Home கட்டுரைகள் M.A. முஹம்மது அலீ சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது!
சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது! PDF Print E-mail
Thursday, 23 June 2016 21:29
Share

சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது!

[ இன்றைய முஸ்லிம் தனக்கு விருப்பமான ஆலிம்களை பின்பற்றும்போது மற்ற ஆலிம்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றான். இஸ்லாம் மிக மிக எளிதானது, எளிமையானது. ஆனால் ஆலிம்கள் தங்களது மேதாவிதனத்தை காண்பிப்பதற்காக இஸ்லாத்தை ஒரு மதமாகவே பார்க்கிறார்களே ஒழிய மார்க்கமாக பார்க்கவே இல்லை. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி.

ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்போகிறது. எதிர் காலத்தில் தவ்ஹீத் ஜாமஅத்தா? பரேலவைகளா? என்னும் இரண்டு மட்டுமே இருக்கப்போகிறது. அந்த நேரத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தில் இருக்கும் பல உண்மையான ஆலிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வருவதைத்தவிர வேறு வழி இருக்காது. நான் சொல்வது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். ஆனால் எதார்த்தமான உண்மை அதுதான்.

சுன்னத் வல் ஜமாஅத்துக்கு மிகப்பெரும் எதிரியே பரேலவிஸம் தான். ஆனால் இன்று P.J. ஐ எதிர்க்கப்போய் தங்களது சுய அடையாளத்தையே அது இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஆலிம்களின் அலட்சியப்போக்குத்தான். கருத்தை கருத்தால் வெல்ல இயலாமல் திட்டுவதும், சபிப்பதும், இதுபோன்று முர்த்தத் ஃபத்வாக்களை அர்த்தமற்ற முறையில் அள்ளி வீசுவதும் இன்று அவர்களை மக்களுக்கு முன் மதிப்பிழக்கச் செய்துவிட்டது. இனி பரேலவிகளின் முதுகில்தான் அவர்கள் சவாரி செய்ய முடியும் எனும் நிலைக்கு அவர்களை அவர்களே தள்ளிவிட்டுக்கொண்டுள்ளார்கள்...

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் முன்னோர்கள் மட்டுமே அறிவிற் சிறந்தவர்கள் என்ற போதனை பொய்யாகவே திணிக்கப்படுகிறது. நிச்சயமாக நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைவிட நாம் வாழ்கின்ற இக்காலத்தில்தான் கல்வி ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளிப்பருகத் தெரியாதவர்கள் தான் வாழும் காலத்தைப்பற்றி குறை சொல்லியே தங்களை இக்காலத்தில் வாழத்தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கின்றனர்.

இன்றைய தலைமுறை மக்களை  அறிவில் குறைந்தவர்களாக   நீங்கள் கருதுகிறீர்கள். நான் அவர்களை அறிவாளிகளாகப் பார்க்கிறேன். இதுதான் நம் இருவருக்கும் உள்ள வித்தியாசமாக எனக்குப் படுகிறது. ]

சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்க முயல்கிறது!

[ ஒரு ஆலிமுக்கும்,  எமக்கும் முக நூலில் நடந்த கருத்துப் பரிவர்த்தனையே இவ்வாக்கம் ]

Bahurudeen Shaik Mohammed : நீங்கள் நினைக்கின்ற மாதிரி ஆலீம்கள் விவரமில்லாமலில்லை உங்களுக்கு இஸ்லாமிய கல்வியைப் பற்றிய புரிதலில் தெளிவில்லாமல் இவ்வாறு கருத்திட்டு இருக்கிறீர்கள் இன்றைய குழப்பத்திற்கு காரணமாக அங்கொன்றும் இங்கொன்றமாக இன்டர்நெட்டைப் பார்த்து தீர ஆராயாமல் விளங்கிக் கொள்வதே

M A Mohamed Ali : அஸ்ஸலாமு அலைக்கும்... மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் விழிப்புணர்ச்சிக்கும், கல்வியின் வளர்ச்சிக்கும் இன்டர்நெட் காரணமாக இருப்பதை நீங்கள் குழப்பத்திற்குக்காரணம் என்று கருதிவீர்களானால் அது உங்களது பிற்போக்குத்தனத்தைத்தான் வெளிப்படுத்தும்.

Bahurudeen Shaik Mohammed :  வ அலைக்குமுஸ்ஸலாம் ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு, மார்க்கம் என்பது வெறும் இன்டர்நெட்டோடு பெறக்கூடிய குறுகியது அல்ல அது விசாலமானது அனுபவப்பூர்வமானது  ஆலிம்களுக்கு புரிதலில்லாமல் இல்லை.

M A Mohamed Ali : ஆலிம்களுக்கு புரிதலில்லாமல் இல்லை என்ற உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இஸ்லாத்தை ஒழித்துக்கட்ட வாழைப்பழத்தில் விஷத்தை திணிப்பது போல் தவ்ஹீத ஜமாஅத்தை விமர்சிப்பதுபோல் இஸ்லாமிய அடிப்படை கொள்கைக்கே வேட்டுவைக்கும் கட்டுரைக்கு ஜமா ஆத்துல் உலமா பாராட்டு தெரிவித்ததன் மூலம் அவர்களின் புரிதலும் கல்வி ஞானமும் எந்த அளவு உள்ளது என்பதை பள்ளியில் படிக்கும் மாணவன் கூட விளங்கிக்கொள்ள முடியுமே!

 உங்களுக்கு இன்டர்நெட் என்றால் என்னவென்று விளங்கவில்லை என்றே நினைக்கின்றேன். www.nidur.info வின் முகப்பு பக்கத்தில் www.rasoulallaah.net எனும் இணையத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளேன். அதை தட்டிப்பாருங்கள். 100 மதரஸாக்களுக்கான கல்வி ஞானம் அதில் புதைந்து கிடக்கிறது. இதுமட்டுமின்றி மதரஸா மாணவர்களுக்கு பயனளிக்கும் பல அரபு - ஆங்கில இணையத்தின் இணைப்பும் ''நீடூர்.இன்ஃபோ''வில் உள்ளது. தேடிப்பாருங்கள்.

Bahurudeen Shaik Mohammed : இன்டர்நெட் இல்லாத காலத்தில் பலதுறைகளிலும் நிபுனத்துவம் பெற்றவர்களாக திகழ்ந்தவர்கள்தான் நம்முடைய இஸ்லாமிய அறிஞர்கள் ஆனால் இன்றைக்கு அவ்வாறு காணப்படவில்லையே!  பணிவும் அடக்கமும் அறிவை அலங்கறிக்கும் .

M A Mohamed Ali :  மார்க்கம் என்பது விசாலமானதுதான். "கடல் நீரை மெய்யாகப் பயன்படுத்தி, உலகிலுள்ள அனைத்து மரங்களையும் எழுதுகோலாக (சீவி) பயன்படுத்தி, இந்த பூமியை விரிப்பாக்கி இறைவசனத்துக்கு விளாகமளித்தலும் கடல் நீர் தான் வற்றிப்போகுமே தவிர அல்லாஹ்வின் வார்த்தைகளல்ல" எனும்போது ஒரு குறிப்பிட்ட சாராரோடு மட்டும் கல்வி முற்றுப்பெற்று விடாது.

இன்றைய அறிஞர்கள் இந்த நூற்றாண்டுக்காக அல்லாஹ் வழங்கிய மகத்தான அருட்கொடையான இன்டர்நெட்டின் பயன்பாடு பற்றிய புரிதல் இல்லாததும் காரணமாக இருக்கலாம்.

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தங்கள் முன்னோர்கள் மட்டுமே அறிவிற் சிறந்தவர்கள் என்ற போதனை பொய்யாகவே திணிக்கப்படுகிறது. நிச்சயமாக நமது முன்னோர்கள் வாழ்ந்த காலத்தைவிட நாம் வாழ்கின்ற இக்காலத்தில்தான் கல்வி ஞானம் கொட்டிக்கிடக்கிறது. அதை அள்ளிப்பருகத் தெரியாதவர்கள் தான் வாழும் காலத்தைப்பற்றி குறை சொல்லியே தங்களை இக்காலத்தில் வாழத்தகுதியற்றவர்களாக ஆக்கிக்கொள்கின்றனர்.

இன்றைய முஸ்லிம் தனக்கு விருப்பமான ஆலிம்களை பின்பற்றும்போது மற்ற ஆலிம்களை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கின்றான்.  இஸ்லாம் மிக மிக எளிதானது, எளிமையானது. ஆனால் ஆலிம்கள் தங்களது மேதாவிதனத்தை காண்பிப்பதற்காக இஸ்லாத்தை ஒரு மதமாகவே பார்க்கிறார்களே ஒழிய மார்க்கமாக பார்க்கவே இல்லை. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி. இஸ்லாம் மதமல்ல அது ஒரு மார்க்கம் என்று மேடையில் முழங்குவதோடு சரி. நீங்கள் குறிப்பட்டது போல் இன்றைய இளம் ஆலிம்கள் இன்டர்நெட்டின் பயன்பாட்டை அறிந்து வருவது ஆரோக்கியமான அறிகுறியே.

பணிவும் அடக்கமும் அறிவை அலங்கறிக்கும் என்பது சரிதான். பணிவையும், அடக்கத்தையும் என் பெற்றோர்களுக்கு நான் அளித்தைதைப்போன்ற நிலையை என் பிள்ளைகளிடம் நான் எதிர்ப்பார்க்கமுடியாது. ஏனெனில் நம்முடைய இளமைப்பருவ கால சுற்றுச்சூழல் நிலை வேறு இன்றைய நிலை வேறு. இன்றைக்கு அளவுக்கதிகமாக பணிவுடன் வளர்க்கப்படும் பிள்ளைகள் ஒன்று பயந்தாங்கொள்ளியாக இருக்கும் அல்லது கோழையாக வாழ நேரிடலாம். நடுநிலையாக வளர்ப்பதே இன்றைக்குப் பொருத்தமாக இருக்கும்.

அளவுக்கதிகமான அடக்கத்தையோ, அளவுக்கதிகமான மரியாதையையோ பிள்ளைகளிடம் எதிர்பார்க்க வேண்டாம். இன்றைய சூழ்நிலையில் அளவுக்கதிகமான அடக்கமும், அளவுக்கதிகமான பணிவும் போலித்தனத்துக்கு அடையாளமாக மாறிவிட்டது. இன்றைக்கு நமக்கு முன் ஒருவர் மிக்க பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்கிறார் எனில் நாம் இல்லாத நேரத்தில் நம்மைப்பற்றி கழுவி ஊற்றுவார் என்பதற்கு அடையாளம்.

வஹ்ஹாபிசத்துக்கும் TNTJ -க்கும் சம்பந்தம் இருப்பதாக நான் எண்ணவில்லை. ஏனெனில் P.J. ஆரம்ப காலத்தில் அவர் அடிக்கடி எங்களூருக்கு வந்து S.R.ஷம்சுல்ஹுதா ஹஜ்ரத் (முன்னால் ஜமா அத்துல் உலமாவின் தலவரும், மிஸ்பாஹுல் ஹுதாவின் நாஜிரும் ஆவார்) அவர்களிடம் நிறைய வாதம் செய்வார். ஹஜ்ரத் அவர்கள் பெரும்பாலும் மவுனமாகவே இருப்பார்கள். சில சமயம், ''தம்பி... ரொம்ப புத்திசாலியாக இருக்கிறீர்கள், கொஞ்சம் அடக்கி வாசியுங்கள்'' என்பார்கள். தஞ்சையில் தர்ஹாவை புணர்நிர்மானம் செய்வதற்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் இரண்டு மூன்று பேரைத்தவிர அனைவருமே தர்ஹாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசிய அதே வேளையில் சிராஜுல் மில்லத் அப்துஸ்ஸமத் சாகிப் அவர்களும் மறுமலர்ச்சி யூசூஃப் சாகிப் அவர்களும், இன்னொருவரும் மட்டுமே ஏகத்துவத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி அங்கு பேசினர். அந்த கூட்டத்திற்குப்பிறகுதான் "ஒரு நாடகம் அரங்கேறுகிறது" எனும் நோட்டீஸை P.J. வுடைய சகோதரர் மவ்லவி அலாவுத்தீன் சாகிப் எழுதினார். ஆனால், அது வெளியானது P.J. பெயரில். (அலாவுத்தீனும் ஷம்சுல் ஹுதா ஹஜ்ரத் அவர்களும் நெருக்கமான நண்பர்கள்.)

என்னைப்பொருத்தவரை "ஜமா அத்துல் உலமா" P.J. ஐ "முர்த்தத் என்று சொன்னதை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளவில்லை. (அதற்கு திருச்சியில் கூடிய மக்கள் வெள்ளமே சாட்சி.) அதில் கையெழுத்திட்டுள்ள பல ஆலிம்களிடம் எனக்கு நல்ல பழக்கமும் உண்டு. அனைவருமே முழு மனதுடன் அதில் கையொப்பமிட்டிருப்பார்கள் என்று நான் கருதவில்லை. 

ஒரு விஷயம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. சுன்னத் வல் ஜமாஅத்தை பரேலவிஸம் தனது சூழ்ச்சியால் இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கப்போகிறது. எதிர் காலத்தில் தவ்ஹீத் ஜாமஅத்தா? பரேலவைகளா? என்னும் இரண்டு மட்டுமே இருக்கப்போகிறது. அந்த நேரத்தில் சுன்னத் வல் ஜமாஅத்தில் இருக்கும் பல உண்மையான ஆலிம்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தை நோக்கி வருவதைத்தவிர வேறு வழி இருக்காது. நான் சொல்வது உங்களுக்கு வினோதமாகத் தெரியலாம். ஆனால் எதார்த்தமான உண்மை அதுதான்.

விவாதம் செய்கின்ற பெரும்பாலான   ஆலிம்கள் தங்களுடைய வாதம் வெல்வதற்காக பொய் சொல்லத் தயங்காதவர்களாகவே இருக்கிறார்கள். எனவே தான் நான் சந்திப்பவர்களிடம் ஆலிம்களை வழிகாட்டியாக எடுத்துக்கொள்ளாதீர்கள், பெரும்பாலும்  அதற்கான தகுதியுள்ளவர்கள் இன்று இல்லை. எவர் சொன்னாலும் அதனை நம்பி விடாதீர்கள். எது உண்மை எது பொய் என்பதை லேசாக சிந்தித்தாலே புரிந்து கொள்ள முடியும் என்பேன்.

சுன்னத் வல் ஜமாஅத்துக்கு மிகப்பெரும் எதிரியே பரேலவிஸம் தான். ஆனால் இன்று P.J. ஐ எதிர்க்கப்போய் தங்களது சுய அடையாளத்தையே அது இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது. அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள ஆலிம்களின் அலட்சியப்போக்குத்தான். கருத்தை கருத்தால் வெல்ல இயலாமல் திட்டுவதும், சபிப்பதும், முர்த்தத் ஃபத்வாக்களை அர்த்தமற்ற முறையில் அள்ளி வீசுவதும் இன்று அவர்களை மக்களுக்கு முன் மதிப்பிழக்கச் செய்துவிட்டது. இனி பரேலவிகளின் முதுகில்தான் அவர்கள் சவாரி செய்ய முடியும் எனும் நிலைக்கு அவர்களை அவர்களே தள்ளிவிட்டுக்கொண்டுள்ளார்கள்..

....ஷேக் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தைப்பற்றி ஏraaளமான குற்றச்சாட்டை அடுக்குகிறார்....

M A Mohamed Ali :  ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளீர்கள். இதற்கெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்வது என்னைப்பொருத்தவரை தேவையற்ற விஷயம். ஒரு ஆலிம் அவர் எவராக இருப்பினும் சரியே பேச்சின் ஊடே போகிற வேகத்தில் சில தவறான கருத்துக்களையும் அவர் சொல்லிலிருந்து வந்து விழுவது மிக சகஜம். அதை கேட்கும் மக்கள் பெரிதுபடுத்த மாட்டார்கள். ஆனால் எதிரணியில் இருப்பவர்கள் அதுபோன்ற விஷயங்களாகப் பார்த்து அதை ஊதிப்பெறுக்கி ஈயை பேணாக்கி, பேணை பெருச்சாலியாகி காட்டும் வேலையைத்தான் மெனக்கட்டுச் செய்வார்கள்.

மக்களின் ஈமானோடு விளையாடுபவர்கள் பெயரளவில் சுன்னத் ஜமாஅத் என்று பெயரை வைத்துக்கொண்டு பரேலவிகளின் தர்ஹா கொள்கையை உள்ளே புகித்தி மக்களின் ஈமானுக்கே உலை வைப்பவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைப்பவர்கள்.

உங்களிடம் (உங்களிடம் என்றால் நீங்களல்ல) ஆத்திரம் தான் தெரிகிறது உண்மையில்லை. மக்கள் எப்போதுமே உண்மையின் பக்கமே விரைவார்கள். திருச்சியில் கூடிய கூட்டத்தில் பலர்   படித்தவர்கள் மட்டுமல்ல சுன்னத் வல் ஜமாஅத்தை சார்ந்தவர்களும் இருந்தனர்    என்பதை அங்கு  கண்டு வியந்தேன்.

படிப்பறிவற்ற மக்களிடம் காட்டிய வித்தைகள் யாவும் இன்று படித்த சமுதாயத்திடம் எடுபடாமல் போனதன் ஆத்திரம் தான் உங்கள் வாதத்தில் பிரதிபளிக்கிறது.

இன்றைய தலைமுறை மக்களை  அறிவில் குறைந்தவர்களாக   நீங்கள் கருதுகிறீர்கள். நான் அவர்களை அறிவாளிகளாகப் பார்க்கிறேன். இதுதான் நம் இருவருக்கும் உள்ள வித்தியாசமாக எனக்குப் படுகிறது.

எது சரி எது தவறு என்பதை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியுள்ள கல்வியைக்கொண்டு அவர்கள் அறிந்துகொள்வார்கள். அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

நான்கல்ல, நான்காயிரம் மத்ஹபுக்குள் முடங்கிப்போகிற மார்க்கமா இஸ்லாம்? இல்லவே இல்லை! கியாம நாள்வரை அது விரிவடைந்து கொண்டே போகும்.