Home செய்திகள் இந்தியா ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்
ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் PDF Print E-mail
Tuesday, 06 December 2016 09:43
Share

ஆளுமை திறன் கொண்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா  காலமானார்

தன்னைப்பற்றி ஜெயலலிதா:

''என் தந்தையை 3 வயது இருக்கும் பொழுதே இழந்து விட்டேன்.

22 வயதில் தாயையும் இழந்துவிட்டேன்.

என் குடும்பத்தில் எவரும் 60 வயதை எட்டியதில்லை.

நான் எட்டிவிட்டேன் என்பது இறைவனின் அருள்.

இனி எஞ்சிய வாழ்நாள் என்பது எனக்கான கூடுதல் அவகாசம்.

அதை மக்களுக்காகவே அர்ப்பணிப்பேன்.'' ( பிப்ரவரி 24 2008 ) -Dr.J.Jayalalithaa

அவரைப்பற்றி....

மோடியா? இந்த லேடியா? என சவால் விட்டு பாஜக'வை தமிழகத்தில் கால் பதிக்கவிடாமல் பார்த்துக் கொண்டவர்!

விஸ்வரூபம் என்ற மதகலவரத்தை தூண்டும் படமாகட்டும்,

கத்தி என்ற கலவரத்தை தூண்டும் படமாகட்டும்,

உண்மைக்கு புறம்பான ஆம்பூர் கலவரமாகட்டும்,

ஒய்_ஜீ மகே்திரன் போ(எ)ன்ற ஓணாய் உளறிய சுவாதி படுகொலை வழக்காகட்டும்,

இன்னும் இதுபோன்ற பல இக்கட்டான கால கட்டத்தில் #சிறுபாண்மை மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, உண்மைக்கு உறுதுனையாக இருந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆளுமை திறன் கொண்ட சிறந்த தமிழகத்தின் முதல்வர்.

சென்னை வியாசர்பாடி இந்திரா நகரில் வாழும் தினக்கூலிகள் அவர்கள்..! கருப்புச்சாமி லீலாவதி தம்பதிகள்..!

ஒண்டிக்கொள்ள வீடும் கிடையாது. பூட்டிய கடைகள் வெளியே படுத்துக் கொள்வார்கள். பகலில் பேப்பர் பொறுக்கி சிறு வருமானம் பார்ப்பார்கள்ஸ!

மகன் திருமணம் ஆனதும் அம்மா, அப்பாவை விரட்டி விட்டான். அன்று முதல் அம்மா உணவகம் தான் இவர்களுக்கு கதி..!

யார் உணவு தந்தாலும் வாங்கும் பழக்கம் இல்லை இவர்களுக்கு..! எதுக்கு..அந்த மவராசி மூணு வேளையும் சுடச்சுட ஆக்கிப் போடுது எங்களுக்கு என்ன குறை..என்று கூறுவார்கள்.

நேற்று முதல்வருக்கு மாரடைப்பு என்றதும் இவர்கள் நடு ரோட்டில் உட்கார்ந்து கதறி அழ ஆரம்ம்பித்து விட்டனர்.

“தாயே..இனிமே எங்களுக்கு யாரு சோறு போடுவா..” என்றபடி விடாமல் புலம்பி அழுது கொண்டே இருகின்றனர்.

வியாசர்பாடி மக்கள் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் இவர்கள் கேட்பதாக இல்லை..!!!! யார் வந்து இவர்களை தேற்றுவது.

முதல்வர் தான் நலம் பெற்று வந்து இவர்களைப் போல அனாதைகளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும்.. - Abdul Salam

அறிவாற்றாலும் துணிச்சலும் மனவலிமையும் நிறைந்தவர்;

-கட்டுக்கோப்பாக அரசியல் கட்சியை நடத்துவதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்.

-சங்கராச்சாரியாரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைநாட்டியவர். -Abdul Salam

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை

தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் காலமான செய்தி அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரை இழந்து வாடும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் உட்பட தமிழக மக்ககள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

செல்வி ஜெயலலிதா அவர்கள் அறிவாற்றலும் மதிநுட்பமும் நிறைந்திருந்த அரசியல் தலைவராக விளங்கினார். தனக்கு சரியென தெரிந்ததை மிகுந்த துணிச்சலுடன் நடைமுறைப்படுத்தும் மன வலிமையுடையவராக அவர் திகழ்ந்தார். கட்டுக்கோப்புடன் ஒரு அரசியல் கட்சியை நடத்துவதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அவர் தலைமை தாங்கிய அஇஅதிமுக விளங்கியது. பல்வேறு சோதனைகளையும் வேதனைகளையும் தனது அரசியல் வாழ்வில் சந்தித்தாலும் மிகுந்த துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றிப் பெற்ற ஒரு இரும்பு மங்கையாக விளங்கியவர் காலஞ்சென்ற தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

தமிழகத்தில் நிலவும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை காப்பாற்ற அரசியலமைப்புச் சட்டத்தின் 9வது அட்டவணையில் அதனை இடம் பெற வைத்து சமூக நீதியை தக்கவைத்தவர் செல்வி ஜெயலலிதா அவர்கள். இந்தி திணிப்பு, நீட் போன்ற தொழில் கல்விக்கு நுழைவுத் தேர்வு, மாநில அரசின் உரிமைகளை பறிக்கும் மத்திய சட்டங்கள் முதலியவற்றை உறுதியுடன் எதிர்த்து தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலித்தவர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள்.

செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களுடன் 1999 முதல் அரசியல் ரீதியாக பழகும் வாய்ப்பு கிடைத்தது. தமிழகத்தில் சில முக்கிய நகரங்களில் வெடிக்காத

குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு காவல்துறை அப்பாவி முஸ்லிம்களை கைதுச் செய்து வருவது தொடர்பாக அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த செல்வி ஜெ. ஜெயலலிதாவை முதன் முறையாக அவரது போயஸ் இல்லத்தில் சந்தித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் முறையிட்டோம். அப்போது துணிச்சலாக அவர் வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக காவல்துறையின் தீவிர விசாரணைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.

1999 ஜீலை 4 அன்று தமிழ்நாடு முஸ்லிம் முனனேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை சீரணி அரங்கில் நடைபெற்ற முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில் பங்குக் கொள்ள அழைத்த போது உடனடியாக அவர் மாநாட்டிற்கு வருகை தர இசைவு தந்தார். மாநாட்டில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்களிடையே அவர் ஆற்றிய உரையில்

"இஸ்லாமிய சகோதரர்களுக்கு நான் ஒரு உத்தரவாதம் தருகிறேன். நான் முன்பு ஒரு தவறு செய்து விட்டேன். நான் செய்த தவறை ஒப்புக் கொள்ளும் துணிச்சல், தைரியம் எனக்கு உண்டு. அந்த தவறுக்குப் பரிசாரமாகத் தான் பிஜேபி ஆட்சியை நானே கவிழ்த்தேன் இனி ஒரு போதும் அஇஅதிமுக பிஜேபியுடன் தொடர்பே வைத்துக் கொள்ளாது. என்றென்றும் கடைசி வரைக்கும் இஸ்லாமிய சமுதாய மக்களக்குப் பாதுகாப்பு அரணாக இருப்பேன். உங்கள் கஷ்ட நஷ்டங்களில் பங்குகொள்வேன். உங்கள் குடும்பத்தில் ஒருத்தியாக இருப்பேன்." என்று உரையாற்றினார்.

இதன் பிறகு தமிழகத்தில் பாஜகவிற்கு அரசியல் ரீதியான அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பதற்கு செல்வி ஜெயலலிதா பெரிதும் காரணமாக இருந்து வந்தார். அவ்வப்போது சங் பரிவாரைச் சேர்ந்த சில அதிதீவிரவாதிகள் தமிழகத்தில் நிலவும் சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் செயல்படும் போது துணிச்சலாக அவர்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்ததையும் இங்கே நினைவுப்படுத்த விரும்புகிறேன். தவறு செய்தவர் சங்கராச்சாரியாராக இருந்தாலும் எவ்வித சமரசமும் இல்லாமல் அவரை கைதுச் செய்து சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை அவர் நிலைநாட்டியதும் அவரது 15 ஆண்டு கால ஆட்சியின் மணிமகுடங்களில் ஒன்று. அவரது இந்த நிலைப்பாட்டை எதிர்காலத்திலும் அஇஅதிமுகவினர் உறுதியுடன் கடைபிடிப்பர் என்று நம்புகிறேன்.

2011ல் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு உரிய அங்கீகாரம் அளித்து 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மை மக்களை பிரதிதிநிதித்துவப் படுத்தும் கட்சி சொந்த சின்னத்தில் இரண்டு இடங்களில் வெற்றிப் பெற செல்வி ஜெயலலிதா அவர்கள் உறுதுணையாக இருந்தார் என்பதை இங்கே நன்றியுடன் நினைவுகூர்கிறேன்.

வடநாட்டில் இருப்பது போல் முஸ்லிம்களை அழைத்து தனது செலவில் ரமலான் நோன்பு திறப்பு விழாக்களை நடத்தி தமிழகத்தில் ஒரு புதிய வழிமுறையை ஏற்படுத்தியவர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

14வது சட்டமன்றத்தின் கடைசி கூட்டத் தொடரில் அவர் உணர்ச்சிகரமாக நான் மறைந்த பிறகும் அஇஅதிமுக நிலைத்து நிற்கும் என்று குறிப்பிட்டார். 3வயதில் தந்தையும் 22 வயதில் தாயையும் இழந்து வாழ்வில் கடுமையான சோதனைகளை எதிர்கொண்டு கோடிக்கணக்கான தமிழக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்ற செல்வி ஜெ. ஜெயலலிதாவின் மறைவு ஒத்துமொத்த தமிழக மக்களுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அனைவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை இழந்து வாடும் தமிழக மக்களுக்கு இறைவன் அழகிய பொறுமையை அளிப்பதற்கு பிரார்த்திக்கிறேன்.

(ஒப்பம்) எம். எச். ஜவாஹிருல்லா
தலைவர், மனிதநேய மக்கள் கட்சி