பிரசவம் பார்க்கப் போகின்றார்? வேண்டாம். ஆண் மருத்துவர் வேண்டவே வேண்டாம்'' என்ற கதறல் அவரிடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் இந்த விவகாரம் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இது ஒரு புரியாத புதிராக எனக்குப் பட்டது.

"இத்தனை ஆண்டு காலமாக எனது மனைவியை, தனது வாழ்நாளில் தன்னுடைய தகப்பனார், தன் உடன்பிறந்த சகோதர, சகோதரிகள், ஒன்று விட்ட சகோதர, சகோதரிகள், சிறிய, பெரிய தந்தையர் போன்றோர் தவிர வேறு எந்த அந்நிய ஆடவரும் பார்த்தது கிடையாது' என்று அப்பெண்ணின் கணவர் விளக்கம் சொன்னார்.

Read more...
 
பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஒப்பற்ற இடம்பெற்ற ஜைனப் கொபோல்டு Print E-mail
Sunday, 10 December 2017 09:18

Image result for ஜைனப் கொபோல்டு

பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஓர் ஒப்பற்ற இடம்பெற்ற ஜைனப் கொபோல்டு 

[ பிரிட்டானிய முஸ்லிம் சமூக வரலாற்றில் ஜைனபு கொபோல்டுக்கு ஓர் ஒப்பற்ற இடமுண்டு. சவுதி அரசாங்கத்தின் விருந்தினராக ஹஜ்ஜுக் கடமையை நிறைவேற்றிய முதல் முஸ்லிம் ஆங்கிலப் பெண்மணி இவர். ஹஜ்ஜுக்குச் சென்ற ஆண்டு 1933  ]

"நான் எப்போது, ஏன் இஸ்லாத்திற்கு வந்தேன் என்று அடிக்கடி பலர் என்னிடம் கேட்கிறார்கள். இஸ்லாம் என்ற உண்மை மார்க்கம் எப்போது என்னில் விடியலானது என்பது பற்றிக் குறிப்பாக எனக்குத் தெரியாது என்று மட்டும் என்னால் கூற முடியும்.

ஆனால், நான் எப்போதுமே முஸ்லிமாகவே இருந்து வந்திருக்கின்றேன் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று தனது வாழ்வைப் பற்றி அறிமுகம் செய்கிறார் ஆங்கிலேயச் சீமாட்டி லேடி எவலின் கொபோல்டு என்ற ஜைனபு.

ஏனென்றால், தன் குழந்தைப் பருவம் முதல் இஸ்லாமியச் சூழலில் (அல்ஜீரியா நாட்டில்) வளர்ந்து, முஸ்லிம் தோழிகளுடன் சேர்ந்து இறைவணக்கமாகிய தொழுகையைப் பழகி, அரபு மொழியைப் பேசக் கற்று, உள்ளத்தளவில் முஸ்லிம் சிறுமியாக வளர்ந்து வந்ததாகப் பெருமைபடக் கூறுகிறார்  ஜைனப் கொபோல்டு  (Zainab Cobbold)

இஸ்லாமியச் சூழலில் வளர்ந்ததால், முஸ்லிம்களின் நடையுடை, பாவனைகள் தன்னிடம் இயல்பாகவே அமைந்துவிட்டதாகக் கூறும் ஜைனபு, பிற்காலத்தில் இத்தாலி நாட்டிற்குக் குடிபெயர்ந்து சென்ற பின்னரும் பெரியவளாகி, முஸ்லிம் பெண்கள் அணியும் நீண்ட கருப்பு உடை (புர்கா) அணியும் பழக்கமுடையவரானார்.

Read more...
 
பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் ஆதங்கமும், மறுபரிசீலனை கோரிக்கையும்! Print E-mail
Tuesday, 12 November 2019 07:35

பாபரி மஸ்ஜித் தீர்ப்பு குறித்து சட்ட வல்லுநர்களின் ஆதங்கமும், மறுபரிசீலனை கோரிக்கையும்!

o  முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

o  தமிழகத்தைச்சார்ந்த வழக்கறிஞர் ஆ.நந்தினி B.A.B.L

o  அதிருப்தி தெரிவிக்கும் லிபரன் கமிஷன் முன்னால் வழக்கறிஞர் அனுபம் குப்தா

அயோத்தி பாபரி மஸ்ஜித் தீர்ப்பு: அரசியலமைப்பின் மாணவராக தீர்ப்பை ஏற்றுக் கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாக உள்ளது!- முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அசோக் குமார் கங்கூலி!

ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி நீதிபதி அசோக் குமார் கங்குலி, அயோத்தி தீர்ப்பு அவரது மனதில் ஒரு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் “மிகவும் குழம்பிப்போய் உள்ளதாகவும்” தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

அங்கு ஒரு மஸ்ஜித் இருந்ததை சிறுபான்மையினர் பல தலைமுறைகளாகக் கண்டு வருகிறார்கள். அது இடிக்கப்பட்டுள்ளது. அதன் மீது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ஒரு கோயில் கட்டப்பட இருக்கிறது. இது என் மனதில் ஒரு சந்தேகத்தை எழுப்பியுள்ளதுஸ. அரசியலமைப்பின் மாணவராக, அதை ஏற்றுக்கொள்வது எனக்கு கொஞ்சம் கடினமாகும்.

Read more...
 
ஃபாஸிச மத்திய அரசின் முஸ்லிம் விரோதப்போக்கும், முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்! Print E-mail
Tuesday, 02 October 2018 06:40

[ இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள அல்குர்ஆன் வசனங்களை சிந்தித்து தெளிவு பெறுவோம்.]

ஃபாஸிச மத்திய அரசின்  முஸ்லிம் விரோதப்போக்கும், முஸ்லிம் சமூகத்தின் மெத்தனப்போக்கும்!

சர்வதேச அளவில் தற்போது முஸ்லிம் சமூகம் பல்வேறு வகையான நெருக்கடிகளை, தடைகளை, விமர்சனங்களை எதிர் கொண்டு வருகின்றது.

ஐரோப்பிய நாடுகளில் புர்கா, பர்தா அணியத்தடை, மேற்கத்திய நாடுகளின் சிலதில் தாடி வைப்பதற்குத் தடை, இன்னும் சில நாடுகளில் பள்ளிவாசல்கள் கட்ட தடை, இன்னும் சில நாடுகளில் இஸ்லாமியப் பொதுக் கூட்டங்கள், மாநாடுகள், நடத்தத் தடை என பல்வேறு நெருக்கடிகள்.

இன்றல்ல, நேற்றல்ல இப்பிரபஞ்சத்தில் ஓரிறைக் கொள்கையை எடுத்தியம்ப ஆரம்பித்த காலம் முதற்கொண்டே போராட்ட்டக் களங்களை இறைத்தூதர்களும், அவர்களைக் கொண்டு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் சமூகங்களும் சந்தித்தே வந்துள்ளனர்.

இறுதியாக, முஸ்லிம் சமூகமே வல்லோனின் வியத்தகு சான்றுகள் மற்றும் வல்லமை, ஆகிய உதவிகளின் துணை கொண்டு வெற்றி வாகையும் சூடியுள்ளனர்.

சுதந்திர இந்தியாவிற்குப் பின்னர் இந்திய தேசத்திலும் முஸ்லிம் சமூகம் தொடர்படியாக பல்வேறு நெருக்கடிகளை, விமர்சனங்களை சந்தித்து வந்து கொண்டிருக்கின்றது.

Read more...
 
உலகிலேயே வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம் ! Print E-mail
Thursday, 03 January 2019 08:45

உலகிலேயே வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம் !

உலகத்திலேயே முஸ்லிம்களால் கொடையளிக்கப்பட்ட வக்ஃபு சொத்துக்கள் இந்தியாவில்தான் அதிகம்.

ஆம் இந்திய இரயில்வே துறை மற்றும் இந்திய இரணுவத்துக்குப் பிறகு அதிகமான சொத்துக்களையும், நிலங்களையும் கொண்டிருப்பது இந்திய வக்ஃப் ஃபோர்டுதான்.

பதிவு செய்யப்பட்ட 4.9 லட்சம் சொத்துக்களின் மதிப்பு 1.20 லட்சம் கோடி. இந்த தொகையை பார்க்கும் போது மெய் சிலிர்க்கிறது. இந்திய முஸ்லிம்களின் முன்னோர்கள் ஆறு லட்சம் ஏக்கர் நிலங்களை தங்களின் சந்ததிகளின் உயர்வுக்காக தங்களது சொத்துக்களை வக்ஃபு செய்திருக்கிறார்கள்.

சச்சார் குழு பரிந்துரைப்படி இருக்கின்ற வக்ஃப் சொத்துக்களை முறையாக பராமரித்து வந்தாலே ஆண்டுக்கு 12,000 கோடி ரூபாய் வருமானம் வரும். அதை வைத்து முஸ்லிம் சமூகத்தின் வறுமையை மட்டும் இல்லாமல் மற்ற சிறுபான்மை மக்களின் பொருளாதார நிலையையும் சரிசெய்து விடலாம்.

தற்போது இந்திய வக்ஃபு வாரியத்தின் வருமானம் என்பது வெறும் 163 கோடி மட்டுமே. முஸ்லிம்களின் வக்ஃபு சொத்துக்கள் குறித்த அறியாமையாலும், மெத்தனப் போக்காலும் அரசுகளின் சுரண்டலாலும் கேட்பாடற்றுக் கிடக்கிறது இசுலாமிய சமுதாயத்தின் சொத்துக்கள்.

Read more...
 
அறிஞர் பெருமக்களே! விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்! Print E-mail
Friday, 21 August 2015 06:44

அறிஞர் பெருமக்களே! விழித்தெழுவது காலத்தின் கட்டாயம்!

உண்மையிலேயே இன்றைய அறிஞர் பெரு மக்களுக்கு இன்றைய மக்களின் இழிநிலை தெரியாதிருக்க வாய்ப்பே இல்லை.

மனிதர்கள் இன்று ஐயறிவு மிருக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொன்னால் மிருகங்களை விடக் கேடுகெட்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் எனக் கூறிக் கொண்டு குடி, கூத்து, விபச்சாரம், வன்புணர்ச்சி, கொலை, கொள்ளை, களவு, மோசடி, ஏமாற்று என அனைத்து வகை கூடா ஒழுக்கங்களும் இன்று தலைவிரித்து ஆடுகின்றன.

அரசியல் வியாபாரிகளிடமும், ஆட்சியாளர்களிடமும், அரசு அதிகாரிகளிடமும் மேலிருந்து கீழ் வரை அனைத்து மட்டங்களிலும் லஞ்சமும், ஊழலும் காட்டாறாக கரை கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அரசில் வியாபாரிகளும், மதவியாபாரிகளும் கூட்டு சேர்ந்து மக்கள் சொத்துக்களை சூரையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களும், பெரும் செல்வந்தர்களும் நூறு தலைமுறைக்குச் சொத்துக்களை குவித்துக் கொண்டிருக்கும் நிலையில் நடுத்தர மக்களும், ஏழைகளும் மேலும் மேலும் ஏழைகளாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள். அன்றாட வயிற்றுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கே திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

Read more...
 
மவ்லவிகளுக்குத்தான் பொறுப்பு என்றால் மற்றவர்கள் முஸ்லிம்களில்லையா? Print E-mail
Wednesday, 20 April 2016 07:37

மவ்லவிகளுக்குத்தான் பொறுப்பு என்றால் மற்றவர்கள் முஸ்லிம்களில்லையா?

சமூகத்தில் படர்ந்துள்ள அனாச்சார லீலைகள் பல. அவற்றுள் மிகக் கொடியது பாவகரமானது இஸ்லாத்தின் மூலக் கொள்கை ஏகத்துவத்தையே முறியடிக்கும் தன்மை கொண்டது . இறைவனுக்கு வைக்கும் சமாதி வணக்கம்.

இந்த நிலை ஓரளவு மாறுதல் அடைந்து விட்டால் பிற சில்லரை அனாச்சார அனுஷ்டானங்களெல்லாம் நாளடைவில் தாமாகவே விடுதலை பெற்று விடும், அதற்கு போராட்டங்களும் கிளர்ச்சிகளும் தேவை இராது.

சில்லரை அனாச்சாரங்கள் என்பது, சொறுகப்பட்டிருக்கும் மின்சார பல்புகள் போன்றவை. அவைகளை உடைத்து விடுவதால் பயனில்லை. வேறு பல்பு மாட்டி விடப்படலாம். எரிவதற்கு இயங்க வைக்கும் இயந்திரம் வேறிடத்தில் இருக்கிறது. அது மெயின் சுட்ச். இதை இயங்காமல் செய்து விடுவதால் மட்டுமே தான் கருதிய பலன் கைகூடும். இந்த மூலத்தை இரகசியத்தை உணர்வதில்லை.

சில்லரை அனாச்சார செய்கைகளை கண்டிக்கவும், திருத்தவும் ஈடுபடுகிறோம். அவை வீண் வேலை! பலிபீடம் அங்கல்ல! தர்கா மணிமண்டபங்களுக்குள் இருக்கின்றது. அவைதான் முதலில் தகர்க்கப்பட வேண்டும். அப்படித் தகர்த்துவிட்டால் ஏகத்துவ தன்மைக்கு இழிவம் பாதகமும் ஏற்படாது. சமூகம் தாழ்ந்து கொண்டே போகாது.

Read more...
 
விடுதலையற்ற வீரமுஸ்லிம்கள்! Print E-mail
Thursday, 17 November 2016 08:11

விடுதலையற்ற வீரமுஸ்லிம்கள்!

    SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, DUIHA கல்லூரி, தாராபுரம்    

இந்திய வரலாறுபடிப்போம்! இந்தியாவில் வரலாறுபடைப்போம்!

ஆகஸ்ட் என்றாலே அனைவருக்கும் சட்டென நினைவிற்கு வருவது அகில இந்திய சுதந்திர தினம் தான். வருடம் ஒருமுறை அந்த ஒருநாள் மட்டும் நம் பாரத தேசமெங்கும் ஒரேகோலாகலம்தான்.

செய்தித்தாள்களும், மீடியாக்களும் தற்போது திரையுலகத்தினரும் போட்டிபோட்டுக் கொண்டு சுதந்திரம் குறித்த பேச்சுகளும், பேட்டிகளும்... வழங்குவார்கள்!

அவற்றில் ஒன்றிலும் கூடஇடம் பெறுவதில்லை இஸ்லாமியனின் சுதந்திர வேட்கையும், அவனது வீரதியாகமும்...

இச்சூழ்நிலையில்தான் நாம் நமது 69 வது சுதந்திர தினத்தை மீண்டும் இங்கே கொண்டாடப் போகிறோம்...?

இன்றைய இந்த இளையதலைமுறையினருக்கு நாம் எப்படி அவர்களைப் பற்றி சொல்லித் தரப்போகிறோம்? புரிய வைக்கப்போகிறோம்? மிகவும் யோசிக்க வேண்டிய ஒன்று....? இது மாதிரியான ஒரு இழிநிலை இங்கு இப்படியே தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்மை நாமே இழப்புக்குள்ளாக்குவதைத் தவிர வேறு வழி இல்லை. எனவே அடுத்து நாம் இதை நற்சீர் செய்வது எப்படி...? என்று சிந்திக்க வேண்டிய நேரமிது.

Read more...
 
இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்! Print E-mail
Tuesday, 10 May 2016 06:51

இஸ்லாத்தின் பெயரிலான வன்முறைகள்!

    அரசியல்    

சமகால உலகில் சில குழுக்கள் தமக்கு இஸ்லாமியப் பெயர்களை சூட்டிக் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டு வருவது உலகம் அறிந்த உண்மையாகும். இந்த இயக்கங்கள் குறித்து மீடியாக்களில் பரவலாக்கப்படும்

போது இஸ்லாத்தைப் பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே, இத்தகைய குழுக்களது நடவடிக்கைகளைப் பற்றிய சரியான புரிதல் எல்லோருக்கும் அவசியப்படுகிறது.

    இஸ்லாத்தின் அங்கீகாரமின்மை    

இஸ்லாத்தை உரிய முறையில் பின்பற்றும் ஒருவர் சமூக மாற்றத்துக்கான வழிமுறையாக பலாத்காரத்தையோ வன்முறைகளையோ கையாள முடியாது. “மார்க்கத்தில் பலாத்காரமில்லை” (2: 256) “மனிதர்கள் விசுவாசிகளாக மாறுவதற்கு நீர் அவர்களை நிர்ப்பந்திக்கிறீரா?” (அல்குர்ஆன்  10:99) “நீர் அவர்களின் மீது ஆதிக்கம் செலுத்துபவராக இல்லை”(அல்குர்ஆன்  88:22) போன்ற வசனங்கள் பலாத்காரத்தைக் கண்டிக்கின்றன.

இஸ்லாம் என்ற மார்க்கத்தோடு வாழ்பவர் அத்துமீறல்களோடும் வன்முறைகளோடும் சம்பந்தப்படமாட்டார். இஸ்லாம் என்றால் ‘சாந்தி, ‘சமாதானம்’ (ஸில்ம்) என்ற பொருளைத் தருகிறது. எனவேதான் அல்லாஹ் “நீங்கள் ‘ஸில்ம்’ க்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்” (அல்குர்ஆன்  2:208) என்கிறான்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 3 of 94

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article