வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைக்கின்றன. மேலும் அவன் வல்லவனும் நுட்பமான ஞானம் உடையவனும் ஆவான்

- அல்குர்ஆன் 57:1     

   
Home

Links 3

Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)

Link - 5Link -7

bismillah1 (2)

ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (1) Print E-mail
Sunday, 12 July 2020 08:33

ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (1)

80 ஆண்டுகளுக்குப்பிறகு    மீண்டெழும் மஸ்ஜித்!

ஹகியா ஸாேபியா. கி.பி 537ல் கான்ஸ்டான்டி நோபிளில் கட்டப்பட்ட இந்த சர்ச் தான் உலகின் மிகப்பெரிய தேவாலயம் எனும் பெருமை மிக்கது.

பைசாந்திய கட்டிடக்கலையில் சிறப்பாக கட்டப்பட்ட இது ரோமன் கத்தோலிக்கர்களின் புனித தலமும் கூட.

எல்லாம் 1453ல் சுல்தான் பாத்திஹ் முஹம்மத் கான்ஸ்டான்டி நோபிளை கைப்பற்றும் வரை தான். அதற்கு பிறகு மஸ்ஜிதாக மாறியது.

சுல்தான் அதை பள்ளிவாசலாக வக்ஃபு செய்தார்.

கிறிஸ்தவ அடையாளங்கள் மறைந்து இஸ்லாமிய அடையாளங்கள் முளைத்தன
.
19-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய கிலாபத் வீழ்த்தப்பட்டு, துருக்கி முஸ்தபா கமால் எனும் துரோகியின் கையில் சிக்கியதும் அங்கே இஸ்லாம் தடை செய்யப்பட்டது. எல்லாவற்றையும் சிதைத்த கமால் இப்பள்ளியையும் அருங்காட்சியமாக மாற்றினான்.

Read more...
 
ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)வில் 80 ஆண்டுகளுக்குப்பிறகு கேட்கும் பாங்கொலி! (2) Print E-mail
Sunday, 12 July 2020 08:07

ஹாஜியா சோஃபியா (ஆயா சோஃபியா)

"நாங்கள் முஹம்மது ﷺ அவர்களைப் பின்பற்றுபவர்களாக இல்லையென்றால், இந்நேரம் உங்கள் உடல்கள் கூறு கூறாகப் பிரிக்கப்பட்டிருக்கும். நாங்கள் முஸ்லிம்களாக இல்லையென்றால் இந்த மண் உங்கள் இரத்தத்தில் குளித்திருக்கும். உங்கள் மகள்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பார்கள். உங்கள் குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் எங்கள் மார்க்கமான இஸ்லாம் இவற்றிற்கெல்லாம் எதிரானது. இவற்றையெல்லாம் தடை செய்கிறது.”

-உதுமானிய சுல்தான் முஹம்மத் அல் ஃபாத்திஹ் ஹிஜ்ரி 857, ஜமாதில் அவ்வல் 20 (மே 29, 1453) அன்று கான்ஸ்டான்டிநோபிளைக் கைப்பற்றிய பின்னர் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த அங்குள்ள கிறிஸ்தவக் கைதிகளிடம் கூறிய வார்த்தைகள் இவை.

“உங்கள் மன்னிப்பை வேண்டுகிறோம். கருணை காட்டுங்கள்” என்று அந்தக் கைதிகள் கோரினார்கள்.

“கிருபையும் கருணையும் கொண்ட இறைவனின் பெயரால் நான் உங்களை மன்னிக்கிறேன். இன்று உங்களுக்கு எந்தக் கொடுமையும் நிகழாது. உங்கள் இல்லங்களுக்குச் செல்லலாம்.” – சுல்தான்.

சுல்தானின் வார்த்தைகளைக் கேட்டதும், நிம்மதிப் பெருமூச்சு விட்ட கைதிகள்,   “நீங்கள் உண்மையில் ஒரு நல்ல தலைவர் என்பதற்கு இது ஒரு சான்று. உங்கள் வீரர்கள் நல்ல வீரர்கள். நாங்கள் உங்களுக்குக் கடமைப்பட்டிருக்கிறோம். நாங்கள் நல்ல மனிதர்களாக இருப்போம் என்று உறுதியளிக்கிறோம்” என்று சொன்னார்கள்.

Read more...
 
படைப்பின் தொழில் நுட்பம் (1) Print E-mail
Sunday, 17 January 2010 09:21

MUST READ

 பி.எஸ்.அலாவுதீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி  

இஸ்லாம்

மிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக!

அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான்.

அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)

இந்த வசனங்களில் படைப்பினங்களைப் பற்றிய ஒரு நியதியை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

அனைத்துப் பொருட்களையும் படைத்தான்; பின்னர் அவற்றை ஒழுங்குபடுத்தினான்; அவற்றின் தொழில்நுட்பத்தை முழுமைப்படுத்தினான். அதற்குப் பொருத்தமான, நிறைவான எல்லையை அவை அடையும்படிச் செய்தான்.

ஒவ்வொரு படைப்புக்கும் அதனதன் வழியையும் அவற்றின் பணியையும் அவற்றின் இலக்கையும் நிர்ணயித்தான். பின்னர் அவற்றை எதற்காகப் படைத்தானோ அந்தக் குறிக்கோளை அவை அடைவதற்கான வழியை அவற்றிற்குக் காட்டினான். அவை உருவானதற்கான நோக்கத்தை அவை உணரும்படிச் செய்தான். அவை வாழும் காலம் வரை அவற்றுக்கு பொருத்தமானவற்றையும் தேவையானவற்றையும் நிர்ணயம் செய்து அவற்றை அடையும் வழியைக் காட்டினான்.

Read more...
 
மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்! Print E-mail
Friday, 21 September 2012 19:36

மார்க்கப்பணியை அல்லாஹ்விற்காகவே செய்ய முன்வாருங்கள்!

1. காலத்தின் மீது சத்தியமாக. 2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). (அல்குர்ஆன் 103:1-3)

நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்களாக இருக்கின்றனர். அவர்கள் நல்லவற்றை ஏவுகிறார்கள், தீயவற்றை விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைபிடிக்கிறார்கள். ஜகாத்தை கொடுத்து வருகிறார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் அடிபணிகிறார்கள். அவர்களுக்கே அல்லாஹ் கருணை புரிகிறான்ஸ" (அல்குர்ஆன் 9:71)

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயங்களில்) நீங்கள் சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள். நீங்கள் நல்லவற்றை ஏவுகிறீர்கள்; தீயவற்றை விலக்குகிறீர்கள்; அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்கிறீர்கள்..." (அல்குர்ஆன் 3:110)

இந்த இறைவாக்குகள் அனைத்தும் இறுதி நபிக்கு முன்னர் நபிமார்கள் செய்து வந்த மார்க்கப்பணி இறுதித் தூதரின் உம்மத்தாகிய நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறது; கடமையாக்கப்பட்டிருக்கிறது என்பதை உணர்த்துகின்றன.

Read more...
 
வரலாறு என்பது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும் Print E-mail
Sunday, 26 December 2010 10:04

  வரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரம் அல்ல... அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்.

[ தஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.

இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன் காரணம் இதுதான். அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமண இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.

வடக்கு மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் கொடுத்தல் எடுத்தல் உண்டு.]

எனக்கு என்னுடைய குடும்பப் பாரம்பரியம் கிட்டத்தட்ட எட்டு தலைமுறைகளாகத் தெரிந்திருக்கின்றது. அதாவது என் மகள் துவங்கி அதற்கு முன்னாள் உள்ள ஏழு தலைமுறை மூத்தோர்கள்.

என் மகள்களின் தந்தையான அப்துல்லாஹ்வாகிய நான், என் தந்தையார் இஸ்மாயில், அவர் தந்தையார் காதர் பாட்சா, அவரது தந்தையார் முஹம்மது இப்ராஹிம், அவரது தந்தையார் நத்தர் சாஹிப்,அவரது தந்தையார் சையது அப்துல்காதர், அவரது தந்தையார் கருப்பையா ராவுத்தர். இதில் இந்த கருப்பையா ராவுத்தர் பிறப்பால் கருப்பையாத் தேவராக இருந்தவர்.

Read more...
 
பாவமன்னிப்பு ​கிடைக்காத காலம் Print E-mail
Monday, 05 May 2014 11:37

பாவமன்னிப்பு ​கிடைக்காத காலம்

சூரியன் மேற்குத் திசையில் உதிக்கும் வரைதான் பாவமன்னிப்பு

கியாமத் நாளின் பத்து அடையாளங்களில் மூன்று அடையாளங்கள் நிகழ்வதற்கு முன்னால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்கவில்லையானால் அதன் பிறகு ஏற்பாரானால் அவரது ஈமான் ஏற்றுக் கொள்ளப்படாது என்று எச்சரித்தார்கள்.

அந்த மூன்றிலும் மிக முக்கியமான முதலாவது அடையாளம் சூரியன் மேற்குத் திசையில் உதிப்பது. அதாவது கிழக்கில் உதிக்கிற சூரியன் மேற்குத் திசையில் உதித்த பிறகு ஒருவர் இறை மறுப்பிலிருந்தும் இணை வைப்பிலிருந்தும் தான் செய்கிற மற்ற சிறு பாவம் பெரும் பாவங்களிலிருந்தும் மன்னிப்புத் தேடி திருந்தினால் அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான்.

மன்னிப்பின் வாசலை அடைத்துவிட்டுத்தான் அல்லாஹ் சூரியனை மாற்றிச் சுற்றவைக்கிறான். அதாவது உலகம் அழிவதற்கு இன்னும் நாட்கள் இருக்கலாம். ஆனால் சூரியன் மேற்குத் திசையில் உதிக்கும் அடையாளம் வந்துவிட்டால், நமது ஈமானை இறைவன் ஏற்கமாட்டான் என்பதுடன் நமது பாவங்களை மன்னிக்க மாட்டான் என்பதுடன் அப்போது நமது நிலை என்னவாக இருக்குமோ அதே நிலையில்தான் உலகம் அழியும்வரை இருப்போம். அதே பாவமான நிலையில்தான் மறுமை நாளில் எழுப்பப்படுவோம் என்பதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு இப்போதே திருந்திவாழ முயற்சிக்க வேண்டும்.

Read more...
 
மாற்றத்தை விரும்புவோர் நான்கு படிகளைக் கடந்தே தீர வேண்டும் Print E-mail
Saturday, 23 July 2011 08:35
 
மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும்.

மாற்றத்தை விரும்பும் யாரும் கீழ்க்காணும் நான்கு நிலைகளை கடந்தே ஆகவேண்டும். இந்த நிலைகளை காணாதவர்களால் – கடக்காதவர்களால், மாற்றத்தை காண முடியாது. ஆனால் ஒருவர் எவ்வளவு விரைவில் இந்த நான்கு நிலைகளுக்கு ஆட்படுகிறாரோ, அத்தனை விரைவில் அவரது ஏற்றம் தரும் மாற்றம் நிகழ்ந்தே தீரும்.

அந்த நான்கு நிலைகள்:

1. அறிதல் 2. புரிதல் 3. உணர்தல் 4. தெளிதல்.

Read more...
 
நம்மிடம் புகுந்துள்ள அந்நிய அநாச்சாரம்...! மாற்றம் வருமா? Print E-mail
Tuesday, 14 May 2013 18:53

நம்மிடம் புகுந்துள்ள அந்நிய அநாச்சாரம்...! மாற்றம் வருமா?

    சகோ.முஹம்மத் றியாஸ்    

அன்பின் முஸ்லிம் இளைஞர்களே, யுவதிகளே!

அல்லாஹ் மனிதர்களாகிய நம்மை மிகவும் அழகிய படைப்பாக படைத்துள்ளான்.

அல்லாஹ்வை மட்டுமே வணங்குவதற்காக படைக்கப்பட்டுள்ள மனித உடலில் ஆன்மா என்ற ரூஹூம் இரண்டரக் கலந்துள்ளது.

இறைவனை மட்டுமே வணங்கவேண்டிய மனிதனை, இறை நினைப்பை விட்டும் மாற்றி தாங்கள் வணங்கும் ஷைத்தானை வணங்கச்செய்வது எவ்வாறு என்று இந்த ஷைத்தான்கள் சிந்தித்தனர்.

இவர்களின் ஆராய்ச்சிபடி மனிதனின் சிந்தனை, செயலாற்றல் மற்றும் அவனுடைய உடல் இம்மூன்றையும் வசப்படுத்திவிட்டால் அம்மனிதனை தாங்கள் விரும்பியபடியெல்லாம் ஆட்டிப்படைக்கலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இவர்கள் மனித இனத்தின் புனிதத்தை எவ்வாறெல்லாம் அழிவிற்கு உட்படுத்துகின்றனர் என்பதை அறிந்துகொள்ள ஆக்கத்தை இறுதிவரை படியுங்கள்.

Read more...
 
புதைந்த வரலாற்று உண்மைகள் Print E-mail
Thursday, 22 May 2014 05:56

புதைந்த வரலாற்று உண்மைகள்

கலைஞர் அவர்களே உங்கள் சூழ்ச்சியால் முஸ்லிம் சமூகத்தை பிரித்தீர்களே...

1956-ல் மொழிவாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்னால் தமிழ்நாடு, “சென்னை மாகாணம்” என்ற பெயரில் கேரளத்தின் மலபார், ஆந்திராவின் திருப்பதி - கடப்பா, கர்நாடகாவின் சில மாவட்டங்களைக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் 29 தொகுதிகள் முஸ்லிம் வாக்காளர்களுக்கான தனித் தொகுதி யாக இருந்தது. 1946&ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காயிதே மில்லத் தலைமையில் இந்த 29 தொகுதிகளையும் முஸ்லிம் லீக் கைப்பற்றியது. மேலும் 7 மேல் சபை (எம்.எல்.சி) உறுப்பினர்கள் இருந்தனர்.

அரசியல் அதிகாரத்தில் ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள்

அமைப்பாக ஒன்றுதிரண்டு,அரசியல் அதிகாரம் பெரும் வாய்ப்புள்ள முஸ்லிம் லீக்கை மக்கள் ஆதரவை இழக்கச் செய்தார் கலைஞர் கருணாநிதி. அடுத்து முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம்கள் மட்டும் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதிகளை, கலைஞரும், முன்னணி தலைவர்களும் போட்டியிடும் தொகுதியாக மாற்றினார்.

Read more...
 
இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் (ஸுபுஹுக்கு) சீக்கிரம் விழிப்போம்! Print E-mail
Saturday, 11 July 2020 07:18

இரவில் சீக்கிரம் தூங்கி காலையில் (ஸுபுஹுக்கு) சீக்கிரம் விழிப்போம்!

ஒருவர் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்....

"நாய் ஒரே நேரத்தில் 6, 7 குட்டிகளை ஈன்றெடுக்கின்றது ஆனால் ஆடுகளோ ஒரு நேரத்தில் 2 அல்லது 3 குட்டிகளையே ஈன்றெடுக்கின்றது.
ஆயினும் எல்லா இடங்களிலும் ஆடுகளின் எண்ணிக்கை நாய்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருக்கிறதே..?

நாம் ஆடுகளை நாள்தோறும் பலியிடுகிறோம், அறுக்கின்றோம். அப்படி இருந்தும் அவை எப்போதும் நாய்களை விட அதிகமாகவே இருக்கின்றன. ஏன்..?"
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பதில் கூறினார்கள்;

"இதுதான் பரக்கத் (அருள்) ஆகும்."

அதற்கு அவர் "பரக்கத் ஆடுகளிடம் மட்டும் ஏன் இருக்கிறது? நாய்களிடம் ஏன் இருப்பதில்லை..?" எனக் கேட்டார்.

Read more...
 
இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறந்தது ஏன்? Print E-mail
Monday, 23 May 2011 07:21

Related image

 இஸ்லாம் மற்ற மதங்களை விட சிறந்தது ஏன்?

[ எந்த ஒரு மதத்தினை பின்பற்றுவதாக இருந்தாலும் அதன் கோட்பாடுகள் வெறும் இறைவணக்கம், வழிபாடுகள் என்று நின்றுவிடக் கூடாது. அது இந்த சமுதாயத்திற்க்கும் தனி மணித வாழ்க்கைக்கும் வழிகாட்டியாக பயனுள்ளதாக இருத்தல் வேண்டும். இந்த வகையில் இஸ்லாம் மற்ற மதங்களை விட தனித்து விளங்குகிறது.

தீயது தவிர்த்து நல்வழியில் செயல்பட இஸ்லாம் வெறும் இறைவழிபாடோடு நின்றுவிடாமல் எந்த ஒரு தனி மனித வாழ்விலும் குறுக்கிட்டு ஓர் நெறியான வாழ்வை வாழ வழிவகுக்கிறது.]

பொதுவாகவே எல்லா மதங்களும், பின்பற்றுவோர்களை நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே வலியுறுத்துகின்றன. ஏன் ஒருவர் இஸ்லாமை மட்டுமே பின்பற்ற வேண்டும், அப்படியெனில் மற்ற மதங்கள் கூடாதா?

முன்னறே கூறியது போல வாழ்க்கையில் நன்மையான காரியங்களை செய்யவும், தீமையினை தவிர்த்துக் கொள்ளவுமே எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன, இஸ்லாமும் இதையே வலியுறுத்துகின்றது. ஆனால் மற்றவைகளிலிருந்து ஒரு படி மேலே சென்று எவ்வாறு அந்த தீமைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்வது என்கிற வழிமுறைகளையும் இஸ்லாம் எடுத்துரைக்கின்றது. இஸ்லாம் நம்மைப் படைத்த ஏகனின் நேர்வழி வழிகாட்டல் உடையது, எனவே தான் இஸ்லாம் தீனுல் ஃபித்ராஹ் (மனிதனின் இயல்பான மதம்) என்று அழைக்கப்படுவதில் வியப்பில்லை.

Read more...
 
அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை! Print E-mail
Sunday, 13 December 2015 07:06

அமெரிக்காவில் எனது பேத்தி வளரும் முறை!

[ இதே அடிப்படையில் எல்லா தாய்மார்களும், தன் குழந்தைகளை வளர்த்தால் அந்தக் குழந்தைகள் ஒழுக்கமான, இறையச்சம் உள்ளவர்களாக வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி. ]

நான் சமீபத்தில் எனது குடும்பத்தாரை பார்ப்பதற்கு அமெரிக்கா சென்று இரண்டு மாதங்கள் ரெட்மென்ட் (REDMAND) நகரில் தங்கி வந்தேன். அங்கே உழைப்பிற்கு சென்ற முஸ்லிம்கள் அனைவரும் கைநிறைய சம்பாதிக்கிறார்கள். அதுமட்டுமின்றி இறையச்சத்தோடு முறையாக வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த நாட்டில் எனக்கு நான்கு வயதில் மரியம் என்ற பெயருடைய பேத்தி இருக்கிறாள். ஒரு நாள் எனது மகள், தன் பிள்ளைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தது.

எனது பேத்தி மரியம் சாப்பிடுவதில் ஆர்வம் காட்டாமல், தாய் செயலுக்கு இடையூறு செய்தது. உடனே எனது மகள் எனது பேத்தியை உற்சாகப்படுத்த, உனக்கு காக்கா கதை சொல்றேன் எனக் கூறி, உணவு ஊட்டத் தொடங்கினார்.

Read more...
 
ஹஸீனா அம்மா பக்கங்கள் (5) Print E-mail
Saturday, 17 September 2016 07:06

ஹஸீனா அம்மா பக்கங்கள் (5)

எது, எதில் மறைக்கப்பட்டுள்ளது?

பெண்களின் வெட்கம் அவளின் படைப்பிற்குள்,

பெண்களின் வாக்குறுதி அவளின் பரிசுத்தத்தன்மைக்குள்,

பெண்களின் தைரியம் அவளின் பொறுமைக்குள்,

பெண்களின் கண்ணியம் அவளின் மன்னிக்கும் தன்மைக்குள்,

பெண்களின் அழகு அவளின் குணத்திற்குள்,

பெண்களின் ஆற்றல் அவளின் உறுதிக்குள்,

பெண்களின் சிறப்பு அவளின் முன்யோசனைக்குள்,

Read more...
 
நன்றி, பாச உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா? Print E-mail
Friday, 27 August 2010 18:16

நன்றி பாச உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?

தாய் தந்தையரிடத்திலே நன்றி பாசம் காட்டக்கூடிய உணர்ச்சி பிள்ளைகளிடம் உண்டா?

தாய், தந்தையரிடத்திலே நன்றி காட்டக் கூடிய பாச உணர்ச்சி இன்றைக்குக் குடும்பங்களிலே உண்டா?

நாம் பணம் சம்பாதிக்கலாம். ஆனால் அந்தப் பணம் நமக்காக மட்டுமல்ல; பணத்தை நமக்கு மட்டுமே வைத்திருந்தால் என்ன ஆகும்? கவலைதானிருக்கும்

தன்பெண்டு, தன் பிள்ளை, என்று ஒரு குறுகிய வட்டத்திலே நிற்கக் கூடாது. தொல்லுலக மக்கள் எல்லாம் நம்மக்கள் என்று சொல்லி எங்கே சங்கடப்படுகிறார்களோ அவர்களுடைய துயரத்தைப் போக்க வேண்டும்.

உங்களிலே மிகப் பெரும்பாலோர் அறிவீர்கள். நாம் ஒருவரைப் பார்த்து இரங்குவது என்பது வேறு. ஆனால் அவர்களுடைய நிலையிலேயே நம்மை ஆளாக்கிக் கொள்வது, தக்க-வைத்துக்கொள்வது என்பது வேறு.

Read more...
 
அரபு தேசத்தை பிளவு படுத்திய ஐரோப்பிய காலனித்துவம். – ஓர் அரசியல் நோக்கு! Print E-mail
Wednesday, 27 November 2013 07:08

காலனித்துவம் என்பது ஐரோப்பாவின் மையவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். கடந்த காலங்களில் காலனித்துவம் வெற்றி பெருவதற்கு அல்லது முஸ்லீம் ஆட்சியாளர்களின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு ஐரோப்பாவின் ஆட்சி மேலோங்குவதற்குறிய அடிப்படைக் காரணம் முஸ்லீம் சாம்ராஜ்யத்தின் வெளிப்படையான இயலாமை தான் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக முஸ்லிம் நாடுகளை தனது ஆக்கிரமிப்பில் வைத்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தாக்கத்தினால் பல விதமான கலாசார சீர்கேடுகளுக்கும் சிந்தனா ரீதியிலான பிரச்சினைகளுக்கும் முஸ்லீம் நாடுகள் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அது மட்டுமன்றி காலனித்துவத்தில் இருந்து மீண்ட நாடுகள் மீண்டும் ஸ்திரத் தன்மையை அடைய முடியாத அளவுக்கு பின்விளைவுகளை விட்டுச் சென்றதுடன், பொருளாதாரத்தையும் தேவைக்கும் அதிகமாகவே மேற்கு நாடுகள் சூரையாடிச் சென்றன.

முஸ்லீம் உலகின் அறிவியல் பொக்கிஷங்களை திருடியர்கள் கிருத்துவத்தின் திரித்துவ சிந்தனையை முஸ்லீம் நாடுகளில் விதைப்பதற்கு முயன்று தேவாலங்களையும் அமைத்துவிட்டு சென்றார்கள். 

19-ம் நூற்றாண்டு காலப்பகுதியில் நடை பெற்ற காலனித்துவ படையெடுப்புகள் கிருத்தவ மதத்தை பரப்புவதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. மட்டுமன்றி ஐரோப்பிய கலை, கலாசார தினிப்புகளையும் இதன் மூலம் கட்டவிழ்த்துவிட்டார்கள்.

Read more...
 
'ஹராத்தில்' மூழ்கி 'ஹலாலை' தேடுகிறோம்! Print E-mail
Sunday, 07 January 2018 08:55

'ஹராத்தில்' மூழ்கி 'ஹலாலை' தேடுகிறோம்!

நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள்' அல்ல, 'கிங் ஜோக்கர்கள்'!

கஸ்தூரியை சுமந்தவர்கள் குப்ரிய சாக்கடையில் சுகந்தம் தேடி புறண்டதனால் தூய இலட்சியங்கள் நாறிப்போக, இரத்தமும் சதைகளும் உணர்வுகளும் உரிமைகளும் அற்பமென்றாகி அவல ஊர்வலங்கள் இந்த உம்மாவின் வீதிகளில் வலம் வரத் தொடங்கின!

கலங்கரை விளக்குகள் குட்டிச் சுவர்களுக்குள் சுயநல வாழ்க்கை தொடரக் கற்றுக்கொண்டதால் தான் அதற்காகவே காத்திருந்த ஓநாய்கள் சாவகாசமாக முற்றுகையிட்டு எம் நிலங்களிலேயே முகாமிட்டு விஷப்பற்களை பதிக்கத் தொடங்கின!

இன்று ஜாஹிலீய சத்துருக்களின் அரசியல் சதுரங்கத்தில் நாம் ஒன்றும் 'கிங் மேக்கர்கள்' அல்ல, 'கிங் ஜோக்கர்கள்'!

Read more...
 
அழிவு தரும் தெளிவு Print E-mail
Saturday, 20 August 2011 12:00

 

 அழிவு தரும் தெளிவு  

மனிதன் எப்போதும் அபாய நேர்வுக்குட்பட்டவன்;. ஆபத்துக்களை எதிர்நோக்கியிருப்பவன். யுத்தங்கள், கலவரங்கள், முதலானவற்றை அவன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இடி, மின்னல், தீ, வெள்ளம், புவி நடுக்கம், எரி மலை, மண்சரிவு, கடல் கெந்தளிப்பு, முதலான இயற்கை அனர்த்தங்களுக்கு முகம்கொடுக்கும் நிலையும் அவனுக்கு உருவாவதுண்டு.

கொடிய மிருகங்கள், விஷ ஜந்துக்களினாலும் மனிதனுக்கு ஆபத்துக்கள் விளைவதுண்டு. பகைமை கொண்டவர்களின் சதிகள், சூழ்ச்சிகள் முதலானவையும் அவனைச் சூழ்ந்துஉள்ளன. இவற்றுக்கு அப்பால் எண்ணிலடங்கா நோய்கள் மனினை குரிவைத்துள்ளன. எல்லா ஆபத்துக்கலிருந்தும் தப்பிப்பிழைக்கும் ஒரு மனிதன் இறுதியில் முதுமை என்ற ஆபத்தை எதிர் கொண்டு மரணத்தைத் தழுவ நேரிடுகின்றது.

இவ்வாறு ஆபத்துக்கள் நிறைந்த இவ்வுலகில் மனிதன் எப்படி தன்னைக் கப்பாற்றிக் கொள்வது? இக்கேள்விக்கு விடை காண விரும்பாத எவரும் இருக்கமுடியது.

Read more...
 
முகங்கள் சொல்லும் பாடம் Print E-mail
Monday, 28 February 2011 13:49

முகங்கள் சொல்லும் பாடம்

     அபூ பாஸிம்       

‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ - இது பழமொழி. அகம், முகம் இரண்டுமே எழுத்திலும், எண்ணத்திலும் ஒன்றிருப்பது ஆச்சரியத்தைத் தருகிறது. அகத்தின் எண்ணவோட்டங்களை முகம் மொழிபெயர்க்கிறது. எனவே தான் முகம் பார்த்து மனிதனை படம்பிடித்துக் காட்டுகிற 'FACE READING' என்கிற கலை சாத்தியமாகிறது.

உள்ளத்தை முகம் படம்பிடித்துக் காட்டுகிறபோது அதற்கு முகத்தின் ஒவ்வொரு உருப்பும் உதவுகிறது. நேசர்களைக்கண்டு உள்ளம் மகிழும்போது முகத்திலுள்ள கண்கள் மலர்கிறது. சமயத்தில் கண்களே பேசுகிறது. பேசும் விழிகள் கேள்வி பட்டதில்லையா?

வெறுப்பின் உச்சத்தில் நாசி விடைக்கிறது. மகிழ்ச்சியைக் கோடிட்டுக் காட்டும் போதும் இளக்காரமாக நினைக்கும் போதும் இதழ்கள் மிக இலேசாக விரிகிறது. இளநகை, குறுநகை என்றெல்லாம் சொல்வதில்லையா?

நாணத்தின்போது கன்னம் சிவக்கிறது. ஆப்பிள் கன்னம் என வர்ணிப்பதில்லையா? கோபப்படும்போது நரம்புகள் புடைத்து தசைகள் முடித்து முகமே கொடூரமாகி விடுகிறது. மிருகம் மாதிரி கோபத்தில் சிவந்துவிட்டான் எனச் சொல்வதில்லையா?

Read more...
 
மஹஷருக்கு அஞ்சியாவது ஒற்றுமையைப் பேணுவோம் Print E-mail
Wednesday, 07 April 2010 07:11

Image result for al qur'an 3:103

மஹஷருக்கு அஞ்சியாவது ஒற்றுமையைப் பேணுவோம்

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள், பிரிந்து விடாதீர்கள். (திருக்குர்ஆன் 3:103)

இதன் விளக்கம் என்ன தெரியுமா? எல்லோரும் ஒரு அணியில் நின்று ஒரு கொள்கையை இறுக்கி பிடித்து சருகிவிடாமல் ஒற்றுமையாக இருப்ப்தே, உலகப் பொதுமறை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி சுன்னத் ஆகிய இரண்டுதான்அல்லாஹ்வின் கையிறாகும்,

''லா இலாஹா இல்லல்லாஹு முஹம்மதுர் ரசூலில்லாஹி''  (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)

(வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதர் ஆவார்கள்)

எல்லோரும் மேற்கண்ட ஓரிரை கொள்கையை பற்றிப் பிடிக்க அல்லாஹ் நமக்கு தனது திருக்குர்ஆன் எனும் வார்த்தைகள் மூலம் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறான், ஆனால் நாம் அவ்வாறு ஒன்றுபட்டு நிற்கிறோமா? இல்லவே இல்லை.

Read more...
 
நாம் உண்மையான முஃமின்களா? Print E-mail
Thursday, 15 April 2010 09:58

கேள்வி:

ஒவ்வொரு முஸ்லிமும் பெரும்பாலும் தான் ஒரு முஃமின் (இறை நம்பிக்கையாளர்) என்று கருதியே இறைவன் மீது நம்பிக்கை கொள்கிறார். ஆனால் நமக்கு முஃமின் என்பதன் பொருள் தெரியுமா?

நாம் முஃமின்களாக இருந்தால், யூதர்களும், கிறிஸ்தவர்களும் மற்றும் ஹிந்துக்களும் நம்மை விட எண்ணிக்கையில் அதிகமாகவும், தொழில் நுட்பத்தில் முன்னேறியவர்களாகவும் இருக்கிறார்களே!!! இறைவனைப் பற்றிய சிந்தனைகளை விட அவர்களுடைய எண்ணிக்கை மற்றும், வலிமையைப் பற்றிய சிந்தனை தான் நமது எண்ணத்தை ஆட்டிப்படைக்கிறதே!

அவர்கள் நம்மைவிட விலிமை மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை நாம் வெற்றி கொள்ள முடியாது என்ற சிந்தனை நமக்கு மேலோங்குகிறதே!! இந்நிலையில், நாம் வல்லமை மிக்க இறைவனின் நம்பிக்கயாளர்கள் தானா?

Read more...
 
அல்லாஹ்வின் அழைப்பு Print E-mail
Monday, 07 September 2009 17:25

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நிச்சயமாக பயபக்தியுடையவர்கள், (சுவர்க்கத்தின்) சோலைகளிலும், நீரூற்றுகளிலும் இருப்பார்கள். (அல்குர்ஆன்-51:15)

அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள் நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர். (அல்குர்ஆன்-51:16)

அவர்கள் இரவில் மிகவும் சொற்ப நேரமேயன்றித் தூங்கமாட்டார்கள். (அல்குர்ஆன்-51:17)

அவர்கள் விடியற் காலங்களில் (பிரார்த்தனைகளின் போது இறைவனிடம்) மன்னிப்புக் கோரிக் கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன்-51:18)

நீங்கள் இதனை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் போதுமான அளவு வசதி வாய்ப்பும் ஆரோக்கியமுடைய இளைஞர். ஒரு நாள் நீங்கள் உங்கள் வீட்டை நோக்கி செல்கிறீர்கள். செல்லும் வழியில் சாலையோரத்தில் ஒரு மனிதரை காண்கிறீர்கள். அவரோ பார்ப்பதற்கு மெலிந்து நோய் வாய்ப்பட்டவராக சாப்பிட்டு பல நாட்கள் ஆனவராக தென்படுகிறார். ஆடைகளும் உடலும் அழுக்கடைந்தவராக காணப்படுகிறார். இக்காட்சியை கண்டவுடன் இந்த மனிதரை விட உங்களை சிறப்பாக்கிவைத்த அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகின்றீர்கள்.

Read more...
 
More Articles...
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 1 of 108

99 Names Of Allaah

-         310 300nd

Links

Links 2

Best Article