Home இஸ்லாம் ஹதீஸ் ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல
ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல PDF Print E-mail
Friday, 01 November 2013 07:50
Share

நன்மை பயக்கும் நபிமொழி

o அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தோம். அப்போது எங்களில் ஒருவர் உறங்கி விட்டார். சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள்.

அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார்" என்று கூறினார்கள்.

"ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல" என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 22555)

 

o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ‘பள்ளிகளுக்காக முஸ்லிம்கள் சண்டையிட்டு அடித்துக்கொள்ளும் நாள் வராத வரை மறுமை நாள் வராது. ” (அறிவிப்பவர்: அனஸ் இப்ன் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூது 449)

 

o நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிம் தன்னுடைய மரணத்தை நெருங்காத ஒரு நோயாளியை நலம் விசாரிக்கும் போது ஏழு தடவை "அஸ்அலுல்லாஹல் அளீம் ரப்பல் அர்ஷில் அளீம் அய் யஷ்ஃபியக” (உனக்கு ஆரோக்கயம் அளிக்க வேண்டும் என்று மகத்துவமிக்கவனும், மகத்தான அர்ஷின் இரட்சகனுமான அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்) என்று கூறினால் (கண்டிப்பாக) அவர் ஆரோக்கியம் வழங்கப்படுவார். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 2137)


o ‘‘ஒரு மனிதர் நபியவர்களிடம் வீட்டுக்குள் நுழைய அனுமதி வேண்டினார். அவரைக் கண்ட நபியவர்கள்; ‘‘இவர் அந்தக் கூட்டத்திலேயே மிக தீயவர்’’ என்றார்கள். அவர் வீட்டுள் வந்தமர்ந்தபோது மலர்ந்த முகத்துடன் இதமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரிடம் நடந்து கொண்டார்கள். அம்மனிதர் எழுந்து சென்றதும் அல்லாஹ்வின் தூதரே! ‘‘அந்த மனிதரைக் கண்டதும் அவ்வாறு கூறினீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கொண்டீர்களே’’ கேட்டேன். ‘‘ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவருடைய தீங்குக்கும் அஞ்சி மக்கள் விட்டுவிடுகிறார்களோ அவர்களே மறுமை நாளில் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோசமானவர்கள். என்றுரைத்தார்கள். (ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, புகாரி 6032)
'
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளினார்கள்; ''கணவனை இழந்த விதவைக்காகவும், ஏழைக்காகவும் பாடுபடுகின்றவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர் போன்றவராவார். அல்லது இரவில் விழித்திருந்து வணங்கி பகலில் நோன்பு வைத்தவர் போன்ற வருமாவார்.
கணவனை இழந்த கைம்பெண்ணுக்காக, ஏழைக்காகப் பாடுபடுபவர் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவர் போன்றவராவார்.'' (ஸஃப்வான்பின் சுலைம் ரஹ்மதுல்லாஹி அலைஹி, புகாரி 6007, 6008)

 

o 'அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அதிகமாக நபிமொழிகளை அறிவிக்கிறாரோ என மக்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தில் இரண்டு வசனங்கள் மாத்திரம் இல்லையென்றால் நான் ஒரு நபிமொழியைக் கூட அறிவித்திருக்க மாட்டேன்' என்று அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறிவிட்டு,

'நாம் நேர்வழியையும் தெளிவான சான்றுகளையும் அருளி மக்களுக்காக அவற்றை வேதத்தில் நாம் தெளிவாகக் கூறிய பின்னரும் யார் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் தன் அருளுக்கு அருகதையற்றவர்களாக்கி விடுகிறான். மேலும் (தீயோரை) சபிப்ப(வர்களான இறைநம்பிக்கையாளர்களும் வான)வர்களும் அவர்களைச் சபிக்கின்றனர். ஆயினும் அவர்களில் யார் (தம் குற்றங்களிலிருந்து) மீண்டு, மேலும் (தம்மைச்) சீர்திருத்தி இன்னும் (தாம் மறைத்தவற்றை மக்களுக்குத்) தெளிவுபடுத்தியும் விடுகின்றனரோ அவர்களைத் தவிர. (அவ்வாறு தம்மைத் திருத்திய) அவர்களை நான் மன்னித்து விடுவேன். நான் மிக்க மன்னிப்பவனும் அருளுவதில் அளவற்ற வனுமாவேன்" (திருக்குர்ஆன் 02:159-160) என்ற இரண்டு வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள்.

மேலும் தொடர்ந்து 'மக்காவிலிருந்து ஹிஜ்ரத்துச் செய்து மதீனாவிற்கு வந்த எங்கள் சகோதரர்களோ வியாபாரம் பேரங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். மதீனாவிலிருந்த அன்ஸாரித் தோழர்களோ தங்கள் (விவசாய) செல்வங்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த அபூ ஹுரைராவோ முழுக்க முழுக்க (வேறு வேலைகளில் ஈடுபடாமல்) பட்டினியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடனேயே இருந்தேன். மற்றவர்கள் வருகை தராத இடங்களுக்கெல்லாம் நான் செல்வேன். அவர்கள் மனப்படாமகி செய்யாதவற்றையெல்லாம் மனப்படாம் செய்து கொண்டிருந்தேன்' என்று கூறினார்கள்" அஃரஜ் என்பவர் அறிவித்தார். (புகாரி 118)