“தக்வா” PDF Print E-mail
Sunday, 30 July 2017 17:52
Share

"தக்வா"

அரபியல்லாத வேறு மொழிகளில் தக்வா என்பதற்கு இதுதான் -அதன் நேரடி மொழி பெயர்ப்பென்று மட்டுப்படுத்தி- வரையறை செய்யவியலாத – விரிந்த பொருளையும் விளகத்தையும், ஆழமான வாழ்க்கைத் தத்துவத்தையும் உள்ளடக்கிய ஒரு வார்த்தை தான் “தக்வா”.

இறையச்சம் என்ற தமிழ் மொழி பெயர்ப்பின் மூலம் இதன் உண்மைப் பொருனை முழுமையாக உணர்த்திட முடியாது. ஹதீது வழி வரும் விளக்கம் ஒன்றின் மூலம் இதன் உண்மைப் பொருளை ஓரளவாவது உணர முடியும்.

ஓர் தனிமையான, இனிய சூழ்நிலை அங்கு இருவரை தவிர வேறெவருமில்லை. வாலிய முறுக்கோடு போட்டி போடும் ஆடவனும், பெண்ணும், மணமாகாத அந்த வாலிபனைத் தகாத உறவின் மூலம் தன் காம இச்சையைத் தனித்தக் கொள்ள டுக்கைக்கழைக்கிறாள், மங்கையவள்!

மறுக்கின்றான், அந்த வாலிபன்! (பொன்னான வாய்ப்பை பாழடித்த பேடி என்று இதையறிந்தால் இன்றைய உலகம் அவனை இகழும். என்றாலும், “ஏன் மறுத்தான் அந்த வாலிபன்..?”

“இந்தத் தகாத உறவை இறைவன் தடுத்திருக்கிறான். ஆனால் இதிலிருந்து என்னை நான் தடுத்துக் கொள்கிறேன். அந்த தகாத உறவின் மூலம் எத்தனை நன்மைகள், அனுகூலங்கள் ஏற்பட்டாலும், அது எனக்கும் தேவையில்லை. மாறாக அந்த தகாத உறவில் ஈடுபடாததற்காக எத்தனை இன்னல்கள் ஏற்படினும், அவை அத்தனையும் சந்திக்கவும் தயார்” என்ற உறுதியை ஒருவன் பெற்றுவிட்டால் – அவன்தான் தக்வாவிற்கு உண்மையான வாரிசு.

சொல்ல எளிதான, கேட்க இனிமையான, அருமையான வாழ்க்கைத் தத்துவந்தானிது! இப்படிப்பட்ட கட்டுத் திட்டத்தோடு நடைமுறை வாழ்வில் மனிதன் ஒழுக முடியுமா..?

நாகரீக உலகில் ஸஅறிவியலின் உச்சத்தை எட்டிப்பிடித்துக் கொண்டிருக்கும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அநாகரீக வாழ்க்கைக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு (அய்யாமுல் ஜாஹிலிய)அறியாமை காலத்திற்குள் தஞ்சமடைந்து கொண்டிருக்கும் நம்மில் பலர் இப்படி வினவுகின்றனர்.

ஆம் அப்படி மனிதன் வாழ்ந்து காட்ட முடியும் என்பதை இறைமறை தெளிவுறக் காட்டுகிறது.

- an najaath