Home கட்டுரைகள் சமூக அக்கரை முஸ்லிம்களே! பொறுப்பேற்க வாருங்கள்!
முஸ்லிம்களே! பொறுப்பேற்க வாருங்கள்! PDF Print E-mail
Wednesday, 13 January 2016 07:33
Share

முஸ்லிம்களே! பொறுப்பேற்க வாருங்கள்!

முஸ்லிம்களே! உங்களுக்கான பிரதிநிதியாக பலரைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்! இந்தியச் சமூகமோ உங்களில் ஒவ்வொருவரையும் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதிகளாகக் கருதிக் கொண்டிருக்கின்றன! உங்கள் செயலால் எதிரொலிக்கும் வினைகள் ஒவ்வொன்றும் சமூகத்தின் மீதும், சக முஸ்லிம்கள் மீதும் படருகின்றன!

‘‘பொறுப்பேற்றுக்கொள்’’ திணித்தல் புரிகின்றனர். ஏற்பட்ட, காதில் ஊற்றப்பட்ட பிரச்சினைக்கு நீதான் பொறுப்பாளி எனத் தனி முஸ்லிம் மீதும் சமூகத்தின் மீதும் குற்றப்படுத்துதலைக் கண்ணோட்டங்கள் காட்டுகின்றன. மௌன வினா தொடுக்கின்றன.

தெரிந்தோ, தெரியாமலோ முஸ்லிம்களுடைய செயல்கள், செவி வழிச் செய்திகள் இந்த பின்னடைவுத் தன்மைக்குக் காரணங்களாகிவிட்டன. இந்த நிலையில் எதிராளிகள் மீது குறை கூறுதல், அவர்கள் குறித்த குற்றச் செயல்களைத் தேடித் தேடிச் சேகரித்து புத்தகமாக்குதல், தெருவில் நின்று கோஷமிடுதல், வசை உரைகள், வசை எழுத்துகள் முஸ்லிம் சமூக எதிர்கால வளர்ச்சிக்கு உதவாது. குழிக்குள் தள்ளி மூடும். பொறுமையைக் கைக் கொள்ளுதலே மேலே தூக்கி விடும். இறை கரம் அதனுள்ளிருக்கும்.

“என்னை தாடி வைக்க வேண்டாம் என்று கார்பரேட் எம்.டி கூறுகின்றார்.”

“நீ தாடி வைக்க மாட்டேன் என்ற உறுதி கூறு உன்னை வேலைக்கு எடுக்கிறேன்” என ஹெச் ஆர் டி பதில் கேட்கின்றார் போன்ற நிகழ்வுகளுக்கு, முஸ்லிம் உடைய தாடி அவர் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் எனக் கருதுகின்றார்.

தாடி குறித்து தவறான கருத்து போதிக்கப்பட்டிருக்கிறது என்றே எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்குச் சண்டையிடவோ, சக முஸ்லிம்களைப் பணிக்கு எடுத்தலையும் கெடுக்கும் வகையிலோ கோபப்படத் தேவையில்லை. பிடித்தால் பணி செய்யலாம். இல்லையெனில் தன்னை ஏற்கக் கூடிய இடத்தில் பணிக்குச் சேரலாம்.

வெள்ளிக்கிழமையன்று தொழுகை நேரத்தில் சரியாக தனது மேனேஜர் வேலை தந்து வெளியே அனுப்புகின்றார். கண்காணிக்கின்றார் என்றால், யாரோ அவருக்கு முஸ்லிம் இறை வணக்கத்தை மோசமானதாகக் காட்டியிருக்கிறார். அல்லது இஸ்லாம் மீது அந்நபருக்கு கடுமையான வெறுப்பு கூறப்பட்டிருக்கிறது.

தனி நபர், அமைப்புகளின் செயல்பாடுகள் எரிச்சல்படுத்தியிருக்கலாம். இதற்கு தீர்வு “இறைவன் நாடாமல் அவர் அகத்தை திருப்ப முடியாது.” நபியைப் பார்த்தே இறைவன் கண்டித்ததுதான். இந்த இடத்தில் அந்த முஸ்லிம் தனது கேரக்டரால், பணியால் ஈர்ப்பு ஏற்படுத்தி அவரையே தனது வாகனத்தில் கொண்டு வந்து மஸ்ஜித் வாசலில் விட வைக்க முடியும்.

ஒரு அடி நற்செயலின்பால் நீங்கள் நகர்ந்தால், இறைவன் இரண்டு அடி நகர்கின்றான், நகர்த்துகின்றான். இது உண்மை என முதலில் முஸ்லிம் நம்பவேண்டும் பிறகு செயலுக்குள் கொண்டு வரவேண்டும்.

நமது செயல்களை நாம் அழகு உடையதாக ஆக்கிக் கொள்வோம். “அந்த பாய் கலியாணத்துல சூப்பர் பிரியாணி போட்டார். பாயம்மா குடும்பம் ரம்ஜானுக்கு அருமையான பிரியாணி தந்தது” இது போன்ற சொல்லாடல்கள், உரையாடல்கள், மதிப்பீடுகளில் இருந்தும் மீளுவோம்.

“அந்த பாய் ஆசிரியர் என் பிள்ளைக்கு சிறந்த கல்வி தந்தார். அந்த முஸ்லிம் டாக்டர் அன்பாக, குறைவான கட்டணத்தில் மிகச் சிறந்த சிகிக்சையளித்தார். எல்லோரும் 500 ரூபாய் கட்டணம் வாங்குகின்றனர். தோல் நோய் டாக்டர் பாய் 50 ரூபாய் தான் வாங்கினார். ஒரு ரூபாய் மாத்திரையில் என் மகன் அரிப்பு போய்விட்டது.

அந்த முஸ்லிம் இன்ஜீனியர் வீடுகட்டித் தந்தார் 20 வருடங்கள் ஆச்சு ஒரு விரிசல் இல்லை. குறைவாகத்தான் காசு வாங்கினார், தரமான பொருட்கள் போட்டுக் கட்டித்தந்தார். அந்த முஸ்லிம் ரியல்எஸ்டேட் புரோக்கர் ஏமாற்றி அடாவடி செய்து சொத்தை பறித்துக் கொள்ளமாட்டார், நேர்மையானவர்.

அந்த பாய் கடைக்கு போனால் அன்பாகப் பேசுவார், நியாயமான விலையில் தருவார். பொருள் சரியில்லை என்றால் தரமறுக்காமல் மாற்றித்தருவார். அந்த பாய் டைலர் சொன்னபடி அழகாகத் தைத்து தருவார்....”

இவ்விதமாக ஒவ்வொரு முஸ்லிமும் தமது பணி, துறைகளில் செய்கையால், நடத்தையால் ஏனைய முஸ்லிம்களுக்கும், இஸ்லாத்திற்கும் பெயர் சேர்க்க வேண்டும்.

இது போன்ற பெயரெடுத்தலில் தான் சமூக அந்தஸ்து கிடைக்கும். பல பத்தாண்டு பணியிது. கீழ்க்காμம் இறை வேதக் கருத்துக்களை மனத்துள் கொண்டு வாசித்த அன்றே நல்வினைகளைத் தொடங்குங்கள். இறை சோதனையிலிருந்து மீளுங்கள்.

“ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைப்பதற்காகவே இருக்கின்றது. தீமை, நன்மைகளைத் தேர்வுக்களமாகக் கொண்டு நாம் சோதிப்போம்’’ (அல்குர்ஆன் 6:35)

“நிச்சயமாக உங்களுடைய பொருட்களும் உங்களுடைய மக்களும் சோதனைகளாகும்.” (அல்குர்ஆன் 64:15)

“உங்களில் யார் அழகிய செயல் உடையவர் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் படைத்தான்.” (அல்குர்ஆன் 67:2)

முஸ்லிம் முரசு, ஜூலை 2015.

source: http://jahangeer.in/July_2015.pdf