Home கட்டுரைகள் உடல் நலம் அழுகியது ஓர் அழகு!
அழுகியது ஓர் அழகு! PDF Print E-mail
Monday, 27 April 2015 07:35
Share

அழுகியது ஓர் அழகு!

  மன்ஸூர் அலீ   

சுட்டிக் காட்ட வேண்டும் அவளை... ஒரு முறையாவது திரும்பிப் பார்க்க வேண்டும் அவளை... தொட்டுப் பேச வேண்டும் அவளை...  இப்படி தான் அவளை பார்த்த அனைவரும் ஏங்கி தவிப்பார்கள்...

அவளிடம் அழகு மட்டும் குடிருக்கவில்லை.. நல்ல குணமும்தான் சேர்ந்து குடிகொண்டது. தன் மகன் சிராஜுக்கு இவள் தான் மனைவி. எனக்கும் இவள் தான் மருமகள் என்று இவளைப் பார்த்த அந்த நிமிடமே முடிவு செய்து விட்டாள் சாஜிதா....

எம் புள்ளைக்கு பொண்டாட்டிய வர வேண்டிய நீ இத்தன நாளா எங்கே ஒளிந்திருந்தாய்...என்று சாஜிதா செல்லமாக மணப்பெண் ஷமீராவிடம் சொல்லி கொண்டாள்...

சிராஜுக்கும் பெண்ணை பிடித்து விட்டது..

மேற் கொண்டு இரு விட்டாரும் பேசி முடிவெடுத்ததில்..அடுத்த முகூர்த்ததிலேயே கல்யாணம் செய்யவும் முடிவு செய்து விட்டனர்.

குறித்த படி எல்லாம் நல்ல படி முடிந்தது.

பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீடு வந்து சேர்ந்தாள் ஷமீரா...

"அழகானவள்" என்று பேரெடுக்க ஆசைப்படாத பெண்ணே உலகில் இல்லை. ஆனால் அவளிடம் அத்தனையும் அழகாய் பூத்திருந்தது...

பார்த்த கண்கள் எல்லாம் பூத்துவிடும் அழகுக்கு அழகிய மகளே குடி இருக்கிறாள் அவளுடன்..

அழகிற்கு ஒரு ஆபத்து என்றால் எவளாய் இருந்தாலும் அவளைப் பொருத்தவரை வாழ்கையே அஸ்தமனமாகிவிடும். ஆனாலும் சிலரிடம் உடலில் சித்து விளையாட்டுக்களைக் காட்டி இயற்கை கொட்டமடிக்கும். வெண்புள்ளி நோயால் எந்த ஊனமும் இல்லை என்றாலும் எல்லாம் ஊனமடைந்து விட்டதாக மனம் குறுகிவிடும். .மலர்ந்த முகம் வாடி விடும். வாழ்கையும் ஒரு கேள்வி குறி ஆகி விடும்... வாழ்கையில் இருள் சேர்ந்து விடும்... இல்லறம் கசக்கும்..தாமத்தியம் தடுமாற்றம் கொடுக்கும்..

அப்படிதான் ஷமீராவின் வாழ்கையில் வலிகளும்,வேதனைகளும் நிறைந்து சுமையை இறக்க முடியாமல் தவிக்கிறாள்...

அவளின் கணவன் சிராஜ் அருகில் வந்தால் கூட ஒதுங்கி போக ஆரம்பித்தாள் ஷமீரா...புது பெண் வெட்குகிறாள்...என்று தான்...பெருத்து போனான் சிராஜ்.

அவள் கனவு கண்டதை விட அவளுக்கு கிடைத்த அந்த வாழ்க்கை ஒரு சொர்கமாகத்தான் இருந்தது... மகிழ்ச்சியும் சந்தோசமும் ஒன்றாய் அங்கு அவளுக்கு கிடைத்தது. மாமியார் மருமகள் என்று பாகுபாடு இல்லாமல் தாயும் மகளுமாய் தான் அந்த விட்டில் வாழ்ந்து வருகிறாள் ஷமீரா.

மேலும் மனதிற்குள் அழுவது மங்கையர்க்கு கைவந்த கலை. உடல் நோய் உடலை மட்டும் வதைக்கும். உள்ளத்து நோய் உள்ளத்தோடு உடலையும் சிதைக்கும். அழகு தேவதையாய் அடியெடுத்து வைத்தவள் தான் அந்த வீட்டில் அழகு தேவதை ஷமீரா....

எந்தக் குறையுமில்லை – மருமகளின் காலில் தோன்றிய கடுகளவு வெண்புள்ளி தவிர. நாளுக்கு நாள் அந்த வெண் புள்ளியின் அளவு கூட கூட.. அவளுக்குள் ஒரு தாழ்வு மனபான்மை ஏற்படுகிறது...

ஒரு நாள் தன் மாமி சாஜிதாவிடம் காண்பிக்கிறாள்.

அதை சாஜிதா பெரியதாகவே எண்ணவில்லை...

சில நாட்கள் கழிந்ததும்.

அவளின் உடல் முழுக்க பரவுவதை கண்ட ஷமீரா.. மீண்டும் மாமியிடம் காண்பித்தாள்...

அன்றே ஆஸ்பத்திரிக்கு போய் டாக்டரிடமும் காட்டி மருந்து மாத்திரைகள் சாப்பிட தொடங்கியவள் தான்...

வெண் புள்ளிகள் அதிகமாக அதிகமாக இவளின் தாழ்வு மன பான்மை கூடி கொண்டே போகிறது...

கொஞ்ச காலமாய் ஒதுங்கியே இருக்க ஆசை பட்டாள்.... சரி அவள் இஸ்டபடி இருக்கட்டும் என்று தான் கண்டும் காணமால் இருந்தாள் சாஜிதா.

சிராஜும் இதை ஒரு விஷயமாக கருதவில்லை. வெண் புள்ளிகளில் கூட நீ எனக்கு அழகாய் தான் தெரிகிறாய் என்று அவளிடம் அவன் ஆறுதலாக சொன்னான்..

அடுப்பங்கறையிலே மாமியாருக்கு உதவியாக இருந்த ஷமீரா...கொஞ்ச நாட்களாய் அந்த உதவிக்கு கூட வருவதில்லை... தான் சாப்பிட்ட பாத்திரத்தை கூட யாரையும் தொட அனுமதிப்பது இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக தன் கணவனிடம் இருந்து படுக்கையை கூட பிரிக்க ஆரம்பித்தாள்.

சிரிப்பால் மறைத்துக் கொண்டிருந்தாள் சில காலம். பின்னர் சிரிப்பை மறைந்தாள் சில காலம். சிரிக்கவே மறந்தாள் பல காலம். அவளுக்கு ஓர் குற்ற உணர்வு காரணமே இல்லாமல். பூவைத்தொடுவது போல் நாங்கள் அவளைத் தொட்டாலும், தீயைத் தொடுவதுபோல் அவள் எங்களைத் தீண்டினாள். அதிக அன்பு செலுத்திப் பார்த்தும், தோல்வியே மிஞ்சியது எங்களுக்கு...

இது ஒன்னும் ஒரு தொற்று நோய் இல்லாம்ம..நீயா ஏன் குழப்பிக்கிரே.... மாத்திர மருந்து சாப்பிட்ட எல்லாம் சரியாகி போகும் என்று மாமியார்  எத்தனையோ எடுத்து சொல்லியும் அவளின் மனம் எதையும் கேட்பதாக இல்லை..

எங்களைவிட ஆங்கில மருத்துவத்தின் மீது அபார நம்பிக்கை அவளுக்கு. மருந்துகளின் எண்ணிக்கையும், டாக்டர்களின் எண்ணிக்கையும்... கையில் உள்ள பணமும் செலவுகள்... கூடக்கூட வெண்தேமல் பரவும் வேகம் அதிகமாயிற்று.

இப்படிதான் ஒரு வருட காலமாக மாத்திரை மருந்ததுடன் இவளின் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது...

வைத்தியம் செய்த டாக்டரே...கடைசியாக அவரின் முடிவை சொல்கிறார்..

முடிவு..? வழக்கம்போல்தான்.. கிட்னி பிராப்ளம், ஹார்ட் பிராப்ளம், மூச்சுத் திணறல்....... இன்னும் பல வேதனைகளை அவள் அனுபவிக்க நேர்ந்தது.. அவளும் அவள் படும் பாட்டை எங்களால் சகித்து கொள்ள முடியவில்லை... பாவம் என்று தோன்றியது.

ஒரு நாள் ஷமீராவுக்கு வந்தது கோமா. எங்களின் குடும்பமே ஆடிப் போய் விட்டது. இந்த அழகு தேவதையை இழந்து விடுவோமோ என்ற கவலை எங்கள் குடுபத்தையே ஆட்டி படைத்து கொண்டு இருந்தது.

வைத்தியம் பார்த்த டாக்டரிடம் மீண்டும் கொண்டு போனோம்... இத்தனை காலமாய் சிகிச்சை அளித்த டாக்டரே சொன்னார்... மருந்து மாத்திரைகள் சாப்பிட்டது போதும் கொஞ்சம் காலம் நிறுத்தும்படி..

அவளாக பயந்து, ஆங்கில வைத்தியத்தை அடியோடு விட்டு விட்டாள். அவள் முகத்தில் சிரிப்பு இல்லாததால் நாங்களும் சிரிக்க முடியவில்லை. எங்களின் சிரிப்பை நாங்களே மறந்தோம். ஒட்டு மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்தோம். சிரிப்பின் வடிவம் தெரியாமல் அலைந்தோம்.

ஒரு நாள் சித்த வைத்தியர் வடிவில் தெய்வம் அவளுக்குக் காட்சி அளித்தது.

“சின்ன வைத்தியம் ஒன்று சொல்கிறேன் சீரியஸாக எடுத்துக் கொள்வாயா?” என்று கேட்டார் சித்த வைத்தியர்.

“சீரியஸான வைத்தியங்களே என்னை சின்னப்படுத்திவிட்டபின், சின்ன வைத்தியம் என்னை என்ன செய்துவிடும்? சொல்லுங்கள் செய்கிறேன் ” என்றாள், தைரியமாக.

“காலை வெறும் வயிற்றில், கருவேப்பிலை கொழுந்து ஒரு கைபிடி அளவு எடுத்து அத்துடன் கீழாநெல்லி கொழுந்து இலை ஒரு கைபிடி சேர்த்து, மிக மெதுவாக மென்று விழுங்கி வா” என்றார்.

“ப்பூ.... இவ்வளவுதானா?” என்றாள்.

“நிறைய நீர் குடி. உணவைக் குறைத்து பழங்கள் பல சாப்பிடு” என்றார்.

“பத்தியம் ஏதேனும் உண்டா?” என்றாள்

“சொல்ல மறந்துவிட்டேன். வெள்ளை சக்கரையை வாயால் உச்சரிக்கவோ, கண்ணால் பார்க்கவோ கையால் தொடவோ கூடாது.” என்றார்.

சனியனை விட்டு ஒழித்ததால் பிணியிலிருந்து விடுதலை பெற்றாள் ஷமீரா.

படர்ந்து வந்த வெண் புள்ளிகள் எல்லாம் எங்கே மறைந்தது என்று தெரியவில்லை அவளுக்கு..

வாடிய முகம் மீண்டும் மலர் தொடங்கியது... கவலைக்குள் உள்ளாகிய குடும்பம் மகிழ்ச்சியில் முழ்க தொடங்கியது..

பிரித்து போட்ட படுக்கைகள் ஒன்று சேர்ந்தது...தனியாக சாப்பிட்டு வந்த தட்டு பாத்திரமும் ஒன்றாய் ஒரு இடத்தில் காண நேர்ந்தது...

இது எல்லாம் நடந்து மூன்று மாதம் ஆகிருக்கும்....

திடிரென்று ஒரு நாள் வாந்தி எடுக்கிறாள் ஷமீரா..

ஆமாம் முழுகாம இருக்கிறாள் ஷமீரா.....

"வாழட்டும் அவள் இன்னுமொரு நூறாண்டு".

நன்றி: எழுத்து