Home கட்டுரைகள் கதையல்ல நிஜம் இறப்பின் அறிகுறியை முன்னமே அறிந்து கொண்டால்...
இறப்பின் அறிகுறியை முன்னமே அறிந்து கொண்டால்... PDF Print E-mail
Friday, 11 December 2015 07:47
Share

MUST READ BY EVERY ONE

இறப்பின் அறிகுறியை முன்னமே அறிந்து கொண்டால்...

  உண்மை சம்பவம்  

எனது ஆத்ம நண்பர் ஒருவர் உடல்நலம் குன்றி இருந்தார். அவரால் சரியாக உணவு சாப்பிட முடியவில்ல. நான் அவரிடம் சொன்னேன் 'எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் பிரபலமான Gastroenterologist M.D.,. D.M., வயிறு சம்பந்தமாக பார்க்கும் மருத்துவர் உள்ளார், அவரைப் பார்த்து ஆலோசனைப் பெறலாம்' என்ற என் வேண்டுதலுக்கு உடன்பட்டார்.

நாங்கள் இருவரும் அந்த மருத்துவரை சந்தித்தோம். நண்பர் தான் முதலில் காட்டிய மருத்துவரின் ஆலோசனைக் குறிப்புகளும் மற்றும் அந்த வியாதிக்கு தேவையான மருத்துவ டெஸ்டுகளும் மற்றும் எக்ஸ்ரே போன்றவைகளை எடுத்து வந்திருந்தார். ஆனால் அவருக்கு என்ன வியாதி உள்ளது என்று அந்த மருத்துவர் நண்பரிடம் சொல்லாமல் மருந்துகள் மட்டும் எழுதி கொடுத்திருந்தார்.

அவருக்கு வந்துள்ள வியாதியை .உண்மையிலேயே அவரது குடும்பத்தார் எனது நண்பருக்கும் தெரியாமல் வைத்துவிட்டனர். நானும் அதனைப் பற்றி அறியாத நிலை.

மருத்துவரிடம் நாங்கள் ஆலோசனைக் கேட்க அதற்கு தேவையான மருத்துவ விபரங்களைக் காட்டினோம். மருத்துவர் அனைத்தையும் பார்த்த பின்பு எனது நண்பரை சில நேரங்கள் வெளியே இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அவர் வெளியே இருந்தபோது இடி தாக்கியதுபோல் அதிர்ச்சியான செய்தியை டாக்டர் சொன்னார். 'அவருக்கு வந்துள்ளது கேன்சர் மற்றும் மிகவும் முற்றி விட்டது இனி எந்த வைத்தியமும் உதவாது. அதிகமாக அவர் இன்னும் மூன்று மாதங்கள் உயிருடன் இருப்பதே அதிசியம், அதனால் இந்த உண்மையை அவரிடம் சொல்லிவிட்டால் அவர் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்து விடுவார். பிறகு இறை பக்தியில் அதிகம் ஈடுபட்டு அமைதி காண்பார். இதனை நீங்கள் சொல்கின்றீர்களா அல்லது நான் சொல்லவா? இல்லையென்றால் தேவை இல்லாமல் பல மருத்துவர்களை நாடுவார் என வினவினார்!

வேண்டாம் டாக்டர் அவரிடம் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக ஏதாவது சொல்லி அனுப்புங்கள் என்றேன். மனமுடைந்தேன்,என்னை அறியாமல் என்னை நானே கட்டுபடுத்த முடியாமல் போனதால் கண்களிலிருந்து நீர் கொட்டியது, மனதை அடக்கிக் கொண்டு வெளியில் இருந்த நண்பரை மருத்துவரிடம் அழைத்து வந்தேன்.

நான் விரும்பியபடி 'நீங்கள் சாப்பிடும் மருந்தே உயர்வானது மற்ற சிகிச்சிசைகளும் முறையாக உள்ளது .இதனையே தொடர்ந்து செயல்படுத்துங்கள்.தேவை இல்லாமல் பல மருத்துவர்களை அணுக வேண்டாம்' என்று டாக்டர் அறிவுரைக் கூறினார்.

என் கண்கள் கலங்கி இருப்பனைக் கண்டு டாக்டர் சொன்னதில் நம்பிக்கை வராமல் வீடு வரும் வரை 'டாக்டர் என்ன சொன்னார் சொல்லுகள்' என்று துருவித் துருவி கேட்கும்போது மனதை கல்லாக்கிக் கொண்டு மருத்துவர் உங்களிடம் சொன்னதையே நானும் சொன்னேன். நல்ல காரியத்திற்க்காக பொய் சொல்வது தவறில்லை என மனம் நினைத்தது.

அத்துடன் அவர் விடவில்லை வீடு சென்ற பின்பு அவர் குடும்பத்தில் மிகவும் வருத்தமாக கேட்டறிந்துக் கொண்டார். வீட்டில் உள்ளவர்களும் முழுமையாக சொல்லாமல் அவர் மனதில் ஓரளவு அறிந்துக் கொள்ளும்படி சொல்லி வைத்தனர்.

அவர் மிகவும் தைரியம் மிக்கவர் ஒரு சில நாட்கள் அவர் மனதில் ஆழா துயரம் இருந்தாலும் மருத்துவர் நினைத்தபடியே செய்ய வேண்டிய கடமைகளை செய்தார். பின்பு இறை பக்தியில் தொடர்ந்து ஈடுபட்டார், அவர் மனம் அமைதியானது.

படுத்த படுக்கையிலும் இறைவனைத் தொழுவதிலும் அவன் பெயரை உச்சரித்தும் சில நாட்கள் இருக்க இறைவன் தன் வசம் அழைத்துக் கொண்டான். வியாதி பட்டதினால் தான் செய்த தவறுக்கு இறைவனிடம் மன்னிப்பு கேட்கும் வாய்பு கிடைத்து. பரிசுத்தமான மனிதராக இறைவன் வசம் சேர்ந்தார்.

Indeed we belong to Allah, and indeed to Him we will return. "innalillahiwainnailaihirojiun

வியாதியுடையவர்களைப் போய் பார்த்து அவரின் உடல் நலத்திற்காக இறைவனை வேண்டுவது நன்மையான செயல். அத்துடன் அவர் பாவம் மன்னிக்கப் பட்டவராக இருப்பதால் அவரையும் நம் நலனுக்காக இறைவனை வேண்டச் சொல்வதும் நல்லது. இறைவனால் அது அங்கீகரிக்கப்படும்

Dead man’s heart touching advice: Always be optimistic

source: http://nidurseasons.blogspot.in/2012/05/blog-post_7679.html