வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

முஸ்லிம் பெண்மணிகளும் போர்க்களமும்! Print E-mail
Friday, 20 November 2009 09:55

முஸ்லிம் பெண்மணிகளும் போர்க்களமும்!

      ZARINA ABDUL HAQ       

''ஷஹீத்'' என்ற சொல்லின் பொருள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் என்பதாகும். அதற்கு ஆயுதம் ஏந்திப் போர்செய்யும் போதுதான் கொல்லப்படல் வேண்டும் என்பதில்லை.

இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட காரணத்தால் முதன் முதலாக ஷஹீதாக்கப் பட்டவர் ஒரு பெண்மணிதான். அவர் பெயர் சுமைய்யா ரளியல்லாஹு அன்ஹாஎன்பதாகும்.

நவீன உலகிலும் இஸ்லாத்துக்கெதிரான சக்திகளால் முஸ்லிம் பெண்மணிகள் பலவாறு கொடுமைப் படுத்தப்பட்டும்கூட அராஜக சக்திகளுக்குத் தலைவணங்காது போராடியுள்ளனர் (மிகச் சிறந்த உதாரணம் மறைந்த ஸைனப் அல் கஸ்ஸாலி). இன்றும் போராடி வருகின்றனர். அதன்போது, அவர்கள் கொல்லப்பட்டால் அவர்களுக்கும் ஷஹீதுடைய அந்தஸ்தை வழங்குவதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.

எனவே, போராட்டம் என்பது ஆயுதமேந்திப் போராடுவது மட்டுமல்ல. பேனாமுனையால் கூட போராட்டம் நடத்தலாம். ஊடகத்துறையினூடாகப் பிரசார யுத்தத்திலும் பங்குபற்றலாம். அதன் மூலம் இஸ்லாத்திற்கெதிரான பொய்ப் பிரசாரங்களையும் வெற்றுப் புனைவுகளையும் முறியடித்தும் போராடலாம்.

Read more...
 
முஸ்லிம் மங்கையராய் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் Print E-mail
Sunday, 08 March 2009 11:01

முஸ்லிம் மங்கையராய் பிறக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

உலக மகளிர் தினம் ஒவ்வொரு ஆண்டும்  உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மகளிர் முன்னேற்றம் குறித்த கருத்தரங்கங்களும், விழிப்புணர்வு பிரச்சாரங்களும் ஆங்காங்கே செய்வார்கள். ஆனாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்தான் குறைந்தபாடில்லை. இதற்கு காரணம் பெண்கள் சுதந்திரம், பெண்கள் சுதந்திரம் குறித்த தெளிவான பார்வையின்மைதான்.

பெண் என்பவள் ஆணுக்கு நிகர் என்ற வெறியூட்டப்பட்டு, ஆண்களுக்கு நிகரான ஏன் அதையும் தாண்டிய குறைந்த அளவு ஆடையில் வலம்வருவது, பணிக்கு செல்வது இவை மட்டும்தான் பெண்களின் முன்னேற்றம் என்ற குறுகிய வட்டத்துக்குள் நின்றதுதான். இதையும்தாண்டி பெண்கள் சோபிக்கவேண்டிய முக்கியமான குடும்பக்கட்டமைப்பு இன்று பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் சிதைந்துள்ளது.

ஒரு காலத்தில் விவாகரத்து என்பது அரிதான ஒன்றாக இருந்தது. இன்று என்ன நிலை? ஒரு சிறு பிரச்சினை என்றாலும் கணவனுக்கு முன்பாக குடும்பநல நீதிமன்றத்தின் படியேறுவது பெண்தான். இதை பெருகிவரும் விவாகரத்து வழக்குகள் உறுதிப்படுத்துகிறது. சென்னையில் விவாகரத்து வழக்குகளை விசாரிப்பதற்காக 3 குடும்ப நலக்கோர்ட்டுகள் உள்ளன. 

Read more...
 
பெண்களின் சிரிப்பும், அழுகையும், பொய்யும்! Print E-mail
Thursday, 06 October 2011 12:22

 

 

[ பொதுவாக ஆண்களின் சிரிப்பானது தம்மை முன்னிலை படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக இருக்கும். ஆனால் பெண்களின் சிரிப்பானது உறவை வளர்க்கும் விதமாகத்தான் உள்ளது என்கிறார்கள் அந்த ஆய்வாளர்கள்.

பெண்களின் கண்ணீர் மூலம் ஆண்மையினையும், ஆண்களின் பாலியல் உணர்ச்சிகளையும் அடக்கச் செய்யலாம். எவ்வாறென்றால் அழுவதை பார்க்கும் ஆண்களில் வன்முறையை தூண்டும் ''டெஸ்டோஸ்டீரான்'' அளவை அது வெகுவாக குறைக்கிறது எனவும் ஆய்வு தெரிவிக்கிறது. பெண்களின் கண்ணீரானது ஆண்களை தம் வசப்படுத்தவும் பெண்களுக்கு உதவுகிறது. காரணம், பெண்களின் அழுகையானது ஆண்களை ரசிக்க வைக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆய்வின்படி பெண்கள் மூன்று விதமாக பொய் சொல்கிறார்களாம். சிறுவிஷயங்களில் தவறு நடந்துவிட்டால் கூட "உண்மையைச் சொல்லாமல் பொய்க்காரணம் கூறுவது அநேக பெண்களின் வாடிக்கை" இவர்கள் ஒருவகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பின் காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது வகை பெண்கள். வஞ்சகமாக பொய் சொல்வது மூன்றாம் வகையினர். பெண்கள், சாதாரணமாக சிராய்ப்பு, காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மைக் காரணத்தைச் சொல்லமாட்டார்கள்.]

Read more...
 
கணவனுக்கு பயப்படலாமா? Print E-mail
Sunday, 23 October 2011 07:33

  கணவனுக்கு பயப்படலாமா? 

[ பல பெண்கள் திருமணமான புதிதில் கணவனுக்கு பயப்பட்டாலும் காலம் செல்லச்செல்ல கணவனை தன் கட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள். இயற்கையிலேயே பயந்த சுபாவமுடைய சில பெண்கள் கணவனுக்கு பயந்து வாழக்கூடியவர்களாகவே காலத்தை நகர்த்துகிறார்கள்.

மனைவி தனக்கு பயப்பட வேண்டும் என்று எண்ணுகின்ற பழங்கால தலைமுறையினரின் அணுகுமுறையை இக்கால இளம்தலைமுறை பெரிது படுத்தாமல் இருப்பது உண்மையில் ஆறுதலான விஷயமாக இருந்தாலும் வரதட்சணை போன்ற விஷயங்களில் அவர்களது அடாவடி இன்றைய மனைவிமார்களை பயம் கொள்ளச்செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

எப்போதும் கணவனுக்கு பயந்து வாழும் மனைவியால் கணவன் தவறான பாதையில் செல்லும்போது அவனை திருத்தி நேர்வழிக்கு கொண்டு வர முடியாது. இது குடும்ப வாழ்க்கைக்கு ஏற்றதல்ல.. கண்வன் தவறு செய்தால் துணிச்சலுடன் அதை திருத்தக்கூடியவளாக மனைவி இருந்தால்தான் குடும்பம் குடும்பமாக இருக்கும்.

எது எப்படி இருந்தாலும் கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பயந்து கொண்டே இருந்தால் வாழ்க்கை சுவைக்காது. கணவன் மனைவிக்குள் பயமில்லாத வாழ்க்கை இருந்தால்தான் தாம்பத்தியமும் இனிதாக இருக்கும்.]

Read more...
 
விதவைகளின் விடிவுதான் என்ன? Print E-mail
Friday, 25 November 2011 12:10

விதவைகளின் விடிவுதான் என்ன?

  ஃபாத்திமா நளீரா  

பெண்களை வைத்துப் போற்றி, புகழந்து, காவியம் படைத்து போராட்டம் நடத்தி, மேடைப் பேச்சுகளால் அதிர வைத்து முன்னேறியவர்கள் பலர் உள்ளனர். ஆனால், அன்றும் இன்றும் பல்வேறு சக்திகளால் நசுக்கப்பட்டுப் பின் தள்ளப்படும் ஒரு ஜென்மமாகவே பெண் இருக்கிறாள்.

அரசியல், விஞ்ஞானம்,மருத்துவம் என்று விரல்விட்டு எண்ணக் கூடிய பெண்கள் ஒரு சிலர் தன் நுண்ணறிவு, ஆளுமை விருத்தியால் முன்னேறி ஜொலித்தாலும் அதிகளவிலும் அதிகளவு இந்தப் பெண்களை சமுதாயம் கம்பிகளுக்குப் பின்னால் கொத்தடிமைகளாக வைத்துப் பார்க்கவே விரும்புகிறது. எப்படித்தான் முற்போக்கான கருத்துகளை சமுதாயம் அள்ளி வீசினாலும் துருப்பிடித்த கருத்துகளை விட்டு இன்னும் அகலவே இல்லை. பெண்களின் உணர்வுகளை நசுக்கி ஆண்களுக்கு எல்லா விதத்திலும் பாதை அமைத்துக் கொடுக்கிறது.

விதவைகள்! இவர்கள் விழி இருந்தும் குருடர்களாகச்; சமுதாயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தக் கைம்பெண்களின் உணர்வுகளுக்கு எத்தனை வீதம் மதிப்பளிக்கப்படுகின்றதோ தெரியாது. ஆனால்; கடுமையான மன அழுத்தம், வடுக்கள், ரணங்கள், சோதனைகள் என நிகழ்கால எதிர்காலப் போராட்டம் மற்றும் ஒருவித தாழ்வு மனப்பான்மை என மீள்பார்வை இல்லாத ஒரு நிரந்தர இருட்டில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டும் நிஜமான உண்மை.

Read more...
 
பெண்களின் இயல்பான அழகும் ஒப்பனையில்லாத தோற்றமும்! Print E-mail
Tuesday, 29 November 2011 09:25

பெண்களின் இயல்பான அழகும் ஒப்பனையில்லாத தோற்றமும்!

  சுகன்யா  

பெண்களாகிய நாம் சிறப்பாகவே உடை அணிகிறோம். நகை அணிவதையும் உயர் ரகச் சேலைகளை உடுத்துவதையும் விரும்புகிறோம். விழாக் காலங்களில் அழகான தோற்றத்திற்கெனச் சிறப்புக்கவனம் செலுத்தும் நாம் சாதாரண சமயங்களில் தோற்றம் குறித்துக் கவலைகொள்வதில்லை. விழாக்காலங்களாக இல்லாத வேளைகளிலும் சாதாரணமான பொழுதுகளிலும்கூட அழகான தோற்றம் பெறத் தேவையான சில குறிப்புகளை இங்கே பார்க்கலாம்.

நான் சிறுமியாக இருந்தபோது எங்கள் வீட்டிற்கு அருகே வசித்த ஒரு பெண்ணின் ரசிகையாக நான் இருந்தேன். வீட்டிலிருக்கும் சமயத்தில்கூட அழகாகத் தோற்றமளிப்பார். இப்போது நினைத்துப் பார்த்தால் ஒவ்வொரு சாதாரண நாளிலும் அழகாகத் தோற்றமளிக்க உதவும் விஷயங்களில் அவர் மாஸ்டராக இருந்தார் எனப் புரிகிறது.

எனக்குத் தெரிந்தவரை அவர் விலையுயர்ந்த நகைகளையோ பகட்டான புடவைகளையோ ஒருபோதும் அணிந்திருந்ததில்லை. அவர் செய்ததெல்லாம் அவரது ஒல்லியான ஆரோக்கியமான தேகத்தை பளபளப்பான கேசத்தை மென்மையான சருமத்தைச் சுத்தமாக வைத்துக்கொண்டதுதான்.

எனக்கு உடையணியும் கலை பற்றிய புரிதலை அவர் ஏற்படுத்தினார்.

Read more...
 
நான் ஒரு பெண்! Print E-mail
Saturday, 16 April 2011 08:21

நான் ஒரு பெண்!

o நான் ஒரு பெண் என்பதால் இரண்டாம் பாலினத்தைச் சேர்ந்தவள்.

o நான் ஆண்களின் உலகில் பிறந்தேன். ஆண்களின் மொழியை கற்றுணர்ந்தேன். ஆண்களின் இல்லங்களில் வசிக்கிறேன். ஆண்களின் பள்ளிகளில் படித்து, ஆண்களின் அலுவலங்களில் பணிபுரிந்து, ஆண்கள் விதிக்கும் விதிகளைக் கடைபிடித்து வாழ்கிறேன்.

o திரும்பத் திரும்ப ஒரே பாடத்தைத்தான் சிறுவயதில் இருந்து கற்றுக்கொடுக்கிறார்கள். பிடிவாதம் பிடிக்காதே. விட்டுக்கொடு!

o என் இளைய சகோதரனும்கூட என் மீது அதிகாரம் செலுத்துவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

o நான் அதிகம் தூங்கக்கூடாது. ருசியான உணவை நாடக்கூடாது. சத்தம் போட்டுப் பேசக்கூடாது.

o நான் வீட்டு வேலைகளை பழகிக்கொள்ளவேண்டும். என் சகோதரர்களுக்கு அந்த அவசியம் இல்லை.

Read more...
 
மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும் Print E-mail
Wednesday, 03 March 2010 09:39

மாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்

[ இன்றைக்கு அனைத்துச் சமுதாயங்களிலும் மாமியார் கொடுமை என்பது எழுதப்படாத ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. தன்னுடைய மகனுக்கு மனைவியாக வந்து விட்ட காரணத்தினால் தன்னுடைய மருமகளை ஒரு அடிமைப் பெண்ணைப் போன்று, ஒரு வேலைக்காரியைப் போன்று நடத்தக்கூடிய அவல நிலை காணப்படுகிறது.

தன்னுடைய மருமகள் தெரியாமல் ஒரு சிறு தவறு செய்து விட்டாலும் அதை ஊதிப் பெரிதாக்கி பஞ்சாயத்தைக் கூட்டக்கூடிய நிலையை சில மாமியார்கள் உருவாக்கி விடுகின்றனர்.

மாமியார் கொடுமை பரவலாக இருக்கின்ற காரணத்தினால் பல மருமகள்கள் முன்னெச்சரிக்கையாக மாமியார் விஷயத்தில் கடுமை காட்டத் துவங்கி விடுகின்றனர்.

தன்னுடைய மாமனார், மாமியாருக்குப் பணிவிடைகள் செய்வது தனக்குக் கடமையில்லை; கணவனுக்கு மட்டும் தான் பணிவிடை செய்வது கடமை; இவ்வாறு தான் நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள் என்று சில பெண்கள் மாமனார் மாமியார்களைத் தவியாய் தவிக்க விட்டு விடுகின்றனர்.

இதனால் அவர்கள் வயதான பருவத்தில் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். பலர் மருமகள் கொடுமை தாங்க முடியாமல் முதியோர் இல்லங்களுக்குச் செல்ல நேரிடுகிறது.]

Read more...
 
ஏன் பிறந்தேன் பெண்ணாக? Print E-mail
Friday, 24 December 2010 08:11

M T   R E A D

  KAUSALYA   

[ இக்கட்டுரை பெண்களுக்கு மட்டுமின்றி, குறிப்பாக ஆண்களுக்கும்! காரணம் கட்டுரைக்குக் கிழே...

கட்டுரையை படித்து முடிக்கும்பொழுது உங்கள் கண்களும் 'கல்பு'(இதய)ம் ஈரமடையாமல் இருக்க வாய்ப்பில்லை, நீங்கள் மனிதர்களாக இருக்கும் பட்சத்தில்!]

  ''ஏன் பிறந்தேன் பெண்ணாக?''  

இந்த கேள்வியை தங்களுக்குள்ளாக கேட்காத பெண்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். வாழ்நாளில் ஒருமுறை கண்டிப்பாக கேட்ககூடிய சூழ்நிலை ஒன்று உண்டு, அது பிரசவ வேதனையை அனுபவிக்கும் அந்த நேரம்!

நானும் அத்தகைய ஒரு நிலையில் கேட்டேன், கேட்டேன் என்று சொல்வதை விட கத்தி கதறினேன் என்று தான் சொல்வேன். ஹாஸ்பிட்டலில் சேர்த்ததில் இருந்து வலியால் துடித்து கொண்டிருந்தேன், வலி வருவதும் போவதுமாக இருந்ததே ஒழிய எந்த முன்னேற்றமும் இல்லை.

நர்ஸ் வந்து செக் பண்ணி விட்டு இந்த வலி போதாது இன்னும் கொஞ்சம் வலி வர வேண்டும், அப்போதுதான் குழந்தை பிறக்கும் என்று கூலாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். எனக்கு எப்படி இருக்கும்?! இந்த வலியே உயிர் போகுது, இதை விட அதிக வலி என்றால் எப்படி இருக்கும், நினைக்கும்போதே வலியுடன் இப்போது பயமும் சேர்ந்து விட்டது.

என் உறவினர்கள் வேறு உட்காராதே அப்படியே மெதுவாக நட என்று அன்பாக கட்டளை இட்டார்கள். என்ன செய்ய அனுபவஸ்தர்கள் சொல்கிறார்களே என்று பெரிய வயிற்றை தூக்கி கொண்டு நடந்தேன்.

வலியை அதிகரிக்க ஜெல் என்ற ஒன்றை வைத்தார்கள், வைக்கும்போது அது வேற வித்தியாசமான ஒரு வேதனையாக இருந்தது. இது போதாது என்று குளுக்கோஸ் வேறு ஒரு கையில் ஏறி கொண்டு இருந்தது. அதிகம் இல்லை ஒரு 5 பாட்டில் தான். ஒரு பாட்டில் முடிந்ததும் நர்ஸ் செக் அப், பின்னர் வாக்கிங், மறுபடி ட்ரிப்ஸ், மறுபடி செக் அப் இப்படியாக கிட்டத்தட்ட 36 மணி நேரம் கடந்தது. இதில் தூக்கம் என்ற ஒன்றை மறந்து விட்டேன். எப்ப குழந்தை பிறக்கும் என்ற என் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.

Read more...
 
மகள் தாயிடம் மோதுவது ஏன்? Print E-mail
Wednesday, 19 May 2010 08:09

மகள் தாயிடம் மோதுவது ஏன்?

தவற விடாதீர்கள்: கட்டுரையின் இறுதியில் ''மகளுக்கோர் அன்னையின் மடல்''

ஒரு பெண் தாயாகும் போது தான் முழுமையாகிறாள். ஒரு பெண் பக்குவமான மனநிலையை இந்த நிலையில் தான் அடைகிறாள். அம்மாவின் அருமைகளை சொல்ல வார்த்தைகள் கிடையாது.  ஒரு குடும்பத்தின் முன்னேற்றம் அவளது கையில் தான் உள்ளது. வீட்டில் உள்ளவர்கள் அத்தனை பேரையும் அரவணைத்துச் செல்வது தாய் தான்.

அரவணைப்பு

ஒரு தாய் தன் பிள்ளை என்னதான் தவறே செய்தாலும், அவளை அரவணைத்தே செல்வாள். எதுவுமே இருக்கும்போது அதன் அருமை தெரிவதில்லை. இல்லாமல் இருக்கும் போது தான் அதன் அருமை தெரியும். அதே போல் தான் தாயின் அருமையும்.

Read more...
 
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்! Print E-mail
Wednesday, 30 June 2010 09:44

கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!

  மவ்லவி கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி   

[ ''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும், பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்'' என்று தனது திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ் வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள் கவனிக்கவும்.

''உலக அழிவு நாளை நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை, பர்தா இல்லை, தெருக்களுக்கு வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.

பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.

அனேகமாக இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள். பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள் எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக் கொள்கிறார்கள்!

இருசராருக்கும் கற்புண்டு என்பதை ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.]

Read more...
 
பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம்! Print E-mail
Monday, 01 December 2014 07:09

பொய்க்கால் குதிரையில் போவோமா ஊர்கோலம்!

மாயையில் மயங்கிய மதிகெட்ட கோலங்கள்!
விஷத்தை அமுதாக்கிய விநோதப் பார்வைகள்!
பிழைக்குள் பிழைப்புத் தேடும் புரியாத வாழ்க்கைகள்!
இது இன்று அண்டம் சுமக்கும் ஆச்சரிய உண்மைகள்!

தீமை 'தீ' க்கு எம்மை வார்ப்பதில் என்ன பயன்!?
அசத்திய கூட்டத்தோடு கோவிந்தா
போடுவதா இஸ்லாத்தின் பாதை!?
கலிமாச் சொல்லிவிட்டு கண்றாவி கொள்கையோடு
கைகோர்ப்பதா காலத்தின் தேவை!?

Read more...
 
அந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள்! Print E-mail
Saturday, 02 August 2014 13:10

அந்தப்புறக் காவலுக்கு
அரசர்கள் வைத்த அலிகள் !
 
தஸ்பீஹ் மணிகளைக்
கொத்தித் தின்னும்
இஸ்ராயீல் கழுகுகளின்
ஏவுகணை அலகுகளில்
அத்தஹியாத் விரல்கள் !

செடார் மரக் கிளைகளில்
தொட்டில்கள்
தொங்கும் கல்லறைகள் !

காற்றும் கந்தலாக்கும்
கந்தக எச்சில்கள்
காருவது அமெரிக்கா
உமிழ்வது இஸ்ரேல் !

அந்தப்புரக் காவலுக்கு
அரசர்கள் வைத்த
அலிகளைப்போல்
ஐ.நா .

Read more...
 
மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (4) Print E-mail
Saturday, 29 September 2012 22:42

மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (4)

உலகில் பிறந்த ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய கட்டுரை

MUST READ BY EVERY CITIZEN OF THE WORLD

  நான்காவது அம்சம்  

பெற்றோரைப் பேணுதலில் அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது அவர்களோடு நாம் பேசும் முறை பற்றியதாகும். பெற்றோரோடு எவ்வாறு பேச வேண்டும் என்பது தொடர்பாக அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

''அவ்விருவரையும் நோக்கி 'சீ' எனக் கூறாதே அவ்விருவரையும் விரட்டாதே மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக'' (இஸ்ரா : 23)

'பெற்றோருக்கு நல்ல வார்த்தைகளைக் கூறுங்கள் என்று பொதுப்படையாக அல்லாஹ் கூறியிருக்கலாம். ஆனால் அவ்வாறு கூறாமல்

'அவ்விருவரையும் நோக்கி 'சீ' எனக் கூறாதே',

'அவ்விருவரையும் விரட்டாதே',

'மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக'

என்று பேசுதலில் உள்ளடங்கும் ஒவ்வொன்றையும் தனித்தனியாக அல்லாஹ் பிரித்து இவ்வசனத்தில் கூறுகிறான். இவ்வசனத்தைப் பிழையாக விளங்கிய சிலர் தமக்கு பெற்றோருடன் ஏதாவது தகாராறு ஏற்பட்டு விட்டால் 'வருகிற கோபத்துக்கு அடிக்க வேண்டும் போலத் தோன்றுது ஆனாலும் 'சீ' என்று கூடச் சொல்ல வேண்டாம் என அல்லாஹ் கூறியுள்ளான் என்பதால் விடுகிறேன்' என்று கூறுவார்கள். 'சீ' எனும் வார்த்தையை விடப்பாரதூரமானதுதான் 'அடித்தல்' என்பது இவர்களுக்குத் தெரியாது போலும்? பெற்றோருக்கு 'சீ' என்றே கூற வேண்டாம் என்றால் அதற்கடுத்து வரும் வார்த்தைகளெல்லாம் கூடாததுதான் என்பதை இவர்கள் இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.

பெற்றோருடன் பேசும் இலக்கணங்களை இவ்வளவு அழகாகக் கூறிய அல்லாஹ் அந்த வசனத் தொடரில் தொடர்ந்தும் கீழுள்ளவாறு கூறுகின்றான்.

''அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக'' (இஸ்ரா: 24)

Read more...
 
முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்! Print E-mail
Thursday, 03 June 2010 06:35

''முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாய் மாற்றுவது மிகவும் சுலபம்'' ஒரு கிறிஸ்தவ அறிஞரின் அறிக்கை!

டாக்டர் J. டட்லி வுட்பரி, Dudley Woodberry என்பவர் ஒரு கிறிஸ்தவ அறிஞர் இவர் கிராமப்புறங்களில் வாழும் முஸ்லிம்களின் வாழ்க்கை – அவர்களை எப்படி கிறிஸ்தவர்களாக மாற்றுவது என்பனவற்றை ஆராய்ந்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் சுருக்கத்தைக் கீழே தருகின்றோம்.

(டாக்டர். டட்லி வுட்பரி என்பவர் தான் அமெரிக்க ஜனாதிபதி கார்ட்டருக்கு இஸ்லாமிய நாடுகளைப் பற்றியதொரு அறிக்கையைத் தயாரித்தத் தந்தவர்.)

என்னுடைய பார்வையில் இஸ்லாத்தை இரண்டாக பிரிக்கலாம்.

1. நாட்டுப் புறங்களில் வாழும் பாமர மக்களிடையே இருக்கும் இஸ்லாம். இதனை கிராமிய இஸ்லாம் (Folk Islam) என அழைக்கலாம். 2. உண்மையான இஸ்லாம் (Classical Islam).

Read more...
 
திருமணம் தரும் நறுமணம்! Print E-mail
Saturday, 20 August 2011 11:47

     திருமணம் தரும் நறுமணம்!    

"வீட்டைக் கட்டிப்பார், திருமணம் செய்து பார்" என்று ஒரு பழமொழி உண்டு. இதற்கு எத்தனை நூறு வயதோ தெரியவில்லை. ஆனால், இன்றும் அது உண்மையாகவே இருக்கின்றது.

சொந்த வீட்டையாவது கட்டி முடித்துவிடலாம் போல் தெரிகிறது. ஆனால், திருமணத்தை நாம் நடாத்தி முடிப்பதற்குள் நாம் படும் பாடு ஒன்றா? இரண்டா? "ஆறு பெண்பிள்ளைகள் பெற்றால் அரசனும் ஆண்டி" என்பது மற்றொரு முதுமொழி. வாழ்க்கை என்பது, புயலில் அலைமோதும் ஒடம்தான்.

ஆனால், பிரமச்சரியம் கலங்கிய நீர்க் குட்டிக்கு நிகரானது. அதாவது, பழத்தின் உள்ளே வாழும் வண்டுபோலானது. ஆனால், மணம் முடிப்பவனோ தேனிக்கு நிகரானவன். அவன் தனக்காகவும், பிறருக்காகவும் வாழ்கிறான். எனவே, ஒரு மனிதன் தனித்து வாழ்வதை விட மண முடித்து வாழ்வது சிறப்பு என்று சான்றோர் கூறுவார்.

இவ்வாறு திருமணத்தைப் பற்றி பல்வேறு கருத்துகள் நிலவிய போதிலும் நமது மார்க்கக் கண்ணோட்டத்தில் நோக்கும்போது, இறைவன் மனிதனை மிக மேலான வடிவத்தில் படைத்து, அவனை தன் பிரதிநிதியாக்கி, அவன் மீது தன் அருட்கொடைகளை அனைத்தையும் வாரி வழங்கினான். மனிதனுடைய நலனுக்காக மனித குளத்தை வாழ வைப்பதற்காக அவனின் இன்ப, துன்பங்களில் பங்கேற்பதற்காக அழகின் திருவுருவாக, அன்பின் இருப்பிடமாக பெண்ணையும் தோற்றுவித்தான்.

Read more...
 
வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா? Print E-mail
Tuesday, 09 October 2012 21:38

 

  வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் அனுமதிக்கவில்லையா? 

[ போராட்டத்திற்கு ஆண்களையும், பெண்களையும் அழைத்துக் கொண்டு வருவதை விமர்சனம் செய்யும் இந்த கண்ணியவான்கள்(?) யாரும் பெண்கள் ஆண்களுடன் சகஜமாக பழகும் அல்லது கலந்து கொள்ளும் மற்ற நிகழ்வுகளைப் பற்றி எந்த விமர்சனமும் செய்வதில்லை. செய்வதற்கு அவர்களுக்கு துப்பும் இல்லை.

இஸ்லாமிய பெண்கள் என்று தங்களை சொல்லிக் கொள்ளும் எத்தனையோ பேர்கள் "கெசினோ"க்களில் சென்று கும்மாலமிடுகிறார்கள். 20க்கு 20 உலக கிண்ண கிரிக்கட் பார்ப்பதற்கு ஆண்கள், பெண்கள் என்று இஸ்லாமியர்களும் அணி சேர்கிறார்கள். கடைத் தெருக்களில் சர்வ சாதாரணமாக பெண்கள் நடமாடுகின்றார்கள். மெயின் பஜார்களில் பெண்கள் கூட்டம் அலை மோதுகின்றது. இவைகளைப் பற்றியெல்லாம் வாய் திறப்பதற்கு இந்த உஷார் மடையர்களினால் முடியாதாம். நபியவர்களை கேவலப்படுத்தியவனை கண்டித்து களத்தில் இறங்கும் இஸ்லாமிய தாய்மார் பற்றி மாத்திரம் தான் இவர்களுக்கு அக்கரை வருகின்றதாம்.

யாரெல்லாம் பெண்களை அழைத்துக் கொண்டு போராட்டக் களத்திற்கு வருவதைத் தடையென்கிறார்களோ அவர்கள் தமது மனைவியை அழைத்துக் கொண்டு கடைத் தெருவுக்கோ சுற்றூலாத் தலங்களுக்கோ செல்வார்களா? இல்லையா? செல்வார் என்றால் தனது மனைவியைப் பலருக்கும் காட்சிப் பொருளாகக் காட்டலாமா? என்ற கேள்வி இந்த கேள்வி கேட்பவர்களை நோக்கியே திரும்பும்.

கேள்வி கேட்பதில் ஜாம்பவானாக இருக்கும் இவர்கள் தங்கள் மனைவி மற்றும் குடும்பப் பெண்கள் கடைத் தெருவுக்குச் சென்று பொருட்களை வாங்க அனுமதிப்பார்களா? இல்லையா? அனுமதிப்பார்கள் என்றால் அப்போது பலரும் அவர்களைப் பார்க்கும் நிலை ஏற்படாதா? இதே கேள்வியைத் தங்களுக்கெதிராக இவர்கள் கேட்டுக் கொள்ளட்டும்.

இஸ்லாமிய உம்மா பாதிக்கப்படும் போது நாம் வீதியில் இறங்கிப் போராடுவதை மார்க்கம் ஒரு போதும் தடை செய்யவில்லை. மாறாக அதற்கு அனுமதியளித்துள்ளது. "ஜனநாயகம் நவீன இணைவைத்தலா?" என்ற ஆய்வுக் கட்டுரையில் இது தொடர்பான விரிவான விளக்கம் அறிந்துகொள்ளலாம்.]

Read more...
 
Marriage a challenge for ‘over qualified’ Muslim women Print E-mail
Thursday, 20 March 2014 21:58

Difficult to find grooms for Hyderabad's 'over qualified' Muslim women

By: Bushra Baseerat

HYDERABAD: City match-maker, Shahid Farooqui, has been faced with an unusual problem of late: of ‘over qualified’ brides-to-be.

Though his bag is teaming with profiles of several eligible women from the Muslim community between 23 and 35 years of age, he has been struggling to get many of them a perfect match.

Reason?

All these girls are armed with graduate/post-graduate degrees (M Sc, B Ed, M Tech or even B Tech) now a trend, almost unheard of until a few years ago. As a result, Farooqui says, it’s become a herculean task to find these educated women, equally qualified grooms.

Seven out of 10 women seeking alliances these days are well educated.

Read more...
 
இண்டர்நெட் - டெலிஃபோன் மூலம் திருமணம்! Print E-mail
Sunday, 06 February 2011 10:14

இண்டர்நெட் - டெலிஃபோன் மூலம் திருமணம்!

  மவ்லவி, அஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி எம்.ஏ.,பி.எட்      

[ முற்காலத்தைவிட தற்போது செய்தி மற்றும் தகவல் தொடர்புச் சாதனங்கள் நவீனமாக மிக அதிக அளவில், வியக்கத்தக்க வகையில் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவர்கள் மிக எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறது.

எனவே ஒப்பந்தம் செய்து கொள்பவர்கள் தொலைவில் இருந்து கொண்டே தொலைபேசி, ஃபேக்ஸ், இண்டர்நெட் போன்றவற்றின் மூலம் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். இருசாராரும் ஒரே இடத்தில் இருந்தால்தான் ஒப்பந்தம் கூடும் என அடம்பிடிப்பதில் நியாயமில்லை என தற்கால மார்க்க அறிஞர்கள் கூறுகிறார்கள்.

இண்டர்நெட் தகவல் சாதனம், தகவல் சாதனங்களில் மிகப்பெரும் சாதனையாகும். இதில் மணமக்கள் இருவரும் நேருக்கு நேராக, ஒருவர் பிறரின் உருவத்தைப் பார்த்துக் கொண்டு திருமண ஒப்பந்தம் செய்து கொள்ள முடியும் என்பதால் இதை நவீனகால மார்க்க அறிஞர்கள் ஏகமனதாக ஏற்று கருத்துத் தெரிவித்துள்ளனர். அதன் விபரம் அறிய கட்டுரைக்குள் செல்லுங்கள்.]

Read more...
 
என்ன பெயர் சூட்டலாம்? Print E-mail
Saturday, 18 December 2010 07:58

என்ன-பெயர்-சூட்டலாம்?

    மவ்லவி A.U. பி.எம்.கலீல் அஹ்மது மன்பஈ, சென்னை   

[ நல்ல பொருள் வாய்ந்த, அழைப்பதற்கும் இனிமையான - இலகுவான பெயர்களை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும். நம் பிள்ளைகளுக்கும் சூட்ட வேண்டும்.

பக்கத்து வீட்டு குழந்தைகள் நம் பிள்ளைகளை விளையாட அழைக்க வருகையில் ‘என்னங்க! உங்க ஃபர்ஜ் (பெண்ணுருப்பு) இருக்கா? நாங்களெல்லாம் விளையாடப்போறோம்!’ என்று அழைக்கையில் பொருள் தெரிந்தவர்கள் சிரிப்பார்கள். தவறான பெயர்கள் சிலசமயம் எவ்வளவு விபரீதமான ஒரு பொருளாகிறது என்பதை சிந்தித்தாவது இதுபோன்ற பெயர்களை சூட்டுவதை தவிர்க்க வேண்டும்.

எனவே, நாம் நல்ல பெயர்களாக சூட்ட வேண்டும். தீய பெயர்களை வைத்திருந்தால் மாற்றிக் கொள்ள வேண்டும். வயது வரம்பை பார்க்கக்கூடாது.

எவரும் அருவருப்பான தீய பெயர்களை வைத்திருந்தால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மாற்றி விடுவார்கள்.]

Read more...
 
மக்கள் மக்களாக வாழட்டும் Print E-mail
Sunday, 16 February 2014 07:26

மக்கள் மக்களாக வாழட்டும்

[ திருமணம் ஓர் அற்புதமான பந்தம். திருமணம் என்பதிலும் முழுமை இல்லை; பூரணத்துவம் இல்லை. குறைபாடுகளும் இருக்கலாம்; இருக்கின்றன. எனினும், ஆணும், பெண்ணும் இணைந்து வாழும் இக்கண்டுபிடிப்புக்கு நிகரான வேறொரு பந்தம் நிச்சயமாக இன்னும் தோன்றவில்லை.

ஆண் இன்னொரு பெண்ணால் மட்டுமே முழுமை பெறுகிறான்; பெண் இன்னொரு ஆனால் மட்டுமே நிறைவு பெறுகிறான். எல்லாவற்றையும் சட்டம் என்ற கோணத்தில் பார்த்துவிட்டு, தர்மத்தைப் புறக்கணிப்பது சமூக மேம்பாட்டுக்கு உதவாது...! அக்காலத்தில் உறவு முறை திருமணங்கள் தோன்றுவதற்கு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்தால் பிரச்னையை சரி செய்து உண்மையை உரத்துச் சொல்ல முடியும் என்பதே ஆகும். சமூக அங்கீகாரம் என்பது திருமண உறவு செழிக்க தோன்றியவையே...!

ஓரினசேர்க்கை எனபது ஒரு மன நோய். சரியான வயதில் உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. அனைவருக்குமே ஒவ்வொரு கட்டத்திலும் 12 வயதுக்கு மேல் 3 வருடத்திற்கு ஒரு முறை உளவியல் ரீதியான மருத்துவம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக திருமணதிற்கு முன்னும் பின்னும். தந்தையாகவோ தாயாகவோ நிலையை அடைந்த போதும், உளவியல் ரீதியான மருத்துவம் தேவை. ஆறறிவுக்கு கிழ் உள்ள விலங்குகள், பறவைகள் கூட தன எதிர்பாலை தான் நாடி ஈர்க்கபடுகின்றனெ.. மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த வக்கிர புத்தி.........]

Read more...
 
More Articles...
<< Start < Prev 91 92 93 94 95 96 97 98 99 100 Next > End >>

Page 93 of 107

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article