Home இஸ்லாம் கட்டுரைகள் தேவை இறையச்சம்!
தேவை இறையச்சம்! PDF Print E-mail
Saturday, 17 June 2017 22:27
Share

தேவை இறையச்சம்!

     நீடூர் எம். பைஜூர் ஹாதி, துபை, அமீரகம்    

"அவன் தான் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கினான்; அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரைவிடப் பதவிகளில் உயர்த்தினான் - நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன்; மிக்க கருணையுடயவன்" (ஆதாரம்: அல்குர் ஆன் 6 :165)

நாட்டின் தலைவர்கள் முதல் கிராம தலைவர்கள் வரை பெருமையாக நினைக்கும் பதவியை பற்றி இறைவன் மிக தெளிவாக சொல்லிவிட்டான். இன்று உலகில் நிகழ்ந்துக் கொண்டிருக்கும் குழப்பங்களுக்கு மூலக்காரணமாக இருப்பதற்கு பதவி ஆசையும், ஆதிக்க மனப்பான்மையே காரணமென்றால் மிகையாகாது. அமெரிக்கா லட்சக்கணக்கான அப்பாவி முஸ்லிம்களை கொன்றொழிப்பதற்கு ஆதிக்க மனப்பான்மையே மூலக்காரணமாக இருக்கிறது.

இறைவன் வழங்கிய பதவிகளை பெருமையாகவும், ஆடம்பரமாகவும் நினைத்து சரியான் முறையில் அதனை பயன்படுத்தாத காரணத்தினால் இன்று இஸ்லாமிய சமுதாயம் பல துயரங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. பெருமை என்ற சுவடே தெரியாமல் பெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லவம் அவர்களின் உம்மத்தாகிய நம்மவர்கள் சாதாரண பதவியை வைத்துக்கொண்டே ஆடும் ஆட்டங்களையும், அடிக்கும் கொட்டங்களையும் பல பக்கங்களில் கூறலாம்.

¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்கள் உருவாக்கி நம் கலீபாக்கள் கட்டிக்காத்த வளைகுடா பிரதேசம் இன்றோ சில குடும்பங்ளின் கையில் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் தலைவணங்காத சமுதாயமாகிய நம் இஸ்லாமிய சமுதாயத்தைச் சார்ந்த அரபு ஆட்சியாளர்கள் அமெரிக்காவிற்கு சேவை செய்வதையே தலையாய பணியாக செய்துக்கொண்டிருக்கிறார்கள். இறைவன் வழங்கிய ஆட்சியாளர் என்ற பதவியை ஆதிக்கத்திற்கும், ஆடம்பரத்திற்குமே பயன் படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள்தான் தங்களின் பதவிகளை வீணடிக்கிறார்கள் என்றால் ஊர் தலைவர்களும் தங்களின் கடமையை உணராமல் இறைகோபத்திற்கும், மக்களின் வெறுப்பிற்கும் ஆளாகிக்கொண்டிருப்பதை நாம் காண்கிறோம்.

முஸ்லிம்கள்

கல்வியறிவில் பின்தங்கியிருப்பது,

வரதட்சனை, 

ஒற்றுமையின்மை,

ஆதிக்க சக்திகளின் தாக்குதல்,

அரசு வேலைவாய்ப்புகளில் புறக்கணிப்பு,

வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர் நீக்கப்படுதல்,

ஊர் ஜமாத்திற்கு உட்பட்ட இடத்தில் அரசே மதுக்கடை நிறுவுதல்,

கலாச்சார சீரழிவு,

அதிகரிக்கும் தலாக்,

பாகப்பிரிவினை

என பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாமல் அரசியல் கைகூலிகளுக்கு கோஷம் போடுவதிலும், இஸ்லாமிய விரோதிகளுக்கு விருந்து அளிப்பதிலும், வெட்டிக்கூட்டம் போட்டு வீண் பேச்சு பேசுவதிலும், பதவியை காட்டி வலியோரை பயமுறுத்துவதிலும் கவனம் செலுத்தப்படுவதை பார்க்கும் போது நம் முன்னோர்கள் நமககளித்த ஜமாத் என்ற ஒரு அருமையான அமைப்பு முறையே மதிப்பிழந்து விடுமோ என்று அஞ்சத்தோன்றுகிறது.

 சந்திக்கும் பிரச்சனைகளான வறுமை,

இறைவன் ஒருவருக்கு பதவியை வழங்கியிருக்கிறான் என்றால் அது அவரை சோதிப்பதற்கே என தெளிவாக குர்ஆன் கூறிய பின்னரும் பதவியை வைத்து பெருமை பேசுவதும், வியாபாரம் பேசுவதும், மக்களை அச்சுறுத்த நினைப்பதும், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் சாதகமாக நடந்துக்கொள்வதும், மக்களிடம் ஆதிக்க மனப்பான்மையுடன் நடந்துக்கொள்வதும், அநீதிக்கு துனணப்போவதும் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும், மறுமையில் அவர்களுக்கு தக்க தன்டனை இருக்கிறது என்பதை நாம் மறக்க வேண்டாம்.

இதுப்பற்றி இறைவன்

"மேலும், நீர் பூமியில் பெருமையாய் நடக்க வேண்டாம்; (ஏனென்றால்) நிச்சயமாக நீர் பூமியைப் பிளந்துவிட முடியாது மலையின் உச்சி(யளவு)க்கு உயர்ந்து விடவும் முடியாது" (ஆதாரம்: அல்குர் ஆன் 17:37)

"(பெருமையோடு) உன் முகத்தை மனிதர்களை விட்டும் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமையாகவும் நடக்காதே! அகப்பெருமைக்காரர், ஆணவங் கொண்டோர் எவரையும் நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான் (ஆதாரம்: அல்குர் ஆன் 31:18)

அந்த மறுமையின் வீட்டை, இப்பூமியில் (தங்களைப்) பெருமைப்படுத்திக் கொள்ளவும், குழப்பத்தை உண்டாக்கவும் விரும்பாதிருப்பவர்களுக்கே நாம் சொந்தமாக்கி வைப்போம்; ஏனெனில், பயபக்தியுடையவர்களுக்கே (மேலான) முடிவு உண்டு" (ஆதாரம்: அல்குர் ஆன் 28:83)

என்று மிக தெளிவாகக் சொல்லிவிட்டான். இறைவன் நமக்கு பதவிப்பொறுப்பினை அளித்திருக்கிறான் என்றால் நாம் அதனை அமானிதமாக நினைத்து அதற்குரிய கடமையினை சரிவர நிறைவேற்றுவதில் தான் கவனம் செலுத்த வேண்டுமே தவிர மீண்டும் அந்த பதவியை அடைவதற்கு பதவியை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனக்கு பதவி கிடைத்துவிட்டதனாலையே நாம் மற்ற மனிதர்களைவிட உயர்ந்த அந்தஸ்த்தில் இருப்பதாக நினைத்து விட்டோமேயானால் அப்பொழுதே நாம் தவறான திசையை நோக்கி பயணம் செய்ய துவங்கிவிட்டோம் என்றுதான் அர்த்தம்.

இன்று நம் இஸ்லாமிய சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு ஆளாகிறதென்றால் அதற்கு ஒரு வகையில் காரணமக இருப்பது அநியாயமாகவும், அக்கிரமமாகவும், அடக்குமுறை மனப்பான்மையுடனும், ஆதிக்க எண்ணத்துடனும் நிர்வாகம் புரிவதும், மார்க்கத்தினை சற்றும் அரிந்திடாத, அரிந்துக்கொள்ள சற்றும் முயற்சி செய்யாதவர்களின் கைகளுக்கு நிர்வாகம் சென்றதே.

உலக லாபத்தையே நோக்கமாகக் கொண்டு செயல்படும் அரசியல் அடிவருடிகளுக்கும், கைகூலிகளுக்கும் கூஜா தூக்குவதையும், ஜால்ரா போடுவதையும் கடமையாக நினைத்து செயல் படுவதை பதவியிருப்பவர்கள் என்று விடுகிறார்களோ அன்றுமுதல் நம் சமுதாயம் விழித்துக்கொண்டு விட்டது என நாம் என்னலாம். பதவியை தக்கவைத்துக்கொள்வதற்காக இஸ்லாம் காட்டித்தராத வழிமுறைகள் அனைத்தையும் செய்ய நம் தலைவர்கள்(?) தயங்குவதில்லை. நல்லோர்களை ஓரங்கட்டுவதும், புறக்கணிப்பதும், அதே பதவியை வைத்து தனக்கும், தன் அடிவருடிகளுக்கும் ஏதோ ஒரு வகையில் லாபம் பெறுவதற்காக இறைவன் வழங்கிய பதவியினை சரிவர பயன்படுத்தாமல் இருப்பதும் நம் சமுதாயம் சந்திக்கும் பிரச்சனைகளு ஒரு விதத்தில் துணைபோகிறது.

அதுபோல் பதவியிலுருப்பவர்கள் மக்களிடம் எந்த வகையிலும் பாகுபாடு பாராமல் நீதியுடனும், நியாயமாகவும் நடக்க வேண்டும் என்று இறைவன் மிக தெளிவாக கூறியப்பிறகும் நாம் பதவியில் இருக்கிறோம் என்ற தோனியில் வசதியற்றோருக்கும், வழியோருக்கும் நீதி வழங்க மறுப்பதும் இறைவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுப்பற்றி இறைவன் உலக பொதுமறையாம் திருமறையான குர்ஆனில்

"முஃமின்களே! நீங்கள் நீதியின்மீது நிலைத்திருப்பவர்களாகவும், உங்களுக்கோ அல்லது (உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள்;. (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வர்களாக இருந்தாலும் ஏழைகளாக இருந்தாலும் (உண்மையான சாட்சியம் கூறுங்கள்). ஏனெனில் அல்லாஹ் அவ்விருவரையும் காப்பதற்கு அருகதையுடையவன்;. எனவே நியாயம் வழங்குவதில் மன இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள்;. மேலும் நீங்கள் மாற்றிக் கூறினாலும் அல்லது (சாட்சி கூறுவதைப்) புறக்கணித்தாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதையெல்லாம் நன்கு அறிந்தவனாகவே இருக்கின்றான்" (ஆதாரம்: அல்குர் ஆன் 4:135)

"முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள்;. இதுவே (தக்வாவுக்கு) - பயபக்திக்கு மிக நெருக்கமாகும்;. அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான்" என்று கூறுகிறான். (ஆதாரம்: அல்குர் ஆன் 5:8)

"அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை" ஆதாரம்: நூல் - புகாரி

நிர்வாகம் புரியும் தலைவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், உத்தரவுகளுக்கும் நாம் கட்டுப்படவேண்டும். தலைவர்களை நாம் மதித்து நடக்க வேண்டும். தலைவர்களை மதித்து நடப்பவர் என்னை மதித்தவர் போலாவார் என ஏகனின் தூதரான ¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்

"எனக்குக் கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவராவார். எனக்கு மாறு செய்கிறவர் அல்லாஹ்வுக்கு மாறு செய்தவராவார். தலைவருக்குக் கட்டுப்பட்டவர் எனக்குக் கட்டுப்பட்டவராவார். தலைவருக்கு மாறு செய்கிறவர் எனக்கு மாறு செய்தவராவார்........" (ஆதாரம்: நூல் - புகாரி)

இதனைத்தொடந்து அத்தகைய தலைவர்கள் எடுக்கும் முடிவுகளும், இடும் உத்தரவுகளும் எந்த அடிப்படையில் இருக்க வேண்டும் எனவும் ¿À¢¸û ¿¡Â¸õ …øÄøÄ¡†¤ «¨Ä†¢ Å…øÄõ அவர்கள் அறிவிக்காமலில்லை. மேற்கூரிய ஹதீஸின் அடுத்த பகுதியில்

"(...அவர்(தலைவர்)(தன் தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறை(யச்ச) உணர்வைக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டு நீதியுடன் நடந்தால் அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதுவல்லாத(தீய)வற்றை அவர் கட்டளையிட்டால், அதனால் ஏற்படும் பாவம் அவரின் மீது(ம்) சாரும்" (ஆதாரம்: நூல் - புகாரி 

இறைவன் நமக்கு வழங்கிய பதவியை இதுவரை நாம் தவறான வழிகளில் பயன்படுத்தி இருந்தால் அதற்காக வேண்டி மனிதன் செய்யும் தவறுகளை மன்னிக்க சிறிதும் தயங்காத எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் தூஆ செய்வோம். மன்னிப்பதில் எல்லாம் வல்ல அல்லாஹ் மிகைத்தோனே.

எவர்கள் பாவமன்னிப்புத் தேடி(தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்.) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன். (ஆதாரம்: அல்குர் ஆன் 2:160)

www.nidur.info